Advertisement

காட்டு ரோஜா என் தோட்டத்தில்
 
                                                அத்தியாயம்  –  18
 
அஸ்வின் அனைவரிடமும் ஒரு முக்கியமான விசயம் சொல்ல போவதாக சொல்ல ஸ்ருதியோ சோபாவில் அமர்ந்து மகனை தன் காலில் வைத்து ஊஞ்சல் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தாள்..
 
ஸ்ருதி நீயும்தான் கேட்கனும்..?”
 
ம்ம் காது கேட்டுட்டுத்தான் இருக்கு மாமா..அவள் விளையாட்டில் மும்முரமாக இருக்க ஸ்ரீயை பறித்தவன் தன் மடியில் வைத்து அவளையும் தன் தோள் வளைவிற்குள் கொண்டு வந்தான்..
 
பார்த்த கோகிலாவுக்கும் கற்பகத்திற்கும் சிரிப்புவர ஸ்ருதிக்கு காட்டாமல் அதை மறைத்தனர்..
 
பெருமூச்சு விட்டு தன்னை சமன்படுத்தியவன்.. அனைவரையும் ஒருபார்வை பார்க்க ஸ்ருதியோ என்ன விசயமாயிருக்கும் மாமா ஓவரா பில்டப் கொடுக்கிறாங்க..
 
ஸ்வேதாவோட ஆக்ஸிடென்ல ஒரு பையன் இறந்தான்ல அவங்க அப்பா வக்கீல் நோட்டிஸ் அனுப்பியிருக்காரு..
 
கற்பகம்,” அவருக்கும் நமக்கும் என்னப்பா சம்பந்தம் அவர் ஏன் அதை அனுப்பியிருக்காரு…?”
 
ப்பச் என்னத்தமா சொல்றது எவன் என்ன சொன்னானோ.. ஸ்ரீக்குட்டி அவனுக்கும் ஸ்வேதாவுக்கும் பிறந்த குழந்தைன்னு கேஸ் போட்டிருக்கார்.. அவங்ககிட்ட நாம ஸ்ரீய ஒப்படைக்கனுமாம்..
 
அனைவரும் அப்படியே அதிர்ச்சியில் உறைய ஸ்ருதியோ அழவே ஆரம்பித்துவிட்டாள்.. அஸ்வினிடம் இருந்து மகனை வாங்கியவள்…
 
 பொய் பொய் நான் இவன யாருக்கும் தரவே மாட்டேன்.. இவன் என்னோட பையன் மட்டும்தான்.. குழந்தை ஒன்று தனக்கு பிடித்த பொம்மையை தர மறுப்பது போல அவனை நெஞ்சோடு அணைத்துக்கொள்ள கோகிலாவும் கற்பகமுமே அழ ஆரம்பித்துவிட்டனர்..
 
தன் அன்னையிடம் சென்றவன் அவரை சமாதானப்படுத்த ,”அவங்க சொன்னா நான் விட்டிருவேனாம்மா…  ஸ்ரீ குட்டி என்னோட குழந்தைதான்னு ஈஸியா நிரூபிச்சிரலாம் கவலைப்படாதிங்க.. ஸ்ருதி ஓவென சத்தமாக அழவும் ..
 
ஏய் லூசு இப்ப எதுக்கு இப்படி அழற..? அவள் கண்களை துடைத்துவிட்டு இதுக்குத்தான் நான் பத்துநாளா சொல்லாம இருந்தேன்.. நாளைக்கு அவர இங்க சமாதானம் பேச வரச் சொல்லியிருக்கேன்.. அதான் விசயத்தை உங்ககிட்ட சொல்லலாம்னு நினைச்சா இப்படியா அழுவ..??”
 
அவள் இன்னும் இன்னும் சத்தமாக அழவும் ஸ்ரீக்கு என்ன புரிந்ததோ இல்லையோ அதுவும் தாயை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்திருந்தது.. கோகிலாவோ இந்த பொண்ணு செத்தும் இப்படி மனசுக்கு நிம்மதி இல்லாம பண்றாளே.. கடவுளே.. இந்த விசயம் வெளியில தெரிஞ்சா மாப்பிள்ளைக்கு தானே இன்னும் மரியாதை குறையும்..
 
வேதனையோடு சந்திரனை பார்க்க, மனைவியின் கையை தட்டிக் கொடுத்தவர்.. முதல்லயே நம்மகிட்ட அவரு கொஞ்சம் பேசியிருக்கலாம்.. அவங்க பையனும் மனைவியும் இறக்கவும் யாருமில்லாம அனாதையா இருந்தவருக்கிட்ட இத யாரோ சொல்லவும் வாரிசுக்காக இப்படி அவசரப்பட்டு பண்ணிட்டாரு..
 
ம்மா யாரு என்ன சொன்னாலும் நம்ம பக்கம் ஸ்ட்ராங்காத்தான் இருக்கு.. நீங்க யாரும் கவலைப்படாதிங்க.. ஸ்ரீய நம்மகிட்ட இருந்து யார் நினைச்சாலும் ஒன்னும் பண்ண முடியாது.. வருத்தப்படாதிங்க..
 
கற்பகம் சாமி அறைக்குள் நுழைந்திருந்தார்.. இப்பத்தான் என் பையன் வாழ்க்கையை சரிபண்ணி கொடுத்தன்னு நினைச்சேன் அடுத்து இப்படி என் பேரனை பிரிக்க நினைக்கிறியே ஆண்டவா.. சத்தமில்லாமல் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்..
 
அனைவரும் அப்படியே உட்கார்ந்திருக்க நேரம்தான் சென்று கொண்டே இருந்தது.. மணி பத்தாகவும் அஸ்வின் ஸ்ருதியை படுக்க அனுப்பினான்.. அவள் ஸ்ரீயை விடவே இல்லை.. அவனை இறுக்கி அணைத்தபடி அவர்கள் அறைக்குள் நுழைந்திருந்தாள்.. இருவருக்கும் பாலோடு தன் அறையில் நுழைந்தவன் ஸ்ருதி படுக்காமல் அமர்ந்திருக்கவும் பாலை டேபிளில் வைத்து மெல்ல அவர்கள் அருகில் சென்றான்..
 
பேபி அழாதடா..!!” அவள் தலையை கோத அவனை வயிற்றோடு சேர்த்து அணைத்துக் கொண்டவள் அவன் மேல் முகத்தை புதைத்து அழ ஆரம்பித்தாள்.. ஏற்கனவே அழுதததால் முகம் தக்காளிபழம் போல சிவந்திருக்க மீண்டும் அழவும் தாங்காதவன் ஸ்ரீயை வாங்கி தன் முகத்தோடு முகத்தை வைத்து,
 
பாரு பேபி நானும் குட்டியும் ஒரே மாதிரிதான இருக்கோம்.. அவர்களை நிமிர்ந்து பார்த்தவள் தலையை மட்டும் அசைத்து,
 
 ம்ம்ம்..
 
அப்ப அப்பா நான்தானே.. அப்புறம் ஏன் அழற.. இவனுக்கு நீதான் அம்மா நான் அப்பா.. அங்கு குட்டியோ தூக்கத்தால் தந்தையின் கையிலேயே சாமியாட அவனை கட்டிலில் படுக்க வைத்தான்.. அவனை இறுக்கி அணைத்து படுக்க போனவளை தடுத்தவன்..
 
அவனை தொல்லை பண்ணாதடா.. மாமா மேல நம்பிக்கை இருக்கு தானே..??”
 
அவள் தலையை மட்டும் ஆட்டவும்..
 
பேபி என்ன மௌன விரதமா.. வாயே திறக்க மாட்டேங்கிற..??” கட்டிலில் அமர்ந்து அவளை மடியில் போட்டு தட்டிக் கொடுக்க மெல்ல கண்ணயர்ந்தவளை பார்த்துக் கொண்டே விடியலுக்காக காத்திருந்தான்..
 
காலையில் இருந்தே அனைவரும் ஒருவிதமான இறுக்கத்தோடு சுற்ற ஆளுக்கொரு மனநிலையில் இருந்தனர்.. தன் அறையில் யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தவனிடம் சென்றவள்..
 
 மாமா குட்டி நம்மகிட்ட இருப்பான்தானே அவன மட்டும் நீங்க அவங்ககிட்ட கொடுத்தா அப்புறமா என்னை உயிரோட பார்க்கவே முடியாது சொல்லிட்டேன்..??”
 
அவள் வாயில் சிறிதாக ஒரு அடி போட்டவன்,” இப்படியெல்லாம் பேசாத..அவன் என் பையன்தான்..??” அவளை இறுக்கி அணைத்து தனக்குள் புதைத்துக் கொள்ள அவளும் அவனை விடவே இல்லை..
 
அக்கா இறந்த அன்னைக்கு என்னதான் மாமா நடந்திச்சு.. ப்ளிஸ் அத மட்டும் சொல்லுங்களேன்.. என்னால தாங்க முடியல அக்காவ பத்தி தப்பா நினைக்கவும் முடியல..அப்படியெல்லாம் ஒருத்தரை கல்யாணம் செஞ்சு வேற ஒருத்தரோட குடும்பம் நடத்த மாட்டா..
 
எனக்கு எழுதியிருந்த லெட்டர்ல கூட என்னாலதான் மனசால ஒன்றி மாமாவோட குடும்பம் நடத்த முடியல.. அதான் நான் விரும்பினவரோட போறேன்.. வீட்டை விட்டு வெளியில போறதால அவங்க குடும்பத்தில ஏத்துக்க மாட்டாங்க.. எப்படியும் கஷ்டப்பட்டுதான் முன்னேறனும்.. ஸ்ரீ இந்த குடும்ப வாரிசு என்னால அவன் ஏன் கஷ்டப்படனும் அதான் அவன அங்கேயே விட்டுட்டு போறேன்..
 
நீ போய் அப்பப்போ பார்த்துக்கோ… உங்க மாமா ரொம்ப நல்லவரு.. அருமையான குணம்.  என் மேலதான் எல்லா தவறும் இருக்கு.. என்னை நல்லா பார்த்துக்கிட்டாங்க.. எப்படியாவது அம்மா அப்பாவை என்னை மன்னிக்கச் சொல்லு.. இதை மட்டும்தான் எழுதியிருந்தா.. அப்பா சொன்னாங்க அக்காவோட கடைசி நிமிடங்கள்ல நீங்கதான் அவங்களோட இருந்திங்கன்னு அன்னைக்கு என்ன மாமா நடந்திச்சு சொல்லுங்க ப்ளிஸ் ப்ளிஸ்..
 
கண்ணீர் வலிய தன்னை அணைத்துக் கொண்டு பரிதவித்தவளின் முகத்தை காண சகியாமல் இன்னும் தன்னுள் புதைத்து கொண்டவன் அவளோடு அப்படியே கட்டிலில் அமர்ந்தான்..
 
கண்ணீரை துடைத்துவிட்டு பேபி அழாதடா.. இப்பதான உனக்கு உடம்பு கொஞ்சம் நல்லா வந்திருக்கு இப்படியே அழுதா தலைவலி வந்திரும் .. சிறு குழந்தை போல தேம்பி தேம்பி அழும் மனைவியை மெது மெதுவாய் சமாதானப்படுத்தியவன் அவள் அழுகை நிற்கவும் அவள் உச்சியில் தன் முத்தத்தை பதித்து அவள் கைவிரல்களை வருடியபடி,
 
 நான் ஜெர்மன்ல இருந்து வந்த மறுநாள் அவசரமா காலையில கொஞ்சம் சீக்கிரமே கிளம்பிட்டேன்.. நைட் பத்துமணிக்கு வந்ததால ஸ்ரீய மட்டும் கொஞ்சநேரம் தூக்கி வைச்சிருந்தேன் நான் உங்க அக்காகிட்ட பேச போகும்போது அவ பிள்ளைய என்கிட்ட கொடுத்திட்டு கீழ வந்திட்டா அப்புறம் அவ எப்ப மேல வந்தான்னு எனக்கு தெரியல.. மறுநாள் மதியம் ஒருமணி இருக்கும் ஹாஸ்பிட்டல்ல இருந்து போன் வந்திச்சு பதறிட்டு போனா உங்க அக்காவும் அந்த பையனும் தங்களோட கடைசி நிமிசத்தில இருந்தாங்க..
 
என்னைப் பார்க்கவும் ஸ்வேதா அழுதுட்டு மன்னிப்பு கேட்டா.. அப்பதான் அவளோட காதலையே என்கிட்ட சொன்னா.. காலேஜ் படிக்கும் போது சீனியரா இருந்த அந்த பையன் லவ் சொன்னதாவும் தான் விலகி விலகி போனாலும் அவனா வந்து வலிய வலிய பேசி அவள் மனசை மாத்த முயற்சி செஞ்சதா சொல்லி அப்படி ஒருமுறை அந்த பையனோட ஒரு ஹோட்டலுக்கு போகும்போது உங்க அப்பா பார்த்திட்டு கண்டிச்சிருக்காரு..
 
எந்த தகப்பனும் செய்றதுதானே.. அந்த பையனோட குடும்பத்தை விசாரிச்சு பார்த்ததுல அவங்க ரொம்ப பணக்காரங்கன்னு தெரிஞ்சதால அந்த சம்மந்தம் சரிவராதுன்னு அந்த நேரம் தரகர் என்னோட ஜாதகத்தை தரவும் உங்க அப்பா அவசரமா எனக்கு கல்யாணம் பண்ணி வைச்சிட்டாராம்..
 
கல்யாணத்துக்கு அப்புறம்  அந்த பையன மறந்திட்டுதான் என்னோட வாழ்க்கையை ஆரம்பிச்சிருக்கா.. ஆனா நான் வெளிநாடு போகவும் ஒருமுறை மதுரைக்கு போகும்போது ஏதேச்சயா அவங்க நகைகடையிலேயே அந்த பையன பார்க்க அவன் உங்க அக்கா நினைவுலேயே இன்னும் இருக்கான்னு தெரிஞ்சு குற்ற உணர்ச்சியில தவிச்சவ அதோட அந்த பையன் அடிக்கடி போன்ல வாட்ஸ்அப்ல பேசவும் மனசு அவன் பக்கமே சாய ஆரம்பிச்சிருச்சாம்..
 
ஆனா நான் இங்க வந்தன்னைக்குத்தான் தெரிஞ்சிச்சாம்.. தன்னால அந்த பையன தவிர என்னோட வாழமுடியாதுன்னு.. அதனாலதான் குட்டிய இங்க விட்டுட்டு அம்மாக்கிட்ட பக்கத்தில இருக்க கடைக்கு போயிட்டு வர்றதா சொல்லிட்டு அவசரமா அந்த பையன வரச் சொல்லி அவனோட போனவளுக்கு அந்த திடம் எல்லாமே இந்த ஊர் எல்லையை தாண்டுற வரைக்கும்தான்.. கொஞ்சதூரம் போகவும் தான் பண்றது தப்பு, அதைவிட குழந்தைவிட்டுட்டு வந்தது தப்புன்னு புரிஞ்சு அந்த பையன்கிட்ட வரமுடியாதுன்னு சொல்லி வம்பு பண்ணி காரை வீட்டுக்கு திருப்பச் சொல்லி சண்டைப் போட்டிருக்கா..
 
அந்த பையனுக்கு கோபம் போல.. நீ நினைச்சா கூட்டிட்டு போகனும் வேண்டாம்னு சொன்னா விட்டுட்டு போகனுமா.. அதெல்லாம் முடியாதுன்னு ரெண்டு பேருக்கும் காருக்குள்லேயே வாக்குவாதம் நடந்து மீறி அந்த பையன் காரை ஓட்டவும் உங்க அக்கா என்ன பண்றேன்னு புரியாம கார் கதவை திறக்க போக அந்த பையன் தடுக்குறேன்னு எதிரே வந்த லாரியை பார்க்காம கார் லாரியில மோதி ஆக்ஸிடென்ட் ஆயிருக்கு..
 
 எல்லா தப்பும் என்மேலதான் அந்த பையன் வீட்டுக்கு ஒரே பையன்.. அவன மட்டும் எப்படியாச்சும் காப்பாத்தி அவங்க அம்மா அப்பாட்ட ஒப்படைச்சிருங்கன்னு சொல்லிட்டு அவ உயிர விட்டுட்டா.. அவ இறந்த பத்து நிமிசத்திலேயே அந்த பையனும் இறந்திட்டான்..
 
ஸ்வேதா சொன்னது எல்லாமே போலிஸ் முன்னாடிதான் அவங்களும் அவ சொன்னதை எல்லாம் ரெக்கார்ட் பண்ணியிருக்காங்க.. இத்தனை நாள் அலைஞ்சதுல அந்த காப்பி நேத்துதான் என்கைக்கு கிடைச்சிச்சு.. அதான் இன்னைக்கு அவர வரச் சொல்லியிருக்கேன்.. அதுவும் பத்தலைனா இருக்கவே இருக்கு டி என் ஏ டெஸ்ட்.. அதுவே உண்மையை சொல்லிரும்..உங்க அக்கா வீட்ட விட்டு வெளியில வந்த அன்னைக்குத்தான் உனக்கு லெட்டரையும் போஸ்ட் பண்ணியிருப்பான்னு நினைக்கிறேன்..
 
ஸ்ருதிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.. அக்காவோட அவசரப்புத்தியும் நிலையில்லா தன்மையும்தானே எல்லாப்பிரச்சனைக்கும் காரணம்..
 
ஏம்மாமா உங்களுக்கு அக்கா மேல கோபம் வரவே இல்லையா..??”
 
அவள் உச்சியில் தன் தாடையை பதித்தவன் ,”கோபத்தை விட வருத்தம்தான் அதிகமா இருந்திச்சு.. உட்கார்ந்து பேசியிருந்தா இந்த அளவுக்கு வந்திருக்காது.. ஒரு கணவனா அந்த நம்பிக்கையை என்னால ஸ்வேதாவுக்கு கொடுக்க முடியல.. அநத வருத்தம்தான்..
 
அவங்க கோர்ட்ல கேஸ் போட்டிருக்கிறதால உங்களுக்கு ரொம்ப அவமானம்தானே மாமா.. அப்படியிருந்தும் அவர வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கிங்க.. இந்த எவிடென்ஸ் எல்லாம் கோர்ட்லேயே நாம கொடுத்திருந்தா அவங்க பக்கம் தோத்து போயிருக்கும்தானே..
 
பேபி அவரும் பாவம்தானேடி தனக்குன்னு ஒரு உறவை தேடுறாரு.. உறவெல்லாம் இருந்திட்டு இப்படி மகனும் மனைவியும் இறந்தா அத அவரால தாங்க முடியல அதான் யாரோ எவரோ சொன்னத முழுசா விசாரிக்காம இப்படி செஞ்சிட்டாரு.. நாம அதுமாதிரி செய்யனுமா என்ன.. அதோட கோர்ட் கேஸ்ன்னு போனா அது இழுத்துக்கிட்டே போகும்.. ஒருவேளை அவங்க தீர்ப்பு வர்றவரை ஸ்ரீயை வேற யாராவது பொறுப்புல ஒப்படைக்கலாம்… அத நீ தாங்க மாட்ட.. எல்லாத்தையும் யோசிச்சுதாண்டா அவர இங்க வரச் சொன்னேன்..
 
அவனை நிமிர்ந்து பார்த்தவள்,” உண்மையிலேயே நீங்க ரொம்ப ரொம்ப நல்லவர் மாமா… ஐ லவ் யூ ஸோ..ஓஓஓ மச்… இப்படி ஒருத்தரை தவற விட்டதுக்காக அக்காவுக்காக வருத்தப்படுறதா இல்ல எனக்கு நீங்க கிடைச்சதுக்காக சந்தோசப்படுறதா தெரியல.. இப்பதான் மாமா அம்மாவும் அப்பாவும் ஏன் உங்கள தலையில தூக்கிவைச்சு கொண்டாடுறாங்கன்னு புரியுது.. நம்ம குட்டியும் உங்களமாதிரி குணத்தோடதான் வருவான்னு நினைக்கிறேன்..லவ் யூ மாமா..” அவன் கன்னத்தில் முத்தமிட அதை அணுஅணுவாக ரசித்தவன் மெல்ல மெல்ல அவள் இதழை ருசிக்க ஆரம்பித்தான்..
 
அவன் சொன்னதுபோலவே அவரும் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள அஸ்வின் டி என் ஏ ரிப்போர்ட்டையும் அவருக்கு அனுப்பி வைக்க அவரே கேஸை வாபஸ் வாங்கியிருந்தார்..
 
ஒரு ஒரு மாதம் கழித்து சந்திரன் மகளுக்கு போன் செய்திருந்தார்.. என்னமா கிளம்பிட்டிங்களா.. நேரமாச்சு எல்லாரும் உன்னத்தான் கேட்கிறாங்க.. மாப்பிள்ள வேற உன்மேல கோபமா இருக்கப்போறாரு வாடா நேரமாச்சு..?”
 
இதோப்பா வந்திட்டோம்..” கோகிலா, கற்பகம், தன் மகனோடு ஸ்ருதி காரிலிருந்து இறங்க அஸ்வின் வாசலுக்கே வந்திருந்தான்.. ஸ்ருதியை பார்த்தவன் பார்வையை மாற்றாமல் அவள் கை பிடித்து விறுவிறுவென ஒரு அறைக்குள் அழைத்துச் செல்ல கோகிலாவும் கற்பகமும் பதறினர்..
 
கோகிலா இந்த பொண்ணு மாப்பிள்ளைய கடுப்பேத்தவே பிறந்திருக்கு.. ப்பா கிளம்புறா கிளம்புறா மூனு மணியில இருந்துதான் இப்ப மணி ஆறாச்சு .. அப்புறம் அவருக்கு கோபம் வராதா..??”
 
இன்று அஸ்வின் ஸ்ருதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி தன் தொழில்துறை நண்பர்கள் இருகுடும்பத்தின் நெருங்கிய சொந்தத்தை கூட்டியிருந்தான்..கோபத்தில் கதவை காலால் அடைத்து அவளை இந்த கதவின் மேலே சாய்த்தவன் அவளை பார்க்க கோபம் போய் தாபம் வந்திருந்தது.. மெல்ல மெல்ல அவள் இதழ் நோக்கி குனிய அவன் மார்பில் கைவைத்து தள்ளியவள்,
 
மாமா…ஆஆஆ.. என்ன பண்றிங்க இப்பத்தான் இவ்வளவு கஷ்டப்பட்டு மேக்கப் போட்டிருக்கேன்.. அத கலைக்கலாம்னு பார்க்கிறிங்களா..??” அவன் அணைத்ததால் நழுங்கிய சேலையை நீவிவிட இருவரும் பார்த்து பார்த்து நெய்ய சொன்ன பச்சைவண்ண பட்டுச் சேலை திருமணத்திற்கு  முன் அவனிடம் பணமோ நகையோ வாங்க மாட்டேன் என சொன்னவளை இப்போது தன் ஆசைப்படி நகையால் குளிப்பாட்டியிருந்தான்..
 
 சந்திரன் தன் மகளுக்கென ஏகப்பட்ட புடவை நகைகள் என வாங்கி குவித்திருந்தார்.. அதுபோக ஸ்வேதாவின் நகைகள் வேறு இருந்தது.. அவள் ஆசைப்படி கையில் முழங்கை வரை கோன் போட்டிருக்க.. அவள் ஆசை அறிந்து ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்திருந்தான்..
 
அவள் இடுப்பில் கைகொடுத்து தன்னை நோக்கி இழுத்தவன் ,”இப்ப என்னடி சொல்ற..? நான் முத்தம் கொடுக்ககூடாதா..?” குரலில் கோபம் தெரிய..
 
ஆமா.. இப்படியே சொல்லி சொல்லி காலையில இருந்து பத்துதரமாச்சும் கிஸ்பண்ணியிருப்பிங்க..
 
பத்து கொடுத்தும் மாமனுக்கு பத்தலையேடி..!!”அவள் கழுத்தில் முத்தமிட
 
இதுக்கொன்னும் குறைச்சல் இல்ல.. உங்ககிட்ட ஆரம்பம் எல்லாம் நல்லாத்தான் மாமா இருக்கு ஆனா பினிசிங் சரியில்லையே.. ஒருவேளை பில்டிங் ஸ்ட்ராங் பேஸ் மட்டம் வீக்கோ…!!”
 
அவள் கீழிதலை பிடித்தவன்,” இந்த வாய் இருக்கே வாய்..!! பாவம் உடம்பு சரியில்லாதவ.. கொஞ்சம் நல்லா உடம்பு தேறட்டும்னு விலகியிருந்தா ரொம்ப பேசுறியா.. இன்னைக்கு நீ என்ன சொன்னாலும் உன்னை நான் விடுறதா இல்லை சொல்லிட்டேன்..
 
ஹாஹாஹாஹா அவன் கால்மேல் ஏறி நின்றவள் உங்கள யார் மாமா விடச் சொன்னா..கட்டிக்கோங்கன்னுதான் சொல்றேன்.. நீங்கதான் பயந்து ஓடுறிங்க… நான் வேற ஆள் மாமா.. நீங்க அக்காவ நினைச்சிட்டே என்கிட்ட வரப்பயப்படுறிங்களா.. ஒரு தரம் தவறி விழுந்திட்டா அதுக்காக நடக்காமலா இருக்கோம்.. அதே மாதிரிதான் மாமா இதும்.. தெரியாம தவறு பண்ணிட்டா அதே நினைக்காதிங்க.. உங்க வாழ்க்கையில ஸ்வேதான்னு ஒருத்தி வரவே இல்லைன்னு நினைச்சுக்கோங்க..
 
நீங்களும் நானும் லவ்பண்ணி கல்யாணம் பண்ணினா எப்படி இருப்பமோ அப்படியே வாழ்க்கையை ஆரம்பிச்சுக்கலாம்.. நான் இப்போ உங்களோட மனசாரத்தான் வாழ்றேன்.  உங்களை ரொம்ப ரொம்ப விரும்புறேன்.. ஸ்ருதியின் பேச்சை கேட்க கேட்க அஸ்வினுக்கு ஜிவ்வென்றிருந்தது..
 
அவள் சொன்னது உண்மைதான் ஸ்ருதியோடு சேர்ந்திருக்கும் நேரங்களில் தன்னை அறியாமல் ஸ்வேதாவின் நினைவுவர ஸ்ருதியும் ஒருவேளை கடமைக்காக பொறுத்துக் கொள்கிறாளோ என்ற எண்ணம் வரவும் அதற்கு மேல் அஸ்வினால் ஸ்ருதியோடு ஒன்றமுடியாது. அதோடு அவளின் உடல்நிலை வேறு முன்வர அவள் மேல் கொள்ளை அளவு ஆசையும், காதலும், தாபமும் இருந்தாலும் அப்படியே அடக்கிக் கொள்வான்..
 
கருநீல கோர்ட் போட்டு ஆண்மைக்கு இலக்கணமாய் தன்னை காதலுடன் பார்த்து நின்ற கணவனை பார்க்க பார்க்க மனது அப்படியே பொங்கியது.. ஏம்மாமா உங்க லவ்வுக்கு நான் ஏத்தவதானா.. ?நீங்க அவசரப்பட்டு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களோ..
 
                                    “ என் சண்டகாரி நீதான்
                                 என் சண்டகோழி நீதான்
                              சத்தியமா இனிமேல்
                                 என் சொந்தமெல்லாம் நீதான்..”
 
ஆஹா நீங்க பாட்டெல்லாம் பாடுவிங்களா… சரி வாங்க போவோம் வெளியில நீங்க ரொம்ப கோபமா இருக்கிங்கன்னு நினைக்கிறாங்க.. போனா போகுது அதே அப்படியே மெயிட்டேன் பண்ணுங்க.. முன்னால் இரண்டெட்டு வைத்தவள் அஸ்வின் வராமல் இருக்கவும் திரும்பி,” என்ன மாமா..??”
 
அவன் உதட்டை சுருக்கவும்,” ப்பா எப்பவும் காரியத்திலதான் கண்ணு.. நல்லவேளை லிப்ஸ்டிக்க கையோட கொண்டு வந்தேன்.. கலைஞ்சா நீங்கதான் மாமா போட்டு விடனும்…?”
 
ஓகே பேபி… அவளை தன்னை நோக்கி இழுத்தவன் தன் உயரத்திற்கு தூக்க அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாக கோர்த்தவள் நெற்றியில் இருந்து அவனுக்கு முத்தமிட துவங்க அதை அனுபவித்தவனோ தன் கைகளுக்கு அவள் உடலில் எந்த இடத்தில் செழுமை அதிகம் எனும் ஆராயும் வேலையையும் கொடுத்திருந்தான்..
 
அவன் தோட்டத்திற்கு வந்த அந்த அடங்காத காட்டு ரோஜாவை மெல்ல மெல்ல தன் அன்பாலும் காதலாலும் தன் வீட்டு ரோஜாவாக மாற்றிக் கொண்டிருந்தான்..!!
 
                                                             இனி……….????

Advertisement