Advertisement

காட்டு ரோஜா என் தோட்டத்தில்
 
                       அத்தியாயம்  –  15
 
 
அஸ்வினின் இதழ் முத்தத்தை உணராமல் ஸ்ருதி அவனை இறுக்க கட்டிக் கொண்டிருக்க ஸ்ருதியின் இந்த அமைதியை அவனால் தாளவே முடியவில்லை.. சற்று பொறுத்து தன்னிலிருந்து அவளை பிரிக்க அவள் இன்னும் தன் சுயத்திற்கு வரவில்லை.. அவன் மார்பில் சாய்ந்து சட்டை பட்டனை திருகி கொண்டே ஏதோ தீவிர யோசனையில் இருக்கவும் அவள் உச்சியில் தன் தாடையை பதித்திருந்தான்..
 
மாமா நான் இன்னொன்னும் உங்ககிட்ட சொல்லனும்.. சொல்லவா..??”
 
ம்ம்..
 
சொல்லக்கூடாது இருந்தாலும் சொல்றேன்.. ஒருவேளை ஆப்ரேசன்ல எனக்கு ஏதாச்சும் ஆனா என்னோட அப்பா அம்மாவ நீங்கதான் பார்த்துக்கனும்.. இப்பவே சந்திரன் முகத்தை பார்க்க முடியல.. ஏற்கனவே நீங்கதான் எல்லாத்தையும் பார்க்கிறிங்க.. இப்ப அவங்களையும் சேர்த்து பார்த்துக்கோங்க..
 
எங்கப்பா பார்க்கதான் ரொம்ப ஸ்டிரிக்ட் ஆபிஸர் மாதிரி தெரிவார்.. ரொம்ப ரொம்ப நல்லவர்.. ரொம்ப பாவம் மாமா..சரியான அப்பாவி.. சின்னப்பிள்ளையில நான் பண்ற சேட்டை தாங்காம பெல்டால அடிப்பாரு பாருங்க எனக்கு வலிக்கவே வலிக்காது.. ஆனா நான் கத்தி ஊரைக்கூட்டுறதுல அப்பாவே அழுதுருவாருன்னா பார்த்துக்கோங்க.. அக்கா உங்கள விட்டுட்டு போனதுல அப்பா மேல எந்த தப்பும் இல்ல.. ப்ளிஸ் அவங்க ரெண்டு பேரையும் பார்த்துக்குவிங்க தானே மாமா..??” அவன் முகத்தை பார்க்க,
 
அஸ்வின் அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.. “இப்படியெல்லாம் தத்துபித்துன்னு உளருரத நிறுத்த போறியா இல்லையா..?”
 
இல்ல மாமா..
 
என்ன நொள்ள மாமா.. என்னமோ சொன்ன..? ஸ்ரீயை நல்லா பார்த்துப்பேன் நான்தான் அம்மா வேற யாரையும் அம்மான்னு சொல்ல விடமாட்டேன்னு.. அப்புறம் ஏன் இப்படி பேசிட்டு இருக்க.. உனக்காக நானும் ஸ்ரீயும் வெயிட் பண்றோம்.. என்னமோ எனக்கு வாழ்க்கை தர்றேன்.. மெழுவர்த்தி ஏத்துறேன்.. கொளுத்துறேன்னுனு சொல்லிட்டு … அதெல்லாம் செய்யாம உன்னை விடுறதா இல்ல.. நீயா ஏதாவது நினைச்சு இருக்குற மூளைய ஸாரி இல்லாத மூளையை போட்டு குழப்பிக்காத..
 
யார பார்த்து மாமா மூளை இல்லாதவன்னு சொல்றிங்க..?? உங்கள..!!” அவனை அடிப்பது போல கையை தூக்க அவளின் இன்னொரு கையையும் எடுத்து தன் தோளில் மாலையாக கோர்க்கச் செய்தவன் அவள் காதருகே குனிந்து கிசுகிசுப்பாக,
 
என்னைவிட்டு போயிருவியா..?? அதுக்கா இவ்வளவு அவசரமா கல்யாணம் பண்ணினேன்.. நீ, நான், ஸ்ரீ மூனுபேரும் சந்தோசமா இருப்போம்.. இந்த மாதிரி தேவையில்லாதத யோசிக்காம எப்பவும் போல இரு.. அவனது அந்த குரல் அவளது மனதை ஏதோ வசியம் செய்தது..
 
மாமா கொஞ்ச நேரம் உங்க மடியில படுத்துக்கவா ..??”
 
இதென்ன கேள்வி என்னோட மடி உனக்கும் ஸ்ரீக்கும் மட்டும்தான் வா.. 

அவளை இழுத்து தன் மடியில் போட்டுக் கொண்டவன் அவள் தலையை, நெற்றியை புருவத்தை வருடிவிட துவங்கினான்..  அன்று முழுவதும் அவளுடனேயே இருக்க கோகிலா , சந்திரன் ,கற்பகம் அனைவரும் அங்குதான்.. ஸ்ரீயின் மழலை குரலைத்தவிர வேறு சத்தம் கேட்கவில்லை..
 
அஸ்வின் டாக்டரை பார்க்க செல்ல,” உட்காருங்க அஸ்வின்..
 
டாக்டர் நாளைக்கு கண்டிப்பா ஆப்ரேஷன் பண்ணித்தான் ஆகனுமா.. இல்ல இன்னும் ரெண்டுநாள் வெயிட் பண்ணுவோமா..??”
 
இல்ல அஸ்வின் இனி வெயிட் பண்றதுல வேலையில்ல.. நான் உள்ளயே கட்டி உடையிறதுக்குத்தான் டிரீட்மெண்ட் எடுத்தேன்.. கட்டி உடையல.. அஸ்வினின் முகத்தை பார்த்தவர்.. இத செய்யாம விட்டா உயிருக்கு ஆபத்து வர அதிக சான்ஸ் இருக்கு அஸ்வின்.. விடுங்க நல்லதே நடக்கும் நம்பிக்கையை விடாதிங்க.. நீங்க தைரியமா இருந்தாத்தான் ஸ்ருதிக்கு தைரியம் சொல்ல முடியும்..
 
அன்று முழுவதும் அப்படியே அமைதியில் கரைய மாலை ஐந்து மணி இருக்கும் ..  அஸ்வின் தன் லேப்டாப்பில் ஏதோ வேலைப்பார்த்துக் கொண்டிருக்க மெல்ல அவனருகில சென்றவள்,” மாமா..
 
ம்ம்..
 
மாமா..
 
ம்ம்..
 
ப்பச் மாமா..
 
என்னடி..
 
என்னை நிமிர்ந்து பாருங்க..??”
 
ஏய் முக்கியமான ஈமெயில் அனுப்பிட்டு இருக்கேன் .. ஒரு பத்து நிமிசம் வெயிட் பண்ணு..
 
லேப்டாப்பை சட்டென பறித்தவள் அந்த இடத்தில் அவள் அமர அது அவன் மடியாக இருந்தது.. பக்கத்து பெட்டில் கால்நீட்டி தன் மடியில் வைத்துதான் வேலைப்பார்த்துக் கொண்டிருந்தான்..
 
சட்டென இப்படி செய்யவும் ஒருநிமிடம் அவளைப்பார்த்து தடுமாறிவிட்டான்..  அவ்வளவு நெருக்கமாக அமர்ந்திருந்தாள்.. அந்த வயலட்நிற நைட்டியில் ஒரு பூவை போல இருந்தவளை தன் மாலையாக சூடிக் கொள்ளக் கொள்ளைஆசைவர லேப்டாப்பை கையாண்டது போல அவளை கையாள அவன் மனம் துடித்தது.. கழுத்தில் அவன் கட்டிய மஞ்சள் கயிறு வாசம் குறையாமல் இருக்க தன் கையை கட்டுப்படுத்த முடியாமல் அவள் இடுப்போடு அணைத்து பிடித்தவன்,
 
 ஏய் லூசு பத்து நிமிசம் தாங்க மாட்டியா..?? இப்ப என்னடி மாமாவ ஏலம் போடுற..??”
 
 அவள் நெற்றியோடு தன் நெற்றியை பதித்து இன்னும் அவள் வாசத்தை வாங்கியபடி
கண்ணை மூடி அவளோடு வேறு உலகத்திற்கு சென்று கொண்டிருந்தவனை உலுப்பி நனவுக்கு கொண்டு வந்தாள்..
 
மாமாஆஆஆ..??”
 
ம்ம் சொல்லு..”
 
அவன் சட்டை காலரை பிடித்தவள்,” காலையில இருந்து ஒரே போரா இருக்கு..??”
 
அதுக்கு என்ன பண்ண சொல்ற..? எதாச்சும் சினிமாக்கு போகனுமா..?”
 
ஹாஹாஹா அத நான் யோசிக்காம விட்டுட்டனே.. அது அப்புறமா போகலாம் .. இன்னைக்கு என்னோட பிரண்ட்ஸ் எல்லாம் விளையாட கூப்பிடுறாங்க.. நீங்க டெய்லியும் இங்கயே இருக்கவும் அவங்கள பார்க்கவே முடியல..நானும் ஸ்ரீயும் கொஞ்சநேரம் அவங்களோட விளையாடிட்டு வரவா..?”
 
அதற்குள் கதவை திறந்து கொண்டு ஸ்ரீ தன் தளிர்நடையோடு உள்ளே வர சந்திரன் பேரனை மட்டும் உள்ளே அனுப்பிவிட்டு கதவை சாத்திவிட்டு சென்றார்..
 
அஸ்வினை பார்க்கவும் ப்பா…தூக்கு என்பது போல கையை நீட்டினான்..அவனை தூக்கி தன் நெஞ்சில் வைத்துக் கொண்டவன் மகனை முத்தமிட்டபடி
 
ம்ம் இப்ப என்ன சொன்ன..?”
 
ஸ்ரீ அமர்ந்திருக்கவும் எழ போனவளை தடுத்து மீண்டும் அமரச் செய்து இருவரையும் சேர்த்து அணைத்துப்பிடித்தான்..
 
ஸ்ரீக்குட்டி அம்மாட்ட வாங்க.. விளையாட போவமா..??”
 
அவனை தன் பக்கம் திருப்பி விளையாட்டு காட்ட..
 
அஸ்வினுக்கு சிரிப்பு அடிப்பாவி என்னோட விளையாட வேண்டியவ சின்னப் பசங்களோட விளையாட கேட்குறாளா..!!’
 
ஏண்டி அம்மான்னு கூப்பிடச் சொன்னா மட்டும் போதுமா..? அதுக்கு தகுந்த மாதிரி நட.. அவனையும் உன்னை மாதிரி மாத்தலாம்னு பிளான் போடுறியா.. வீட்ல ஒரு குட்டி குரங்கு மட்டும் போதும்..
 
மாமா யாரப் பார்த்து குரங்குன்னு சொல்றிங்க..??”
 
ம்ம்.. இதுல என்ன சந்தேகம் உன்னைப்பார்த்து மட்டும்தான்..!!”
 
உங்கள..!!” பாய்ந்து அவன் கன்னத்தை கடிக்க இருவருக்கும் இடையில் நசுங்கிக் கொண்டிருந்த ஸ்ரீயும் தன் தாயை பார்த்து அவளை போலவே தந்தையின் மறுகன்னத்தை இப்போதுதான் முளைவிட்டிருந்த தன் நான்கு பற்களால் கடித்தான்..
 
அம்மா என கத்தியவன்.. ஏய் குட்டி சாத்தான்.. பிள்ளைக்கு நல்லத சொல்லிக் கொடுப்பன்னா இப்படித்தான் கடிக்க கத்துக்கொடுப்பியா..??” ஒரு கையால் அவர்களை அணைத்தபடி மறுகையால் தன் கன்னத்தை தடவிக் கொண்டான்..
 
ஸ்ரீ குட்டி தந்தையை கடித்துவிட்டு தாயை பார்க்க அவளுக்கு சிரிப்பு தாங்கவில்லை.. கடித்ததற்கு பரிசாக தன் மகனுக்கு இரு கன்னத்திலும் முத்தமிட்டவள் அவனை இறுக்கி கட்டிக் கொண்டாள்.. குட்டியும் ஒரு கையை தாயின் தோளில் போட்டு மறு கையை தந்தையை நோக்கி நீட்டியிருந்தான்..
 
பார்த்திருந்த அஸ்வினுக்கு சட்டென கண்கள கலங்க ஸ்ரீயின் கைக்குள் தன் கழுத்தை கொடுத்தவன் இருவரையும் அப்படியே இறுக்கி அணைத்தான்..
 
மாமா ப்ளிஸ் நாங்க விளையாட போகவா..??”
 
 நீங்க எல்லாம் எப்படி விளையாடினிங்கன்னுதான்  ஹாஸ்பிட்டல்ல டிவியில போட்டு காட்டினாங்களே.. ஒன்னும் தேவையில்ல பேசாம போய் படு.. அத்தைய ஜூஸ் கொண்டு வரச் சொல்றேன் குடிங்க ரெண்டு பேரும்..??”
 
மாமா ப்ளீஸ் மாமா கொஞ்சநேரம் மட்டும் சும்மா உட்கார்ந்துதான் விளையாடப்போறோம்.. எங்க பிரண்ட்ல ரெண்டுபேர் டிஸ்சார்ஜ் ஆகிப்போய்ட்டாங்க.. ரெண்டே பேர் மட்டும்தான்.. சும்மா உட்கார்ந்து ராஜா ராணி மட்டும் விளையாடிட்டு வந்திருறோம்..??”
 
வேணாம் ஸ்ருதி பேசாம போய் படு.. அரைமணி நேரம் கழிச்சு ஸ்கேன் எடுக்க கூட்டிட்டு போறேன்னு சொல்லியிருக்காங்க..
 
மாமா ப்ளிஸ்.. அவள் கெஞ்ச அவளை கண்டு கொள்ளாதவன் மீண்டும் தன் லாப்டாப்பை எடுக்க அவன் மறுகன்னத்தை நறுக்கென கடித்திருந்தாள்..
 
ஐயோ அம்மா தன் கன்னத்தை பிடித்தவன் ஏண்டி பிசாசே.. என்ன வேலைப்பார்க்கிற.. என் கன்னத்தை பார்த்தா உனக்கு எப்படி இருக்கு.. இப்படி கடிச்சு வைக்கிற..??”
 
அப்புறம் என்ன மாமா இத்தன ப்ளிஸ் போடுறேன்.. அப்புறமும் போகவேணாம்னு சொன்னா என்ன அர்த்தம்.. இப்போ விடுவிங்கிளா மாட்டிங்களா..??”
 
முடியாதுன்னா முடியாது.. பேசாம போய் படுடி.. தேவையில்லாம போய் எதையாவது இழுத்து வைக்காம..??”
 
போங்க மாமா.. அவனை முறைத்தபடி அவள் கட்டிலில் சென்று அமர்ந்தவள் அங்கிருந்தபடி அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்..தாய் செல்லவும் இருவரையும் மாறி மாறி பார்த்த ஸ்ரீக்குட்டியும் தந்தையிடம் இருந்து இறங்கி தாயிடம் சென்றது..
அவனை தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டு தன்னை முறைத்தவளை பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தாலும் இருவரையும் கண்டு கொள்ளாதவன் தன் லேப்டாப்பில் கவனத்தை செலுத்த ஒரு பதினைந்து இருபது நிமிடங்கள் இருக்கும்.. கதவு தட்டும் ஒலியில் நிமிர்ந்து பார்த்தான்..
 
 நர்ஸ் ஸார் உங்கள டாக்டர் வரச் சொல்றாங்க..??”
 
கட்டிலில் ஸ்ருதியையும் ஸ்ரீயையும் காணவில்லை.. ரெண்டும் எங்க போச்சுக..??” அவன் அறையை விட்டு வெளியில் வர சந்திரன் வெளியில் அமர்ந்திருந்தார்..
 
எங்க மாமா ஸ்ருதியும் ஸ்ரீயும்..??”
 
ரெண்டு பேரும் விளையாட போயிட்டாங்க மாப்பிள்ள..
 
ப்பச் என்ன மாமா நான்தான் போக வேண்டாம்னு சொன்னேனே.. நீங்களாச்சும் போகவிடாம தடுத்திருக்கலாம்ல.. என்ன ஏழரைய இழுக்கப் போறாளோ..??”
 
இல்ல மாப்பிள்ள நான் போகவேண்டாம்னு தான் சொன்னேன்.. அவ நீங்கதான் போகச் சொன்னதா சொன்னா மாப்பிள்ள..?”
 
அவர் முகத்தை பார்த்தவனுக்கு அவரை கடிய மனதில்லை.. இதோ வர்றேன் மாமா..
 
டாக்டரை பார்க்க சென்றவன் இப்படி ஒருத்தருக்கு அந்த குட்டிச்சாத்தான் எப்படித்தான் பொறந்துச்சோ.. அத்தை சொன்னது ஒருவேளை உண்மைதான் போல.. ஹாஸ்பிட்டல்ல பிள்ளைய மாத்தி தூக்கிட்டு வந்திட்டாங்களோ..
 
ஒரு அரைமணி நேரம் சென்றிருக்கும் டாக்டரை பார்த்தவன் அவளை ஸ்கேன் எடுக்க தேடிக் கொண்டு வர நாலு மாடியும் ஏறியிறங்கிவிட்டான்.. ஒவ்வொருவரும் இப்பத்தான் மேல போனாங்க.. இல்ல கீழ போனாங்கன்னு சொல்லிக் கொண்டிருக்க இருமுறை ஏறியிறங்கியவன் கோபத்தில் பல்லை கடித்தபடி ஒவ்வொரு மாடியிலும் ஒவ்வொருவரை நிறுத்தி வைத்துவிட்டு இவர்களை தேட ஆரம்பித்தான்..
 
இரண்டாவது மாடியில் ஒவ்வொரு அறையாக திறந்து பார்த்துவர ஸ்ருதி எதிர் திசையிலிருந்து ஓடிவந்து கொண்டிருந்தாள்.. மற்ற இருவரும் அவளை விரட்ட ஸ்ரீயும் அவர்களோடு சேர்ந்து கொண்டது.. ஹப்பா இங்கதான் இருக்குகளா வேகமாக அவர்களை நோக்கி செல்ல ஒரு எட்டு வைத்தவன் பார்த்தது ஸ்ருதி தண்ணீர் போல எதிலோ காலை வைத்து வழுக்கி படியில் உருண்டதைதான்..!!!
 
ஸ்ருதிதிதி……????” என அலறியவன் வேகமாக அவளை நோக்கி வர அவன் சத்தம் ஹாஸ்பிட்டலையே உலுக்கியிருந்தது… அனைவரும் சத்தம் வந்த இடத்தை நோக்கி வர இரண்டே நிமிடத்தில் தடதடவென படியில் இறங்கி ஸ்ருதியிடம் வந்திருந்தவன் அவளை தன் மடியில் ஏந்த அவளோ ரத்தவெள்ளத்தில் மயங்கியிருந்தாள்..
 
இருபத்தைந்து படிகளாவது இருக்கும்.. அவள் உருண்டதில் நெற்றி ஒருபடி விளிம்பில் பட்டு மண்டை உடைந்திருக்க கைகால்களில் என்ன காயம் என தெரியவில்லை.. கூட்டம் வரவும் சட்டென முழங்காலுக்கு மேல் ஏறியிருந்த நைட்டியை இறக்கி விட்டவன் அவளை தன் மார்போடு அணைத்து ,
 
ஸ்ருதி, ஸ்ருதி..” என அவள் கன்னத்தை படபடவென தட்ட அதற்குள் நர்ஸ்களும்  அருகில் வந்திருந்தனர்.. ரத்தம் இன்னும் நிற்காமல் இருக்கவும் வேகமாக ஐசியு அறைக்கு தூக்கிவரச் சொல்ல தூக்க வந்தவர்களை தடுத்து அஸ்வினே அவளை கையில் ஏந்தியிருந்தான்..
 
அவளை ஐசியுவில் படுக்க வைத்து வெளியில் வர விசயமறிந்து பதறி அடித்து மற்றவர்களும் வந்திருந்தனர்.. ரவுன்சில் இருந்த டாக்டர்களும் வந்து சேர ஸ்ருதிக்கு சிகிச்சை ஆரம்பித்தனர்..கோகிலா ஓஓவென ஒரே அழுகை.. காலையில் இருந்தே அழுகையை அடக்கி கொண்டிருந்தவர் இப்போது கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழ ஆரம்பித்தார்.. சந்திரனுக்கு கண்ணீர் நிற்கவே இல்லை.. கற்பகமோ ஸ்ரீயை வைத்துக் கொண்டு விதியை நொந்தபடி கண்கலங்கி கொண்டிருந்தார்..
 
அஸ்வினுக்கு இன்னும் அந்த நெஞ்சு படபடப்பு குறையவில்லை.. தான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஸ்ருதி தடுமாறி விழுந்தது.. அவள் முகத்திலிருந்து வழிந்த ரத்தம் இன்னும் அவன் கைகளில் இருக்க.. அடுத்தென்ன..!! அவனால் தாளமுடியவில்லை.. அவன் மனம் ஏதேதோ நினைக்க ஸ்ருதி இல்லாத தன் வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியவில்லை..
 
ஸ்ரீக்கும் என்ன புரிந்ததோ என்னவோ.. தன் அப்பாவிடம் தாவியவன் தந்தையின் கன்னத்தை பிடித்து தன்னை பார்க்கச் செய்து.. ப்பா… ம்மா… ஊஊ… என ஐசியுவை காட்டி நெற்றியை காட்டினான்.. மகனை கட்டிக் கொண்டவனுக்கு மீண்டும் தாங்கள் இருவரும் அனாதையான மாதிரி ஒரு உணர்வு..
 
ஏண்டி ஏண்டி இப்படி பண்ணின.. இதுக்குத்தானே உன்னை கண்ணுக்குள்ள வைச்சு பார்த்துட்டு இருந்தேன்.. தன் மேலேயே அவனுக்கு கோபமாக வந்தது.. டாக்டர பார்க்க போகாம அவள பார்த்து கூட்டிட்டு வந்திருக்கனுமோ.. ஐயோ தப்பு பண்ணிட்டனோ..
 
அவன் மனது என்னவோ அடித்துக் கொண்டது.. தவறெல்லாம் தன்மீதென்று.. அவளை இன்னும் நல்லா பார்த்திருக்கனும்.. அந்த ஈமெயில நாளைக்குக்கூட அனுப்பியிருக்கலாமோ.. ஐயோ ஐயோவென அவன் மனம் தவித்துக் கொண்டிருந்தது..
 
ஐசியு வாசலில் நின்றிருந்த அந்த ஒருமணி நேரமும் அவனுக்கு நரகம்தான்.. செத்து செத்து பிழைத்துக் கொண்டிருந்தான்.. இத்தனை நாட்களில் இலகுவாகியிருந்த அவன் மனம் மீண்டும் இறுகி பழைய அஸ்வினாக மாறிக் கொண்டிருந்தான்.. மகனின் முகத்தில் இருந்து எதை உணர்ந்தாரோ.. கற்பகமும் மனதிற்குள் அழுது கொண்டிருந்தார்..
 
கடவுளே நம்ம பையனுக்கு இப்படியா வாழ்க்கை மாறனும்..சந்தோசமா இருக்கத்தானே அவசரமா கல்யாணம் பண்ணினான்.. ஆண்டவா என் மருமகள காப்பாத்து.. நான் பழனிக்கு நடந்தே வர்றேன்..ஆளாளுக்கு கடவுளிடம் வேண்டுதல் வைத்துக் கொண்டிருந்தனர்..
 
டாக்டர் வெளியில் வர அனைவரும் அவரிடம் விரைந்திருந்தனர்.. அப்படியொரு பயம் அனைவரிடத்திலும்… டாக்டர் ஸ்ருதி..??”
 
 
அவனை தட்டிக் கொடுத்தவர் சந்தோசமாக.. ஸ்ருதிக்கு இனி எந்த பிரச்சனையும் இல்ல. கைகால்லதான் பிராக்சர் பிளேட் வைச்சிருக்கோம்.. நல்லா நடக்க ரெண்டு மாசமாச்சும் ஆகும்..
 
அஸ்வின் டாக்டர் அப்ப நாளைக்கு ஆப்ரேசன்…..??” இழுக்க..
 
அவனை கட்டித் தழுவியவர்.. தேவையே இல்ல அஸ்வின்.. இந்த அதிர்ச்சியிலயே அந்த கட்டி உடைஞ்சிருச்சு.. இனி ஸ்ருதிக்கு எந்த பிரச்சனையும் இல்ல..நல்லாயிட்டாங்க.. இதெல்லாம் லேசான காயம்தான் ரெண்டு மூனு மாசத்தில சரியாகிடும்..
 
அனைவரும் டாக்டரையே அப்படியே ஆஆஆவென பார்த்துக் கொண்டிருக்க யாருக்கும் என்ன பேசுவதென்றே தெரியவில்லை.. டாக்டர்…!!” அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை..
 
அவருக்கு இவர்கள் முகத்தை பார்த்து சிரிப்பு.. அதிக அதிர்ச்சியை தாங்கியிருந்தவர்களுக்கு இந்த மகிழ்ச்சையை தாங்கமுடியவில்லை.. நெற்றியிலதான் அஞ்சு தையல் போட்டிருக்கேன்.. இப்ப கண் மூழிச்சிருவாங்க.. ஒவ்வொருத்தரா போய் பாருங்க..
 
அடுத்த பத்து நிமிடத்தில் ஸ்ருதி கண்விழித்திருக்க கோகிலாவும் சந்திரனும் உள்ளே ஓடினர்.. தன் மகளை பார்க்க பார்க்க மகிழ்ச்சி தாங்கவில்லை.. தன் மகளுக்கு இருந்த பிரச்சனை போயிருச்சா… பேசமுடியாமல் அழுது கொண்டே அவளை தொட்டு, வருடி  தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த.. அடுத்து அஸ்வின் உள்ளே நுழைந்திருந்தான்..
 
அவளை அப்படியே பார்த்தது பார்த்தபடியே நின்றிருந்தான்.. நெற்றியில் பெரிய கட்டு, கைகால்களில் கட்டுப்போடப்பட்டிருந்தது.. இந்த காயமெல்லாம் அவன் கண்களுக்கு தெரியவில்லை.. ஸ்ருதியின் பிரச்சனை தீர்ந்ததே பெரிதாக இருக்க சந்தோசம் தாங்கவில்லை..
 
அஸ்வினையே பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் எதுவும் பேசமால் இருக்கவும் முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொள்ள ஒன்றும் பேசாமல் அவள் அருகில் அமர்ந்தவன் அவள் கட்டு போடப்பட்டிருந்த கையை வருட,
 
அவள் தன் உதட்டை சுழிக்கவும்,
 
என்னடி..??”
 
எனக்கு அடிப்பட்டதுக்கு நீங்கதான் காரணம்..!!”
 
இதென்ன புதுக்கதை என்பது போல என அவளை பார்க்க,
 
நீங்கதான மாமா என்னை விளையாட போகவேண்டாம்னு சொன்னிங்க பாருங்க இப்ப மீறி போகவும்தான் எனக்கு இப்படியாகிருச்சு.. நீங்கதான் திட்டியிருப்பிங்க போல..??”
 
இவ்வளவு கட்டுப்போட்டு கிடந்தாலும் இவளுக்கு வாய் அடங்குதா பாரு.. பேசாம வாயில ஒரு பிளாஸ்திரிய ஒட்டி விட்டுருக்கலாம்.. அடங்காப்பிடாரி.. என் உயிர குடிக்க வந்த அழகான ராட்சசி.. ஒன்றும் பேசாமல் அவள் நெற்றிக் காயத்தை தடவிக் கொடுத்தவன்,
 
இதுக்கொன்னும் குறைச்சலில்லாம பேசுறியே.. கீழ பார்த்து வரமாட்டியா.. தண்ணி கிடக்கிறதுக்கூட தெரியாதா..??”
 
அவள் ஒருமாதிரி ஹிஹிஹி…” என இளிக்கவும்..
 
அம்மா தாயே பத்ரகாளி இப்படியெல்லாம் சிரிச்சு என்னை பயமுறுத்தாத..!!”
 
அது வந்து மாமா…
 
என்னடி சொல்லு..??”
 
நம்ம ஸ்ரீக்குட்டி ச்சூ ச்சூ வருதுன்னு சொன்னானா.. நான்தான் ஒளிஞ்சு பிடிச்சு விளையாடுற அவசரத்தில அங்கயே எங்கயாச்சும் போடான்னு சொன்னேன்.. அவன் அங்க போனதையும் பார்த்தேன் இருந்தாலும் வேகமா ஓடிவரும்போது என்னால வேகத்தை குறைக்கமுடியல.. அதுதான் மாமா வழுக்கி விழுந்திட்டேன்..
 
கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு கண்ணைக்கட்டியது.. இவளை என்ன செய்யலாம்.. இவளை நாம எப்படி பார்த்துக்க போறோம்.. அவளை பார்த்து நொந்தபடி தன் தலையில் கைவைத்து அமர அவளோ அவனை இழுத்து தன் அருகில் அமரவைத்து தன் அடிபடாத கையால் இறுக்கி அணைத்துக் கொண்டவள்,
 
 இத மட்டும் எங்க அம்மாக்கிட்ட சொல்லிடாதிங்க மாமா ப்ளிஸ் ப்ளிஸ்..” அவன் தாடையை பிடித்து கெஞ்சி(கொஞ்சி) கொண்டிருந்தாள்..
 
                                            இனி……………….?????

Advertisement