Advertisement

இருவர் கண்களும் சில வினாடிகள் கலந்து நின்றன . அதை கலைப்பதெற்கென்றே ” பார்த்த விழி பார்த்தபடி போது இருக்க ” என்று வாயில் பிரஷுடன் அருண் தனது கர்ணகொடூரமான குரலில் சுபியை பார்த்து பாடினான் .
அதில் நிகழ்வுக்கு வந்த சுபி “அய்யையோ இவன் வேற என் மானத்தை வாங்குறானே  . உடனே இங்கிருந்து எஸ்கேப் ஆகிடணும் .”
சந்தியா ” சுபி இன்னும் இங்க தான் இருக்கியா? நீ அப்போவே கிளம்பிருப்பேனு நினைச்சேன் . “
சுபி பதில் சொல்லும் முன் அவள் பின்னால் வந்த சித்ரா ” அலாரம ஆப் பன்னிட்டு நல்லா இழுத்து போத்தி தூங்குனா இப்படி நேரத்துக்கு கிளம்பமுடியும் ” என்றார் .
அவர் பதிலில் அங்கே இருந்தவர்களுக்கு சிரிப்பு வந்தாலும் அதை வெளிக்காட்டாமல் இருந்தனர் .
ச்சே நம்மள டேமேஜ் பண்றதுக்குனே ஒரு கும்பல் சுத்தீட்டு இருக்கு என்று சுபி மனதில் பொரிந்து கொண்டு இருந்தாள் .
கிஷோர் ” சுபிக்குட்டி கல்யாணம் எங்கேடா ? இன்னைக்கு ஆபீஸ் போறியா ?”
பல்லாவரத்துலே அங்கிள். அட்டென்ட் பன்னிட்டு அப்படியே ஆபீஸ் போய்டுவேன் .
பார்த்து போ டா என்ற பாலாஜிக்கு பதில் கூறாமல் அவனை நன்கு முறைத்துவிட்டு சென்றாள் .
ஹப்பா முதல் தடவையா நம்மளே முறைக்காம போற என்று சந்தீப் சந்தோஷபட்டுப்போனான் .
பாலாஜி சந்தீப்பை பார்த்து இப்போ உனக்கு சந்தோசமா என்று கடுப்புடன் கேட்டான் ஏனென்றால்
தங்கை பிறந்தநாளுக்கு வரவேண்டியனை லோக்கல் பிலைட்டில் லாகெஜ் கொண்டுவரவேண்டும் என்று அவனோடு வரும்படி செய்தவன் சந்தீப்பே .
டேய் சும்மா பொங்காதடா . உன்னால உன் தங்கச்சியவே சமாளிக்க முடியலேனா என் தங்கச்சியே எப்படி தான் சமாளிக்க போறியா ? என்று கிசுகிசுத்து விட்டு நல்ல பிள்ளை போல் சித்ராவை நலம் விசாரிக்க சென்றான்
அத்தை நல்ல இருக்கீங்களா ? உங்க போட்டிக் எப்படி போகுது ?
நல்லா இருக்கேன் பா . பிசினஸ் எதோ போயிட்டு இருக்கு. நீ எப்படி இருக்க ? வேலையெல்லாம் எப்படி போகுது ?
ஹ்ம்ம் நல்ல இருக்கேன் அத்தை . இனி வேலை இங்க தான் அத்தை .
ரொம்ப சந்தோஷம் பா . கிஷோர் அண்ணனும் அதை தான் எதிர்பாத்துட்டு இருந்தார் .
சரி பா . டையர்டா இருப்பே போய் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் வீட்டுக்கு வாப்பா .
பாலாஜியும் சித்ராவும் உள்ளே சென்ற பின் அங்கே வந்த கிஷோரின் மனைவி சாரதா “எங்கே உங்களுக்கு கொஞ்சமாச்சு விவரம் இருக்கா ?  வெளிநாட்ல இருந்து வந்த புள்ளைய நேர வீட்டுக்கு கூட்டிட்டு வராம ரோட்ல நின்னு என்ன பேச்சு வேண்டி இருக்கு ? எல்லார் கண்ணும் என் பையன் மேல தான் ” என்று கடிந்துகொண்டார் . சாரதா மிகவும் சாங்கியம் பார்ப்பவர் . எதேச்சையாக நடக்கும் விஷயங்களை கூட சாங்கியதுடன் முடிச்சிடுபவர் .
எனக்கு விவரம் இருந்திருந்தா ஏன் உன்னை கட்டுறேன் ? உன்னை பத்தி தெரிஞ்சனாலதான் சித்ரா வீட்டுக்கே கூப்புடாம அப்படியே பேசி அனுப்பிட்டா .
சாரதா ஆரத்தி எடுத்து சந்தீப்பை உள்ளே அழைத்து சென்றார் . நீ பொய் பிரஷ் பண்ணிட்டு வா டா காபி ரெடியா இருக்கு .
அம்மா நீ இந்த படம் நாடகம் எல்லாம் பாக்குறதில்லையா ? இவ்ளோ நாள் கழிச்சு என்ன பாக்குறே அப்போ என்ன சொல்லணும் ஏன் பா இப்படி இளச்சி போயிட்டே ? ஒழுங்கா சப்படுறதில்லையா ? என்று சிவாஜி மாடுலேஷனில் சொன்னவன் காதை திரிகினார் சாரதா .
அண்ணா நீ தான் அமெரிக்கன் ஆப்பிள் மாதிரி வந்துருகியே அப்புறம் எப்படி அம்மா சொல்லுவாங்க .
முதல்ல உனக்கு சுத்திப்போடணும் ? இந்த காபி .குடிச்சுட்டு போய் படு கொஞ்ச நேரம். அதுக்குள்ளே டிபன் ரெடி ஆயிடும் .
சந்தியா உங்க அம்மாவை பாத்தியா பையன் வந்துட்ட சந்தோசத்துலே 10 வயசு குறைஞ்சிருச்சு . சின்ன பொண்ணு மாதிரி ஓடி ஓடி உங்க அண்ணனே கவனிக்குறா
வயசு பசங்கள வெச்சுட்டு என்ன பேச்சு இது என்பது போல் சாரதாவின் பார்வை இருந்தாலும் மனது அவர் சொன்ன பத்து குறைந்தது என்ற பேச்சை ரசிக்கவே செய்தது .
எத்தனை வயதானாலும் கணவனின் பாராட்டும் ரசிப்பும் பெண்களுக்கு இனிக்கவே செய்யும். இதில் சாரதாவும் விதிவிலக்கு அல்ல .
அங்கு திருமணத்தில் தோழிகளுடன் கேலியும் கிண்டலுமாக நேரத்தை கடத்திக்கொண்டிருந்தாள் சுபி.
ஹே மாப்பிள்ளை நம்ம கீர்த்திய பார்த்து ரொம்ப தான் வழியிறாருடி அவள் பேச்சை கேட்டு அனைவரது கவனமும் புது மணத்தம்பதிகள் மீது படிந்தது .
சுபி  தன் எதிர்கால கணவனை குறித்து பெரிதாக கற்பனை செய்தது கிடையாது . நல்லவனாக இருக்க வேண்டும் படித்தவனாக இருக்க வேண்டும் அவ்வளவே யோசித்திருக்கிறாள் .
இப்பொழுது அந்த மணமக்களை காண்கையில் தன்னவனும் தன்னை காதல் கொண்டு பார்க்கவேண்டும் சின்ன சின்ன சீண்டல்கள் ,செல்ல சண்டைகள், எதையும் பகிரும் நம்பிக்கையை தரவேண்டும் ,அவனருகில் பாதுகாப்பை உணரவேண்டும் இப்படி அவள் ஆசையாக கணுவுக்கான தொடங்கிவிட்டாள் .
என்ன சுபி நீ கனவு காணுறதை பார்த்தா அடுத்த கல்யாணம் உனக்கு தான் போலிருக்கு என்று தோழி ஒருத்திகலாய்த்ததில் சிறு புன்னகையுடன் கனவிலிருந்து வெளிவந்தாள் .
அதே சமயம் அந்த மண்டபத்தில் கோகுலிடம் அவன் சித்தி மகன் என்னடா அப்போ இருந்து அந்த பிங்க் சாரீ பொண்ண வெச்ச கண்ணுவாங்கம பார்த்துட்டு இருக்கே
அவ பேரு சுபலக்ஷ்மி . எங்க ஆபீஸ் தான் . சிஸ்டம் இஷ்யூ வந்த போது ரெண்டு தடவை பேசியிருக்கேன் . எங்க நெட்ஒர்க் டீம்ல ரெண்டு மூணு பேரு ட்ரை பண்ணாங்க பட் யாருக்கும் ஒர்க் அவுட் ஆகுல . ரொம்ப திமிர் புடிச்சவ ஓவர் ஆஹ் சீன் போடுவா . பெரிய உலக அழகினு நினைப்பு என்றான் கோகுல் .
சுபியின் குறும்பு பேச்சு எல்லாம் வீட்டில் உள்ளவர்களோடும் நட்புகளோடும் தான் . வெளியே அவ்வளவு சீக்கிரம் யாருடனும் கலந்திடமாட்டாள் . தான் உண்டு தான் வேலை உண்டு என்று இருப்பாள் . ஆண்கள் அனாவசியமாக பேச்சு கொடுத்தால் அப்படியே கத்தரித்துவிடுவாள் . இதனாலேயே திமிர் பிடித்தவள் என்று முக்குடைந்த ஆண்கள் ஆஃபிஸில் புரளியை கிளம்பிவிட்டனர் .
ஆஃபிஸில் கெத்து காண்பிப்பதற்காக கோகுல் ஒரு திட்டம் போட்டான் . அவன் மொபைலை சித்தி பையனிடம் கொடுத்து நான் அவள் கூட பேசும்போது போட்டோ எடு என்று சொல்லி சென்றான்.
ஹாய் சுபி வாட் எ சர்ப்பிரைஸ் . நீங்க எப்படி இங்க?  மாப்பிள்ளை என் மாமா பையன் தான் .
ஓ . கீர்த்தி என் காலேஜ் கிளாஸ்மேட் என்று சுபி ஒரு போர்மாலிட்டிக்காக சிரித்து வைத்தாள் .
நைஸ். சரி சுபி ஆபீஸில் பாக்கலாம் . இருந்து சாப்பிட்டு போங்க என்று நல்லவன் போல் பேசி சென்றான் கோகுல்.
அவன் சித்தி பையனிடம் இவன் மொபைலை வாங்கி பார்க்க . அதில் சுபியும் கோகுலும் சிரித்து பேசுவது போல் புகைப்படம் பதிவாகி இருந்தது. தேங்க்ஸ் டா . சூப்பர் ஆஹ் போட்டோ எடுத்துருக்கே . இந்த போட்டோவே வெச்சே கதையை நான் டெவெலப் பன்னிக்குறேன் .
திருமணம் முடிந்ததும் ஒரு 9 மணி வாக்கில் சுபி தன் தோழிகளிடம் விடை பெற்று அலுவலகம் கிளம்பினாள் .
அலுவலகதுக்குள் நுழைந்த சுபிக்கு தன் டீமில் உள்ள பெண்களிடமிருந்து காம்ப்ளிமெண்ட்ஸும் ஆண்களிடமிருந்து வாயை பிளக்கும் பார்வையும் பரிசாக கிடைத்தது .
தனது ஈமெயில் செக் செய்து ரிப்ளை செய்துவிட்டு தான் கொண்டுவந்த சுடிதாருக்கு மாறினாள் . பின் வழக்கம் போல் தன் வேலையை தொடர்ந்தாள் .
இங்கு வீட்டில் பாலாஜி தன் மெத்தையில் உருண்டபடி சந்தியாவிடம் போனில் கொஞ்சிக்கொண்டிருந்தான் .
இன்னும் 2 வருஷம் தான் அப்புறம் நானே அம்மா கிட்ட நம்ம கல்யாணத்த பத்தி பேசுறன் . எனக்குன்னு கொஞ்சம் கடமை இருக்கு சந்தியா . ப்ளீஸ் டா நீயே புரிஞ்சுக்கலான எப்படி ?
சொந்தக்காரங்கெல்லாம் அதுதான் பொண்ணு படிப்பு முடிச்சாச்சே மாப்பிள்ளை பாக்குறீங்களானு கேட்க ஆரமிச்சுட்டாங்க . அம்மாவும் அண்ணா வந்ததும் சீக்கிரம் முடிக்கணும்னு சொல்லிட்டு இருந்தாங்க . இப்போ அண்ணாவும் வந்துட்டாங்க . இனி மாப்பிள்ளை பார்க்க அரமிச்சுடுவாங்க . எனக்கு பயமா இருக்குங்க . நீங்க என் நிலைமைல இருந்து யோசிச்சு பாருங்க .
சரி நீ டென்ஷன் ஆகாதே நான் சந்தீப்கிட்ட பேசுறேன் .  இப்போ வேற எதாவது பேசு .
நாளைக்கு நாம எங்கயாவது டிரைவ் போலாமா . முட்டுக்காடு மாதிரி . அண்ணாவையும் சுபியும் கூட கூட்டிட்டு போலாம். நீங்க இப்போ மும்பை போன அடுத்து 2 மாசமாவது ஆகும் தானே வரதுக்கு . சோ எனக்கு உங்க கூட நல்ல டைம் ஸ்பென்ட் பண்ணனும் . அப்படியே நீங்க சுபிய சமாதானப்படுத்தன மாதிரியும் ஆச்சு.
அச்சோ என் செல்ல குட்டிக்கு உடம்பெல்லாம் முளை . கண்டிப்பா போலாம் பட் சுபியா வரவெக்குறது உன் பொறுப்பு .
ஓகே டன். ஈவினிங் அண்ணா அத்தைய பார்க்க வரேன்னு சொன்னாங்க நானும் கூட வருவேன் நீங்க அதுக்குள்ள தூங்கி ரெஸ்ட் எடுங்க பை பை  என்று வைத்துவிட்டாள் .
கள்ளி நான் அடுத்து என்ன கேட்பேன்னு தெரிஞ்சு போனை அவசரமா வெச்சிட்டியா . என்கிட்ட மாட்டாமையா போய்டுவே அப்போ பாத்துகுறேண்டி உன்னை என்று சிரித்து கொண்டான் .
சுபிக்கு காலை நேரமே எழுந்ததால் தலைவலி பின்னி எடுத்தது . டீம்லீடரிடம் கேட்டுக்கொண்டு மதுவும் சுபியும் வீட்டுக்கு கிளம்பிவிட்டனர் .
வீட்டுக்கு வந்தவள் நேரே அவள் அறைக்கு சென்று உறங்கியும் போனாள் .
மாலை 5 மணிபோல் சந்தீப்பும் சந்தியாவும் சித்ராவை காண சில பரிசு பொருளுடன் வந்தனர்.
வாங்க வாங்க. நல்ல தூங்கி எந்திரிச்சாச்சா . எதுக்கு பா இதெல்லாம் என்று அவர்கள் கொண்டுவந்ததை வாங்கி கொண்டார் .  சுபிக்கு பெர்ப்யூம் என்றால் மிகவும் இஷ்டம் . பள்ளி காலத்திலிருந்தே அதை உபயோகிப்பாள் . எனவே அவளுக்காக ஒரு நல்ல பிராண்டட் பெர்ப்யூம் மற்றும் சோகோலட்ஸ்  வாங்கி வந்திருந்தான் . பாலாஜிக்கு போஸ் ஹெட் போன்ஸ் . சித்ராக்கு சில ஒய்ன்ட்மென்ட்ஸ், கிட்சேன் ஐட்டம்ஸ் வாங்கி இருந்தான் .
பாலாஜி சந்தீப் வந்துருக்கான் பாரு . கிழ இறங்கி வா என்று சித்ரா குரல் கொடுத்தார் .
சந்தியா ” அத்தை சுபி ஸ்குட்டி நிக்குது .ஆபீஸ்ல இருந்து வந்துட்டாளா ?”
ஆமா சந்தியா 3 மணிக்கே வந்துட்டா . இப்போ தூங்கிட்டு இருக்கா. காலையில் ஒரு அரைமணிநேரம் முன்ன எந்திரச்சத்துக்கு தான் இந்த கூத்து .
பாலாஜி கீழே வந்தவன் வாடா மச்சான் , வா சந்தியா அப்புறம் ஜெட்லாக் எப்படி இருக்கு ? நீ தூங்கிட்டு இருப்பேன்னு நினைச்சேன் .
நீங்க பேசிட்டு இருங்கப்பா நான் டி எடுத்துட்டு வரேன் . பாலை அடுப்பில் வைத்தவர் டி தூள் போட்டு கொதிப்பதற்காக காத்திருந்தார் . சரியாக அப்பொழுது கடையில் கஸ்டமர் வந்து பெல் அடிக்க., அடுப்பை சிமில் வைத்துவிட்டு சுபியை பார்த்துக்கொள்ள சொல்லலாம் என்று சுபி சுபி என்று அவள் அறையை நோக்கி குரல் கொடுத்தார் .
அதற்குள் சந்தியா வந்து நான் பார்த்துக்குறேன் அத்தை நீங்க கடைக்கு போங்க என்று கிட்சேனுக்குள் புகுந்தாள் .
வீட்டிலேயே ஒரு அறை ஒதுக்கி வெளியே இருந்து ஷட்டர் வைத்து திறந்து மூடும் படி அமைத்திருந்தனர் . சித்ரா அங்கே தான் தனது போட்டிக் வைத்திருந்தார் . இதுவே சித்ராவுக்கு சௌகர்யம் என்று இவ்வாறு  அமைத்திருந்தனர் .
சந்தியா கிட்சேனுக்குள் நுழைந்ததும் பாலாஜி சந்தீப்பிடம் சுபியா காணோம் நான் போய் சந்தியாக்கு எதாவது ஹெல்ப் வேணுமான்னு பாக்குறேன் . சக்கரை டப்பா வேறு மேல் ஷெல்ப்பில் இருக்கு என்று அவன் பதிலை எதிர்பார்க்காமல் பொறுப்பாக கிட்சேனுக்குள் நுழைந்தான் . சந்தியாவுடன் தனியாக கிடைக்கும் சந்தர்ப்பத்தை நழுவவிட அவன் தயாராய் இல்லை .
தாயின் குரலில் லேசாக தூக்கம் கலைந்த சுபி அவள் அறையிலிருந்து பாதி தூக்கத்திலே வெளியே வந்தவள் நேராக போய் சோபாவில் படுத்து கொண்டு அவள் விட்ட தூக்கத்தை தொடர்ந்தாள் . இது அவள் அன்றாடம் காலையில் செய்யும் செயல் தான் .அதே பழக்கத்தில் வந்து சோபாவில் படுத்துகொண்டாள் .
சந்தீப் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை . என்ன இவ இப்படி வந்து படுத்துருக்கா . யாராவது வந்தா என்ன நினைப்பாங்க . இப்போ நான் இங்க இருந்து எந்திருச்சு போயிடவா . என்ன பண்றது இப்போ ? நானா இருக்கபோய் பரவாயில்லை இதுவே வேற யாராவது இருந்தா என்று சிறு கோபம்கூட மூண்டது .
இது எதுவும் தெரியாமல் சுபி கண்ணை மூடிக்கொண்டே அம்மா அம்மா என்று குழந்தை போல் கத்திக்கொண்டிருந்தாள் .
அத்தை இவளை எப்படி தான் சமாளிகாரங்களோ . பொறுத்து பொறுத்து பார்த்தவன் .
ஏய் எந்திரிடி மேல என்று அடிக்குரலில் சீறினான் . அவன் குரலில் அடித்து பிடித்து எழுந்தவள் இவன் எப்போ வந்தான் என்று முழித்துக்கொண்டு நின்றாள் .

Advertisement