Advertisement

காதல் அணுக்கள் – 8
சித்ரா எதிர்பார்த்தது போலவே கிஷோர் சென்றவுடன் சுபி தையா தக்கா என்று குதிக்க ஆரம்பித்தாள் .
யாரை கேட்டு நீங்க சம்மதம் சொன்னீங்க . என்னை ஒரு வார்த்தை கேட்கணும்னு உங்க இரண்டு பேருக்கும் தோணவே இல்லையா ?
இதற்கிடையில் அவள் மனசாட்சி “அடியேய்  இது உனக்கே ஓவரா தெரியலே . கிஷோர் அங்கிள் தான் அவர் விருப்பத்தை சொல்லிருக்காரு . இன்னும் சந்தீப் ஓகே சொல்லவே இல்ல . அதுக்குள்ள அவன் என்னமோ கட்டுன உன்ன தான் கட்டுவேன்னு ஒத்த கால்ல நிக்கற மாதிரில்லை அம்மணி ரகளை பண்ணிட்டு இருக்கீங்க “
எப்படியும் அவன் வேண்டாம்னு தான் சொல்லுவான் அந்த நம்பிக்கை இருக்கு  ஆன அவன் என்னை ரிஜெக்ட் பண்றதுக்கு முன்னாடி நான் அவனை ரிஜெக்ட் பண்ணதா வரலாறு பேசவேண்டாமா அதுக்கு தான் நான் போராடிட்டு இருக்கேன் சோ நீ கொஞ்சம் கம்முனு உள்ளே போய் ரெஸ்ட் எடு என்று அதன் தலையிலேயே தட்டி  அனுப்பினாள் .
ஏன் சுபி வேண்டாம்னு சொல்றே ? உனக்கு வேற யாரையாவது பிடிச்சிருக்கா? என்றான் பாலாஜி .
இரண்டு மாசத்துக்கு முன்னாடி கூட ஒருத்தன் ப்ரொபோஸ் பண்ணானே . அவன் பேரு கூட ராஜீவோ சன்ஜீவோ சட்டுனு ஞாபகத்துக்கு வரமாட்டீங்குதே. பேசாம அவனை தான் லவ் பண்ணுறோம்னு இப்பத்திக்கு சொல்லி சமாளிக்கலாமா. ச்சே ச்சே என்ன இது நம்ம மூளை இவ்ளோ கேவலமா யோசிக்குது. சுபி இந்த ஜுஜுபி மேட்டர்க்கு பயந்து வேற எதாவது பிரச்சனையில் மாடிக்காதே .
என்ன சுபி யோசிச்சிகிட்டே இருக்க? பதில் சொல்லு
இல்லண்ணா  நான் யாரையும் லவ் பண்ணலே பட் அதுக்காக சந்தீப்பை கல்யாணம் பண்ணிக்கவும் விருப்பமில்லை .
ஏன் விருப்பமில்லைன்னு ஒரு வேலிட் ரீசன் சொல்லு?
தன் தமையனிடம் எவ்வாறு கூறுவாள். அவன் தன்னை ஆர்வமாக கூட பார்த்ததில்லை ஏதோ கல்லையும் மண்ணையும் பார்ப்பதை போல் தன்னை பார்ப்பானென்று. அதை கூறமுடியாமல்
ஏன் நீ மட்டும் தான் லவ் மேரேஜ் பண்ணுவியா. எனக்கும் யாரையாவது பிடிக்கும் நானும் அப்போ லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்குறேன் .
பாலாஜி அவள் பதிலில் அடித்தான் போனான். சித்ரா குற்றம்சாட்டும் பார்வை பார்ப்பது போல் தோன்றியது அவனுக்கு
இது அனைத்தும் தன்னால் ஆரம்பித்தது தான் அதனால் அதை சரிசெய்யும் பொறுப்பும் தனக்கு தான் இருக்கிறது என்றுணர்ந்து.
சந்தீப் ரொம்ப நல்லவன். உன்னை நல்ல பாத்துக்குவான். என் பிரெண்டுனு சொல்லலே . ரியலி  ஹி ஐஸ் எ ஜெம். இதுவே ஸ்ரீராம்கு உன்னை கேட்டிருந்த நானே வேண்டாம்னு சொல்லிருப்பேன். சந்தீப்க்கு கேட்டனாலதான் நான் ஓகே சொன்னேன். சந்தீப்பை கல்யாணம் பண்ணிக்க நீ கொடுத்து வெச்சுருக்கணும். என்று பொறுமையாக எடுத்து கூறினான் .
ஓ ஹோ அந்த உம்மணா மூஞ்சியை கல்யாணம் பண்ணிக்க நான் குடுத்து வெச்சுருக்கணுமோ? என்று மனதில் நினைத்தவள் அப்போ நீயே அவனை கல்யாணம் பணிக்கோ என்றாள் .
அதுவரை எதுவும் பேசாமல் அமைதி காத்த சித்ரா “சுபி இது உங்கப்பா உனக்காக எடுத்த முடிவு. அதுனாலே உன் கல்யாணம் அவர் விருப்ப படி தான் நடக்கணும். உனக்கு உங்கப்பா மேல அன்பு இருந்த சம்மதம் சொல்லு ” என்று எழுந்து அவர் அறைக்கு சென்று விட்டார் .
பாலாஜியும் யோசிச்சு முடிவு பண்ணு என்று எழுந்து சென்று விட்டான் .
சுபி செய்வதறியாது கண்ணை முடி சோபாவில் சாய்ந்துவிட்டாள் . அருணிடம் நாளை இதை பற்றி பேசவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள் .
அங்கே சந்தீப் வீட்டிலோ கிஷோர் மகனின் சம்மதம் கிடைத்ததும் விஷயத்தை மெதுவாக மனைவி மற்றும் மகளிடம் கூறினார். சாரதாவிற்கு இது அவ்வளவு உவப்பாக இருக்காதென்று தெரியும் ஆனால் அவர் இந்தளவு எதிர்பார் என்று எண்ணவில்லை .
யாரை கேட்டு நீங்க இப்படி ஒரு முடிவெடுத்தீங்க . என் பையனுக்கு சம்மந்தம் பேசுறதுக்கு முன்னே என்னை கேட்கணும்னு உங்களுக்கு தோணலியா ?
சாரு நீ கேட்குறதெல்லாம் நியாயம் தான். நான் இல்லைனு சொல்லல. ஆன சுபிக்கு கல்யாணம் பண்ணிட்டு தான் பாலாஜி பணிக்குவேன்னு சொல்லும் போது என்ன பண்றது. நம்ம சந்தியாக்கு எப்படி 4 மாசத்துக்குளே கல்யாணம் முடிக்குறது. அதையும் யோசிக்கணுமில்ல .
அதுக்காக நம்ம சந்தீப் தான் கிடைச்சானா உங்களுக்கு . எல்லாம் இவளை சொல்லணும் தன் வாழ்க்கையும் கெடுத்துகிட்டதுமில்லாம  அண்ணன் வாழ்க்கையையும் சேர்த்து கெடுக்குறா
ஏற்கனவே காலையில் இருந்து அன்னையிடம் திட்டு வாங்கிக்கொண்டிருக்கிறாள் அதை மேலும் சிக்கலாக்குவதை போல் இது என்ன புது பிரச்சனை என்று சந்தியா தான் ஓய்ந்து போனாள். சுபிக்கு தங்கள் திருமணத்துக்கு பிறகு திருமணம் செய்தால் என்ன குடியா முழிகிவிடும் என்று சந்தியாவின் ஆற்றாமை கோபம் அனைத்தும் பாலாஜியின் மேல் திரும்பியது .
இங்க பாருங்க சுபிக்கு வேணும்னா நாமளே ஒரு மாப்பிள்ளையை பார்த்து சொல்லலாம் . அவங்களுக்கு விருப்பம் இருந்தா முடிக்கட்டும் இல்லனா என்னமோ பண்ணட்டும் . அதுக்கு மேல அவங்க பிரியம் . அவ ஜாதகத்தில் ஒண்ணும் சீக்கிரமா கல்யாணம் பண்ணனும்னு இல்லைதானே அப்புறம் ஏன் இப்படி அவசர படுறாங்க .
தாயின் பேச்சில் அதிர்ந்தவன். விட்டா அம்மாவே அவளுக்கு வேற மாப்பிள்ளை பார்த்து கட்டிவைக்காம ஓயமாட்டாங்க போலிருக்கே . டேய் சந்தீப் சீக்கிரம் எதாவது செஞ்சு அம்மாவே கன்வின்ஸ் பண்ணிடுடா என்று மூளையை கசக்கி கொண்டிருந்தான்.
கிஷோர் “அவங்க எங்க அவசரப்படுறாங்க. சுபிக்கு அடுத்த வருஷம் தான் கல்யாணம் பண்ணலாம்னு இருந்தாங்க .  பாலாஜி இரெண்டு வருஷத்துக்கு அப்புறம் கல்யாணம் பன்றேன்னு சொல்லறான் . அவசரம் இப்போ நமக்குத்தான். அதுவுமில்லாம குமரன் இருந்தப்போவே சந்தீப்கும் சபிக்கும் பேசி வச்சது தானே”
உங்க பிரெண்டே போயாச்சு நீங்க ஏன் இன்னும் அதையே புடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க . இன்னைக்கு காலையில் தான் அக்கா கால் பண்ணிருந்தாங்க அவங்க மாப்பிள்ளையோட அண்ணன் மகளுக்கு நம்ம சந்தீப கேக்குறாங்க. நல்ல பெரிய இடம் அதை விட சொல்றீங்களா ?
அம்மா அவ்வளோ வசதியா வளந்தவே நம்ம கூட எல்லாம் ஒத்து போவாளா? அவ நல்லவளாவும் இருக்கலாம் இல்லாமையும் போகலாம் நமக்கு தெரியாது. அப்படி ஒரு வேலை ஒத்து போகலான சந்தியா நம்ம வீட்டுக்கு நினைச்சப்போ உரிமையா வந்துட்டு போக முடியுமா  இல்ல நாம தான் இந்த மாதிரி கூட்டுக்குடும்பமா  இருக்கமுடியுமா?
சுபியை பத்தி நம்ம எல்லாருக்கும் நல்ல தெரியும் . அவ மருமகளா வந்தா இந்த மாதிரி எந்த பிரச்சினையும் வராது . வீட்டுலே பிரிச்சனை இல்லாம இருந்தா தானே நான் என்னோட ஒர்க்ல கான்செண்ட்ரட் பண்ணமுடியும் . அதனால எனக்கு சுபியை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் என்று நடைமுறையை விளக்கி கூறினான் சந்தீப்
பொறுப்பான வளர்ந்த மகனிடம் அதற்கு மேல் தன் எதிர்ப்பை காட்டாமல் அமைதியாகி போனார் சாரதா. அவன் சொல்லுவதில் இருந்த நியாமும் அவருக்கு விளங்கியது . ஒரு வேலை தான் பார்த்த பெண்ணால் இது போல் எதாவது பிரச்சனை வந்தால் தான் பொறுப்பேற்க நேரிடும்  தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசே மேல் என்று தன் சம்மதத்தையும் தெரிவித்தார். இதில் அவரே உணராதது சுபியை பிசாசு என்றெண்ணி தான் மனதளவில் அவளுக்கு மாமியார் ஆகிவிட்டதை தான் 😉 .
ஹப்பா என்று பெருமூச்சுவிட்டவன். பெரிய விக்கெட் ஒன்றை வீழ்த்திய சந்தோஷத்தில் அவன் முகம் 1000 வாட்ஸ் பல்பாக பிரகாசித்தது .
சந்தியா தன் அண்ணனை குறுகுறு வென்று பார்த்து கொண்டிருந்தாள் . முட்டுக்காடு சென்ற போது சுபியின் கேண்டீட் ஷாட் போட்டோ ஒன்றை தன் அண்ணனின் மொபைலில் பார்த்தாள் அன்றிலிருந்தே சந்தியாவின் மனதில் ஒரு சந்தேகம் இருந்தது . அண்ணன் ஒரு வேலை சுபியை லவ் பன்றாரோ ஆன சுபிக்கிட்ட சரியாய் பேசிக்கூட பார்த்ததில்லையே என்று நினைத்திருந்தவள் .
இன்று தன் அண்ணன் சுபியை பெருமையாக பேசியதும் அவன் முகத்தில் அப்பட்டமாக தெரியும் சந்தோஷமும் தன் சந்தேகம் சரிதான் என்று உர்ச்சிதமாகியது .
கேடி அண்ணா . யாருகிட்ட ? இரு உன்னை அலறவிடுறேன். நேராக தன் அண்ணன் முன் நின்றவள் அண்ணா உன் நிலைமை எனக்கு புரியுது . எனக்காக தான் நீ இஷ்டமில்லாம சுபியை இப்படி அவசரமா கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்ட. நீ கஷ்டப்படவேண்டாம் . நான் சுபிக்கிட்ட பேசுறேன் . எங்கண்ணனுக்கு உன்னை சுத்தமா பிடிக்கலை. அப்பா அம்மாவுக்காக வேற வழியில்லாம கல்யாணதுக்கு ஒத்துக்கிட்டாங்க நீயே எதாவது காரணம் சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்திருன்னு .
அடக்கடவுளே இவ என் கல்யாணத்தை நிறுத்தாமா அடங்கமாட்டா போலிருக்கே. பேசாம சுபியை  பிடிச்சிருக்குனு சொல்லிடலாம என்று யோசித்துக்கொண்டிருந்தான் .
அவன் முழிப்பதை கண்டு பாவமாக போய்விட அவனை மேலும் சங்கடப்படுத்த வேண்டாம் என்று அவன் கையில் இருந்த மொபைலை பறித்து அதில் இருந்த சுபி போட்டோவை காட்டினாள் .
தங்கையிடம் பிடிபட்ட உணர்வில் நாக்கை கடித்து கட்ட விரலை நெற்றியில் தேய்த்து அழகாக வெட்க புன்னகை பூசியது அவன் முகம் .
அண்ணனின் வெட்கத்தை கண்டு யேய் என்று ஆர்ப்பாட்டமாக சிரித்தவள் . இது எப்போ இருந்து நடக்குது . சொல்லவே இல்ல . ஆமா முதல்ல சுபிக்கிட்ட சொன்னையா என்று தன் தமையனை பற்றி நன்கு அறிந்தவளாக கேட்டாள்.
இன்னும் இல்ல . உங்க கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் பேசலாம்னு இருந்தேன் அதுக்குள்ளே இப்படி ஆயிடுச்சு .
அண்ணா நல்ல வேலை இப்படி ஆச்சுன்னு நினைச்சுக்கோ நீ மட்டும் சுபிக்கு ப்ரொபோஸ் பண்ணி லவ் பண்ணி அப்புறம் கல்யாணம் பண்ணனும்னு நினைச்சிருந்த இந்த ஜென்மத்துலே உங்களுக்கு கல்யாணம் ஆன மாதிரி தான். அதனால தான் கடவுளா பார்த்து இப்படி அமைச்சு கொடுத்துட்டார். சோ இது அரேஞ்சுடு மேரேஜ் போலவே மைன்ட்டைன் பண்ணிக்கோ.
ஹ்ம்ம் நானும் அப்பாக்காக அப்படி தான் யோசிச்சு வெச்சுருந்தேன் . சோ இது நம்ம இரண்டு பேர் குள்ளேயே இருக்கட்டும் என்று அண்ணன் தங்கை ஒரு முடிவிற்கு வந்தனர்.
மறுநாள் காலை சுபி வழக்கம் போல அலுவலகம் கிளம்பிச்சென்றாள் . வீட்டில் இருந்தால் அண்ணனும் அம்மாவும் திருமணத்தை குறித்து பேசுவார்கள் என்று அவர்களிடமிருந்து தப்பி செல்வதற்கே அலுவலகம் நேரமே கிளம்பி போனாள் அதுவும் சாப்பிடாமல் . அப்படியாவது அவர்களுக்கு தன் கோபம் தெரியட்டும் என்று .
எலக்ட்ரிக் ட்ரைனில் இவளை பார்த்த மது எதுவோ சரியில்லை என்று பார்த்ததும் கண்டுபிடித்து விட்டாள் . சுபி என்னாச்சு ஆளே ரொம்ப டல்லா இருக்கே .
வீட்லே ஒரு சின்ன பிரச்சனை கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாயிடும் என்றால் நம்பிக்கையாக . அவள் நம்பிக்கைக்கு காரணம் சந்தீப் எப்படியும் கல்யாணத்திற்கு மறுத்து விடுவான் என்பதே .
அவள் உள்ளே நுழையும் போதே தன் டீம் மக்கள் அனைவரும் தன்னையே பார்ப்பது போல் உணர்ந்தாள். எல்லாரும் என்னையே பாக்குறாங்களா இல்ல எனக்கு தான் அப்படி தோணுதா . கூட வந்த மதுவிடம் தன் சந்தேகத்தை கேட்டாள் .
வீட்டு பிரச்சனையால நீ கம்மியா மேக் அப் போட்டிருக்கே தானே அதனால ஒரு வேலை அடையாளம் தெரியாமல் உத்து உத்து பாக்குறாங்களோ என்ற மதுவின் தலையில் நங்கென்று கொட்டினாள். பின்னென்னடி உனக்கு ரொம்ப தான் நினைப்பு  எல்லாரும் அவங்க அவங்க வேலையை தான் பாக்குறாங்க என்றாள் தலையை தேய்த்தபடி.
இருவரும் பேசியபடியே தங்கள் கியூபிற்கு வந்து சிஸ்டம் லாக் கின் செய்தவுடன் சுபிக்கு அத்தனை காங்கிராஜுலேஷன்ஸ் ஈமெயில் வந்தது. அதில் காங்கிராட்ஸ் போர் யுவர் எங்கேஜ்மெண்ட் என்று சப்ஜெக்ட் வேறு இருந்தது . நேத்து தான் வீட்லே கல்யாண பேச்சே எடுத்தாங்க அதுக்குள் இவங்களுக்கு எல்லாம் எப்படி தெரிஞ்சது என்று ஈமெயில்களை திறந்து பார்த்தாள் . பார்த்தவள் அப்படியே ஸ்தம்பித்து விட்டாள் . அதில் கோகுலும் இவளும் பட்டுடுத்தி  சிரித்தபடி  இருந்தனர் .  அன்று தோழி கல்யாணத்தில் அவள் அணிந்திருந்த அதே புடவை . இப்பொழுது புரிந்தது ஏன் எல்லோரும் தன்னையே பார்த்தனர் என்று. கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் கன்னத்தில் இறங்கியது . ஆயிரம் தான் தைரியமான பெண்ணாக இருந்தாலும் வேற்று ஆடவனுடன் தன்னை இணைத்து பேசுவதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை . இதெல்லாம் நினைக்க நினைக்க தலை சுற்றி மயக்கம் வருவதை போல் உணர்ந்தாள் .
-தொடரும்

Advertisement