Advertisement

காட்டு ரோஜா என் தோட்டத்தில்
 
                                                                  அத்தியாயம்  –  12
 
 
ஸ்ருதி தன்னை முறைப்பது தெரிந்தாலும் அஸ்வின் அவளை கண்டு கொள்ளாமல் தன் மகனை கொஞ்சியபடி இருக்க,
 
ஸ்ரீயை வெடுக்கென அஸ்வினிடமிருந்து பறித்தவள்,” இப்ப என்ன மாமா சொன்னிங்க..?”
 
ம்ம் என்ன சொன்னேன் உன் காதில விழுந்ததான் சொன்னேன்..?” காலை நீட்டியபடி தன் கைகள் இரண்டையும் பின்னால் கட்டியபடி சாய்ந்து அமர்ந்தான்..
 
மாமா பாவம் ஸ்ரீக்கு அம்மா இல்ல.. அதால நான்தான் அம்மா..அவன் என்னோட அக்கா பையன்.. அவன் என்னைத்தான் அம்மான்னு சொல்லனும்.. சும்மா எவளையோ அம்மான்னு சொல்லாதிங்க எனக்கு கோபம் ரொம்ப வரும் சொல்லிட்டேன்.. கண்கள் கலங்கியபடி தலையும் விரித்திருந்ததால் கோபத்தில் முகம் சிவப்பாய் மாறியிருக்க புஸ்புஸ்ஸென மூச்சை இழுத்துவிட்டபடி ஒரு சூலாயுதத்தை கொடுத்திருந்தால் போதும் அப்படியே காளிதான்..
 
உனக்கு கோபம் வர்றதால உண்மைய பொய்யின்னு சொல்ல முடியுமா..? போடி..” அவன் அப்படியே பின்னால் தலைவைத்து படுக்க,
 
மாமா பேசாம இருங்க அப்புறம் கோபம் வந்தா மாமான்னு கூட பார்க்க மாட்டேன்..?”
 
ஆமா இத்தனை நாளா ரொம்ப மரியாதையா நடந்த பாரு..? போடி பிசாசே.. குடுடி ஸ்ரீய..?”
 
அவள் தோளில் இருந்தவனை வேண்டும் என்றே வம்பிழுக்கும் முறையாக, செல்லக்குட்டி அப்பாட்ட வாங்க அவன் கையை நீட்ட அதுவும் ப்பா என தாவியது..??”
 
அவனை கொடுக்காமல்  கைகளால் அவனை கட்டிலில் தள்ளியவள்,” என்ன அம்மான்னு சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டிங்கள்ல.. உங்கள என்ன பண்றேன் பாருங்க..?? ஸ்ரீ அப்படிதான் என்னத்தான் அம்மான்னு சொல்லுவான்.. என்னை மட்டும்தான் சொல்லுவான்..என்ன வேணுனாலும் பண்ணிக்கோங்க..??வேணும்னா உங்கள இனிமேல் அங்கிள் இல்லைனா தாத்தான்னு கூப்பிடச்சொல்றேன்.. அப்படியே உங்கள கட்டிக்க போறவளை ஆன்ட்டி இல்லைனா பாட்டின்னு சொல்லிக் கொடுக்குறேன்..
 
அடிப்பாவி என்ன சொல்ற..??”
 
நீ சொல்றா குட்டி பையா.. தாத்தா.. இவர் இனிமேல் அப்பா இல்ல தாத்தா… சொல்லுங்க ..தாத்தா..வேகமாக எழுந்தவன் அவள் வாயை அடைக்க கையை நறுக்கென கடித்து வைத்தாள்..
 
ஐயோ அம்மா..” கையை உதறியவனை,
 
 போங்க மாமா உங்களோட சண்டை இனிமேல் என்னோட பேசாதிங்க..
 
கோபத்தில் காலை தொம் தொம்மென வைத்து தரை அதிர நடந்தவள் கற்பகம் கூப்பிட கூப்பிட காதில் விழாமல் ஸ்ரீயோடு தன் வீட்டிற்கு சென்றாள்..
 
கற்பகம் தன் மகனிடம் வேகமாக வந்தவர்,” டேய் என்னாச்சுடா ஸ்ருதி கூப்பிட கூப்பிட கோபமா போறா .. புள்ளைய என்ன சொன்ன..?”
 
ம்மா நான் ஒன்னும் சொல்லல.. அவதான் என்னோட சண்டையாம்.. அதான் இவ்வளவு கோபமா போறா..?”
 
போடா பிள்ளை ஆசையா கேட்டாளேன்னு பால்பனியாரம் பண்ணச் சொன்னேன்.. ப்பச் இப்படி சண்டைப் போட்டு அனுப்பிட்டியே.. நானே போய் கொடுத்திட்டு வர்றேன்.. அவர் கிச்சனை நோக்கிச் செல்ல,
 
நீண்ட நாட்களுக்கு பிறகு அஸ்வினுக்கு மனம் சந்தோசத்தில் துள்ளியது.. அவள் சொன்ன வார்த்தைகள் காதிற்குள் ரீங்காரமிட்டது.. நான்தான் அவனுக்கு அம்மா .. என்னை மட்டும்தான் அம்மான்னு சொல்லுவான்.. எனக்கும் அதுதாண்டி வேணும் நீ மட்டும்தான் ஸ்ரீக்கு அம்மாவாக முடியும் வேற.. யாருக்கும் அந்த தகுதியும் இல்ல, உரிமையும் இல்ல.. கோபத்தில் சிவந்த அந்த முகத்தை நினைவுக்கு கொண்டு வந்தவன்,” இப்பதான் குட்டைய குழப்பி விட்டிருக்கேன் பார்ப்போம் என்னாகுதுன்னு..?” அதற்கு மேல் படுக்க மனதில்லாதவன் அலுவலகத்திற்கு தயாராகினான்..
 
ஸ்ருதி வேகமாக வீட்டிற்குள் நுழைந்தவள் தண்ணீரை எடுத்துக்குடிக்க பாதி தண்ணீர் அவள் உடைமேல்தான்..
 
கோகிலா ஏய் நீ என்ன சின்னப்பிள்ளையா இப்படி மேலெல்லாம் தண்ணிய சிந்தி வைச்சிருக்க..?”
 
அம்மா சும்மா இருங்க..
 
என்னடி இவ்வளவு கோபம்..??”
 
ம்மா… ஸ்ரீ என்னை அம்மா சொல்றான்தானே..??”
 
அதுதான் தெரியுமே.. நாலுநாளா அதத்தான சொல்லிக் கொடுத்திட்டு இருக்க.. குட்டியும் சொல்றான் தானே அதுக்கு ஏன் கோபம்..
 
மாமா… மாமால்ல அவங்க சொல்றாங்க.. குட்டி என்னை அம்மான்னு சொல்லக்கூடாதாம்.. அவர கல்யாணம் பண்ண போறவளதான் அம்மான்னு சொல்லனுமாம்..
 
ஆஹா மாப்பிள்ள ஏதோ சொல்லியிருப்பார் போலவே இப்ப நாம என்ன சொல்றது சற்று யோசித்தவர்,” ஆமா அவர் சொல்றது உண்மைதான்.. நாம என்னதான் அவன் மேல உரிமை கொண்டாடினாலும் அவங்களுக்குதான் முதல் உரிமை.. ஏதோ மாப்பிள்ள நல்லவங்களா இருக்கிறதால நம்மகூட இந்த அளவுக்கு உறவு வைச்சிருக்காங்க .. மத்தவங்களா இருந்தா உங்க அக்கா பண்ணின காரியத்துக்கு வீட்டு வாசலைக்கூட மிதிக்க விட்டிருக்க மாட்டாங்க..நமக்கும் லிமிட் இருக்குடி அத தாண்டக் கூடாது..
 
இப்ப அண்ணி மாப்பிள்ளைக்கு தீவிரமா பொண்ணு தேடுறாங்க.. அப்படி கல்யாணம் முடிஞ்சிட்டா நாம இந்த அளவுக்குகூட உரிமையா அவங்க வீட்டுக்கு போக முடியாது.. அந்த பொண்ணுக்குத்தான் இனி முதல் இடம்..
 
அப்படியே நகத்தை கடித்தபடி யோசித்துக் கொண்டிருந்தவள்.. பேசாம மாமா மேல கோர்ட்ல கேஸ் போட்டு ஸ்ரீய நம்ம பக்கம் வாங்கிப்போமா..??”
 
நீயெல்லாம் காலேஜ்ல படிச்சிருக்கன்னு வெளியில சொல்லிராத.. இப்படி முட்டாள் மாதிரி பேசுற வாய மூடு..
 
அம்மா.. நீங்களும் மாமா மாதிரி பேசாதிங்க சொல்லிட்டேன்..?”
 
ஏய்ய்ய் அவர எதுவும் சொல்லிட்டியா.. அவர் ரொம்ப நல்லவர்டி..?”
 
நல்லவர் வல்லவர் எனக்கு வர்ற கோபத்துக்கு…
 
ஐய்யய்யோ அவர என்ன பண்ணி வைச்ச..??”
 
அத இனிமேல்தான் யோசிக்கனும்.. காருலதான் நாளு டயர்லயும் ஆணிய குத்தி வைச்சிட்டு வந்தேன்..”
 
ஏண்டி குரங்கே ஏற்கனவே ஒரு கார வாட்டர் வாஷ்க்கு விட்டிருந்தாங்க.. இந்த காரையும் பஞ்சர் பண்ணிட்டியா பாவம் அவங்க எப்படிடி வெளிய போவாங்க..
 
அம்மா கத்தியவள்.. நீங்க எனக்குத்தான் அம்மா எனக்கு மட்டும் சப்போர்ட் பண்ணுங்க.. சும்மா சும்மா அவங்களுக்கு சப்போர்ட் செஞ்சா எனக்கு கோபம் பலியா வரும் பார்த்துக்கோங்க.. கோபத்துடன் ஸ்ரீயோடு மாடியேற கற்பகம் உள்ளே நுழைந்தார்…
 
அஸ்வின் அலுவலகத்திற்கு கிளம்பி காரின் அருகே வந்தவன் நான்கு டயர்களும் காற்று இறங்கி இருக்கவும் என்னடா இது பஞ்சர் ஆனா ஒருடயர்தானே ஆகனும் இதென்ன நாலுடயரும் இப்படி பஞ்சராகிருச்சு..
 
முத்தண்ணா முத்தண்ணா..??”
 
இதோ வந்திட்டேன் தம்பி..” வாட்ச்மேன் வேகமாக ஓடிவர,
 
அண்ணா உள்ள வெளியாள் யாராவது வந்தாங்களா..?”
 
இல்லையே தம்பி..
 
அப்ப காருக்கிட்ட யாராச்சும் பார்த்திங்களா..?”
 
நம்ம ஸ்ருதி அம்மாதான் குட்டி தம்பியை இங்க விளையாட விட்டுட்டு நின்னுட்டு இருந்தாங்க..
 
குட்டி பிசாசு அவ செஞ்ச வேலைதானா.. ரத்தகாட்டேரி..!!!” ஒரு டிராவல்ஸ்க்கு போன் செய்தவன் அடுத்து மெக்கானிக் பையனை வீட்டிற்கு வரச் சொன்னான்..’ சும்மா விளையாட்டுக்கு சொன்னதுக்கே அவளால விட்டுக் கொடுக்க முடியல.. நாம வேற பொண்ண கட்டியிருந்தா உண்மையிலே பிரச்சனை வந்திருக்குமோ..
 
மறுநாள் காலை எட்டிருக்கும் ஸ்ருதி ஸ்ரீயை வைத்தபடி ஹாலில் அமர்ந்து அஸ்வினின் ரூம்வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. என்னயவா அம்மான்னு சொல்ல கூடாதுன்னு சொன்னிங்க இன்னைக்கு உங்க கை, கால உடைக்காம விடுறதா இல்லை.. கற்பகத்தையும் ஸ்ரீயையும் அவன் அறைப்பக்கம் விடாமல் பார்த்துக் கொண்டிருக்க ஆயிற்று பத்து நிமிடம் .. இன்னும் வராம என்ன பண்றாங்க..
 
ஐயோ… அம்மா..” என சத்தம் ஹப்பா விழுந்திட்டாங்களா.. ஆனா குரல் ஏன் வித்தியாசமா பொம்பள வாய்ஸ் மாதிரி இருக்கு..
 
வேகமாக அஸ்வின் அறைக்கு செல்ல அந்த வீட்டு வேலைக்கார பெண் கீழே விழுந்து கிடந்தாள்..
 
வள்ளி அக்கா நீங்க எப்ப இங்க வந்திங்க.. கிச்சன்லதான இருந்திங்க..”
 
என்னாச்சுக்கா..?” ஸ்ருதிக்கு பின்னால் இருந்து அஸ்வினின் குரல்.. மாமா எப்ப வெளியில போனாங்க.. நாம ஹால்ல தான இருந்தோம்..
 
ஸ்ருதி அவரை மெதுவாக தூக்கிவிட,” இல்ல தம்பி காலையிலயே வீடெல்லாம் துடைச்சிட்டேன் நீங்க தூங்கிட்டு இருக்கவும் உங்க அறையை மட்டும் துடைக்காம இருந்திச்சு அதான் உள்ள துடைக்க போனேன்..ஆனா கீழே யாரோ எண்ணெய்ய ஊத்தி வைச்சிருக்காங்க நான் அத பார்க்கல தம்பி..” அவர் காலை நொண்டிக் கொண்டு செல்ல ஸ்ருதி ஒரு மாதிரி முழித்துக் கொண்டிருந்தாள்..
 
நாம எண்ணெய்ய எடுக்க போகும்போது அவங்க ரூம்லதான இருந்தாங்க எடுத்திட்டு வர்றதுக்குள்ள அவர் வெளியில போயிட்டு இந்தக்கா உள்ள போனாங்களா..
 
அவளை முறைத்தவன் அங்கிருந்த துணியை எடுத்து அந்த இடத்தை சுத்தப்படுத்தி தன் பர்சிலிருந்து பணத்தை வேலைக்கார அக்காவிடம்  கொடுத்து,
 
 நீங்க ஹாஸ்பிட்டலுக்கு போயிட்டு வாங்கக்கா.. இன்னைக்கு ரெஸ்ட் எடுத்துக்கோங்க நாளைக்கு வரலாம்.. அவர் நொண்டியபடி செல்ல இவளுக்குத்தான் என்ன சொல்வதென்று தெரியவில்லை..
 
ச்சே அவசரப்பட்டுடமோ மெதுவாக அந்த இடத்தைவிட்டு நகர்ந்தவள் நழுவி தன் வீட்டுக்குச் சென்றிருந்தாள்..
 
அஸ்வினோ அம்மாடி நம்ம கால உடைக்க பிளான் பண்ணிட்டாளா… நல்லவேளை காருல இருந்த பைல எடுக்க போனேன்.. அஸ்வின் இனி அலார்ட்டா இருந்துக்கோ.. ஒவ்வொரு ஸ்டெப்பையும் இனி பார்த்துத்தான் வைக்கனும்..
 

Advertisement