Advertisement

காதல் அணுக்கள் – 10
சுபி  அதிர்ந்து போய் சந்தீப்பை பார்த்தால் அவன் ஒன்றுமே நடவாதது போல் கேசுவலாக அவள் தோள் மீது கை போட்டபடி எதிரில் இருந்த மதுவிடம் பேசிக்கொண்டிருந்தான் .
நீங்க தான் மதுவா ? உங்கள பத்தி சுபி நிறைய சொல்லிருக்கா. எப்படி இருக்கீங்க ?
அடிப்பாவி என்னை பத்தி சொன்னியே அவரை பத்தி என்கிட்ட எதாவது சொன்னியாடி? ஏன் சொன்ன நான் அவரை சையிட் அடிப்பேன்னு கமுகமா இருந்துட்டியாகும்.
இவ ஒருத்தி நேரம்காலம் தெரியாம மொக்கை போட்டுட்டு இருப்பா. நான் எப்படா அவளை பத்தி சொன்னேன் அதுவும் உங்கிட்ட என்று சுபி சந்தீப்பை பார்த்து முறைத்து வைத்தாள் .
பின் தோளில் இருக்கும் அவன் கையை ஜாடைகாட்டி ஹுஹும் என்று தொண்டையை செருமினால். என்னடா தண்ணி வேணுமா இந்தா குடி என்று பாட்டிலை அவள் பக்கம் தள்ளினான் ஆனாலும் கையை எடுத்தபாடில்லை  .
அதில் சுபிக்கு சுறுசுறு என கோபம் வர பல்லை கடித்துக்கொண்டு அவன் கையை நன்றாக அவள் துப்பட்டாவின் மறைவில் கிள்ளி வைத்தாள் .
என்ன சுபி பேபி உங்க ஆஃபிஸில் வெள்ளை கொசு ஓவரா கடிக்குது என கையை எடுத்து தேய்த்து கொண்டான் .
பின் மதுவை பார்த்து அவ சொல்லாட்டி என்னங்க நான் சொல்றேன் . நாங்க இரெண்டு பெரும் சின்ன வயசுலே இருந்தே நெயிபர்ஸ். சின்ன வயசிலேயே எங்க இரெண்டு பேருக்கு தான் கல்யாணம் பண்ணுறதா முடிவு பண்ணிருந்தாங்க .
நான் யூஸில்லிருந்து போன வாரம் தான் வந்தேன். சோ இன்னும் 3 மாசத்துல எங்களுக்கு மேரேஜ். நீங்க பேமிலி ஓட கண்டிப்பா வந்திரனும்
நான் எப்போடா கல்யாணத்துக்கு ஓகே சொன்னேன் என சுபி பாவமாக அவனை பார்த்தாள். இவன் என்னை டென்ஷன் பண்ணுறதுக்குனே கிளம்பி வந்துருக்கான் என்று தண்ணீரை மல மல என வாயில் சிரித்தாள் .
வாவ் உங்க லவ் ஸ்டோரி அப்படியே சினிமால வரமாதிரி இருக்கு . பேமிலி பிரெண்ட்ஸ் சின்ன வயசிலிருந்து லவ் அப்புறம் ஹாப்பிலி மேரீட்  என மது சிலாகித்து கொண்டிருந்தாள் .
தண்ணீர் குடித்து கொண்டிருந்த சுபிக்கு புரை ஏறியது. என்னது லவ் ஸ்டோரியா ? ஏன் டி என் வயித்தெரிச்சலை கிளப்புறே என்று முகத்தை கடுப்பாக வைத்திருந்தாள் .
இவர்கள் இங்கே இப்படி பேசிக்கொண்டிருக்க கோகுலின் நண்பர்களோ யாருடா மச்சான் செம ஸ்டைலா இருக்கான் . தோள்ல வேற கை போட்டு பேசிட்டுருக்கான் .
யாருடா கோகுல் அது நீ இருக்கும் போது இவ்ளோ தைரியமா சுபிக்கிட்ட இப்படி பேசிட்டிருக்கான் என்றான் ஒருவன் . இன்னொருவனோ ஒருவேளை அவ அண்ணனா இருப்பானோ ?
ஏன் டா அவன் விடற லுக்க பார்த்த உனக்கு அண்ணன் மாதிரியா இருக்கு. நீ இன்னும் வளரனும் டா தம்பி.
ஆனா ஒன்னு கோகுல் சும்மா சொல்லக்கூடாது அவங்க ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கு என்று இவ்வாறு பேசி பேசியே அவன் பிபியை ஏற்றி  கொண்டிருந்தனர் .
தன் நண்பர்களுக்கு முன்னால் தன் கெத்து குறைந்து விட்டதாகவே தோன்றியது . நேற்றெல்லாம் அந்த புகை படத்தை பார்த்து கலக்கிட்ட டா , சாதிச்சுட்டே டா , கெத்து டா மச்சான் என்று அவனை புகழ்ந்தவர்கள் இன்று அந்த சந்தீப் சுபிக்கு புகழாரம் சூட்டிக்கொண்டிருந்தனர் .
மது எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுறீங்களா ? நான் கோகுலை பார்க்கணுமே. கொஞ்சம் அவரை கூட்டிட்டு வரீங்களா ?
இப்போ அவனை எதுக்கு பாக்கணும். அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் . நீங்க கிளம்புங்க என்று படபடத்தால் சுபி .
கூல் பேபி . நான் ஒன்னும் அவர்கூட சண்டை போடப்போறதில்லே . கொஞ்சம் வெயிட் பண்ணா நீயே அவரை எதுக்கு பாக்கணும்னு தெரிஞ்சுகுவே .
சுபிக்கு தான் சற்று பயமாக இருந்தது சந்தீப் எத்தனைக்கு எத்தனை நிதானமானவனோ அதே சமயம் கோவம் வந்துவிட்டால் கையை நீட்ட கூட தயங்கமாட்டான் . எங்கே இருவரும் பேசி ஏதேனும் கைகலப்பு ஆகிவிடுமோ என்று அஞ்சினாள் . மேலும் மேலும் அனைவர்க்கும் காட்சி பொருள் ஆவது அவளுக்கு சிறிதும் இஷ்டமில்லை.
சந்தீப் மதுவை பார்க்கவும் அவள் “சூர் . அவரும் நீங்க யாருனு தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வமா அப்போ இருந்து இங்க தான் பாத்துட்டு இருக்காரு .”
எங்கே என திரும்பி பார்த்தவனிடம் , செகண்ட் டேபிளில் ப்ளூ செக்கெட் ஷர்ட் போட்டுட்டு உங்களையே முறைத்து பாக்குறாரே அவர் தான் கோகுல் .
ஓ என்றவன் திடீர் என்று அவனை நோக்கி சென்றிருந்தான் . அதிர்ச்சி அடைந்த சுபி எங்கே கையை நீட்டிவிடுவானோ என்று அவசரமாக அவன் அருகில் சென்று அவன் கை சந்துக்குள் தன் கையை விட்டு இறுக்க பற்றிக்கொண்டாள் .
அவளது அருகாமை அவன் மனதிற்கு இதமாக இருந்தது . உதட்டில் நிறைந்த புன்னகையுடன் கோகுலை பார்த்து ஹலோ பாஸ் எப்படி இருக்கீங்க ? ஐ அம் சந்தீப் . சுபியோட வூட்பி .
கோகுலுக்கு அதிர்ச்சி என்றால் அவன் நண்பர்களுக்கோ குழப்பம் . நாம கீர்த்திக்கிட்ட விசாரிச்சப்ப அவளுக்கு ஆள் இல்லனு தானே சொன்னா இப்போ எங்கிருந்து புதுசா ஆள் வந்துருக்கான் .
அவர்கள் முகங்களை பார்க்க சுபிக்கு அத்தனை மகிழ்ச்சி . கோகுல்க்கு நல்ல நோஸ் கட் என்று நினைத்தவள் சந்தீப்பை இன்னும் நெருங்கி நின்று கொண்டாள் . அதை பார்க்க பார்க்க  கோகுலுக்கு பற்றி கொண்டு வந்தது. இனி டீம்லே ஒரு பைய நம்பலை மதிக்க மாட்டான் .
என்ன பாஸ் பிரீஸ் ஆகி நிக்குறீங்க . நேத்து சுபிக்காக நீங்களும் உங்க பாமிலியும் ரொம்ப
வருத்தப்பட்டிங்களாம் . மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்து விசாரிச்சா என்ன நினைப்பாங்கனு புலம்புனீங்க போல உங்களுக்கு அந்த கவலையே வேண்டாம் என் சுபியை பத்தி எனக்கு தெரியும் என்று என் சுபியில் அழுத்தம் குடுத்து கூறினான் .
நீங்க ஒன்னும் ஒர்ரி பண்ணிக்காதீங்க என் பிரெண்ட் ஸ்பெஷல் ப்ரான்ச் ஆஃபீஸ்ரா இருக்கான் அவன்கிட்ட எல்லாம் சொல்லிருக்கேன் ஹி வில் ஹாண்டில் எவரித்திங் ஆப் தி ரெகார்ட்ஸ்  என்று கூறி ஒரு நக்கல் சிரிப்பை அவனுக்கு பரிசளித்தான் அதில் மவனே இனி என்கிட்ட வெச்சுக்கிட்டே செத்தடா என்ற செய்தி இருந்தது .
அவன் கூறிய ஆப் தி ரெகார்ட்ஸில் கோகுலின் முகம் வெளிறி போயிருந்தது . சட்டபடி விசாரணைக்கு சென்றாலே லாடம் கட்டிவிட்டு தான் விடுவார்கள் இதில் இவ்வாறு விசாரித்தால் தன் நிலைமை என்னாவது என்ற பயம் கோகுலுக்குள் வந்தது .
ஓகே பாஸ் சுபி பத்திரிகை ரெடி ஆனதும் குடுப்பா கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துருங்க. பின் சுபியை பார்த்து போலாமா பேபி என்றான் . அவளும் சிரித்த முகத்துடன் தலையை ஆட்டினாள் .
மதுவை பார்த்து சந்தீப்பை அனுப்பிவிட்டு கேபின் வருவதாக கூறியவள். சந்தீப்பை அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள். இருவரிடத்திலும் அமைதி.
ஹே சுபி ரொம்ப யோசிக்காதே உனக்காக இவ்ளோ பன்னிருக்கான் ஒரு தேங்க்ஸ் ஆவது சொல்லு என்றது மனசாட்சி ஆன அவன் யாரைக்கேட்டு என் தோள்ல கை போட்டான் அவனுக்கு தேங்க்ஸ் எல்லாம் சொல்லமுடியாது போ . ஏன் நீ கூடத்தான் அவன் கையை புடிச்சுக்கிட்டே நீ  என்ன அவனை கேட்டா புடிச்ச. சரி சரி ஓவரா அட்வைஸ் பண்ணாம உள்ளே போ என்று அதை துரத்திவிட்டு ” ரொம்ப தேங்க்ஸ்” என்றாள்.
எனக்கு தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம் ? தேவைப்படும்போது எனக்கு வேணும்கிறது நானே கேட்டு வாங்கிக்குவேன் என்றவனின் பார்வை ஒரு கணம் அவள் இதழை தொட்டு மீண்டது .
அவன் பார்வையில்  பாவை அவள் வயிற்றில் சில பல பட்டாம்பூச்சிகள் பறந்தன . சூழலை மாற்றும் பொருட்டு  எதுல வந்தீங்க ? நான் வேணும்னா உங்களை ஸ்டேஷன்ல ட்ராப் பண்ணவா ?
நான் புல்லெட்ல தான் வந்தேன் இதோ இங்க இருக்கு என்று அதை ஸ்டார்ட் செய்தவன் அவள் முகத்தை காண அவள் பார்வை மொத்தமும் புல்லட்டின் மீது ஏக்கமாக படிந்தது . சுபி ஒரு டிரைவ் போலாமா ?
மனம் முழுக்க ஆசை இருந்தாலும் இப்போதைக்கு இது வேண்டாம் என்று தோன்றிட இல்லை ஒர்க் இருக்கு நான் போகணும் என்றாள் .
ஓகே கேரி ஆன். நானும் நியூ வென்ச்சர் ஓபெனிங் விஷயமா என்னோட பிரெண்ட மீட் பண்ணபோகணும் என்றவனது செல் விடாது ஒலித்தது . அவன் நண்பன் வினித் தான் அழைத்திருந்தான் . சுபியை சீண்டி பார்க்க நினைத்து அதை அட்டென்ட் செய்தவன் சொல்லு வினிதா உன்னை பார்க்க தான் வந்துட்டு இருக்கேன் . இன்னும் லஞ்ச் சாப்பிடல . ஓகே ரெடியா இரு . பிக் அப் பண்ணிக்குறேன். போன் பேசி முடித்தவன் வினிதா என்ற பெயரை கேட்டவுடன் அவள் முகத்தில் ஒரு அப்பட்டமான எரிச்சல் தெரிய மனதுக்குள் இன்னுமா நான் உனக்கு யாருனு தெரியலே. இதுக்கு மேலேயும் உனக்கா தெரியலைன்னா இன்னைக்கு சாயந்திரம் உனக்கு தெரிய வைப்பேன் டி என்று சூளுரைத்து கொண்டு புல்லட்டில் பறந்திருந்தான் .
அவன் சென்று சில நிமிடம் வரையிலும் சுபி அங்கையே தான்  இருந்தாள் . யாரந்த வினிதா ? ஒழுங்கா அவன் ட்ரைவுக்கு கூப்பிடும் போதே போயிருக்கணும் ஓவர பிக்கு பண்ண இப்போ பாரு அப்பா புல்லட்டில் எவ எவளோ போற.
சுபி பொறுத்தது போதும் உன்னோட ஆபரேஷன் புல்லெட்டை மறுபடியும் ஸ்டார்ட் பண்ற டைம் வந்துருச்சு என்று அவள் தளபதி அருணுக்கு கால் செய்தாள் .
– தொடரும்

Advertisement