Advertisement

மருமகளின் தலையை வருடிக் கொடுத்தவர்,” இனிமேல் இப்படியெல்லாம் ஸ்ருதியை விட்டுட்டு போகாதப்பா.. நீ இல்லாம பாவம் ரொம்ப கஷ்டப்படுறா.. அதுவும் இந்த மாதிரி நேரத்திலதான் கணவன் பக்கத்திலயே இருக்கனும்னு தோனும்.. உண்மையிலே நீ ரொம்ப கொடுத்து வைச்சவன் கண்ணா.. நான்கூட ஆரம்பத்தில ஸ்ரீக்காக உன்னை கல்யாணம் பண்ணிக்கிறாளே எப்படி உங்க வாழ்க்கை போகுமோன்னு நினைச்சேன்..
 
இந்த மூனு மாசத்திலதான் தெரிஞ்சது உன் மனைவி உன்மேல வைச்சிருக்கிற பாசம், அன்பு , காதல்.. நீ கூட நினைச்சிருப்ப என்னடா அவ உன்கூட பேசவே இல்லைன்னு.. நீ அங்கயிருந்து பேசினதெல்லாம் அப்படியே ரெக்கார்ட் பண்ணி வைச்சு எப்பவும் உன்னோட குரலை கேட்டுட்டே இருப்பா.. நைட் தூங்கிறதே இல்ல.. அப்படி கண்ணசந்தா உன்னோட போட்டோ அவக்கிட்ட இருக்கும்..
 
அவளோட சேட்டை , சிரிப்பு , குறுப்பு எல்லாம் மிஸ்ஸிங்.. அவ உன்னோட பொக்கிஷம் பத்திரமா பார்த்துக்கோ.. தான் காதலிக்கிறவங்கள விட தன்னை காதலிக்கிறவங்க கிடைச்சா அதுவே பெரிய வரம்.. அந்த வரம் உனக்கு கிடைச்சிருக்கு.. அத தொலைக்காம பத்திரமா வைச்சிக்கோ..ஸ்ருதிக்கு இன்னைக்கு ஒரு செக்கப் இருக்கு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு அவள டாக்டர்கிட்ட கூட்டிட்டு போ.. நான் போன்ல சொல்லிருறேன்.. கதவை சாத்திவிட்டு செல்ல
 
மனைவியின் முகத்தை பார்த்தவனுக்கு தன்னை அறியாமல் இந்த மூன்று வருட வாழ்க்கை நியாபகத்திற்கு வர முழுக்க முழுக்க இருவரும் காதலை அனுபவித்திருந்தனர்.. அன்றில் பறவைகளை போல ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்ததில்லை.. அவளது குறும்பு, சேட்டை , பேச்சு அனைத்தையும் ரசிக்க ஆரம்பித்திருந்தான்.. அவளும் அவனது ஆளுமை, கோபம், பொறுமை என அனைத்தையும் உள்வாங்கியிருந்தாள்..
 
அவள் நெற்றியில் முத்தமிட்டவன் அவள் கண்கள் , கன்னம் என மெதுவாக முத்த ஊர்வலம் நடத்தி இறுதியில் இதழில் மென்மையாக ஒரு முத்தம் பதிக்க அவளோ வலிக்க வலிக்க அவன் இதழை பற்றியிருந்தாள்.. அதிலேயே அவளது கோபம் தெரிய அந்த வன்மையை பொறுத்துக் கொண்டவன் மெல்ல தன் மென்மையை அவளுக்கு கடத்த கடைசியில் அவள்தான் அவன் வழிக்கு செல்ல வேண்டியிருந்தது..
 
ஸாரி பேபி ஸாரிடா இனிமேல் மாமா இப்படி செய்யவே மாட்டேன்.. ப்ளிஸ்.. ப்ளிஸ் இந்த மாமாவை மன்னிச்சிருடா.. முகத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வயிற்றிற்கு முத்தமிட்டு கொண்டே வர சுளீர் என அவள் வயிற்றில் ஒருவலி.. அவள் வயிற்றில் முத்தமிட்டவனுக்கு லேசான அசைவும் தெரிய சட்டென ஸ்ருதி முகத்தை நிமிர்ந்து பார்த்தான்.. அவள் முகத்தில் வலியின் சாயல் தெரியவும்,” என்னடா பேபி..
 
இப்போது வலி மறைந்திருந்தது.. ஒன்னுமில்ல மாமா லேசா வலிச்ச மாதிரி இருந்திச்சு.. அவன் மார்பில் சாய்ந்து கொண்டவளுக்கு அடுத்த ஐந்து நிமிடங்களில் அடுத்த வலி தெரிய இந்த முறை வலி சற்று பெரியதாகவே இருந்தது.. அவனின் கையை பிடித்து அழுத்தி அந்த வலியை பொறுத்துக் கொண்டவள்,
 
 மாமா அத்தை, அம்மாட்ட சொல்லுங்க எனக்கு வலி ஆரம்பிச்ச மாதிரி இருக்கு..” முகத்தில் வியர்வை ஆறாக பெருக அவள் இதயம் துடிக்கும் ஓசை இவன் மார்புக்கு கேட்டது.. தன் கையை அழுத்தியிருந்ததிலேயே அவளின் வலியை உணர்ந்தவன் அவளை விலக்காமல் அங்கிருந்தபடியே தாயை சத்தமிட்டு அழைக்க அடுத்த ஐந்து நிமிடங்களிலேயே காரில் இருந்தார்கள்..
 
ஏற்கனவே கோகிலா எல்லாப் பொருட்களையும் தயாராக வைத்திருந்ததால் சீக்கிரமே கிளம்பியிருக்க அன்று முழுதும் விட்டு  விட்டு வலி வந்து மாலைதான் அவர்களின் செல்வ மகன் இந்த பூமியில் பிறந்திருந்தான்.. ஸ்ரீ பிறக்கும் போது அஸ்வின் வெளிநாட்டில் இருந்திருக்க இப்போது தன் மனைவி பிரசவ வலியில் துடிப்பதை பார்த்து இவன்தான் பயத்தில் வெலவெலத்து போயிருந்தான்.. ஸ்ருதியை ஒரு பாடு படுத்திவிட்டு மகன் பிறந்திருந்தான்.. குழந்தை அப்படியே அஸ்வினை வைத்துரித்திருந்தது..
 
மகனை முத்தமிட்டவன் தாயிடம் கொடுத்து மனைவியிடம் செல்ல வாடிய கொடி போல படுத்திருந்தவள் அவனை பார்த்து லேசாக சிரிக்கவும் அவனால் தாளவே முடியவில்லை.. என்னடா இவ்வளவு கஷ்டப்பட்டுட்ட.??”.
 
அதெல்லாம் ஒன்னுமில்ல மாமா.. குழந்தை பிறக்கும் போது நீங்க என்கிட்ட இருக்கனும்னு நினைச்சேன்.. அதே மாதிரி வந்துட்டிங்க.. வராம இருந்திருந்தாதான் என்னால தாங்கியிருக்க முடியாது.. இப்ப நீங்க கிட்ட இருக்கும் போது நான் எல்லாத்தையும் பொருத்துக்குவேன்..
 
அஸ்வினுக்கு தோன்றியது ஒன்றுதான்.. யார் சொன்னது ஆண்கள்தான் வலிமையானவர்கள் என்று.. பெண்மை என்பது ஒரு வரம்.. ஒவ்வொரு பெண்ணும் ஒரு உயிரை இந்த பூமிக்கு கொண்டுவர தன் உயிரை பணயம் வைக்கிறாள்.. வக்கிர எண்ணம் படைத்த ஆண்களை இப்படி ஒரு பெண் படும் பிரசவ வேதனைகளையும் வலியையும் அருகில் இருந்து பார்த்தாலே பெண்மையும் மகத்துவம் புரியும் என்பதை உணர்ந்தவனுக்கு தன்னை அறியாமல் கண்கள் கலங்கியிருக்க மனைவியின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு அவளை பூப் போல அணைத்துக் கொண்டான்..
 
பத்து வருடங்கள் கழித்து,
 
அஸ்வின் அப்போதுதான் வெளிநாட்டில் இருந்து வந்திருக்க அவனை கண்டுக் கொள்ளாத அவனது குடும்பம் அவனின் இருமகன்களையும் மகளையும் பள்ளிக்கு கிளப்பும் பணியில் இருந்தார்கள்.. அவனை வாவென அழைக்கக்கூட நேரமில்லை.. அவ்வளவு பிஸி..
 
கோகிலா கிச்சனில் இருந்து கத்திக் கொண்டிருந்தார்.. டேய் சாய் வா பாட்டி தோசை ஊத்திட்டேன்..
 
போ பாட்டி எனக்கு பூரிதான் வேணும்..
 
டேய் டேய் நானென்ன ஹோட்டல்லயா வேலைப் பார்க்கிறேன்.. காலையில இருந்து மாத்தி மாத்தி கேட்டு இப்ப பாரு இட்லி, தோசை, பொங்கல், வடை, கேசரின்னு நீங்க கேட்ட எல்லாத்தையும் செஞ்சுட்டேன்.. இப்ப பூரி கேட்டா என்ன பண்ண.. நாளைக்கு சேஞ்சு தாறேன்.. வாடா பாப்பாவையும் கூட்டிட்டு வா.. உங்க அம்மா எங்க..??”
 
அங்கு சந்திரன் தன் பேத்திக்கு யூனிபார்ம் போட்டுவிட்டு கொண்டிருக்க கற்பகமோ சரணுக்கு கொடுத்த ஹோம்வொர்க்கை செய்து கொண்டிருந்தார்.. சந்திரனுக்கு அடிக்கடி  மாற்றலாகி கொண்டே இருக்க அவரை அலைய வைக்க வேண்டாம் என நினைத்து அஸ்வின் மூன்று வருடங்களுக்கு முன்பே வி ஆர் எஸ் வாங்க சொல்லி தன்னோடு வைத்து பார்த்துக் கொள்கிறான்..
 
ஸ்ருதி பெரிய மகனின் டைரியை பார்க்க அதில் டீச்சரை மீட் செய்யும்படி எழுதியிருந்தார்கள்.. டேய் என்ன பண்ணின நேத்துத்தானே மிஸ்ஸ பார்த்துட்டு வந்தேன்..
 
 ம்மா அது சரண் மிஸ்ஸ தானே பார்த்துட்டு வந்திங்க..??”
 
சரிடா இப்ப உனக்கு என்ன பிரச்சனை..?”
 
என்னை மிஸ் எங்க கிளாஸ் கேர்ள்ஸ்க்கு முன்னாடி திட்டிட்டாங்க.. ஒரே சேமா போயிருச்சு ஸ்டாப் மிஸ் திட்டாதிங்கன்னு சொல்லிட்டே இருந்தேன்.. அவங்க திட்டவும் நம்ம தீபாவளி லெட்சுமி வெடி பாக்கெட்ட பத்தவைத்து அவங்க பேக்ல போட்டுட்டேன்.. அதப்பத்தி கேட்கத்தான் வரச் சொல்லியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.. இல்ல ஸ்கூல் டைம் முடியிறதுக்குல்ளேயே பெல் அடிச்சிட்டேன் அதுக்கா.. இல்ல தண்ணி மோட்டரை ஆன்பண்ணிட்டு அந்த ரூமைப்பூட்டி சாவியை தூக்கி எறிஞ்சிட்டேன்.. அதுக்கா இல்ல காம்பவுண்ட் சுவர் ஏறி குதிச்சு என் கேர்ள் பிரண்ட் கேட்டான்னு பென் வாங்க போயிருந்தேன்.. எதுக்கோ தெரியலைமா..
 
கேட்ட ஸ்ருதிக்கு கண்ணைக்கட்டினாலும்,” டேய் அம்மாவுக்கு பீவர்ன்னு சொல்லிடு.. தாத்தா பாட்டி ரெண்டு பேரும் உங்க ஸ்கூல்ன்னு சொன்னாலே டெங்கு பீவர் வந்த மாதிரி போய் பெட்ல படுத்திருறாங்க.. எதுக்கும் உங்க அப்பாவை அனுப்பிவைக்க முயற்சி பண்றேன்.. எப்படியும் இன்னைக்கு அவர் ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்குத்தான் ஆபிஸ் போவாரு..
 
லேசாக இந்த பேச்சு காதில் விழுந்ததோ அடுத்த இரண்டு நிமிடங்களில் அஸ்வின் அலுவலகத்திற்கு தயாராகிவிட்டான்.. தண்ணீர்கூட குடிக்கவில்லை அவனுக்கும் இரண்டு மூன்று முறை ஸ்கூல் ஹெட்மிஸ்ஸிடம் திட்டு வாங்கிய அனுபவம் இருந்தது..
 
ஹாலுக்கு கிளம்பி வர மகள் வந்து அவன் காலை கட்டிக் கொண்டு செல்லம் கொஞ்சினாள்.. உருவத்தில் அப்படியே ஸ்ருதியை வைத்துரித்திருக்கும் மகளை அவனுக்கு ரொம்பவே பிடிக்கும்.. அவளை தூக்கி கொஞ்சியவன் உள்ளே அறைக்குள் நுழைய போகும் போதுதான் சந்திரன் அவ்வளவு கஷ்டப்பட்டு பேத்தியை கிளப்பியிருந்தார்.. இப்போது பார்த்தால் தலையை கலைத்து வெறும் ஜட்டியோடு நின்றிருந்தாள்..
 
மாமனாரின் பரிதாப முகத்தை பார்த்தவன் வந்த சிரிப்பை கட்டுப்படுத்த பாவம் நாம அவருக்கு ரெஸ்ட் கொடுக்குறோம்ன்னு தேவையில்லாம இந்த வில்லங்கத்தை இழுத்து வைச்சிட்டமோ.. மறுபடி முதலில் இருந்து அனைத்தையும் செய்ய வாசலில் வேன் ஹாரன் விடாமல் ஒலிக்க பாவம் அதே பாவப்பட்ட வேன் டிரைவர்..
 
அவர்கள் காரிலேயே அனுப்பலாம் என முடிவு செய்து டிரைவரோடு அனுப்ப நினைத்தால் இவர்கள் மூவருமே டயரில் காற்றை இறக்கி விடுவது, கண்ணாடியை கல்லால் உடைப்பது, டிரைவரை வண்டி ஓட்ட விடாமல் அவர் மடியில் அமர்ந்து கொண்டு இவர்களே ஓட்டுவது என அவரை படுத்தி எடுக்க டிரைவர் வேலையே வேண்டாம் என ஓடிவிட்டார்.. மூவரும் கிளம்பி வேனில் செல்ல,
 
வீட்டிற்குள் வந்தால் வீடே பாரத போர் முடிந்த போர்களம் போல காட்சியளித்தது.. வீடெங்கும் அவர்கள் உடைகள், விளையாட்டு பொருட்கள், சோபா குசன் , கிழிந்த பேப்பர்கள் கிடக்க மூன்று பெண்களும் அதை சுத்தப்படுத்தும் வேலையில் இருந்தார்கள்.. எல்லாம் அவர்கள் பள்ளியில் இருந்து வரும்வரைதான்.. வந்தால் மீண்டும் இதே போல்தான்..
 
ஒரு மாதத்திற்கு பிறகு வீடு வந்திருக்கும் கணவனை கூட அவளால் கவனிக்க முடியவில்லை..  காப்பி எடுத்துக் கொண்டு அவர்கள் அறைக்கு சென்றாள் அங்கு கணவன் ஏதோ பைலை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.. முதல்முறை அவளை பிரிந்து வெளிநாடு சென்றதுக்கு அவ்வளவு கோபப்பட்டவள் குழந்தை பிறந்து ஆறு மாதம் கழித்து அதே போல ஒரு சூழ்நிலை வர இதை ஸ்ருதியிடம் எப்படி சொல்வது என தயங்கியவன் அன்று இரவே பேபி நாம ரெண்டு பேரும் அடுத்த வாரம் ஜெர்மன் போற மாதிரி இருக்கும்.. எப்படியும் வர ஒரு ஆறுமாசமாவது ஆகும்.. டிக்கெட் போடவா..?”
 
லூசாப்பா நீ என்பது போல கணவனை பார்க்க,
 
அவளை அருகில் இழுத்தவன்,” என்னடி இப்படி லுக் விடுற..?”
 
அப்புறம் என்ன மாமா சரண நான் மட்டும் ஒரு ஆளா பார்த்துக்க முடியுமா.. அதோட ஸ்ரீயும் ஒரே ரூம்ல அடைஞ்சே கிடப்பானா.. இங்கன இத்தன பேர் இருக்கோம்.. அங்க போனா நீங்க வேலை மட்டும்தானே பார்ப்பிங்க… நீங்க மட்டும் போங்க ஆறு மாசமோ ஒரு வருசமோ என்னை ஆளவிடுங்க..
 
அவளை கட்டி அணைத்தவன்,” இதத்தானடி போனதரம் நான் படிச்சு படிச்சு சொன்னேன்.. அப்போ அவ்வளவு கோப்பட்டு என்னையும் டென்சனாக்கி பேசமாட்டேன்னு படுத்தி வைச்ச.. இப்ப அதே தான் நீ சொல்ற.. அதுவும் ஆறு மாசம் போறவன.. ஒருவருசம் தங்கச் சொல்ற இதெல்லாம் நல்லாயில்ல பேபி சொல்லிட்டேன்.. மகன்களை மட்டும் பார்த்துட்டு புருசன கவனிக்காம விடுற.. இதெல்லாம் ரொம்ப தப்பு..
 
அவனை கட்டிலில் தள்ளியவள் அவன் மேல் வாகாக படுத்துக் கொண்டு.. தப்பா இருந்தா இப்ப என்ன செய்றதா உத்தேசம்..?” அவனை மையலாக பார்க்க தலையை கொண்டை போட்டிருந்ததால் பிசிறாக இருந்த முடிகள் கற்றையாய் அவள் நெற்றியை மறைத்திருக்க சேலையை பின்குத்தாமல் மொத்தமாக அள்ளிப் போட்டிருந்ததால் அது அவளின் அழகை மறைத்தும் மறைக்காமலும் அவனுக்கு அழைப்பு விட அதற்கு மேல் தாங்காதவன் அவள் வெற்றிடையில் கைவைத்து அழுத்தி கழுத்துக்குள் முகத்தை புதைத்திருந்தான்..
 
யோசனையில் இருந்தவனை கலைத்தது அவளது குரல் ,”என்ன மாமா கண்ண முழிச்சிட்டே தூங்குறிங்களா..?” அவனை உலுப்ப நினைவுக்கு வந்தவன் காப்பியை வாங்கி டேபிளில் வைத்து மனைவியை தன் அருகில் இழுத்திருந்தான்.. அவள் முகத்தை பார்க்க இத்தனை வருடங்களில் அவளிடம் மாற்றமே தெரியவில்லை.. முதல் முதலில் காருக்குள் பிடித்து இழுத்த போது எப்படி இருந்தாளோ அப்படியே அதை விட இன்னும் அழகாக இருந்தாள்..
 
என்ன சேட்டைகள் தான் குறைந்துவிட்டது.. இங்கு இரு கோடுகள் தத்துவம் அழகாக வேலை செய்தது.. இவளை விட  பெரிய சேட்டைகாரர்களை அடக்குவதற்குள்ளேயே இவளுக்கு கண்ணை கட்டியது.. என்னடி மாமா வந்து ஒருமணி நேரமாக போகுது இப்பத்தான் ஆடி அசைஞ்சு காப்பி கொண்டு வர்ற..?”
 
ஹாஹா காப்பி எனக்கு மாமா உங்களுக்கு வேணும்னா நீங்க போய் அத்தைக்கிட்ட கேட்டு வாங்கி குடிச்சிக்கோங்க.. ஒரு வாய் குடித்திருக்க மறுநிமிடம் அந்த காப்பி அவன் வாயில் இருந்தது.. அச்சோ..” என அவனை தள்ளிவிடப்போனவளை அப்படியே தனக்குள் இறுக்கிக் கொண்டான்.. இத்தனை நாள் பிரிவை இருவரும் ஒருவருக்குள் ஒருவர் தேட ஆரம்பித்திருந்தனர்.. ஒரு அரைமணி நேரம் கழித்து அவன் மார்பில் தலைவைத்து படுத்தவள்,” மாமா….
 
ம்ம்.. கண்ணை மூடி அவளை தனக்குள் புதைத்திருந்தான்..
 
மாமா நான் ஒன்னு கேட்கனும்..?”
 
கேளு..
 
ப்பச் முதல்ல சரின்னு சொல்லிட்டு அப்புறம் மாட்டேன்னு சொல்லக்கூடாது..” அவன் கன்னத்தில் அழுத்தி முத்தமிட,
 
முத்தத்தை ரசித்தவன்,” ம்ம் கேளு..
 
அது வந்து ..அது வந்து இன்னைக்கு மட்டும் நீங்க ஸ்கூலுக்கு போயிட்டு வர்றிங்களா..?”
 
இதுவரை இருந்த மோகவலை சட்டென இருந்த இடம் தெரியாமல் ஓட… ஐயோ இப்பத்தான் நியாபகம் வருது எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு..” என் பாத்ரூமை நோக்கி ஓடினான்..அவன் குளித்து வர வாசலிலே நின்றவள்,
 
 மாமா அதெல்லாம் பேச்சு மாறக்கூடாது நீங்கதான் போறிங்க போறிங்க.. மீட்டிங் முடிஞ்சுக்கூட போங்க.. நான் இப்பதான் ஸ்கூலுக்கு போன் பண்ணி சொன்னேன் லேட்டாத்தான் வருவிங்கன்னு..!!”
 
அப்படியே தலையில் கைவைத்து அமர்ந்தவனை பார்க்கும் போது சிரிப்பு வந்தது.. டேய் அஸ்வின் நீ பேசாம அப்பவே ஓடிப்போயிருக்கலாம்.. இவக்கிட்ட ஒரு முத்தம் கொடுக்கப் போய் இப்படி மாட்டிக்கிட்டியே…. அவன் பாவப்பட்ட முகத்தை பார்த்து அவன் அருகில் அமர்ந்தவள் எப்போதும் போல அவன் மேல் இன்னும் இன்னும் காதல் பெருக  அவனை இறுக அணைத்துக் கொண்டாள்..
 
இந்த நாலு அப்ரண்டீஸ்களும் கான்டிராக்டர் நேசமணிக்கு ஸாரி ஸாரி அஸ்வினுக்கு சம்பளமே இல்லாமல் வேலை (வைத்து) செய்து கொண்டிருந்தார்கள்..
 
              வாழ்க வளமுடன்…… முற்றும்…

Advertisement