Advertisement

அங்கு கோகிலா தன் மகளிடம் ஸ்ருதி அந்த கவருக்குள்ள மாப்பிள்ளைக்கு பொருத்தமான பொண்ணுங்க போட்டோவெல்லாம் வந்திருக்கு.. ஏதாச்சும் ஒன்ன பார்த்து செலக்ட் பண்ண அண்ணி கொடுத்திட்டு போனாங்க.. நான்தான் என்ன விட ஸ்ருதி ரொம்ப நல்லா செலக்ட் செய்வான்னு வாங்கி வைச்சேன்..
 
அதை வாங்கி ஒவ்வொன்றையும் உற்று உற்று பார்த்தவள் ம்மா நானே அத்தைக்கிட்ட கொடுத்திட்டு வர்றேன்..” ஓட்டமாக அஸ்வின் வீட்டிற்குள் நுழைந்தாள்..
 
அங்கு கற்பகம் கிச்சனில் இருக்க ஸ்ரீ நல்ல தூக்கத்தில் இருந்தான்.. அஸ்வினை காணவில்லை.. சோபாவில் அமர்ந்து அந்த போட்டோக்களையே மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தாள்.. அப்படியே சோபாவில் தலைசாய்த்து படுக்க அவளை பார்க்கவும் கையில் ஜூஸோடு வந்த கற்பகம் என்ன ஸ்ருதி படுத்திட்ட..?”
 
ஒன்னுமில்லத்த சும்மாதான்.. இந்த போட்டோவை உங்ககிட்ட கொடுத்திட்டு போக வந்தேன்..
 
இதுல எந்த பொண்ணுடா நல்லாயிருக்கு.. யார் ஸ்ரீய நல்லா பார்த்துக்குவா..?”
 
 கற்பகம் புத்திசாலி அஸ்வின் மனைவியாக யார் வருவாள் என கேட்காமல் இந்த கேள்வியை கேட்கவும் உதட்டை பிதுக்கியவள் இதுல இருக்கிற யாருமே ஸ்ரீய நல்லா பார்த்துக்குவாங்கன்னு எனக்கு தோனலைத்த..?”
 
ம்ம் அப்படியா சொல்ற ..சரி விடு இந்த போட்டோவெல்லாம் கொடுத்திட்டு தரகர்கிட்ட வேற பொண்ணுகள பார்க்கச் சொல்லுவோம்..
 
ஏத்த கண்டிப்பா உங்க பையனுக்கு கல்யாணம் பண்ணித்தான் ஆகனுமா…?”
 
கற்பகம் சிரித்தவர்,” ஏண்டா இந்த கேள்விய கேட்கிற..??”
 
அஸ்வின் சொன்னதையும் தன் தாய் சொன்னதையும் சொன்னவள் ,”அவங்க சொன்ன மாதிரி நான் ஸ்ரீக்கு அம்மா இல்லையா..? வேற பொண்ணு இங்க வந்திட்டா நாங்க இப்படி அடிக்கடி வரமுடியாதாத்த..
 
அவள் மனதில் குழப்பம் ஓடுவதை கண்டவர் சற்றுநேரம் அமைதியாக இருந்தார்..
 
கற்பகம் அருகில் அமர்ந்தவள் அவர் கையை பிடித்து ,”ஏன்த்த இப்ப இருக்கிற மாதிரியே நாம இருந்தா என்ன..? உங்களால ஸ்ரீய பார்த்துக்க முடியலைனா நானே அடிக்கடி வந்து பார்த்திட்டு போறேன்.. இல்ல நானே வளர்க்கிறேன்.. இப்போ இருக்கிற மாதிரியே இருப்போம்..
 
அவள் கன்னத்தை வருடியவர்.. எவ்வளவு நாள்டா நீ பார்ப்ப..? உங்க அப்பாவுக்கு எப்படியும் இன்னும் ஒரு வருசத்தில டிரான்பர் கிடைச்சிரும் நீங்க அங்க போயிருவிங்க.. அப்புறம் உனக்கு கல்யாணம் பண்ணினா நீ வேற இடத்துக்கு போயிருவ.. அப்பல்லாம் யார்டா ஸ்ரீய பார்த்துக்குவா.. அதோட சொல்றேன்னு கோவிச்சுக்காத உங்க அக்கா விசயத்தில என் பையன நீ தப்பா நினைக்கிறியா..??”
 
தப்பான்னா..??”
 
அவன் ஏதாவது டார்ச்சர் செஞ்சு அதனால ஸ்வேதா இந்த முடிவுக்கு வந்திருப்பா.. இல்ல நான் எதாவது அவள கொடுமை செஞ்சிருப்பேன்னு நினைக்கிறியா..??”
 
ஐயோ அப்படியெல்லாம் இல்லத்த..??”
 
அப்புறம் என்னடா.. எனக்கும் வயசாகுது எனக்கு அப்புறமா இந்த குடும்பத்தையும் அஸ்வின் ,ஸ்ரீ ரெண்டு பேரையும் பார்த்துக்க கண்டிப்பா ஒரு பொண்ணு இந்த வீட்டுக்கு வேணும்டா..?”
 
அவள் அப்படியே சற்று யோசித்து நான் வேணா.. ??”இழுத்தவள் தனக்கே அது அபத்தமாக தெரிய சட்டென வாய் மூடிக் கொண்டாள்..
 
கற்பகம் நான் ஒன்னு கேட்கவா ஸ்ருதி..?”
 
எதுக்குத்த இதுக்கெல்லாம் பர்மிசன்.. கேளுங்க கேளுங்க கேட்டுட்டே இருங்க..?”
 
வாலு.. நீ ஸ்ரீ மேல ரொம்ப பிரியம் வைச்சிருக்க..?”
 
சோபாவில் சம்மணம் போட்டு அமர்ந்தவள் ,”ஆமா..
 
உன்னைத்தான் அம்மான்னு கூப்பிடனும்னு நினைக்கிற..?”
 
கண்டிப்பா..
 
அப்ப ஒரே ஒரு வழிதான் இருக்கு..?”
 
சொல்லுங்க அதையும் கேட்போம்..
 
நீ என் பையன கல்யாணம் பண்ணினா.. நீதானே ஸ்ரீக்கு அம்மா.. எப்பவும் இந்த வீட்ல இருக்கலாம் அவன பார்த்துக்கலாம் அவனோட விளையாடலாம்..
 
அவள் அப்படியே பேவென விழித்துக்கொண்டிருக்க,
 
ஸ்ருதி ஸ்ருதி அவளை உலுக்கவும், தன் காதுகளை குடைந்து கொண்டவள்,
 
 மறுபடி சொல்லுங்கத்த..?? என்ன சொன்னிங்க.. நான் உங்க பையன கல்யாணம் பண்ணிக்கிறதா..??”
 
ஆமாண்டா…
 
ஓஓஓஓ ஜீசஸ் என்ன கொடுமைடா இது.. அந்த ஹிட்லர நான் கல்யாணம் பண்ணிக்கிறதா… நோ…ஓஓஓஓஓஓஓஓ..!!”
 
ஹிட்லரா அது யாருடா..?”
 
எல்லாம் உங்க பையன் தான்த்த…அவள் முகத்தை சுழிக்கவும் கற்பகத்திற்கு சிரிப்பு..
 
டேய் மகனே கல்யாணம் பண்ணினாதாண்டா உன் வாழ்க்கை செமயா இருக்க போகுது.. இதுவரைக்கும் அமைதியான நதி போல இருந்த உன் வாழ்க்கை இனி சுனாமி வந்த கடலா மாற போகுது.. அவருக்கு மகிழ்ச்சிதான்.. தன் மகன் எப்படியும் ஸ்ருதியை ஒரு வழிக்கு கொண்டு வருவான் எனும் நம்பிக்கையும் இருந்தது..
 
சற்று யோசித்த ஸ்ருதியோ,” ஏன்த்த நான் ஸ்ரீக்கு அம்மாவாகனும்னா இலவச இணைப்பா உங்க பையனும் என் வாழ்க்கைக்குள்ள வருவாரு..
 
கண்டிப்பா கண்டிப்பா..
 
வேணும்னா நாம ஒன்னு பண்ணுவோம்த்த அவருக்கு பதிலா நீங்க என்கூட வந்திருங்க.. அவர் வேணா அவருக்கு ஏத்த ஹிட்லரிய பார்த்து கல்யாணம் பண்ணிக்கட்டும்..
 
ஹாஹாஹா அதெல்லாம் முடியாது.. உனக்கு ஒரே சாய்ஸ்தான் இருக்கு ஸ்ருதி.. நீ ஸ்ரீக்கு அம்மாவாகனுமா வேண்டாமா நீயே முடிவு பண்ணிக்க.. அதுக்கு இதுதான் வழி.. இல்லனா சொல்லு தரகரை வேற பொண்ணு போட்டோ கொண்டுவரச் சொல்லுவோம்..
 
முதல்ல அந்த தரகர் போட்டோவ என்கிட்ட கொடுங்கத்த..?”
 
ஏன்டா..?”
 
இல்ல அவருக்கு காப்பில பேதி மாத்திரையை கலந்து கொடுக்கிறேன்.. அதென்னது படக் படக்குன்னு பொண்ணுக போட்டோவ கொண்டு வர்றது..?”
 
ஐய்யய்யோ பாவம்டா அவரு புள்ளக்குட்டிகாரர் பொழைச்சு போகட்டும் விட்ரு.. அவர் ஜூஸ் டம்ளரோடு கிச்சனுக்குள் செல்ல இவள் ஸ்ரீயின் அறைக்குள் நுழைந்திருந்தாள்..
 
இரண்டு மூன்று நாட்கள் சென்றிருக்கும்.. அன்று இரவு அஸ்வின் தன் அலுவலகம் விட்டு வந்தவன்,” என்னமா வீடே ரொம்ப அமைதியா இருக்கு..?”
 
ஏன் கண்ணா நம்ம குட்டிதான் எப்பவும் போல ஒரே ஓட்டம்தானே ஓடிட்டு இருக்கான்..
 
இல்ல அந்த அடாவடிய காணோமே…??”
 
அப்படி நேரடியாச் சொல்லு.. ஸ்ருதிய காணோம்னு..?”
 
ஹாஹா சிரித்தவன் நீங்களும் அவள மாதிரி பேச கத்துக்கிட்டிங்கம்மா..?”
 
அப்படியா… ஹாஹா சகவாசதோசம் போல.. நீதான் சும்மா இருந்தவள அம்மான்னு சொல்லக்கூடாதுன்னு பிள்ளைக்கிட்ட குண்டை போட்டுட்ட.. அதுல இருந்து பாவம் ரொம்ப குழப்பத்தில இருந்தவள நானும் அண்ணியும் வேற குழப்பி விட்டிருக்கோம்.. அனேகமா இன்னைக்கு நாளைக்கு முடிவு தெரியும்பா..
 
ம்ம்..” சாப்பிட்டு முடித்து சற்று நேரம் மாடியில் காற்றுவாங்கலாம் என நினைத்து மாடிக்கு வந்தவன் அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்திருக்க மாடியில் யாரோ ஓடிவரும் காலடி ஓசையோடு ஸ்ருதியின் கொலுசொலியும் கேட்க மகாராணி வர்றாளா.. அவளையே நினைத்துக் கொண்டிருந்தவன் அவளே நேரில் வரவும் அவளை ரசிக்க விரும்பிய மனதை அடக்கி வானையே பார்த்தான்..
 
ம்கும்..ம்க்க்கும்… அவள் தொண்டையை செருமி செருமி அவன் கவனத்தை கவர இந்த ஒருவாரமாக இருவரும பேசிக் கொள்ளவில்லை.. அன்று சண்டை என்று சொல்லிச் சென்றவள் இன்றுதான் வழிய பேச வந்திருக்கிறாள்..
 
அந்த இருட்டுல வானத்துல என்ன ஆராய்ச்சி பண்றாரு.. ரொம்பத்தான்.. மெதுவாக மாமா..!!”
 
அவன் இன்னும் கண்டு கொள்ளாமல் இருக்க மாமா என கத்தியவள் அவன் தாடையை பிடித்து தன்புறம் திருப்பினாள்..
 
மாமாவா.. நீதான என்கூட சண்டைன்னு சொன்னேன்..?”
 
ப்பா இவருக்கு நியாபக சக்தி அதிகம்.. நானா நான் எப்போ சொன்னேன்.. தள்ளி உட்காருங்க எனக்கு கால்வலிக்கிது.?”. அவனிடம் சற்று இடைவெளி விட்டு ஊஞ்சலில் அமர்ந்தவள் தன் கைவிரல்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க அஸ்வினோ அவள் அறியாமல் ஓரக்கண்ணால் அவளை ரசித்துக் கொண்டிருந்தான்..
 
மாமா. உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்..?”
 
பேசு..
 
ஸ்ரீ என்னதான் அம்மான்னு கூப்பிடனும்..?”
 
என்ன மறுபடி முதல்ல இருந்தா.. எனக்கு மனைவியா வர்றவள மட்டும்தான் அவன் அம்மான்னு சொல்வான்..?”
 
அட என்ன மாமா சந்தைக்கு போகனும் ஆத்தா வையும் காசு கொடுன்னு சொல்ற மாதிரி அதையே சொல்லிக்கிட்டு இருக்கிங்க.. ப்பா இதையே கேட்டு காது வலிக்கிது..?”
 
அவளை முறைக்க,
 
கைகள் இரண்டையும் மேலே தூக்கியவள் ஸாரி ஸாரி.. நீங்க உடனே மலையேறிராதிங்க.. நான் சொல்ல வந்தத சொல்லிருறேன்.. நான் இத்தனை நாளா யோசிச்சு ஒரு முடிவெடுத்திருக்கேன்.. என்னன்னு கேளுங்க மாமா..?”
 
கேட்கலைன்னா சொல்ல மாட்டியா..? பரவாயில்ல சொல்லாத..?”
 
ம்ம் நான் சொல்லுவேன்.. அத்த சொன்னாங்க ஸ்ரீ என்னை அம்மான்னு சொல்லனும்னா உங்களுக்கு நான் வாழ்க்கை கொடுக்கனுமாமே.. அதான் நல்லா யோசிச்சு போனா போது உங்களுக்கு வாழ்க்கை கொடுத்து உங்க வாழ்க்கையிலயும் ஒரு மெழுகுவர்த்திய ஏத்தி வைக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்..
 
அவளை முறைத்தவன்,” புரியல..?”
 
இதுல புரியாம இருக்க என்ன இருக்கு.. நானே உங்கள கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. அதான் மாமா இந்த தீபாவளி பொங்கல் சமையங்கள்ல ஏதாவது பிடிச்ச பொருள் வாங்கினா கிப்ட் கொடுப்பாங்க தானே.. பிடிச்சாலும் பிடிக்காட்டாலும் அதை வாங்கிட்டுத்தானே வருவோம்.. அதே மாதிரி ஸ்ரீ எனக்கு ரொம்ப பிடிச்சவன்.. அதனால அவனோட உங்களையும் போனா போகுதுன்னு நான் ஏத்துக்குறேன்..
 
பக்கி கல்யாணத்துக்கு எப்படி சம்மதம் சொல்லுது பாரு… லூசு.. அப்படியெல்லாம் பிடிக்காத கிப்டா நீ ஒன்னும் என்னை ஏத்துக்க வேணாம்… நான் என்னை பிடிச்ச பொண்ணயே கல்யாணம் பண்ணிக்கிறேன்.. போன தரம் பண்ணின தப்பை இந்த முறை சரிபண்ணிக்கிறேன்.. நீ வேணாம் போ..?”
 
என்ன ஓவரா பண்றிங்க.. நானே போனா போதுன்னு சம்மதிச்சா நீங்க வேணாம்னு சொல்விங்களா.. எங்க பார்த்திருவோம் எவ உங்கள கல்யாணம் பண்ணிக்கிறான்னு… நீங்க என்னதான் கல்யாணம் பண்ணிக்கனும்..
 
அப்ப நீ என்னை கல்யாணம் பண்றதுக்கு சம்மதம்னு சொல்ற..
 
ஆமா ஆமா..ஆனா அதுக்கு கொஞ்சம் கன்டிசன்ஸ் இருக்கு…. பேசிக் கொண்டிருந்தவளிடமிருந்து சத்தம் வராமல் இருக்க நிமிர்ந்து பார்த்தவன்…..?????
 
                                                        
                                                                           இனி……………….?????
 

Advertisement