Advertisement

காதல் அணுக்கள் – 13
 
மணமகன் அறையில் நண்பர்களின் கேலி கிண்டலுக்கு பதிலளிக்காது புன்னகை முகமாகவே ரெடி ஆகிக்கொண்டிருந்தான் . அவன் நினைவுகள் எல்லாம் நேற்று நடந்த இதழ் ஒற்றலில் தான் லயித்திருந்தது . மனைவிக்கு முத்தம் கொடுப்பது உரிமை ஆனால் காதலிக்கு முத்தம் கொடுப்பது ஒரு வகை கிக் . கண் முன்னே காதலி இருந்தும் அவளிடம் தன் காதலை சொல்லாமல் எந்த உரிமையும் எடுக்க இயலாமல் இருந்தான் ஆனால் இந்த அனுபவம் வாழ்க்கை முழுமைக்குக்கும் தித்திக்கும் நினைவுகளுள் ஒன்றாக இருவருக்கும் இருக்கும் . 
 
என்னடா மாப்பிள்ளை யோசனை எல்லாம் பலமா இருக்கு ? நைட்க்கு இப்போவே பிளான் போடா ஆரம்பிச்சுட்டியா ? பாத்துடா நல்ல நாள் அது இதுன்னு ஒரு வாரம் தள்ளி வெச்சுர போறாங்க ? 
 
டேய் உன் திருவாயை வெச்சுட்டு சும்மா இருடா . அப்படி மட்டும் எதாவது நடக்கட்டும் அப்புறம் உன்னை தேடிவந்து உதைக்க போறேன் என்றான் சந்தீப் .
 
வெளியே ஸ்ரீராமும் பாலாஜியும் கல்யாண வேலையை பார்த்துக்கொண்டிருந்தனர் . அருண் பந்தி நடக்கும் இடத்தில் எல்லாம் சரியாக உள்ளதா என்று மேற்பார்வை பார்த்துக்கொண்டே கோகிலா மாமியின் மகளை பார்த்து “ஐயங்காரு வீட்டு அழகே ” என்று பாடிக்கொண்டு நாலைந்து ஜிலேபிகளை உள்ளே தள்ளியவண்ணம் அவன் வேலையை செவ்வனே செய்துகொண்டிருந்தான் .
 
மணமகள் அறையிலோ சுபி தன் தாயை பற்றி நினைத்து கொண்டிருந்தாள் . நேற்று நிச்சயத்தின் போது அனைத்தையும் பார்த்து பார்த்து செய்துகொண்டிருந்த தாய் திடீரென ஒதுங்க ஆரம்பித்து விட்டார் , அனைவரும் வந்து பொட்டு வைத்து ஆசி வழங்கிய பின்னே கடைசி ஆளாக அவர் வந்து பொட்டு வைத்தார் . தன் திருமணத்திலே தன் தாயை ஒதுக்க பார்ப்பது எந்த வகையில் நியாயம் ? இன்று என்ன ஆனாலும் சரி அவரை மேடையை விட்டு இறங்க விடக்கூடாது என்று முடிவெடுத்தாள். 
 
வெளியே தன் சொந்தங்களுக்கு சித்ரா சந்தியாவை அறிமுகம் செய்து கொண்டிருந்தார். அதுவும் குமரனின் சகோதரிகள் இதுநாள் வரை இவர்கள் குடும்பத்தை சிறிதும் கண்டுகொள்ளாதவர்கள் இப்பொழுது மட்டும் சித்ராவிடம் சண்டையிட்டு கொண்டிருந்தனர் . பாலாஜி சித்ரா போல் சிவந்த நிறத்துடன் ஹிந்தி பட ஹீரோ போலவும் நல்ல வேலையிலும் இருப்பவனை தங்கள் மகள்களுக்கு கட்டிக்குடுக்காமல் இப்படி வெளியே பெண் எடுப்பது அவ்வளவு கோபத்தை கொடுத்தது . எங்க அண்ணன் போனதுக்கப்புறம் சொந்தம் விட்டு போகக்கூடாது நினைச்சிருந்த நீ இப்படி அசல்ல பொண்ணு பார்த்திருப்பையா ? அதுவும் பையன் நல்ல கலரா எப்படி இருக்கான் அவனுக்கு போய் இப்படி சுமாரான பெண்னை பார்த்துருக்க ?
 
பையனுக்கு எதுக்கு அழகு கலரு என்று பேசும் சமூகம் அது பெண்களுக்கு மட்டும் கண்டிப்பாக இருக்கவேண்டிய தகுதி போல் நினைக்கிறது . அழகான பெண்ணிற்கு சுமாரான மாப்பிள்ளை அமைந்தாலும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் சமூகம் அழகான மாப்பிள்ளைக்கு சுமாரான பெண் அமைந்தால் அவனுக்கு ஏதோ தீங்கு இழைக்கப்பட்டது போல கருதுகிறது .
 
சித்ரா அவர்களை பார்த்து நிதானமாக சந்தியாக்கு என்ன குறை அவ அழகானவ தான் . நிறத்துல என்ன இருக்கு பையனுக்கும் என் மருமகளுக்கும் மன பொருத்தம் ரொம்ப அதிகமா இருக்கு . என் பையன் சந்தியாவை ரொம்ப விரும்புறான் அவளை நல்ல பார்த்துக்குவான் . சந்தியாவும் பாலாஜியை நல்ல கவனிச்சுக்குவா இனி எனக்கு பாலாஜி பத்தி எந்த கவலையும் இல்ல . 
 
அங்கு சித்ராவை அழைக்க வந்த சாரதாவின் காதில் மொத்தமும் விழுந்தது . அவர்கள் தங்கள் மகளை குறை சொல்லும் பொது ஒரு தாயாய் அவர் இதயம் மிகவும் வருந்தியது . அவர்களுக்கு சித்ரா குடுத்த பதிலில் ஒரு நல்ல குடும்பத்தில் பெண்ணை கொடுத்துள்ளோம் என்ற நிம்மதியுடன் அங்கிருந்து சென்றார் .
 
முகூர்த்த நேரம் நெருங்க, சந்தீப் மணவறையில் உட்கார்ந்து ஐயர் சொன்ன மந்திரங்களை திரும்ப சொல்லிக்கொண்டிருந்தான் . மேடையில் பாலாஜியும் சந்தியாவும் ஒரே நிறத்தில் உடை அணிந்து ஒருவரை ஒருவர் ரசித்து கொண்டிருந்தனர் . தங்கள் காதல் கை கூடி இன்னும் இரு மாதங்களில் தங்கள் திருமணம் என்னும் பூரிப்பில் இருந்தனர். ஐயர் பெண்ணை அழைத்து வர சொல்லவும் சந்தியா சென்று சுபியை அழைத்து வந்தாள் . 
 
மணவறை நெருங்க நெருங்க சுபிக்கு மிகவும் படபடப்பாக இருந்தது அங்கே மாப்பிள்ளை கோலத்தில் சிரித்தமுகமாக வீற்றிருந்தவனை கண்டதும் நேற்று இரவில் நடந்தவைகள் எல்லாம் நினைவில் வந்து கண்ணம் சிவந்தது . நேற்று நடந்த முத்த யுத்தத்தில் முதலில் அதிர்ந்து பின் அதில் லயித்துப்போனவள் மூச்சு காற்றுக்காக திணறவும் அவளை விடுவித்தவன் மிச்சத்தை நாளைக்கு நைட் கன்டினியூ பண்ணலாம் என்று கண்ணடித்து கூறவும் அவனிடமிருந்து விட்டால் போதுமென அவள் அறைக்கு ஓடிவிட்டாள். தன்னை சமன் செய்யவே சிறிது நேரமானது . இன்னும் அவன் இதழ் தன் இதழுடன் ஒட்டிக்கொண்டிருப்பது போல் ஒரு உணர்வு அவளுக்கு வெகு நேரம் புரண்டு புரண்டு படுத்தவள் அப்படியே உறங்கி போனாள் .
 
இன்று திரும்ப அவனை காணவும் அந்த நிகழ்வு நினைவுக்கு வந்து அவளை இம்சித்தது. கண்ணெடுத்து அவனை பார்க்காமல் தவிர்த்தவள் அவன் அருகில் பதுமையென அமர்ந்து கொண்டாள். அவள் தன்னை தவிர்ப்பதற்கான காரணம் அறிந்தவன் கண்களில் குறும்பு கூத்தாடியது . மேலும் அவளை சீண்ட நினைத்தவன் என்னாச்சு சுபி உதடெல்லாம் வீங்கி போயிருக்கு ? எதாவது எறும்பு கடிச்சிருச்சா  என்று அவள் காதில் கிசுகிசுக்க சுபி அழகாக வெட்கப்பட அதை தன்னுள் நிறைவாக படம்பிடித்துக்கொண்டன பல கேமெராக்கள் . அதை அவர்களின் நண்பர்கள் கூட்டம் மற்ற நண்பர்களுடன் முகநூலில் பகிர்ந்துகொண்டனர்.
 
இதை பார்த்துக்கொண்டிருந்த பாலாஜிக்கும் மனம் நிறைந்தது. தங்கை இந்த திருமண வாழ்வை மன நிறைவோடு வாழ்வாள் என்ற நம்பிக்கை பிறந்தது .
 
சுபி கண்களாலே தன் தாயை தேடுவதை பார்த்து பாலாஜி சென்று சித்ராவை அழைத்து வந்தான் . சுபி சித்ராவை தன் அருகிலேயே இருக்கும்படி கட்டளையிட்டாள் . அம்மா நீ மட்டும் கீழ இறங்குனே என்று தன் பெரிய கண்களை மேலும் பெரிதாக்கி மிரட்டிக்கொண்டிருந்தால் . சரி சரி நான் எங்கேயும் போகலே நீ கல்யாண பொண்ண லச்சணமா கொஞ்சம் வெட்கபடுடி என்றார் சிரித்துக்கொண்டு . அங்கு வந்த சந்தீப்பின் பெரியம்மா சித்ராவை பார்த்து எத்தனை தடவை சொன்னாலும் சில பேருக்கு புரியாது நல்ல காரியம் நடக்கும்போது அபசகுனமா முன்னாடி வந்து நிக்குறது என்று சித்ராவை பார்த்து ஜாடை பேசிக்கொண்டிருந்தார் . சுபிக்கு நேற்று என்ன நடந்திருக்கும் எதனால் தன் தாய் மேடைக்கு வரவில்லை என்று புரிந்து போனது கோபத்துடன் அவரை பார்த்து முறைத்தவள் அம்மா இங்கையே இருங்க என்றாள் . சந்தீப்பும் முதலில் அவர் பெரியம்மா யாரை சொல்கிறார் என்று புரியாமல் பார்த்தவன் சுபியின் கோபமும்  சித்ராவின்  சங்கடமான நிலையும் அவனுக்கு நிலைமையை விளக்கியது . இது என்ன மாதிரி கொடுமை பெற்ற மகளின் திருமணத்தில் முன் நிற்க தாய்க்கு உரிமை இல்லையா ? 
 
அத்தை நீங்களும் எங்க அம்மாவும் தான் முன்னாலிருந்து இந்த கல்யாணத்தை நடத்தணும் . நாங்க நல்ல இருக்கணும்னு எங்க அம்மாக்களை விட வேற யார் அதிகமா நினைக்கபோறாங்க . அதை கேட்டுக்கொண்டிருந்த சாரதாவுக்கு மகன் கூற்றில் இருந்த உண்மை புரிந்தது . முதல் முறையாக சம்பிரதாயங்களை விட்டு மனித மனதிற்கு முக்கியத்துவம் கொடுத்து சித்ரா நீ இங்கேயே இரு என்றார் .
 
இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ என்று கீழே இறங்கிக்கொண்டிருந்த பெரியம்மாவிடம் வந்த அருண் ஹ்ம்ம் இப்படியே நேரா போனா வேளச்சேரில முடியும் என்றவனை உக்கிரத்துடன் பார்த்து சென்றார் .
 
சுபிக்கு தன்னவனை நினைத்து பெருமையாகவும் சற்று கர்வமாகவும் இருந்தது. அவனுடைய வசிக்கிரத்தில் , பணத்தில் குறும்பு தனத்தில் கவரப்படாதவள் இப்பொழுது அவன் செய்த செயலால் கவரப்பட்டாள் . இவனுடனான என் வாழ்வு சிறக்க வேண்டும் என்று முதன்முறை இறைவனிடம் வேண்டிக்கொண்டாள் . பின் கண்களால் தேங்க்ஸ் என்றவளை கண்ண குழிகள் விழுகும் புன்னகை ஒன்றை பரிசளித்து விட்டுகெட்டிமேளம் முழங்க சுற்றமும் நட்பும் அச்சதை தூவ ஐயர் கொடுத்த தாலியை அவள் கழுத்தில் கட்டி  தன் சரிபாதியாக உலகிற்கு பறைசாற்றி ஏற்றுக்கொண்டான் . தன் நெடுநாள் ரகசிய காதலி இன்று அவன் மனைவி ஆகிவிட்டதில் மேலும் தேஜஸாக இருந்தது அவன் முகம் . 
 
அவர்கள் ஜோடி பொருத்தத்தை பார்த்த சில கண்கள் மெச்சுதலையும் சில கண்கள் பொறாமையையும் தத்தெடுத்தது . திருமண சடங்குகள் அனைத்தும் முடிந்து பந்திக்கு அழைத்து சென்றனர் . பொதுவா திருமணத்துக்கு வந்த நண்டு சுண்டு வரை அனைவரும் உண்ட பின்னே மணமக்களை சாப்பிட அழைத்து போவார்கள்  அதுவும் அங்கே சாப்பிட விடாமல் போட்டோக்ராபர் முகத்திலே லைட் அடித்து கொண்டு திரிவார்கள் . ஆனால் சுபி அருணிடம் முன்பே சொல்லியிருந்தால் என் கல்யாணத்துல ஒரு ஐட்டம் விடாம நான் டேஸ்ட் பண்ணனும் அதுக்கு நீ தான் பொறுப்பு அதுலே எதாவது சொதப்புச்சு அப்புறம் ஏக் மார் தோ துகுடா என்று முன்பே மிரட்டி இருந்தாள் .
 
அதன்படியே அருண் இவர்களை கல்யாண மண்டபத்தில் இவர்களுக்கு  பிரத்யேகமாக ஒரு சின்ன ரூமில் 2 சர்வர்களை வைத்து அனைத்தும்  உணவு பதார்த்தங்களும் பரிமாற ஏற்பாடு செய்திருந்தான் . அதை பார்த்த சுபி நண்பேன்டா என்று ஹாய் பை கொடுத்தாள் . 
 
அங்கு இவர்களின் நண்பர்களை சந்தியாவும் பாலாஜியும் கவனித்து கொண்டார்கள் . அருணும் என்ஜோய் தி ப்ஹுட் என்று அவர்களுக்கு தனிமை கொடுத்து சென்றுவிட்டான் . புது மஞ்சள் தாலி அணிந்து முகத்தினில் வெட்க சிரிப்புடன் இருந்தவளை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு . மெல்ல அவள் காதோரம் யூ லுக் கோர்ஜியோஸ் பேபி என்று கிசுகிசுத்தான் . கணவனிடமிருந்து வந்த முதல் காம்ப்ளிமெண்ட்டை பொக்கிஷமாக மனதினில் சேமித்துவைத்தாள் .


Advertisement