Advertisement

காதல் அணுக்கள் – 5
சந்தீப்பை அங்கே எதிர்பார்க்காதவள் ஒன்றும் புரியாமல் நின்றது சில வினாடிகளே. பின் ஏதோ தோன்ற குனிந்து தான் அணிந்திருந்த நைட்டியை ஒரு முறை சரிபார்த்து கொண்டாள் .
அதை பார்த்து கடுப்பானவன்.  உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்க ?
ஏன் உனக்கு வேணுமா ? என்று மனதினில் கவுண்டர் அடித்து கொண்டு அவனை முறைத்தபடி நின்றாள்  .
இப்படி தான் யார் இருக்கா என்னனு பார்க்காம இப்படி வந்து சோபால படுத்துக்குவியா ? இதுலே மேடம் கண்ணை கூட திறக்காம கத்திட்டு இருக்கீங்க
ச்செ நம்ம மானம் அடிக்கடி இவன் முன்னாடியே கப்பல் ஏறி போகுது
சந்தீப் முன்னில் இப்படி நைட்டியுடன் வந்து குப்பற படுத்து கொண்டது அதற்கு அவனிடம் வாங்கி கட்டிக்கொண்டது எல்லாம் சங்கடமாக உணர்ந்தாள் இருந்தும் அவன் முன்னில் அதை காட்டிக்கொள்ள விரும்பாமல்.
எனக்கெப்படி தெரியும் நீங்க இங்க உக்காந்திருக்கீங்கன்னு ? நான் எப்பவும் போல தான் வந்து படுத்தேன். நான் சோபால தானே படுத்தேன் ஏதோ உங்க மடியிலேயே படுத்த மாதிரி இப்படி திட்டுறீங்க
வார்த்தையைவிட்ட பிறகே அதன் வீரியத்தை உணர்ந்து இப்பொழுது என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் கையை பிசைந்தபடி நின்றாள் .
இத்தனை நேரம் இருந்த கோபம் குறைந்து அவள் செய்கையில் ஒரு இளநகை வந்து ஒட்டிக்கொண்டது அவனிடத்தில் .
அப்பொழுது சந்தியா சரியாக டீயை எடுத்து வரவும் தப்பிச்சோம் டா சாமி என்றொரு பெருமூச்சு வந்தது சுபிக்கு .
சித்ரா உள்ளே வருவதை பார்த்து சந்தியா அவருக்கும் டி கொடுத்தாள் . அங்கு இருந்த சுபியையும் சந்தியாவையும் பார்த்தவர் ஏண்டி வீட்டுக்கு வந்தவங்களுக்கு நீ டி போட்டுகுடுக்காம அவளை வேலை வாங்கிட்டுஇருக்க என்று கடிந்துகொண்டார்.
இருக்கட்டும் அத்தை விடுங்க . அவ பாக்குறதுக்கே டயர்டா இருக்கா என்று அனைவருக்கும் டி கொடுத்தாள்.
சரி நீங்க டி குடிச்சிட்டு இருங்க சந்தீப்பிற்கு புடிக்குமேனு வாழை பூ வடைசெஞ்சேன் எடுத்துட்டு வரேன் என்று சமையல் அறையினுள் சென்றார்.
அவர் அந்த பக்கம் சென்றதுமே சுபி சந்தியாவை பிடித்து கொண்டாள் . ஏண்டி அண்ணி நான் உன்கிட்ட டி கேட்டேனா? நீ உன் மாமியார்கிட்ட ஸ்கோர் பண்ண என்னை ஏண்டி மாட்டிவிடுறே. இன்னைக்கு எனக்கு நேரமே சரியில்லை எல்லார்கிட்டையும் திட்டு வாங்கிட்டுருக்கேன்.
ஹி ஹி என்று இளித்து சமாளித்த சந்தியா வேற யாருடி திட்டுனாங்க என்று கேட்டதும் டி குடித்து கொண்டு இருந்த சந்தீப்பிற்கு புரையேறியது.
இந்தாங்க எல்லாரும் வடை எடுத்துக்கங்க . சுபி இன்னும் என்ன அப்படியே உக்காந்திருக்க. போ போய் முகத்தை கழுவு . அப்படியே தூக்க கலக்கமா இருக்கு பாரு. விளக்கு வெக்குற நேரமாச்சு.
விடுங்கம்மா அவ டி குடிச்சுட்டு போகட்டும். சும்மா அவளை எதாவது சொல்லிட்டே இருக்காதீங்க.
தன் அண்ணன் தனக்கு சப்போர்ட் செய்தவுடன் தன் தாயை மிதப்பாக ஒரு பார்வை பார்த்தாள்.
எல்லாம் நீ குடுக்குறே செல்லம் . சும்மாவே என் பேச்சைகேட்கமாட்டா இனி நீ ஊருக்கு போறவரைக்கும் என் பாடு திண்டாட்டம் தான்.
மற்றும் பொதுவான சில பேச்சுக்கள் சென்றது .  முட்டுக்காடு செல்வது குறித்து சுபியுடன் தனியே பேசவேண்டுமே என்று நினைத்த சந்தியா ” சுபி அன்னைக்கு மாலில் நீ எடுத்த டிசைனர் பிலௌஸ் காட்டு நானும் அதே மாதிரி ஒன்னு வாங்கலாம்னு இருக்கேன் “
ரூம்ல இருக்கு வா போகலாம் என்று அவர்கள் மாடியில் இருக்கும் அவள் அறைக்கு சென்று அதை பார்க்கும் போது மெதுவாக சந்தியா பேச்சை தொடங்கினாள்.
சுபி நீ ரொம்ப நாளா முட்டுக்காடு போகணும் சொல்லிட்டு இருந்தையில்ல. நாளைக்கு போலாமா ? உங்க அண்ணா ஊருக்கு போன வரத்துக்கு 2 மாசம் ஆகுமாம். அங்க போன நாங்க கொஞ்சம் பிரியா பேச முடியும்.
அது தான் மணிக்கணக்கா போன்ல கடலை போடுறீங்களே அப்புறம் ஏண்டி அண்ணி அங்க வேற போய் கடலை போடணுமா ?
போடி உனக்கு அதெல்லாம் புரியாது ப்ளீஸ் ப்ளீஸ் போலாம் சுபி.
என்னை மாமி வேலை பார்க்க வெக்குறதுனு முடிவு பண்ணிட்ட. சரி ஓகே. போலாம்.
தேங்க்ஸ் டி என்று கட்டியணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டால் .
ச்சீ எச்சி. எனக்கு ஏன் டி  முத்தம் குடுக்குறே. இன்னைக்கு முகம்கழுவாம ஒட்டிடலாம்னு இருந்தேன் இப்படி என்னை கழுவவேசுட்ட
ரொம்ப பண்ணாதடி கல்யாணத்துக்கப்புறம் நீ என்ன பண்றேன் பார்க்கத்தானே போறேன். உன்னை மாதிரி ச்சீ ச்சீ னு சொல்றவளுக தான் புருஷன் பின்னாடியே சுத்தீட்டு இருப்பாங்க.
கீழே இதே விஷயமாக சந்தீப்பும் பாலாஜியும் பேசி கொண்டிருந்தனர். நாளை காலை சந்தீப்பின் காரிலேயே செல்வது என்று முடிவானது.
அடுத்த நாள் காலை அனைவரும் சந்தீப்பின் காரில் இருந்தனர். சுபி விடாமல் அருணுக்கு போன் அடித்த வண்ணம் இருந்தாள் . என்ன சுபி யாருக்கு போன் ?
எல்லாம் அந்த பக்கி அருணுக்கு தான். நேத்தே 9 மணிக்கு ரெடியா இருன்னு சொன்னேன். இன்னும் ஆளை காணோம் .
அவனை ஏன் டி கூப்பிட்ட ? அவன் அங்க வந்தா நாங்க எப்படி பிரீயா பேசமுடியும் ? அப்புறம் அவனுக்கு எங்க மேல டவுட் வந்துராது?
ஆமா பெரிய சீக்ரட் லவ். நீங்க ரெண்டு பேரும் வலியுறதா பார்த்து அவன் ஆல்ரெடி கண்டுபுடிச்சுட்டான். என்கிட்ட கேட்டான் நான் எனக்கு தெரியாது சந்தியாவையே கேட்டுக்கோனு சொல்லிட்டேன் என்று அசராமல் குண்டை தூக்கி போட்டாள் .
அனைவரும் கண்டுகொள்ளும் படியா நம் நடவடிக்கை உள்ளது என்று இருவரும் பார்த்து கொண்டனர்.
அருண் காரின் அருகே ஓடிவந்தவன் “சாரி மச்சி இன்னைக்கு பிரெண்ட் ஒருத்தன் ஈசிஆர்ல பேச்சிலர் பார்ட்டிக்கு இன்வைட் பன்னிருந்தான் நான் உங்கிட்ட சொல்ல மறந்துட்டேன்” என்றான் பாவமான  முகதுடன்.
பாலாஜியும் சந்தியாவும் அங்கே அவர்கள் உலகில் இருப்பார்கள் தனக்கு போர் அடிக்கும் என்றே அருணையும்  வரும் படி கூறியிருந்தால் ஆனால் அவன் சொன்னதில் கடுப்பான சுபி அவனை சென்டிமெண்டாக தாக்கலாம் என்று யோசித்து “உனக்கு நட்புன்னா என்னனு தெரியுமா? சுபீனா என்னனு தெரியுமா?”
உனக்கு சரக்குன்னா என்னனு தெரியுமா ? பசங்களுக்கு அது எவ்ளோ முக்கியம்னு தெரியுமா என்ற அருணின் பதிலில் காரில் இருந்த ஆண்கள் இருவரும் சத்தம் போட்டு சிரித்து விட்டனர்.
அதில் மேலும் கடுப்பானவள் முகத்தை திருப்பிக்கொண்டாள் . அருண் சந்தியாவை பார்க்க கண்களாலே  அவளை தான் பார்த்துக்கொள்வதாக கூறினாள்  .
இதை எல்லாம் பார்த்த சந்தீப் இதுங்க ரெண்டும் சின்ன வயசுலே இருந்த மாதிரியே இருக்குதுங்க . கொஞ்சம் கூட மாறலை . அதே உரிமையான பேச்சு, நம்பிக்கை, அக்கறை இருவருக்கிடையில் என்று நினைத்தான். வாழ்வில் நல்ல நட்புகள் அமைவது ஒரு வரம் அது அனைவருக்கும் அமைவதில்லையே .
முட்டுக்காடு போட் ஹவுஸ் சென்றடைந்ததும் சுபியும் சந்தியாவும் பிரெஷாக இருக்கும் போதே செலஃபீ எடுத்து கொள்ளலாம் என்று விதவிதமாக போஸ் செய்துகொண்டிருந்தனர் .
ஆண்கள் இருவரும் இவர்கள் செய்யும் அலப்பறை பார்க்க முடியாமல் டிக்கெட் வாங்க சென்று விட்டனர் . அப்பொழுது சரியாக அமெரிக்க நண்பர்களிடம் இருந்து போன் வரவும் யூ கைஸ் கேரி ஆன் நான் போன் பேசிட்டு வரேன் என்று சந்தீப் நகர்ந்துவிட்டான் .
அங்கு சுபியின் டீம்மேட்  ஒருத்தி குடும்பத்துடன் வந்திருந்தாள். அவளுக்கு 5 வயதில் ஒரு குழந்தையும் 1.5 வயதில் ஒரு குழந்தையும் இருந்தது.
சுபியும் சந்தியாவை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். அந்த சின்ன குழந்தை மிகவும் துரு துருவென வாய் கொள்ள சிரிப்புடன் இவர்களுடன் விளையாடியது.  பெரியவன் போட்டில் போகவேண்டும் என்று அடம்பிடிக்க சின்னவனோ நீரை பார்த்து பயந்து போட்டில் போககூடாதென அழுதே காரியம் சாதித்தான்.
இதனை பார்த்த சுபி சின்னவனை தான் பார்த்து கொள்ளவதாக கூறினாள் . அவர்கள் மோட்டார் போட்டிற்கு டிக்கெட் வாங்கி இருப்பதால் 20 நிமிடத்தில் வந்துவிடுவார்கள் மேலும் குழந்தை புதியவர்கள் என்ற பயமில்லாமல் நன்றாக விளையாடியது அதனால் அவ்வாறு கூறினாள் .
சந்தியாவும் சுபியும் குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருக்கையில் பாலாஜி டிக்கெட் உடன் வரவும் அவர்களுக்கு தனிமை குடுக்க எண்ணி அண்ணா நீயும்  சந்தியாவும் போய்ட்டுவாங்க. நான் இவனை பார்த்துக்குறேன் . இவன் அம்மாவும் இப்போ வந்துருவா.
சரி தனியா இருக்காதே அங்க ஒரு பாட்டி இருகாங்க பாரு அவங்க பக்கத்துலே உக்காந்துக்கோ.
ஓகே அங்கேயே உக்காந்துக்குறேன். நீங்க கிளம்புங்க.
சந்தியா சுபியை பார்த்து உதட்டை மட்டும் அசைத்து தங்கியூ என்றாள். சுபி அவளுக்கு ஒரு புன்னகையை பதிலாய் கொடுத்து விட்டு பாட்டியிடம் சென்று அமர்ந்தாள்.
நன்றாக விளையாடிக்கொண்டிருந்த குழந்தை சிறிது நேரத்தில் பயங்கரமான அழுகைக்கு சென்றது . சுபியும் தன் பாகில் இருந்த சாக்லேட் எல்லாம் கொடுத்து பார்த்தாள் மொபைலில் ரஹைம்ஸ் போட்டாள் எதற்கும் பயனில்லை . அந்த பாட்டி சுபியிடம் குழந்தையை வாங்கி அதன் வயிற்றை தொட்டு பார்த்தார். அவருக்கு பார்ததும் தெரிந்தது இது உஷ்ணத்தினால் ஏற்படும் வயிற்று வலி என்று .
ஏம்மா இவ்ளோ வெளியிலில் சின்ன குழந்தையை தூக்கிட்டு வரலாமா ? அதுவும் வயித்துக்கு எண்ணை கூட போடாம எடுத்துட்டுவந்திருக்கே. கொஞ்சம் நல்லஎண்ணை எப்பவும் பாகில் வெச்சுக்கணும் என்று அவளை பேசவே வாய்பளிக்காமல் அவர் பொரிந்துகொண்டிருந்தார்.
இந்த கிழவிக்கு என்ன ஒரு கொழுப்பு என்னை பார்த்தா அம்மா மாதிரியா இருக்கு. என்ன பேசவே விடாம அது பாட்டுக்கு என்னை திட்டிட்டே இருக்கு. ஏதோ எனக்கு ஹெல்ப் பண்ணனும் நினைக்குறதாலே உன்னை சும்மா விடுறேன் பாட்டி. இதுலே இந்த குட்டி பையனுக்கு வேற முகமெல்லாம் செவந்து போச்சே இப்போ என்ன பன்னுறதுனே தெரியலையே. எப்படியும் இவன் அம்மா வரநேரம் தான் ஒரு ரெண்டு நிமிஷம் சமாளிச்சிடலாம்.
போன் பேசிமுடித்து சந்தீப் அங்கே வரவும் அவன் பார்த்தது பாட்டியிடம் திட்டு வாங்கிக்கொண்டிருந்த சுபியை தான் . அவள் முகத்தில் அப்படி ஒரு டென்ஷன் . ஒரு வேளை இவளால அந்த குழந்தைக்கு எதாவது அடிபட்டுருச்சோ அதனால தான் பாட்டி திட்டுறாங்களோ ? இந்த பாலாஜியும் சந்தியாவும் எங்கே காணோம் ? சரி நாம போய் என்னனு கேட்கலாம்.
என்னாச்சு சுபி? குழந்தை ஏன் இப்படி அழுதுட்டு இருக்கு ?
உன் புருஷன்கிட்ட சொல்லி கொஞ்சம் நல்லெண்ணெய் வாங்கிட்டு வரச்சொல்லுமா. கொஞ்சம் நல்லெண்ணெய் வயிற்றுலே தடவி தாய் பால் கொடுத்த வலி இருந்த இடம்தெரியாம போயிடும். வெளியே வரும் போது பால் குடுக்குறது ஏத்த மாதிரி புடவை கட்டிட்டு வராம இப்படி உரை மாதிரி டிரஸ் போட்டுட்டு வந்துருக்கே ? ஏன் பா நீ உன் பொண்டாட்டிய இதெல்லாம் கேக்குறதில்லையா ? இந்த காலத்து பசங்களுக்கு பிள்ளை பெத்துக்க மட்டும் தான் தெரியுது அவங்களே எப்படி பத்திரமா பத்துக்கணும்னு தெரியமாட்டிங்குது.
அந்த பாட்டி கூறியதில் முதலில் அதிர்ந்து பின் அடக்கமாட்டாமல் சிரிப்பு தான் வந்தது சந்தீப்பிற்கு . இப்பொழுது சுபி ஏன் டென்ஷனாக இருந்தாள் என்று புரிந்தது.
சுபியோ அந்த பாட்டியின் மேல் கொலை வெறியில் இருந்தாள் . குழந்தையை பாட்டியிடம் இருந்து வாங்கிக்கொண்டு நகர்ந்து சென்றாள். பாட்டியிடம் தலையசைத்து விடைபெற்று சுபியின் பின்னே சென்றான்.
அதற்குள் அவளின் டீம்மேட் வந்துவிட குழந்தையை அவளிடம் ஒப்படைத்து ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டாள் .
அந்த பாட்டி நம்மளே வெச்சு செஞ்சுட்டாங்க. முடியல டா சாமி என்று கண்ணை முடி ரிலாக்ஸ் செய்துகொண்டிருந்தாள்.
சந்தீப்பிற்கு அந்த பாட்டி பேசியது மனதுக்கு இதமாக இருந்தது. ஒரு நாள் தன் குழந்தையும் இது போல் அவள் கைகளில் தவழுமா? தானும் உரிமையுடன் அவளை இன்று புடவை தான் கட்ட வேண்டும் என்று
அழிச்சியாடியாம் செய்ய முடியுமா  என்று ஏங்க தொடங்கினான். டேய் சந்தீப் அவசரப்படாதே. நீ எதாவது சொதப்பினா சந்தியாகும் பாலாஜிகும் தான் கஷ்டம் . கொஞ்சம் பொறுமையா இரு என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டான் இல்லை இல்லை தேற்றிக்கொண்டான் .
யாரோ தன்னை உற்று நோக்குவது போல் உள்ளுணர்வு உந்த பட்டென விழி திறந்தாள். அவள் விழி திறந்ததும் தன் பார்வையை மாற்றிக்கொண்டு பாலாஜியும் சந்தியாவும் எங்கே இன்னும் ஆளையே காணோமே என்றான்.
அவங்க இப்போ வந்துருவாங்க . உங்க டிக்கெட் அண்ணா கிட்ட தான் இருக்கு. ஓகே ஜாப் எல்லாம் எப்படி போட்டுஇருக்கு சுபி ? எந்த டெக்னாலஜில ஒர்க் பண்றே.
இவன் நம்மகிட்ட தான் பேசுறான ? அதுவும் நார்மலா ? நம்மளே பாத்தாலே அலட்சியமா முகத்தை திருப்பிக்குவான் இப்போ என்னடானா கேசுவலா பேசுறான்? ஹ்ம் ஜாப் எல்லாம் நல்ல போயிட்டு இருக்கு. கோர் ஜாவாவில் ஒர்க் பண்றேன்.
இப்போ நாமளும் எதாவது கேட்கணுமா? என்ன கேக்குறது?ஒன்னும் புரியலேயே? நாமளும் பேசாம அதையே கேட்போம்
அவள் முகத்தினில் வந்து போன பாவங்களை கண்டவன் அடிப்பாவி பேசுறதுக்கே இவ்ளோ யோசிக்குறியே உன்னை எல்லாம் வெச்சுகிட்டு ஹ்ம்ம்
உங்க ஜாப் எப்படி போகுது? நீங்க எந்த டொமைனில் ஒர்க் பண்றீங்க ?
மேடம் ரொம்பத்தான் சேபா பிலே பன்றாங்க என்று மனதிற்குள் நினைத்து கொண்டு அவளுக்கு பதில் கொடுத்தான்.
அப்போது அங்கு சந்தியாவும் பாலாஜியும் கைகள் கோர்த்தவாறு வந்து சேர்ந்தனர். அப்படியே பேச்சு அவர்கள் திருமணத்தை பற்றி சென்றது . சந்தியா வீட்டுலே மாப்பிள்ளை பாக்குறதா சொன்னா எனக்கு இன்னும் 2யெர்ஸ் டைம் வேணும் சந்தீப். எனக்கு சில கமிட்மெண்ட்ஸ் எல்லாம் இருக்கு சோ நீ தான் எப்படியாவது உங்க வீட்டுலே பேசணும்.
சற்று நேரம் யோசித்த சந்தீப் அப்பா கிட்ட பேசிப்பாக்குறேன் பட் அம்மாவை கன்வின்ஸ் பண்றது ரொம்ப கஷ்டம். சோ நீ ரெண்டுக்கும் தயாராவே இரு .
இதற்கிடையில் கிஷோரும் சாரதாவும் அனைவரின் ஜாதகத்தையும் ஒருமுறை ஜோதிடரிடம் பார்த்து வரலாம் என்று சென்றிருந்தனர். அப்படி பார்த்ததில் சந்தியாவிற்கு குரு பலன் இன்னும் 4 மாதங்களே உள்ளது. அதைவிட்டால் குரு பலன் அடுத்த 5 வருடம் கழித்து தான் வருகிறது. ஆனால் அது அப்படி சிறப்பாக ஒன்றும் இருக்காது என்று தெரியவந்தது.
அதனால் கிஷோரும் சாரதாவும் சந்தியாவிற்கு உடனே திருமணம் செய்யவேண்டும் என்று முடிவு செய்து பிள்ளைகள் முட்டுக்காடுலிருந்து வந்தவுடன் இதை பற்றி கூறினார்கள்.
அங்கே ஒரு நிசப்தமான சூழ்நிலை நிலவியது. சந்தீப் தான் மெதுவாக சந்தியா பாலாஜியின் காதல் குறித்து பெற்றோரிடம் கூறினான்.
அங்கே ஒரு பூகம்பம் வெடிக்க உள்ளதென அறிந்த சந்தியா மிகவும் பயந்து போய் பெற்றோரின் முகம் காணாமல் தரையில் பார்வையை பதித்து அண்ணனின் அருகில் நின்றாள்.
– தொடரும்

Advertisement