Advertisement

காதல் அணுக்கள் – 12
ஜோதிடர் 2 முகூர்த்த தேதிகளை குறித்து கொடுத்தார். அதில் ஒன்று 1 மாதத்திலும் மற்றொன்று 3 மாதங்களிலும் இருந்தது. முதலில் வரும் முகூர்த்தம் சந்தீப்பின் நட்சத்திரத்திற்கு உகந்தது என்றும் அடுத்து வருவது பாலாஜியின் நட்சத்திரத்திற்கு உகந்தது என்றும் குறிப்பிட்டார்.
ஒரு மாதத்தில் எவ்வாறு திருமணம் செய்வதென அனைவரும் கவலை கொண்டனர். கிஷோர் வீட்டில் முதல் திருமணம் ஆகையால் நல்ல க்ராண்டாக செய்யவேண்டும் என்று எண்ணினார். அதேபோல் பாலாஜியும் தன் ஒரே தங்கையின் திருமணம் சீரும் சிறப்புமாக தந்தையில்லா குறை தெரியாமல் செய்யவேண்டும் என்று நினைத்தான் . ஆஃபிஸிற்கு எப்படி இத்தனை நாள் விடுமுறை எடுப்பது என்று யோசனைக்குள்ளானான் .
சந்தீப் தான் விடு மச்சான் பாத்துக்கலாம்.என் பிரெண்ட் ஒருத்தன் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நடத்துறான் அவன்கிட்ட சொல்லிக்கலாம் . எல்லாம் பக்காவா அரேன்ஜ் பண்ணிடுவான் . சமையல் பொறுப்பு நம்ப அருணுக்கு குடுத்தருளாம். நமக்கும் இப்போ டைம் கம்மியா இருக்கு அதனால மண்டபமும் ஜவுளியும் நீ கிளம்பறதுக்கு முன்னாடியே முடிவு பண்ணிடலாம் . 
அப்பா இரெண்டு கல்யாணத்துக்கும் மண்டபமும் புக் பண்ணிட்டு பத்திரிகையும் ஒண்ணா அடிச்சுட்டா எல்லாருக்கும் சேர்த்தே அழைப்பு வெச்சிடலாம்  . அப்போ தான் நமக்கு டைம் சேவ் ஆகும் டென்ஷன் இருக்காது என்றான் . வழக்கம் போல அவனது ஆளுமையான அணுகுமுறையில் அனைவரையும் கவர்ந்தான் .
சந்தீப்பும் பாலாஜியும் இங்கே மல மலவென பிளான் போட்டுக்கொண்டிருக்க . சுபியோ இன்னும்  ஒரே மாதத்தில் கல்யாணமா ? என்று பயந்து போய் இருந்தாள் . தன் வீட்டை இன்னும் ஒரு மாதத்தில் பிரிய போவதை நினைத்து கலக்கம் கொண்டாள் . இது பெண்களுக்கே உரித்தான ஒன்று . அவளது முகத்தை பார்த்தே சந்தீப்புக்கு புரிந்தது அவள் மனதளவில் தயாராகவில்லை என்று . மெதுவாக சந்தியாவிடம் ஜாடை காட்ட அவளும் தான் பார்த்து கொள்வதாக தெரிவித்தாள் .
சுபி கலா மந்திர்லே 50% சேல் போட்ருக்கானாம் . நாளைக்கு ஈவினிங் போலாமா ? கொஞ்சம் டிசைனர் சாரீஸ் பார்க்கணும் . உங்கிட்ட இருக்குற எல்லோ சாரீ மாதிரி எனக்கும் வேணும் . ஆனா எனக்கு சூட் ஆகுமானு டவுடா இருக்கு .
ஏன் சூட் ஆகாம உனக்கு சூப்பரா இருக்கும் . ரூம்ல தான் இருக்கு. வா வெச்சு பாரு என்று அனைத்தையும் மறந்து சந்தியாவை இழுத்து சென்றால் அவள் அறைக்கு .
தங்கையின் செயலில் பாலாஜிக்கு தான் சிரிப்பு அடக்க முடியவில்லை. இந்நேரம் சோகமாய் இருந்ததென ஷாப்பிங் பற்றி பேசியவுடன் முகம் 1000 வாட்ஸ் பல்பு போல் பிரகாசித்ததென 
அவன் சிரிப்பை பார்த்து டேய் எதுக்குடா இப்படி சிரிக்குரே சொன்ன நானும் சிரிப்பேன் தானே ?
ஒண்ணுமில்ல மச்சான் என் தங்கச்சி புடவைன்னு வந்துட்டா புருஷனையே மறந்துருவா போல அது தான் உன் நிலைமை என்னாகப்போகுதோனு சிரிச்சேன் என்றவனை முறைக்க முயன்று தோற்றுப்போய் அவனுடைய சிரிப்பில் சந்தீப்பும் கலந்தான் .
கிஷோர் வீட்டிலேயே நகை பணம் பற்றி எல்லாம் பேச கூடாது என்று சொல்லியே அழைத்து வந்தார் ஆதலால் சாரதா அதை பற்றி எதுவும் பேச்சே எடுக்கவில்லை . சித்ராவே சுபிக்கு செய்ய இருப்பதை பற்றி தெரிவித்தார்.
சாரதாவே ஒரு நிமிடம் வியந்து தான் போனார் பரவாயில்லை நினைச்சதவிட நல்ல தான் பண்றாங்க. 
அனைத்தும் மிக துரிதகதியில் நடந்தது. மண்டபம் பத்திரிகை வேலைகள் அனைத்தும் இரண்டு நாட்களில் முடிந்தது. ஈரோட்டில் இருக்கும் தங்கள் நெருங்கிய உறவுகளுக்கு சித்ரா போன் மூலம் சுபிக்கும் பாலாஜிக்கும்  திருமணம் முடிவானதை தெரிவித்தவர் நேரில் வந்து பத்திரிக்கை வைப்பதாக கூறினார் . அவர் எதிர்பார்த்தது போலவே சிலர் அதிருப்தியையும் சிலர் வாழ்த்துக்களையும் கூறினர் . 
சாரதாவின் உடன் பிறப்புகளோ அவர் அவசரப்பட்டு ஏமாந்துவிட்டதாக ஆறுதலை கூறி அவரை மேலும் கடுப்பாகி கொண்டிருந்தனர் . 
பாலாஜி மும்பை செல்ல இன்னும் ஒரு நாளே இருந்தபடியால் அதுவும் முகூர்த்த நாளாகவே அமைய அன்றே உப்பு ஜவுளியை முடித்துவிடலாம் என்று முடிவுசெய்து சுபியையும் லீவு போட சொல்லி அழைத்து சென்றனர் .சித்ரா அருணையும் அவன் தாயையும் உடன் அழைத்து வந்திருந்தார் .
அங்கே அனைவரும் இருக்க சந்தீபை மட்டும் காணவில்லை . சுபி கண்களாலே தேடிக்கொண்டிருப்பதை பார்த்து சந்தியா தான் என்ன அண்ணியாரே அண்ணனை தேடுறீங்களாக்கும் ? அவன் வேலை விஷயமா போயிருக்கான் வர ஈவினிங் ஆயிடும்  என்றாள் . 
உங்க அண்ணனை யாரு தேடுனா நான் சும்மா அப்படியே கடையை ரிமோடேல் பண்ணிருக்காங்களே எப்படி இருக்குனு பார்த்துட்டு இருந்தேன் .
சமாளிப்பு … சகிக்கலே என்று சொல்லி சுபியிடம் நான்கு அடிகளை பெற்றுக்கொண்டாள் .
முதலில் மணப்பெண்களுக்கு எடுத்து விடலாம் என்று பார்க்க ஆரம்பிக்க அப்பொழுதே சாரதா சுபியிடம் மொத்தம் 30000 பட்ஜெட் அதுல நீ நிச்சயத்துக்கு ஒன்னும் முகூர்த்தத்துக்கு ஒன்னும் உனக்கு பிடிச்சதை எடுத்துக்கோ என்றார் . அவளும் சரி என்று 15000 ரூபாய் புடவையை காட்ட சொன்னாள் .
வரிசையாக புடவைகளை போட ஆரம்பித்தவுடன் சந்தியா ஒவ்வொரு புடவையையும் மேலே வைத்து பாலாஜியிடம் கருத்து கேட்டுக்கொண்டிருந்தாள் . அதை பார்த்த சுபி ஒரு பெருமூச்சை விட்டபடி இதுக்கு தான் லவ் மேரேஜ் பண்ணனும்னு ஆசைப்பட்டேன் ஹ்ம்ம் எங்கே நமக்கு வாச்சது இந்த அன்ரொமண்டிக் ஜந்து தான் என்று நினைத்துக்கொண்டாள் . சந்தியா மரூனில் கோல்டன் பார்டர் வைத்தது போலவும் ,அழகான மஸ்டர்டு கலரிலும் இரு புடவைகள் எடுத்துக்கொண்டாள் . 
சித்ராவும் சாரதாவும் தங்களது நெருங்கிய சொந்தங்களுக்கு புடவை பார்த்துக்கொண்டிருந்தனர் . அங்கு அனைவரும் பெண்களாய் இருக்க, பாலாஜி கம்பெனி குடுப்பான் என்று நம்பி வந்தான் அருண் ஆனால்   பாலாஜியோ சந்தியாவுடன் வேறு ஒரு உலகத்தில் இருக்க இனி அங்கிருந்தால் யாரடி நீ மோகினி தனுஷ் போல் தன் நிலையாகிவிடும் என பயந்து பக்கத்துலே ஒரு வேலை இருக்கு சயந்தரமா வீட்டுக்கு வரேன் என்று எஸ்கேப் ஆகிவிட்டான் அருண்.
சுபி அருணின் தாயின் உதவியுடன்  புடவைகளை செலக்ட் செய்ய ஆரம்பித்தாள் . நிச்சயத்துக்கு 12000 ரூபாயில் சீ ப்ளூ கலரில் பச்சை பார்டர் வைத்த சாரீ எடுத்தவள் முகூர்த்த பட்டு எடுக்க மிகவும் குழம்பி போனாள் . அவளுக்கு பிடித்த சேலை மற்றவர்கள் டல் காலரா இருக்கு  வேண்டாம் என்றனர் அவர்கள் சொல்லும் புடவை இவளுக்கு பிடிக்கவில்லை . எல்லோருக்கும் பிடித்தால் விலை அதிகமாக இருந்தது .
 வந்த எரிச்சலில் சந்தீப்பை தான் கடித்து துப்பி கொண்டிருந்தாள் . ச்சே ஒரு அரைமணிநேரம் வந்துட்டு போனாதான் என்னவாம் . கல்யாண சாரீ எடுக்கும் போது ரசனையா ஒரு பார்வை , அந்த சாரீ நல்லா இருக்கு இது வேண்டாம்னு எதாவது சொல்லலாம் தானே . அந்த நெட்டகொக்குக்கு ஒரு மண்ணும் தெரியமாட்டிங்குது . அவனுக்கு டியூஷன் எடுத்தே எனக்கு வயசாயிடும் போலிருக்கு . ஆண்டவா நீ தான் காப்பாத்தணும் என்று ஒரு வேண்டுதலை வைத்துவிட்டு நின்றவள் காதில் அந்த பிங்க் கலர் புடவை எடுக்க சொல்லு என்ற குரல் கேட்கவும் திரும்பி பார்த்தவளின் முகம் மலர்ந்தது . அலுவலகம் விஷயமாக சென்றதால் பார்மல்சில் செம ஹாண்ட்ஷமாக இருந்தவனை விட்டு பார்வையை திருப்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் .
அங்கே அடுக்கி வைக்க பட்டிருந்த புடவைகளில் பார்வையை பதித்திருந்தவன் திரும்பி அவளை பார்த்து புருவம் உயர்த்தி என்ன என்று கேட்டான் சந்தீப் . பிடிபட்ட உணர்வில் அவசரமாக தலையை ஆட்டினாள் அவளுக்கொரு மந்தசாக புன்னகையை பரிசளித்துவிட்டு  அண்ணா அந்த பிங்க் புடவை எடுங்க  என்றான் .
அவன் கேட்ட பிங்க் புடவையில் ஆரஞ்சு மற்றும் பச்சையினால் ஆன வேலைபாடில் தங்கநிற ஜரிகையில் அத்தனை அழகாக இருந்தது . பார்த்தவுடன் அனைவர்க்கும் பிடித்தது .சுபிக்கு அந்த புடவை மேலே போட்டுப்பாத்தில் அத்தனை எடுப்பாக இருந்தது . சந்தீப் அந்த புடவையில் சுபியை வித விதமாக தன் மொபைலில்  போட்டோ எடுத்துக்கொண்டான். நல்ல வேலை கல்யாணத்தை சீக்கிரம் வெச்சாங்க என்று நினைத்துக்கொண்டான் .
சபிக்கும் அந்த புடவை அவ்வளவு பிடித்தது அதுவும் அவன் தனக்காக செலக்ட் செய்தது மிகவும் பிடித்தது . மெல்ல அந்த புடவையின் விலையை பார்த்தவள் முகம் வாடிவிட்டது . அதன் விலை 25000 ரூபாய் என்றிருந்தது . 7000 ரூபாய்க்காக இவ்வளவு நல்ல புடவையை எடுக்காமல் இருக்கணுமா பேசாமல் நாம் மிச்ச பணத்தை கொடுத்துவிடலாமா என்று தோன்றவே அதை சந்தியாவிடம் கேட்டாள் . நீ தரவேணாம் சுபி அம்மா அதை தப்பா எடுத்துக்குவாங்க . நான் அண்ணா கிட்ட பேசுறேன் .
வேண்டாம் சந்தியா ஆன்ட்டி சொன்ன விலைக்கே வேற பார்க்கலாம்  என்று மனமே இல்லாமல் அந்த புடவையை திருப்பி தந்தாள். என்னாச்சு என்று கேட்ட சந்தீப்பிடம் என்ன சொல்வதென தெரியாமல் அமைதிகாத்தால் பின் சந்தியா தங்கள் தாய் கூறியவற்றை சொல்லி அது தான் இந்த புடவை விலை அதிகமா இருக்கு வேற பார்க்கலாம்னு சொல்றா .
அம்மா கிட்ட நான் பேசிக்குறேன். கல்யாணம் என்கிறது ஒன்ஸ் இன் எ லைப்டைம் ஈவென்ட் சோ அதுலே எல்லாமே முடிந்தளவு மெமரபிலா இருக்கனும் . நீ புடவையில் எந்த காம்ப்ரமைஸும்  பண்ணிக்கவேண்டாம். உனக்கு பிடிச்ச இந்த புடவை தான் நீ கட்டணும்னு நான் ஆசைப்படுறேன் என்று அந்த புடவையை அவள் கையில் தந்தான் . 
சுபிக்கு இந்த திருமணம் குறித்து மனதில் இருந்த சஞ்சலம் நீங்குவதை போல் உணர்ந்தாள் . பெண்களுக்கு எடுத்த பின் ஆண்களுக்கும் எடுத்துக்கொண்டு உப்பு வாங்கி கோவிலுக்கு சென்று உப்பு ஜவுளி பத்திரிகை என்று அனைத்தையும் வைத்து பூஜை செய்து வீடு வந்து சேர்ந்தனர் . வரும்வழியில் சந்தீப் எத்தனை சமாதானம் சொன்னாலும் மகன் தன் சொல் மீறி சுபிக்கு அதிகமா செலவு செய்துவிட்டான் என்ற எண்ணம் எழுவதை தடுக்கமுடியவில்லை. 
மறுநாளே பாலாஜி அருணை பார்த்து தான் வரும்வரை சித்ராவிற்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டு மும்பை கிளம்பி சென்றான் . சித்ராவும் அருண் குடும்பத்தார் உதவியுடன் சுற்றம் மற்றும்  நட்புகளுக்கெல்லாம் பத்திரிகை வைத்து முடித்தார் .
சுபியும் தன் தோழிகளுக்கும் அலுவலகத்திலும் பத்திரிகை வைத்தவள் கோலுக்குவைக்கவும் மறக்கவில்லை .திருமணத்திற்கென்று 3 வாரம் லீவ் ஆஃப்ளைசெய்தால் . தோழிகள் அனைவரும் உன் வூட்ப்பிய எங்களுக்கு எப்போ இன்ட்ரோ கொடுக்க போற ,ட்ரீட்  எப்போ இப்படி அவளை கேள்வியால் குடைந்து எடுத்துவிட்டனர்.
ஆமா நானே கண்ணுலே பார்த்து பல நாள் ஆச்சு இதுலே நான் எப்படி இவளுகளுக்கு இன்ட்ரோ குடுக்குறது . அன்று புடவை எடுக்கும் போது பார்த்தது தான் அதன் பிறகு சுபி சந்தீப்பை பார்க்கவேமுடியவில்லை . லவ் மேரேஜ் தான் பண்ணமுடியலே அட்லீஸ்ட் கல்யாணத்துக்கு முன்னாடி டின்னர் சினிமான்னு எங்கயாவது கூட்டிட்டு போலாம் தானே என்று சுபி மிகவும் ஏமாற்றம் அடைந்தாள் .
சந்தீப்போ அவனது புதிய அலுவலகம் தொடங்கும் பணியில் மூழ்கிப்போனான். அமெரிக்காவில் இருக்கும் கிளைன்ட்ஸிற்கு இங்கு இருந்து ப்ராஜெக்ட் செய்து தரும் சாப்ட்வேர் கம்பெனியை சந்தீப்பும் அவன் நண்பன் வினீத்தும் தொடங்கவுள்ளனர் . அவன் அங்கே 6 வருடம் இருந்த போதே அங்கிருக்கும் மற்றொரு நண்பனுடன் சேர்ந்து அங்கே தொடங்கிய கம்பெனியின் கிளை அலுவலகமே இது . இதில் இவன் பொறுப்புகள் ஏராளம். இப்படி ஒரு முக்கியமான கட்டத்தில் அவனே எதிர்பார்க்காதது இந்த திடீர் திருமணம் . திருமணத்திற்கு பிறகு சுபியுடன் சிறிதேனும் நேரம்செலவழிக்க வேண்டும் என்றால் இப்பொழுது அவன் மிகவும் மெனக்கெடவேண்டும் . காலை 9 மணிக்கு வீட்டைவிட்டு கிளம்பினால் அவன் திரும்ப இரவு 11 அல்லது 12 மணி ஆகிவிடும் . திருமணம் முடிந்து 
திருமணத்திற்கு இன்னும் இரு தினங்களே இருந்த நிலையில் இரண்டு வீடுகளும் சொந்தங்களின் வருகையால் நிறைத்திருந்தது . பந்தக்கால் நட்டபின் சாரதா சந்தீப்பை வெளியே அனுப்பவில்லை . போனிலே முடிந்த அளவு வேலைகளை முடித்து கொண்டிருந்தான் .  ஸ்ரீராமும் பெங்களூரிலிருந்து வந்து சேர்ந்தான் . அனைவரும் வீட்டு சாமி கும்பிட்டுவிட்டு மண்டபம் சென்றடைந்தனர் . 
சுபியோ இத்தனை நாள் சந்தீப் தன்னை கண்டுகொள்ளாமல் இருந்ததால் மூண்ட கோபத்தில் அவனிடம் முகம் கொடுத்தே பேசவில்லை . இரவு நிச்சயம் முடிந்து சீ ப்ளூ கலர் புடவை உடுத்தி முத்துக்களால் ஆனா நகைகள் அணிந்து அப்சரஸ் போல இருந்தவளை விழிகளாலே விழுங்கிக்கொண்டிருந்தான் சந்தீப் .
அனைத்து சடங்குகளும் முடிந்த பின் சந்தீப் சுபியிடம் மாடிக்கு வரும்படி கூறி சென்றான் ஆனால் அவளோ நீ சொன்ன நான் வரணுமா என்றொரு பார்வை பார்த்தாள் . நீ மாடிக்கு வரலைன்னா நான் உன் ரூமுக்கு கண்டிப்பா வருவேன் அப்புறம் உன் இஷ்டம் . எங்காவது உறவினர்கள் முன்னிலையில் வந்து கிந்துரப்போறன் பேசாம நாமளே போய் பார்ப்போம் என்று மாடிக்கு சென்றாள் .
மாடியில் யாருமில்லை ஒரு சிலர் மாத்திரம் தம் அடித்துக்கொண்டிருந்தனர் . இவர்களை பார்த்தவுடன் அவர்களும் சென்று விட்டனர் . இப்போ சொல்லு மேடம்க்கு என்ன கோவம் ? எதுவுமே பேச மாட்டிங்குறீங்க ?
ஓ இப்போ தான் என் நியாபகமே வருதாக்கும் என்று முணுமுணுத்து விட்டு ஒன்னும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள் . கோபத்தில் முணுமுணுக்கும் அவள் இதழ்களை பார்த்தவன் சுபி எனக்கு கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு ஆசை என்றான் .
அதுவரை இழுத்து வைத்த பொறுமை காற்றில் பறக்க உனக்கு ஒரு ஆசை தாண்டா எனக்கு எத்தனை ஆசை இருந்தது தெரியுமா நீ எதாவது கண்டுக்கிட்டயா நான் மட்டும் உன் ஆசையை கேட்கணுமா முடியாது போடா என்று திரும்பி போக இருந்தவளை சுவற்றோடு நிறுத்தி அவள் இதழோடு இதழ் சேர்த்திருந்தான். அவள் தன்னை தேடி இருக்கிறாள் என்பதே அவன் காதலுக்கு கிடைத்த முதல் வெற்றி என அந்த களிப்பில் அவள் இதழ்களுக்குள் மூழ்கிப்போனான் .
  • தொடரும் 

Advertisement