Advertisement

வேண்டாம் மாமா.. தம்பிக்கு ஊட்டிட்டு நான் சாப்பிடுறேன் நீங்க சாப்பிடுங்க..
 
பரவாயில்ல நீ சாப்பிடு..” ஊட்டிவிட ஆரம்பித்தான்.. தானும் சாப்பிட்டு அவளுக்கும் ஊட்டிவிட ,
 
எங்க அப்பாவும் இப்படிதான் மாமா அவங்க சாப்பிட்டாலும் எங்களுக்கும் ஊட்டி விடுவாங்க.. அதிலயும் நான் என்னோட சாப்பாட்டை சாப்பிடவே மாட்டேன் … அப்பா  சாப்பாட்டை சாப்பிடத்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அம்மாக்கூட அப்பாவ திட்டுவாங்க.. அவங்க மட்டும் இப்ப இருக்கனும் செமயா எனக்கு திட்டுவிழும்..
 
மூவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி சாப்பிட்டு முடித்து அடுத்து ஒரு பெரிய ஷாப்பிங் மாலுக்கு கூட்டி வந்தவன் அங்கிருந்த துணிக்கடையில் ஸ்ருதியை துணி எடுக்கச் சொல்ல அவளும் பிகுபண்ணாமல் ஒரு சுடிதாரை தேர்ந்தெடுத்தாள்.. அள்ளிப்போட்ட சுடிதார்களில் அவளுக்கு பொருத்தமானதை பார்த்தெடுக்க நிறமும் டிசைனும் அவ்வளவு அழகாக இருந்தது.. பெண்கள் ஒருதுணி எடுக்கவே அவ்வளவு நேரமாகும் என்பதை கேள்விப்பட்டவன் ஸ்ருதியின் இந்த செயலில் வியந்து நின்றிருந்தான்.. அவளுக்கு எடுத்து முடித்து ஸ்ரீக்கும் சில உடைகளை தேர்ந்தெடுத்தவள் அடுத்து அஸ்வினுக்கும் பார்க்க அவளை தடுத்தவன்
 
 உனக்குத்தான் ஸ்ருதி இன்னைக்கு பிறந்தநாள்..
 
பரவாயில்ல மாமா எப்பவாச்சும் உங்களுக்கு பர்த்டே வரும்தானே அப்ப இத கொடுக்கிறேன்.. இப்ப இத போட்டு பாருங்க..?” அவர்கள் போட்டிருந்த ஆழ்ந்த மஞ்சள் நிறத்திலேயே அந்த சட்டை இருக்க ஒன்றும் சொல்லாமல் சட்டை மாற்றியவன் அதை கழட்டாமலே போட்டுக் கொண்டான்..
 
என்ன மாமா பில்லுக்கு கொடுக்க வேண்டாம்..??”
 
இல்ல சொல்லிட்டேன்.. இப்பவே போட்டுக்குறேன்.. அந்த கறுப்புநிற பேண்டும் மஞ்சள் நிற சட்டையும் அவனுக்கு பொருத்தமாக இருக்க தன்னை கண்ணாடியில் பார்த்தவன் தன் பின்னால் நின்ற ஸ்ருதி ஸ்ரீயை பார்க்க மூவரும் ஒரே குடும்பமாக இருக்க காலையில் அவர்களை பார்த்ததிலிருந்து நெருடலாக இருந்த அவன் மனம் அப்படியே லேசாகியது..
 
அடுத்து அவளை ஒரு நகைகடைக்கு அழைத்துச் செல்ல அவள் ஒன்றுமே வேண்டாம் என அடம்பிடித்தவள் வந்ததற்கு ஸ்ரீக்கு மட்டும் ஒரு வெள்ளிச்சங்கை வாங்கிக் கொண்டாள்..
 
ஏன் ஸ்ருதி இவ்வளவு அடம்.. நான் வாங்கித்தரக்கூடாதா..??”
 
அப்படியெல்லாம் இல்ல மாமா எங்க அம்மா அப்பாவுக்கு தெரியும் எனக்கு என்ன வாங்கித் தரனும்னு.. இதுவரைக்கும் நான் டிரஸ் தவிர வேற எதையும் வாங்கினது இல்லை.. எப்பவும் அம்மா சொல்வாங்க நகையெல்லாம் ஒன்னு பெத்தவங்க வாங்கி தரனும் இல்லனா என்னோட வீட்டுக்காரர்தான் வாங்கித் தரனும்னு அதான் மாமா எனக்கு அது ஒரு சென்டிமெண்டா வைச்சிருக்கேன்.. வாங்க போகலாம்..” பேசிக் கொண்டிருந்தவள் அந்த நகைக்கடையில் மாட்டப்பட்டிருந்த படத்தை பார்த்து அப்படியே அதிர்ச்சியில் நிற்க அவள் பார்வை போன திசையை பார்த்து அஸ்வினும் அப்படியே நின்றான்..
 
அவன் கையை பிடித்தவள்,” மாமா அந்த படத்தில இருக்கிறவர்தானே அக்காவோட ஆக்ஸிடென்டல இறந்து போனது.. அப்ப அக்கா இவரத்தான் லவ் பண்ணினாளா..
 
கண்ணை மூடி தன்னை கட்டுக்குள் வர முயன்றவன் அப்படியே இறுகி போய் நிற்க.. ஸ்ருதியோ அங்கு மேனேஜர் போல இருந்தவரிடம் சென்று அந்த போட்டோவை காட்டி ஸார் இந்த படத்தில இருக்கிறது…??”
 
 
எங்க முதலாளிப் பையன்மா.. பக்கத்தில இருக்கிறது அவங்க அம்மா..
 
அவங்க பையனா..
 
ஆமாம்மா அவர் இவங்களுக்கு ஒரே பையன் .. செல்லமா வளர்த்தாங்க.. அந்த பையன் ஒரு பொண்ண லவ் பண்ணினாரு போல ஆனா அத அந்த பொண்ணு புரிஞ்சுக்கல.. அந்த பொண்ணுக்கு திடிர்ன்னு கல்யாணம் ஆகவும் அவர் ஒரு மாதிரி பைத்தியம் மாதிரி திரிஞ்சாரு.. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா மனசு மாறிட்டு இருந்து கடைக்கும் அப்பப்போ வரப்போக இருந்தாரு..
 
 ஆனா பாருங்க ஒருநாள் அந்த பொண்ணு இங்க நகை வாங்க வந்திச்சா அதில இருந்து மறுபடியும் அவர் ஒருமாதிரி ஆகிட்டாரு.. அப்புறம் என்னாச்சுன்னே தெரியல ஒரு ஆறேழு மாசமிருக்கும் அந்த பொண்ணும் எங்க தம்பியும் போன கார் ஆக்ஸிடென்ட் ஆயிருச்சு.. அதுல இருந்து எங்க முதலாளி அம்மா பைத்தியம் பிடிச்சவங்க போல இருந்தவங்க அவங்க பையன மறக்க முடியாம தற்கொலை பண்ணி இறந்திட்டாங்க.. இந்த ஷாப்பிங் மாலே அவங்களோடதுதான்மா..
 
 
இவர்கள் இருவரும் பேசிக் கொண்டதை கேட்டுக்கொண்டு அங்கு நின்றிருந்த சேல்ஸ் பெண்கள் இருவரில் ஒருவர் இப்ப எங்க முதலாளி பொண்டாட்டி பிள்ளை ரெண்டுபேரையும் இழந்திட்டு அநாதையா ஆயிட்டாரு.. கல்யாணம் பண்ணிப்போன பொண்ணு அப்படியே போயிருக்கலாம்.. ச்சி அசிங்கம் அதெப்படி கல்யாணம் பண்ணியும் மத்த ஆம்பளக்கூட பழகதோனும்..
 
அவ புருசன் அதுக்கு இடம் கொடுத்தான்னா அவன் எப்படிபட்ட கேவலமானவனா இருக்கனும்.. அதுக்கு எதுக்கு அவன் கல்யாணம் பண்ணனும்.. அவன் அந்த பொண்ண கண்டிக்காததால இப்ப ஒரு குடும்பமே அழிஞ்சுப்போச்சு..  இதுக்கெல்லாம் காரணம் என்னக்கேட்டா அவ புருசன்னுதான் சொல்லுவேன்..
 
பொண்டாட்டி யார்கூட பேசுறா பழகுறான்னு தெரியாம இப்படி ஊர்மேய விட்டிருக்கான்னா அவனெல்லாம் ஆம்பளையே இல்லமா…??” அவர் இன்னும் இன்னும் பேசிக் கொண்டே இருக்க ஸ்ருதியால் காது கொடுத்து கேட்க முடியவில்லை.. ஸ்வேதாவை அவ்வளவு பேச்சு ஒழுக்கமில்லாதவள், கேடு கெட்டவள். இன்னும் ஏதேதோ பேச ஸ்ருதியோ அப்படியே திக்பிரம்மை பிடித்து நின்றிருந்தாள்.. எவ்வளவு நேரம் நின்றிருந்தாளோ ஸ்ரீக்குட்டி அவள் கன்னத்தை பிடித்து தன் பக்கம் திருப்பியிருக்க தன்னை அறியாமல் கண்ணீர் வழிந்திருந்தது..
 
ஒன்றும் சொல்லாமல் அஸ்வின் அருகில் வந்திருக்க இருவரும் அந்த ஷாப்பிங் மாலை விட்டு வெளியில் வந்திருந்தனர்..  காரை கிளப்பியவன் ஸ்ருதி அழுவது தெரிந்தாலும் ஒன்றும் சொல்லாமல் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்..
 
ஸ்ருதி எதற்கு அழுதாள் என்று சொல்ல முடியாமல் அழுதாள்.. ஆசை ஆசையாக வளர்த்த அக்கா இவ்வளவு அசிங்கமான பேர் எடுத்ததற்காக அழுவதா யார் யாரோ சம்பந்தபடாதவர்கள் அவளை திட்டுவதற்காக அழுவதா இல்லை எந்த பிரச்சனையிலும் சம்பந்தபடாமல் வெளிநாட்டில் இருந்தவனுக்கு இவ்வளவு அவமானம் என தன் மாமாவிற்காக அழுவதா இல்லை அக்காவை காதலித்த ஒரே காரணத்தால் இறந்த அந்த பையனை நினைத்தா அந்த பையன்மேல் உயிரையே வைத்திருந்த அவன் தாயை நினைத்தா எதற்கு அழுவது என தெரியாமல் அழுதழுது முகம் வெளிறி முகமெல்லாம் ரோஸ்நிறமாக மாறிக் கொண்டிருந்தது..
 
காரை அப்படியே ஒரு பார்கின் அருகில் நிறுத்தியவன் அழுதுகொண்டிருந்த ஸ்ருதியின் கையை பிடிக்க அவளோ அதுவரை தன் கையால் முகத்தை மூடிக் கொண்டு அழுதவள் இப்போது சத்தமாக கதறி அழ ஆரம்பித்தாள்.. சற்று நகர்ந்து அவன் மார்பில் தலை சாய்ந்திருக்க அவன் அவள் தலையை வருடியபடி பேசாமல் இருந்தான்.. எவ்வளவு நேரம் அழுதாலோ சத்தம் குறைந்து தேம்பலில் வந்து முடிந்திருக்க அஸ்வினும் கொதிக்கும் தன் மனதை ஆற்ற வழியில்லாமல் அப்படியே இருந்தான்..இருவரில் யார் யாரிடம் ஆறுதல் பெற்றார்கள் என்றே தெரியவில்லை..
 
விடுடா… விடு இப்படியே அழுதா உனக்கு தலைவலிதான் வரும்..
 
தன் முந்தானையால் முகத்தை துடைத்தவள்,” ஏம்மாமா அவங்கள ஒன்னுமே சொல்லாம வந்திங்க.. உங்கள தப்பா பேசினவங்கள ஓங்கி ஒரு அறையாவது வைச்சிருக்கலாம்ல..
 
எத்தனை பேரை அப்படி அறைய சொல்ற.. அப்ப நான் தினம் ஒருபத்து பேரையாவது அறையனும்.. அதுவுமில்லாம நானா போய் நான்தான் ஸ்வேதாவோட புருசன்னு சொல்ல சொல்றியா.. நடந்தது என்னன்னு எனக்கு தெரியும் எத்தனை பேருக்கு விளக்கம் கொடுக்கச் சொல்ற..
 
இப்போதுதான் அன்று அஸ்வின் குடித்துவிட்டு பேசியது நியாபகத்திற்கு வந்தது.. இப்படி மனசு கஷ்டப்படுற மாதிரி பேசியிருப்பாங்களோ.. ச்சே அது தெரியாம நாமளும் அன்னைக்கு அப்படி பேசியிருக்க கூடாது..
 
அவளை தன் மார்பில் இருந்து தூக்கி கலைந்திருந்த தலையை கோதி சரி செய்தவன் ஆங்காங்கே கலைந்திருந்த குங்குமத்தை தன் கர்சிப்பால்  துடைத்துவிட்டு, உன் முகத்தை கண்ணாடியில பாரு எப்படி சிவந்து போயிருக்கு..?”அவள் ஒன்றும் பேசாமல் அப்படியே கார் சீட்டில் சாய்ந்து அமர்ந்து விட்டாள்..
 
ஏம்மாமா ஆக்ஸிடென்ட் எப்படி ஆச்சுன்னு உங்களுக்கு தெரியுமா..??”
 
ம்ம் தெரியும் ஹாஸ்பிட்டல்ல இருந்து எனக்குத்தான் முதல்ல போன் பண்ணினாங்க..
 
எப்படி மாமா..
 
ப்பச் ஒரே நாளுல எல்லாம் பேசவேண்டாம் ஸ்ருதி… இன்னைக்கு உன்பிறந்த நாள் நல்ல என்ஜாய் பண்ணுவன்னுதான் ஸ்ரீய கூட்டிட்டு வந்தேன்.. ஆனா நான் எதிர்பார்க்காததெல்லாம் இன்னைக்கு நடந்திருச்சு..
 
அந்த பையன் இறந்தப்போ ஏதோ ஒரு ஷாப்பிங் மால் வைச்சிருந்தாங்கன்னு கேள்விப்பட்டேன்.. ஆனா இதுதான்னு எனக்கு தெரியாது தெரிஞ்சிருந்தா உன்னை அங்க கூட்டிட்டு போயிருக்கவே மாட்டேன் இன்னைக்கு இது போதும்.. இன்னொரு நாள் இதப்பத்தி பேசுவோம்..
 
அப்புறம் இங்க நடந்ததெல்லாம் நமக்குள்ளயே இருக்கட்டும்.. உங்க அம்மா அப்பாவுக்கோ இல்ல.. எங்க அம்மாவுக்கோ தெரிய வேண்டாம்.. நீயும் இதெல்லாம் மறக்க முயற்சிப்பண்ணு.. அவள் கையை அழுத்திவிட்டு காரை ஸ்டார்ட் செய்ய ஸ்ரீக்குட்டி ஸ்ருதி மடியில் தன் கையில் வைத்திருந்த பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான்.. அதன் பிறகு அவ்வப்போது ஸ்ரீயின் மழலை குரல் தவிர எந்த சத்தமும் இல்லை ஆளுக்கொரு சிந்தனையில் வர ஹாஸ்டல் வரவும் ஸ்ரீயோடு இறங்கியவள்,
 
 மாமா ஸ்ரீக்குட்டிய நானே வைச்சிருக்கேன் நைட் போகும்போது வாங்கிக்கிறிங்களா..?”
 
பெருமூச்சுவிட்டவன் ம்ம்ம் குட்டிக்கு என்ன வேணுமோ எடுத்துக்கோ.. அவன் தன் காரை கிளப்ப இதுவரை இருந்த ஸ்ருதி சற்று வளர்ந்துவிட்டாளோ எனும் மனநிலையில் ஸ்ரீக்குட்டியோடு உள்ளே நுழைந்தாள்…
 
                                                  
                                                                           இனி……….?????

Advertisement