Advertisement

Ep:1
சில்லென்று காற்று வீச கதிரவனை மறைத்து கொண்டு மேக கூட்டங்கள் தங்கள் அதிகாரத்தை காட்டி மழையை பொழிந்து கொண்டு இருந்த மாலை வேளை அது…..
சென்னையில் உள்ள அந்த பிரம்மாண்ட ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பார்க்கிங் ஏரியாவில் தனது ஸ்கூட்டியை பார்க் செய்து விட்டு உள்ளே செல்ல எத்தனிக்கையில் ,
ஃபோன் அலற மழையில் நனைந்த வாறே அதை ஆன் செய்தவள்
“சொல்லுடி”,
…….
“வந்துட்டேன்டி பக்கி, கத்தாத கீழே பார்க்கிங் ஏரியால தான் இருக்கேன் 5 மினிட்ஸ்ல வந்துடுவேன்”
……
“சரி சரி வாங்கி தரேன் இப்ப ஃபோனை வை” என பேசிக் கொண்டே காம்ப்ளக்ஸின் படிகளில் ஏறவும், மழைபொழிந்துக் கொண்டு இருந்ததால் பளிங்கு கற்களால் ஆன படிகளில் இருந்த தண்ணீரில் அவளது கால்கள் வழுக்கி விட,
“ஆஆஆஆஆஆ…… அம்மாஆஆஆஆ” என கத்தி கொண்டே கையில் இருந்த ஃபோனை நழுவ விட்டவள் இருகண்களையும் தன் இரு கைகளால் இறுக மூடிய படி கீழே விழப் போனாள்…. அப்பொழுது
‘என்னடா இது….. கீழ விழுந்தும் வலிக்கவே இல்ல, மிதக்குற மாதிரி இருக்கு?? ஒரு வேளை விழுந்தவேகத்தில ஸ்பாட் அவுட் ஆயி சொர்கத்துக்கு வந்துட்டேனா??????’ என சில நொடிகளுக்குள் மனதினில் புலம்பி அதிர்ந்தாள். பின் மெல்ல தனது இடதுக் கையை சிறிது கீழே இறக்கி கண்ணை திறந்து பார்த்ததும், அதிர்ச்சியில் இரு கண்களையும் இமைக்க மறந்து பார்த்துக்கொண்டு இருந்தாள்.
அப்பொழுது சற்று தொலைவில் இருந்த கல்யாண மண்டபத்தில் இருந்து,
தம் தன தம் தன தாளம் வரும்
ராகம் வரும் பல பாவம் வரும்…….
என பாடல் ஒலிக்க இங்கு இவளோ அவனின் கைகளில் தொங்கிக் கொண்டு இருந்தாள்…..
காற்றில் அசைந்தாடிய அடர் கேசமும், கூர் நாசியும், துளைக்கும் கண்களும், சிகரெட்டுக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என கூறும் அதரங்களுமாய், மா நிறத்தில் அழகிய ஆண் மகனாய் இருக்கும் ஒருவன் கையில் தாம் ஊஞ்சல் ஆடிக் கொண்டு இருக்கிறோம் என்ற நினைவின்றி தன்னை அறியாமல் தன் நெஞ்சில் சேமித்தாள் அவனை.
தன்னை கீழே விழாது காத்தவனிடத்திலே விழுந்தது பெண்ணவளின் மென்மனம். அதை அறியாமல் அவள் புரிய போகும் காரியம் அவளை எங்கு கொண்டு செல்லுமோ…..
……….
அவன் மாலினுள் செல்ல முற்படும் போது எதேர்ச்சையாக திரும்புகையில்,
அங்கு மாலை மங்கிய, மழை கால வேளையில்……. மழை நீரில் நனையாமல் இருக்க மயில் தோகைப் போல் இருந்த மிடியை ஒரு கையில் தூக்கிப் பிடித்தும், மறுகையால் ஃபோனில் பேசிய வாறு தூரத்தில் ஓடி வரும் அவளை பார்த்து கொண்டு இருந்தான் அவன்.
அவள் விழ போவதை உணர்ந்து ஓடி சென்று அவள் விழாமல் இருக்க இடையோடு கை கொடுத்து தாங்கிப் பிடித்திருந்தான்….
‘சே….. செம்ம கண்ணுடா சாமி, பார்த்துட்டே இருக்கலாம் போல’ என அவளது விரிந்த விழியினுள் தனது பிம்பத்தை தேடி கொண்டு இருக்கையில்,
மீண்டும் அதே மண்டபத்தில் இருந்து,
கண்ணுக்குள் நூறு நிலவா…….
இது ஒரு கனவா……. 
கைக் குட்டை காதல் கவிதை எழுதிய உறவா…..
என ஜதியுடன் பாடல் ஒலிக்க,
விழிகள் நான்கும் ஒற்றை கவிதை வடிக்க, மெல்ல அவளை தூக்கி நேராக நிறுத்தியவன், ” ஆர் யூ ஓகே?”என வினவினான்….
தான் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் தன்னையே பார்த்து கொண்டு இருந்தவள் முகத்திற்கு முன் தன் கையை அசைத்து அவளை சுயத்திற்கு கொண்டு வந்தான்.
“ஹாஹான்…… என்ன கேட்டீங்க????? ” அவன் என்ன கேட்டான் என்பதை கவனிக்க தவறியதால் திருத் திருவென விழித்தாள்.
“ஆர் யூ ஓகேனு கேட்டேன். இப்படி லுக்கு விட்டா எப்படி பேசுறது கேட்கும்?”
அவன் தன்னை கேலி பேசியதில் சுரு சுருவென கோவம் வர,
“ஹலோ யாரு யாரை லுக்கு விட்டது? ?” 
“நீ தான். என்னை.” பட்டென கூறியவனின் மேல் கொலைவெறி எழ,
“யாரு நானா?எப்படா பொண்ணுங்க விழுவாங்க எப்படா புடிக்கலாம்னு வெய்ட் பண்ணுற ஆளுங்க நீங்க…” அவனை பேச விடாமல் எகிறியவள் மேலும்,
“ஏதோ விழுந்துருவோம்னு ஷாக்ல அப்படியே நின்னுட்டேன், அதுக்கு லுக்கு விடுறேனு ஆயிருமா???” முதலில் சிணுங்கிக் கொண்டே பேச தொடங்கியவள் வாக்கியத்தின் முடிவில் சண்டைக்கு நின்றாள்.
அவள் கோபத்தில் காட்டிய பாவனைகளையும், சிணுங்கல்களையும் சிறு புன்னகையுடன் அவன் பார்த்துக் கொண்டு இருந்தான்.
‘நான் எவ்வளவோ கஷ்டப் பட்டு சண்டைப் போட்டுட்டு இருக்கேன். ரெஸ்பெக்டே இல்லாமல் சிரிச்சுட்டு இருக்கான். லூசு….. உன்னை…..’ அவனது புன்சிரிப்பை களைக்க எண்ணி தன் கைகளை தூக்க நினைத்தவள் அப்பொழுது தான் தன்னை இன்னும் அவன் கையணைப்புக்குள் வைத்து இருப்பதை உணர்ந்து வேகமாக தன்னை அவனிடம் இருந்து பிரித்துக் கொண்டாள்.
அவனோ தன்னை விட்டு அவள் விலகியதும் தன் நிலைக்கு வந்தவன் தான் இவ்வளவு நேரம் நின்று இருந்த நிலையை எண்ணி தலை குனிந்து தன் பின்னந் தலையை கோதியவாறு அசடு வழிந்தபடி நின்றான்…
பின் மெல்ல அவளை நிமிர்ந்து பார்த்த போது கைகளை குறுக்காக கட்டிக்கொண்டு அவனை முறைத்து கொண்டு இருக்க ” இன்னைக்கு யாரு முகத்தில் முழிச்சேன்னோ தெரியல? “, வாய் விட்டுப் புலம்பி கொண்டு இருந்தவனை இடமறித்தவள்,
“யூ…. யூ…யூ….. ஹொவ் டேர்( dare) யூ டூ டச் மீ… ?” என அவன் கழுத்தை நெரிப்பதுப் போல் வந்தளை சில நொடிகள் வெறித்துப் பார்த்தவன்,
“ஹம்ம்ம்……. ஏன் பேச மாட்டேன் உன்னை கீழே விழாமல் பிடிச்சதுக்கு அப்படியே விழட்டும்னு விட்டு இருக்கணும். அய்யோ பாவம்னு பிடிச்சேன் பாரு என்னை சொல்லனும். சுண்டெலி ஸைசில் இருந்துட்டு உனக்கு இவ்வளவு வாய் இருக்க கூடாது”.
“ஹே……. யார பார்த்து சுண்டெலினு சொல்லுற? கொன்றுருவேன்டா தடியா. உன்னை யாருடா பாவம் பார்க்க சொன்னது?” அவள் தன்னை டா போட்டு விளிக்கவும் இலவச இணைப்பாக தடியா என்று திட்டவும் பொறுமை இழந்தான்.
அவன் பதிலுக்கு பேச வாய் திறக்கும் முன்” டேய் நந்தா எப்ப வந்த? இங்க என்ன பண்ணிட்டு இருக்க? கௌதம் வந்துட்டான் வா போலாம்…..”என அவனது நண்பன் கிஷோர் வந்து அழைக்க அவளை முறைத்துக்கொண்டே,
“சாரி டா மச்சான், அப்பவே வந்துட்டேன், கொஞ்சம் கொசு குட்டி டார்ச்சர் டா அதான் இங்கேயே நின்னுட்டேன். வா போலாம்”, என அவளை ஓரக் கண்ணால் பார்த்து விட்டு கிஷோருடன் மாலின் உள்ளே செல்ல திரும்பியவனை,
“என்னது கொசு குட்டியா??? லூசு நீ தான்டா காண்டாமிருகம்….” என அவன் பின்னே கத்திக்கொண்டே போனாள்.
மாலின் வாயல் வரை சென்ற நந்தன் அவள் தன்னை காண்டாமிருகம் என்று சொன்னதை கேட்டு வெடுக்கென்று திரும்பிப் பார்த்து முறைக்க, நந்தனை பின்தொடர்ந்து திட்டிக் கொண்டே வந்தவள் அவன் சட்டென்று திரும்பி பார்க்கவும் ஒரு நொடி அதிர்ந்தவள், எங்கு அவன் தன்னை திட்டி விடுவானோ என்று எண்ணி “அவன் நம்மளை ஏதாச்சும் சொல்லுறதுக்கு முன்னாடி எஸ் ஆயிருடி செல்லம், இல்லாட்டி அடுத்து மூட்டைப்பூச்சினு சொன்னாலும் சொல்லுவான். விடு ஜூட்” என அவனை கடந்து செல்ல நினைக்க அது அவளால் முடியவில்லை.
மாலின் முன்பு நின்று இருந்தவனை நிமிர்ந்து பார்த்தவள் அவன் விரைப்பாக நின்று இருந்த விதத்தை பார்த்து” டேய் காண்டாமிருகம், ஹம்ம்ம்… உன் பெயர் என்னமோ வருமே…. ” என வலது கை விரல்களால் தாடையில் தட்டியப் படி யோசித்தவள் பின் நினைவு வந்தவளாக, ” ஹான்ன்ன்….. நந்தா தானே? பெயரை பாரு நந்தாவாம் நந்தி மாதிரி நின்னுகிட்டு, வழிய விட்டு நில்லுங்க Mr.GM….” என அசால்ட்டுப் போல உரைத்து அவனை பக்கவாட்டாக சுற்றிக் கொண்டு சென்றவள் இரண்டு அடி எடுத்து வைக்கும் முன்…..
” ஏய்….. கொசுக்குட்டி….நில்லுடி !!!”என்ற நந்தாவின் கர்ஜனை குரலில் அவன் அழைத்த கொசுக்குட்டி முயல் குட்டியாய் ஓடிவிட்டது அவன் பார்வைவட்டத்தில் இருந்து..…
மழை நீரில் வழுக்கி விழாமல் காத்து 
உன் விழி வீச்சில் வீழ்த்திவிட்டாய் மன்னவனே 
நானே அறியாமல் என்னுள் உறைந்தவனே 
இன்று போல் என்னை என்றும் காத்து 
என் நலன் கேட்பாயா???
தன்னிலை மறந்த நான் 
உன் எள்ளலில் கோபம் கொண்டு 
வாதம் புரிந்தேன் 
வழியை மரிக்கும் நந்தி என்றேன் 
உன் கர்ஜனையில் இருந்து தப்பிச்சென்றேன்
விதியின் விளையாட்டில் 
மாட்டிக்கொண்டதை அறியாமல்…
கண்டிசன்ஸ் தொடரும் …….
 

Advertisement