Advertisement

காட்டு ரோஜா என் தோட்டத்தில்
                  
                                 அத்தியாயம்  –  13
சம்மதம் சொன்னவள் அதோடு கன்டிசன்ஸ் என சொல்லவும் அவளை நிமிர்ந்து பார்க்க நல்ல நிலா வெளிச்சம் தன் ஒளியை ஸ்ருதியின் முகத்தில் வாரியிறைத்திருக்க வெள்ளியை அவள் முகத்தில் வார்த்தாற் போலிருந்தது.. சும்மாவே அவளிடம் மயக்குபவன் இப்போது அப்படியே பார்த்த விழி பார்த்தபடி நின்றிருந்தான்.. அவள் இதழை சிறையெடுக்க, அவள் மேலிருந்து வரும் சுகந்தத்தை சுகிக்க அவளை அணைக்க கைகள் துடிக்க அவன் மனமோ..
       “ ஆத்தி என, நீ பாத்தவுடனே
காத்தில் வச்ச இறகானேன்.
காட்டு மரமா வளர்ந்த இவனும்,
ஏத்தி வச்ச மெழுகானேன்.
கோர புல்ல ஓர் நொடியில்,
வானவில்லா திரிச்சாயே.
பாறை கல்ல ஒரு நொடியில்,
ஈர மண்ணா கொழைச்சாயே.
ஊரு அழகி, உலக அழகி,
யாருமில்ல உனபோல,
வாடி நெருங்கி பாப்போம் பழகி……
உன் அழகில், என் இதயம்
தன் நிலையை, மறந்து மறந்து
கொஞ்சிடவும், கெஞ்சிடவும்
மருகுதே, உருகுதே!
உன் வழியில், என் பயணம்
வந்தடைய, நடந்து நடந்து
அஞ்சிடவும், மிஞ்சிடவும்
சிதறுதே, பதறுதே !”
அப்படியே அவளோடு டூயட் பாடத்துவங்கியிருந்தான்.. மனதிற்குள் கன்டிசன்களை வரிசை படுத்தியவள் ,”மாமா மாமா” என அழைத்து சத்தம் வராமல் இருக்கவும் அவனை நிமிர்ந்து பார்க்க அவன் பார்வையை மட்டும் தன் மேல் வைத்து வேறு உலகத்தில் இருந்தவனை அவசரமாக இந்த உலகத்திற்கு அழைத்து வந்தாள்..
தன் டூயட் கலைந்த கடுப்பில் இவள பேசவிட்டா ஏதாச்சும் வில்லங்கமா சொல்லித் தொலைவாளே.. “என்னடி என்ன பெரிய கன்டிசன் போட போற..??”
“முதல்ல இப்படி வாடி போடின்னு கூப்பிடுறத நிப்பாட்டுங்க ..?”
“முடியாது.. நான் அப்படித்தான் கூப்பிடுவேன்.. இதுதான் உன்னோட முதல் கன்டிசன்னா அத என்னால செய்ய முடியாது.. கன்டிசன் போடுறாளாம் கன்டிசன்..?”
“மாமா…. நான் இன்னும் முழுசா சொல்லவே இல்லை..?”
“நிப்பாட்டு என்ன சொல்லப்போற..? நான் இப்படியேத்தான் அடங்காம திரிவேன்.. கல்யாணம் பண்ணினா நீங்க எதுவும் கேட்கக்கூடாது அதுதானே..?”
“ம்ம்ம் ஏறக்குறைய அதுதான்..!! அடுத்து..?”
“அடுத்து என்ன அடுத்து.. நீங்க என்கிட்ட புருசன்கிற உரிமைய எடுத்துக்க கூடாதுன்னு சொல்லுவ..? நான் ஸ்ரீக்கு மட்டும்தான் அம்மா.. போனா போகுதுன்னுதான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்.. அதனால நீங்க நாட்டமை படத்தில வர்ற மாதிரி மிக்சர மட்டும் திண்ணுட்டு நீ என்ன சொன்னாலும் செஞ்சாலும் ஆமாங்கிறத தவிர வேற எதுவுமே சொல்லக்கூடாது அதானே..?”
“ஐயோ ஏறக்குறைய அதேதான் மாமா.. சூப்பர்.. கண்டுபிடிச்சிட்டிங்களே.. இதுக்கெல்லாம் ஓகேன்னு சொன்னா எனக்கு உங்களுக்கு வாழ்க்கை கொடுக்கிறதுல எந்த பிரச்சனையும் இல்ல..”
“அடிங்..!!! அவளை எட்டி பிடித்தவன் அவள் கையை பின்னால் வளைத்து,” நான் என்ன சந்திரனா..?? நீ பண்ற எல்லா அலும்பையும் பொறுத்துக்க.. நீயெல்லாம் வாழ்க்கை கொடுக்கிற அளவுக்கு நான் கேவலமா போயிட்டனா.. அப்படியே பேசுற உன் வாயை அவள கீழிதழை அழுந்த பிடித்தவன் இந்த வாயை கொஞ்சம் அடக்கி நான் சொல்றத கேட்டா மட்டும்தான் நீ என்னை கல்யாணம் பண்ணிக்கலாம்.. இல்லனா நான் வேற பொண்ண பார்த்துக்குறேன்.. அவளே என் பையனுக்கு அம்மாவா இருக்கட்டும்..”
அவன் கையை தட்டிவிட்டவள் அவன் மூச்சுக்காற்று அவள் கழுத்தில் சூடாக இறங்க ஒரு கை அவள் வயிற்றில்..!! அந்த அண்மை அவளே ஏதோ செய்தது.. அப்படியே நெளிந்தவள்,” விடுங்க மாமா.. அதென்ன எப்ப பார்த்தாலும் இதே சொல்றிங்க..?”   
 விடாமல் அவளின் அண்மையை ரசித்தபடி,” இதோ பார் ஸ்ருதி விளையாட்டு போதும் நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ..கல்யாணத்துக்கு அப்புறமும் நீ இப்ப எப்படி இருக்கியோ அப்படியே இரு.. ஆனா அதுவும் ஒரு எல்லைக்குள்ள.. உன்னோட சேட்டையால அடுத்தவங்களுக்கு தொல்லைவரக் கூடாது சொல்லிட்டேன்..
 அதே மாதிரி நமக்கு கல்யாணம் நடந்தாலும் நம்ம ரெண்டு பேரும் நல்ல பிரண்ட்ஸா வாழ்க்கையை துவங்கலாம்.. ஏற்கனவே உங்க அக்காக்கிட்ட பண்ணின தப்பை மறுபடியும் நான் தொடர விரும்பல..முதல்ல ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்கலாம்.. நான் அதுக்காக எப்பவும் அப்படியே இருக்கவும் மாட்டேன்.. இதெல்லாம் நமக்குள்ள மட்டும்தான் நம்ம ரெண்டு பேரை தவிர மத்த யாருக்கும் சொல்லக் கூடாது.. அதோட முக்கியமானது வெளியில நான் என்ன சொன்னாலும் உடனே மறுப்பு சொல்றது.. அதுக்கு எதிர்பதமா செய்றது எல்லாம் கூடாது..”
அவன் அண்மையில் இருந்தபடியே,” அதெல்லாம் முடியாது மாமா நீங்க சொல்றதுக்கெல்லாம் ஆமா சொல்ல முடியாது..? தப்புனா தப்புன்னு சொல்லுவேன்..?”
“அடங்காப்பிடாரி ..சிரித்தவன் சரி சொல்லு ஆனா என்கிட்ட மட்டும் தனியா சொல்லு நான் கேட்டுக்குறேன்..”
“அப்புறம் ஒரு முக்கியமான கேள்வி..? என்மேல உனக்கு எதாவது வெறுப்பு மாதிரி இருந்தா சொல்லிரு இப்பவே நான் கல்யாணத்தை வேண்டாம்னு சொல்லிருறேன்.. ஸ்ரீக்காக நீ கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னாலும் நாம ரெண்டுபேரும் கணவன் மனைவிதான்.. அடுத்து ரெண்டு பேரும் சேர்ந்துதான் வாழனும்.. ரெண்டாம்தாரம்னு உன் மனசுக்குள்ள நெருடல் இருக்கா.. ஏற்கனவே பிடிச்சிருந்தாலும் பிடிக்காட்டாலும் நான் ஒரு பெண்ணை தொட்டவன் அதையும் நினைவில் வைச்சிக்கோ..
 என்னோட அண்மை உனக்கு வெறுப்ப தந்தா அப்புறம் நிச்சயம் நம்மளால ஒன்னா வாழ்க்கையை தொடர முடியாது.. உங்க அக்கா என்னைவிட்டு போக முக்கியமான காரணமே அவளுக்கு மனதாலயும் உடலாலயும் என்னோட ஒத்துவரலைன்னுதான்.. நல்லா யோசிச்சு உன்முடிவ சொல்லு.. ஒரு பிரசண்ட்டாவது உனக்கு என்மேல விருப்பம் இருக்கா.. கல்யாணத்துக்கு அப்புறமா நீ நான் ஸ்ரீ மூனுபேரும் ஒன்னா ஒரே அறையிலதான் இருக்கனும்.. இதுக்கெல்லாம் சம்மதமா..??”
ஸ்ருதி அஸ்வின் சொன்னவற்றையெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தவள்..” சரி மாமா நான் யோசிக்கிறேன்..?” இரண்டெட்டு நடந்து பின் திரும்பி வந்தவள்,” இதுக்கு நான் ஓகே சொல்லலைனா.. ஸ்ரீ  என்னை அம்மான்னு சொல்லக்கூடாதா…??”
அவள் கன்னத்தை தட்டியவன்,” போடி லூசு.. இனி நானே அப்படி சொன்னாலும் ஸ்ரீ கேட்க மாட்டான்.. அவன் மனசில நீதான் அம்மான்னு அழுத்தமா பதிஞ்சிட்ட.. அத அப்படியே வைக்கிறதும் அழிக்கிறதும் உன்கையிலதான் இருக்கு..??”
தன் கன்னத்தில் பதிந்த அந்த கையை அப்படியே பற்றியவள் அவன் சொன்னதெல்லாம் பின்னால் போக அவன் மேல் வெறுப்பு இல்லை என்பது அவளுக்கே தெரியும் மத்தத அப்புறமா பார்த்துக்கலாம்..” வேணா மாமா அத அழிக்க வேண்டாம்.. நான் சம்மதம் சொல்றேன்..நீங்க இனி அப்பாக்கிட்ட பேசிக்கோங்க..” கட்டை விரலில் வெற்றியை காட்டி.. கிளம்பியவள்,
மீண்டும் திரும்பி வந்து,” ஒரு டவுட் மாமா நான்தானே கன்டிசன் போட வந்தேன்.. ஆனா கடைசியில நீங்க சொன்ன எல்லாத்துக்கும் தலையாட்டிடனோ..??”
ஆஹா உஷார் ஆயிருவா போலயே.. “ச்சே ச்சே நீ சொன்ன எல்லா கண்டிசனுக்கும் என்னோட சில கருத்துகளை மட்டும் சொல்லி ஓகே சொல்லிட்டேன்.. அப்புறம் என்ன டவுட்..?”
“அதானே பார்த்தேன்..” வேகமாக நடக்க அஸ்வினிற்கு வந்த சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் மறுபக்கம் நின்று சிரித்தவன் அவள் கொலுசொலி கேட்காமல் திரும்பி பார்க்க அவள் கீழே விழுந்து கிடந்தாள்.. ஒரு நிமிடம் அவனுக்கு நெஞ்சடைக்க என்னாச்சு அவளிடம விரைந்தவன் அவள் கன்னத்தை தட்டி” ஸ்ருதி ஸ்ருதிம்மா என்னடா ஆச்சு..??”
அவள் மயக்கத்தில் இருந்தாள்..” ஸ்ருதி ஸ்ருதி..” படபடவென கன்னத்தை தட்ட விழிக்கவில்லை.. என்ன செய்வதென்று புரியாமல் அவளை கைகளில் அள்ளியவன் மாடியிலிருந்து வேகமாக கீழே இறங்கிவர ஹாலில் அமர்ந்திருந்த கற்பகம் பதறியபடி,
“என்னாச்சு கண்ணா ஸ்ருதிக்கு என்னாச்சு..??”
அவளை சோபாவில் படுக்க வைத்தவன் “தெரியலமா நல்லா பேசிட்டுதான் திரும்பி வந்தா திடிருன்னு மயங்கி விழுந்திட்டா ..?” தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் தெளிக்க கண்விழிக்காமல் இருக்கவும்,
“ம்மா நான் இவள நம்ம டாக்டர்கிட்ட கூட்டிட்டு போறேன்.. நீங்க அத்த மாமாக்கிட்ட சொல்லி அங்க கூட்டிட்டு வாங்க..” பேசியபடியே கார் சாவியோடு ஸ்ருதியை கைகளில் ஏந்தியபடி காருக்கு விரைந்தான்..
எப்படி ஹாஸ்பிட்டலுக்கு வந்தான் என்றே தெரியவில்லை.. அவ்வளவு விரைவாக வந்திருந்தான்.. நொடிக்கொருதரம் ஸ்ருதியை எழுப்பியபடி வரும்போதே தகவல் சொல்லியிருந்ததால் டாக்டர் தயாராக இருக்க அவசரசிகிச்சை பிரிவில் சேர்த்தவன் அப்படியே தொய்ந்து போய் அங்கிருந்த சேரில் அமர அலறி அடித்தபடி கற்பகத்தோடு சந்திரனும் கோகிலாவும் வந்திருந்தனர்..
“ஐயோ மாப்பிள்ள என்னாச்சு என் பொண்ணுக்கு..?” இருவரும் அழுகையில் கரைய,
“மாமா கொஞ்சம் பொறுங்க உள்ள டாக்டர் பார்த்துட்டு இருக்காங்க.. ஒன்னும் பிரச்சனை இருக்காது..” நால்வரும் பதறியபடி இருக்க ஒரு பத்து நிமிடங்கள் இருக்கும் டாக்டர் வெளியில் வந்தார்..
அனைவரும் பதறி,” டாக்டர் ஸ்ருதிக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே..??”
“ஊசி போட்டிருக்கேன் .. பத்துநிமிசத்தில கண்முழிச்சிருவாங்க.. நாளைக்கு காலையில கூட்டிட்டு வாங்க கொஞ்சம் டெஸ்ட் எடுக்கனும்..”
அனைவரும் கவலையில் நின்றிருக்க டாக்டரை தனியாக பார்க்கச் சென்ற அஸ்வின் “டாக்டர் ஒன்னும் பிரச்சனை இல்லையே..?”
“இல்லைன்னு சொல்ல மாட்டேன்.. ஏதோ இருக்கு.. காலையில சொல்றேன் அஸ்வின்.. இப்போ மெடிக்கல் எவ்வளவோ வளர்ந்திருக்கு என்ன பிரச்சனைனாலும் சமாளிச்சிரலாம் கவலைப்படாதிங்க..”
கண்விழிக்கவும் கோகிலாவை பார்த்தவள்” என்னமா ஆச்சு எனக்கு.. இங்க எப்போ வந்தோம்..?”
“ திடீருன்னு மயங்கி விழுந்திட்ட.அதான் தம்பி இங்க கூட்டிட்டு வந்திருக்காங்க.?” கண்விழித்து அழுத ஸ்ரீயை தூக்கி சமாதானம் செய்தவள் வெளியில் வர அனைவரும் வீட்டிற்கு கிளம்பினர்..
தூங்கினானோ இல்லையோ காலை எட்டுமணிக்கே அவளை கிளம்பச் சொல்லி பாடாய் படுத்தியிருந்தான்..அவனுக்கு கோபம்தான் அவள் படிப்பு முடிந்து வந்ததிலிருந்து தலைவலிக்கு டாக்டரை சந்திக்கலாம் வா வா என பாடாய்படுத்த அவளோ இப்போது தலைவலியே இல்லை அப்புறம் எதுக்கு ஹாஸ்பிட்டலுக்கு என அவனிடம் வம்பு செய்து வரமாட்டேன் என சொல்லியிருந்தாள்..
‘தப்பு பண்ணிட்டமோ அப்பவே இவள கூட்டிட்டு போயிருக்கனும்.. இல்லனா மாமாக்கிட்டயாவது சொல்லியிருக்கனும்..’ தன் மேலேயே கோபப்பட்டவன் அவள் இன்னும் அவள் அறையிலிருந்து இறங்கி வராமல் இருக்க அத்தை மாமா இருவரிடமும் சொல்லிக் கொண்டு அவள் அறைக்கு மாடியேறினான்..
கண்ணாடி முன் நின்று தலைபின்னலை அவிழ்த்துக் கொண்டிருந்தாள்.. சுடிதார் மட்டும் போட்டு ஷால் அங்கே கட்டிலில் கிடந்தது.. முகமெல்லாம் தண்ணீர் துளிகள் குளித்தவள் முகத்தைக்கூட துடைக்கவில்லை.. அவள் தலையை வாரவும் அங்கிருந்த டவலை எடுத்து அவள் முகத்தை துடைக்க வர தடுத்தவள் ,”நானே துடைச்சிக்கிறேன் மாமா.. நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..”
“பேசாம வாய மூடு..  நான் உன்மேல இருக்க கோபத்தில பட்டுன்னு அறைஞ்சிடுவேன்.. எவ்வளவு கெஞ்சினேன் ஒரே ஒருதரம் மட்டும் ஹாஸ்பிட்டல்ல செக்கப் பண்ணிரலாம்னு அடங்காப்பிடாரி கேட்டியாடி பிசாசு..?” வாய் கடுமையாக திட்டிக் கொண்டிருந்தாலும் மென்மையாக அவள் முகத்தை துடைக்க அதற்குள் தலைவாறியிருந்தவள் லேசாக பவுடர் போட்டு தன் ஸ்டிக்கர் பொட்டை தேட தன் கையில் எடுத்து வைத்திருந்த பொட்டிலிருந்து சிறு மெரூன் நிற பொட்டை அவள் நெற்றியில் ஒட்டினான்..
அவன் கோபம் உணர்ந்தவள் வாயை மூடி  அவனோடு கிளம்ப அறையை விட்டு வெளியில் வந்தவன் மீண்டும் உள்ளே வந்து அவள் மறந்திருந்த ஷாலை தோளில் போட்டுவிட்டான்.. சந்திரனும் கோகிலாவும் கிளம்பி தயாராக இருக்க இரவெல்லாம் இருவரும் ஒருபொட்டு கண்ணுறங்கவில்லை.. அஸ்வினுக்கும் தூக்கமில்லை.. நால்வரும் ஹாஸ்பிட்டலுக்கு செல்ல ஒவ்வொரு டெஸ்ட்டிற்கும் அஸ்வின் கூடவே இருந்தான்.. வெளியில் ஸ்ருதி தைரியமானவளாக காட்டிக் கொண்டாலும் அங்கிருக்கும் கருவிகளை பார்த்து பயம்தான்.. அவள் கை அஸ்வினை கையை இறுகப்பற்றியிருந்தது..
ஒன்றும் சொல்லாமல் அவளுடனேயே இருந்தான்.. ஒரு இரண்டு மணி நேரம் சென்றிருக்கும்.. எல்லா டெஸ்ட்டும் எடுத்து முடித்து ஸ்ருதியை கோகிலாவோடு அமரவைத்தவன் ரிப்போர்ட்டுகளை வாங்கச் சென்றிருந்தான்.. டாக்டர் அஸ்வினை அழைக்க கூடவே சந்திரனும் உடன் சென்றிருந்தார்..
இருவரையும் அமரசொன்னவர் ரிப்போர்ட்டுகளை பார்த்துக் கொண்டிருக்க அஸ்வின் “டாக்டர் ஒன்னும் பிரச்சனை இல்லையே..?”
“சொல்றேன் அஸ்வின்.. சந்திரனை பார்த்தவர் இவர்..??”
“இவங்க ஸ்ருதியோட அப்பா..”
“ம்ம் அவங்க சின்னப்பிள்ளையா இருந்தப்போ எப்பவாவது தலையில அடிப்பட்டிருக்கா..?”
சந்திரன்” நிறைய தரம் இருக்கு டாக்டர் எப்பவும் சேட்டை பண்ணி அடிப்பட்டுத்தான் வருவா..கை,கால்,தலை உடைஞ்சு நிறையநாள் நாங்க ஹாஸ்பிட்டல்ல தான் இருந்திருக்கோம்.. ஒரு அளவுக்கு மேல அவளுக்கு ஹாஸ்பிட்டல்னா அலர்ஜியா போற அளவுக்கு ஹாஸ்பிட்டல்வாசம்தான்..”
“அப்படி ஒருதரம் அடிப்பட்டபோ நீங்க அத கவனிக்காம விட்டதால ரத்தம் உறைஞ்சு போய் அது இப்போ கட்டியா வளர்ந்திருக்கு..?”
இருவருமே அதிர்ச்சியில்” டாக்டர்..???”
“ஆமா அஸ்வின் இவங்களுக்கு இப்ப சிலகாலமா தலைவலி அடிக்கடி வந்திருக்கனுமே.. அத நீங்க யாருமே கவனிக்கலையா..?”
அஸ்வின் “ஆமா டாக்டர் போன மாசம் எல்லாம் அப்படிதான் தலைவலியால அவதிப்பட்டா. ஆனா இப்ப இல்லைன்னு சொல்லிட்டாளே..?”
“இல்ல அஸ்வின் அவங்களுக்கு இருந்திருக்கு.. ஹாஸ்பிட்டலுக்கு வரவேணாம்னு நினைச்சு அவங்களே மெடிக்கல்ல பவர் அதிகமான மாத்திரையை வாங்கிப் போட்டிருக்காங்க.. இப்ப கட்டி கொஞ்சம் பெரிசா வளர்ந்திருக்கு..”
“டாக்டர் உயிருக்கு..??”
“மூளைக்கு பக்கத்தில இருக்கிறதால உடனே அதை ஆப்ரேசன் செஞ்சுர்றது நல்லது.. எதுக்கும் பத்து நாளைக்கு டேபலட் எழுதி தர்றேன்.. எங்க அப்சர்வேசன்ல இருக்கட்டும் அது அப்படியே கரைஞ்சிட்டா பிராபளம் சால்வ்டு.. இல்லனா கொஞ்சம் கிரிட்டிகல்தான்.. ஆப்ரேசன் செஞ்சா ரிஸ்க் பேக்டர் கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கு.. கோமாக்கு போற வாய்ப்புகள்தான் அதிகமா இருக்கு..”
சந்திரனுக்கு கண்ணீர் ஊற்றியபடியே இருந்தது.. அவர் கையை அழுத்தமாக பிடித்தவன் “மாமா ஒன்னும் ஆகாது.. கவலைப்படாதிங்க.. நாங்க இன்னைக்கே அட்மிட் பண்ணிருறோம் டாக்டர்..” சந்திரனை சமாதானப்படுத்தி வெளியில் அழைத்து வர,
ஸ்ருதி வேகமாக வந்து ,”வீட்டுக்கு போவோமா..?? எனக்கு இங்க வாந்தி வர்ற மாதிரி இருக்குப்பா.. வாங்க போவோம்..” அவர் கையை பிடித்தபடி நடக்க ஆரம்பிக்க அவளின் மறுகையை பிடித்தவன்” வா” என ஹாஸ்பிட்டலின் உள்ளே அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட அறைக்கு அழைத்து வர அங்கு கோகிலாவிடம் சந்திரன் டாக்டர் சொன்னதை சொல்லிக் கொண்டிருந்தார்..
“ப்பச் என்ன மாமா.. இங்க எதுக்கு வந்தோம்.. இந்த இடமே எனக்கு பிடிக்கல.. எனக்கு ஒன்னும் இல்ல மாமா..” அவளை இறுக அணைத்தவன் அவள் முகத்தை தன்னைப் பார்க்க செய்து,
“உண்மையச் சொல்லு இங்க வந்ததிலிருந்து உனக்கு தலைவலிக்கவே இல்லையா..??” இல்லையென தலையாட்ட போனவளின் கையை பிடித்து தன் தலையில் வைக்க,
கையை பட்டென எடுத்தவள்” ச்சூ என்ன மாமா.. இப்படியெல்லாம் செய்யக்கூடாது.. தலைவலிச்சிச்சு நான்தான் வலி ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே தினம் காலையிலயே மாத்திரையை போட்டுட்டனே.. ரெண்டு நாளா கொஞ்சம் யோசனையா இருந்ததால மாத்திரை போட மறந்திட்டேன்.. அதுக்கா இவ்வளவு டெஸ்ட்.. இந்த டாக்டர் டூபாக்கூர்ன்னு நினைக்கிறேன் .. நல்லா காசு வாங்க இப்படி டெஸ்ட் எல்லாம் எடுக்கிறார்.. வாங்க சொல்லாம கொள்ளாம ஓடிருவோம்.. பீஸெல்லாம் கட்ட வேணாம்..” பேசும் அவள் வாயையே பார்த்தவனுக்கு நெஞ்சுக்குள் அப்படி ஒருவலி..
‘இவளுக்கு ஒன்னும் ஆக நான் விடமாட்டேன்.. என் உயிர கொடுத்தாச்சும் இவள காப்பாத்துவேன்..’ அவன் அணைப்பிலிருந்து விலகாமல் அவன் இதயத்தின் ஓசை படபடவென கேட்கவும் மெல்ல தன் காதை அவன் மார்பில் வைத்து கேட்டவள்,
“ மாமா உங்களத்தான் இப்ப பெட்ல சேர்க்கனும்னு நினைக்கிறேன்.. பாருங்க ரொம்ப வேகமா உங்க இதயம் துடிக்கிது..??”
“விளையாட்டு போதும் ஸ்ருதி இனியாச்சும் நான் சொல்றத கேளு.. இனி டாக்டர் வந்து நீ வீட்டுக்கு போன்னு சொன்னாத்தான் வீட்டுக்கு.. அதுவரை இங்கதான்.. உன்னோட குரங்கு சேட்டையெல்லாம் குறைச்சிட்டு அவங்க சொல்றத கேட்டு நடக்கனும்..”
அதற்குள் நர்ஸ் கதவை தட்டிவிட்டு அந்த அறைக்குள் வர அவளை உள்ளேவிட்டு வெளியில் வந்தவன் வெளியில் கோகிலாவும், கற்பகமும் அழுது கொண்டிருக்க, சந்திரன் என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே இடிந்து போய் அமர்ந்திருந்தார்..
மூவரிடமும்  என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று திணறியவன்,” மாமா அத்தை இப்ப எதுவும் ஸ்ருதிக்கிட்ட சொல்ல வேண்டாம்.. சும்மா தலை செக்கப்புக்கு இருக்கிறதாவே சொல்லிருவோம்.. பத்து நாள் கழிச்சு மத்தத பார்த்துக்கலாம் எல்லாம் நல்லபடியா நடக்கும்னு நம்புவோம்..”
கோகிலா “நாங்க யாருக்கு என்ன துரோகம் செஞ்சோம்.. மூத்தவதான் அப்படி கொஞ்சவயசில போனான்னா இவளுக்கு இப்படி சொல்றாங்களே..? ஸ்ருதிக்கு மட்டும் ஒன்னுனா அப்புறம் நானும் அவளோடவே போயிருவேன்,” கற்பகம் அவரை கட்டி அணைத்து ஆறுதல் படுத்த அவராலேயே ஸ்ருதிக்கு ஒன்று என்றால் தாங்கும் சக்தி இருக்காது போல..
தன் மகனை கையில் வைத்திருந்தவன்,” மூனுபேரும் கொஞ்சம் இங்கயே இருங்க முக்கியமான ஒரு விசயம பேசனும்..?” உள்ளே சென்றவன் ஸ்ருதி பெட்டில் அமர்ந்து தன் போனில் கேம்ஸ் விளையாடிக் கொண்டிருக்க அதை பறித்து தன் பையில் போட்டு ஸ்ரீயை அவள் கையில் கொடுத்து வெளியில் வந்திருந்தான்..” மாமா..” என அதட்டியது காதில் விழுந்தாலும் அதை கண்டு கொள்ளவில்லை..
“எல்லாரும் நான் சொல்றத கேட்டுக்கோங்க..இப்ப இதை பேசக்கூடாது.. இருந்தாலும் எனக்கு வேற வழியில்ல ஸ்ருதி என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிட்டா தெரியும்தானே..?”
“தெரியும் மாப்பிள்ள நேத்து நைட் ஹாஸ்பிட்டல்ல இருந்து போனப்ப சொன்னா.. நல்லபடியா குணமாகி வரட்டும் முதல் முகூர்த்தில கல்யாணத்தை வைச்சிருவோம்..”
“இல்ல மாமா.. அவ்வளவு நாளெல்லாம் வேணாம்.. இன்னைக்கு நாளைக்குள்ள நான் அவள கல்யாணம் பண்ணிக்கனும்..?”
மூவரும் அதிர்ச்சியாகி,” எதுக்கு இவ்வளவு அவசரமா..??”
“அவசரம் எல்லாம் இல்ல.. எப்படியும் அவளத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு முடிவாயிருச்சு அத எப்போ பண்ணினா என்ன மாமா..?”
சந்திரன் மனதை கல்லாக்கி “மாப்பிள்ள ஒருவேளை ஆப்ரேசன் செஞ்சா அவ கோமாக்கு போக அதிக வாய்ப்பிருக்கிறதா சொன்னாங்களே..??” சொல்லும்போதே கோகிலா அழ ஆரம்பிக்க,
“அதுக்குத்தான் மாமா அவ நல்லா இருக்கும்போதே அவள கல்யாணம் செஞ்சுக்கிறேன்.. அவளுக்கு எதுவும் ஆகவும் விடமாட்டேன்.. என்மேல நம்பிக்கை இருந்தா இப்பவே கல்யாணம் பண்ணி வைங்க மாமா..?”
கற்பகம் அப்படியே விக்கித்து போய் நின்றிருந்தார்..மகனின் ஒரு வாழ்க்கைத்தான் அப்படி வீணாப்போச்சுன்னா இப்பவும் அதே மாதிரியா ஆகனும்.. தன் மகனை தனியே அழைத்தவர் “அவசரப்படுற மாதிரி இருக்கு அஸ்வின்.. ஸ்ருதி குணமாகி வீட்டுக்கு வரட்டும்.. அப்புறமா யோசிச்சுக்கலாம்..”
அவர் கையை அழுந்த பிடித்தவன்,” ம்மா என்னை நம்புங்கம்மா.. ஸ்ருதிக்கு ஒன்னும் ஆகாது.. நிச்சயம் அவ நல்லாகுணமாகி நம்ம வீட்டுக்கு வந்து என் மனைவியா சந்தோசமா என்னோட குடும்பம் நடத்துவா.. இப்ப என் மனசு செல்றத கேட்க விடுங்கம்மா ப்ளீஸ்.. ஸ்ருதி எப்படி இருந்தாலும் அவதான் என் மனைவி..?” மகனின் உறுதியான பேச்சில் சற்று அமைதியானவர்..
“சரி அஸ்வின் நான் நம்ம ஜோசியர்கிட்ட நாள் குறிச்சிட்டு வர்றேன்.. அதுவரைக்குமாவது கொஞ்சம் பொறுமையா இருப்பா..?”
“சரிம்மா..” ஸ்ருதியிடம் சம்மதம் வாங்குவதற்காக அவள் அறைக்குள் நுழைந்தான்..
                                                                            இனி………….????

Advertisement