Advertisement

காதல் அணுக்கள் -17
நீ யாருனு எனக்கு தெரியும் நான் யாருனு உனக்கு தெரியும் நம்ப ரெண்டு பேரும் யாருனு ஊருக்கே தெரியும் என்ற ரிங்க்டோனை கேட்டு அலுவலகத்தில் எல்லோரும் வித்தியாசமாக பாலாஜியை பார்த்தனர் . அங்கு தமிழ் தெரிந்தோர் மட்டும் ஒரு நமட்டு சிரிப்புடன் பார்த்து நின்றனர் . அது தன் நண்பன் சந்தீப்பிற்காக ப்ரேத்யேகமான ரிங்க்டோன் என்பதால் அழைப்பது யாரென தெரிந்து பாலாஜி முகத்தில் புன்னகை குடிகொண்டது . போனை அட்டென்ட் செய்து சொல்லுடா நல்லவனே அதிசயமா இந்த நேரத்துக்கு கூப்பிட்டிருக்க ?
ஏன்டா சொல்லமாட்ட நீ பாட்டுக்கு காதல் மன்னன் ரேஞ்சுக்கு வளைச்சு வளைச்சு லவ் பண்ணுறே அதுக்கு முன்னாடி நான் என்ன பண்ணாலும் எடுபடமாட்டீங்குது . அதுவும் உன் தங்கச்சி இருக்காளே சந்தியாகிட்ட இந்நேரம் உன் புராணம் தான் .
ஹா ஹா விடு மச்சான் என் தங்கச்சி சொல்லாட்டி என்ன ? இன்னும் நம்ப ஏரியால இருக்குற அங்குல்ஸ் அண்ட் ஆண்டிஸ்க்கு  எல்லாம் நீ தான் இன்னமும் பெவரைட் . நீ ஒரு ஆண்ட்டி ஹீரோ மச்சான் .
வேணாம்ப்பா சாமி .ஒரு ஆணியும் புடுங்கவேண்டாம் . நான் என் பொண்டாட்டிக்கு மட்டும் ஹீரோவா இருந்த போதும் . இன்னும் சிலதும் பேசிவிட்டு உள்ளே வந்தால் சந்தியா அங்கே ஏதோ தீவிரமாக யோசித்து கொண்டிருந்தாள் . சுபி மேலே அறையில் இருந்தாள் .
என்ன சந்தியா எதோ பலமான யோசனை போலிருக்கு ?
ஆமாண்ணா . சுபி சொன்னதைத்தான் யோசிச்சுட்டு இருக்கேன் . இனிமே நானும் என்னை பாசிட்டிவா மாத்திக்க போறேன் என்றால் மகிழ்ச்சியாகவே . என்னதான் ஒரு அண்ணனாக பார்த்து பார்த்து எல்லாம் செய்தாலும் இது போன்ற சென்சிட்டிவான விஷயத்தை எடுத்து கூற ஒரு தோழியோ சகோதிரியோ இருந்தால் தான் சரி . சுபி ,சந்தியா போல் ஒற்றை பெண்ணாய் இருந்து உறவுகள் சரியாக அமையவில்லை என்றால் மிகவும் கஷ்டம் என்று தான் தோன்றியது சந்தீப்பிற்கு.
நமக்கு ஒரு பொண்ணு பொறந்தா கண்டிப்பா அடுத்தது இன்னொரு பொண்ணு இருக்கனும் அதுக்கும் சேர்த்து பிளான் பண்ணனும் . ஒரு மனுஷன் எவ்ளோ தான் பிளான் பண்ணுறது .
அப்போ நாம 3 குழந்தைகள் பிளான் பண்ணிடவேண்டியது தான் . ஒரு பொண்ணு ஒரு பையன் அப்புறம் முதல் பொண்ணுக்கு துணையா இன்னொரு பொண்ணு . சுபியிடம் கலந்து ஆலோசிக்காமல் சந்தீப் பாட்டுக்கு கனவு கண்டுகொண்டிருந்தான் . அவன் மனையாள் அதில் தீயை வைக்க போகிறாள் என்று தெரியாமல் .
மாடியிலிருந்து இறங்கி வந்தவள் கணவனை அந்நேரம் எதிர் பார்க்காதவள் என்னது இவ்ளோ சீக்கிரம் வந்துட்டாங்க நான் அம்மா வீட்டுக்கு போலாம்னு நினைக்கும் போது தான் இதெல்லாம் நடக்கும் என்று நினைத்து கொண்டே சந்தியாவிடம் “என்ன சந்தியா ரெடியா ? போலாமா ? “என்றால் கணவனை கண்டுகொள்ளாமல் . 
இவ கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு வந்தா மொசக்குட்டி ஓவரா தான் பண்ணுறா ?
ஒய் நான் இங்க ஒருத்தன் உக்காந்திருக்கேண்டி . 
அதுக்கு இப்போ என்ன ? வேணும்னா கொடி ஏத்தி எல்லாத்துக்கும் மிட்டாய் குடுத்துறலாமா என்றால் நக்கலாக 
சந்தியா பக்கென சிரித்துவிட அதில் மேலும் கடுப்பானவன் தன் மனையாளை முறைக்க . இவ வேற மொக்க ஜோக்குக்கெல்லாம் சிரிச்சு சிரிச்சு நம்ம கிரைம் ரேட் ஏத்துறாளே என்று உள்ளே பொருமினாலும் வெளியே தன் கெத்தை விடாது எதிர் பார்வை பார்த்து நின்றாள் சுபி . 
சந்தியா ” சுபி முதல்ல உங்க பஞ்சாயத்தை முடிங்க நாம நாளைக்கு கூட போலாம் ஒண்ணும் அவசரமில்லை ” என்று நழுவிக்கொண்டாள் . சுபி சென்று அவனுக்கு காபி எடுத்து வந்தவள் நான் அம்மா வீட்டுக்கு போறேன் நாளைக்கு தான் வருவேன் என்றால் எங்கோ பார்த்தபடி .
ஏண்டி படுத்துற நாம வெளிய போலாம்னு தான் சீக்கிரம் வந்தேன் . அங்க எதாவது முக்கியமான வேலையா இல்ல சும்மா போறியா ? சும்மா தான் போறன்ன நாளைக்கு போயிக்கோ . 
கணவனுடன் வெளியே செல்வது சந்தோஷமாக இருந்தாலும் எத்தனை நாள் நான் எதிர்பார்த்து ஏமாந்துபோயிருப்பேன் இன்னைக்கு ஒரு நாள் காத்துட்டு இருக்கட்டும் என்றும் மனம் முரண்டியது .
என்னடி பதில் பேசாம முழிச்சுட்டு நிக்குறே என்றான் தோளில் இடித்து . ஹ்ம்ம் கல்யாண வேலை நிறைய இருக்கு நான் அம்மாக்கு கூட மாட ஹெல்ப் பண்ணனும் என்னால எங்கயும் வரமுடியாது . எங்க அம்மாக்கு ஹெல்ப் பண்ண யாரு இருக்கா ? அண்ணாவும் ஊருலே இருக்கான் நானும் இங்க இருக்கேன்.  நீங்க வீட்டு மாப்பிள்ளையா எதாவது ஹெல்ப் வேணுமான்னு கேட்டுருக்கீங்களா ? என்று பொரிந்து தள்ளினாள் .
வெளிய போலாம்னு தானே டி சொன்னேன் அதுக்கு இத்தனை பேச்சா ? நான் அத்தைகிட்ட பேசிகிட்டு தான் இருக்கேன் . இந்த வீக்கெண்ட்  கூட நாங்க கல்யாண வேலையா டி நகர் போகிறோம் உனக்கு தெரியுமா என்றான் நிதானமாக .
அவசரப்பட்டு வார்த்தைய விட்டுடமோ என்று யோசித்தவள் அசடு வழிந்தபடி அம்மாவும் என்கிட்ட ஒண்ணும் சொல்லலே நீங்களும் சொல்றதில்ல அப்புறம் எப்படி எனக்கு தெரியும் என்று பாலை அவனுக்கே திருப்பிவிட்டாள் .
நல்ல சமாளிக்கரடி . இப்படியே டைம் வேஸ்ட் பண்ணாம கிளம்பு போலாம் என்றான் .
ஓவர் சீன் உடம்புக்கு ஆகாது சுபி அவன் நல்ல விதமா பேசும் போதே கிளம்பிடு என்று புத்தி எடுத்துரைத்தது . சரி நீங்க இவ்ளோ தூரம் சொல்றதுனாலே வரேன் என்று பிக்கு செய்து கொண்டு கிளம்பினாள் .
கிளம்புவதற்கு முன் சந்தீப் சாரதாவிடம் அம்மா நைட் வர லேட் ஆகும்மா டின்னர் வெளிய பாத்துக்குறோம் என்று கூறினான்.
டேய் மாமா ஒட மூத்த சம்பந்திக்கு பத்திரிகை வெக்கணும்னு சொன்னேன . இன்னைக்கு தான் நீ சீக்கிரம் வந்துருக்க ஒரு எட்டு போய் குடுத்துட்டு வந்துரலாம்னு நினைச்சேன் . உன் கல்யாணத்தப்போ அவங்க சிங்கப்பூர் போயிருந்தாங்க அதனாலே கூப்பிடலே இந்த கல்யாணத்துக்காவது கூப்பிடணும் இல்லன்னா மாமா தப்பா எடுத்துக்குவாரு .
அம்மா 1ஸ்ட் சர்கிளுக்கு மட்டும் நேருல கொடுப்போம் மித்ததெல்லாம் போஸ்ட் பண்ணிடலாம்னு தானே பேசுனோம் இப்போ என்னமா ?
மாமா போன் பண்ணாரு அவரு சம்பந்திய நேருல போய் கூப்படணும்னு எதிர் பாக்குறாரு என்றார் .
அம்மா இப்போ மாமக்காக போய் இவங்கள கூப்பிட்டா அப்புறம் பெரியம்மா அவங்க சாமந்திங்களை நேருல கூப்புடளேன்னு கோச்சுக்க மாட்டாங்களா . அதனாலே மாமாகிட்ட நீங்களே சொல்லிடுங்க. லேட் ஆச்சு  நாங்க கிளம்புறோம் .
அவர்கள் சென்றவுடன் சாரதா கிஷோரிடம் வந்து தலைக்கு மேல கல்யாண வேலை கிடக்குது அதை பார்க்காம இவன் பொண்டாட்டியோட வெளிய போறான் நீங்க இதெல்லாம் கேட்ககூடாதா என்று குறைபட்டு கொண்டார் .
விடு சாரதா அவங்களும் புதுசா கல்யாணம் ஆனவங்க தானே . அவனுக்கு தினமும் ஆபீஸ் வேலையே சரியா இருக்கு ,இன்னைக்கு தான் ரொம்ப நாள் கழிச்சு நேரம் கிடச்சுருக்கு  அவங்க ரெண்டு பெரும் சந்தோசமா போயிட்டு வரட்டும் விடு .
கல்யாணம் முடிஞ்சதுக்குப்புறம் அவன் பொண்டாட்டி கூட வெளிய போகட்டும் யாரு வேண்டாங்குறா என்றார் அப்போதும் 
கிஷோர் அழுத்தமாக சாரதாவை பார்த்து அவன் வெளிய போனது உனக்கு பிரச்சனையா இல்லை சுபி கூட போனது உனக்கு பிரச்சனையா என்று சரியாக கேட்டார் .
தான் இவ்வளவு சொல்லியும் அதை கேட்காமல் மனைவியுடன் வெளியே போவதற்கு முக்கியத்துவம் குடுத்தது அவருக்கு பிடிக்கவில்லை . சந்தீப் சொன்ன நியாமான காரணங்களை அவர் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை .
சாரதாவின் அமைதியே கிஷோருக்கு தேவையான பதிலை கொடுத்தது .
இங்கப்பாரு சாரதா உனக்கு தெரியாதது இல்லை நாம பொண்ணுக்கு குடுத்து பெண்ணை எடுத்துருக்கோம் நீ சும்மா சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் சுபி கிட்ட கோச்சுட்டு குறை கண்டுபிடிச்சுட்டு இருந்தா அது நம்ம பொண்ணு சந்தியாவை தான் பாதிக்கும்.
சித்ரா நல்ல மாதிரி தான் . நம்ம பொண்ணை நல்லா பாத்துக்குவா அதே போல தான் நீயும் சுபியை  பார்த்துக்கனும் . நீ சுபிக்கிட்ட மாமியார் அதிகாரத்தை காட்டணும்னு நினைச்சா சித்ராவுடைய குணமும் மாறி போயிடும் ஞாபகம் வெச்சுக்கோ என்று எழுந்து சென்றுவிட்டார் .
அவர் சொல்வது புத்திக்கு உரைத்தாலும் மனதுக்கு ஏற்புடையதாக இல்லை . தன் பிள்ளை தனக்கு பின்பு தான் மற்றவருக்கு என்ற தாயின் மனம் போட்டிபோட்டது .
இங்கே சுபியை மாலுக்கு அழைத்து வந்த சந்தீப் சுபிக்கு அவனே பார்த்து பார்த்து சில பார்ட்டிவெர் டிரஸ் செலெக்ட் செய்தான் . பின் அங்கிருக்கும் ஒரு நகை கடைக்கு அழைத்து சென்று SS என்ற எழுத்தில் கற்கள் பதித்த பென்டென்ட் ஒன்று வாங்கி பரிசளித்தான் . இத்தனை நாள் அவனுடன் நேரம் செலவழிக்க நினைத்தவளுக்கு இந்த மாலை பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது .  அவன் ஒவ்வொன்றும் அவளுக்காக பார்த்து ரசித்து வாங்கியது ,அவளை அப்பட்டமாக சைட் அடித்தது பின் வம்பிழுத்து கேலிபேசியது, உரிமையுடன் அவள் செய்த தவறை திட்டியது இப்பொழுது அவளுக்கு பிடித்த ரெஸ்டாரண்டிற்கு அழைத்து வந்து அக்கறையுடன் அவளை மிச்சம் வைக்காமல் சாப்பிடவைத்தது என அவனின் ஒவ்வொரு செயலிலும் காதல் கணவனாக சுபியின் கண்களுக்கு சந்தீப் தெரிந்தான் . 
சுபி  நீ முன்னாடி எண்ட்ரன்ஸில் வெய்ட் பண்ணு நான் புல்லெட் எடுத்துட்டு அங்கே வரேன் என்று சந்தீப் சென்றுவிட்டான் . அப்பொழுது சுபியின் கல்லூரி தோழி ஒருத்தி அந்த ரெஸ்டாரெண்டிற்கு வந்திருந்தால் சுபியை பார்த்ததும் அவளிடம் நலம் விசாரித்துவிட்டு. ஏண்டி என் மேரேஜ்க்கு வரலை . உனக்கு கல்யாணம் முடிஞ்சு பத்து நாள் கழிச்சு தானே எனக்கு மேரேஜ் அச்சு அப்புறம் வரதுக்கு என்ன என்று உரிமையுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தாள் .
அப்பொழுது அங்கு வந்த சந்தீப் இதையெல்லாம் வண்டியில் உக்கார்ந்தபடியே கேட்டுக்கொண்டிருந்தான் . இவ பிரெண்ட்ஸ் எல்லாம் இவளை மாதிரியே தான் இருகாங்க சண்டையில தான் கான்வெர்சேஷன ஆரம்பிப்பாங்க போல என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு அவர்களை கவனித்து கொண்டிருந்தான் .
ஹே நானும் வரணும்னு தான் டி நினைச்சுட்டு இருந்தேன் ஆன எங்கடி விருந்துக்கு கோவிலுக்குனு அப்படியே ஓடிப்போச்சு . சரி நீ சொல்லு மேரேஜ் லைப் எல்லாம் எப்படி போகுது என்றாள் சுபி .
ஹ்ம்ம் சூப்பரா போகுது.  ஹனி மூனுக்கு கோவா போயிட்டு நேத்து தான்  வந்தோம் . நீங்க எங்க போனீங்க ஹனி மூனுக்கு என்றால் தோழி . சுபிக்கு மறுபடியுமா என்று இருந்தது எத்தனை பேருக்கு தான் அவளும் பதில் சொல்லி சமாளிப்பாள் இல்லடி அண்ணா கல்யாணம் வருதுடி அதுனாலே டைம் கிடைக்கலே  , அண்ணா கல்யாணம் முடிஞ்சு தான் போகணும் என்றாள் . அப்போவது போவியா என்று மனசாட்சி கேலி செய்தது . 
சரிடி இதெல்லாம் கோல்டன் பீரியட் திரும்பி வராது மிஸ் பண்ணிடாத என்று இலவச அறிவுரை வழங்கி சென்றாள் .
அவள் சென்றதும் இதுவரை முகத்தில் அவளுக்காக இழுத்து வைத்த சிரிப்பு மறைந்து முகம் வாடி விட்டது .
இதையெல்லாம் சந்தீப் பார்த்து கொண்டிருந்தான் . இன்னும் எத்தனை பேரு இவகிட்ட இப்படி கேட்டாங்களோ தெரியலே . ச்ச கல்யாணம் முடிச்சு டென்ஷனில்லாம பிரீயா மலேசியா போலாம்னு நினைச்சுட்டு இருந்தேன் பட் அதுக்கு முன்னாடியே ஒரு 2 டேஸ் அட்லீஸ்ட் சுபியா எங்கேயாவது கூட்டிட்டு போயிருக்கணும் தப்பு பண்ணிட்டேன்  என்று வாடிய அவள் முகத்தை பார்த்து வருந்திக்கொண்டிருந்தான் .

Advertisement