Advertisement

அத்தியாயம் 01

இன்பம் மட்டும் கூட்டி
இதய இராகம் மீட்டி
எந்த நிலையின் 
போதும் மாறா 
அன்பை மட்டும் 
ஊட்டி வாழ வேண்டும்
அன்பான அவளின்
வேலிக்குள்…

” கொஞ்சம் சீக்கிரமா எந்திரி மா காலேஜ்க்கு போக நேரமாச்சி பாரு . இன்னைக்கு வேற திங்கட்கிழமை நீ கோவிலுக்கு வேற போவ சீக்கிரமா எந்திரி ” என்று அவளது பாட்டி ராஜேஸ்வரி எழுப்ப முயல

தூக்கத்தில் இருந்து வெடுக்கென்று எழுந்தவள் ” அச்சச்சோ இவ்வளோ மணி ஆகிட்டுச்சே நான் எப்படி இவ்வளவு நேரம் தூங்குனேன் .ஏன் பாட்டி என்ன கொஞ்சம் சீக்கிரமா எழுப்பி விட்டுருக்கலாம்ல ” என்று வேகமாக எழுந்து பெட்ஷீட்டை மடித்த படி கேட்க 

” ஏன் டி யம்மா நேத்து வேற நீ ஏதோ நோட்ஸ் எடுக்கனும்னு லேட்டா தான தூங்க போன அதுனால தான் டி மா விட்டுட்டேன் ” என்று பாட்டி கூற 

” அட போங்க பாட்டி இன்னைக்கு வேற எனக்கு காலேஜ்ல ஃப்ரஸ்ட் பீரியட்டே இருக்கு ” என்றவள் நேராக குளியலறைக்குள் புகுந்து கொண்டாள் நிலா என்கிற யாழ்மொழி.

யாழ்மொழி தன் பாட்டியுடன் வசித்து வரும் இருபத்து மூன்று வயது பெண். சிறு வயதிலேயே தந்தையை இழந்தவள் பாட்டி அன்னையுடன் வாழ்ந்து வந்தாள். அதுவும் கடவுளுக்கு பிடிக்கவில்லை போலும் அவள் அன்னையையும் அவளிடம் இருந்து பிரித்து விட்டனர். இப்போது சொந்தமென இருக்கிறது வெறும் பாட்டி ராஜேஸ்வரி மட்டுமே. எம்.ஈ முடித்து விட்டு இப்போது ஒரு கல்லூரி உதவி பேராசிரியராக வேலை புரிகிறாள்.

குளித்து முடித்து வந்தவள் வேகமாக சமையலறை சென்று சாப்பாட்டை அடுப்பில் வைத்தவள் நேற்று எடுத்த நோட்ஸை பையினுள் எடுத்து வைக்க சென்று விட்டாள்.

நான்கு விசில் வரவும் ” பாட்டி கொஞ்சம் அடுப்ப மட்டும் ஆஃப் பண்ணி வைங்க ” என்று அறையில் இருந்து நிலா சொல்ல 

” சரி மா ” என்று அந்த மூட்டு வலியிலும் சமைலறைக்கு சென்று அடுப்பை அணைத்து விட்டு வந்தார்.

எல்லாவற்றையும் எடுத்து வைத்தவள் சமையலறைக்கு சென்று  சாப்பாட்டை குக்கரில் இருந்து எடுத்து வெளியே வைத்து விட்டு ப்ரிஜ்ஜை திறந்து தயிர் பேக்ட் ஒன்றை எடுத்து வந்தவள் கூடவே உப்பையும் எடுத்து வந்தாள். வேகமாக தயிர் சாதத்தை தயாரித்தவள் மதியத்திற்கு என்று டிஃபன் பாக்ஸில் போட்டுக் கொண்டு கிளம்பினாள்.

வேகமாக அனைத்தையும் செய்தவள் பின்னர் அறைக்கு சென்று ஒரு முறை புடவை சரியாக உள்ளது என்று பார்த்து விட்டு இடை வரை நீண்டிருந்த கூந்தலை பிண்ணலிட்டு நெற்றியில் கண்ணுக்கே தெரியாதளவு பொட்டு வைத்தவள் தன் அன்னையின் புகை படத்திற்கு முன் நின்றாள்.

அன்னையிடம் வேண்டியவள் கல்லூரி பையை எடுத்துக்கொண்டு கல்லூரிக்கு கிளம்ப ஆயத்தமானாள்.

” பாட்டி நான் பொயிட்டு வரேன் .நீங்க பத்திரமா இருங்க இன்னைக்கு நான் வர லேட்டாகும் பாட்டி மா .நைட்டுக்கு வந்து நானே சமைக்கிறேன். நீங்க செய்றேன்னு சொல்லி கஷ்ட படாதீங்க . அப்புறம் மதியத்துக்கு தயிர் சாதம் இருக்கு தொட்கிறதுக்கு வத்தல் வச்சிக்கோங்க பாட்டி ” என்று ஆயிரம் கூற அவரோ தலையை மட்டும் ஆட்டி வைத்தார்.

வீட்டை விட்டு கிளம்பியவள் வேக நடையுடன் பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தாள்.

பேருந்து நிலையம் வந்து பேருந்துக்காக காத்திருக்க தொடங்கினாள். சரியான நேரத்திற்கு பேருந்து வரவும் அடித்து பிடித்து ஏறி இருக்கை கிடைக்கவும் அமர்ந்து விட்டாள்.

அவள் ஏறின அடுத்த ஸ்டாப்பில் ஒரு வயதான பாட்டி ஒருத்தர் ஏறவும் அவரை கண்ட நிலா வேகமாக எழுந்து அவருக்கு உக்கார இடம் தந்தாள்.

அவரோ உட்கார்ந்த பின் ” ரொம்ப நன்றி தாயி ” என்க ” பரவால்ல பாட்டி மா ” என்றாள்.

அவளது கைப்பை நழுவி நழுவி விழ அதை கண்ட அந்த பாட்டி ” பைய கொடு தாயி நான் வச்சிருக்கேன் ” என்று சொல்ல அவளும் புன்னகையுடன் அவரிடம் பையை கொடுத்தாள்.

அதன் பின் அவள் அமைதியாக நிற்க சிறு நிமிடத்தில் அவள் இறங்க வேண்டிய இடம் வரவும் அந்த பாட்டியிடம் பையை கேட்டு வாங்கி கொண்டு இறங்க அந்த பாட்டியும் அதே இடத்தில் இறங்க தடுமாற அவருக்கு உதவி செய்தாள் நிலா.

அவரை பார்த்து இறக்கிவிட்ட நிலா ” பாத்து பத்திரமா போங்க பாட்டி ” என்று அறிவுரை கூற ” சரி மா நீயும் பாத்து போ ” என்று விட்டு சென்றார்.

வேக நடையுடன் கோவிலுக்கு முன் வந்தவள் பக்கத்தில் இருந்த பூக்கடைக்கு சென்று பூ தேங்காய் எழுமிச்சை கற்பூரம் என அனைத்தையும் வாங்கி விட்டு காசு கொடுத்து வாங்கி உள்ளே சென்றாள்.

உள்ளே சென்றவள் சாமி கும்பிட ஐயர் வந்தவர் ” வா மா என்ன ஒரு வாராமா கோவிலுக்கே வரல ” என்று சாமி கேட்க

” சாமி அது கொஞ்சம் வேலை இருந்தது சாமி அதான் வர முடியல ” என்று நிலா கூற 

” சரி மா இந்த முறையும் அதே பேருக்கு தான் அர்ச்சனையா மா ” என்று கேட்க ” ஆமாம் சாமி ” என்றாள் புன்னகையுடன்..

அவரும் புன்னகைத்து விட்டு அர்ச்சனையை தொடங்கினார்.

சாமி கும்பிட இமைகளை மூடிவள் கடவுளை வேண்டினாள்.

” சாமி இதுவரைக்கும் நீங்க என்கிட்ட இருந்து நிறைய எடுத்துக்கிட்டிங்க ஆனாலும் நான் வேண்டிக்கிட்டு தான் இருக்கேன். எனக்கு வந்த மாதிரி கஷ்ட யாருக்கும் வர கூடாதுன்னு . என் கண்ணுல அந்த ரெண்டு பேர் மட்டும் படவே கூடாது சாமி” என்று வேண்டி இமையை திறக்க சாமியும் அர்ச்சனையை முடித்து விட்டு பிராசாதத்தை வழங்கினார்.

இன்முகத்துடன் பெற்றவள் அவர் கொடுத்த பூவை தலையில் வைத்து விட்டு விபூதியை நெத்தியில் வைத்து மத்தததை பக்கத்தில் இருந்த தூணில் கொட்டிவிட்டு பிரகாரத்தை சுற்றி வந்தாள் யாழ்மொழி.

மணி ஆவது தெரியவர வேகமாக கோவிலை விட்டு வெளியே வந்து காலேஜிற்கு நடக்க தொடங்கினாள். 

கோவிலிருந்து கல்லூரிக்கு நடந்து செல்லும் தூரம் என்பதால் வேக வேகமாக நடக்க தொடங்கினாள்.

எட்டு ஐம்பது போல் கல்லூரி வளாகத்தை அடைந்த நிலா முதலில் ஆஃபிஸ் சென்று ரெஜிஸ்டர் சைன் பண்ணிவிட்டு ‌அவளது டிபார்ட்மெண்ட் வந்து சேர்ந்து பிறகே மூச்சு விட முடிந்தது அவளால்..

அவள் வருகையை அறிந்துக் கொண்ட அவளது சகா உதவி பேராசிரியரான மணிமேகலை அங்கே வந்து அட்டனஸ் போட்டாள்.

” வாங்க மேடம் என்ன டா நாம வந்து ஐஞ்சு நிமிஷம் ஆச்சே இன்னும் வரலைன்னு பார்த்தேன் அதுக்குள்ள வந்துட்ட ” என்று நோட்சை எடுத்து வைத்த படி சொல்ல

” அது தான் டி செல்லம் வேவ்லெந்த்கின்றது . ஒன்னாவதுலற்ந்து உன் கூடவே இருக்கேன்னு எனக்கு தெரியாதா என்ன ” என்று சீரியசாக கேட்க

” நம்பிட்டேன் நம்பிட்டேன் ” என்று நக்கலாக நிலா கூற 

” அடியேய் நான் உண்மைய தான் டி சொல்றேன். கண்டிப்பா நீயும் ஒருநாள் உணர்வ நமக்கு புடிச்சவுங்க நம்ம கூட இருக்கும்போது அத உன்னால ஈசியா உணர முடியும் டி நிலா ” என்று மணிமேகலை கூற 

” போடி நீயும் உன் ஃபிலாசஃபியும் . இதெல்லாம் நீயே வச்சிக்கோ என்கிட்ட கொண்டு வராதா மா ” என்று கை எடுத்து கும்பிட 

மணிமேகலை அவளை பார்த்து முறைத்து வைத்தாள். ” போடி என் அருமை இப்ப உனக்கு புரியாது . அனுபவிக்கும் போது தான் புரியும் ” என்றாள் கோபத்தில் முறுக்கி கொண்டு‌..

” ஹே நேத்து ரிசல்ட் வந்துச்சு பாத்தியா டி நிலா ” என்று கேட்க 

” இன்னும் இல்ல டி .எப்படி இருந்தாலும் மீட்டீங் வச்சி சொல்லுவாங்களா அதுனால தான் இன்னும் பாக்கல ” என்றாள். 

அதற்குள் இன்னொரு ஆசிரியர் அங்கு வந்து ” யாழ் மேம் உங்கள ஹேச்.சோடி மேம் கூப்பிடுறாங்க சீக்கிரமா போங்க ” என்று விட்டு சென்றார்.

“சரி டி நான் போய் மேம்ம பாத்துட்டு வரேன் கொஞ்சம் லேட்டாயிடுச்சின்னா செக்கேண்ட் இயர் பீ செக்ஷன் போய் இரு நான் வந்தறேன் ” என்று ஐடி கார்டை எடுத்து மாட்டி கொண்டு சென்றாள்.

மணிமேகலையும் அவளோட இடத்திற்கு சென்று அவளோட வேலையை கவனித்தாள்.

யாழ்மொழி ஹெச்சோடி அறைக்கு வந்தவள் ” எக்ஸ் க்யூஸ் மீ மேம் மே ஐ கம் இன் ” என்று மென்மையாக கேட்க 

” எஸ் கம்மின் மிஸ். யாழ்மொழி ” என்று விட்டு அவரது வேலையை கவனித்தார்.

“சொல்லுங்க மேம் ” என்று கேட்டு நிற்க 

” ரிசல்ட் பாத்திங்களா ” என்று கேட்டு பார்க்க 

” இன்னும் பாக்கல மேம் இனிமே தான் பாக்கனும் ” என்றாள்.

” இது உங்களோட ஃப்ரஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ்ல ” என்று கேட்டு பார்க்க

” ஆமாம் மேம் ” என்றாள்.

” கங்ராட்ஸ் மேம் உங்க ஸ்டுடன்ஸ்  உங்க சப்ஜெட்ல ஆல் கிளையர் பண்ணிட்டாங்க ” என்று சிரித்த முகத்துடன் கூற

” இதுல நான் எதுவுமே பண்ணல மேம் . எல்லாம் ஸ்டேன்ஸ் எஃபர்ட் தான் மேம் ” என்று மரியாதை நிம்மதிமாக அனைத்தைக்கும் காரணம் மாணவிகள் மாணவர்களே என்றாள்.

” இதுப் போலவே நெக்ஸ்ட் செமஸ்டரும் கொடுங்க ஏன்னா இன்னையோட நான் ரிலீவ்‌ ஆகுறேன் ” என்றார்.

என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தாள் யாழ்மொழி.

அதற்குள் மணிமேகலை நிலா கூறியது போல் செகண்ட் இயருக்கு சென்றாள். யாழ் வருவாள் என்றிருந்த மாணவர்களுக்கு புஸ் என்றானது..

உள்ளே வந்த மணிமேகலை மாணவர்களை பார்த்து ” கவல படாதீங்க ஸ்டுடன்ஸ் உங்க யாழ்மொழி வந்துடுவாங்க கொஞ்ச நேரத்துல ” என்றாள். அதன்பின்னே மாணவர்களின் முகத்தில் புன்னகை வந்தது.

அதேபோல் சிறிது நிமிடத்தில் யாழ்மொழி வகுப்பிற்கு வந்தாள்.

” ஸ்டுடன்ஸ் எல்லாரும் ரிசல்ட் வந்ததுனால சோகமா இருப்பீங்க சோ உங்கள இன்னும் கஷ்ட படுத்த முடியல ” என்றாள். வகுப்பே கரகோஷம் எடுத்தது.

அதன் பின் யாழ்மொழி அந்த வகுப்பை ஜென்ரல் நாலேஜ்காக பயன் படுத்திக் கொண்டு வெளியே வந்தாள்.

மாலை வேலை வரவும் அவர்களது கம்ப்யூட்டர் சயின்ஸ் டிபார்ட்மெண்டில் மீட்டிங் வைத்து  அவர் ரிலிவ் ஆகு வதை கூறி விட்டு நாளை புது ஹெச்சோடி வருவாங்க என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

மணியும் நிலாவும் பேசிக்கொண்டே கிளம்பினர். பேருந்து நிலையம் வந்தடைந்த யாழ் பேருந்திற்காக காத்திருக்க அவள் பின்னாடி இருந்து மொழி என்று அழைப்பு வர நிலா திடுக்கிட்டு அப்படியே நின்றாள்..

தொடரும்….

Advertisement