“ண்ணா” என்று அவரை கலைத்தார் மாசிலாமணி. குருமூர்த்தியின் தலைசிறந்த விசுவாசி.
“டாக்டர் கிளம்பவான்னு கேட்கிறாங்க” என,
“அவர் முழிச்சதுக்கு அப்புறம் தான் கிளம்ப முடியும்ன்னு சொல்லிடு” என்றவரும் அங்கேயே அமர்ந்து கொண்டார்.
“சொல்லிட்டேன்’ண்ணா. ண்ணா” என்றழைத்த மாசிலாமணி, குருமூர்த்தியின் பார்வை கீழே சிதறி கிடந்த தண்ணீரின் தடங்களையே பார்த்திருப்பதில், “குடிக்க எடுத்து தவற விட்டிருக்கலாம்ண்ணா” என்றார்.
“மயக்கம் போடும் போது ஸ்விட்சை ஆன் பண்ணிட்டா மயக்கம் போடுவான்?” என்று கேட்டார் குருமூர்த்தி.
“ண்ணா. உடம்பு ஏதோ பண்ணுதுன்னு தான் தண்ணீர் குடிக்க எடுத்திருக்கார், நம்மளையும் கூப்பிட்டிருக்கார். நம்ம இடதுக்குள்ள வரதுக்கு யாருக்குண்ணா தைரியம் இருக்கு. அதுவும் இந்த ரூமுக்கு போய்” என்றார் மாசிலாமணி.
கட்டிலில்படுத்திருந்தவனைகண்டு, ‘திரும்பமட்டைஆயிட்டானா?’ என்ற குருமூர்த்தியின்முணுமுணுப்புஅவன்காதில்நன்றாககேட்டுவிட்டதாக, பட்டெனகண்திறந்துஅவரைகோவமாகபார்த்தான்.