Advertisement

                                                     காதல் அணுக்கள்
சென்னை தாம்பரம் பகுதியில் நடுதர வர்கதினர் குடியிருகும் இடம் அது. அங்கு ஒரு வீட்டில் காலை நேர பூஜை நடைபெற்று கொண்டிருந்தது. சித்ரா வை நிம்மதியாக பூஜை செய்யவிடாமல் இருவர் தொல்லை செய்து கொண்டிருந்தனர் . ஒன்று கிட்சனினில் இருந்த குக்கர் மற்றொன்று அவரது செல்ல மகள் சுபலக்ஷ்மி. எல்லோராலும் சுபி என்று செல்லமாக அழைக்கப்படுபவள்.
அம்மா என்னோட ஐ .டி கார்டு எங்கே ? எனக்கு ஆஃபீஸ்க்கு லேட் ஆச்சு. கொஞ்சம் சீக்கிரம் தேடி குடும்மா
சித்ரா அவசரமாக கிட்சேனுக்குள் சென்று மற்றொரு விசில் வரும் முன் அடுப்பை அனைத்து குக்கரை இறக்கி வைத்தார்.
ஏண்டி நீ ஸ்கூல் போற காலத்தில் இருந்து இதே வேலையா போச்சு. எடுத்த பொருள் எடுத்த இடத்துல வெச்சா தானே கிடைக்கும் . இந்தா உன் ஐ.டி கார்டு . நிம்மதியா  என்னை சாமி கும்பிட விடுறையா இப்போ .
அம்மா உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் என்று முகத்தை சீரியஸ்யாக வைத்து கொண்டு கூறவும் என்னவோ ஏதோ என்று அவள் அருகில் வந்தார் .
நேத்து நைட் என் கனவுல சாமி எல்லாம் கியூ கட்டி வந்து ஒரே புலம்புல். இந்த சித்ரா இப்படி விடாம எங்களை வேண்டிட்டே இருந்தா எப்படி? எங்களும் ஒரு பிரேக் வேண்டாமா? நாங்களும் நாலு இடம் போகவேன்டாமா? கொஞ்சம் அவளுக்கு எடுத்து சொல்லுனு சொன்னாங்கமா
அடி கழுதை என்று அவள் காதை திருகியிருந்தார் . ஆ அம்மா வலிக்குது மா என்று கத்திகொண்டு இருந்தால் . அப்போது ஆபத்பாண்டவன் போல் அவளுடைய  அண்ணண் பாலாஜி சித்ராவின் மொபைலுக்கு அழைத்திருந்தான் .
பாலாஜி கெமிக்கல் அண்ட் பெட்ரோலியம் இன்ஜினியரிங் முடித்து விட்டு மும்பையில் ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறான் . நல்ல பதவி கை நிறைய சம்பளம் என்று அவன் ஒரு வெள் செட்டில்டு மேன் ஆக இருந்தான் .
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தாயிற்கும் தங்கைக்கும் பேசி விடுவான் . இன்றும் அது போலவே அழைத்திருந்தான் . சித்ரா அட்டென்ட் செய்து ஸ்பீக்கர் ஆன் செய்தார் .
அம்மா எப்படி இருக்கீங்க ? சுபி எப்படி இருக்கா ? ஆபீஸ் போயாச்சா ?
அவளுக்கு என்ன . வீட்ல ஒரு வேலை செய்யாம என்ன வம்பிழுத்துட்டு இருக்கா . அது தான் நாலு குடுத்துட்டு இருந்தேன் கரெக்ட நீ கால் பண்ணிட்டே .
எந்த வேலையும் பாதில விடக்கூடாதுனு நீங்க தானே சொல்லிருகீங்க . அதுவும் இது ரொம்ப முக்கியமான வேலை நீங்க முடிச்சுட்டு கால் பண்ணுங்க என்றான் .
டேய் அண்ணா . துரோகி . சுபி சட்டேன்று ஸ்பீக்கர் ஆப் செய்துவிட்டு . சற்று விலகி சென்று தன் அண்ணனிடம் ” இருடா உன் ஆளு கிட்ட உனக்கு மும்பையில் 4 கேர்ள் பிரெண்ட்ஸ் இருக்காங்க . நீ அவங்க கூட ஜாலியா ஊரு சுத்திட்டு இருக்க. இப்படி பல பிட்டு போடட்டுமா “
மனதுக்குள் அலறியவன் , அச்சோ கோச்சிகிட்டியா குட்டி அண்ணா சும்மா சொன்னேன் டா . அண்ணன் பாவம் டா . என் வாழ்க்கையில் எதாவது கொழுத்தி போட்டுறாதே டா என்று சரண்டர் ஆனான் .
ஹ்ம்ம் இப்போ இதே மாடுலேஷன்ல அம்மாகிட்ட எனக்காக பேசு .
சித்ரா அவளுக்கு லுஞ்சு பாக்ஸ் பேக் செய்தவர் . அதை அவள் கையில் திணித்து விட்டு “என்னடி அண்ணனும் தங்கையும் ரகசியம் பேசுறீங்க ” என்று போனை  வாங்கி ஸ்பிகேரில் போட்டார் .
பாலாஜி “அம்மா அவ சின்ன பொண்ணுமா. விளையாட்டுக்கு எதாவது சொல்லிருப்பா .அவளை ஒண்ணும் சொல்லாதீங்க ”
அடிப்பாவி என்று சுபியை பார்த்தார் . அவள் பெருமையாக தன் காலர் இல்லா குர்தியை தூக்கிவிடுவது போல் செய்கை செய்தாள். பின் நேரம் ஆவதை உணர்ந்து .
பை டா அண்ணா . அம்மா போய்ட்டுவரேன் என்று  தன் ஸ்குட்டி சாவியை எடுத்து கொண்டு வெளியே வந்தவளின்  கண்கள் நல்ல மார்டனாக பெரிதாக கட்டப்பட்ட எதிர்வீட்டை நோக்கி பாய்ந்தது பின் அங்கே ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்ட புல்லேட் மீது நிலைத்தது .  ஒரு ஏக்க பார்வையும் ,பெருமூச்சும் அவளை அறியாமலே வெளிப்பட்டது . இது தினமும் நடக்கும் கதை .
அந்த புல்லெட்டை பார்க்கும் போதெல்லாம் அவன் உயரமும் ,ஸ்டைலாக அதை அவன் ஓட்டும் விதமும் ,காற்றில் பறக்கும் அவனது அலை அலையான கேசமும் அவள் நினைவுகளில் வந்து இம்சிக்கிறது .
பழைய நினைவுகளை பின்னுக்கு தள்ளி தாம்பரம் ரயில்நிலையம் நோக்கி விரைந்தது அவள் ஸ்குட்டி .
– தொடரும்

Advertisement