Advertisement

காதல் அணுக்கள் -2
அமெரிக்க சிகாகோ நகரத்தின் கடும் குளிரையும் பொருட்படுத்தாது அந்த புகழ் பெற்ற பப்பின் முன்னால் ஆண்களும் பெண்களும் வரிசையில் நின்றிருந்தனர். சந்தீப்பும் அவனது நண்பர்களும் தங்களுக்குள் கிண்டலடித்து பேசி சிரித்து கலாட்டா செய்து கொண்டிருந்தனர் . சந்தீப் மிகவும் கலகலப்பானவன். அவனை சுற்றி எப்போதும் நண்பிகள் நண்பர்கள் பட்டாளம் இருக்கும். தோழிகள் அதிகம் இருந்தாலும் அவர்களிடத்தில் பழகுவதில் எப்போதும் ஒரு வரம்பும்  கண்ணியமும் இருக்கும். ஒரு இடத்திற்கு செல்லும் முன் பெண்களை அழைத்து செல்ல தகுந்த இடமா என்பதை தெரிந்துகொண்ட பிறகே தோழிகளை தங்களுடன் அழைத்து செல்வான் அதனாலேயே எந்த தயக்கமும் இன்றி சந்தீபிடம் நட்பு வளர்த்தனர்.
அடுத்த வாரம் அவன் இந்தியா செல்ல இருப்பதால் நண்பர்களுடன் இங்கு பப்புக்கு வந்துள்ளான். தன் நண்பர்களுடன் நடனம் ஆடி களைத்து அமர்ந்தபின் அவன்  நண்பன் பிரணவ் ” மச்சான் டக்குனு திரும்பாதே நம்ம ஆபீஸ் குயின் அணிலா உன்னையே பார்த்திட்டு இருக்கா பாரு . ஏன்டா மச்சான் அவனவன் அவகிட்ட பேச சான்ஸ்  கிடைக்காதான்னு  காத்துட்டு இருக்கான் . நீ ஏன்டா இப்படி இருக்க ?” . அவனிடம் ஒரு கண்டன பார்வையை செலுத்திவிட்டு அணிலாவிடம் சென்றான் .
ஹாய் அணிலா ஹொவ் ஆர் யு ?
ஐ யாம் பைன் சந்தீப். ஹொவ் ஆர் யு டுடே ?
ஐ யாம் குட் . வாட்ஸ் அப் ?
நீ நெக்ஸ்ட் வீக் இந்தியா போறேன்னு கேள்விப்பட்டேன் . நீ என் ப்ரோபோசல்க்கு என்ன பதில் சொல்றே ?
லுக் அணிலா நான் ஆல்ரெடி சொன்னது தான் எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்ல . யு ஆல்சோ ப்ளீஸ் மூவ் ஆன் என்று தன்மையாகவே கூறினான் .
தன்னை அவன் நிகாரித்துவிட்ட கோபம் அப்பட்டமாக அவள் விழிகளில் தெரிந்தது .
ஹோ நானே வந்து சொல்றதாலே என்னை சீப் ஆஹ நினச்சுட்டே இல்ல . பாக்கலாம் என்னை வேண்டாம்னுட்டு எந்த ரதியை கல்யாணம் பன்றேன்னு .
அப்பொழுதும் தன் நிதானம் இழக்காமல் சிரித்த முகத்துடனே கண்டிப்பா இன்விடேஷன் அனுப்புறேன் வந்துரு .
இந்த பதில் அவளை இன்னும் எரிச்சல் ஆக்க அங்கிருந்து சென்றாள் .
என்னடா மச்சான் அணிலா என்ன சொல்றா ?
ஒண்ணுமில்லடா இந்தியா போறனில்லா அதை பத்திதான் கேட்டுட்டு இருந்தா .
நம்பிட்டோம் நம்பிட்டோம் என்று நண்பர்கள் கோரஸ் பாடினர். அதற்கும் அவனுடைய வசீகர புன்னகையே பதிலாக வந்தது .
                                             ****** ******  ****** ******     
தம்பரம் ரயில்நிலையம் டூவ்ஹீலர் பார்க்கிங்கில் தனது ஸ்குட்டியை பார்க் செய்துவிட்டு. நடைமேடை  நோக்கி விரைந்தாள் சுபி. இன்னும் ரயில் வந்திருக்கவில்லை. காலை நேர பரபரப்புடன் மக்கள் அங்கே குழுமி இருந்தனர். அன்று ஏதோ முகூர்த்த நாள் போல கல்லூரி மற்றும் அலுவலக கூட்டம் அல்லது திருமணத்துக்கு போகும் கூட்டம் வேறு நிரம்பி வழிந்தது.
கூட்டத்தில் தன் தோழி மதுமதியை தேடி அவள் அருகே சென்றால். சுபியும் மதுவும் கல்லூரி தோழிகள். கேம்பஸ் இன்டெர்வியூவில் ஒரே ஐ.டி. கம்பெனியில் தேர்வாகி கடந்த ஒரு வருடமாக ஒரே ப்ரொஜெக்ட்டில் உள்ளனர். மதுவின் வீடு சுபியின் வீட்டிலிருந்து 3 தெரு தள்ளியுள்ளது. இருவரும் ரயில்நிலையத்தில் சந்தித்து பின் ஒன்றாக மறைமலர் நகரில் உள்ள தங்கள் அலுவலகத்திற்கு சென்று வருவார்கள்.
மது ” ஏண்டி எரும லேட் ? நம்ம டீம் மங்குனி மந்திரி சைலேஷ் இந்நேரம் ரம்பம் போட்டுட்டு இப்போ தான் உன்னை பார்த்ததும் அங்கே நிற்குது பாரு”
சைலேஷ் அவர்கள் டீமில் பணிபுரியும் சீனியர் டெவலப்பர். இவர்கள் அங்கே நியூ ஜாய்னி ஆக சேர்ந்தபொழுது ப்ரொஜெக்ட்டில் டௌப்ட் கேட்டால் இதுகூட தெரியாத, காலேஜில் என்னத்த படிச்சிங்களோ என்று மட்டம் தட்டியே பேசுவான். டீம் மீட்டிங்கில் மேனேஜர் முன்னால் தன்னால் தான் இந்த ப்ரொஜெக்ட்டே   ஓடுகிறது என்று ஓவராக  சீன் போடுவான். அவனை மனதுக்குள் கழுவி கழுவி ஊத்துபவர்கள் வெளியே  ப்ரொபஷனலிசம்  கருதி சைலேஷிற்கு மங்குனி மந்திரி என்று பெயரிட்டனர்.
சுபி ” மது எனக்கு என்னமோ அந்த மங்குனிக்கு உன் மேல ஒரு கண்ணுனு நினைக்குறேன். கூடிய  சீக்கிரம் ப்ரொபோஸ் பண்ணப்போகுது பாரு “
ப்ரொபோஸ் பண்ணா எனக்கு ஆல்ரெடி ஆளு இருக்கு ப்ரோனு சொல்லிடுவேன்.
அது யாருடி எனக்கு தெரியாம?
எல்லாம் உனக்கு தெரிஞ்சவர் தான் . உங்க அண்ணா பாலாஜி தான்.
அடியேய் அவனுக்கு ஆல்ரெடி ஆளு இருக்குடி .
அவங்க கல்யாணம் வரை எனக்கு சான்ஸ் இருக்கு என்று சொல்லி கண்ணடித்தாள் மது.
சுபி  தலையில் அடித்து கொண்டு அவளை முறைக்கவும் ரயில் வரவும் சரியாக இருந்தது .
இருவரும் அடித்து பிடித்து அமர்ந்தனர். மது எப்பொழுதும் காலை உணவினை ரயிலில் தான் உண்பாள்.
பள்ளி பருவத்திலிருந்தே பழகிய ஒன்று. மது அந்த வேலையை செவ்வனே செய்து கொண்டு இருந்தாள்.
சுபி அங்கு ரயிலில் இருந்தவர்களை வேடிக்கை பார்த்தவன்னம் வந்தாள். கல்யாணத்திற்காக தங்களை அலங்கரித்து,பூ வைத்து வந்த பெண்களை காண்கையில் கடைசியாக எப்பொழுது தன் அன்னையை இவ்வாறு பூவெல்லாம் வைத்து பார்த்தோம் என்று யோசிக்க யோசிக்க அவள் நினைவுகள் பின் நோக்கி சென்றன.
குமரன் சித்ரா தம்பதியரின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம். சென்னையில் உள்ள தன் உயிர் தோழன் கிஷோரின் ஆலோசனைப்படி புதிய தொழில் தொடங்க குடும்பத்துடன் சென்னை குடிபெயர்ந்தார். குமரன் சித்ரா தம்பதியருக்கு பாலாஜி என்ற மகனும் சுபலக்ஷ்மி என்ற மகளும் இருந்தனர்.
கிஷோர் ஒரு கல்லூரில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்தார் . அவருக்கு சாரதா என்ற மனைவியும். சந்தீப் ,ஸ்ரீராம் மற்றும் சந்தியா என்று மூன்று மக்களும் இருந்தனர்.
சுபியும் சந்தியாவும் ஒரே வயது ஆகவே சட்டென தோழிகள் ஆகிவிட்டனர். பாலாஜியும் ஸ்ரீராமும் ஒரே வயதாக இருந்த போதிலும் சந்தீப் மற்றும் பாலாஜிக்கே அதிகம் ஒத்து போனது .
கிஷோரும்  குமாரும் எதிர் எதிரே மனை வாங்கி அவரவர் சௌகர்யத்திற்கு ஏற்ப வீடு கட்டிக்கொண்டனர் .
தொழிலும் நல்ல முன்னேற்றம் கண்டது. வந்த லாபத்தில் சிறுக சிறுக சேர்த்து குமரன் தனக்கு மிகவும் பிடித்த புல்லெட்டை வாங்கினார். தினமும் சுபியை அதில் தான் பள்ளிக்கு அழைத்து செல்வார். சுபிக்கு தன் தந்தையுடன் புல்லெட்டில் ஊர் சுற்றுவதென்றால் அத்தனை இஷ்டம். என்றாவது குமரன் வெளியூர் சென்று விட்டால் அன்று புல்லெட்டில் போக முடியாமல் முகத்தை தூக்கிவைத்தே திரிவாள்.சாப்பிடுவதற்குள் தன் அன்னையை படுத்திவைப்பாள். அன்னையின் கண்டிப்பு,  அண்ணனுடன் சின்ன சின்ன சண்டைகள் மற்றும் தந்தையின் செல்லம் இப்படி அவள் நாட்கள்  அழகாகவே நகர்ந்தது.
ஒரு நாள் ஈரோட்டில் உள்ள உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு சென்று திரும்புகையில் பேருந்து விபத்தில் சம்பவ இடத்திலே குமரன் உயிரிழந்தார். குடும்பமே நிலைகுலைந்து போனது. சித்ரா செய்வதறியாது தவித்து போனார். கணவனை இழந்த துக்கம் ஒரு புறம். தன்னையே நம்பியுள்ள பிள்ளைகள் ஒரு புறம், கணவனின் தொழிலை எடுத்து நடத்த  போதுமான படிப்போ அனுபவமோ கிடையாது . பின் கிஷோரின் உதவியுடன் அந்த தொழிலை வேறொருவருக்கு விற்று அதில் வந்த பணத்தில் நான்கைந்து கடைகளை வாங்கி வாடகைக்கு விட்டார். வீட்டிலிருந்தபடியே சாரீ பிசினஸ் செய்தார். சற்று சிக்கனமாகவே வீட்டு செலவை செய்துவந்தார். பிள்ளைகளும்  வீட்டு நிலவரம் தெரிந்து பொறுப்பாக நடந்துகொண்டனர். நன்றாக படித்தனர்.
தன் நண்பன் போலவே குணம் கொண்ட சுபி என்றால் கிஷோருக்கு தனி பிரியம். தன் பிள்ளைகளை வெளியே எங்கேயும் அழைத்து செல்லும் போது சுபி மற்றும் பாலாஜியை உடன் அழைத்து செல்வார்.
ஒரு சகோதரனை போல் சித்ராவிற்கு அனைத்து உதவிகளையும் செய்தார்.
பள்ளி சுற்றுலா, கல்லாரி சுற்றுலா மற்றும் நண்பிகளுடன் சினிமாக்கு செல்வது இது போன்ற அனைத்து விஷயங்களுக்கும் அவளது கிஷோர் அங்கிள் தான் சித்ராவிடம் பேசி சம்மதம் வாங்குவார்.
சித்ரா “எல்லாம் நீங்க குடுக்கற செல்லம் அண்ணா. உங்களுக்காக தான் நான் அவளை அனுப்புறேன் ” என்று அனுப்பிவைப்பார்.
சித்ரா எதாவது திட்டிவிட்டால் சுபி அந்த புல்லெட்டில் ஏறி அமர்ந்திவிடுவாள். அப்பொழுது தான் தந்தை
அவளை சமாதானம் செய்வது போல் மனது சற்று ஆறுதல் பெரும் .
ஒரு நாள் சாரதா கல்லூரி படிக்கும் தன் மகன் சந்தீபிற்கு பைக் வாங்க இருப்பதாக பேச்சுவாக்கில் சித்ராவிடம் சொல்ல அவர் தங்கள் வீட்டில் சும்மா நிறுத்தி வைத்திருக்கும் புல்லெட்டை எடுத்து கொள்ளுமாறு கூறினார்.
கிஷோரும் தன் நண்பனின் நினைவாக அவர் வைத்திருந்த  புல்லெட்டை வாங்கிக்கொள்ள சம்மதம் தெரிவித்தார் . சித்ரா எவ்வளவோ மறுத்தும் அவர் அதை பணம்  கொடுத்தே  வாங்கிகொண்டார்.
சுபிக்கு தான் அதில் மிகுந்த கோவம் வருத்தம் எல்லாம். தன் தாயிடம் ஒரு வாரம் அதற்கு  சண்டையிட்டாள்.
சித்ரா “வண்டிய  குடுத்தா என்னடி இப்போ ? நீ என்ன ஒட்டாவா போற “
சுபி ” நான் ஓடாட்டி என்ன என் கல்யாணத்துக்கு அப்புறம் என் புருஷன் ஓடிட்டு போவாரு, நான் அவர் கூட டபுள்ஸ் போவேன்  “
அடி கழுதை பத்தாம் கிளாஸ் படிக்குறவளுக்கு கல்யாணத்த பத்தி என்னடி பேச்சு ? ஒழுங்கா படிச்சு வேளைக்கு போ அப்புறம் கல்யாணத்த பத்தி பேசலாம். பப்ளிக் எக்ஸாமில் மட்டும் மார்க் குறையட்டும் அப்புறம் இருக்கு உனக்கு .
மார்க்கின் பயத்தில் சுபி கப் சிப் ஆனாள் .
சுபி வளர வளர தன் தாய் மட்டும் விசேஷ வீடுகளில் புறக்கணிக்கப்படுவதும் மற்ற பெண்களை போல் பூ வைத்து பளிச்சென்ற புடவை அணியாததும் மனதில் ஒரு வருத்தமாகவே இருக்கும் .
பூவும் பொட்டும் ஒரு பெண்ணுக்கு பிறப்பிலே வந்தது . அதை சடங்கு என்னும் போர்வையில் பறித்து கொள்வது எந்த விதத்தில் நியாயம் . அந்த பெண்களும் சமுகத்துக்கும் உறவுகளுக்கு பயந்து இதை ஏற்றுக்கொள்கின்றனர் . என்றேனும் இந்த நிலை மாறுமா ?
சுபிக்கு இந்த சாத புடவையிலும்  எந்த விதமான அலங்காரங்களும் இன்றி தன் தாய் பேரழகியாகவே தெரிந்தார்.
அனைத்து தாய்மார்களுக்கு மட்டும் அவர்கள் பிள்ளைகள் அழகல்ல . பிள்ளைகளுக்கும் அவர்கள் தாயே பேரழகி .
தான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் . வழக்கம் போல தன் மனதுக்குள் இக்கேள்விகளையும்  வருத்தங்களை புதைத்துவிட்டு இறங்க தயார் ஆனாள் சுபி .
-தொடரும்

Advertisement