Advertisement

விஷ்வாவிடம் வந்த சாவித்திரி ” விஷ்வா நம்ம நிலாவோட அப்பா ஏதோ ஆக்ஸிடென்ட்ல இறந்துட்டாறாம் டா நான் நிலாவ கூட்டிட்டு போறேன் நீ மணிய அவுங்க வீட்ல விட்டுட்டு சக்திய பத்திரமா பாத்துக்கோ சரியா ” என்று துக்கத்துடன் சொல்ல விஷ்வாவிற்கு நிலாவின் புன்னகை முகமே நினைவு வர ” நானும் உங்க கூட வருவேன் மா ” என்று அடம்பிடிக்க தொடங்கினான்.

” நீ வேணாம் டா நான் மட்டும் பொயிட்டு வந்தறேன் ” என்று எடுத்துரைக்க விஷ்வாவோ மேலும் அடம் பிடிக்க தொடங்கினான்.

அவனின் அடம் சாவித்திரியை சம்மதிக்க வைக்க ஐவருமாய் நிலாவின் வீட்டிற்கு சென்றனர்.

நிலாவை சாவித்திரி கையை பிடித்தவாறு அழைத்து உள்ளே சென்றார். விஷ்வா இருவரையும் இருக்கைகளை பிடித்த படி அவர்களுக்கு பின்னே வந்தான்.

நிலாவை பார்த்த ரஞ்சினி கதறி அழுக தன் அன்னை அழுவதை கண்ட அந்த குட்டி சாவித்திரியிடமிருந்து பிரிந்து அன்னையிடம் வந்தவள் ” அம்மா அம்மா அழாதமா நான் இனி எந்த தப்பும் பண்ண மாட்டேன் ” என்று அவளே ஒரு காரணத்தை எண்ணி அழுகத் தொடங்கினாள்.

அவள் அழுகையை காணத் துடிக்காத ரஞ்சினி அவளை அணைத்து கொண்டு அழுக விஷ்வாவோ ஊமையாக அழுதான்.

சிறிது நேரத்திலே சண்முகத்தின் பாடி வீட்டிற்கு கொண்டு வர பட தன் தந்தையை தூக்கிக் கொண்டு வருவதை கண்ட நிலா ” அப்பாவ ஏன் தூக்கிட்டு வரீங்க ” என்று விவரம் அறியாமல் குட்டி  நிலா கேட்க இதனை கேட்ட ரஞ்சினி மேலும் கண்ணீர் விட்டு கதற தொடங்கினாள்.

” அப்பா அப்பா எந்திரி பா அம்மா அழுகுறாங்க பா நீ சொல்லு அவுங்கள அழுக வேணாம்னு ” என்று நிலா அழுத படியே தன் தந்தையிடம் கூறினாள்.

” மொழி ” என்று விஷ்வா அவனையும் அறியாமல் அழைக்க அவன் அழைத்ததும் அவனிடம் ஓடிச் சென்று அணைத்தவள் ” தரு தரு அப்பாவ எந்திரிக்க சொல்லு தரு நான் இனி எந்த தப்பும் பண்ண மாட்டேன் ” என்று அழுகையுடன் குரல் வெளி வர தந்தை இறந்தது கூட தெரியாமல் அதுவும் புரியாத வயதில் என்ன சொல்வது .? எப்படி சமாளிப்பது.? என்று தெரியாமல் தவித்து போனான் விஷ்வா.

விஷ்வா அவளை விலக்கி அவள் உயரத்திற்கு குனிந்தவன் ” அப்பா இனி எந்திரிக்க மாட்டாரு டா . இனி அப்பா எப்பவும் தூங்கிட்டு தான் இருப்பாரு . அவரால இனி நம்ம கூட இருக்க முடியாது . உன்னால மட்டும் தான் அப்பாவ பாக்க முடியாது ஆனா அப்பாவால உன்ன பாக்க முடியும் டா . அவரு எப்போதும் உன் கூடவும் அம்மா கூடவும் தான் இருப்பாரு சரியா ” என்று அவளுக்கு புரியும் படி சொல்ல நினைக்க  ” அப்பா அப்பா ” என்று அழுத படியே விஷ்வாவின் மடியிலே உறங்கி போனாள்.

சிறிது நேரத்திலே கண்ணதாசனின் குடும்பம் வந்துவிட ஆக்சிடன்ட் ஆன உடம்பு என்பதால் சீக்கிரமே எடுத்தனர். நிலாவே தன் தந்தைக்கு கொள்ளி வைத்து விட்டு வந்தாள்.

அதன் பின் வந்த நாட்களில் நிலா அமைதியாகிட ரஞ்சினி வேலைக்கு செல்ல தொடங்கினார். குழந்தையையும் ஸ்கூலுக்கு அனுப்பி வைத்தார்.

விஷ்வா நிலாவுடன் அதன் பிறகு பேச வில்லை என்றாலும் அவளை கவனிக்க தொடங்கியிருந்தான்.

மணியும் சக்தியும் அவளுடன் கூடவே பக்கபலமாக இருந்து வந்தவர். இதற்கிடையில் விஷ்வா பத்தாம் வகுப்பு என்பதால் இறுதி தேர்வு நெருங்கி விட படிப்பில் கவனத்தை செலுத்தினான்.

இறுதி தேர்வுகளும் முடிவடைய விஷ்வா அடுத்து என்ன செய்வதென்று யோசிக்க தொடங்கினான். இதற்கிடையில் நிலாவின் நிலையை மாற்றும் பொருட்டு ஒரு வாரம் வெளியூர் சென்று வந்தனர். நிலாவும் சிறிது சிறிதாக பழைய நிலைக்கு திரும்பி இருந்தாள்.

நிலா மணி சக்தி மூவரும் எட்டாம் வகுப்பிற்குள் அடி எடுத்து வைக்க , விஷ்வா அதே பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு சேர்ந்தான் கணிணி துறையை எடுத்து .

மணி படிப்பில் கொடி கட்டி பறக்க நிலாவும் சக்தியும் சேட்டையில் கொடி கட்டி பறந்து படிப்பில் பெரிய பெரிய பூஜ்ஜியம் எல்லாம் எடுத்தனர்.

ஒரு நாள் விஷ்வா அவனது நண்பர்களுடன் விளையாடி கொண்டு இருக்க , அப்போது அவன் பக்கத்தில் வந்த நிலா ” தரு ” என்று அழைத்து தயங்கி நிற்க அவளது குரல் சரியாக அவனது செவிக்குள் எட்ட உடனடியாக திரும்பி பார்த்தான்.

” சொல்லு மொழி எதுக்கு என்ன கூப்பிட்ட ‘ என்று கேட்டான் விஷ்வா.

” அது… அது வந்து ” என்று தயங்கி நிற்க வெயிலின் தாக்கமோ என்னவோ நிலாவின் முகத்தில் வேர்வை துளிகள் வெளி வரத் தொடங்கியது.

” என்ன ஆச்சி மொழி ” என்று எதோவது  பிரச்சினையாக இருக்குமோ என்று பயந்தபடி கேட்க

” அது வந்து தரு நான் ரெஸ்ட் ரூம் போகும் போது பாத்தேன் என்னோட ட்ரெஸ் ஃபுல்லா ரெடா இருக்கு ” என்று கழங்கியவாறே நிலா கூற அவளோட நிலையை ஒருநிமிடம் புரியாமல் விழித்தாலும் அடுத்த நொடியே புரிந்து விட அவளை தனியாக நிற்க வைத்தவன் ஸ்டாஃப் ரூம் சென்று ஆசிரியரை அழைத்து வந்தான் .

அவரும் வந்து என்னவென்று கேட்க விஷ்வாவிடம் கூறியதை அந்த பெண் ஆசிரியரிடமும் கூற உடனே அவளை அழைத்து கொண்டு சென்று விட்டார்.

ரஞ்சினிக்கு அழைத்து விஷயம் சொல்லி விட அவர் பார்வதியையும் சாவித்திரையும் அழைத்துக் கொண்டு பள்ளிக்கு வந்தார்.

சக்தியும் மணியும் பயந்த படி வெளியே இருந்து நிலாவை காண அவளோ அழுகையுடன் அன்னை பக்கத்தில் நின்றிருந்தாள்.

அப்போது அங்கே வந்த விஷ்வா ” ரெண்டு பேரும் இங்க என்ன பண்றீங்க ” என்று கேட்க

” அது சாச்சா நிலா அங்க தனியா நின்னுட்டு அழுதுகிட்டு இருக்கா எங்கள உள்ள விட மாட்டேங்கிறாங்க ” என்று நிலாவை பார்த்தவாறே மணிமேகலை கூற

” அவளுக்கு ஒன்னும் இல்ல நீங்க க்லாஸ்க்கு போங்க ” என்று அனுப்பி வைத்தவன் நிலாவை ஒரு முறை பார்த்து விட்டு அவனது வகுப்பறைக்கு  சென்றுவிட்டான்.

அதன் பின் எளிதாக அவளுக்கு சீர் செய்து அவளை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

அப்படியே நாட்கள் நகரத் தொடங்க நிலா ஒன்பதாம் வகுப்பில் காலெடுத்து வைத்தாள்.

விஷ்வா பண்ணி ரெண்டாம் வகுப்புகள் நுழைய படிப்பில் முழுவதுமாக கவனத்தை திருப்பினான்.

நாட்கள் நகர நகர மூவரின் நட்பும் கடலை போன்று ஆழமாக இருந்தது . விஷ்வா எவ்வளவு தான் படிப்பில் கவனத்தை செலுத்தி இருந்தாலும் நிலாவின் மீது ஒரு பார்வை பதித்தே இருந்தான்.

அவனுக்கு தெரியவில்லை அவன் கவனம் வைத்திருக்கேன் என்று நினைத்திருந்த விஷ்வாவினாலே தான் அவள் வாழ்க்கையில் பெரிய இடியே விழப்போகிறது என்று..

அதற்கான ஆரம்ப புள்ளியான அந்த நாலும் மென்மையாக அதன் உதயத்தை வழங்க தயாராகி இருந்தது…

_தொடரும்….

Advertisement