Advertisement

அத்தியாயம் 11

மாலை வைதேகி செய்த டிபன் சாப்பிட்டுவிட்டு இவர்கள்
வீட்டிற்கு வந்துவிட்டனர். வீட்டிலேயே இருந்திருந்து
அரவிந்தனுக்குப் போர் அடித்து விட்டது.

“நான் வெளியப் போகப்போறேன். எதாவது
வாங்கனுமா?” என்றான்.

“காய்கறி மளிகை சாமான் எல்லாம் இல்லை. நீயும்
திலோத்தமாவும் போய் வாங்கிட்டு வர்றீங்களா?”
காமாட்சி சொல்ல…பாவனா வேறு நிமிர்ந்து பார்க்க,
அவளைத் தனியாக விட்டுச் செல்வதாக நினைப்பாள்
என நினைத்து, “நான் பாவனாவோட இருக்கேன்.”
என்றாள் திலோத்தமா.

“அவ இருக்கட்டும், நீங்க வாங்க மா, நாம ரெண்டு பேரும்
போயிட்டு வரலாம்.” என்ற மகனுடன் காமாட்சி
கடைக்குக் கிளம்பினார்.

திரும்ப வரும் வழியில் காமாட்சி புலம்பிக் கொண்டே வர,
“அம்மா நீங்க ஒன்னு புரிஞ்சிக்கோங்க. திலோத்தமா

2

பாவனாவை நல்லா பார்த்திக்கனும்ன்னு நினைக்கிறா…
அதைப் பார்த்து நாம சந்தோஷம் தான் படனும்.
பாவனாவுக்கு உடம்பு சரி இல்லை. அதனால இப்ப
கொஞ்சம் டென்ஷன்னா இருக்கா… இல்லைனா
என்கிட்டயும் நல்லத்தான் இருப்பா… நீங்க ஏன் சும்மா
அதை நினைச்சே டென்ஷன் ஆகிறீங்க.”

“நீங்க நாளைக்கு அப்பாவோட கிளம்பி ஊருக்கு போங்க.
நான் லீவ் இருக்கும் போது, ஒரு நாலு நாள் அங்க இருக்க
மாதிரி வரேன்.”

“கண்டிப்பா வரணும், நம்ம சொந்தக்காரங்களுக்கு
எல்லாம் சொல்லி, கோவில்ல பொங்கல் வச்சு, கடா
வெட்டி விருந்து போடணும்.” என்றார் காமாட்சி.
அரவிந்தனும் கண்டிப்பாக வருவதாக ஒத்துக்
கொண்டான்.

மாலையில் இருந்து பாவனாவுக்குக் காய்ச்சல் விட்டு
இருந்தது. திலோத்தம்மா அவளோடு ஹாலில்
உட்கார்ந்து விளையாடிக்கொண்டு இருந்தாள். மதியம்
விருந்து அதிகபடி என்பதால்… இரவு உணவை
எளிமையாகவே முடித்துக் கொண்டனர்.

பாவனாவின் அறையில் அரவிந்தனின் பெற்றோர்
படுத்து விட… பாவனா தூங்குவதற்காக, திலோத்தமா
ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டூ இருந்தாள்.

3

வேறு என்ன? எங்கே நேற்று மாதிரி இன்றும் கத்தி
கலாட்டா பண்ணிவிடுவாளோ எனப் பயம்.

மகளின் அருகே படுத்து அவளுக்குத் தட்டிக் கொடுத்துக்
கொண்டிருந்த அரவிந்தன், “நேத்து ஏன் டா மம்மியை
அப்படிச் சொன்னீங்க? நீ அவங்களோட ப்ரண்ட்
தானே..அவங்க உன்கிட்ட சொல்லிட்டு தானே இந்த
வீட்டுக்கு வந்தாங்க. நீ கூட ஹப்பியா தான் இருந்த.
அப்ப ஏன் நேத்து அப்படிப் பண்ண?”

“அது வித்யா அத்தை சொன்னாங்க, நீங்க திலோ
மம்மியோட சேர்ந்திட்டு என்னை மாமா வீட்லயே
விட்டுடுவீங்களாம். அப்படியா அப்பா? நீங்க என்னை
விட்டுடுவீங்களா?” பாவனா கண்களில் உயிரை தேக்கி
அவனைப் பார்க்க, அரவிந்தனுக்கு நெஞ்செல்லாம்
ரணமாக வலித்தது.

தான் வார்த்தையால் என்ன சமாதானம் சொன்னாலும்,
பாவனாவின் மனதில் விழுந்த சந்தேகம் போகவே
போகாது என அவனுக்குத் தெரியும். அவள் நாளடைவில்
தங்களைப் புரிந்து கொண்டால் தான் உண்டு.

“வித்யா அத்தைக்குத் திலோ மம்மி பத்தி தெரியாது.
அதனால் உன்கிட்ட அப்படிச் சொல்லி இருப்பா..”

“உன்னைப் பார்த்து ஒருத்தர் கெட்ட பொண்ணு

4

சொன்னா, நீ கெட்ட பொண்ணு ஆகிடுவியா?”
அரவிந்தன் கேட்க, பாவனா இல்லை என்றாள்.

“அப்படித்தான் திலோ மம்மியும், வித்யா அத்தை
தெரியாம பேசினது மனசுல வச்சுக்காத. அப்படி உனக்கு
எதாவது அவங்க கிட்ட பிடிக்கலையா… என்கிட்ட
சொல்லு. இல்லைனா மம்மிகிட்டயே சொல்லு, ஏன்
இப்படிப் பண்றீங்க கேளு. தப்பே இல்லை.”

“திலோ மம்மி உனக்குக் காரணம் சொல்வாங்க.”

“சரிப்பா…இனிமே அப்படிப் பண்ண மாட்டேன்.”
பாவனா சொன்னதும், அரவிந்தன் முகம் மலர.. “போய்த்
திலோ மம்மியை இங்க தூங்க கூடிட்டு வரியா… நீ
கூப்பிட்டாத்தான் அவங்க இங்க வருவாங்க.” என்றான்.

பாவனா உடனே எழுந்து திலோவிடம் சென்றவள்,
“வாங்க மம்மி தூங்கலாம்.” என அழைத்தாள். டிவியை
அணைத்துவிட்டு அவள் பின்னே எழுந்து வந்த
திலோத்தமா, அப்போது எதுவும் கேட்கவில்லை. நைட்டி
எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குச் சென்று
மாற்றிவிட்டு வந்தவள், கட்டிலில் பாவனா அருகே
படுத்துக் கொள்ள..

கதவு எல்லாம் பூட்டி இருக்கிறதா எனப் பார்த்துவிட்டு,

5

விளக்கணைத்து விட்டு வந்த அரவிந்தன், மகளுக்கு
மறுபக்கம் படுத்துக் கொண்டான்.

திலோவும் பாவனாவும் படுத்தபடி தொணத் தொண
எனப் பேசிக் கொண்டு இருக்க…

“நாளைக்காவது ஸ்கூல்லுக்குப் போற எண்ணம்
இருக்கா? இப்படிப் பேசிட்டே இருந்தா எப்ப
தூங்குவீங்க?” அரவிந்தன் கேட்க,

“இப்பதான் காய்ச்சல் விட்டிருக்கு, நாளைக்கு ஒருநாள்
வீட்லயே ரெஸ்ட் எடுக்கட்டும்.” திலோத்தமா சொல்ல…

“அவ ஒன்னும் சின்னக் கிளாஸ் படிக்கலை, சும்மா சும்மா
லீவ் போட. அப்புறம் பாடம் எப்படிப் புரியும்?”

“நீங்க அதைப் பத்திக் கவலைப்படாதீங்க. நான்
அவளுக்குச் சொல்லிக் கொடுத்துப்பேன்.”

“ஓ… மேடம், காலேஜ் லக்சுரர் இல்லை மறந்திட்டேன்.”
என்றவன் குப்புற படுத்துக்கொள்ள… சிறிது நேரத்தில்
பாவனாவும் உறங்கி விட்டாள்.

அவள் உறங்கியதும், “அரவிந்த், நீங்க பாவனாகிட்ட

6

என்ன பேசினீங்க?” திலோத்தமா கேட்க, அவன்தான்
எதோ சொல்லி இருக்கிறான் என அவளுக்குத் தெரியும்.

“நாங்க ஆயிரம் பேசிப்போம். அதெல்லாம் உன்கிட்ட
சொல்ல முடியாது.” என்றான்.

என்ன டா இவன், இன்னைக்கு எக்குதப்பாகப் பேசி
வைக்கிறான் என நினைத்தவள், எழுந்து உட்கார்ந்து
அவனைப் பார்க்க…. அவள் பார்ப்பது தெரிந்து,
அரவிந்தனும் தலையைத் தூக்கி பார்த்தான். அவன்
முகத்தில் கோபம் இல்லை. மாறாகச் சிரித்துக் கொண்டு
தான் இருந்தான். திலோத்தமா மீண்டும் படுத்துக்
கொண்டாள்.

பாவனாவிடம் பேசியது சொன்னால், வித்யாவைப்
பற்றியும் சொல்ல வேண்டியது வரும். அவ்வளவு பெரிய
தவறு செய்த மனைவியையே விட்டுக் கொடுக்காதவன்,
தங்கையை மட்டும் விட்டுக் கொடுத்திடுவானா என்ன?
ஆனால் மறுநாள் பெற்றோரை ரயில் ஏற்றி விடச்
சென்றபோது, காமாட்சியிடம் மட்டும் சொன்னான்.

அம்மா தங்கையைக் கண்டிப்பார் என அவனுக்குத்
தெரியும். அதே போல் வீட்டுக்கு சென்றவுடன், காமாட்சி
முதலில் மகளைத்தான் அழைத்தார். “உங்க அண்ணன்
இனிமேயாவது நல்லா இருக்கனும்ன்னு நினைக்கிறியா
இல்லையா?”

7

“திலோவோட அம்மா எவ்வளவு பெருந்தன்மையா
இருக்காங்க. ஆனா நீ பாவனாகிட்ட அப்படிப் பேசினது
தெரிஞ்சா நம்ம குடும்பத்தைப் பத்தி என்ன
நினைப்பாங்க?”

“பாவம் அந்தப் பொண்ணு, உங்க அண்ணன் கூட
கடைக்குப் போகக் கூடப் பயப்படுது. ஒழுங்கா
இருக்கிறதுன்னா வா… இல்லைனா இனிமே உங்க
அண்ணன் வீட்டுப் பக்கம் வராத.” என அவர் நன்றாக
டோஸ் விட… அந்தப் பக்கம் வித்யாவுக்கு அழுகையே
வந்துவிட்டது.

மறுநாளில் இருந்து அரவிந்தன் வேலைக்குச் செல்ல
ஆரம்பித்தான். பாவனாவும் பள்ளிக்கு சென்றுவிட… ‘நாம
கூட இவ்வளவு நாள் லீவ் போட்டிருக்க வேண்டாம்
போலிருக்கு. இப்ப லீவ் கான்சல் பண்ணிட்டு போனா,
நம்மை ஒரு மாதிரி பார்ப்பாங்க.’ என நினைத்தவள்,
இங்கேயும் தன் அம்மா வீட்டிலுமாகப் பொழுது போக்கிக்
கொண்டு இருந்தாள்.

“அம்மா, நீங்களும் எங்களோடவே இருங்களேன் மா…
அரவிந்தன் கூட அப்படித்தான் சொன்னார்.”

“இப்ப எனக்குத் தனியா இருக்கிறது பத்தி ஒன்னும்
இல்லை. அதுவும் நீ ரொம்பப் பக்கத்தில இருக்க…

8

நாளைக்கு எனக்கு முடியலைனா, உங்க கிட்டதான் வரப்
போறேன். இப்ப என்னை இப்படியே விடு.” என்றார்
வைதேகி.

“உங்க மாமாங்க குடும்பத்தோட டூர் போக ஏற்பாடு
பண்றாங்க. நானும் உங்க பெரியம்மாவும் அவங்களோட
போகப் போறோம். இத்தனை நாள்தான் உனக்காக
எங்கையும் போகாம இருந்தேன். உடம்பு நல்லா
இருக்கும் போதே, நானும் நாலு இடம் பார்த்திட்டு
வரேன்.”

“நீங்க சொல்றதும் சரிதான், அதுதான் துணைக்கு ஆள்
இருக்காங்க இல்ல, போயிட்டு வாங்க.” என்றாள்
திலோவும்.

மறுவாரத்தில் இருந்து கல்லூரி செல்ல ஆரம்பித்தாள்.
கல்லூரியில் இருந்து திரும்பும் திலோத்தமா, பள்ளி
முடிந்து வரும் பாவனாவை அழைத்துக் கொண்டு,
முதலில் தன் அம்மா வீட்டிற்குத் தான் செல்வாள்.

அவர் இருவருக்கும் குடிக்க, சாப்பிட எதாவது தருவார்.
பிறகு இருவரும் தங்கள் வீட்டிற்கு வந்து, உடை மாற்றிய
பின்னர், பாவனா சிறிது நேரம் விளையாட சென்று
விடுவாள். திலோத்தமா அந்த நேரம் இரவு சமையலுக்குத்
தயார் செய்து விடுவாள்.

9

பாவனா வந்ததும் அவளைப் படிக்க வைப்பாள். பிறகு
இரவு உணவு கொடுத்து ஒன்பது மணிக்கெல்லாம்
பாவனா உறங்கி விடுவாள். திலோத்தமா உறங்கும்
நேரமும் அது தானே. ஆனால் அரவிந்தன் வர பத்து மணி
ஆகி விடும்.

இட்லி சப்பாத்தி என்றால் செய்து ஹாட் பாக்ஸில்
வைத்து விட்டு உறங்கி விடுவாள். அதே தோசை
என்றால்… அவன் வந்ததும் தான் ஊற்றுவது.

அவள் கஷ்ட்டப்பட்டு விழித்திருப்பதைப் பார்த்து,
“தோசை எனக்கு ஊத்திக்கத் தெரியாதா? நீ ஏன்
முழிச்சிட்டு இருக்க?” என்பான். சில நேரம்
காத்திருக்கிறேன் எனச் சோபாவில் படுத்து உறங்கி
விடுவாள்.

அரவிந்தன் வந்து அவனே தோசை சூட்டு சாப்பிட்டு,
உறங்கும் செல்லும் முன், அவளை எழுப்பி உள்ளே
சென்று படுக்கச் சொல்வான்.

காலையில் சீக்கிரம் எழுவது, வேலைக்கு வேறு
சென்றுவிட்டு வருவது, மாலை வீட்டிற்கு வந்து வேலை
பார்ப்பது என இருப்பதால்… இரவு திலோத்தமாவால்
விழித்திருக்க முடிவது இல்லை.

அதோடு திருமணதிற்கு முன் திலோத்தமா எங்கே வீட்டு

10

வேலை செய்தாள். அவள் வேலையை மட்டும் பார்த்துக்
கொண்டு கல்லூரி சென்று வந்தாள். வைதேகி அல்லவா
எல்லாம் செய்வார். ஆனால் இப்போது அவளாக ஒரு
வீட்டை நிர்வகிக்கும் பொறுப்பு இருக்கிறதே.

இப்போதும் வழக்கம் போல் காலை சமையலுக்கு ஆள்
இருந்தது. வேலை செய்யும் பெண்மணி வந்து சாதம்,
குழம்பு, காய் எனச் செய்து விடுவார். அரவிந்தன்
காலையில் சாதமே சாப்பிட்டு. அதையே தான் கொண்டு
செல்வான். இரவு மட்டும் தான் டிபன் சாப்பிடுவது.
காலையில் டிபன் செய்யவும் நேரம் இருக்காது.

திருமணமான புதிதில் வைதேகி இரவு உணவு அவர்தான்
சமைத்து கொடுத்தார். அவரே தினமும் கொடுப்பதைப்
பார்த்து, ஒருநாள் அரவிந்தன் சொல்லி விட்டான். “ஹே…
என்ன தினமும் உங்க அம்மாவே செஞ்சு
கொடுக்கிறாங்க. நீ வேணா சாப்பிட்டுக்கோ. ஆனா
எனக்கு வேண்டாம். நீ செய்ய முடியலைனா
பரவாயில்லை. நானே செஞ்சிகிறேன்.” என்று.

அவனை விட்டு தான் மட்டும் சாப்பிட முடியுமா என்ன?
அதனால் வைதேகியிடம் தானே செய்து கொள்வதாகச்
சொல்லி விட்டாள். ஒரு வேளை உணவாவது அவள்
சமைத்தால் தானே சமையலும் பழகுவாள். அதனால்
வைதேகியும் ஒன்றும் சொல்லவில்லை.

11

இதற்கு முன் ஒரு பேயை கட்டி இருந்தான். அது எது
சொன்னாலும் கேட்காது. இப்போதுதான் ஒரு
பெண்ணைக் கட்டி இருக்கிறான். அதனால் அரவிந்தன்
எதாவது சொன்னால்… திலோத்தமாவும் புரிந்து நடந்து
கொண்டாள்.

திருமணதிற்கு முன் இருந்த வாழ்க்கை முறை வேறு,
இப்போது இருப்பது வேறு. அதைப் புரிந்து பழகுவதற்கு
அரவிந்தன் அவளுக்குத் தேவையான நேரம்
கொடுத்தான்.

இன்னும் இருவரும் மனம்விட்டு பேசவில்லை. முதலில்
பாவனாவும் அவளும் பொருந்தி போகட்டும் என அவன்
அவளிடமிருந்து விலகி தான் இருக்கிறான்.

பாவனா மம்மி என்று திலோவை அழைக்கிறாள் தான்.
ஆனால் அதை உணர்ந்து அழைக்கிறாளா
தெரியவில்லை.

இரண்டு வாரங்கள் இப்படியே செல்ல.. சனிக்கிழமை
காலை எழுந்த அரவிந்தன், “இந்த வாரம் ஞாயிற்றுக்
கிழமை வீட்ல தான் இருப்பேன். இன்னைக்குக் கூடச்
சாயந்திரம் சீக்கிரம் வந்திடுவேன்.” என்றதும், அம்மாவும்
மகளும் திட்டம் போட ஆரம்பித்தனர்.

இன்றைக்கு மாலை, அந்தக் கார்ட்டுன் படத்திற்குச்

12

செல்வது, அப்படியே திரும்பி வரும் போது, இரவு
உணவும் வெளியே சாப்பிடுவது என்று.

எல்லா வாரமும் சனிக்கிழமை திலோத்தமாவுக்குக்
கல்லூரி இருக்காது. அதே போலப் பாவனாவுக்கும்
ஐந்தாம் வகுத்து வரை சனிக்கிழமை விடுமுறைதான்.
அவர்கள் இருவரும் வீட்டில் இருக்க.. அரவிந்தன் மட்டும்
வேலைக்குச் செல்ல கிளம்பினான்.

“உங்களை நம்பி டிக்கெட் புக் பன்றேன்ப்பா….. வீட்ல
அஞ்சு மணிக்கெல்லாம் இருக்கணும்.” திலோத்தமா
நினைவுபடுத்த, “எதுக்கும் நீ ஒரு நாலு மணிக்கு போன்
பண்ணிடு.” எனச் சொல்லிவிட்டுச் சென்றான்.

திலோ நாலு மணிக்கு அழைத்த போது, “கொஞ்சம் லேட்
ஆகும், ஆனா வந்திடுறேன்.” என்றான்.

அம்மாவும் மகளும் நன்றாக உடை அணிந்து கொண்டு
அவனுக்காகக் காத்திருக்க, ஐந்தரை மணிக்கு
வந்துவிட்டான்.

“சீக்கிரம் கிளம்புங்க.” என்ற திலோவிடம், “இதோ அஞ்சு
நிமிஷத்தில வந்திடுறேன். எனக்குக் கொஞ்சம் டிரஸ்
எடுத்து வையேன்.” எனச் சொல்லிவிட்டு அரவிந்தன்
குளிக்கச் செல்ல,

13

என்ன டா இது, நம்மைப் போய் டிரஸ் எடுத்து வைக்கச்
சொல்றாங்க எனத் தயங்கினாலும், ஜீன்ஸ் டி ஷர்ட்
எடுத்துக் கட்டிலில் வைத்து விட்டு வந்தாள்.

அரவிந்தன் அதை அணிந்து கொண்டு வந்ததும், மூவரும்
படம் பார்க்க கிளம்பினார்கள். மாலில் இருந்த திரை
அரங்கில் தான் முன்பதிவு செய்து இருந்தாள். படம்
ஆரம்பிக்கும் நேரத்திற்குச் சரியாக உள்ளே சென்று
விட்டனர். பாவனாவை நடுவில் விட்டு, இருப்பக்கம்
இருவரும் அமர்ந்து கொண்டனர்.

பாதி அரங்கம் காலியாகத்தான் இருந்தது. பிறகு
குழந்தைகள் படத்திற்கு யார் வருவார்கள்.
அரவிந்தனுக்குப் படம் பிடிக்கவே இல்லை. ஐயோ!
இன்னும் ரெண்டு மணி நேரம் வேற இருக்கனுமா என
நினைத்தவன், திலோத்தமாவை பார்க்க… அவள்
படத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அரவிந்தன் கைபேசியை எடுத்து, எதோ வாசிக்க
ஆரம்பித்து விட்டான். பட இடைவேளையில் மூவரும்
சென்று பாப்கார்ன் வாங்கிக் கொண்டு வந்தனர்.

பாவனாவிடம் ஒரு பாப்கார்ன் டப்பாவை கொடுத்தவன்,
“இந்தா உனக்குப் பிடிச்ச கேரமல் பாப்கார்ன். நீ அந்தச்
சீட்ல உட்கார்ந்துக்கோ.” என அவளை மூன்றாம்

14

இருக்கைக்கு நகர்த்தி விட்டு, அவன் நடுவில் உட்கார்ந்து
கொண்டான்.

அவனுக்கும் திலோத்தம்மாவுக்கும் சேர்த்து ஒரே
பாப்கார்ன் தான். அதைத் திலோத்தமாவிடம் கொடுத்து
விட்டு, அதிலிருந்து அவன் எடுத்துக் கொண்டான்.

“நிஜமாவே உனக்கு எதாவது புரியுது.” படம் பார்த்துக்
கொண்டிருந்த திலோத்தமாவின் பக்கம் லேசாகச் சாய்ந்து
அரவிந்தன் கேட்க,

“படம் பார்க்க வந்தாச்சு, பார்த்து தானே ஆகணும்.” என
அவள் தத்துவம் பேச…

“நீயே இதைப் பாரு.” என்றவன், மீண்டும் செல்லை
எடுக்கச் செல்ல, திலோ அவனின் கையைப் பிடித்துக்
கொண்டாள்.

“ஒழுங்கா படம் பாருங்க.” என்றவள், அவனின் வலது
கையை விடவில்லை. அதன் பிறகு அரவிந்தன் எங்கே
படத்தைப் பார்த்தான். இதுதான் சாக்கென்று
திலோத்தமாவை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
இப்படிப் பார்ப்பது என்றால்.. இன்னும் நான்கு மணி
நேரம் கூட இங்கே இருக்க மாட்டான்?

15

“நீங்க பாப்கார்ன் சாப்பிடலை.” திலோ கேட்க,

“நீ கையை இப்படிப் பிடிச்சிருந்தா, எப்படிச்
சாப்பிடுறது?” அரவிந்தன் சொல்ல, அதன்பிறகே
பிடித்திருந்த அவன் கையை விட்டாள்.
திலோத்தமா ஓரக்கண்ணில் அரவிந்தைப் பார்க்க…
அவன் அவளைப் பார்த்து புன்னகைத்தபடி புருவத்தை
உயர்த்த, படம் பார்ப்பது போலத் திரும்பிக் கொண்டாள்.

சாப்பிட்டதும் இந்த முறை அரவிந்தன் திலோத்தமாவின்
இடது கையோடு, தன் வலது கையை அழுத்தமாகக்
கோர்த்துக்கொள்ள… கூச்சம் தாங்காமல் திலோ நெளிய
ஆரம்பித்தாள். அவள் பக்கம் சரிந்து அமர்ந்தவன்,
“கையைத் தான பிடிச்சு இருக்கேன். இதுக்கே
இப்படியா…” என அவள் காதில் கிசுகிசுக்க…

“ஒழுங்கா நேரா உட்காருங்க. பாவனா இருக்கா.” என
அவள் சொன்னதும், நேராக உட்கார்ந்தான்.

பாப்கார்ன் சாப்பிட்டு முடித்ததும், “அப்பா நான் நடுவில
வரேன்.” எனப் பாவனா சொல்ல, திலோத்தமா
சட்டென்று அவன் கையில் இருந்து தன் கையை உருவிக்
கொண்டாள். ஆனால் அரவிந்தன் மகளைத் தூக்கி தன்
மடியில் வைத்தவன், அவளின் தோளை சுற்றி தன் வலது

16

கையைப் போட்டுக் கொள்ள, அவன் செய்கையில் திலோ
தான் திணறிப் போனாள்.

பாவனா படத்தில் முழ்கி விட… அரவிந்தனின்
இழுப்பிற்கு அவன் தோள் சாய்வதைத் தவிர, அவளுக்கு
வேறு வழி இருக்கவில்லை. ஆனால் அது அவளிற்கும்
சுகமாகத்தான் இருந்தது. தன் இடம் சேர்ந்து விட்ட
நிம்மதியை உணர்ந்தாள்.

“இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா….
இந்த நெருக்கும் இந்த நெருக்கம் இப்படியே
தொடறாதா…”

Advertisement