Advertisement

காட்டு ரோஜா என் தோட்டத்தில்
 
                                                    அத்தியாயம்  –  8
 
 
ஸ்ருதியும் ஸ்ரீயும் வர இருவரும் ஒரே மாதிரி மஞ்சள் உடை.. அப்படியே இரு சூர்யகாந்தி பூக்கள் போல சிறிதும் பெரிதுமாய் இருந்தவர்களை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை.. ஸ்ருதி மஞ்சள் நிறத்தில் ஒரு டிசைனர் சேலையும் ஸ்ரீக்கு அதே நிறத்தில் அப்படியே புஸ்ஸு புஸ்ஸுவென்று முன்னால் பூனைக்குட்டி உருவம் பொதிந்த பனியன் டிராயர்…
 
இவன் இந்த டிரஸ்லயா வந்தான்..??”
 
இல்ல மாமா அன்னைக்கு பிரண்ட்ஸோட ஷாப்பிங் போகும்போது வாங்கினேன்.. என்னோட டிரஸ்க்கு மேட்ச்சா இருக்குல.. அதான் மாத்தினேன்.. சேம் பிஞ்ச்..” அவன் கன்னத்தில் முத்தமிட என்னவென்று தெரியாமலே ஸ்ரீக்கு அப்படி ஒரு சிரிப்பு..
 
அஸ்வின் தன்னை குனிந்து பார்க்க சம்பந்தமே இல்லாமல் நல்ல மைஊதா நிறத்தில் சட்டையும் சந்தன நிற பேண்ட்டும் போட்டிருந்தான்.. அவனுக்குள் ஒரு ஏமாற்றம்.. நாமளும் இந்த கலர்ல ஒரு சட்டை எடுக்கனும்..
 
அவளுக்கு மல்லிகை பூ வாங்கிக் கொடுத்தவன் உடைக்கு ஏற்றாற்போல ஒரு மஞ்சள்நிற ரோஜாவை வாங்கி நீட்ட அவளுக்கு முன்னால் ஸ்ரீக்குட்டி அதை வாங்கியிருந்தான்.. தரமாட்டேன் என அடம்பிடித்தவனிடம் விளையாட்டு காட்டியபடி அதை வாங்கி அவளிடம் கொடுத்து அவள் பூ வைக்கும்வரை ஸ்ரீயை தான் வைத்திருந்தான்..
 
அவர்களோடு கிளம்பி நேராக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு காரை விட கோவிலில்  கூட்டம் அதிகம்தான்.. சற்று நேரம் வரிசையில் காத்து நிற்க ஸ்ருதி ஸ்ரீயை விடவில்லை.. காரிலிருந்து அவனுக்கு தேவையான பால்,பிஸ்கெட், துண்டு, தண்ணீர் என எல்லாவற்றையும் தன் ஹாண்ட் பேக்கிற்குள் வைத்திருந்தவள் அவனை பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டாள்..
 
முன்னால் ஸ்ருதி ஸ்ரீயை வைத்துக் கொண்டு நிற்க அவர்களை அணைத்தாற் போல அஸ்வின் நின்றிருந்தான்.. அவர்களுக்கு பின்னால் இரு பெண்கள் இந்த ஜோடியை பார்த்து ,
 
ரெண்டு பேரும் அவ்வளவு பொருத்தமா இருக்காங்கள்ல.. இந்த பொண்ணுக்கு ஏத்த பையனா இருக்கான்.. அதைவிட அவங்க பையன பாரேன் அம்மா அப்பா ரெண்டு பேரோட முகச்சாட அப்படியே இருக்கு.. அம்மாவோட கலர் அப்பாவோட சாயல்ன்னு ரொம்ப அழகா இருக்கான்..
 
 தன் போக்கில் அவர்கள் அஸ்வின் ஸ்ருதியை பற்றி பேசிக் கொண்டிருக்க இப்போதுதான் ஸ்ரீயை நன்கு உற்று பார்த்தான்.. ஸ்ருதியோ இந்த கூட்டத்தினால் ஸ்ரீக்கு வியர்த்து வழிய அதை துடைத்தபடி தன் கவனத்தை எல்லாம் ஸ்ரீமேல்தான் வைத்திருந்தாள்..
 
ரொம்ப நேரமா நீயே வைச்சிருக்க குடு நான் வைச்சிக்குறேன்..?”
 
இல்ல மாமா பரவாயில்ல..
 
அஸ்வின் தன் கர்சிப்பால் அவர்கள் இருவருக்கும் வழிந்த வியர்வையை துடைத்து விட ஸ்ரீக்கு தூக்கம் சொக்கியது போல ஸ்ருதியின் தோளிலேயே தூங்க ஆரம்பித்தான்..
 
இருவரும் மீனாட்சி  அம்மனை தரிசித்துவிட்டு வெளியில் வர மணி பதினொன்றுக்கு மேலாகி இருந்தது..
 
ப்பா செம கூட்டம் மாமா… தங்கள் காரை ஒரு நல்ல ஜூஸ் கடையாக பார்த்து நிறுத்தியவன் ,
 
ஏதாவது ஜூஸ் மட்டும் இப்ப சாப்பிடுவோம்.. கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா லஞ்ச் எடுத்துக்கலாம்.. ஸ்ரீயை வாங்கியவன் தன் தோளில் போட்டு தட்டிக் கொடுக்க அவன் தன் தூக்கத்தை தொடர்ந்தான்.. ஜூஸ்குடித்து காரை கிளப்பவும் ஸ்ரீயை தன் மடியில் வாங்கி கொண்டவள்,
 
மாமா உங்களுக்கு ஆபிஸ் இல்லையா..?”
 
கொஞ்சம் வேலை இருக்கு லஞ்ச் முடியவும் அங்க போய்ட்டு உன்ன ஷாப்பிங் கூட்டிட்டு போறேன்..
 
வேணாம் மாமா சாப்பிடவும் என்னை ஹாஸ்ட்ல விட்டுருங்க நான் ஸ்ரீயோட இருக்கேன் நீங்க வேலை முடிஞ்சு கிளம்பும் போது தூக்கிட்டு போங்க..
 
இல்ல பரவாயில்ல… ஏன் நான் எதாவது வாங்கி கொடுத்தா வாங்கிக்க மாட்டியா..?”
 
அப்படியெல்லாம் இல்ல.. என்கிட்ட எல்லாமே இருக்கு மாமா நீங்க என்ன வாங்கி தரப்போறிங்க.. ஹாஸ்டலுக்கு போனா கொஞ்ச நேரம் ஸ்ரீயோட விளையாடுவேன்..
 
ஆமா நீ பச்சபுள்ளை பாரு ஸ்ரீயோட விளையாட பேசாம இரு..
 
அவன் முகத்தை பார்க்க ஏதோ கோபம் போல தெரியவும் ஸ்ருதி பேசாமல் வேடிக்கை பார்க்கத் துவங்கினாள்.. அதற்குள் அவனுக்கு இரண்டு மூன்று போன் கால்கள் வந்திருக்க தன் காரை அலுவலகம் நோக்கி திருப்பியிருந்தான்..ஒரு அரைமணி நேரம் வேலையிருக்கு அத முடிச்சிட்டு சாப்பிட போவோம்..
 
ம்ம் சரி மாமா..
 
ஐந்தடுக்கு கட்டிடத்தில் மூன்றாவது தளத்தில் அவர்கள் அலுவலகம் இருக்க உள்ளே அழைத்து சென்றவன் தன் கேபினுக்கு அழைத்துச் செல்ல அங்கு இருந்தவர்கள் அவளை ஆச்சர்யமாக பார்த்தார்கள்.. பாஸோட ஒரு பொண்ணா…!!!
 
ஸ்ருதியை அவர்கள் ஸ்வேதாவின் இறுதிச்சடங்கின் போது பார்த்திருக்க அடையாளம் தெரிந்தது.. இவளோ அந்த ஆபிஸையே ரசித்துக் கொண்டு வந்தாள்..
 என்ன ஸ்ருதி இப்படி பார்க்கிற..??”
 
ஆபிஸ் சூப்பரா இருக்கு மாமா..
 
நீயும் கம்பியூட்டர்தான படிக்கிற முடிச்சதும் ஏதாவது வேலைக்கு போற ஐடியா இருக்கா.. இல்ல மேல படிக்க போறியா..??”
 
ரெண்டும் இல்ல மாமா இந்த படிப்பு முடியவும் அம்மா அப்பாவோடதான் இருக்கப் போறேன் எல்லாம் அப்புறமா யோசிச்சுக்கலாம்.. ஏன் மாமா எனக்கு வேலை ஏதாவது போட்டுத் தரப்போறிங்களா..??”
 
ஹாஹாஹா ஏம்மா இந்த கொலைவெறி நானே ரொம்ப கஷ்டப்பட்டு இந்த கம்பெனிய ஆரம்பிச்சிருக்கேன்.. நான் ரொம்ப பாவம் நீ என்னன்ன சேட்டை பண்ணுவன்னு உன்னோட ஹாஸ்டல் வார்டன் என்கிட்ட சொல்லிட்டாங்க.. நீ ஹாஸ்டலவிட்டு போனா அவங்க மொட்டை போடுறதா வேண்டியிருக்காங்களாம் நீ அந்த அளவுக்கு நல்லவளாமே..??”
 
அந்த சங்கி மங்கி இப்படியெல்லாம் வேண்டுதல் வைச்சிருக்கா.. வேண்டுதல நிறைவேத்த விடக்கூடாதே… என்ன பண்ணலாம்.. பேசாம அடுத்த டிகிர இங்கயே படிக்கவா..  இன்னைக்கு இருக்கு.. அவங்களுக்கு..??”
 
ஹாஹாஹா…” அஸ்வினுக்கு வாய்கொள்ளாச்சிரிப்பு..
 
அவள் அவனை வித்தியாசமாக பார்க்க கண்களாலேயே என்ன..
 
இல்ல நீங்க சிரிப்பிங்களா.. நீங்க சிரிச்சா ரொம்ப அழகா இருக்கிங்க மாமா.. சூப்பர்..
 
அந்த சிரிப்பு அப்படியே நின்றிருக்க உள்ளே தனியாக இருந்த அறையை காட்டியவன் அங்கிருந்த கட்டிலில் ஸ்ரீயை படுக்க வைக்கச் சொல்லி டிவியை ஆன் செய்துவிட்டு தன் அறைக்கு வந்தான்..
 
ஒரு ஒருமணி நேரம் சென்றிருக்கும் அஸ்வின் மெல்ல அறைக்குள் வர ஸ்ருதி தூங்கியிருந்தாள்.. பேச ஆளில்லாமல் போனை நோண்டிக் கொண்டிருந்தவளுக்கு சற்று நேரத்திலேயே போரடிக்க அப்படியே ஸ்ரீயின் அருகிலேயே தூங்கியிருந்தாள்.. தன் முந்தானையை ஸ்ரீக்கு போர்வையாக்கியிருக்க கதவின் மேல் சாய்ந்தபடி இருவரையும் பார்த்திருந்தவன்.. இந்த பொண்ணுக்கு எப்படி இவ்வளவு பாசம் நம்ம ஸ்ரீ மேல.. அந்த பாசம் ஏன் அவன் அம்மாவுக்கு இல்லாம போச்சு.. பால்குடி மறக்காத பிள்ளைய விட்டுட்டு போக எப்படி மனசு வரும்.. பெண்களுக்கு அழகே தாய்மைதானே.. அது எப்படி ஒரு பெண்ணுக்கு இல்லாம போகும்..
 
ஸ்ருதியின் சேலைக்குள் தூங்கியிருந்த ஸ்ரீ லேசாக கண்விழித்து சினுங்க படக்கென்று கண்விழித்த ஸ்ருதி அப்படியே அவனை வாறி அணைத்திருந்தாள்.. ஸ்ருதியின் தூக்கத்தை பற்றி அறிந்திருந்தவன் ஸ்ரீயின் லேசான சினுகளிலே இவள் விழித்ததை கண்டு ஸ்ருதி குழந்தையா குமரியா என பார்த்து நின்றான்..
 
அவன் பசிக்கு அழுவது போலிருக்கவும்,” என்னடா குட்டி பசிக்குதா..எனக்கும்தான்டா ரொம்ப பசி… நான் ஹாஸ்டல்ல இருந்தாலாவது இன்னேரம் சாப்பிட்டிருப்பேன்.. உங்கப்பா பர்த்டே செலிபிரேசன்னு சொல்லிட்டு ஒரு ஜூஸ மட்டும் வாங்கி கொடுத்துட்டு காலையில இருந்து கொலை பட்டினி போட்டிருக்காருடா.. இப்படி ஒரு பர்த்டே செலிபிரேசன் தேவையா… இப்ப உனக்கும் பசிக்குதா.. வா ரெண்டு பேரும் போய் சாப்பிட ஏதாச்சும் இருக்கான்னு பார்ப்போம்..??” அங்கிருந்த பிரிட்ஜை நோக்கி செல்ல,
 
அவர்களை நோக்கி வந்தவன் ஸ்ரீயை வாங்கியபடி வாங்க சாப்பிட போகலாம்.. ரொம்ப பசிக்குதா..??”
 
ஆமா மாமா ரொம்ப ரொம்ப.. 
 
அவள் முகத்தில் சோர்வை பார்த்தவன் லிப்டிற்குள் நுழைந்து பட்டனை தட்டி  அவளை அணைத்துப்  பிடிக்க ஸ்ருதிக்கோ பசியில் லேசாக மயக்கம் வருவது போலிருந்தது.. இரவு ஹாஸ்டலில் உப்புமா கிண்டியிருந்ததால் அவள் சாப்பிடாமல் படுத்திருக்க காலையிலும் ஒன்றும் சாப்பிடாமல் இப்போது தலை விண் விண்னென்று தெரித்தது..
 
ஸாரி ஸாரி ஸ்ருதி வேலை வரவும் நான் மணிய பார்க்க மறந்திட்டேன்.. காரை வேகப்படுத்தியவன் நல்ல பைஸ்டார் ஹோட்டலை நோக்கி செல்ல மெல்ல பசிமயக்கத்தில் அவன் தோளிலேயே சாய்ந்திருந்தாள்.. ஹோட்டல் வரவும் காரை நிறுத்தியவன் ஸ்ருதிம்மா என்னடா ஆச்சு..??” அவள் கன்னத்தை தட்ட சற்று சுயநினைவுக்கு வந்தவள்
 
ஒன்னுமில்ல மாமா..
 
இருவரும் உள்ளுக்குள் நுழைந்து சாப்பாட்டை ஆர்டர் செய்ய ஸ்ருதியோ சாப்பிடாமல் ஸ்ரீக்கு வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த பருப்பு சாதத்தை ஊட்டத் துவங்கினாள்..
 
ஸ்ருதி சாப்பாட்டை நான் ஊட்டுறேன்.. நீ பசிக்கிதுன்னு சொன்ன சாப்பிடு..??”
 
இல்ல மாமா குட்டி முதல்ல சாப்பிடட்டும்.. அவள் அவனுக்கு ஊட்டுவதில் குறியாய் இருக்க அவள் முகத்தில் இருந்த சோர்வை பார்த்து ஸ்ருதிக்கு இவன் ஊட்ட ஆரம்பித்தான்..
 

Advertisement