Advertisement

ஐயோ மாமா இதுக்கா கையை நீட்டினேன் .. என் கைய பாருங்க..??”
 
கையில என்னடி.. நல்லாத்தானே இருக்கு..?” தன் கையால் அவள் கைவிரல்களை சோதித்துக் கொண்டிருக்க,
 
அடப்போங்க மாமா உங்கள வைச்சிக்கிட்டு..!! பாருங்க எந்த கல்யாண பொண்ணாவது கைக்கு ஒரு மருதாணிக்கூட வைச்சுக்காம இருப்பாளா.. மதியம் பிரியாணி சாப்பிடாம இருப்பாளா.. கல்யாணம் முடிஞ்ச ஒருமணி நேரத்தில இப்படி பழைய நைட்டியோட பெட்ல படுத்திருப்பாளா.. ??”
 
ச்சு இதுதானா நான்கூட பயந்திட்டேன்.. இப்ப என்ன நீ மட்டும் நல்லபடியா வீட்டுக்கு வா மருதாணி மரத்தையே உனக்காக வீட்ல அரைச்சு வைக்கச் சொல்றேன்.. டெய்லியும் நம்ம வீட்ல இனி பிரியாணிதான்.. அப்புறம் தினம் ஒரு பட்டுப்புடவையோட சுத்து.. கழுத்து நிறைய நகை போட்டுக்கோ.. யார் வேணாம்னு சொன்னா மாமா சம்பாரிக்கிறதெல்லாம் யாருக்குடி..உனக்கும் ஸ்ரீக்கும்தானே..
 
 இதப்போய் பெரிய மேட்டரா சொல்லிட்டு இருக்க.. எல்லாம் மனசுதான் காரணம்.. இப்ப நமக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சு.. இனி நீதான் ஸ்ரீக்கு அம்மா அந்த நிகழ்வ மட்டும் மனசில வை… முகத்தை இப்படி சோகமா வைக்காத பார்க்க சகிக்கல.. சிரி சிரி..” அவளுக்கு கிச்சு கிச்சு காட்ட எப்போதும் போல அவள் கன்னக்குழி சிரிப்பில் அவன் வீழ்ந்து கொண்டிருந்தான்.
 
அடுத்தடுத்த நாட்கள் வேகமாக கரைய இரவு முழுவதும் அவளுக்கு துணையிருப்பவன் காலையில் எட்டுமணிப்போல கோகிலா வரவும் இவன் வீட்டிற்கு சென்று கிளம்பி ஆபிஸிற்கு சென்று மாலை ஐந்துமணிக்கெல்லாம் அவள் முன்னால் நிற்பான்.. சந்திரனும் அங்குதான் இருப்பார் அவர் லீவெடுத்து பகல் பொழுதெல்லாம் மகளுடன்தான் இரவும் அவர் தான் தங்குவதாக சொல்ல அவர் உடல்நிலையை காரணம் காட்டி வீட்டிறக்கு அனுப்பி வைப்பான்..
 
கற்பகம் சாப்பாட்டோடு மதியம் வருவார்..அஸ்வின் அவளை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டான்.. இருக்கும் நேரம் எல்லாம் அவளை கை வளைவிற்குள் வைத்துக் கொள்ள ஆசைப்பட்டாலும் இருக்கும் இடத்தையும் சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு சற்று தள்ளியே இருப்பான்… யாரும் அருகில் இல்லையென்றால் ஸ்ருதியின் அருகில்தான் ..அவளை தொடாவிட்டாலும் அவள் வாசமாவது அவனுக்கு வேண்டும்..அவள் இவனின் உயிர் மூச்சாக மாறிக் கொண்டிருந்தாள்.. இரவு பாத்ரூம் சென்றால்கூட வெளியிலே நிற்பான்..
 
நீங்க படுங்க மாமா.. சொன்னாலும் அவனுக்கு விழிப்பு வந்துவிடும்..அடைகாக்கும் கோழியாக அவளை பாதுகாத்தான்.. அவன் இருக்கும்வரை அவன் கட்டுப்பாட்டில் இருப்பவள் அவன் கார் ஹாஸ்பிட்டல் கேட் தாண்டும்வரைதான்… பின்பானால் ஹாஸ்பிட்டலே அல்லோலப்பட்டது..
 
இவள் எப்படியாவது வெளியில் வந்து அந்த ஐந்து மாடி கட்டிடத்தில் இருக்கும் நோயாளிகளோடு எப்படிதான் சினேகிதம் பிடித்தாளோ.. சிறு குழந்தைகள் இளைஞர்கள், இளைஞிகள் என நான்கைந்துபேரை பழக்கி வைத்துக் கொண்டு அவர்களோடு சேர்ந்து அந்த ஹாஸ்பிட்டலை ரெண்டாக்கிக் கொண்டிருந்தாள்..
 
நர்ஸ் கொடுக்கும் மாத்திரைகளை வாயிலேயே வைத்திருந்துவிட்டு பின்பு ஜன்னல் பக்கம் தூக்கி வீசுவது, முக்கியமான ஊசி போடும் நேரத்தில் அறையில் இருக்காமல் மற்ற மாடிகளுக்கு போவது நர்ஸ் இவளை காணாமல் மாடியேறி தேடி தேடியே ஐந்து கிலோ இளைத்து விட்டார்..
 
அவர் லிப்டில் வந்தால் இவள் படிக்கட்டு வழியாக சென்றுவிடுவது அவர் படியேறி வந்தால் இவள் லிப்டிற்குள் புகுந்துவிடுவது.. மீறி போன் செய்து யாரையாவது கீழே நிறுத்திவைத்து இவளை பிடிக்கச் செய்தால் இவள் இடையிலேயே இரண்டாம் மூன்றாம் தளத்தில் இறங்கி ஏதாவது ஒரு பேசண்ட் அறைக்குள் புகுந்து விடுவது என,
 
 பாவம் அவர்கள் டாக்டரிடம் சொன்னால் நர்ஸ்களுக்குத்தான் திட்டுவிழும் ஒரு பேஷண்டைக்கூட ஒழுங்கா பார்த்துக்க முடியாதா..?” என.. பத்தாதற்கு அதுவரை ஒழுங்காக இருந்தவர்கள் இவளோடு சேர்ந்த பிறகு அவளை போலவே ஆட்டம் போட்டனர்.. அதே மாதிரி ஆட்டம் காட்டினர்..
 
யாருமே மாடிப்படியில் மெதுவாக ஏறுவதில்லை தடதடவென வேகமாக ஏற , இறங்கவென பார்ப்பவர்களுக்குத்தான் திக்திக் என அடித்தது.. எப்போது யார் தவறி விழுவார்களோ என கோகிலா இருந்தாலாவது கொஞ்சம் அடங்குபவள் சந்திரன் இருந்தால் ஈஸியாக ஏமாற்றி வெளியில் வந்துவிடுவாள்.. பத்தாதற்கு ஸ்ரீயையும் தூக்கிக் கொண்டே விளையாடுவது, குதிப்பது , இறங்குவது..ஒடுவது என தாங்கமுடியவில்லை..
 
ஒரு நர்ஸ் ரிசப்ஷனிற்கு வந்தவர் அங்கிருந்த பெண்ணிடம்,” சிஸ்டர் நான் வீட்டுக்கு போறேன் லீவ் சொல்லிருங்க..?”
 
என்ன சிஸ்டர் ஒருவாரம் லீவ் முடிஞ்சு இன்னைக்குத்தான் வந்திங்க.. மறுபடி லீவ் உடம்பு எதுவும் சரியில்லையா..?”
 
அட ஏன் சிஸ்டர் அந்த நாலாவது மாடியில அட்மிட் ஆகியிருக்க ஸ்ருதி பொண்ணோட அன்னைக்கு வீட்டுக்கு போயிருந்தேன்ல .. ஐயோ.. அம்மா.. பொண்ணா அது அங்க பண்ணின அட்டாகசத்தில பிபி ஏறி இன்னைக்குத்தான் வேலைக்கு வந்தேன்.. கெஞ்சி கெதறி அந்த மாடி வேண்டாம் ரெண்டாவது மாடியில டியூட்டி வாங்கினேன்.. அங்க ஒரு சின்ன பையனுக்கு குளுக்கோஸ் போடச் சொல்லியிருந்தாங்க.. நான் போடப்போகும்போதே அவன் இப்ப வேணாம் நான் ஸ்ருதி அக்காவோட விளையாடப்போறேன்.. அப்புறமா போடுங்கன்னு சொன்னான்..
 
நான் அதெல்லாம் இல்லைன்னு மீறி குளுக்கோஸ போட்டுவிட்டுட்டு சாப்பிட்டுட்டு வர்றதுக்குள்ள நான் வைச்ச அளவுகூட்டிவிட்டு மூனுமணி நேரத்தில மூடியவேண்டிய பாட்டில அரைமணி நேரத்தில முடியிற மாதிரி அளவை கூட்டி விட்டுட்டான்.. கேட்டா எனக்கு ஒழுங்கா வேலைப்பார்க்க தெரியலையாம்.. நான் ஓபி அடிக்கிறதுக்காக அப்படி மெதுவா வைச்சேனாம்.. எல்லாம் இந்த ஸ்ருதி அக்கா சொன்னதா சொல்றான்.. நான் மறுபடி குளுக்காஸ் போட்டேன்னா மறுபடி இதே மாதரி செய்வேன்னு .. இல்லனா மாத்திரையை மாத்தி போடுவேன்னு கேட்டா நான் தான் மாத்தி கொடுத்திட்டதா சொல்வானாம்.. இன்னும் என்னன்னமோ சொல்றான் எனக்கு இறங்கின பிபி மறுபடி ஏறிருச்சு.. பாவம் அந்த பையனுக்கு ஏதாச்சும் ஆனா என்னால தாங்க முடியாது..ப்பா  அந்த பொண்ணு இந்த ஹாஸ்பிட்டல விட்டு போனா சொல்லுங்க வர்றேன்.. இல்லனா அப்படியே வேற வேலை தேடிக்கிறேன் வர்றேன்பா…
 
நாட்கள் குறைய குறைய அஸ்வின் அப்படியே உள்ளுக்குள் தவித்து கொண்டிருந்தான்.. இவள் பண்ணும் அட்டகாசம் தாங்காமல் நர்ஸ்கள் இவனிடம் புகார் சொல்லியிருக்க இப்போது அலுவலகம் செல்லாமல் நாள் முழுவதும் அஸ்வின் அவளோடுதான்..  அன்று அவள் தோழிகள் நால்வரும் அவளை பார்க்க வந்திருக்க அவர்களுக்கு மனது தாங்கவில்லை..
 
கோபத்தில் வந்தவுடன் அவளை நன்கு அடித்துவிட்டார்கள்.. சந்தியா அழுது கொண்டே எருமை அப்பவே மாத்திரைய போடாதன்னு எவ்வளவு சொன்னேன்.. கேட்டியா.. கேட்டியா..? என மொத்த மற்றவர்களும் போட்டு வெளுத்தார்கள்..
 
அடிப்பாவிகளா ஒரு பேஷண்ட்டுக்கு ஆப்பிள் ,ஆரஞ்சு கொண்டு வருவிங்கன்னு பார்த்தா இப்படி அடிய கொண்டு வர்றிங்க..?”
 
போடி லூசு உங்க மாமாதான் பழக்கடையை இங்க கொண்டு வந்திருக்காரே.. இப்படி சொல்லாம கொள்ளாம கல்யாணம் வேற பண்ணியிருக்க… நாங்க இந்த விசயம் கேள்விப்பட்டு ரொம்ப கோபத்தில வந்தோம்.. இப்ப ஹாஸ்பிட்டல்ல இருக்கிறதால பேசாம போறோம…வீட்டுக்கு வா இருக்கு கச்சேரி..!!”
 
மேகலா.. ஆனா அண்ணா ரொம்ப ஸ்வீட்…டி.. அருமையான குணமா இருக்காங்க..?”
 
ஸ்ருதி ,”அவங்க எப்பவுமே நல்ல குணம்தானடி..
 
ஆஹா ஹிட்லரா இருந்தவர் நல்லவராயிட்டாரா..
 
ச்சே ச்சே இன்னும் அந்த கோபம் குறையல.. ஆனா ரொம்ப ரொம்ப நல்ல குணம்டி.. நான் எப்பவுமே அவங்க குணத்தையோ நடத்தையையோ தப்பு சொன்னதில்ல.. இல்லனா நான் அவங்கள கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டு இருப்பேனா.. இல்ல எங்க அம்மா அப்பாதான் ஒத்துக்கிட்டு இருந்திருப்பாங்களா.. சொல்லப்போனா என்னவிட எங்க அம்மா அப்பாவுக்கு மாமாதான் எல்லாவே பார்த்து பார்த்து செய்றாங்க..ஒரு மகனா நடத்துக்கிறாங்க.. நைஸ் மேன்டி..”
 
தன் கணவனை தோழிகளே ஆனாலும் தவறாக ஒருவார்த்தை சொல்வதை அவள் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை.. அவர்கள் பேசுவதை அந்த அறையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த கோகிலாவுக்கு மனது நிறைந்திருந்தது.. மகளும் மருமகனும் நீண்ட நாட்கள் சந்தோசமாக இருக்க கடவுளை வேண்டிக் கொண்டவருக்கு அஸ்வின் ஸ்ருதிக்காக மனதிற்குள் மறுகுவது நன்கு தெரிந்தது.. பெற்றவர்களே என்றாலும் தங்களைவிட ஒருபடி அதிகமாக ஸ்ருதிமேல் பாசமாக இருந்தான்..
 
அஸ்வின் கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தவன் அவளுக்கு தரவேண்டிய மாத்திரைகளை அவளுக்கு கையில் கொடுத்து அவள் விழுங்கி விட்டேன் என சொன்னாலும் நம்பாமல் நாக்கை செக்பண்ணி மாத்திரை விழுங்கி விட்டது தெரிந்தவுடன்தான் மற்ற வேலைப்பார்க்க சென்றான்..
 
அவர்கள் வந்த இந்த அரைமணி நேரத்தில் அவர்களுக்கு இரண்டு முறை ஜூஸ் அனுப்பியிருந்தவன் ஸ்ருதிக்கு மட்டும் அவனே புகட்டிவிட்டான்.. அவர்கள் இருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கவில்லை.. அவனுக்கு ஸ்ருதி மட்டும்தான் முக்கியமாக தெரிந்தாள்..ஸ்ருதியின் தோழிகளுக்கு வந்ததிலிருந்து இந்த தேவதை மாதிரி பொண்ணு ரெண்டாம் தாரமா.. என மனதிற்குள் முரண்டிக் கொண்டிருந்த கேள்வி அஸ்வினின் அன்பை பார்த்து நமக்கும் இப்படி ஒருவர் கிடைத்தால் அதில் தவறில்லை என தோன்றியது..
 
நாட்கள் கடகடவென ஓட ஒன்பது நாட்கள் முடிந்திருந்தது.. நாளை ஆபரேஷன் என முடிவு செய்திருந்தார்கள்.. காலையில் இருந்தே அனைவரும் இறுக்கமாகத்தான் இருந்தார்கள்.. காலை டிபனை அவளுக்கு ஊட்டிவிட்டவன் மாத்திரையை கொடுக்க அதை விழுங்கியவள் அவன் கையை பிடித்திருந்தாள்..
 
என்னடா ஸ்ருதி..?” கட்டிலில் அவள் அருகில் அமர அவன் மடியில் தலைவைத்து படுத்தவள்,
 
ஏம்மாமா நாளைக்கு எனக்கு பண்ற ஆப்ரேஷன்ல நான் பிழைக்காம செத்து போயிருவனா..??”
 
ஹேய்,..லூசு என்ன பேச்சு பேசுற..?” அவள் வாயை மூடி அவளை அள்ளி அணைத்தவன் தனக்குள்ளேயே அவளைப்புதைத்துக் கொண்டான்..
 
நிமிர்ந்தவள்,” மாமா.. நான் செத்துப்போனா ஸ்ரீ என்னை மறந்திருவான் தானே..??”
 
வேண்டாம்டா ..”அவளை பேச வேண்டாம் என சைகை செய்தவன் தன் இதழ் முத்தத்தால் அவளுக்கு உயிர் அளித்துக் கொண்டிருக்க அவனை விடவே மாட்டேன் என்பது போல இறுக்கி கட்டிக் கொண்டாள்..
 
                                                                                                    இனி……………..?????

Advertisement