Advertisement

காதல் அணுக்கள் -3
மாலை அலுவலகத்தில் இருந்து வீட்டுக்குள் நுழையும் போதே சுபியின் கண்ணில் பட்டது எதிர் வீட்டு மாடியில் வெட்கம் கலந்த புன்னகையுடன் போனில் பேசிக்கொண்டிருந்த சந்தியா தான் . அவள் முகத்தை வைத்தே தன் அண்ணணுடன் தான் பேசுகிறாள் என்று கண்டுகொண்டாள் .
பாலாஜியும் சந்தியாவும் கடந்த இரண்டு வருடங்களாக விரும்புகின்றனர் . முன்பே ஒருவருக்கொருவர் பிடித்தம் இருந்த போதும் அதை வெளிப்படுத்தவில்லை. சந்தீப் தன்னை தவறாக நினைத்துவிட்டால் என்ன செய்வதென்ன பாலாஜி அவன் மனதை வெளிப்படுத்தவில்லை . அவன் நிகாரித்துவிட்டால் தன்னால் அதை தாங்கமுடியாது என சந்தியாவும் மௌனம் காத்தாள் .
மும்பையில் வேலைக்கென  பாலாஜி கிளம்பும் முன் தைரியத்தை கூட்டி சந்தியாவே அவள் மனதை பாலாஜியிடம் வெளிப்படுத்தினாள். பாலாஜிக்கு விருப்பம் இருந்தாலும் அப்பொழுது பதில் கூறாமல் சிறிது அவகாசம் வேண்டினான் .
பிறகு பாலாஜி செய்த முதல் வேலை சந்தீப்கு அழைத்து விவரம் கூறி தனக்கும் விருப்பமே ஆனால் சந்தீப்பின் முடிவே இறுதியானது என்று உறுதியளித்தான் .
அதை கேட்ட சந்தீப் தங்கள் நட்பை எண்ணி கர்வம் கொண்டான் . அவன் தங்கையும் சரியான ஒருவனையே தேர்ந்தெடுத்ததை எண்ணி மகிழ்ந்து தன் மனப்பூர்வமான சம்மதத்தை தெரிவித்தான்.
அதன் பின் போனிலேயே இருவரும் தங்கள் காதலை வளர்த்தனர் . சந்தியாவின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட சுபி எங்கே காதல் என்னும் போர்வையில் கயவர்களிடம் மாட்டிக்கொள்வாளோ என கவலை கொண்டாள் . இதை இப்படியே விட்டால் தப்பாகிவிடும் என்றெண்ணி சந்தியாவிடம் பேசுவது என்று முடிவுசெய்தாள் .
சந்தியா வரவர நீ ஆளே சரியில்லை . நீ ஏதோ மறைக்கிறே. ஒழுங்கா என்ன நடக்குதுன்னு சொல்லு ?
அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல சுபி. நீயா எதாவது கற்பனைப்பணிக்காத என்று பேச்சை கதிரிக்க முயன்றாள் .
அப்போ சொல்லமாட்டா. சரி நான் கிஷோர் அங்கிள் கிட்ட சொல்லி விசாரிக்க சொல்லறேன் ? நீ அவர்கிட்டயே சொல்லிக்கோ
சுபி சுபி அப்படியல்லாம் எதுவும் செஞ்சுறாதே . நானும் உங்க அண்ணாவும் லவ் பண்றோம் என்று வேறுவழியின்றி உண்மையை கூறினாள் .
சுபி அதிர்ச்சியாவள் என்று நினைத்தால் அவள் அமைதியாக இருந்தாள்.
ஏன்  சுபி அமைதியா இருக்கே உனக்கு இதுலே விருப்பமில்லையா என்றால் உள்ளே போன குரலில் .
ஹே பிரெண்டே அண்ணியா கிடைக்க ஒரு லக் வேணும். எனக்கு ரொம்ப சந்தோசம் நீ எனக்கு அண்ணியா வருவது .  எனக்கு ஆல்ரெடி உங்க ரெண்டு பேர் மேல டவுட் இருந்துச்சு சோ அதிர்ச்சி எல்லாம் இல்ல பட் ஆச்சர்யம் தான் எங்க அண்ணன் எப்படி  ப்ரொபோஸ் பண்ணானு. அவனுக்கு அதுக்கெல்லாம் தைரியம் பத்தாது என்னை தான் தூது அனுப்புவான்னு நினைச்சேன் . அது தான் யோசிச்சிட்டு இருந்தேன் .
ஆமா உங்க அண்ணன் சொல்லிட கில்லிட போறாரு என்று நடந்தவை அனைத்தும் கூறினாள் . தன் அண்ணன் தன்னிடம் சொல்லாதது வருத்தம் என்றால் அந்த சந்தீப்பிடம் மட்டும்  கூறியது அவளுக்கு எரிச்சலாக இருந்தது .
பாலாஜி விஷயம் கேள்விப்பட்டு அடித்து பிடித்து தங்கைக்கு போன் செய்தான் . என்னடா அண்ணா மேல கோவமா. உங்கிட்ட மறைக்கணும்னு நினைக்கல சுபி நேரம் பாத்து சொல்லலாம்னு இருந்தேன்.
இதுலே கோவப்பட என்ன இருக்கு. உனக்கு என்கிட்ட ஷேர் பண்ணனும் தோணலே சோ நீ பண்ணலே. உனக்கு  ஷேர் பண்ணிக்க தான் நிறைய பேர் இருகாங்களே என்றாள் வருத்ததுடன்.
எப்பொழுதும் கலகலப்பாகவோ கோவமாகவோ செல்லம் கொஞ்சிக்கொண்டு இருக்கும் தங்கை வருத்தமாக பேசியது மனதுக்கு கஷ்டமாக உணர்ந்தான். அவள் கோவப்பட்டு சண்டையிட்டால் கூட பரவாயில்லை போல இருந்தது.
தந்தை மறைவுக்கு பின் பொறுப்பானா அண்ணனாக தங்கையை பார்த்துக்கொண்டவனால் சட்டென்று அவன் காதல் விஷயத்தை பகிரமுடியவில்லை . எங்கே தன்னை ஒரு உதாரணமாக எடுத்து கொண்டு எவன் வளையிலாவது விழுந்து விட்டால் என்ன செய்வதென்று எல்லா அண்ணன்மார்களுக்கும் உள்ள அதே பயம்.
இதை எப்படி அவளிடம் சொல்லி புரிய வைப்பதென்று தெரியாமல் தடுமாறினான்.
சுபிமா அப்படியெல்லாம் இல்ல டா.
அண்ணா அதைவிடு . ஷேர் பண்றதும் பண்ணாததும் உன்னோட விருப்பம் ஆனா நாளே பின்ன நான் எதாவது ஷேர் பண்ணலன்ன ஏன்னு கேட்காதே என்று அவன் தலையில் இடியை இறக்கினாள் .
ஆக மொத்தம் இவர்கள் காதல் கதையை அறிந்தவர்கள் சந்தீப்பும் சுபியுமே .
அன்று நடந்தவைகளை எண்ணி சிரித்து கொண்டே மாடியில் உள்ள அவள் அறைக்கு சென்று படுக்கையில் சரிந்தாள் .
அன்னைக்கென்னமோ யாரையோ லவ் பண்ற ரேஞ்சுக்கு அண்ணாகிட்ட டயலாக் எல்லாம் விட்ட அதுக்கு அப்புறம் வந்த ப்ரொபோசல் எல்லாத்தையும் ரிஜெக்ட் பண்ணிட்டே . சுபி நீ இதுக்கெல்லாம் சரிபட்டுவரமாட்ட . உனக்கு அரேன்ஜ்ட் மேரேஜ் தான் போலிருக்கு என்று போலியாக வருத்தம் கொண்டாள்.
அவள் சிந்தனையை கலைக்கும் வண்ணம் “ஊரிலே பத்து பதினச்சு ப்ரெண்ட் வெச்சுருக்கறவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான் ஒரே ஒரு ப்ரெண்டா வெச்சுகிட்டு நான் படுறே கஷ்டம் இருக்கே அய்யய்யோ ” என்று சுபியின் மொபைல் அலற ஒரு புன்னகையுடன் அதை ஏற்றவள்
சொல்லு மச்சி என்ன ரெண்டு நாளா போனே காணோம் ?
ஹே ஐயா ரொம்ப பிஸி தெரியுமில்ல
ஆமமமா கேள்விப்பட்டேன் கோகிலா மாமியோட ப்லவுஸ் அந்த டைலர் சொதப்பிட்டானு நீ தான் நேத்து நம்ம காலனி ஆளுங்களோட போய் அவன் கடைக்கு முன்னாடி ரகளப்பண்ணியாம். சன் நியூஸ்ல சொன்னாங்க     என்றால்  நக்கலாக
எல்லாம் ஒரு பொது சேவை தான் என்று இழுத்தான் .
பொது சேவை மாதிரி தெரியலியே  மாமி பொண்ணு ரேணுகாக செஞ்ச சேவை மாறியில்ல இருக்கு..
நோக்கு தெரிஞ்சுருச்சா .. சமத்து சட்டுனு புரிஞ்சுண்டேயே.
வழியுது தொடச்சுக்கோ..
அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் . சரி கீழ இறங்கிவா .
ஹே வீட்டுக்கு வந்துருகியா ? இரு வரேன் .
அவள் கீழே வரும் போது அருண் டைனிங் டேபிளில் அமர்ந்து சித்ரா செய்து வைத்திருந்த வெஜிடேபிள் புலாவ்
மற்றும் பன்னீர் கறியை ஒரு வெட்டுவேட்டி கொண்டு இருந்தான் .
அருணும் சுபியும் சிறு வயது முதல் நண்பர்கள். இருவரும் பக்கத்து பக்கத்து வீடு மற்றும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் பயின்றவர்கள். இவர்கள் இரண்டு அன்னைமார்களும் நல்ல தோழிகள் . இவர்கள் இருவரும் சரியான கூட்டுக்கலவாணிகள். ஒருவருக்கு ஒருவர் எவரிடமும் விட்டுத்தரமாட்டார்கள்.
அவர்கள் காலனியில் நடக்கும் அனைத்து விஷயங்களும் அருண் வழியாக சுபிக்கு வந்துவிடும். எவன் எவளை சைட் அடிக்கிறான் , யார் யாருக்கு ப்ரொபோஸ் செய்துள்ளார் இப்படி பல ராணுவ ரகசியங்கள் இவ்விருவருக்குள் உண்டு .
அப்படி ஒருமுறை பக்கத்து காலனியில் இருக்கும் அருணின் நண்பன் மூலம் இவர்கள் அறிந்த விஷயம் தான் காதல் மன்னன்  ஸ்ரீராமின் லீலைகள் . அவன் நண்பனின் ஏரியாவில் இதோடு  6 மாதத்தில் 4 பெண்களுக்கு ப்ரொபோஸ் செய்துள்ளான் என்பதே. இதில் கொடுமை என்னவென்றால் ஒரே வீட்டில் உள்ள அக்கா தங்கைக்கு ப்ரொபோஸ் செய்து நன்கு வாங்கிக்கட்டிக்கொண்டான் . இதை கேட்டு சுபி கூட அருணிடம் கேட்டாள் ” பேசாம கிஷோர் அங்கிள் கிட்ட சொல்லி இவனுக்கு பெயரை மாத்தச்சொல்லிடலாமா ? போயும் போயும் இவனுக்கு ஸ்ரீராம்னு பெயர் .”
அருண் ” சும்மா இருக்கியா . நம்ம காலனிலே அவன் பெயர் கேட்டு போகக்கூடாதுனு தான் அவனே ஏரியா விட்டு ஏரியா போய் அவன் வேலைய காடிட்டு இருக்கான் . ஒரு 4 பேருக்கு ப்ரொபோஸ் பண்ணாதான்  ஒண்ணாவது கிளிக் ஆகும்னு ட்ரை பன்னிருப்பான். இதை இத்தோட மறந்துரு சந்தியா கிட்ட எதாவது ஒளறிக்கொட்டிடாதே  “.
எனக்கு தெரியும் . இந்த சீக்ரட்ஸ் எல்லாம் நமக்குள்ள தான் பாலாஜிகிட்ட கூட சொல்லமாட்டேன் .
இதெல்லாம் அவர்கள் பள்ளி கல்லூரி படிக்கும் காலத்தில் நடந்தது. ஸ்ரீராம் இப்போது பெங்களூரில் பணிபுரிந்து வருகிறான் .
அங்கே போய் எத்தனை பேத்துக்கு ப்ரொபோஸ் பண்ணிவெச்சுருக்கானோ என்று இவர்கள் அவ்வப்போது பேசி சிரிப்பதுண்டு .
இவர்கள் பேச்சு சுவாரஸ்யத்தில் இருக்க சித்ரா அவரின் போட்டிக்கிலிருந்து வீட்டினில் நுழைந்தார்.
வாடா நல்லவனே இரண்டு நாளா வீட்டுப்பக்கமே காணோமே ?
சுபி ஒரு நமட்டு சிரிப்புடன் தன் போனை நோண்டிக்கொண்டிருந்தாள் . மறுபடியும் முதல்ல இருந்தா என்று நினைத்த அருண் பேச்சை திசை திருப்ப ஆண்ட்டி புலாவ் சூப்பர். என்ன பன்னீர் தான் கொஞ்சம் ஹார்ட் ஆயிடுச்சு. கொஞ்சம் ஓவர் குக் ஐயிடுச்சுனு நினைக்குறேன் .
சித்ரா கடுப்புடன் பன்னீர் கறி பாத்திரத்தை பார்த்தார் . அது கழுவவே அவசியமற்று துடைத்து வைத்தது போல் இருந்தது .
இதுக்கு பேருதான் திங்கறது கொள்ளு அதுக்குள்ள லொள்ளுங்கறது என்று முகவாயை தோலில் இடித்து கொண்டார் .
ஆண்ட்டி நீங்க அக்ட்ரேஸ் காந்திமதி பேன் அஹ என்றவன் தலையில் ஒரு கொட்டு வைத்து சென்றார் .
அவர் கிட்சேனுக்குள்ளே நுழைந்ததும் அருண் சுபியிடம் ” மச்சி உனக்கு விஷயம் தெரியுமா நம்ம எதிரி அடுத்த வாரம் இந்தியா வரான்.”
என்ன மச்சி சொல்றே ?ஏன் திடிர்னு வரான் ?
இங்கேயே எதோ புதுசா கம்பெனி ஆரமிக்க போறானாம்.
இவர்கள் இருவரும் குறிப்பிடும் அந்த எதிரி சந்தீப்பே.
தந்தையின் புல்லெட்டை எடுத்து கொண்ட கோபத்தில் சுபியும் எப்பொழுதும் அவனுடனே ஒப்பிட்டு தன்னை திட்டும் தந்தையினால் அருணும் அவனை எதிரியாக பாவித்து கொண்டனர் .
எங்கு அவனை கண்டாலும் முறைத்து கொண்டே திரிவார்கள் ஆனால் சந்தீப்போ நீங்கள்லாம் எனக்கு ஒரு ஆளே இல்ல என்பதை போல் கடந்து சென்று விடுவான்.
இவர்கள் ஏரியாவில் ரிபப்ளிக் டே மற்றும் இன்டெபேன்டென்ஸ் டேவிற்கு லெமன் அண்ட் ஸ்பூன் , ஸ்லொ சைக்ளிங் , நடனம் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்துவார்கள்.
இவர்கள் சிறுவர்களாக இருந்த போது சந்தீப் பாலாஜி ஸ்ரீராம் மூவரும் இணைந்து பவர் ரேஞ்சர்ஸ் என்னும் குரூப் வைத்து நடன போட்டியில் ஒரு கலக்கு கலக்குவார்கள். எப்பொழுதும் முதல் பரிசை தட்டிசென்று விடுவார்கள் .
அருண் தான் பன் ஈட்டிங்கில் என்றுமே முதலிடம் . சந்தியா ரங்கோலியில்  பல புது டிசைன் வரைந்து பரிசை தட்டி சென்றுவிடுவாள். சுபி சில வருடம் முறைப்படி சங்கீதம் கற்றுக்கொண்டதால் நன்றாக பாடுவாள் . இப்படி ஒவ்வொருவரும் தனி திறமையுடன் வளர்ந்தனர்.
அருணுக்கு சாப்பிடுவதென்றால் அவ்வளவு பிடிக்கும் . எப்போதும் எதையாவது கொரித்துக்கொண்டே இருப்பான் . அவன்  அப்பா தான் “ஏன்டா போட்டியிலே கூட திங்கற போட்டில தான் கலந்துகுவியா ? அந்த பசங்க எல்லாம் டான்ஸ் பாட்டுனு எப்படி கலக்குறாங்க நீ ஏன்டா என் மானத்தவாங்குறே. சந்தீப் பாரு இந்த வயசிலேயே எப்படி இந்த நிகழ்ச்சி எல்லாம் எடுத்து நடத்துறான் தெரியுமா ? ஏரியா கிரௌண்டை  அவன் பிரென்ஸ் கூட சேர்ந்து சுத்தம் செஞ்சு , வீடு வீடா போய் பணம் வசூல் பன்னி அஸோஸியேஷன்க்கு குடுத்துருக்கான் . எப்படி பொறுப்பா இருக்கான் பாரு. நீ என்னடானா சதா அந்த சுபி கூட சுத்திட்டு இருக்கே “
அப்பா சுபியே எதுக்கு இதுல இழுக்குறீங்க ? என் பிரெண்ட் பத்தி பேசுனா எனக்கு கோவம் வரும் பா .
இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ தெரியலே என்று புலம்பியபடி அவன் தந்தை சென்று விடுவார் .
அருண் இதெல்லாம் சுபியிடம் சொல்லி புலம்புவான்.
விடு மச்சி அப்பா தான. மனசுலே ஏதும் வெச்சுக்காதே. எனக்கு ஒரு ஐடியா மச்சி உனக்கு ரொம்ப புடிச்ச விஷயத்தெயே நீ படிச்சா என்ன ? அது தான் மச்சி கேட்டரிங் கோர்ஸ் . இப்போ செஃப்க்கு  எல்லாம் எவ்ளோ பாரின் சான்ஸ் தெரியுமா ? சம்பளமும் கூட .ஆனா தயவுசெஞ்சு நான் தான் இந்த ஐடியா குடுத்தேன்னு சொல்லிடாதே . உங்க அப்பாகிட்டயும் எங்க அம்மாகிட்டயும் என்னால வாங்கிக்கட்டிக முடியாது.
நீ சொல்றதும் சூப்பர் ஐடியா மச்சி . நான் எங்க அப்பாவை சமாளிச்சுக்குவேன் . டோன்ட் வரி .
அதன்படி கேட்டரிங் முடித்து ஒரு 3 ஸ்டார் ஹோட்டலில் செஃப் ஆக பணிபுரிகிறான்.பிடித்த வேலை. நல்ல சம்பளம். பெற்றோரும் இவன் குறித்த கவலை நீங்கி நிம்மதியாக இருக்கின்றனர்.
இப்படி இவர்கள் பழைய கதை பேசிகொண்டுருக்கையில் சித்ரா வந்து பாலாஜி அடுத்த வாரம் வருவதாக கூறினார் .
ஏம்மா போன வாரம் என் பிறந்தநாளுக்கு வரசொன்னப்போ லீவு இல்லனு சொன்னான் இப்போ அவன் பிரெண்ட் வரான்னு லீவு குடுத்துட்டாங்களா என்று கோவமாக கேட்டாள்.
அப்படியெல்லாம் இல்ல சுபி . உனக்காக தான் வரான். போன வாரம் லீவு கிடைக்கல இந்த வாரம் கிடைச்சிருக்கு, வரும் போது சந்தீப்பையும் அப்படியே மீட் பண்ணிட்டு கிளம்பிடுவான்.
போங்கம்மா நீங்க எப்பவும் உங்க பையனுக்கு தான் சப்போர்ட்
சித்ரா பாவமாக அருணை பார்த்தார். அவன் கண்களால் தான் பார்த்து கொள்வதாக கூறினான் .
அருண் “சரி கிளம்பு எனக்கு மால்ல கொஞ்சம் வேலை இருக்கு . நாளைக்கு வீக் எண்டு தானே அப்படியே சுத்திட்டு வருவோம் “
அப்பொழுது சந்தியாவும் அங்கு வந்து சேர்ந்தாள். ஹே மால் போறீங்களா எனக்கும் கொஞ்சம் பர்ச்சேஸ் இருக்கு நானும் வரேன் . சுபி கமிங் ப்ரைடே லீவு எடுக்க முடியுமா ?
ஏன் சந்தியா ? எதுக்கு ?
எங்க சந்தீப் அண்ணா மும்பைலே தான் லேண்ட் ஆகுறாங்க . அப்புறம் மும்பைலே இருந்து உங்க அண்ணாவும் சந்தீப் அண்ணாவும் ஒரே பிளைட்ல தான் சென்னை வராங்க சோ நாம ரெண்டு பெரும் போய் ரிஸிவ் பண்ணலாமா ?
அருண் ” சுத்தம் “
சித்ராவோ மனதுக்குள் இவ வேற என் கிரைம் ரேட்ட ஏத்திட்டே போறாளே என்று அலறினார்.
இல்ல சந்தியா அன்னைக்கு என் காலேஜ் பிரெண்ட் ஒருத்திக்கு மேரேஜ் சோ நான் காலைலே சீக்கிரமே  கிளம்பணும்.  
பின் சுபி தாயை முறைத்துவிட்டு ரெடி ஆவதற்கு சென்று விட்டாள் .
அத்தை சொல்ல மறந்துட்டேன் அண்ணா நீங்க சொன்ன ஆயின்மென்ட் வாங்கிட்டாங்கலாமா . சரி அத்தை நான் போய் ரெடி ஆகிட்டுவரேன்.
சந்தியா ரெடி ஆகிட்டு இன்னைக்கே வந்தரு , மேக்கப் போட்டுட்டு நாளைக்கு வராதே என்றான் அருண் .
உனக்கு கொழுப்பு கூடி போச்சு . எங்க அண்ணா வந்ததுக்கப்புறம் இருக்கு உனக்கு .
கெளம்பு கெளம்பு காத்து வரட்டும் .
ரெண்டுக்கும் ஏழு கழுதை வயசாகுது இன்னும் சண்டைபோட்டுட்டு பஞ்சாயத்துக்கு வந்து நிக்குதுங்க என்று சித்ரா தன் பிள்ளைகளை நினைத்து அருணிடம் புலம்பி கொண்டு இருந்தார்.
பின் மூவரும் கிளம்பி மால்லிற்கு சென்றனர்.அருண் லேண்ட்மார்க்கிழும் சந்தியா மற்றும் சுபி லைப் ஸ்டைலிலும் நுழைந்து கொண்டனர் . சந்தியா ஆண்களுக்கான ஆடை பிரிவில் ஷர்ட் தேர்ந்தெடுத்து கொண்டிருந்தாள்.
சுபி ” யாருக்குடி ஷர்ட் பாக்குறே ?”
சொல்றேன் முதல்ல நீ ஒரு ஷர்ட் செலக்ட் பண்ணு . உன் செலேக்சன் எப்போவும் நல்ல இருக்குமே .
சுபியும் பார்த்து க்ரெ அண்ட் ப்ளாக் கலந்தது போன்ற சைனீஸ் காலர் ஷர்ட் ஒன்று தேர்ந்தெடுத்தாள் .
வாவ் சூப்பர் ஆஹ் இருக்கு சுபி . இதுலே 2 லார்ஜ்  சைஸ் எடுத்துக்கலாம் .
எதுக்கு சந்தியா ஒரே மாதிரி ரெண்டு ஷர்ட் ?
ஒண்ணு உங்க அண்ணனுக்கு இன்னொன்னு எங்க அண்ணனுக்கு என்றாள்  .
அய்யோ என்று இருந்தது சுபிக்கு . இவ எனக்கு அண்ணியா வந்து இன்னும்  என்னெல்லாம் கடுப்பேத்த போறாளோ தெரியலயே . ஆண்டவா நீ தான் என்ன காப்பாத்தணும்.
சுபி தன் கல்லூரி தோழியின்  திருமணத்திற்கு பரிசு வாங்கிய பின் மூவரும் அங்கேயே உண்டுவிட்டு வீடு திரும்பினர்.
இந்த ஒரு வாரம் பாலாஜி பல முறை அழைத்தும் சுபி அவனிடம் பேசாமல் தவிர்த்தாள் . சரி நேரில் சென்று அவளை சமாதானம் செய்யலாம் என்று விட்டுவிட்டான்.
தோழியின் திருமணத்திற்க்கு நட்புக்கள் அனைவரும் பிங்க் நிறத்தில் புடவை அணிவது என்று பேசிவைத்திருந்தனர் .
அது போலவே சுபியும் பிங்க் நிறத்தில் வெள்ளை முத்துக்கள் பதித்த டிசைனர் புடைவையில் அன்று பூத்த மலர் போல தயாராகி வந்தாள் .
சித்ரா நேற்றே மல்லிகை பூ வாங்கி பிரிட்ஜ்ல் வைத்திரிருந்தார் . அதை அவள் தலையில் வைத்து மகளை அழகு பார்த்தார். சுபி உனக்கு இந்த சேரி சூப்பர் ஆஹ் இருக்குடா .  வெறும் வயிறுலே போகாதே இந்த காபி குடிச்சுட்டு போ .
ஏற்கனவே லேட் ஆயிடுச்சு மா என்று அரக்க பரக்க காபியை குடித்துவிட்டு டம்ளரை தாயின் கைகளில் திணித்துவிட்டு அவள் ஸ்குட்டியை ஸ்டார்ட் செய்வதற்கும் எதிர்வீட்டு வாசலில் ஒரு இன்னோவா வந்து நிற்பதுற்கும் சரியாக இருந்தது.
சந்தீப்பை பார்த்து 6 வருடங்களுக்கு மேலாக ஆகிற்று .அப்பொழுதே ஆள் ஸ்டைலாக இருப்பான் , இப்போது இன்னோவாவிலிருந்து  இன்னும் மேன்லியாக இறங்கியவனை கண்டு விழி விரித்து நின்றாள் .
புத்தம் புது மலராய் இருந்தவள் முகத்தில் வந்து போன பாவனைகளை கண்டவன் கண்களில் குறும்பும் மனதினில் சந்தோஷ சாரலும் நிறைந்தது .
-தொடரும்

Advertisement