Advertisement

காதல் அணுக்கள் – 9
சுபியின் நிலையை கண்டு மது சட்டென அவளுக்கு கொஞ்சம் தண்ணீர் தந்து அவளை தேற்றினாள் . என்னாச்சு சுபி எதுக்கு இப்போ அழுகுறே ? அவளிற்கு வார்த்தையால் பதில் சொல்லமுடியாமல் மானிட்டரை காணும்படி செய்கை செய்தாள் .
அந்த ஈமெயில் இருந்த புகைப்படமும் வாழ்த்துக்களும் மதுவை கோபம் மற்றும் குழப்பமாகியது . அன்று அவளும் கீர்த்தியின் திருமணத்திற்கு வந்திருந்தாள் . அவளுக்கு நன்கு தெரிந்தது இந்த புகைப்படம் அங்கு தான் எடுக்க பட்டுள்ளது . அவளுடைய குழப்பம் யாதெனில் இந்த சதியில் கோகுலிற்கு பங்கு உள்ளதா இல்லை அவனும் இதில் சிக்கிகொண்டுளான என்பது தான் .
அதற்குள் டீமில் இருக்கும் சில வம்பர்கள் அவள் கியூபிற்கு வந்து அப்புறம் சுபி எப்போ ட்ரீட் தரப்போற . எங்கேஜ்மெண்ட்க்கு தான் எங்களை இன்வைட் பண்ணலே . மேரேஜ்க்கு அட்லீஸ்ட் இன்வைட் பண்ணுவியா.
நீ பண்ணலேன்னா என்ன நாங்க கோகுல்கிட்ட டைரக்டா கேட்டுக்குறோம். அவன் நம்ப பைய தான் .
அவர்கள் பேசுவதை கேட்க கேட்க எரிச்சலாக வந்தது . இது தான் அழுது கரையும் நேரமில்லை என்பதை உணர்ந்து வந்த அழுகையை அடக்கிக்கொண்டு . நீங்க நினைக்குறே மாதிரி எல்லாம் எதுவுமில்லை . என் பிரெண்ட் மேரேஜ்ல கோகுலை பார்த்தேன் அப்போ சும்மா ஹாய் சொன்னேன் அதை எந்த கிறுகோ இப்படி போட்டோ எடுத்து பார்வேர்ட் பன்னிட்டு இருக்கு .
இன்னும் கொஞ்ச நல்ல எனக்கு உண்மையான எங்கேஜ்மெண்ட் நடக்கும் அப்போ கண்டிப்பா உங்க எல்லாரையும் இன்வைட் பண்றேன் .
அங்கே கேன்டீனில் கோகுல் பாவமா முகத்தை வைத்து கொண்டு சுபி மற்றும் மதுவின் முன்னாள் அமர்ந்திருந்தான் .
எப்படி நடந்துச்சுனே தெரியலீங்க சுபி . காலையிலே இருந்து வரவன் போறவன் எல்லாம் வாழ்த்து சொல்லிட்டு போறானுங்க . நானும் எங்க டீம்மேட்ஸ்கிட்ட கால்ல விழாத குறையா அப்படி எல்லாம் ஒன்னுமில்லடான்னு சொல்லி பார்த்துட்டேன் எவனும் நம்ப மாட்டிங்குறான் .
மது மனதினில் இவன் என்ன 5 ரூபாய்க்கு நடிக்க சொன்ன 5000 ரூபாய்க்கு நடிப்பான் போலிருக்கே . சம்திங் பிஷியி என்று சுபியின் முகத்தை பார்த்தாள். சுபியோ கொஞ்சம் கூட சமாதானம் ஆகாமல் அவனை முறைத்த வண்ணமிருந்தாள்  .
 சுபிக்கிட்ட உன் பப்பு வேகலை டா தம்பி . உங்க நடிப்புல எமோஷன் பத்தலே சார். இன்னும் கொஞ்சம் எமோஷன் ப்ளீஸ். கம் ஆன் உ கேன் டூ இட்  என்று மனதுக்குள் மது கவுன்டர் கொடுத்துக்கொண்டிருந்தாள் .
நாளைக்கு பொண்ணு வீட்டுலயோ மாப்பிள்ளை வீட்டுலயோ நம்மள பத்தி ஆபீஸில் விசாரிச்சா என்ன நடக்கும்னே தெரியலையே . நானாவது பரவாயில்லை பையன் . உங்கள நினைச்சான் தான் சுபி எனக்கு கஷ்டமா இருக்கு என்றான் .
என்னைப்பத்தி கவலை படாதீங்க கோகுல் . இப்படி ஒரு அற்ப விஷயத்துக்கெல்லாம் கேள்வி கேக்குறவனையோ சந்தேகப்படுறவனையோ நான் லைப் பார்ட்னர் சூஸ் பண்ணமாட்டேன் .
சுபி சொன்ன பதிலிலும் இந்த விஷயத்தை அவள் சாதாரணமாக எடுத்து கொண்ட விதத்திலும் அவன் முகம் பியூஸ் போன பல்பு போல இருந்தது .
தன்னுடைய பர்சனல் ஈமெயில் ஐடியிலிருந்து தன் டீமில் உள்ள ஒரு ஆல் இந்தியா ரேடியோவிற்கு அனுப்பிவிட்டான் . கோகுல் எதிர்பார்த்ததை போல் அவன் ஆபீஸ் முழுவதும் பரப்பி விட்டிருந்தான் .
சுபி எப்படியும் அழுது கரைவாள்  நாம் ஆறுதலாக இருப்பது போல் பேசி அவளை கல்யாணத்திற்கு சம்மதம் வாங்கிவிடலாம் என்று நினைத்திருந்தான்.
கீர்த்தியின் மூலம் சபியின் குடும்பத்தை பற்றி விவரம் தெரிந்துகொண்டான் . அப்பர் மிடில் கிளாஸ் மக்கள் பிறரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும்  பயப்படுவார்கள் . எனவே அதை வைத்தே அவளை கார்னர் செய்துவிடலாம் என்ற நப்பாசையில் இருந்தான் . ஆனால் சுபியை பற்றி அவன் தப்பு கணக்கு போட்டுவிட்டான் .
தான் பட்ட கஷ்டம் தன் மகள் படக்கூடாது என்றே சித்ரா எல்லா வகையிலும் சுபியை தைரியசாலியாகவே வளர்த்தார் . தன் வீட்டில் ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் எல்லாவற்றிலும் சமம் என்றே நினைத்தார் நடத்தினார். அந்த துணிவே சுபியை இன்று இந்த சூழலை எதிர்கொள்ள உதவியது .
கோகுலை நிதானமாக ஏறிட்டவள் அதெல்லாம் இருக்கட்டும் இந்த போட்டோ கீர்த்தி கல்யாணத்துல தான் எடுத்துருக்காங்க . நம்ப ஆஃபிஸில் இருந்து எனக்கு தெரிஞ்சு நீங்க மட்டும் தான் அங்கே இருந்தீங்க . அப்புறம் யார் நம்ம இரண்டு பேரை போட்டோ எடுத்து உங்க டீம்மேட்க்கு கரெக்டா அனுப்பிருக்காங்க என்று பிரச்சனையின் நுனியை பிடித்தாள் .
கோகுல் கொஞ்சம் கூட அசராமல் அது தான் எனக்கும் தெரியலே சுபி . நம்ப ஆஃபிஸில் எத்தனை பேர் ஒர்க் பண்ணுறாங்க . எல்லாரையுமா நமக்கு தெரியும் . யாராவது எடுத்து அனுப்பியிருக்கலாம் .
ஹ்ம்ம் நீங்க சொல்றது போலவும் நடந்திருக்கலாம் . அந்த ஈமெயில் ஐடி கொஞ்சம் குடுங்க நான் சைபர் க்ரைமில் கம்பளைண்ட் குடுக்கறேன் .
அதில் கொஞ்சம் சுதாரித்தவன் ” சரி சுபி கண்டிப்பா குடுக்கலாம் . என்ன அங்க போன அடிக்கடி நம்மளே வரச்சொல்லி தொந்தரவு பண்ணுவாங்க , ஆஃபிஸில் வந்து விசாரிப்பாங்க அது தான் கொஞ்சம் யோசனையா இருக்கு . எங்க அம்மாகிட்ட கூட நடந்தது சொன்னேன் . ரொம்ப வருத்தப்பட்டாங்க . உன்னாலே ஒரு பொண்ணுக்கு கஷ்டம் வரக்கூடாது தம்பி . நான் வேணும்னா அந்த பொண்ணு வீட்லே பேசுறேன் . எப்படியும் உனக்கு பொண்ணு பாத்துட்டு தானே இருக்கோம் . கடவுள் உனக்கு இப்படி முடிச்சு போட்ருக்காரோ என்னவோன்னு ரொம்ப கலங்கி போய் பேசுனாங்க ” என்று நைசாக தன் மேல் சந்தேகம் வராதபடி ஒரு பிட்டை போட்டான் .
மது “லங்கூர் ஏன்டா லெஹங்கா போட்டு டான்ஸ் அடுத்தேன்னு நினைச்சேன் இதுக்கு தான . டேய் மங்கூஸ் மண்டையா இருடா உனக்கு ஆப்பு காத்துட்டிருக்கு சுபி வீட்டாளுங்ககிட்ட “
எனக்காக வருத்தப்பட்டதுக்கு உங்க அம்மாகிட்ட  தேங்க்ஸ் சொல்லிடுங்க அதே நேரம் வருத்த படுற அளவுக்கு இது ஒன்னும் பெரியவிஷயமில்லனும் சொல்லிடுங்க  என்றால் தெளிவாக.
ஓகே கோகுல் அப்புறம் பாக்கலாம் மறக்காம எனக்கு அந்த ஈமெயில் ஐடி  அனுப்பிவிடுங்க .
சற்று நேரம் தனது பணியை செய்தவள் மதியத்திற்கு மேலே வீட்டிற்கு கிளம்பிவிட்டாள் . அதுவரை தைரியமாக இருந்தவள் வீட்டில் தன் தாயை பார்த்தவுடன் இதற்குமேல் முடியாதென தொண்டை அடைக்க ஒரு கேவலுடன் அழுகைக்கு மாறினாள் .
மகள் நேரமே வீடு வந்ததும் .பின் வந்ததும் வராததுமாக இப்படி அழுவதும் ஒரு வயது பெணின் தாயாக பதற்றம்கொள்ள வைத்தது .
என்னடி என்னாச்சு எதுக்கு இப்போ இப்படி அழுகுறே . இப்போ சொல்ல போறியா இல்லையா என்று சத்தம் போட்டவுடன் அவர் சத்தம் கேட்டு சித்ராவுக்கு உதவியாக இருந்த சந்தீப்பும் பாலாஜியும் போடிக்கிலிருந்த  என்னமோ ஏதோவென வீட்டிற்குள் நுழைந்தனர் .
அங்கே அவர்கள் கண்டது தாயின் வயிற்றில் முகம் புதைத்து குழந்தையை போல் அழுது கொண்டிருந்த சுபியை தான் .
சித்ரா அவளை பிடித்து உலுக்க பின் அன்று கல்யாணத்தில் கோகுலை சந்தித்தது பின் இன்று ஆஃபிஸில் ஈமெயில் வந்தது அதை தொடர்ந்து மற்றவர்கள் பேசியது கடைசியாக கோகுல் பேசியது என அனைத்தும் கூறினாள் .
அதை கேட்ட சந்தீப்பும்  பாலாஜியும் அவன் மட்டும் என் கையிலே சிக்குனான அவ்ளோ தான் என்று மனதினில் பொருமிக்கொண்டிருந்தனர் .
அனைத்தையும் கேட்டு முடித்த சித்ரா உன் மேல எவனோ கரிய பூசப்பார்த்துருக்கான் அவனை ஒரு வழி செஞ்சுட்டு வராம இப்படி வந்து அழுதுட்டு இருக்கே . முதலில் முகத்தை துடை .
சட்டென முகத்தை துடைத்தவள் காலையில் இருந்து சாப்பிடாதது பின் ஏற்பட்ட மன அழுத்தம் அதை தாயிடம் இரக்கி வைத்தது என எல்லாம் சேர்ந்து காலையிலிருந்து வருவேனா வருவேனா என்று இருந்த தலைசுற்றலும் மயக்கமும் வந்து தாயின் மீதே மயங்கி சரிந்தாள் .
பதட்டமடைந்த பாலாஜி அவளை சோபாவில் சாய்த்து படுக்கவைத்தான். அதற்குள் சந்தீப் தண்ணீர் கொண்டுவந்திருக்க அவள் முகத்தில் தெளித்தான் . மெல்ல கண்ணுமுழித்தவள் சந்தீப்பையும் பாலாஜியையும் அப்பொழுது தான் கவனித்தாள் . இவங்க இரெண்டுபேரும் எப்போ வந்தாங்கனு தெரியலயே.
எல்லாம் கேட்டுட்டாங்களா என்று யோசித்து கொண்டிருந்தாள் .
ரொம்ப யோசிக்காதே நானும் பாலாஜியும் எல்லாம் கேட்டோம் . யாரோ என்னமோ சொன்னாங்கன்னு நீ இப்படி அழலாமா ? நீ தான் அத்தைக்கு தைரியம் சொல்லணும் அதை விட்டுட்டு அவங்களையும் சேர்த்து பயப்படுத்திட்டு இருக்கே ?
அவன் சொன்ன பின்னே தான் அனாவசியமாக தாயை டென்ஷன் பணிவிட்டோம் என்று வருந்தினாள் . இன்று பாலாஜி இருக்க போய் பரவாயில்லை இல்லையென்றால் தானும் மயங்கி விழ அவர் தனியாக என்ன செய்வார் பாவம் . அந்த பயத்தின் வெளிப்பாடாய் பாலாஜியை பார்த்து அண்ணா பேசாம நீ சென்னைக்கே வந்துடு . ப்ளீஸ் .
சுபி எந்த அளவு பயந்திருக்கிறாள் என்று இதுவே காட்டி கொடுத்தது . அவள் தலையை மெல்ல வருடியவன் ஆமா சுபிக்குட்டி நானும் அது தான் யோசிக்குறேன் . சீக்கிரமா ட்ரான்ஸபெர் வாங்கிட்டு வந்திடுறேன் சரியா.
அதற்குள் சித்ரா தட்டில் சாதத்தை போட்டு கொண்டுவந்தார் . முகத்தை பாரு எப்படி வாடி இருக்குனு. காலையில் இருந்து ஒன்னும் சாப்பிடாம கொள்ளாம இருந்துருக்கா அது தான் இப்படி மயங்கி விழுந்துருக்க என்று தலையில் ஒரு கொட்டு வைத்து ஊட்டிவிட்டார் .
நாலுவாய் உள்ளே போனதும் தான் சுபிக்கு கண்ணே தெரிந்தது. அம்மா வாழைக்காய் வறுவல் எனக்கு பிடிக்காதுன்னு தெரியுமில்ல பின்ன ஏன் மா அதை உட்டுறே . ஒரு உருளை வறுவல் பன்னிருக்கலாமில்ல என்று இயல்புக்கு மாறினால் சுபி .
அதுவரை அனைவர்க்கும் இருந்த இறுக்கம் தளர்ந்தது . லேசாக புன்னகை கூட பூத்தது . காலையிலிருந்து சாப்பிடவே இல்லனாலும் உன் நாக்கு மட்டும் அடங்காமாட்டிங்குது. இந்த தண்ணியை குடிச்சுட்டு எதுவும் யோசிக்காம போய் கொஞ்சநேரம் படுத்து ரெஸ்ட் எடு .
சித்ரா இனி சுபியின் திருமணத்தை தள்ளிப்போடுவது தவறு நாளையே கிஷோரிடம் இது குறித்து பேசி நாள் குறிக்கவேண்டும் என்று முடிவெடுத்தார்
சித்ரா பாலாஜியிடம் தனியே பேசுவதற்காக அவனை கிட்சனில் மேலிருந்து ஒரு டப்பா எடுத்து தரும்படி கூறி அழைத்து சென்றார்.
எந்த டப்பாமா என்று கிட்சனுள் நுழைந்தவனிடம் தன் மனதில் உள்ள எண்ணத்தை சொல்லி அவன் ஊர் திரும்பும் முன் இருவரது கல்யாண நாளையும் குறிக்கவேண்டும் என்றார் .
பாலாஜிக்கும் அதுவே சரியென பட்டது . சரிம்மா நாளைக்கே நல்ல நாள் பார்த்திருவோம் . நான் இன்னும் 3 நாளில் கிளம்பனும் . அதுக்குள்ள எல்லாம் பேசி முடிச்சிரலாம் .
அவர்கள் அந்த பக்கம் சென்றவுடன் . சந்தீப் சுபியை பார்த்து ஒய்  ஏன் காலையில் இருந்து சாப்படலே ?
ஹ்ம்ம் உன்னாலே தாண்டா என்று மனதுக்குள் நினைத்தவள் லேட் ஆயிடுச்சு என்று வெளியில் சொன்னாள் .
ஆஃபிஸில் லஞ்ச் டைம் எப்போ ? ஆபீஸ் கேண்டீனிலே சாப்பிடுவியா இல்ல ஹோமோ லஞ்ச் கொண்டுபோவியா ?
நீங்க ஐ டி வேலை ரிசைன் பன்னிட்டு போலீசில் ஜாயின் பண்ணிடீங்களா ? இவ்ளோ கேள்வி கேக்குறீங்க ?
ஹ்ம்ம் எல்லாம் உனக்கு அறிவிருக்க இல்லையானு டெஸ்ட் பண்ணத்தான் ?
அவன் பதிலில் கோவமுற்றவள் நீ யாரு என்ன டெஸ்ட் பண்ண ? நான் சாப்பிட்டா  என்ன சாப்பிடலைனா உனக்கென்ன ? என்று கோவத்தில் வார்த்தையை விட்டாள் .
ஹ்ம்ம் நான் உனக்கு யாருனு நாளைக்கு சொல்றேன் ? ஆன இப்போ நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு?
அதெல்லாம் சொல்ல முடியாது என்ன செய்வ என்றொரு பார்வை பார்த்தாள் .
அவனும் சளைக்காமல் ஊடுருவும் பார்வை பார்த்தான் . அதற்கு மேல் அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் மெதுவாக அவன் கேள்விக்கு பதில் அளித்தாள் .
ஹ்ம்ம் இப்போ வீட்டுலே மயக்கம் போட்டு விழுந்தியே இதே மாதிரி வர வழியே எங்காவது விழுந்திருந்த என்ன ஆகிருக்கும்னு யோசிச்சு பாத்தியா ?
எல்லாரும் நல்லவங்களா இருக்கமாட்டாங்க நீ விழுந்த உடனே ஹெல்ப் பன்னுறதுக்கு . கேட்டவர்களுக்கு நாம தான் சான்ஸ் அமைச்சு கொடுக்காம பாத்துக்கணும் .
அவன் சொன்ன உண்மை புரிந்தாலும் அவனிடம் பணிந்து போக விரும்பாமல் தோளை மட்டும் குலுக்கி தனதறைக்கு சென்று மெத்தையில் விழுந்தவளை தூக்கம் அரவணைத்து கொண்டது .
போடி போ உங்கண்ணன் உனக்கு ரொம்ப தான் செல்லம் குடுத்து வெச்சுருக்கான் . உன்னை மெதுவாத்தான் வழிக்கு கொண்டுவரமுடியும் .
மறுநாள் சுபி வழக்கம் போல் அலுவலகம் சென்றால் . மனது சற்று தெளிவுடன் இருந்தது . தன் வேலையில் கவனம் செலுத்தி தனது மாடியுளை முடித்தாள் . மது வந்து லஞ்ச் டைம் என்று கேன்டீன் இழுத்து சென்றாள் .
அவர்கள் கேன்டீன் நுழைந்ததும் அனைவரும் தன்னையே பார்ப்பது போல் தோன்றியது சுபிக்கு . இதெல்லாம் சீக்கிரம் சரியாகாத என்று இருந்தது . அவர்கள் அமர்ந்திருந்த மேஜையில் இருந்து இரண்டு மேஜை தள்ளி தான் கோகுலும் அவன் நண்பர்களும் அமர்ந்திருந்தனர் . சுபி அவர்களை கடந்ததும் கோகுலை சுபியுடன் இணைந்து ஒடி கொண்டிருந்தனர் . அங்கே ஒரே சிரிப்பலை . கோகுலும் அதற்க்கு வெட்கபட்டுக்கொண்டு அவர்கள் கிண்டலை ரசித்து கொண்டிருந்தான் .  
சபிக்கும் மதுவிற்கும் எரிச்சலாக இருந்தது . அதை பொருட்படுத்தாமல்  காட்டிக்கொண்டனர் . சில நிமிடங்களில் அவர்களின் அருகில் செம ஸ்டைலாக டிரஸ் செய்துகொண்டு ஒரு மயக்கும் புன்னகையுடன்                           சந்தீப் வந்து நின்று சுபிக்கு அதிர்ச்சியை கொடுத்தான் .
இவன் இங்க என்ன பண்ணுறான் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே . சாரி பேபி கொஞ்சம் லேட் ஆயிடுச்சு என்று உரிமையுடன் அவள் தோளில் காய் போட்டு கண் சிமிட்டினான் . இதை பார்த்து கொண்டிருந்த மதுவிற்கு வாவ் என்று தோன்றியது என்றால் கோகுலுக்கோ சென்னை வெயிலில் தவிட்டு ஒத்தடம் கொடுத்ததை போல் உடம்பெல்லாம் எரிந்தது .
– தொடரும்
                   

Advertisement