Advertisement

காதல் அணுக்கள் – 14
திருமண சடங்குகள் அனைத்தும் முடிந்து மணமக்களை மாப்பிள்ளை வீட்டிற்க்கு வழி அனுப்பிக்கொண்டிருந்தனர் . சுபி தன் தாயை கட்டிக்கொண்டு சிறு பிள்ளை போல் அழுது கொண்டிருந்தாள் . பாலாஜியும் சந்தீப்பிடம் கொஞ்சம் பாத்துக்கடா என்று கையை பிடித்து பேசிக்கொண்டிருந்தான் . அருண் தான் சூழ்நிலையை இலகுவாக்க சுபி இது உனக்கே ஓவர இல்ல. ஏதோ அப்பிரிக்காக்கு கல்யாணம் பண்ணிட்டு போற மாதிரி ஓவர அழுதுட்டு இருக்கே . நாங்களும்  நீ எங்கயாவது தூரமா கல்யாணம் பண்ணிபோய்டுவே நிம்மதியா இருக்கலாம்னு நினச்சா நீ எதிர் வீட்டுக்கு தான் போக போற, நியாயமா பார்த்தா நாங்க தான் அதுக்கு அழுகணும் நீ எதுக்கு அழுதுட்டு இருக்கே என்றான் . அதை கேட்டு சுபிக்கும் கொஞ்சம் சிரிப்பு எட்டிப்பார்த்தது பின் அனைவரிடமும் விடை பெற்று சென்றாள்.
அங்கு சந்தீப் வீட்டில் சந்தியா மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்றாள் . பின் பாலும் பலமும் சடங்குகள் முடிந்து சந்தியாவும் அவளது பெரியம்மா மற்றும் மாமா மக்களும் இவர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர் .  அவர்கள் எல்லாம் தஞ்சை மற்றும் மதுரையில் இருப்பவர்கள் ஆதலால் திருமணம் முடிந்து இரண்டு நாள் அனைவரும் ஒன்றாக இருந்துவிட்டு கிளம்பலாம் என்று முடிவுசெய்திருந்தனர். 
சாரதாவின் அண்ணன் மகள் ரூபினிக்கு சந்தீப்பை கேட்டபோது அவன் மறுத்துவிட்டான் . ரூபினிக்கு கல்யாணம் முடிந்து குழந்தையும் ஆனபோதும் அவள் மனதினுள் நிராகரிக்க பட்ட கோபம் இருந்தது . அவள் சுபியை ஆராய்ச்சி பார்வை பார்த்துக்கொண்டிருந்தாள் . இவளைவிட நான் எந்த விதத்திலே கொறஞ்சுட்டேன்னு என்னைய வேண்டாம்னு சொன்னாங்க . இதை இப்படியே விடக்கூடாது என்று நினைத்தவள் ஏன் சந்தீப் அத்தான் நீங்க அமெரிக்காவிலிருந்து வரும் போது ஒரு வெள்ளைக்காரிய கல்யாணம் பண்ணிட்டு வருவீங்கன்னு பார்த்தா இப்படி எதிர்வீட்டு பெண்ணை கல்யாணம் பண்ணிருக்கீங்க என்றால் கிண்டலாக . சந்தியாக்கு நன்கு புரிந்தது இவள் பழைய கதையை மனதில் வைத்து தான் இப்பொழுது சிண்டுமுடிகிறாள் என்று . சந்தீபோ மனதினில் ஆஹா இவ நம்ப வாழ்க்கையிலே முதல் நாள்லே கும்மியடிச்சுருவா போலயே என்று யோசித்தவன், நான் அமெரிக்கா போனது வேளை பார்க்க அதுமட்டுமில்லாம எனக்கு அமெரிக்கன் கல்ஸ் எல்லாம்  வரமாட்டாங்க நம்ம சென்னை தம்பரத்துலே டோர் நம்பர் 15ல இருக்குற பொண்ணு தான் ஒத்துவருவா என்றான் சுபியை பார்த்துக்கொண்டே . அதை கேட்டதும் அனைவரும் ஓ என கூச்சல் எழுப்பினர் . சுபி தலையை தாழ்த்தி வெட்கத்தை மறைக்க முயன்றால் . சந்தியாவோ அவள் அண்ணனை பார்த்து நீ பொழச்சுக்குவே என்றாள் . பின் ரூபினியிடம்  இந்த விளக்கம் போதுமா என கேட்க ரூபினிக்கோ ஏன் தான் கேட்டோம் என்றானது . 
இரவு நெருங்க நெருங்க சுபிக்கு சற்று படபடப்பாக இருந்தது . சாரதா வந்து சுபியை சந்தியா ரூமில் அழைத்து சென்று தயார் செய்யும் படி கூறினார். சுபி சந்தியாவின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு ஹே எனக்கு ரொம்ப பயமா இருக்குடி இங்கயே இரு என்று பிடித்து வைத்துக்கொண்டாள் . 
நான் இப்போ உன் நாத்தனார்டி இந்த மிரட்டல் எல்லாம் வேண்டாம் என்று இல்லாத காலரை தூக்கிவிட்டுக்கொண்டாள் . 
அவள் தலையிலேயே நங்கென்று ஒன்று வைத்து முதல்ல நீ எனக்கு பிரெண்ட் அப்புறம் தான் இந்த நாத்தனாரெல்லாம் என்று நொடித்துக்கொண்டாள் .
அடியேய் பிரெண்டுனு சொல்லிட்டு இன்னைக்கு நைட் நடக்குறதெல்லாம் வெவஸ்த கட்டத்தனமா நாளைக்கு காலையிலே என்கிட்ட சொல்லிட்டுருக்காதே என்றால் கண்ணை சிமிட்டி . 
உன்னைய இரு இரெண்டு மாசம் கழிச்சு எனக்கும் ஒரு சான்ஸ் வரும் தானே அப்போ பாத்துக்குறேன் .
 இவர்கள் பேச்சை கேட்டு சுபிக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்த பெரியம்மா மகள்கள் பாக்கலாம் பாக்கலாம் இன்னும் இந்த பிரெண்டுனு ஒட்டி உறவாடுறது எல்லாம் எத்தனை காலம்னு என்றனர் . தாராளமா பாருங்க நாங்க எப்பவுமே இப்படி தான் இருப்போம் என்றனர் இருவரும் .
அங்கு தன் சகோதரியுடன் வந்த சாரதாவிற்கு இவர்கள் உரையாடல் கேட்டு மனது நிறைந்தது . சந்தியாவின் பெரியம்மா அவளை பார்த்து கல்யாணம் ஆகாத பொண்ணு உனக்கு இங்க என்ன வேலை வெளியே ஹாலுக்கு போ என்றார் . பின் சுபியை கொண்டு விடும் நேரம் நெருங்கியதால் பெரியவர்களிடம் ஆசி வாங்கிக்கொண்டு சந்தீப்பின் அறைக்கு போகச்சொன்னார்கள் . ஆசி வழங்கும் போது அனைவரும் சீக்கிரம் ஒரு பேரனை பெத்துகொடுத்துரு என்று கூறினர். அதை கேட்க சுபிக்கு எரிச்சலாக இருந்தது ஏன் பேத்தி பொறந்தா ஆகாத . ஆரோக்கியமான குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசி வழங்குவதே சாலா சிறந்தது . இப்போதிருக்கும் சூழலில் டிரீட்மென்ட் இல்லாமல் இயற்கையாக கரு உண்டானாலே பெரிய விஷயம் அதில் ஆண் குழந்தை தான் வேண்டும் பெண் குழந்தை தான் வேண்டும் என்று வற்புறுத்துவது எந்த விதத்தில் நியாயம் ?
இதை எல்லாம் யோசித்துக்கொண்டிருந்த சுபி சந்தீப்பிடம் இப்போதைக்கு குழுந்தை வேண்டாம் சற்று நமக்குள் புரிதல் வரவேண்டும் என்று பேச முடிவெடுத்தாள். அங்கு அறைக்குள் சந்தீப்போ அவன் நண்பன் குகன் சொன்னதை யோசித்து கொண்டிருந்தான் ” டேய் நம்ம ஊரு பொண்ணுங்க எல்லாம் சினிமா பார்த்து ரொம்ப கெட்டுபோய்ட்டாங்க டா , ரூமுக்குள்ள வந்ததும் கொஞ்ச நேரம் பேசலாம்னு ஆரமிப்பாளுங்க நாமளும் நம்பி சரின்னு சொல்லுவோம் அப்புறம் ஒருத்தர ஒருத்தர் முதல புரிஞ்சுக்கணும் அதுக்கப்புறம் தான் மித்ததெல்லாம்னு நம்ப தலையிலே இடிய போடுவாங்க . நாமளும் புதுசா கல்யாணமான மயக்கத்திலே சரி சரின்னு சொல்லிட்டு முழிச்சுட்டு நிக்கவேண்டியது தான் . அதனால பார்த்து நடந்துக்கோ இல்லனா மவனே உனக்கு நல்ல காரியம் நடக்குறதுக்கே ஒரு மாசம் ஆயிடும்  என்று எச்சரித்து விட்டு சென்றிருந்தான் . சுபி எதுவும் பேசுவதற்கு முன்பே தான் செயலில் இறங்க வேண்டும் என்று முடிவெடுத்தான் .
சுபி எவ்வளவு மெல்லமாக சென்றபோதும் அவன் அறை வந்துவிட்டது . அறையை தட்டி விட்டு 
செல்லவேண்டுமா இல்லை உள்ளே போகலாமா என்று யோசித்தது சில நொடிகளே இது இனிமே என்னோட ரூமும் தான் பின்னே எதுக்கு தட்டணும் என்று கதவை மெல்ல திறந்து உள்ளே சென்றாள். 
அங்கு அலங்கார செய்யப்பட்ட மெத்தையில் சந்தீப் சுபிக்காக காத்திருந்தான் . அவனை பார்த்ததும் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது . அவள் படபடப்பை உணர்ந்தவன் அவளை சகஜமாகும் பொருட்டு என்ன சுபி அங்கேயே நின்னுட்டே இங்க வந்து உக்காரு . அருகில் சென்று அமர்ந்தவள் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று யோசனை செய்து கொண்டிருந்தாள் . குழந்தை பற்றி பேசவும் வெட்கமாக இருந்தது அதனால் தலையை கவிழ்து உட்கார்ந்திருந்தால்.  என்ன சுபி கீழையே பார்த்துட்டு இருக்கே ஓ என் காலை தேடுறியா இங்க இருக்கு தொட்டு கும்பிட்டுக்கோ என்றவனை முறைத்து பார்த்து நினைப்பு தான் வேணும்னா நல்ல கிள்ளி வெக்குறேன் என்றாள்  நார்மல் மோடுக்கு மாறி .
அதில் சிரித்தவன் சுபி எனக்கொரு வாழ்க்கை லட்சியம் இருக்கு அது நிறைவேற உன்னோட ஒத்துழைப்பும் சம்மதமும் நிச்சயம் தேவை எனக்காக நீ அதை செய்வியா ? சுபிக்கு அவன் எதை குறித்து பேசுகிறான் என்று ஒன்றும் புரியவில்லை . ஒருவேளை அவன் புதிதாக தொடங்க உள்ள மென்பொருள் அலுவலகம் பற்றி இருக்கலாம் என்று யூகித்து கண்டிப்பா ஹெல்ப் பண்ணறேங்க என்னனு சொல்லுங்க ?
 நான் என்னோட பார்ஸ்ட அன்னிவெர்சரி நம்ம குழந்தையோட கொண்டாடணும்னு ஆசைப்படுறேன் என்றான் கேட்டுக்கொண்டிருந்த சுபிக்கு பிபி ஏறியது பாக்கிரௌண்டில் கவுண்டமணி ” இது அல்லவோ லட்சியம்” என்று இவளை பார்த்து சிரிப்பதை போல இருந்தது . 
 
அவன் சொன்னதில் கடுப்பான சுபி இனி மூடி மறைத்து பேசி பிரயோஜனமில்லை என்று நினைத்தவள் எனக்கும் ஒரு ஆசை இருக்கு நீங்க கண்டிப்பா அதை நிறைவேத்துவீங்கன்னு நம்புறேன் எனக்கு இப்போதைக்கு குழந்தை வேண்டாம் ஒரு 2 இயர்ஸ் கழிச்சு பெத்துக்கலாம் . எனக்கு 22 வயசு தான் ஆகுது சோ எனக்கும் பேபிய ஹாண்டில் பண்ண தெரியணும் தானே என்று பேச பேச சந்தீப் தலையில் கை வைத்து உட்கார யாரோ கதவை திறக்கும் ஓசை கேட்க அங்கே சுபி நின்றிருந்தாள் திரும்பி மெத்தையை பார்த்தவன் அங்கு யாரும் இல்லாததை கண்டு ச்சே கனவா. நல்ல வேலை அவகிட்ட எதுவும் உளறலை என்று நினைத்தவன் நேராக அவளிடம் சென்று கையிலிருந்த பால் வாங்கி அருகில் இருந்த டேபிள் மேல் வைத்தவன் அவளை கையில் ஏந்தியிருந்தான் . அவன் செய்கையில் அதிர்ந்தவள் என்னங்க என்ன பண்றீங்க கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம் .
இங்க பாரு செல்லம் நாம பேசுறதுக்கு வாழ்கை முழுக்க இருக்கு பட் பர்ஸ்ட் நைட் நம்ம வாழ்க்கைல ஒரு தடவை தான் வரும் அதை மிஸ் பண்ணிட்டா பிற்காலத்துலே  ரொம்ப வருத்தப்படுவோம் . அப்புறம் நம்ம பேரன் பேத்தி எல்லாம் கிண்டல் பண்ணுவாங்க என்று எதையோ ஒளறிவிட்டு அவளுடன் மெத்தையில் சரிந்தான் .
ஆமா பேரன் பேத்தி எதுக்கு கிண்டல் பண்ணனும் என்று யோசித்து கொண்டிருந்தவள் மனசாட்சி அடியேய் இப்போ அது ரொம்ப முக்கியமா நீ யோசித்து முடிக்குறதுக்குள்ள அவன் உனக்கு புள்ளையே குடுத்துருவான் போலிருக்கு என்று எடுத்து உரைத்தது .
முதலில் பயந்து தயங்கி பின் அவன் பெண்மையை கையாண்ட மென்மையில் அவனுடன் ஒன்றற கலந்தாள் .
இருவரும் தூங்கவே விடியல் ஆனது . முதலில் கண்விழித்த சுபி தன் அருகில் வெற்றி கொடி நாட்டிய களைப்பில் உறங்குபவனை ரசித்துக்கொண்டிருந்தாள் .
பின் குளித்து தயாராகி கீழ வருகையில் அனைவரும் அவளையே பார்ப்பதுபோல் தோன்றியது . என்ன இப்படி எல்லார்கிட்டயும் மாட்டிவிட்டுட்டு அந்த எருமை நல்ல தூங்கிட்டு இருக்கு பாரு என்று கல்யாணமான ஒரே நாளில் கணவனை திட்டி தீர்த்து மனைவிகள் கிளப்பில் மெம்பெர் ஆனாள் சுபி .
 
தொடரும்

Advertisement