Advertisement

சரியான லூசு… இத போய் என் தலையில் கட்டிட்டாங்களே…வாய் விட்டு முணுமுணுக்க. அது அவள் காதில் தெளிவாக விழுந்தாலும் அவனுடன் இப்பொழுது சண்டையிட்டால் சேதாரம் நமக்கே என்பதை உணர்ந்து அவனை கண்டு கொள்ளாமல் அறை கதவை திறக்க.
அங்கு வித்யா நின்று இருந்தார்…உள்ள வாங்க அத்தை…என்று பணிவுடன் பேசியவளை அதிசயமாக பார்த்தான் நந்தன்.
இவ்வளவு நேரம் என் கிட்ட திமிரா பேசியது என்ன? பண்ணது என்ன?இப்ப பவ்வியமா சித்தி கிட்ட பேசுறது என்ன..? வெரி டேன்ஜுரஸ் கேர்ள் (dangerous girl)…’மனதில் எண்ணிக் கொண்டவன் அவன் வேலையை பார்க்க சென்றான்….
இல்ல மா பரவாயில்லை… அரைமணி நேரத்தில் கடைக்கு கிளம்பலாம்… நீயும், கண்ணாவும் ரெடியாகி வந்துருங்க…என்று விட்டு திரும்புகையில்
நான் எதுக்கு சித்தி… நீங்க எல்லாரும் மட்டும் போய்ட்டு வாங்க… எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு…என்று நந்தன் மறுப்பு கூற,
என்ன பெரிய வேலை? இப்ப தான் கல்யாணம் முடிஞ்சு இருக்கு அது உனக்கு நியாபகம் இருக்கட்டும்…. அதுவும் இல்லாமல் உங்களுக்காக தானே வாங்க போறோம்… நீ இல்லாம எப்படி? அதுனால பேசாம கிளம்பி வா… நாங்க கீழே வெய்ட் பண்ணுறோம்…என்று விட்டு அவர் சென்று விட
நந்தனின் பார்வை மஹாவின் மீது அழுத்தமாக பதிந்தது,’பார்க்குறானே… டேய் எருமை நான் என்ன பண்ணுனேனு என்னை முறைச்சே கொல்லுற? ‘மனதில் அவனிடம் கேள்வி கேட்டவள் வெளியே எதுவும் தெரியாதது போல் உதட்டை பிதுக்கி அவனை பாவமாக பார்க்க. 
அதில் மேலும்  கோபம் வர, அதுவரை அவளை அழுத்தமாக பார்த்துக் கொண்டு இருந்தவன் அவளது முக பாவனையை கண்டு முடிந்த மட்டும் முறைக்க ஆரம்பித்தான்.
ஐய்யோ… காண்டாமிருகம் முறைக்குது…  ரியாக்ஷனை மாத்து டி… இல்ல.. இல்ல.. இடத்தை காலி பண்ணு டி…மனதில் எண்ணியதை   செயல் படுத்தவும் செய்தாள். 
குளியலறை நோக்கி நடையும் ஓட்டமுமாக அவள் சென்றதை பார்த்தவன், “கொசுக்குட்டி என்னைக்காச்சும் நீ மாட்டும் போது உன்னை வச்சு செய்யுறேன் பாரு…வாய் விட்டு தன் எரிச்சலை காட்ட அது அவள் காதில் விழுந்தாலும் கவனிக்காதது போல் செல்லும் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்.
பின் சிறு குளியலை போட்ட பின்பு தான் அறிந்தாள் தான் மாற்று உடையை கொண்டு வராததை.
சை… எல்லாம் இவனால தான் வந்தது… முறைச்சு முறைச்சு பார்த்து நம்மளை பைத்தியக்காரி ஆக்குறான்…என்று புலம்பியவள், மெதுவாக அறையை எட்டிப் பார்க்க எங்கும் நந்தனை காணாமல்
ஒருவேலை ரெடியாகி கிளம்பி கீழே போய் இருப்பான்…என்று நினைத்து வெளியே வந்து உடை மாற்றி விட்டு, கண்ணாடி முன் நின்று தலை வாரி கொண்டு இருக்க, கண்ணாடியில் பால்கனியின் கதவின் அருகில் ஒரு கையை பாண்ட் பாக்கெட்டில் விட்டு, மற்றோரு கையில் தன் ஃபோனை நோண்டி கொண்டு இருந்த நந்தனை கண்டு அவசரமாக திரும்பி பார்த்து,
ஆஆஆஆ……என அலர,
அவன் அவசரமாக அவள் அருகில் சென்று அவள் வாயை பொத்தியவன், “இப்ப எதுக்கு டி இப்படி உன் ஸ்பீக்கரை ஓபன் பண்ணுற?” என்று அதட்ட
அவன் கையை தட்டி விட்டவள், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவனை பார்த்து, “நீ எப்ப டா உள்ள வந்த..?” என்று கேட்க,
அவளை புரியாத ஒரு பார்வை பார்த்து வைக்க. அவனது பார்வை கண்டுசொல்லுடா எப்ப ரூம்குள்ள வந்த?” என்று மீண்டும் கோபமாக கேட்டவளை அதே புரியாத பார்வையுடன்
அப்பவே வந்துட்டேன்….மெல்லிய சந்தேக குரலில் கூறி முடிக்கும் முன்பே
என்னது….அதிர்ந்து கண்களை விரித்து, இருகைகளாலும் தன் வாயை பொத்தி ஓர் அடி பின் சென்றாள். 
என்ன ஆச்சு இவளுக்கு….லூசுயாட்டாளா? ஐய்யோ அப்படினா என் நிலைமை இன்னும் மோசம் ஆயிருமே…மனதிற்குள் அலறி அவளை மேல் இருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்து வைத்தான்…
அவனது சாதாரண பார்வை, விஷம பார்வையாக தெரிந்தது மஹாவிற்கு. பின் அவசரமாக தன் இருகைகளால் நெஞ்சை மறைத்துக் கொண்டவள், அதிர்ச்சியும் எரிச்சலும் கலந்த குரலில்
உண்மைய சொல்லு அப்பவே வந்துட்டுடியா? நான் உன்னை பார்க்கவே இல்ல…குளியலறை விட்டு வெளியே வரும் முன் அவன் இருக்கின்றானா என்று பார்த்துவிட்டு தான் வந்தோம்மே என சந்தேகம் எழுந்தவளுக்கு அதை தெளிவு படுத்த மீண்டும் கேட்க
ஆமா அப்பவே வந்துட்டேன்… நீதான் என்னை பார்க்கலை… அதுக்கு நான் என்ன பண்ணுறது…?” அசால்ட்டாக கூறிவிட்டு அவளை தாண்டி தன் உடையை எடுக்க கப்போர்டு பக்கம் சென்றான்…
ஆங்… அப்ப நான் தான் நீ இருக்குறது தெரியாம டிரேஸ் மாத்திட்டேனா?” மெல்லிய குரலில் கூறி வாயை மீண்டும் பொத்திக்கொள்ள, கண்கள் இரண்டும் லேசாக கலங்கி இருந்தன.
அவளது பேச்சை கேட்டு கப்போர்டில் இருந்து தன் தலையை விளக்கி அருகில் இருந்த கண்ணாடியில் பார்த்தவன் அவள் நின்று இருந்த தோற்றத்தை கண்டு,’ஓஓஓ.. என வாயால் செய்கை செய்தவன்
அதான் கொசுக்குட்டி அலறுச்சா…? ‘ மனதில் அவளது அலறலுக்கான காரணம் தெரிந்தவன் அவளை சீண்டி பார்க்க எண்ணினான்
தன் உடைகளை எடுத்து கொண்டு அவள் புறம் திரும்ப, அவள் அப்பொழுதும் அதே அதிர்ந்த நிலையில் நின்று இருக்க,
 
சும்மா சொல்ல கூடாது கொசுக்குட்டி எல்லாமே செம்ம…வேண்டும் என்றே அவளை உச்சி முதல் பாதம் வரை தன் கண்களை மேய விட்டவனின் கண்கள் விஷமமாக மின்னியது.
அதை கேட்டு கோபம் வர,”உள்ள வந்தா குரல் குடுக்க வேண்டியது தானே…. ஏன்டா பேசாம நின்னுட்டு இருந்த?” 
நான் ஏன் டி குரல் குடுக்கணும்… ஓசில ஷோ பார்க்க யாருக்கு கசக்கும்… ஆனா செம்மையா இருந்துச்சு….அவனும் சலைக்காமல் பதில் அளித்து அவளது பி.பி யை அசால்ட்டாக ஏத்தி விட்டான்.
அதில் கோபம் தலைக்கேற, அவள் திட்ட வாய் திறக்கும் முன் அறை கதவு தட்டப்பட்டது. 
தன்னை முறைத்து கொண்டு இருந்தவளை கண்களால் விழுங்கிக்கொண்டே சென்று யார் என்று பார்க்க…
இன்னும் ரெடி ஆகலையா… என்ன கண்ணா இது… ? ” வித்யா சித்தி சலித்துக் கொள்ள,
பத்து நிமிஷம் தான் சித்தி நீ போங்க…. நாங்க வந்துரோம்….அவரை சமாதானம் செய்து அனுப்பி விட்டவன் மீண்டும் தன் மனைவியை பார்த்து கண் அடித்து விட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான். 
அவனை பார்த்து முறைத்து கொண்டு இருந்தவள் அவன் கண்ணடித்ததை கண்டு ஒண்ணும் செய்ய இயலாமல், “ஆஆஆஆ…. காண்டாமிருகம்….என்று கத்த,
உள்ளிருந்த நந்தனுக்கு அது தெளிவாக கேட்க, சிரித்துக் கொண்டேலூசு கொசுக்குட்டி…என்றான்.
அவள் குளியலறைக்கு சென்றதும், பால்கனிக்கு சென்றவன் தன் பி.ஏக்கு அழைத்து ஒரு வாரத்திற்கு தான் வர போவது இல்லை என்றும், தான் இல்லாத சமயம் செய்ய வேண்டிய வேலையை  கூறியதுடன். கிஷோர்க்கு அழைத்து நிலைமையை கூறி அனைத்தையும் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு, தனக்கு வந்த மின்னஞ்சலை பார்த்துக் கொண்டே அறையினுள் நுழைந்தவன் அவளது அலர சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்து ஓடி சென்று அவள் வாயை பொத்தினான்.
எது சொன்னாலும் நம்பிரும் போல… கொஞ்ச நாளைக்கு இத வச்சே அவளை ஒரு வழி பண்ணனும்… எவ்வளவு திமிரு… என் கிட்ட வசமா மாட்டுனடி மவளே….கண்ணாடியில் அவள் முகம் தெரிவது போல் அவளுடன் பேச,
வெளியே மஹாவோ, “சே… எவ்வளவு கேர்லெஸா(careless) இருந்து இருக்க… அறிவே இல்ல டி உனக்கு…அவள் புலம்பிக் கொண்டு இருந்தாலும் கை தன் போக்கில் அதன் வேலையை செய்து கொண்டு இருந்தது. 
சில நிமிடங்களில் தயார் ஆனவள் குளியலறை கதவை வெறித்து பார்த்தவளுக்கு கோபம் எரிமலையாகி கொண்டு இருந்தது. 
அவனிடம் சண்டையிட விருப்பம் இல்லாததால் அவன் வருவதற்கு முன்பே அறையை விட்டு வந்து, ஹாலில் அனைவருடனும் அமர்ந்து பேசி கொண்டு இருந்தாள்…
வெளியே வந்தவன் தன் மனையாள் இல்லாததை உணர்ந்து,”ஓடிருச்சு கொசுக்குட்டி….என்றவன் மனதில் உணர்ந்த ஒரு வித சந்தோஷத்தில் விரைவாக தயார் ஆகி கீழே வந்தான்…. 
அவன் வந்ததும் கார்த்திகா, வித்யா, பத்மாநந்தன், நந்தன், மஹா என அனைவரும் இரு கார்களில் பயணம் ஆயினர்… 
கடையில் மஹா அவனிடம் தனியாக சிக்காமல் தன் அத்தைகளுடனே சுற்றி கொண்டு இருந்தாலும், விழிகளால் அவளை சீண்டி கலவரபடுத்துவதிலேயே குறியாக இருந்தான் நந்தன்… 
 ஹோட்டலில் உண்ண செல்ல அங்கும் நந்தன் மஹாவை ஒருவழி செய்துவிட, அவளால் ஒன்றும் செய்ய இயலாமல் போனது… 
பின் அனைத்து ஷாப்பிங்கும் முடிந்து காரில் ஏறியதும் மஹா,”என்னடா ரொம்ப பண்ணுற… வெட்கமா இல்ல இப்படி எல்லாம் பண்ண… காண்டாமிருகம் இன்னொரு முறை ஏதாச்சும் வம்பு பண்ணினே… நான் சும்மா இருக்க மாட்டேன்…கோபமாக மூச்சு வாங்க பேசியவளை பாவமான முகத்தோடு பார்க்க
நான் என்ன டி பண்ணட்டும்… சும்மா இருந்த என்னை நீ தான் இப்படி பண்ணுன… எல்லாத்தையும் நீ பண்ணிட்டு என்னை குத்தம் சொன்னா எப்படி… நான் உன்னை எதுவுமே பண்ணல அப்புறம் நான் ஏன்டி வெட்க படணும்…சிணுங்கிக் கொண்டே பேசியவனை கண்டு எரிச்சலுடன் தன் நெற்றியில் அறைந்து கொண்டாள். 
கடவுளே… இங்க பாரு…அவள் பேசி முடிக்கும் முன் அவன் முகம் ஒரு வித பரவசத்துடன் வாய் எல்லாம் பல்லாக அவள் புறம் திரும்பி அமர்ந்து அவளை ஆராய்வது போல் பார்த்துவைக்க….
அவனது செய்கையில் முகத்தில் இருந்த மலர்ச்சியும் கண்டு அவனை ஒரு வகையான ஜந்துவை பார்ப்பது போல், கார் கதவில் லேசாக ஒன்றியபடி பார்த்தவள், “என்ன…?”என்று கேள்வி எழுப்ப
நீ தானே என்னை பாருன்னு சொன்ன… அதான்…முகத்தில் அதே புன்னகையுடன் பதில் கூறியவனை கண்டு கோபம் தலைகேற.
ஏய்… காண்டாமிருகம்… என்னை கொலவெறி ஆக்குற…என்று பல்லை கடித்து அடக்கப் பட்ட கோபத்தில் கத்தினாள். 
என்ன ஆச்சு ஸ்ரீ டார்லிங்…?”அசடு வழிந்தபடி கேட்டவனை பார்த்து,
ஏய் நிறுத்து இந்த டார்லிங்ன்னு சொல்லுற வேலை எல்லாம் வச்சுக்காத… அப்புறம்… இன்னைக்கு நீ எதுவும் பார்க்கல… இரு எதுவும் பேசாத வாய் திறந்த கொண்ருவேன்…அவள் சொல்லி முடிக்கும் முன் பேச வாய் திறந்தவனை கையுயர்த்தி பேசாதே என்பது போல் தடுத்தவள்
நீ எதுவும் பார்க்கல… நாம எதுவும் அதை பத்தி பேசலை… சோ  இனி இந்த மாதிரி பண்ணுறத நிறுத்து…என்று உறுதியான குரலில் பேசியவளை கண்டு,
சரி டார்லிங்…என்று சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு திரும்பி நேராக அமர்ந்தவன் வீட்டை நோக்கி காரை கிளப்பினான். 
சே…என்னத்தை பார்த்தானோ இப்படி பண்ணுறான்… எல்லாம் உன்னோட தப்புடி…என்று லேசாக முணுமுணுக்க அது அவன் காதில் தெளிவாக விழுந்தது.
அவளை சீண்டி, வெறுப்பேற்றி இவனை கண்டால் தன் மாமியாரின் பின்னால் ஓடும் அளவிற்கு அவளை ஒருவழி செய்து விட்டான் நந்தன். இப்பொழுது அவள் முணுமுணுக்க அதில் வந்த சிரிப்பை அடக்க முயல மிகவும் சிரமபட வேண்டியாதாகி போயிற்று அவனுக்கு. ஓர கண்ணில் அவள் சிணுங்கி கொண்டும் முணுமுணுத்து கொண்டும் இருந்தவளை பார்த்து கேலி சிரிப்புடன் காரை ஓட்டிக் கொண்டு இருந்தான் நந்தன்….
இரவு உணவின் போது பத்மாநந்தன், “கண்ணா நாளை எல்லா திங்சையும் வீட்டுல செட்டில் பண்ணிடலாம்…என்க,
மஹாவை ஓர் பார்வை பார்த்துவிட்டு,”ஆமா அப்பா… நானே சொல்லணும்னு நினைச்சேன்… நாளைக்கு மாமா வீட்டுல விருந்துக்கு கூப்பிட்டு இருக்காங்க… காலைல மாமா வீட்டுக்கு போய்ட்டு மதியம் நேராக அங்க போய் முடிச்ச அளவுக்கு எல்லாத்தையும் செட் பண்ணிட்டு வரலாம்னு நினைச்சேன்…” 
ஏன்னா இந்த வாரம் விருந்துன்னு நிறைய இருக்கு… அப்புறம் ஆஃபிஸ் ஒர்க்கும் நிறைய பென்டிங்(pending) இருக்கு. சோ இப்பவே மத்த ஒர்க்க முடிச்சுறலாம்னு இருக்கேன் அப்பா….என்று தன் வேலையை பட்டியலிட்டுக் கொண்டு வர,
சரிப்பா… பார்த்து பண்ணு…என்று அவன் தோளில் தட்டி கொடுத்தவர்,உணவு உண்டதும் கை கழுவ எழுந்து செல்ல அவனும் அவர் பின்னே எழுந்து சென்றான்.
குடும்பத்தில் அனைவரும் உண்ட பின்னர் பெண்கள் அனைவரும் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டே உண்டு முடித்து எல்லாவற்றையும் ஒதிக்கி வைத்துவிட்டு அவரவர் அறைக்கு சென்றனர்.
ஒரு முடிவுடன் தன் அறைக்குள் நுழைந்த மஹா, படுக்கையில் கால் நீட்டி அமர்ந்து லேப்டாப்பில் வேலை செய்துக் கொண்டு இருந்தவனை திரும்பியும் பாராமல், மாற்று உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் சென்றாள்.
அதை கண்டும் காணாமல் இருந்தவன், அவள் உள்ளே சென்றதும் புன்னகைத்துக் கொண்டான் லேப்டாப்பில் கண்களை பதித்தவாறே. 
பின் அவள் வந்ததும் மிகவும் ஜாக்கிரதையாக படுக்கையின் ஓரத்தில் படுத்தவளை ஓர கண்ணால் கவனித்து கொண்டு இருந்தவன்,’கொஞ்ச நேரத்துல என் மேல வந்து உருள போறா அதுக்கு எவ்வளவு சீன்…மனதில் எண்ணிக் கொண்டவன் தன் வேலையில் முழ்கி போனான். 
சிறிது நேரத்தில் அவன் எண்ணிய படியே உருண்டு அவன் பக்கம் வந்தவளை கண்டு, ‘உன்னை நினைச்சா கோவமா வருதுடி ஆனா அதை உன் கிட்ட அதிக நேரம் தக்கவச்சுகவும் முடியலை, காட்டவும் முடியலை… ஏன் ஸ்ரீ ..?’ மனதில் தன் கொசுக்குட்டியுடன் கேட்டுக் கொண்டவன் அவளை இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான். 
பின் தன் மனையாளை லேசாக அணைத்தப்படி உறக்கத்தையும் தழுவினான். 
பின் அந்த ஒரு வாரமும் விருந்திற்கு செல்வதும், பொருட்களை செட் செய்வதிலும் ஓடின.
 
விருந்திற்கு செல்லும் இடத்தில் மஹா திருப்தியாக   ஒரு பிடி பிடித்தாள் என்று தான் சொல்ல வேண்டும்… அவளது தேவைக்கும் பழக்கத்துக்கும் அதிகமாகவே உண்டாள். 
ஏன்டி கொசுக்குட்டி நீ இவ்வளவு சாப்பிடுவியா…?” நந்தன் கேலி பேசும் அளவு உண்டவள்,
கண்ணு வைக்காத டா காண்டாமிருகம்…அவனுக்கு வாயில் அழகு காட்டிவிட்டு அதே வாயில் உணவை அடைக்கும் பணியை தொடர்ந்தாள்..
இனி தான் இது போல் உண்ண போவது இல்லை என்பதை அசரிதியாக உணர்ந்தாளோ என்னவோ… 
விதியின் விளையாட்டில் சுழல போகிறாளா அல்லது சுழல போகிறானா…?

கண்டிஷன்ஸ் தொடரும் …….

Advertisement