Advertisement

காட்டு ரோஜா என் தோட்டத்தில்
                         
                                                         அத்தியாயம்  –  14
 
 
ஸ்ருதியின் அறைக்கு சென்று கொண்டிருந்த அஸ்வினுக்கோ தன் தாய் சொல்வது புரியாமலில்லை.. ஆனால் இனி ஸ்ருதியை விட்டு ஒருநிமிடம்கூட பிரிந்திருக்க அவன் மனம் இடம் கொடுக்கவில்லை.. அவளை கைக்குள்ளேயே வைத்து ஆறுதல் சொல்ல, அவள் துன்பத்தை தான் வாங்கிக் கொள்ளத் துடிக்க சாதாரணமாய் அவளை இப்போது தான் தொட்டாலும் கூட மற்றவர்கள் அதை தவறாய் புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கு என்பதை உணர்ந்தான்..
 
ஸ்ருதியை எப்படி சம்மதிக்க வைப்பது என யோசித்தபடி அறைக்குள் நுழைய ஸ்ருதி கட்டிலில் படுத்து ஸ்ரீயை தன் மேல் படுக்க வைத்து விளையாட்டுக்காட்டிக் கொண்டிருந்தாள்..
 
அவனை வாங்கியவன்,” கொஞ்சநாளைக்கு பேசாம இரு.. இவன இப்படியெல்லாம் தூக்கவேணாம்.. அப்புறமா வீட்டுக்கு வந்தவுடன அவனை நீயே வைச்சுக்கலாம்.. 
 
அவனை முறைத்தபடி திரும்பி படுக்க அவள் அருகில் அமர்ந்தவன்,” சரி உடனே மூஞ்ச தூக்காத..?? கொஞ்சநேரம் மடியில வைச்சுக்கோ எழுந்து உட்காரு.. 
 
ஒன்னும் தேவையில்ல.. நீங்க போங்க மாமா..
 
ஏண்டி..??”
 
நீங்கதானே என்னை இங்க சேர்த்திங்க.. அந்த நர்ஸ் குண்டம்மா அரைமணி நேரத்துக்கு ஒரு ஊசிப்போட்டுட்டு போடுது..
 
வாயிலே போடப்போறேன் பாரு.. அவங்கள அப்படியெல்லாம் சொல்லாத..?? முதல்லயே லேசா தலைவலி வந்தப்போ சொல்லியிருந்தா இந்த பிரச்சனையே வந்திருக்காது .. அவள் கன்னத்தை கிள்ளியவன் நீங்க பெரிய டாக்டர்… மெடிக்கல்ல உன் இஷ்டத்துக்கு மாத்திரை வாங்கி போட்டிருக்க.. உன்னையெல்லாம் சின்னப்புள்ளையிலே நல்லா கட்டி வைச்சு உதைச்சிருக்கனும்.. எல்லாம் சந்திரன சொல்லனும் புள்ள வளர்த்திருக்காராம் புள்ள..!!”
 
ஹாஹாஹா ஊருக்குள்ள பாதிப்பேர் எங்க அப்பாவ அப்படித்தான் மாமா திட்டுவாங்க.. அப்பாவுக்கு நான் நல்லா பேர் வாங்கி கொடுத்திருக்கேன் இல்ல.??”.கன்னம் குழி விழ சிரிக்கும் அவளையே பார்த்தவன்,
 
 நானே இவள கண்ணு வைச்சிட்டனோ.. எப்பவும் சிரிச்சிட்டே இருக்கா, குழந்தை மாதிரி, தேவதை மாதிரி இருக்கா.. ப்பா இவ்வளவு பேசுறான்னு.. நம்ம காலடி மண்ண எடுத்தே இவளுக்கு திருஷ்டி சுத்திப் போடச் சொல்லனும்.. 
 
போடி லூசு.. பத்தியா நான் பேச வந்தத விட்டுட்டு வேற என்னமோ பேசிட்டு இருக்கேன்.. நீ என்னை கல்யாணம் பண்ண முழுமனசாத்தான சம்மதம் சொன்ன..??”
 
அப்ப முழுமனசாத்தான் மாமா சொன்னேன் .. ஆனா இப்பத்தான் யோசிக்கிறேன்.. ஏன்டா அப்படி சொன்னேன்னு..??” அவளை முறைத்து பார்க்க..
 
பின்ன நீங்கதான இங்க என்னை சேர்த்திங்க.. போங்க போங்க..அவன் புஜத்தில் குத்த,
 
அவள் கையை பிடித்தவன் ,” நாம இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாமா..??”
 
ஓகே மாமா இப்பவே பண்ணிக்கலாம்.. வாங்க வீட்டுக்கு போவோம்..
 
ஆச்சர்யத்துடன்,” என்னடி படக்குன்னு ஓகே சொல்லிட்ட..?”
 
ஆமா மாமா இந்த இடமே எனக்கு பிடிக்கல.. கல்யாணம் முடிஞ்சா வீட்லயே இருக்கலாம்ல..
 
நீ அதுலயே குறியா இரு.. நான் சொல்ல வர்றத முழுசா கேளு.. கல்யாணம் முடிஞ்சாலும் நீ இங்கதான் இருக்கனும் ..டாக்டர் எப்ப சொல்றாரோ அப்பதான் வீட்டுக்கு..
 
செல்லாது செல்லாது.. அப்போ நான் இந்த டீலுக்கு ஒத்துக்க மாட்டேன்.. அப்ப கல்யாணமே வேண்டாம்..
 
அவள் வாயை மூடியவன்,” அச்சானியமா பேசாத.. ப்ளிஸ் இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம்..”
 
ஏம்மாமா இவ்வளவு அவசரம்.. நான்தான் சம்மதம் சொல்லிட்டனே.. நல்லநாள் பார்த்து எல்லாருக்கும் சொல்லி நல்லா கல்யாணம் பண்ணிக்கலாம்.. இப்பனா ஒரே டென்சனா இருக்கும்..
 
அஸ்வினோ அவள் கையை பிடித்தபடி தன் மனதிற்குள் ப்ளீஸ் புரிஞ்சுக்கோடி.. எனக்கு என்னமோ பயமா இருக்கு .. என்னால உன்னவிட்டு ஒருநிமிசம்கூட இருக்க முடியாது போல.. அவன் எண்ண அலைகள் அவளை தாக்கியதோ அவனை திரும்பி பார்த்தவள் பேசுவதற்குள் கோகிலா உள்ளே நுழைந்திருந்தார்..
 
மாப்பிள்ள நாளை மறுநாள் நாள் நல்லா இருக்காம்.. அண்ணி இப்பதான் போன்ல சொன்னாங்க.. உங்க போன்ல சைலண்ட்ல இருக்கோ.. நீங்க எடுக்கலைன்னு சொன்னாங்க.. உங்க குலதெய்வ கோவில்ல கல்யாணத்த வைக்கச் சொல்லி ஜோசியர் சொல்லிட்டாராம்..
 
அம்மா இப்ப எதுக்கு எல்லாரும் விடிஞ்சா கல்யாணம்.. புடி வெத்தல பாக்கன்னு நிற்கிறிங்க.. மெதுவா வைக்கலாம்மா..??”
 
இல்லடி பொதுவாவே உங்க ரெண்டுபேர் ராசிக்கும் அந்த நாள் ரொம்ப நல்லா இருக்காம்.. அன்னைக்கு கல்யாணம் பண்ணினா நீங்க ரெண்டுபேரும் அமோகமா வாழுவிங்களாம்.. எங்களுக்கும் அதுதானே முக்கியம்..
 
அம்மா.. இழுத்தவள் அதுக்கு எனக்கும் கொஞ்சம் டயம் வேணாமா..??”
 
இதுல உனக்கு என்ன பிரச்சனை ஸ்ருதி..?? மாப்பிள்ளைதான் நல்லா யோசிக்கனும் உன்னைப்போய் கல்யாணம் பண்றதுக்கு..!! அவருக்கே சரின்னா நீ வாய மூடிட்டு நாங்க சொல்றத மட்டும் கேளு..??”
 
அம்மா எனக்கு ஒரு டவுட்.. நீங்க எனக்கு அம்மாதானான்னு..??”
 
எனக்கும் அந்த டவுட்தான் ரொம்ப நாளா..!! நம்ம தலைமுறையிலயே இப்படி ஒருத்தி இல்லவே இல்லை.. ஒருவேளை நீ பொறந்தப்போ ஹாஸ்பிட்டல்ல பிள்ளைய மாத்தி கொடுத்திட்டாங்களோன்னு..??” வாய் பேசிக் கொண்டிருந்தாலும் கை ஜூஸ் பிழிந்து கொண்டிருக்க ம்ம் இதை குடி..?” வாங்காமல் உர்ரென்று இருந்தவளை குடிடி..!!”  கையில் திணித்தவர் அவள் குடித்து முடிக்கவும்தான் அஸ்வின் பக்கமே திரும்பினார்..
 
இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த அஸ்வினுக்கு சிரிப்பு.. கோகிலாவை பார்த்தவன் பாவம்தான் இவங்க.. எப்படிதான் இவள வளர்த்தாங்களோ..நல்ல வேளை அத்தை வந்து கல்யாண பேச்சை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போயிட்டாங்க.. இல்லனா இவள சம்மதிக்க வைக்கிறதுக்குள்ள நாமளும் நாலு ஜூஸ் குடிச்சிருக்கனுமோ..
 
 நீங்க சொல்லுங்க தம்பி நாங்க என்ன ஏற்பாடு பண்ணனும்..?இவ பேசுறதயெல்லாம் கணக்கில வைக்காதிங்க..
 
நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம்த்த.. நானே எல்லாத்தையும் பார்த்துக்குறேன்.. டாக்டர்கிட்ட முதல்ல பேசுறேன்.. மத்தத அப்புறமா முடிவெடுக்கலாம்.. அஸ்வின் ஸ்ருதியை கோகிலாவிடம் ஒப்படைத்தவன் அடுத்தடுத்த வேலைகளை தன் கையில் எடுத்துக் கொண்டான்.. ஸ்ருதியை கொஞ்சம்கூட தொல்லை செய்யவில்லை..
 
பட்டுச்சேலை, நகைகள் மட்டும் போனிலேயே அவளுக்கு பிடித்ததை ஆர்டர் செய்ய சொன்னவன் மற்ற அனைத்தையும் கற்பகத்தின் துணையோடு பார்த்து பார்த்து செய்தான்..
 
வேகமாக நாட்கள் ஓடி கல்யாணநாளும் விடிய டாக்டரின் ஆலோசனைப்படி அவளுக்கு அதிக அலைச்சல் கொடுக்காமல் முதலில் வீட்டிற்கு சென்று வீட்டு தெய்வத்தை கும்பிட்டவர்கள்  அங்கேயே தயாராக அஸ்வின் எடுத்த  கொடுத்த பட்டுச் சேலையிலும் நகைகளிலும் தேவதைபோல ஜொலித்தாள்.
 
அவளை நிமிர்ந்து பார்ப்பதும் பின் குனிவதுமாய் இருந்தவன் டேய் அஸ்வின் அவ அழகை கண்ணுபோடாத..’ படக்கென முகத்தை வேறு பக்கம் திருப்ப அடுத்து சில நொடிகளில் காந்தம் ஈர்த்த இரும்பாக மீண்டும் அவள் முகத்தில்தான் நிற்கும்..
 
 
அஸ்வின் பட்டுவேட்டி சட்டையிலும் ஸ்ரீக்குட்டி கட்டிகோ ஒட்டிக்கோ வேட்டியில் தத்தக்கா பித்தக்கா என நடக்க மூவரையும் பார்க்க பார்க்க தெவிட்டவில்லை..
 
கோகிலாவும் கற்பகமும் அடிக்கடி தங்களை மீறிவழிந்த கண்ணீரை துடைத்தபடி இருக்க சந்திரனோ நொடிக்கொருதரம் மகள் அருகில்தான்.. அவளுக்கு உடல்நிலை சரியில்லாத நாளில் இருந்து அவர்தான் மிகவும் உடைந்துவிட்டார்.. அவருக்கு தன் கடைக்குட்டி மகளை மிகவும் பிடிக்கும்.. சேட்டைகளை ரசிக்கத்தான் செய்வார்..  மற்றவர்கள் ஸ்ருதியை திட்டும்போது கோபம் வந்து பெல்ட்டை எடுப்பது.. எப்படித்தான் அடித்தாலும் அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவர் மடியில் இருக்கும் மகளை மிகவும் பிடிக்கும்.. அப்படிபட்டவளுக்கு உடல்நிலை சரியில்லை என்பதை அவரால் தாங்கமுடியவில்லை..
 
 கோகிலாதான் அவரை அவ்வப்போது அதட்டி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார்.. ஒரு நர்ஸை கூடவே அழைத்து வந்திருந்ததால் அவரும் ஸ்ருதியை அவ்வப்போது செக் செய்து கொண்டிருக்க கடுப்படைந்த ஸ்ருதி அவரை பாத்ரூமில் வைத்து பூட்டிவிட்டாள்..
 
ரூமையும் பூட்டி வெளியில் வந்திருக்க வெகுநேரம் கதவை தட்டியவரை ஏதோ பொருள் எடுக்க போன கற்பகம்தான் கடைசியில் திறந்துவிட்டார்.. இந்த நர்சுக்கே முகமெல்லாம் வியர்த்து பிபி அதிகமாகிவிட்டது.. எப்படியும் அவர் நாளை வேலைக்கு வருவது சந்தேகம்தான்.. அனைவரும் காரில் கிளம்ப அஸ்வின், ஸ்ருதி, ஸ்ரீ ஒரு காரிலும் மற்றவர்கள் வேறு காரிலும் வர அஸ்வின் ஸ்ருதியின் உடல்நிலைக்கா காரை  மெதுவாக உருட்டிக் கொண்டிருந்தான்..
 
வாங்க மாமா இறங்கி நடந்து போவோம்..
 
ஏண்டி ..??”
 
அதோ அந்த மாட்டை பாருங்க நானும் அந்த முக்கு திரும்புதினலிருந்து பார்க்கிறேன்.. அதுதான் முன்னாடி நடக்குது..நாம அதை காருல மேய்ச்சிக்கிட்டு பின்னாடிதான் போறோம்.. எங்கள இறக்கி விடுங்க நானும் ஸ்ரீயுமாச்சும் இறங்கி அந்த மாட்டை மேய்ச்சுக்கிட்டே அந்த கோயிலுக்கு வந்திருறோம்.. நிப்பாட்டுங்க..!!”
 
அவள் கன்னத்தோடு தன் கன்னத்தை வைத்து அழுத்தியவன் ,”ரொம்ப பேசாதடி.. வாயாடி.. மாமாவுக்கு கான்ஷன்டிரேசன் வேற எங்கையோ போகுது..?” அவள் அழகை பருகத்துடித்த கண்களையும் கையையும் கட்டுப்படுத்துவதே அவனுக்கு பெரிய வேலையாய் இருந்தது..
 
அவன் கன்னத்தை தள்ளியவள் ஒன்னு நீங்க வேகமா போங்க.. இல்லனா நான் எங்கப்பாவோட அந்த கார்ல வர்றேன்.. நிறுத்துங்க.. அவள் தொல்லை பொறுக்கமூடியாமல் காரின் வேகத்தை சற்று அதிகப்படுத்த இருபது நிமிடங்களில் போக வேண்டிய இடத்திற்கு ஒருமணிநேரத்தில் வந்தான்..
 
அந்த மெரூன் நிற பட்டுச்சேலையிலும் அவள் தேர்ந்தெடுத்திருந்த நகைகளும் அவளை அப்சரஸாய் காட்ட காரை விட்டு இறங்கி முன்னால் நடக்க போனவளின் கையை பிடித்தவன் தன் மகனோடு இறங்கினான்.. அங்கு ஐயர் எல்லாவற்றையும் தயார் நிலையில் வைத்திருக்க இருவரையும் முதலில் சாமி கும்பிட அனுப்பி வைத்தார்கள்..
 
அஸ்வின் கடவுளே ஸ்ருதிக்கு ஒன்னும் ஆகக்கூடாது.. அவ இல்லாத வாழ்க்கைன்னு எனக்கு இனி எதுவுமே இல்லை.. என்னோட வாழ்க்கையில பாதிய அவளுக்கு கொடுத்திருங்க.. எனக்கும் என் பையனுக்கும் அவ கண்டிப்பா வேணும் அவள எங்ககிட்ட நல்லபடியா கொடுத்திடுங்க..
 
ஸ்ருதியோ அக்காவால நிம்மதி இல்லாம இருக்கவங்களுக்கு நான் நல்லது பண்ணனும்.. ஸ்ரீக்கு நல்ல அம்மாவா இருக்கனும் இருவரும் வந்து மணமேடையில் அமர முக்கியமான சிலரே அங்கு இருந்தார்கள்.. அடுத்த பத்துநிமிடங்களில் அஸ்வின் ஸ்ருதி கழுத்தில் தாலி கட்டியிருக்க சில சடங்குகள் முடிந்த உடனேயே ஸ்ருதியை வீட்டிற்கு கிளப்பியிருந்தான்..
 
வீட்டிற்கு வந்து விளக்கேற்றி மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுக்க ஸ்ருதியை உடையை மாற்ற சொல்லியவன் அடுத்த பத்துநிமிடத்தில் ஹாஸ்பிட்டலில் இருந்தான்.. அவளை சாப்பிடக்கூட விடவில்லை.. மற்றவர்களை சாப்பிட்டு மாலையில் ஹாஸ்பிட்டலுக்கு வரச் சொல்லி அதுவரை தானே அவளைப்பார்த்துக் கொள்வதாக சொல்லியிருந்தான்..
 
உம்மென்று முகத்தை தூக்கி வைத்திருந்தவளை கண்டு கொள்ளாமல் டாக்டர் ஒருமுறை செக்கப் செய்த பின்னரே அவளைப்பார்த்தான்..
 
ஹேய் பேபி கல்யாணம் நடந்த அன்னைக்கே இப்படி முகத்தை தூக்கி வைச்சிக்க கூடாதுடா..?? ம்ம் சொல்லு இப்ப உனக்கு என்ன பிரச்சனை..?” அவள் கைகளை பிடிக்க,
 
அதை உதறியவள்,” நீங்கதான் மாமா.. கல்யாணம்ங்கிறது வாழ்க்கையில எப்படி ஒரு நிகழ்வு..அது மறுபடி வருமா.. அதை அனுபவிக்ககூட விடாம இப்படி தரதரன்னு இழுத்துட்டு வர்றிங்க..??” அவள் இரண்டு கைகளையும் அவன் முன்னால் விரித்து காட்ட அதை அப்படியே தன் கன்னத்தில் அழுத்தவும்,
 

Advertisement