Advertisement

14.காற்றுக்கென்ன 

அறைக்குள் வந்தவளுக்கு ஆச்சரியம் கலந்த பயமே உருவேடுத்தது . பயத்தின் பிடியிலே உள்ளே வந்தவளின் மனதில் ஆயிரம் எண்ணவோட்டங்கள் அதுவும் கையில் மாவு கட்டு போட்டிருந்த சக்தியை கண்டு மேலும் பெருகியது..

” இன்னைக்கு நமக்கு சங்கு தான் போலயே  வேல கிடைச்ச மாதிரி தான் ” என்று எண்ணிய படியே நிற்க 

” எக்ஸ் க்யூஸ் மீ மிஸ் சாரி உங்க குட் நேம் ப்ளிஸ் ” என்று எகத்தாளமாக அவன் இருக்கையில் அமர்ந்த படி கேட்க அவனுடன் ஒருவர் அமர்ந்திருந்தார்.

” இசையினி ” என்று அமைதியான பெண் போல் கூறினாள்.

” ஓகே மிஸ் . இசையினி நீங்க உங்க ஃபைல கொடுத்தா எங்களுக்கு இண்டர்வ்யூ பண்ண சரியா இருக்கும்” என்று அதிகாரத்துடன் சொல்ல 

அவனை திட்டவும் முடியாமல் முறைக்கவும் முடியாமல் ” சாரி சார் ” என்று விட்டு ஃபலை அவனிடம் ஒப்படைத்தாள்.

அதை வாங்கியவன் அவளின் ஃபைல்களை திருப்பி பார்த்து விட்டு இண்டர்வ்யூவை தொடங்கினான்.

பல கேள்விகள் அவன் தொடுக்க அது அனைத்திற்கும் சரியாக பதில் அளித்தாள் இசையினி.

” ஓகே யூ மே கெட் எ அபார்ட்மெண்ட் லெட்டர் ஃப்ரம் மீ .பை தி வே மை செல்ஃப் சக்திதரன் மேனேஜர் ” என்று கை நீட்ட அவன் பக்கத்தில் இருந்தவரோ வாயை பிளந்து கொண்டு அவனை பார்த்தார்.

இசையும் நாகரிகம் கருதி அவனுக்கு கைக் குழுக்கி விட்டு வெளியே சென்றாள்..

சிறிது நேரத்திலே அங்கு வேலை செய்து கொண்டிருந்த பெண் ஒருவள் வந்து ” உங்கள சக்தி கூப்பிடுறாரு போய் பாருங்க ” என்று விட்டு தன் வேலையை கவனிக்க சென்றாள்.

அவளும் அவன் அறை அறிந்துக் கொண்டு அங்கே சென்றாள். 

அவளுக்காகவே காத்திருவந்தவன் போல் “கதவை தட்டும் போதே ” எஸ் கம் இன் ” என்றான்.

அவளுக்கு அவன் கையில் போடப்பட்டிருந்த கட்டே முதலில் தென்பட்டது. அதை பார்த்தவாறே நின்றவளிடம் சக்தி ” எக்ஸ் க்யூஸ் மீ என் கையில என்ன உங்க அப்பாய்மெண்ட் லெட்டாரா எழுதி இருக்கு இப்படி உடஞ்ச கையையே பாத்துட்டு இருக்கீங்க ” என்று தன்மையான குரலில் காட்டமாகவே கேட்டான்.

அவனின் சொல்லில் விழியை அவன் புறம் திருப்பியவள் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க 

” இந்தாங்க உங்களோட அப்பாய்மெண்ட் லெட்டர் ” என்று அவளின் முன் நீட்ட அதை பெற்றுக்கொண்டவள் ” தேங்க் யூ சார் ” என்று விட்டு வெளியே செல்ல எத்தனித்தவள் பின்னே திரும்பி ” சாரி சார் நான் எதுவும் வேணும்னு பண்ணல ” என்று சொல்ல 

” இதுல நீங்க என்ன பண்ணீங்க நான் என் வருங்கால பொண்டாட்டிய விலாம பிடிக்க போய் இந்த மாதிரி ஆய்டுச்சி அதுக்கு என்ன செய்ய முடியும் இனி தான் அவளுக்கு ட்ரெயினிங் கொடுத்து வெயிட் ரெட்யூஸ் பண்ண வைக்க வேண்டும் ” என்றான் சீரியசாக …

அவனின் கூற்றை கேட்டவள் ” ஹோ இதுக்கு காரணம் உங்க வருங்கால ஒய்ஃப் தானா நான் கூட நேத்து என்ன தாங்க போய் தான் இப்படி ஆய்டுச்சோன்னு நினைச்சு பயந்துட்டேன் ” என்று வேகமாக சொல்லிவிட்டு நகர்ந்திட அப்போதே அவளின் மூலையில் பல்ப் எறிய திரும்பி அவனிடம் வந்தவள் ” என்னைய பாத்து நீ எப்படி அப்படி சொல்லலாம் . டோண்ட் க்ராஸ் யுவர் லிமிட்ஸ் ஏதோ தெரியாம நடந்துச்சின்னு சாரி சொல்ல வந்தா இப்படி பேசுறீங்க ” என்று இசை பொறிந்து தள்ள

அவள் பக்கத்தில் வந்தவன் அவளின் அழகிய முகத்தையே வருட அவனின் கண்களில் காதல் ரசம் மின்ன செய்தது.

அவளை நெருங்கியவன் ” நேத்து வரைக்கும் யாராவது நீ காதலிப்பிய்யான்னு கேட்ருந்தா அடிச்சு சொல்லியிருப்பேன் இல்லைன்னு .ஆனா பாரு எப்போ உன்ன அந்த ஆல் அரவமற்ற சாலையில் நிலவின் ஒளியில் இரசனையான உன் பிம்பத்தை  தாங்கி பிடித்து மெய் சிலிர்தேனோ அப்போது தான் அந்த கடவுள் எனக்குள்ளயும் உனக்கான காதல்ல விதைச்சிட்டாரு . என்னால என்னோட அண்ணா மாதிரி லாம் காதல சொல்லாம வாழ்க்கைய கடத்த முடியாது .அதுனால தான் உடனேயே சொல்றேன் இனி மா கேட்டுக்கோ ” என்றவன் அவளின் இடையை பற்றி தன்னுள் இழுத்தவன் அவளை அந்த அறையில் இருந்த மூலைக்கு கடத்தி ” என்னோட லைஃப்ல அம்மா அப்பா அண்ணா அப்பறம் ரெண்டு கேர்ள் பெஸ்டிஸ் இருக்காங்க . அவுங்க கிட்ட நான் எக்ஸ்பெக்ட் பண்றது வெறும் அன்பு மட்டும் தான். ஆனா நான் உன்கிட்ட எக்ஸ்பெக்ட் பண்றது இத்தன பேரோட அன்பையும் சேர்த்து உன்னோட காதலும் உன்னோட ஒருத்தி கிட்ட இருந்தே வேணும். காதல்க்கு இலக்கனமா நீ வேணும். உன்னோட கோபம் மொத்தமும் காதலா வேணும் உன்னோட காதலாவே நான் இருக்கனும் ” என்றவன் அவளை விலகாமல் மூக்கோடு மூக்கு உரசி கவிதை சொல்ல தொடங்கினாள். 

சற்றும் நான் எதிர்பார்த்தில்லை 

இரவோடு இரவாய் நிலவின்

ஒளியில் என் மனதை நீ இரவலாக

என்னிடம் இருந்து களவாடுவாய் என்று…!!!!

” உனக்கான காதல நான் இனி தினமும் கொடுப்பேன். அதேபோல எனக்கு சொந்தமான இல்ல இல்ல எனக்கே எனக்கு சொந்தமான‌ காதலுக்காக நான் வெயிட் பண்றேன் .இப்போ நீ போ ” என்றவன் அவள் நெற்றியில் மென்மையாக இதழ் பதித்து விலகினான்.

இசையோ அமைதியாக நிற்க ” இனி மா ” என்று அவள் தோளை குலுக்கிட அவளோ பேயரைந்தார் போல் விழித்து நின்று அவனை ஏகத்துக்கும் முறைத்தவள் இடத்தை காலி செய்தாள்.

போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு சிறிது நேரத்துக்கு முன் நடந்த செயல்கள் ஞாபகம் வரவே முகத்தில் புன்னகை அரும்பியது….

இண்டர்வ்யூக்காக வேகமாக உள்ளே வந்தவன் ஆல்ரெடி நடந்து கொண்டிருந்த அறைக்குள் நுழைந்து வேலையை தொடங்கினான்.

ஒவ்வொருவரையும் இண்டர்வ்யூ செய்தவன் சோர்ந்து போய் பக்கத்தில் இருந்த மேனேஜரிடம் ” நெக்ஸ்ட் யாரு  ” என்று கேட்க 

” நேம் இசையினி சார் ” என்றான்.

ஏதோ வில்லேஜ் கேர்ள் போல நீங்களே இந்த பொண்ண இண்டர்வ்யூ பண்ணுங்க நான் போய் ரெஃப்ரெஷ் ஆகிட்டு வந்துடுறேன்” என்று விட்டு எழுந்து செல்ல எத்தனிக்கும் போது அவன் கண்கள் அதன் இணையை கண்டு கொள்ள வெளியே போகாமல் உள்ளே வந்தவன் ஏதோ யோசனை வந்தவனாய் பக்கத்தில் இருந்த துணியை கொண்டு கைக்கு கட்டு மாதிரி போட்டு கொண்டு அமைதியாக இருக்கையில் அமர்ந்தான்.

அவனை பார்த்த மேனேஜர் ” நீங்க போகலையா சார் ரெஸ்ட் எடுக்க ” என்று கேட்டு அவனை பார்க்க

சக்தியோ ” இந்த பொண்ணையும் நானே இண்டர்வ்யூ பண்றேன் . நீங்க இடையில எதுவும் கேக்கவும் பேசவும் வேண்டாம் ” என்றவன் அமைதியாக நெஸ்ட் என்றதற்கு அடையாளமாக அட்டன்டரிடம் சொல்லி அனுப்பிவிட இசையினி மெதுவாக உள்ளே வந்தாள்.

அவளின் அந்த பயந்த முகமே அவனின் காதலை ஏனோ பெறுக செய்தது. அவளின் பயம் சக்தியை இரசிக்க வைத்தது. அவனின் கேள்வியில் இசை பதில் சொன்ன விதம் அவளின் அறிவை இரசிக்க வைத்தது. அவள் சாரி சொன்ன போது அவளின் குழந்தை மனதை இரசிக்க வைத்தது. ஒரே நாளிலேயே சிறிது சிறிதாக அவளின் புறம் மொத்தமாய் விழுந்த உடனே காதலை கூறிவிட்டான்…

இவனின் நினைவை கலைக்கும் பொருட்டு அவனுக்கு பசி எடுக்க தனக்கு தானே சிரித்த படியே வெளியே சென்றான்.

கஃபேக்குள் நுழைந்தவன் கண்ணில் பட்டது யாருடனோ கோல் காஃபி அருந்தி கொண்டு இருக்கும் அதிரூபனை தான்.

அவனை கண்டவுடனுக்கு முகத்தில் புன்முறுவல் தோன்ற அவனுக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்து அவனுக்கு பிடித்த ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் வாங்கி சாப்பிட தொடங்கினான்.

அவர்கள் இருவரும் கிளம்புவதை அறிந்த சக்தி உடனே அவர்களை நோக்கி ” எக்ஸ் க்யூஸ் மீ மிஸ்டர் அதிரூபன் ” என்று நாகரிகமாக கூப்பிட 

” எஸ் சொல்லுங்க உங்களுக்கு எப்படி என்னோட நேம் தெரியும் ” என்று அதிரூபன் கேட்டு அவனை பார்க்க 

” நான் உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் ” என்று சம்பந்தமில்லாமல் அவன் கேட்ட கேள்விக்கு சக்தியிடமிருந்து பதில் வந்தது.

அவனுடன் இருந்த பெண்ணை பார்த்து ” நீங்க கொஞ்சம் வெளிய வெயிட் பண்ணுங்க இப்ப நான் வந்தறேன் ” என்று சொல்லி அந்த பெண்ணை கிளப்பி விட்டான்.

” இப்போ சொல்லுங்க நீங்க யாரு உங்களுக்கு எப்படி என்னோட பேரு தெரியும்” என்று கேட்டான் அதிரூபன்.

” ஏன் உங்கள தெரியாது நீங்க தான என்கிட்ட அடி வாங்குனது சாரி கொஞ்சம் மாத்தி சொல்லிட்டேன் உங்களுக்கு யார் அடிச்சாங்கனே தெரியாம அடி வாங்கினது நீங்க தான மிஸ்டர் ” என்று ஏளன புன்னகையுடன் சக்தி கூற 

அதித கோபம் அதிரூபனிடம் எழ ” டேய் அது நீ தானா டா ” என்று உறுமி அவன் சட்டையை பிடிக்க 

” ஹே மேன் ஜஸ்ட் சில் எதுக்கு இந்த கோபம் சொல்லு கோப பட வேண்டிய நானே அமைதியா சிரிச்சிட்டு தான பேசிட்டு இருக்கேன். உனக்கு எதுக்கு இந்த கோபம். அது மட்டும் இல்லாமல் உன்கூட வந்த பொண்ணு வெளிய நின்னு நம்மள தான் பாக்குறாங்க ” என்று அமைதியாய் சொன்னாலும் அவனுக்குள் அடங்காமல் இருந்த கோபம் வெளி வந்தது.

தானாக அதிரூபனின் கைகள் சக்தியின் சட்டையிலிருந்து விடு பட்டது.

” ஆமா எதுக்கு டா நான் போதையில இருந்தப்ப வந்து அடிச்ச அவ்வளவு கோழையா நீ ” என்று ஏளனமாக கேட்க 

” கோழை இல்ல டா கோபம் ஆத்திரம் அதுக்கு தெரியாதே நீ நல்லா இருக்கியா இல்ல போதையில இருக்கியான்னு எனக்கு இப்பவும் அந்த கோபம் அப்படியே இருக்கு உன்ன கொல்லனும்னு போல வெறி வருது தான் ஆனா என்னால இப்போ அந்த பொண்ணு முன்னாடி அசிங்க படுத்த முடியாது ” என்றான் ஆத்திரம் கலந்த நிதானத்தில் .

” உனக்கும் எனக்கும் என்ன இருக்கு எதுக்கு இந்த மாதிரி பண்ண ” என்று கோபத்தில் அவனை அடித்ததற்கான நோக்கம் அறிய வேண்டும் என்ற எண்ணத்தில் கேட்டான்.

” என்னோட உயிர் தோழி அதுவும் இல்லாம என்னோட வருங்கால அண்ணி கிட்ட பிரச்சன பண்ணா சும்மா இருப்பேனா அதான் இப்படி பண்ணேன் . இனியும் நீ அந்த மாதிரி பண்ணா சும்மா இருக்க மாட்டேன் பாத்துக்கோ திஸ் ஸ் தி ஃபர்ஸ்ட் அண்ட் ஃபைனல் வார்னிங் டூ யூ” என்றான்.

” என்ன பேசுற நீ ” என்று எதுவும் புரியாமல் கேட்க 

” உனக்கு அது கூடிய சீக்கிரமே புரியும் மிஸ்டர். அதிரூபன் பாய் ” என்று சிரித்த முகமாக சென்று விட்டான்.

அவனை பார்த்து முறைத்துக் கொண்டே இருந்தவன் அவனுடன் வந்த பெண் நிற்பதை அறிந்து அவள் பக்கத்தில் சென்றான்.

விஷ்வாவோ காலேஜில் அமைதியாக அவனது வேலையை கவனித்துக் கொண்டு இருந்தான். இன்னும் இரு தினங்களில் அவர்கள் டிபார்ட்மெண்டில் உள்ள மாணவ மாணவிகள் அனைவரும் ஐவி செல்ல திட்டமிட்டு இருந்தனர். அதற்கான வேலையில் தான் விஷ்வா இறங்கி இருந்தான் . அவனுடன் நிலாவும் மணிமேகலையும் கூட இணைந்திருந்தனர்.

மணிமேகலை ஆர்வம் காட்டி அனைத்து வேலைகளும் செய்ய நிலா கடமைக்கே செய்து வந்தாள்.

மணியும் நிலாவும் வேலை செய்து கொண்டிருக்க அப்போது நிலாவே பேச்சை தொடங்கினாள் .

” மணி நான் இந்த ஐவிக்கு வரல டி ” என்று தயங்கியவாறே கூற 

” என்னது வரலையா அடி பிச்சிருவேன் பாத்துக்கோ நீ ஒழுங்கு மரியாதையா வர அவ்வளவு தான் ” என்று அதிகாரமாய் சொன்னவள் மாணவர்களின் கௌண்ட் எடுக்க தொடங்கினாள்.

” இல்ல டி மணி ஊருல இருந்து பெரிமா பெரியப்பா இசை எல்லாம் வந்துருக்காங்க அதுனால என்னால இந்த ஐவிக்கு வர முடியாது ” என்று சத்தமே இல்லாமல் கிசுகிசுத்தாள் நிலா. ஏனெனில் அங்கே தான் விஷ்வாவும் வேலை செய்து கொண்டு இருந்தான்.

அவள் எதற்காக கிசுகிசுத்தாளோ அதை அறிந்ததும் அறியாமலும் மணி விஷ்வாவின் முன்பே நின்றாள்.

” சார் யாழ்மொழி மேம் இந்த ஐவீக்கு வர மாட்டாங்களாம் அவுங்களுக்கு ஏதோ பெர்சனல் ஒர்க் இருக்காம் சார் ” என்று கோபத்துடன் விஷ்வாவிடம் முறையிட்டாள் மணி.

” ஏனாம் இங்க யாருக்கு பெர்சனல் ஒர்க் இல்லையாமா அவுங்களுக்கு மட்டும் தான் இருக்கா என்ன ” என்று கேள்வி மணியிடம் இருந்தாலும் பார்வை நிலாவிடமே இருந்தது.

அந்த பார்வையிலேயே ” நீ ஒழுங்கா வர ” என்று சொல்வது போல் இருந்தது.

” நல்லா கேளுங்க சார் ” என்று அவனுக்கு ஒத்து ஊத அவளை கண்டு முறைத்தாள் நிலா.

” அவள பாத்து எதுக்கு நிலா முறைக்கிற . நான் நேரடியாகவே கேக்குறேன் அப்படி என்ன பெர்சனல் ஒர்க் உனக்கு இருக்கு ” என்று அவன் நேர் பார்வையினால் அவளை துளைத்த படியே கேட்டான்.

அவனது பார்வையில் தவித்து போன பெண்ணவள் ” உங்களுக்கு தான் தெரியுமே சார் எங்க வீட்டுக்கு கெஸ்ட் வந்துருக்காங்கன்னு நான் மட்டும் எப்படி வர முடியும் சொல்லுங்க அது மட்டும் இல்லாமல் என்னோட தங்கச்சி என்ன விட்டு இருக்க மாட்டா இங்க வந்தா ” என்று பதில் கூறி முடித்தாள் எங்கோ பார்த்த படி…

” உனக்கு என்ன உன்னோட தங்கச்சி தான பிரச்சனை அவள நான் பாத்துக்கிறேன் நீ வர ” என்று கட்டளையிட்டனிடம் நிலா என்னவென்று கூறி மறுப்பாள். 

நிலாவின் தலை மேலும் கீழும் மற்றும் இட வலமாக ஆட்டியது அதை கண்ட விஷ்வாவிற்கு சிரிப்பு வந்தது.

அடுத்தநாள் மாலை மாணவர்கள் அனைவரும் செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்திருந்தனர்.

அப்போது எதர்ச்சிசையாக அதிரூபனை பார்க்க விஷ்வாவிற்கு கோபம் தலைக்கேறியது.

அதனால் அதிரூபனை அழைத்துக் கொண்டு பிரின்ஸ்பால் அறைக்கு சென்றான்.

” சொல்லுங்க விஷ்வா எதுக்கு இப்போ என்ன இங்க கூட்டிட்டு வந்தீங்க ” என்று ரூபன் கேட்க 

” ஏன் கூட்டி வந்தேன்னா உங்களோட தேவை இந்த காலேஜ்க்கு போதும்னு சொல்ல தான் கூட்டிட்டு வந்தேன் ” என்றான் அதிரடியாக 

அவனின் பேச்சில் அதிர்ந்த ரூபன் ” என்ன பேசுறீங்க நீங்க ” என்று அதிர்ச்சி கலந்த கோபத்தில் கேட்டான் அவன். 

” நீ இங்க வேலை பாக்குற பொண்ணு கிட்ட மிஸ்பிஹேவ் பண்ணிருக்க ” என்று கோபத்தின் உச்சியில் சொல்ல

” அதை அந்த பொண்ணு வந்து சொல்லட்டும் இப்படி சம்பந்தம் இல்லாம நீ சொல்லனும்னு அவசியம் இல்லை விஷ்வா அப்படி என்ன உறவு இருக்கு உனக்கும் அந்த பொண்ணுக்கும் அதாவது யாழ்மொழிக்கும் ” என்று ஏளன புன்னகையில் ரூபன் கேட்க 

” அவளுக்காக கேக்குற உரிமை எனக்கு மட்டும் தான் இருக்கு ஒரு நண்பன்னா கூட இருக்கலாம் ஏன் காதல்னா கூட இருக்கலாம் ஏன் அதை விட அவளுக்கு அவன் வருங்கால புருஷனா கூட இருக்கலாம் ”  என்று கோபமும் சிரிப்பும்மாய் சொல்ல 

” ஹாஹாஹா ” என்று அதிரூபனின் சிரிப்பு சத்தம் அறை முழுவதும் ஒழித்தது.

” எதுக்கு இப்ப சிரிக்கிற ” என்று கோபத்தில் உச்சியில் கேட்க 

” அவ உனக்கு கிடைக்க மாட்டா டா கண்டிப்பா கிடைக்க மாட்டா விஷ்வா .எந்த ஒரு நல்ல பொண்ணும் அவளால ஒருத்தனோட வாழ்க்கைய கெடுக்க விரும்ப மாட்டா  ” என்று குரோதத்துடன் சொன்னான்.

விஷ்வாவிற்கு கொலை வெறியே உண்டாக அவன் கூறிய அந்த வாயிலேயே குத்து குத்தினான்.

ஒரே குத்திலேயே அவனுக்கு வாயிலிருந்து உதிரம் வெளியே வந்தது. அப்போது அதிரூபன் அதை சொல்லியே சிரிக்க தன் கோபம் தீரும் அடிக்க ரூபன் சுருண்டு விட்டான்.

” உன்னால உன்னோட வாழ்க்கை குள்ள அவள கொண்டு வரவே முடியாது டா” என அந்த நிலையிலும் அவன் அழுத்தி கூற கோபம் கொண்ட விஷ்வாவோ நிதானம் இல்லாமல் அவனை கொலை செய்யும் வெறி ஏறியது.

கோபத்தின் உச்சியில் இருந்த விஷ்வாவிற்கு கண்ணில் பூ ஜாடி தென் பட அதை எடுத்தவன் அடிக்க போக அவனை தடுத்து நிறுத்தியது ஒரு கரம்…

அவன் திரும்பி பார்த்து ” சக்தி கைய விடு டா .இவனா கொல்லாம விட மாட்டேன் “என்றான் ஆத்திரத்தின் பிடியில் .

” விஷ்வா அத இங்க கொடு டா ” என்று அதனை பிடுங்கி கீழே எரிந்தவன் ” என்ன பண்ணுறன்னு தெரிஞ்சி தான் பண்றியா டா . உன்னோட பொறுமை எங்க போச்சி சொல்லு வர வர உன்னோட கேரக்டர்ஸ் மாறுது விஷ்வா .இது உனக்கும் நல்லது இல்ல உன்ன சுத்தி உள்ளவுங்களுக்கும் நல்லது இல்ல ” என்றான் அவனுக்கு உறைக்கும் பொருட்டு …

அவனின் பேச்சை கேட்டு அமைதியான விஷ்வா அதிரூபனின் புறம் திரும்பி ” இன்னொரு தடவ இந்த காலேஜ்ல உன்ன பாத்தேன் அது தான் நீ உயிரோட இருக்க போற கடைசி நாளா இருக்கும் பாத்துக்கோ ” என்று மிரட்டல் விட்டான் விஷ்வா .

” அத  சொல்றதுக்கு நீ யாரு நீயும் இந்த காலேஜ்ல ஒர்க் பண்ற ஒரு ஸ்டாப் அவ்ளோ தான் ” என்றான் தன் வாயில் இருந்து உதிரத்தை துப்பிய படி..

” அவனுக்கு தான் இத சொல்ல எல்லா உரிமையும் இருக்கு ஏன்னா அவன் தான் இந்த காலேஜோட ஓனர் ” என்றான் சக்தி அமைதியாக..

இதனை கேட்ட அதிரூபனுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி .அந்த அதிர்ச்சி அவன் முகத்தில் அப்பட்டமாக பிரதிபலிக்க விஷ்வா அமைதியாகவே அமர்ந்திருந்தான்.

” இன்னைக்கு நைட்டே உன்னோட அக்கௌன்ட்க்கு உன்னோட சேலரி அமௌண்ட் ட்ரேன்ஸ்ஃபர் ஆயிடும் .இனி இந்த பக்கம் வர தேவையில்லை ” என்றான் சக்தி…

எழுந்திரிக்க முடியாமல் எழுந்த ரூபன் ” அண்ணனும் தம்பியும் சேர்ந்து இப்படி பண்ணிட்டிங்களா உங்கள சும்மாவே விட மாட்டேன் பாத்துக்கோங்க நீங்க அழுவீங்க அதுவும் நீ அழுவ விஷ்வா கதறி கதறி அழுவ இத கண்டிப்பா நான் பார்த்து இரசிக்க தான் போறேன் ” என்று சாபம் சவால் என இரண்டையும் விட்டு விட்டு நடக்க முடியாமல் வெளியேறினான்..

விஷ்வா அமைதியாக இருக்க அவன் பக்கத்தில் சென்ற சக்தியை கண்டவன் ” என்னோட மொழி வாழ்க்கையில என்னமோ பெருசா நடந்துருக்கு டா அது என்னென்னு நான் தெரிஞ்சுக்கணும் ” என்றான் உறுதியாய்.

அதன் பின் இருவரும் கிளம்பி வீட்டிற்கு சென்றனர்.

அந்த இரவே நிலா வீட்டிற்கு சென்ற விஷ்வா கற்பகத்திடம் வந்து ” நாங்க எங்க காலேஜ்ல டூருக்கு போறோம் யாழ்மொழியும் வராங்க அவுங்க கூட நீங்க உங்க பொண்ணையும் அனுப்பி வச்சா நல்லா இருக்கும் ” என்று பணிவாக கேட்க விஷ்வா கண்டு ,

” கண்ணா ஜான்கிரி தின்ன ஆசையா ” என்று அவளது மனம் சந்தோஷ கூச்சலிட 

” எங்க பொண்ணுன்னு சொல்லாதீங்க இசையினின்னு சொல்லுங்க தம்பி ” என்று திருத்தி சொல்ல 

” ஆங் ” என முழித்தவன் ”  சரிங்க ஆண்டி ” என்றவன் ” இசையினியையும் அனுப்பி வைங்க ” என்றான்.

பாகில் போடப்பட்ட குளோப் ஜாமுன் சாப்பிடும் பததிற்கு வந்த பிறகு சுவைக்க எப்படி திகட்டாதோ அதேபோல் அவன் அனுப்பி வைங்க என்ற வாக்கியத்தில் அவர் சாப்பிடாமலே  மகிழ்ச்சியை அளித்தந்தது….

” கண்டிப்பா உங்க கூட உங்கள நம்பி என் பொண்ண அனுப்பி  வைக்கிறேன் தம்பி ” என்றார் கற்பகம்…

_தொடரும்….

Advertisement