Advertisement

காதல் அணுக்கள் – 11
அருணுக்கு கால் செய்த சுபி இன்று மாலை 4 மணிக்கு தங்கள் ஏரியாவில் உள்ள  ஐஸ்கிரீம் பார்லரில் தனக்காக காத்திருக்கும்படி கூறினாள் . ஒரு முக்கியமான விஷயம் பேசவேண்டும் என்றும் அதனால் தவறாமல் வரும் படி கூறினாள் .
சுபி அலுவலகத்தில் அவள் வேலைகளை ரெவியூ செய்ய அனுப்பிவிட்டு,ஈமெயில் ஒன்றை தட்டிவிட்டு ஒரு 3 மணிக்கு அருணை பார்க்க கிளம்பிவிட்டாள் .
அருணை ஐஸ்கிரீம் பார்லரில் பார்த்ததும் ஏன் மச்சி இரெண்டு நாளா வீட்டு பக்கமே காணோம் . இந்த இரெண்டு நாளில் என்னல்லாம் நடந்து போச்சு தெரியுமா 
ஹோட்டல்ல ஒரு வெட்டிங் ஆர்டர் , வேலை பெண்டு நிமித்திருச்சு . சரி சரி சஸ்பென்ஸ் வெக்காம விஷியத்தை சொல்லு முதல்ல .
சுபி முட்டுக்காடு சென்ற நாளிலிருந்து இன்று மதியம் சந்தீப் ஆபீஸ் வந்தவரை அனைத்தையும் கூறினாள் . அனைத்தையும் பொறுமையாக கேட்டவன் ” காங்கிராஜுலேஷன்ஸ் . நீங்க ஆன்ட்டி ஆகப்போறீங்க “. என்றான் .
அதில் கடுப்பான சுபி டேய் எருமை கல்யாணத்த நிறுத்துறதுக்கு ஐடியா குடுப்பேன்னு பார்த்த நீ விஷ் பண்ணிட்டு இருக்கே ?
என்னது கல்யாணத்தை நிறுத்த போறியா ? உனக்கென்ன லூசா ? சந்தீப் தான் உனக்கு பெஸ்ட் சாய்ஸ் . அவன் உங்க வீட்டுலே எல்லோருக்கும்  பாவரைட். ரொம்ப ரெஸ்பான்சிபிள் சோ உன்னை நல்ல பாத்துக்குவான் அப்புறம் என்ன உனக்கு  
நீ எப்போ மச்சி அவன் கட்சிக்கு தாவுனே ? 
நமக்கு அவன்கிட்ட நிறைய ஒத்துபோகாமா இருந்திருக்கு ஆனா அதெல்லாம் சின்ன புள்ளத்தனமான சமாச்சாரம் . அதை மனசுலே வெச்சுட்டு தான் நீ வேண்டாம்ன்னு சொல்றியா ?
அது இல்ல மச்சி பிரச்சனை . எனக்கு வரப்போற புருஷன் மொழி படத்துலே ஜோதிகாவை அன்கண்டிஷனலா லவ் பண்ணுறே ப்ரித்வி ராஜ் மாதிரி என்னை அவ்ளோ லவ் பண்ணனும் . 
அதுக்கு நீ ஜோதிகா மாதிரி இருக்கனும் ? என்றவனை நன்கு முறைத்தவள் கிளம்ப எத்தனிக்க ஹே ஹே சாரி சாரி உக்காரு உக்காரு நான் எதுவும் சொல்லலே . நீ மேல சொல்லு .
ஆனா இந்த சந்தீப் என்னைக்காவது என்னை ஆர்வமா பார்த்துருக்கான அப்படி இருக்கும் போது இப்போ அவன் கல்யாணத்துக்கு ஓகே சொன்னது  ஏதோ கடமைக்கு கல்யாணம் பண்றனோன்னு தோணுது . 
சுபி நீ அவன் பிரெண்ட் தங்கச்சி பிளஸ் உங்க அம்மா மேல அவன் நிறைய மரியாதை வெச்சுருக்கான் அப்புறம் எப்படி உன்னை சைட் அடிப்பான் . அவன் வீட்டுலே பாக்குறே பெண்ணைத்தான் காதலிக்கனும்னு இருந்துருப்பான இருக்கும் . நீயும் ரொம்ப குழப்பிக்காத . உங்க வீட்டுலே மாப்பிள்ளை பார்த்திருந்தா அவனை பிக்ஸ் பண்ணதுக்கு அப்புறம் தானே பேசிருப . இப்போவும் இதை அரேன்ஜ்ட் மேரேஜ் போல நினைச்சுக்கோ. ஆக்ச்சுவல்லி இது அரேன்ஜ்ட் மேரேஜ் தான் . சந்தீப் உனக்கு தெரிஞ்ச பையன் என்றதால தான் உனக்கு குழப்பம் . சந்தீப்பை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா அவன் உங்கம்மாக்கு மாப்பிள்ளையா இல்லாம நல்ல மகனாவும் இருப்பான் . நம்ப ஏரியால எத்தனை பொண்ணுங்க அவனுக்கு ரூட் விட்டுட்டு இருகாங்க தெரியுமா ஒழுங்கா வீட்டுலே ஓகே சொல்லு என்று நல்ல நண்பனாய் அறிவுறித்தினான் .
அருணிடம் பேசிய பின் சுபிக்கு சற்று தெளிவு வந்தது . வீட்டில் மறுபடியும் திருமண விஷயம் பேசினால் சம்மதம் சொல்லிவிடலாம் என்று முடிவுக்கு வந்தாள் . 
ஆமா யாரு அந்த கோகுல் . ஆளு யாருனு காட்டு அட்ரஸ் இல்லாம பண்ணிடலாம். இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் ஆரம்பத்திலே தட்டி வெச்சுரனும் .
அவன் எல்லாம் அவ்ளோ வர்த்தில மச்சி . இன்னைக்கு சந்தீப் வந்து சும்மா பேசுனதுக்கே பேதி மருந்து குடிச்சவன் மாதிரி ஆயிட்டான் என்று சொல்லி நண்பர்களுக்குள் சிரித்துக்கொண்டிருந்தனர் .
ஹே அருண் எனக்கு ஒரு ஹெல்ப் மச்சி 
இவ்ளோ பம்முறத பார்த்தா ஏடாகூடமா எதுலயோ என்னை மாட்டிவிடப்போறேன்னு மட்டும் தெரியுது ? சொல்லு என்ன விஷயம் 
இன்னைக்கு என் முன்னாடியே யாரோ வினிதான்னு ஒரு பொண்ணை புல்லட்டில் பிக் அப் பணிக்குறேன்னு சொல்லுறான் மச்சி இந்த சந்தீப் . நீ தான் எப்படியாவது நம்ம ஆபரேஷன் புல்லெட்டை எகிசிகியூட் பண்ணனும் .
அருண் ஒரு நிமிடம் ஆபரேஷன் புல்லெட்டை நினைத்து பார்த்தான் . அவர்கள் டென்த் படிக்கும் போது முழு ஆண்டு லீவுக்கு சந்தீப்பின் மாமா மற்றும் பெரியம்மா மக்கள் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தனர் . அப்பொழுது அனைவரும் புதிதாக ரிலீஸ் ஆன படத்திற்கு போகலாமென முடிவு செய்து கிளம்பிக்கொண்டிருந்தனர் . அப்பொழுது சந்தியாவை காண சுபி சென்றிந்தாள்.
சுபி நாங்கெல்லாம் படத்துக்கு போறோம் நீயும் வரியா . இன்னும் கொஞ்ச நேரத்துலே டாக்ஸி வந்திரும் நீ அதுக்குள்ள அத்தை கிட்ட கேட்டுட்டு ட்ரெஸ் மாத்திட்டு வா . அதை கேட்டுக்கொண்டிருந்த அவள் மாமா மகள் ரூபிணி நான் டாக்ஸிலே இடிச்சு புடிச்சு உக்காந்துட்டு எல்லாம் வரமாட்டேன் நான் அத்தான் கூட புல்லட்டில் ஜாலியா வரேன் என்று அலப்பறை செய்து கொண்டிருந்தாள்.
அதை கேட்ட சுபிக்கு எரிச்சலாக இருந்தது . ஏற்கனவே தன் விருப்பமின்றி தந்தையின் புல்லட்டை விற்றது அதில் தான் என்றும் உட்கார்ந்து போகும் சீட்டுக்கு இன்னொருவர் உரிமை கொண்டாடுவது இது எதுவுமே அவளுக்கு பிடிக்கவில்லை . அங்கிருந்து போனால் போதும் என்று சந்தியா நான் வரலை நீங்க எல்லாம் போயிட்டு வாங்க என்றவள் முகம் சோர்ந்து போயிருந்தது .
அவளை பார்த்த அருண் என்னவென்று கேட்க சந்தியா வீட்டில் நடந்ததும் ரூபிணி அதில் செல்வது பிடிக்கவில்லை என்றும் நண்பனிடம் பகிர்ந்துகொண்டாள் . அதை கேட்டு அருணும் நண்பேன்டா என்ற ரேஞ்சுக்கு பீல் செய்து ஆபரேஷன் புல்லெட்டை நிறைவேற்றினான் .
அது வேறெதுவுமில்லை அதர பழைய டெக்னீக்கான டயரை பஞ்சர் செய்வது தான் . இவர்கள் ஒரு இடத்தில மட்டும் செய்யாமல் நான்கு ஐந்து இடங்களில் பஞ்சர் செய்தனர் . அப்போதைக்கு ரூபிணியால் புல்லட்டில் போக முடியாமல் போனது . உடனே இருவரும் ஹய் பைவ் கொடுத்து ஆபரேஷன் சக்ஸஸ் என்று மகிழ்ந்தனர்.
 இவர்கள் அறியாதது அதை சந்தீப் பார்த்துவிட்டான் என்பது தான். ஏன் இதுங்க பஞ்சர் பண்ணா என்னாலே பஞ்சர் ஒட்டிட்டு கூட்டிட்டு போகமுடியாத . லூசுங்க . ஸ்கூல் புள்ளைங்க என்பது சரியாத்தான் இருக்கு என்று சிரித்து கொண்டான் . அடுத்து ரூபிணி ஊருக்கு செல்லும் வரை அவன் அதை சரிசெய்யவே இல்லை . சுபிக்கு பிடிக்கவில்லை என்றதும் அவனும் வேறுயாரையும் புல்லட்டில் ஏற்றியது இல்லை . தன் அப்பாவின் பைக்கில்,காரில் எல்லாம் அழைத்து சென்றிருக்கிறான் ஆனால் புல்லட்டில் மட்டும் இல்லை . அவனுக்கு தெரியும் சுபிக்கு அவள் தந்தையின் நியாபகங்கள் வந்து ஏங்கி போய்விடுவாள் என்று . அதனாலேயே அப்படி ஒரு சூழல் வராமல் பார்த்துக்கொண்டான் .
பழைய நினைவுகளில் இருந்து வெளியே வந்த அருண்  தோழியின் சிறு பிள்ளை தனத்தில் சிரிப்பு தான் வந்தது . ஏன் சுபி நீ அவனை கல்யாண பண்ணிக்க மாட்டேன்னு தானே சொல்லிட்டு இருந்தே அப்போ அவன் யார்கூட புல்லட்ல போன உனக்கென்ன ?
என்ன மச்சி இப்படி சொல்றே , அது என் சீட்டு அதை எப்படி நான் விட்டுகுடுக்க முடியும் என்றால் வீராப்பாக. 
ஆமா அது பெரிய எம்.பி  சீட்டு . நல்லா வந்துரும் வாயிலே . அப்போ நாம  ஏதோ விவரமில்லாம அவன் புல்லெட்டை பஞ்சுர் பண்ணிட்டு இருந்தோம் இப்போவும் அந்த மொக்க ஐடியா வை எக்சிகியூட் பண்ணசொல்றியா ?
அப்போ வேற எதாவது ஐடியா யோசிக்கலாமா என்றவளை மேலே கீழே பார்த்த அருண் “போய் அவன் சட்டையை புடிச்சு மவனே இனி எவளையாவது வண்டிலே ஏத்துனேனு தெரிஞ்சது வண்டிய உன் மேல ஏத்திருவேண்டா ” அப்படினு கெத்தா பஞ்ச் டயலாக் சொல்லுறதை  விட்டுட்டு சின்ன புள்ளத்தனமா டயரை பஞ்சர் பண்றாலாமா 
நிச்சமாத்தான் சொல்றியா. நான் எப்படி டா என்றவளை பார்த்து இனிமே எல்லாம் அப்படித்தான் என்று நாயகன் ஜனகராஜை போல் ரியாக்சன் கொடுத்தான் .
பொண்டாட்டியோட பவர் என்னனு அவனுக்கு நீ காட்ட போற . யு கேன் டூ இட் என்று அவளை நன்கு உசுப்பேத்தி அனுப்பிவைத்தான் .
டேய் சந்தீப் எத்தனை நாள் உன்னாலே எங்க அப்பாகிட்ட திட்டு வாங்கிருப்பேன். இப்போ சுபிக்கிட்ட நல்ல மாட்டுடா என்று சிரித்து கொண்டான் அருண் .
 
அருணிடம் பேசிய பின் நேரே வீட்டுக்கு வந்த சுபியை இரு குடும்பத்தினரும் வரவேற்றனர் . என்ன சந்தியா வீட்டுலே இருந்து எல்லாரும் இங்க உக்காந்திருக்காங்க என்ற யோசனையுடன் அனைவரையும் பார்த்து பொதுவாக வாங்க என்றுவிட்டு தன் அறைக்கு செல்ல திரும்பியவளை சித்ராவின் குரல் தேக்கியது.
சுபி ரெப்பிரேஷ் பண்ணிட்டு கீழ வா. நான் எதுக்கு என்று சுபி ஏதோ கூற வர, எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்  சீக்கிரம் வா என்று அவளை அனுப்பிவைத்தார் .
சுபி கீழே வரும் பொழுது பாலாஜிக்கும் சந்தியாவிற்கும் ஜாதக பொருத்தம் பார்த்து கொண்டிருந்தனர் . சாரதாவின் வற்புறுத்தலால் இரு ஜோடிகளுக்கும் பொருத்தம் பார்த்துக்கொண்டிருந்தனர் .
அவர்களுக்கு திருமணம் செய்யுமளவுக்கு பொருத்தம் இருப்பதாகவும் ஆனால் புத்திரபாகியதிற்காக ஒரு பரிகாரம் செய்யவேண்டும் என்று ஜோதிடர் கூறினார். அதை கேட்டு அனைவர் மனதிலும் சஞ்சலம் உண்டாயிற்று .
பெற்றோர்களால் நிச்சயிக்கபடும் திருமணங்களில் அவரவர் திருப்திக்கு பொருத்தம் பார்க்கலாம் இந்த பெண்ணின் ஜாதகமோ மாப்பிள்ளையின் ஜாதகமோ ஒத்துவரவில்லை என்றால் வேறு பார்க்கலாம் ஆனால் லவ் மேரேஜ் செய்யும் ஜோடிகளுக்கு ஜாதக பொருத்தம் பார்ப்பது வீண் பிரச்சினையையும் சஞ்சலத்தையுமே உண்டாகும். எப்படியும் மணம் செய்துகொள்வார்கள் ஆனால் ஜோதிடர் குறிப்பிட்ட விஷயம் காலத்திற்கும் அவர்கள் மனதை அரித்து கொண்டே இருக்கும் .
இதெல்லாம் தேவையா என்று சுபி அவள் அன்னையை பார்த்தாள் . சித்ராவிற்கும் இதில் உடன்பாடில்லை ஆனால் சாரதா பிடிவாதமாக இருக்கும் பொது என்ன செய்யமுடியும் . அமைதியாக இருக்கும்படி கூறினார் .
பரிகாரம் செஞ்சா எல்லாம் செரியாயிடுமான்னு கொஞ்சம் பார்த்து சொல்லுங்க? என்றார் சாரதா . அவருக்கு மட்டும் மகள் நன்றாக சந்தோசமாக வாழவேண்டும் என்ற ஆசை இருக்காதா .
அதெல்லாம் ஒரு பிரச்சனையுமில்ல . நல்ல ஒத்துமையா வாழ்வாங்க . கண்டிப்பா புத்திர பாகியம் இருக்கு என்ன கொஞ்ச தள்ளி போயிருக்கு அவ்வளவு தான் .  
அடுத்து சந்தீப் சுபியின் ஜாதக பொருத்தம் பார்த்தனர் . ஜாதகம் நன்றாக பொருந்தி இருப்பதாக ஜோதிடர் கூறினார் . சாரதா இதுலையாவது தனக்கு இந்த திருமணத்தை நிறுத்த சந்தர்ப்பம் கிடைக்காத என்று காத்திருந்தார்.
பொண்ணுக்கு மாங்கல்ய பலம் எப்படி இருக்கு என்றார் சித்ராவை ஒரு பார்வை பார்த்தபடி அதில் சித்ரா மிகவும் கலங்கி போனார். இன்னும் இந்த திருமணம் முடியும் முன்னே என்னேனே குத்தல் பேச்சு கேட்க வேண்டுமோ என்றிருந்தது . 
பாலாஜிக்கு அவர் பேச்சு எரிச்சலை கொடுத்தது அவரிடம் நேரடியாக எதுவும் கூறமுடியாமல் சந்தியாவை உக்கிரமாக பார்த்து வைத்தான். சந்தியாக்கு தான் அய்யோ என்றிருந்தது . இந்தம்மா என்னை திட்டு வாங்கவைக்கமா ஓயமாட்டாங்க போலிருக்கே என புலம்பிக்கொண்டிருந்தாள் .
சுபிக்கு பாலாஜியை போல் எந்த தயக்கமும் இல்லை . தன் முன்னே தன் தாயை ஒருவர் இகழ்ச்சியாக பார்ப்பதா என்று கோவத்தில் அவள் முகம் சிவந்துவிட்டது . சித்ராவும் சந்தீப்பும் அப்பொழுது சுபியின் சிவந்த முகத்தை தான் பார்த்துக்கொண்டிருந்தனர் . 
இந்த சாரு ஆன்ட்டி ரொம்ப ஓவரா தான் போறாங்க. கேட்க ஆளு இல்லனு நினைச்சாங்களா இன்னைக்கு இவங்கள நல்ல கேட்டுவிடப்போறேன் என்று பொங்கி எழுந்த நேரம் சித்ரா அவள் கையை அழுத்தி குடுத்து வேண்டாம் என்று அவளை அடக்கினார் .
இதை பார்த்த சந்தீப்பின் மூளைக்குள் மணி அடித்தது ஆஹா கல்யாணத்துக்கு முன்னாடியே மாமியார் மருமக சண்டை ஸ்டார்ட் ஆயிடும் போலிருக்கே சீக்கிரம் எதாவது பண்ணுடா சந்தீப் என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவன் தன் அப்பாவை பேசுமாரு ஜாடை செய்தான் . அவனுக்கும் தன் அன்னை இவ்வாறு செய்வதில் வருத்தமே ஆனால் தான் இப்பொழுது எதாவது சொன்னால் அது மேலும் சிக்கலை உண்டாக்கும் . எந்தவித தடையுமின்றி இரண்டு திருமணமும் நடக்கவேண்டும் என்று விரும்பினான் . 
கிஷோர் ” சாரு அது தான் ஜாதகம் நல்ல பொருந்திருக்குனு சொன்னாரே மா அப்புறம் என்ன தனி தனியா கேட்டுட்டு இருக்கே ” 
உங்களுக்கு ஜாதக விஷமெல்லாம் என்ன தெரியும் இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி நல்ல பார்த்தரனும் என்று அவரை அடக்கி விட்டு, பொண்ணுக்கு புத்திர பாக்கியம் எப்படி இருக்கு ? இவங்களுக்கும் எதாவது பரிகாரம் பண்ணனுமா ? என்றார் ஜோசியரை பார்த்து .
அதெல்லாம் ஷேமமா இருக்கு . அடுத்த வருஷமே நீங்க பாட்டி ஆகப்போறீங்க . கவலையேபடாதீங்க .
சந்தீப்பின் மனத்திலோ ” இதுக்கு எதுக்கு அவரை கேட்கணும் நானே சொல்வேனே கண்டிப்பா என்னோட பர்ஸ்ட அன்னிவெர்சரி என் குழந்தையோட தான் கொண்டாடுவேன்னு “
சுபியின் மனதிலோ ” இந்த ஜோசியரை பொருத்தம் பார்க்க சொன்னா அடுத்தவங்க பேமிலிக்கு இவரே  பிளானிங் பண்ணிடுவார் போலிருக்கு . நானே ஒரு குழந்தை அதுக்குள்ளே எனக்கு ஒரு குழந்தையா. முதலில் புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வேணும் அதுக்கு அப்புறம் தான் குழந்தையை பத்தி யோசிக்கணும் “.
இப்படி இருவரும் எதிர்மறையாக எண்ணி கொண்டிருக்கே யாருடைய எண்ணம் ஈடேறுமோ தெரியவில்லை .
– தொடரும்  

Advertisement