Advertisement

காதல் அணுக்கள் – 6
பெற்றோர் இருவரும் சந்தீப் கூறிய செய்தியில் அதிர்ச்சியில் இருந்தனர். கொஞ்சம் பழமைவாதியான சாராதவால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தன் பெண் தன்னுடைய நம்பிக்கையை பொய்த்துவிட்டால் என்றே தோன்றியது. கிஷோர் காதலுக்கு எதிரி இல்லையென்றாலும் ஒரு பெண் பிள்ளையின் தந்தையாய் கலங்கித்தான் இருந்தார்.
பார்த்தீங்களா பிரெண்ட் குடும்பம்னு ஓடி ஓடி போய் உதவி செஞ்சிங்களே , இப்போ நமக்கு எப்படி ஒரு துரோகத்தை பன்னிருக்கான் பாருங்க என்று ஆவேசமாக பேசினார்.
தன்னை ஏதேனும் திட்டியிருந்தால் கூட பொறுத்து போயிருப்பாள் ஆனால் தன் அன்னை பாலாஜியை துரோகி என்று கூறியதை அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
அம்மா இதில் அவர் தவறு ஒண்ணுமில்லை. நான் தான் என் விருப்பத்தை அவரிடம் சொன்னேன். என்னாலே அவரை தவிர வேறு யாரையும் கல்யாணம் பணிக்கமுடியாது.
எப்படி திமிரா பேசுறா பாருங்க . ஏன் நீ போய் சொன்னா எங்ககிட்ட வந்து சொல்லவேண்டியது தானே அதைவிட்டு இது தான் சாக்குன்னு லவ் பன்னிடுவானோ ?
அம்மா சந்தியா அவன்கிட்ட சொன்னதும் அவன் முதல்ல என்கிட்ட தான் சொன்னான். எனக்கு பாலாஜி விட சந்தியாக்கு மாப்பிள்ளை அமையும்ன்னு நம்பிக்கையில்லா. நல்ல குணம், படிப்பு, கை நிறைய சம்பாதிக்கிறான் . சித்ரா அத்தை பத்தி சொல்லவே வேண்டாம் சந்தியாவை நல்ல பாத்துக்குவாங்க. தெரியாத இடத்துலே அவளை குடுத்துட்டு எப்படி இருக்காளோ என்னனு பயப்படுறதவிட இது எவ்வளவோ பெட்டர் .
கேக்குறவங்க என்ன நினைப்பாங்க ? நம்ம சாதி சனம் எல்லாம் நம்மள தப்பா பேசாது ?
இன்னும் எவ்ளோ நாள் அவங்களுக்காக நாம வாழமுடியும்மா ? அவங்களுக்கு பயந்துட்டு விருப்பமில்லாத வாழ்க்கையை ஏத்துக்கிட்டு சந்தியா எப்படி சந்தோசமா வாழமுடியும் ? தினம் தினம் அவ தான் கஷ்டப்படுவா. அப்பா அம்மாக்கு எடுத்து சொல்லுங்க. உங்க பிரெண்ட் பையனுக்கு குடுக்குறதுலே என்ன பிரச்சனை?
சந்தீப் சொன்ன நிதர்சனத்தை உணர்ந்த கிஷோர் நாளை பாலாஜியிடம் பேசுவதாக கூறினார் .
அண்ணனும் தங்கையும் அதில் மகிழ்ச்சியுற்றாலும் தங்கள் அன்னையை மேலும் கோபமுறச்செய்ய வேண்டோம் என்று முகத்தில் எதையும் காட்டாமல் தங்கள் அறைக்கு சென்றனர்.
எங்க என்ன பேசிட்டு இருக்கீங்க அவளை ரெண்டு போடாம நீங்க என்னமோ அந்த பாலாஜிக்கிட்ட பேசுறேன்னு சொல்லிட்டு இருக்கீங்க ?
சாரதா நீ நிதர்சனத்தை புரிஞ்சுக்கோ. இதுக்கு மேல சந்தியா மனச மாதிக்குவான்னு எனக்கு நம்பிக்கை இல்லை. அப்படியே அவளை வற்புறுத்துனா அவ வேற எதாவது முடிவெடுத்துட்டா என்ன செய்ய ? எவளோ தீவிரமா இருக்கானு பார்ததன பாலாஜிய ஒரு வார்த்தை தப்பா பேசாவிட்டாலா உன்னை. அவளும் ஒன்னும் தப்பான பையனை லவ் பண்ணலியே இதுக்கு மேல நாம தான் அவளுக்கு புடிச்ச வாழ்க்கையை அமைச்சு கொடுத்து நம்ம மரியாதையை காப்பாத்திக்கணும்.
கணவன் கூற்றில் உள்ள உண்மையை உணர்ந்து அமைதிகாத்தார். இருந்தாலும் ஜாதக பொருத்தமாவது இருவருக்கும் பார்க்க வேண்டும் என்று மனதினில் நினைத்துக்கொண்டார்.
அறைக்கு வந்த சந்தீப் உடனே பாலாஜிக்கு அழைத்து வீட்டில் நடந்தவற்றை மேலாக கூறினான். டேய் மச்சான் அப்பா அம்மாவை உங்க லவ்வுக்கு தான் பேசி கன்வின்ஸ் பண்ணிருக்கோம் பட் அவங்க கல்யாணத்தை 4 மாசத்துக்குள்ள வெக்கணும்னு சொல்றாங்க சோ 2 யெர்ஸ் வெயிட் பண்ணுறதெல்லாம் ஒத்துக்க மாட்டாங்க டா. நாளைக்கு அப்பா உன்கிட்ட பேசுறேன்னு சொல்லிருக்காரு அது தான் உனக்கு ஒரு ஹெட்ஸ் அப் குடுக்கலாமேன்னு கால் பண்ணேன்.
எனக்கு என்ன பண்றதுனே தெரியல டா. சுபிக்கு நல்ல படியா கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் நான் பண்ணனும்னு இருந்தேன். நான் என் சொந்த பணத்துலே அவளுக்கு கல்யாணம் பண்ணனும்னு ஆசைப்படுறேன். அப்பா அம்மா அவ கல்யாணத்துக்குனு சேத்துனது அப்படியே அவ பேர்லே டெபாசிட் பண்ணலாம்னு இருக்கேன். நான் வேலைக்கு போக ஆரமிச்சு 3வருஷம் தான் ஆச்சு நெஸ்ட் இயர் எனக்கு ப்ரோமோஷன் கிடைச்சிரும்.  நல்ல ஹைக் கிடைக்கும். சோ நெஸ்ட் இயர் எண்டு சுபிக்கு மேரேஜ் பண்ணலாம்னு இருந்தேன்டா சந்தீப்.
உன் பிளான் எனக்கு புரியுதுடா பட் வீட்லே சிட்சுவேஷன் இப்போ வேற மாதிரி இருக்கு . நீ அப்பா கிட்ட பேசி பாரு பட் ஒத்துக்குவாங்கனு தோணலே. அத்தை கிட்ட எப்போ பேசலாம்னு இருக்கே ? அப்பா வந்து சொல்றதுக்குள்ள நீ சொல்லறதுதான் நல்லது.
ஹ்ம்ம் நாளைக்கு காலையிலே சொல்லிடுறேன் டா. சரி சந்தியா செகண்ட் கால்ல வரா நான் உனக்கு நாளைக்கு பேசுறேன். பை டா . குட் நைட் .
மறுநாள் காலை வழக்கம் போல சுபி தன் அறையில் இருந்து வந்து சோபாவில் உறங்கி கொண்டிருக்க பாலாஜி தான் வந்து அவளை எழுப்பினான்.
சுபி சீக்கிரம் ரெடி ஆகு நாம வெளிய போயிட்டு வரலாம் .
எதுக்கு டா அண்ணா காலங்காத்தால தூங்க விடாம எழுப்புறே? நான் தூங்கணும் போ .
உனக்கு ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் வாங்கி கொடுக்கலாம்னு நினைச்சேன். வேண்டாடி போ
கிபிட் என்ற வார்த்தையில் சுபிக்கு முற்றிலுமாக தூக்கம் பறந்து விட்டிருந்தது. என்னது கிப்ட் அஹ . ஒரு 10 மினிட்ஸ் நான் ரெடி அயிட்டு வரேன் என்று அரக்க பரக்க மாடிக்கு ஓடும் தங்கையை பார்க்க சிரிப்பாக இருந்தது.
எங்கேடா அண்ணனும் தங்கையும் காலையிலே புறப்பட்டுடீங்க ?
அம்மா நாம 3 பேரும் மால் போயிட்டு அங்கேயே சாப்பிட்டு வரலாம் . அப்படியே கிளம்ப ஆரம்பிங்க.
அதுசரி நீயே அங்க மும்பையில் வெளிய தான் சாப்புடுறே. இங்க வந்தும் எதுக்கு வெளிய சாப்பிடணும் .
அதெல்லாம் வேணாம் நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க நான் மீன குழம்பு செஞ்சு வெக்குறேன் வந்து இங்கேயே லஞ்ச் சாப்புடுங்க.
அம்மா எனக்கு பிஷ் பிரை என்றபடி வந்தாள் சுபி . பின் தன் தாய் கொஞ்சம் களைப்பாக தெரியவும் . வேண்டாம் இன்னைக்கு எனக்கு பிரை சாப்புடுறே மூட் இல்ல .
ஆனால் மகளின் மனது அவர் அறியாததா. சிரித்து கொண்டு டிபன் சாப்பிட்டு சீக்கிரம் போயிட்டு வாங்க . போகும் போது குடை எடுத்துட்டு போங்க . உன் தங்கச்சி சண்டே அதுவுமா இவளோ சீக்கிரம் எந்திரிச்சு கிளம்பிருக்கா
என்ன எதாவது சொல்லாட்டி உங்களுக்கு தூக்கமே வராதே என்றபடி பூரியை உள்ளே தள்ளி கொண்டிருந்தாள். பாலாஜியின் பைக் மும்பையில் இருந்ததால் சுபியின் ஸ்குட்டியில் இருவரும் மாலுக்கு சென்றனர்.
மாலிற்கு போகும் வழியில் நேற்று சந்தியா வீட்டில் நடந்தது மற்றும் கிஷோர் அங்கிள் இன்று தன்னை சந்திக்க உள்ளது அனைத்தும் கூறினான்.
அண்ணா பேசாம அம்மாகிட்ட சொல்லிடலாம். அம்மாக்கு தெரியாம கிஷோர் அங்கிளை  மீட் பண்றது சரியாய் படலே
ஹ்ம்ம் நீ சொல்றதும் கரெக்ட் தான். வீட்டுக்கு போன உடனே சொல்லிடுறேன். எப்படி ஆரம்பிக்குறதுனு தான் தெரியலே. அண்ணா எனக்கு உன் லவ் மேட்டர் தெரியும்னு அம்மா கிட்ட காட்டிக்காதே . அப்புறம் நாம ரெண்டு பேரும் சேர்ந்து அவங்ககிட்ட மறச்சிட்டோமேன்னு ரொம்ப வருத்தப்படுவாங்க.
நீ இந்த மாதிரினு சொல்ல ஆரம்பி நான் உனக்கு சப்போர்ட் ஆஹ் பேசுறேன். அம்மா எல்லாம் ஒதுக்குவாங்கனு தான் தோணுது பட் சாரதா ஆண்ட்டி தான் டவுட் ஆஹ் இருக்கு. அவங்களுக்கு நம்ப குடும்பத்து மேல பெருசா எந்த அபிப்ராயமுமில்ல. ஹ்ம்ம் பாத்துக்கலாம் விடு .
மாலில்  சுபிக்கு சில சுடி, குர்தி மற்றும் நீண்ட நாட்களாக ஆசைப்பட்டு கேட்டுக்கொண்டிருந்த ஸ்மார்ட்போனை வாங்கி கொடுத்ததும்  சோ ஸ்வீட் தேங்க்ஸ் டா அண்ணா என்றவள் முகம் சந்தோசத்தில் ஜொலித்தது.
இப்போ உன் கோவமெல்லாம் போயிடுச்சா. இப்படி சந்தோசமா இருந்த தானே பார்க்கறதுக்கு நல்லாயிருக்கு அதைவிட்டுட்டு முகத்தை தூக்கி வெச்சுகிட்டு என்று அவள் மூக்கை பிடித்து ஆட்டினான்.
இருந்தாலும் உனக்கு என்னைவிட உன் பிரென்ட் தானே முக்கியம் அதனாலே தானே நீ வரலே.
அது அப்படியில்லை சுபிக்குட்டி அவன் எனக்கு நிறைய ஹெல்ப் பன்னிருக்கான் நம்ம அப்பா இறந்தப்போ அவ்ளோ சப்போர்டிவ் ஆஹ் இருந்துருக்கான் . அப்படிப்பட்டவன் ஒரு சின்ன ஹெல்ப் கேட்கும் போது எப்படி முடியாதுனு சொல்றது. மத்தபடி எனக்கு எப்பவுமே நீ தான் முக்கியம் போதுமா .
அண்ணன் கூறியது கேட்டபின் அவன் செய்தது சரி என்றே தோன்றியது . ஹ்ம்ம் சரி சரி இவ்ளோ நேரம் நீ குடுத்த லெக்ச்சர் கேட்டு எனக்கு பசிக்கவே ஆரம்பிச்சிருச்சு வீட்டுக்கு போலாம் வா.
மாலில் இரு கண்கள் இவர்களையே ஆராய்ச்சி பார்வை பார்த்துக்கொண்டிருந்தது . யார் இவன் ? பாக்குறதுக்கு நல்ல ஹன்சமா இருக்கான். சுபி வேற சிரிச்சு சிரிச்சு ரொம்ப உரிமையா தொட்டு பேசிட்டு இருக்கா. நம்ம பிளானை நாளைக்கே எகஃசிக்கியுட் பண்ணிட வேண்டியது தான்.
மதிய உணவு முடிந்ததும் சுபி தன் அண்ணனிற்கு பேசும் மாரு ஜாடை செய்ய. சரி என்பதாய் தலை அசைத்தவன் .
அம்மா உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். சொல்லுப்பா . உங்களுக்கு என் மேல நம்பிக்கை இருக்கு தானே. நான் எந்த தப்பான முடிவும் எடுக்கமாட்டேனு நம்புறீங்க தானே. என்னப்பா பீடிகை எல்லாம் ரொம்ப பலமா இருக்கு. நான் ஒரு பெண்ணை விரும்புறேன். அவளை கல்யாணம் பண்ணிக்கனும்னு விரும்புறேன். நான் சுபிக்கு கல்யாணம் முடிச்சதும் தான் பண்ணிக்கலாம்னு இருக்கேன்.
ஒரு வேலை இவன் மும்பையில் எதாவது ஹிந்திக்கார பெண்ணை விரும்புறானோ. அந்த பொண்ணு நம்ம வழக்கத்துக்கு சரிப்படுமா ? சரி எந்த பெண்ணா இருந்தா என்ன ? வாழ்கை யாருக்கு எப்போ என்ன வெச்சுருக்குனே சொல்லமுடியாது அவன் வாழுற வாழ்கை அவன் விருப்பப்பட்ட பெண்ணோடவே அமையட்டும் .
சிறு அமைதிக்கு பின் பொண்ணு யாருப்பா ? உனக்கு எப்படி பழக்கம் ?
அம்மா நம்ம சந்தியாவை தான் லவ் பண்றேன். அவளும் தான்.
இதை கேட்டதும் மனதில் இருந்த பெரும் பாரம் நீங்கியதை போல் உணர்ந்தார். தான் பார்த்து வளர்ந்த பெண் நல்ல குணமும் கூட . தன் காலத்திற்கு பிறகு தன் மகளுக்கு நல்ல துணையாக இருப்பாள் என்று நிம்மதி கொண்டார் . அவர் முகத்தை வைத்தே அவருக்கு இதில் சம்மதம் என்று பாலாஜியும் சுபியும் உணர்ந்துகொண்டனர்.
சந்தியாக்கு மாப்பிள்ளை பார்க்கலாம்னு இருகாங்க . சந்தியா அவ வீட்லே சொல்லிட்டா . கிஷோர் அங்கிள் இதை பத்தி பேச வரேன்னு சொல்லிருக்காரு ஆனா எப்போன்னு தெரியலே .
இங்க பாரு பாலாஜி எனக்கு இதுலே சந்தோஷம் தான் ஆன ஒரு வேலை கிஷோர் அண்ணனுக்கு இதுலே விருப்பம் இல்லைனா என்னால எதுவும் பண்ண முடியாது அதுவும் நீ புரிஞ்சுக்கணும்.
இங்கே சந்தீப் வீட்டிலொ அனைவரும் ஒருவருக்கொருவர் அதிக பேச்சில்லாமல் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டிருந்தனர். சாரதா மகளை காணும் போதெல்லாம் ஒரு கண்டன பார்வை வீசிக்கொண்டிருந்தார். உன்னை இப்படியா வளர்த்தேன். எப்படி எல்லாம் சீரும் சிறப்புமாக கல்யாணம் செய்யணும்னு இருந்தேன். எங்க அக்கா பொண்ணு அண்ணன் பொண்ணுக்கெல்லாம் எப்பேர்ப்பட்ட இடத்துலே கல்யாணம் பண்ணிருக்காங்க . நான் மட்டும் இப்படி பொண்ணை கொடுத்தா நல்லாவா இருக்கும். பாக்குறவங்க என்ன நினைப்பாங்க நான் அவங்க கேக்குறே கேள்விக்கெல்லாம் என்ன பதில் சொல்லட்டும்  என்று அவர் பாட்டுக்கு புலம்பிக்கொண்டிருந்தார். இப்பொழுது தாங்கள் என்ன சொன்னாலும் அவரின் கோபம் தான் அதிகரிக்கும் என்றெண்ணி சந்தீப்பும் சந்தியாவும் அமைதிகாத்தனர்.
சாரதாவின் அக்கா மகளை திண்டுக்கல்லில் உள்ள ஒரு மில் ஓனருக்கு கட்டிகொடுத்திருந்தார்கள். அண்ணன் மகளின் கணவருக்கு சொந்தமாக 4 பஸ் ஓடுகிறது. அவருக்கு தெரிந்து பாலாஜிக்கு ஈரோட்டில் சில சொத்துக்கள் இருக்கிறது தான் ஆனால் இது போல் பந்தாவாக சொல்லிக்கொள்ளும் படி இல்லை என்பதே பெரிய வருத்தம்.
சரியாக அப்பொழுது சாரதாவின் அக்கா மொபைலில் அழைத்திருந்தார். சாரதா மாப்பிள்ளையோட அண்ணன் மகளுக்கு கல்யாணத்துக்கு பாக்கறாங்க. பொண்ணும் பாக்குறதுக்கு அழகா இருப்பா நல்ல வசதியும் கூட நம்ம சந்தீப்க்கு பார்க்கலாமா? உனக்கு சரிண்ணா சந்தீப் ஜாதகத்தை கொடு அவங்ககிட்ட கொடுக்குறேன். ஜாதகம் பொருந்துச்சுனா மத்ததெல்லாம் பேசலாம் .
சாரதா மிகவும் மகிழ்ந்து போனார். கடவுள் என் பொண்ணு விஷயத்துல என்னை ஏமாற்றினாலும் என் பையன் விஷயத்துலயாவது கண்ணை திறந்தாரே .
தன் பெரியம்மா பேசிய சத்ததில் ஸ்பீக்கர் ஆன் செய்யாமலே சந்தீப்பின் காதில் அனைத்தும் விழுந்தது.
அட கடவுளே . இது என்ன புது பிரச்சனை . சுபிக்கிட்ட என் மனச புரிய வெக்கலாம்னு பார்த்த அவ பேசுறதுக்கே அவ்ளோ யோசிக்குற. அவளை எப்போ நான் கரெக்ட் பண்ணி எப்போ காதலிச்சு கல்யாணம் பண்ணி புள்ள குட்டி எல்லாம் பெத்துக்குறது . அவளை நம்புனா நமக்கு டைரக்டா 60 கல்யாணம் தான். பேசாம அப்பா கிட்ட இதை பத்தி பேசவேண்டியது தான் .
– தொடரும்

Advertisement