Advertisement

காட்டு ரோஜா என் தோட்டத்தில்
 
                           இறுதி அத்தியாயம்  -19
 
அஸ்வின் ஸ்ருதி வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்க இருவரின் ஜோடிப் பொருத்தத்தை பார்த்து, அவன் மகிழ்ச்சியை பார்த்து அவனைப்பற்றி, அவன் ஒழுக்கத்தை பற்றி பேசியவர்கள் வாயடைத்து போயிருந்தனர்..ச்சே தொழிலில்தான் அவனை தோற்கடிக்க முடியலைன்னா இப்ப வாழ்க்கையும் அவனுக்கு மறுபடி நல்லதா அமைஞ்சிருச்சே..
 
மனதிற்குள் வன்மம் எழுந்தாலும் சிரித்து கைகொடுத்து வாழ்த்தி செல்ல.. அங்கு ரோகித் வந்து கொண்டிருந்தான்.. ஏற்கனவே ஸ்ருதியை பார்த்து ஜொல்லு விட்டிருந்தவன் இவளின் இந்த அழகில் அப்படியே பார்த்தது பார்த்தபடி வந்தவனுக்கு அஸ்வின் மேல் பொறாமை பொங்கி எழுந்தது..மெல்ல அவர்கள் அருகில் வந்து ஸ்ருதியை பார்த்து  பழைய நியாபகத்தில்,
 
ஹாய் ஏஞ்சல்..!!”
 
ஹாய் அங்கிள் நல்லாயிருக்கிங்களா..??”
 
அங்கிளா…ஆஆஆ ஏஞ்சல் என்னத் தெரியல.. அன்னைக்குகூட பார்ட்டியில பார்த்தோமே.. நீங்க கூட ஸ்மார்ட்கைன்னு சொன்னிங்க…??”
 
அப்படியா நியாபகம் இல்லையே அங்கிள்.. சொல்லியபடி தன் கவனத்தை ஸ்ரீ குட்டி எங்கிருக்கிறான் என்று பார்வையை ஓட்ட வாடிய முகத்துடன் அஸ்வினுக்கு மட்டும் வாழ்த்தை சொல்லி இருவார்த்தை பேசிவிட்டு இறங்கி சென்றான்..
 
அஸ்வின் சிரித்தபடி ,”ஏய் இவன தெரியலையாடி..??”
 
ஏன் தெரியாம இந்த வெள்ளப்பண்ணிதான் அன்னைக்கு பார்ட்டியில என்னை ஏஞ்சல் ஏஞ்சல்ன்னு என் பின்னாடியே வந்து ஜொல்லு ஊத்துச்சே.. அதோட அவங்க கம்பெனிக்கு வேலைக்கு வரச் சொல்லி விசிட்டிங்கார்டு எல்லாம் கொடுத்த அப்பா டக்கருதானே அங்கிள்…
 
வேப்பங்காயை கடித்தது போல முகத்தை சுழித்தவன் ,”அம்மா தாயே நீ போடா வாடான்னு கூட கூப்பிடு இப்படி அங்கிள்ன்னு கூப்பிட்டு என் மனச உடைக்காத.. பாவம் நீ அங்கிள்ன்னு ஒரு தரம் கூப்பிடத்துக்கே காதல் தோல்வி அடைஞ்சவன் மாதிரி அவன் போறான்..மாமா மனசும் தாங்காதுடி..??”
 
ஹாஹாஹா அது ஏன் மாமா அங்கிள்ன்னு சொன்னா மட்டும் உங்களுக்கு பிடிக்கலை..?”
 
அங்கிள் மட்டும்தான்டி பிடிக்கலை ஆனா அன்னைக்கு பார்ட்டி முடிஞ்சவுடன்தான ஐயா உனக்கு முதல் முதலா லிப் டு லிப் கிஸ் பண்ணினேன் அது ரொம்ப பிடிச்சிருந்திச்சு… ப்பா… செம டி..!!”
 
அவன் விலாவில் ஒரு இடி இடித்தவள்,” ஒரு பிள்ளைக்கு அப்பா மாதிரியா பேசுறிங்க.. என்னவோ இப்பதான் காலேஜ் படிக்கிற யூத் மாதிரி.. நீங்க என்னதான் பெர்பார்மென்ஸ் பண்ணினாலும் நீங்க அங்கிள் அங்கிள்தான்.. நீங்க யூத்ன்னு பில்டப் பண்றத எல்லாம் விடுங்க அங்கிள்..
 
ஏய்ய்ய்… பல்லை கடித்தவன்.. அங்கிள்ன்னு சொல்லாத அப்புறம் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது..
 
அதுதான் உங்களுக்கே தெரியலைல … அப்ப பேசாம இருங்க அங்கிள்.. அங்கு அவள் காலேஜ் பிரண்ட்ஸ் வந்து கொண்டிருக்க கணவனை மறந்தவள் அவர்களுடன் ஐக்கியமானாள்..
 
ஸ்ருதியை முறைத்தவன்,” இவக்கிட்ட சொல்லாதன்னு சொன்னாத்தானே அதையே சொல்லுவா.. வீட்டுக்குத்தானே வரணும் அங்க வைச்சுக்கிறேன்.. அவள் தோழிகளோடு அரட்டை அடிக்க வழிசெய்து இவன் சாப்பிடுபவர்களை உபசரிக்கச் சென்றான்..
 
கற்பகத்திற்கு இன்றுதான் மனம் நிறைந்திருந்தது.. தன் மகனின் முகத்தில் தெரியும் சிரிப்பு, மகிழ்ச்சி அவனின் வயதை இன்னும் குறைத்து இளமையாக காட்ட தாய்க்கு பார்க்க பார்க்க தெவிட்டவில்லை..
 
சந்திரனுக்கும் கோகிலாவிற்கும் தன் மகள் முகத்தில் இருந்த சிரிப்பை பார்த்து ஸ்ருதியின் மனது இந்த திருமணத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டது புரிந்தது.. வெளியில் ஒன்றும் காட்டிக் கொள்ளாட்டாலும் மனதின் ஒரு ஓரத்தில் மகள் இரண்டாம்தாரமாக திருமணம் செய்வது கொண்டதில் சந்தோசமாக இருக்கறாளா இல்லையா என உருத்திக் கொண்டே இருந்தது. அது இப்போது மாறி மகளும் மருமகனும் நீண்டகாலம் மகிழ்ச்சியோட சேர்ந்து வாழ இறைவனை வேண்டினார்கள்..  வரவேற்பு எல்லாம் முடிந்து வீட்டிற்கு வரவே மணி பத்துக்கு மேலாயிற்று..
 
ஸ்ரீயை கோகிலாவே தன் அறையில் படுக்க வைத்துக் கொள்ள ஸ்ருதி தன் நகைகளை கழட்டிக் கொண்டிருந்தாள்.. அஸ்வின் ப்ரஷ் ஆகி வந்தவன்,
 
என்ன பேபி ரொம்ப களைச்சு போயிட்டியா..முகம் ரொம்ப சோர்வா இருக்கு.. அவள் கழட்டி வைத்திருந்த நகைகளை அந்தந்த நகை டப்பாக்களில் எடுத்து வைக்க ஆரம்பித்தான்..
 
ரொம்ப நேரம் நின்னுட்டே இருந்ததால கால்தான் மாமா ரொம்ப வலிக்கிது.. ஒரு வெந்நீர் குளியல் போட்டுட்டு வர்றேன்… எல்லாம் சரியாகிடும்..
 
ம்ம்.. குளி.. அப்புறம்.. இன்னைக்கு ரிசப்சன் உனக்கு ஹாப்பியா.. உனக்கு பிடிச்ச டிஸ்ஸெல்லாம் எப்படி இருந்திச்சு..”
 
சூப்பர் மாமா.. என் பிரண்ட்ஸ் எல்லாருமே சாப்பாடு செமயா இருக்குன்னு சொல்லிட்டு போனாங்க… சூப்பர் சூப்பர்..” நைட்டியை எடுத்துக் கொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்திருந்தாள்..குளித்து வெளியில் வர அஸ்வின் கட்டிலில் கால்நீட்டி ரிலாக்சாக அமர்ந்திருந்தான்.. கண்ணாடி முன் நின்று நெற்றியில் பொட்டு வைத்த தன் மனைவியை பார்த்தவனுக்கு காதலும் அன்பும் பெருகியது..
 
இவ என்னோட வாழ்க்கையில வந்த வரம்.. என்னையும் ஸ்ரீயையும் இவளத் தவிர  முழுமனசா யாராலயும் ஏத்துக்கிட்டிருக்கவே முடியாது.. மனைவியின் முகத்தை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை.. இரண்டு நாட்களுக்கு முன் பிரித்து கோர்ட்டப்பட்ட தாலிச் செயின் காது கைகளில் ஏதோ சிறிய நகை எப்போதும் புன்னகை பூக்கும் முகம்..
 
என்ன மாமா சைட் அடிக்கிறிங்களா..?”
 
சைட்டா..!! ச்சீ ச்சீ சும்மா பார்த்துட்டு இருக்கேன்மா…. வடிவேல் பாணியில் இழுக்க,
 
அவன் பக்கம் திரும்பி இடுப்பில் கைவைத்து முறைத்தவள்,” அப்ப நான் சைட் அடிக்கிற மாதிரி இல்லையா.. அசிங்கமா இருக்கேனா அவனை நோக்கி கோபமாக வந்தவள் நீங்க சைட்டடிக்காட்டா போங்க நான் சைட் அடிக்கிறேன்.. எங்க மாமா செமயா இருக்காருல.. அதுவும் இந்த மாதிரி சட்டை இல்லாம..  அவனிடமே அபிப்ராயம் கேட்க..
 
 அவளை இழுத்து கட்டிலில் போட்டவன்,” ஐ லவ் யூடி பேபி.. அவள் மேல் படர்ந்திருந்தான்..
 
அவன் கழுத்தில் மாலையாக கோர்த்தவள் கண்ணடித்து,” நானும் ஐ லவ் யூ மாமா.. என்னோட பிரண்ட்ஸ் எல்லாம் நீங்க ரொம்ப ஹாண்ட்சம்மா இருக்கிறதா சொன்னாங்க.. பார்க்க ரொம்ப நல்லவரா தெரியிறிங்களாம்…
 
அவள் மூக்கோடு மூக்கை வைத்து உரசியவன் ,”அவங்க சொன்னாதானா.. உனக்கு தெரியாதா..??”
 
அவனுடைய அண்மையும் அவன் மேல் வந்த அந்த சுகந்தமும் அவளை கொஞ்சம் கொஞ்சமாக தன்னிலை இழக்க வைத்துக் கொண்டிருந்தது.. ம்ம் சொல்லு..
 
அவனுடைய கிசுகிசுப்பான குரல் அவளுள் மாயம் செய்ய தாளமாட்டாமல் அவன் கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தத்தை பதித்தவள்,” எனக்கும் தெரியும் அங்கிள்..!!”
 
அவள் கன்னத்து முத்தத்தில் லயித்திருந்தவன் ,”அங்கிளா … உன்னை..??” சொல்லிய அவள் இதழை அப்படியே தன் இதழால் பற்றியவன் அவள் கத்தினாலும் விடவில்லை.. கைகளை அவள் உடலெங்கும் படரவிட ஸ்ருதிக்கு இதயம் படபடவென அடித்தது.. இவ்வளவு நேரம் பேசிய வாய் தன்னாலே மூடிக் கொள்ள அவன் வெற்றுடம்பு அவளை இறுக்கிக் கொள்ள சற்று நேரத்திலேயே சத்தம் குறைந்து ஸ்ருதியின் வெட்கச் சினுங்கல்களும், சிரிப்பு சத்தம் மட்டும் கேட்க அஸ்வினின் பிதற்றல்களும் அவன் கொஞ்சல், கெஞ்சல் ஒலிகள் மட்டுமே கேட்க ஆரம்பித்திருந்தது.. அஸ்வின் இந்த முறை மனம் ஒன்றி காதலோடு தன் வாழ்க்கையை துவங்கியிருந்தான்…ஒவ்வொரு நொடியையும் ரசித்து ரசித்து வாழ்ந்தான்..
 
மூன்று வருடங்கள் கழித்து,
 
வாசலில் பள்ளி வேனின் ஹாரன் சத்தம் விடாமல் கேட்க ஆளுக்கொரு பக்கம் ஸ்ரீயை தேடும் பணி நடந்து கொண்டிருந்தது… இங்கேயே இருப்பவனுக்கு எப்படித்தான் வேன் இந்த தெருவில் நுழையும் நேரம் தெரியுமோ.. அந்த நேரம் எங்காவது ஓடி ஒளிந்து கொள்வான்.. அவனை தேடி பள்ளி வேனில் ஏற்றுவதற்குள் குடும்பத்தில் அனைவருக்கும் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிவிடும்..
 
ஸ்ருதி தன் நிறைமாத வயிற்றை வைத்துக் கொண்டு வீடெங்கிலும் தேட கற்பகத்திற்கும் கோகிலாவிற்கும் முடியவில்லை அவனை தேடி தேடி களைத்திருந்தார்கள்.. அவன் ஒவ்வொரு நாள் பள்ளி சென்று வீடு திரும்புவது ராணுவ வீரர்கள் போர்களத்திற்கு சென்று திரும்புவது போலிருக்க கோகிலா தாங்கமாட்டாமல் பொறிந்து கொண்டிருந்தார்..
 
இந்த குட்டி அப்படியே ஸ்ருதி மாதிரியே இருக்கானே.. யூகேஜிக்கே இப்படின்னா இன்னும் பெரிய கிளாஸ் போனா என்னாகும்.. கடவுளே எப்படியாச்சும் எங்கள காப்பாத்துப்பா.. பத்தாததுக்கு இன்னும் பத்துநாளுல இன்னொரு ஆளு வந்து நம்மள என்ன பாடு படுத்த காத்திருக்கோ ஆண்டவா போதும் எங்களுக்கு சோதனை.. முடியல உன்னோட திருவிளையாட வேற யார் வீட்லயாவது காட்டுப்பா நான் ரொம்ப பட்டுட்டேன்.. இவன் யூகேஜி முடிக்கிறதுக்குல்ளேயே 50 பேரண்ட்ஸ் மீட்டிங்கில திட்டுவாங்கிட்டோம்.. இனி அடுத்து சேட்டை பண்ணினா வேற ஸ்கூல்தான்…டிசிய குடுத்துருவேன்னு அன்னைக்கே அந்த ஹெட்மிஸ் சொன்னாங்க.. ஐயோ அம்மா என்னால இனி மேலெல்லாம் அவங்க ஸ்கூலுக்கு போக முடியாது.. பேரண்ட்ஸ் ஏன் வரலைன்னு என்ன கேட்டு தொந்தரவு பண்றாங்க.. மாப்பிள்ளையவே இனி அனுப்ப வேண்டியதுதான்..!!”
 
கோகிலாவின் புலம்பலை கேட்ட கற்பகத்திற்கு சிரிப்பு வந்தாலும் இவ்வளவு சேட்டை செய்யும் பிள்ளையை இப்போதுதான் பார்க்கிறார்.. ஒருநிமிடம்கூட ஒரு இடத்தில் இருப்பதில்லை.. பத்து பிள்ளைகள் செய்யும் சேட்டைகளை இவன் ஒருவனே செய்தான்.. இங்கு நடக்கும் கூத்து தெரியாமல் வேன்காரர் விடாமல் சத்தம் எழுப்பியவர்,
 
 இந்த வீட்ல மட்டும்தான் ஒரே ஒரு பையன ஏத்த அரைமணி நேரம் ஆக்கிருறாங்க.. இவங்களால நான் ஸ்கூல்ல ஹெட்மிஸ்கிட்ட திட்டுவாங்குறேன்..
 
அஸ்வின் தொழில் விசயமாக வெளிநாடு சென்றிருந்தவன் மூன்று மாதங்களுக்கு பிறகு இன்றுதான் வருவதாக இருந்தது..ஸ்ருதி மகனை வீடெங்கும தேடியவள் கடைசியில் மாடியில் சற்று தணிவாக இருக்கும் போர்ட்டிகோவில் படர்ந்திருக்கும் முல்லை கொடிக்கு கீழ் அவனது யூனிபார்மின் கலர் தெரிய,
 
 குட்டி உன்னை பார்த்துட்டேன்.. மரியாதையா மேலவா..??”
 
யூ….. பேட் மம்மி எங்க ஒளிஞ்சாலும் கண்டுபிடிச்சா எப்படி.. நான் வர மாட்டேன்.. இன்னும் அடிக்கு சென்று கொண்டிருக்க,
 
டேய் எதாவது பூச்சி இருக்க போகுதுடா.. அதை அப்பவே வெட்டிவிடுங்கன்னு சொன்னா கேட்கிறாங்களா.. குழந்தை பிறக்கிற சமயத்தில பூக்கிற செடி வெட்டக்கூடாதுன்னு உன் பாட்டி சொல்லிட்டாங்க.. சாதாரண ஆளாக இருந்தால் அப்போதே ஜம்ப் பண்ணி அவனிடம் சென்றிருப்பாள்..
 
இப்போதென்றால் இவனை தேடி இருதரம் மாடியேறி இறங்கியதே மூச்சு வாங்கி கொண்டிருக்க பரவாயில்லை என நினைத்து மாடி சுவற்றில் அமர்ந்தவள் இந்த பக்கம் காலை மெதுவாக தூக்கிப் போட முயல… ஏய் ஏய்.. என பதறியபடி வந்திருந்தான் அஸ்வின்..
 
கணவனை பார்க்கவும் கண்களில் ஒளியுடன் மாமா வந்திட்டாரா…
 
என்னடி பண்ணப்போற.. ??”ஒன்றும் சொல்லாமல் மூச்சு வாங்கியபடி தன் மகனை கைகாட்ட ஒன்றுமே சொல்லாமல் அந்த பக்கம் குதித்தவன் மகனை கைகளில் அள்ளிக் கொண்டு மேலே வந்திருந்தான்..
 
டாடி என கத்தியவன்..ம்மா அப்பா ஊர்ல இருந்து வந்திருக்காங்க.. நான் ஸ்கூல் லீவ்..!!” ஸ்ருதியோ அஸ்வின் மகனை தூக்கவும் அவன் பாடு அவன் அப்பா பாடு என கண்டு கொள்ளாமல் மெதுவாக திரும்பி நடக்கத் துவங்கியிருந்தாள்..
 
டேய் டேய் இனி அப்பா இங்கதான்.. இதுக்கெல்லாம் லீவ் போடாத.. அப்பதான் அப்பா உனக்கு பிடிச்ச கார வாங்கித் தருவேன்.. அப்படியே நைஸ் வைத்து வேனுக்கு தூக்கிச் சென்று உள்ளே விட்டவன் வேன்காரரின் டென்சனான முகத்தை பார்த்து தன் சட்டை பையிலிருந்த பணத்தை அவர் பையில் திணித்து விட்டான்..
 
ஸார் ஸார் வேண்டாம் ஸார்..
 
பரவாயில்ல வைச்சிக்கோங்க.. உங்க பசங்களுக்கு ஏதாவது பிடிச்சதா வாங்கி கொடுங்க… வேனை அனுப்பிவிட்டு உள்ளே வர அங்கு மூன்று பெண்மணிகளும் அப்படியே சோபாவில் அமர்ந்து ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.. இப்போது சந்திரன் வேறு ஊரில் வேலைப்பார்கிறார்.. கோகிலா மட்டும் அங்கும் இங்கும் என அலைந்து கொண்டிருந்தவர் மகளுக்கு பிரசவ தேதி நெருங்கவும் இங்குதான் இருக்கிறார்..
 
மூவரின் முகத்திலும் அப்பட்டமான சோர்வை பார்த்தவன் தானே கிச்சனிற்கு சென்று ஜூஸ் போட்டு கொண்டு வந்து கொடுக்க கோகிலாதான் வாங்க மிகவும் சங்கட்டப்பட்டார்..
 
நீங்க ஏன் மாப்பிள்ள இந்த வேலையெல்லாம் செஞ்சிட்டு தாங்க.. நீங்க உட்காருங்க..
 
அத்தை இதில என்ன இருக்கு நீங்க எனக்கும் அம்மா மாதிரிதான்.. பெத்த பையன் கொடுத்தா வாங்கிக்க மாட்டிங்களா.. எத்தனை தரம் சொல்லியிருக்கேன்.. இப்படி சட்டு சட்டுன்னு எழுந்துக்காதிங்கன்னு.. உங்களுக்குத்தான் முழங்கால்வலி இருக்கே.. நீங்க உட்காருங்க..” அவரைவற்புறுத்தி அமரவைத்து ஜூஸை கொடுத்தவன் அடுத்து தாயின் நலத்தை விசாரிக்க கற்பகத்துக்கு தன் மகனை நினைத்தால் பெருமையாக இருந்தது..
 
சொந்தங்களே இல்லாமல் இருவர் மட்டுமே இருந்தவர்களுக்கு அஸ்வின் மாமனார் மாமியார் இருவரையும் பாசத்தோடு நடத்துவதை பார்த்தால் தான் தன் மகனை நன்றாக வளர்த்திருப்பதை நினைத்து மகிழ்ச்சியே அடைந்தார்.. மகனின் கன்னத்தை தடவிக் கொடுத்தவர் கண்களால் ஸ்ருதியை காட்டி அவளை பார்க்கும்படி சொன்னார்..
 
கிச்சனுக்கு சென்று தனக்கும் ஸ்ருதிக்கும் ஜூஸை எடுத்துக் கொண்டவன் சோபாவில் அமர்ந்திருந்த ஸ்ருதியின் கையை பிடித்து தங்கள் அறைக்கு அழைத்துச் செல்ல அவளும் கீ கொடுத்த பொம்மை போல பின்னாலே வந்திருந்தாள்..
 
டேபிளில் ஜூஸை வைத்தவன் ஸ்ருதி அணைக்க முயல முடியாமல் அவளை பின்னாலிருந்து அணைத்திருந்தான்.. பேபி என்னாச்சுடி இப்படி மெலிஞ்சிட்ட.. போகும் போது இருந்ததுக்கு இப்ப பாதி உடம்புதான் இருக்கு.. ஒழுங்கா சாப்பிடுறதில்லையாம்.. தூங்கிறதில்லையாம் யார்கிட்டயும் நல்லா பேசக்கூட மாட்டேன்னு எப்பவும் உம்முன்னு இருக்கியாமே.. என்னாச்சு.. இந்த மூன்று மாதங்களாக மனைவியின் வாசம் இல்லாமல் இருந்தவன் அவள் பின்கழுத்தில் முகத்தை புதைக்க ஸ்ருதியிடம் இருந்து சத்தமே இல்லை… வெகுநேரம் கழித்தே மனைவியின் அமைதியை உணர்ந்தவன் தன்புறம் திருப்பி பார்க்க கண்ணீர் வழிந்தபடி இருக்க ஒருநிமிடம் அதிர்ச்சியானவன்..
 
பேபி.. பேபி என்னடா ஆச்சு எங்கயாச்சும் வலிக்கிதா..??”அவள் பூ முகத்தை கையில் ஏந்த,
 
இல்லையென தலையாட்டியவள் இன்னும் அழுது கொண்டிருந்தாள்..
 
மாமா மேல இன்னும் கோபமாத்தான் இருக்கியா.. அதான் போன்லயே ஆயிரம் ஸாரி கேட்டுடேனேடி.. இனி உன்னைவிட்டு எங்கயும் போக மாட்டேன்.. இப்பவாச்சும் பேசுடி.. அவன் கெஞ்ச கெஞ்ச கண்டு கொள்ளாமல் கட்டிலில் அவன் மடியில் தலை வைத்துப் படுத்தவள் நீண்ட நாட்களுக்கு பிறகு கணவன் அருகில் இருக்கும் மகிழ்ச்சியில் சட்டென உறக்கத்திற்கு சென்றிருந்தாள்..
 
வெளிநாடு செல்லும் முன் தாய்மை பூரிப்பால் கும்மென்றிருந்த முகம் இப்போது வாடி வதங்கிப் போயிருந்தது.. தவிர்க்க முடியாத சூழலால் அவன் கண்டிப்பாக போகவேண்டிய டிரிப்.. ஆறுமாத வேலையை ஸ்ருதியின் பிரசவ நேரத்தில் அருகில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இரவு பகலாக முழித்து மூன்று மாதத்தில் முடித்திருந்தான்.. போகும்போதே அவனை போக வேண்டாம் என தடுத்தவள் இல்லை கூடவாவது கூட்டிச் செல்ல கெஞ்சினாள்..
 
அஸ்வின் அவளை இந்த நிலையில் அங்கே அழைத்துச் சென்றால் கண்டிப்பாக ஒருநாளைக்கு அரைமணி நேரம்கூட அவள்கூட செலவழிக்க முடியாது என்பதை உணர்ந்தவன் அவள் கோபத்தைக்கூட பொருட்படுத்தாமல்தான் அங்கு சென்றிருந்தான்..
 
அவன் அங்கு போனதிலிருந்து ஸ்ருதி அவனுடன் பேசுவதே இல்லை.. எவ்வளவு கெஞ்சினாலும் அவனது குரலை மட்டும் உள்வாங்குபவள் வாயே திறக்க மாட்டாள்.. மனைவியின் குரலை கேட்ட முடியாமல் பைத்தியம் பிடித்தவன் போல இரவு பகலாக பேய் போல உழைத்து வேலை முடித்து விமானம் ஏறியிருந்தான்..
 
ஹாலில் அவனது போனடிக்க அதை கொண்டு வந்த கற்பகம் கொடுக்கவும் அந்த சத்தம் மனைவிக்கு தொல்லைக கொடுக்காமல் அதைகட் செய்து சைலண்டில் போட்டவன்,” உட்காருங்கம்மா..??”
 

Advertisement