Advertisement

அத்தியாயம்…8…1

தன் வீட்டு  முன்  ஒரு  பெரிய  கார் வந்து நிற்கவும்,  யார்..?  என்று யோசனையுடன் பார்த்து கொண்டு இருந்த தாட்சாயிணியின் அருகில் சென்ற தனபாக்கியம். 

“பயப்படாதேம்மா நாங்க நல்ல விசயம் பேச தான் வந்தோம்.   வீட்டுக்கு உள்ளே போய் பேசலாமா..?”  என்று அந்த பெரியம்மா  கேட்கவும் தான் அவர்களுக்கு வழி விடாது அப்படியே நின்று விட்டதை தாட்சாயிணி உணர்ந்தார் ..

 பின் அவர்களுக்கு வழி விட்டு.. “வாங்க வாங்க.” என்று வர வேற்றாலும், தனபாக்கியத்தை தொடர்ந்து,  வீட்டுக்குள் வந்தவர்களான கிருஷ்ணமூர்த்தியையும்,  ஷ்யாம்,  இவர்களை யார் என்று தெரியாது  போனாலும், “ வாங்க.” என்று பொதுவாக வர  வேற்ற தாட்சாயிணியின் அழைப்பில்    தயக்கமும்  காணப்பட்டது.

 முன் எல்லாம் தாட்சாயிணி தன் கணவனை போல் தான் பார்த்த அனைவரையும் நம்பினார். அவருக்கு வாழ்க்கையில் கிடைத்த  மிக பெரிய இரு பாடமான  தன் பெரிய மகளான சசியின் வாழ்க்கையில் விளையாடிய  எதிர் வீட்டு  விவகாரம். 

அதன் பின்  தன் கணவரை நம்ப வைத்த அவரின் நட்பு செய்த துரோகம். இது  போன்ற விசயங்களை சந்தித்ததில் இருந்து, இப்போது எல்லாம் அனைத்துமே அவர் சந்தேகம் படும் படி தான் பார்க்க  வேண்டியதாயிற்று. அதோடு வீட்டில்  பெண்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த ஜாக்கிரதை உணர்வு  அவருக்கு தன்னால் வந்து விட்டது.

தாட்சாயிணியின் யோசனை படிந்த முகத்தை பார்த்த படியே தான் ஷ்யாம் வீட்டுக்குள் வந்தான். கிருஷ்ண மூர்த்தி . “ பயபடாதேம்மா..  எங்களால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது. என்னை உன் அப்பா போல் நினைச்சிக்கோ புரியுதாம்மா.” என்று அன்புடன் பேசிய அந்த பெரியவர் குரலுக்கு தாட்சாயிணியின் தலை தன்னால் சரி என்று ஆடியது.

“ வாம்மா வந்து உட்கார்ம்மா.” என்று கிருஷ்ணமூத்தி    ஒதுங்கி தன் முந்தியை  தோளை சுற்றி போட்டுக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்த தாட்சாயிணியை பார்த்து சொன்னார்.

“ பரவாயில்ல பெரியவரே.” என்று தாட்சாயிணி சொல்லவும். “ என்னம்மா இப்போ தான் நான் உனக்கு அப்பா மாதிரி என்று சொன்னேன். பெரியவர் என்று அழைத்து யாரோ மாதிரி ஒதுக்கி வைக்கிறியேம்மா.” என்ற அந்த குரலுக்கு தாட்சாயிணி.

“ அய்யோ அது எல்லாம்  இல்ல அப்பா.” என்று பதறி சொன்ன தாட்சாயிணி,  கிருஷ்ண மூர்த்தி சொன்னது போல் அவர் எதிரில் இருக்கும் இருக்கையிலும் அமர்ந்து கொண்டார்.

அப்போது ஒரு அறையில் இருந்து ஓடி வந்த சாரு.  அங்கு அமர்ந்து இருந்த ஷ்யாமை பார்த்ததும்..

 “ அங்கிள்  நீங்களா..?” என்று சந்தோஷமாக கேட்ட குழந்தையை தூக்கி மடியில் அமர்த்திக் கொண்ட ஷ்யாமை, இப்போது தாட்சாயிணி வியப்புடன் பார்த்தார்.

அவர் பார்வையில் ஷ்யாம். “  மகேந்திரா பைனான்ஸ் எங்களுடையது தான்.  இவள் அம்மாவோடு அங்கு வந்த போது என்னை பார்த்தாள். இவர் என் தாத்தா, இவங்க என் பாட்டி.” என்று முறையாக அவன் அறிமுகம் படுத்தினான்.

ஆனால் மற்றவர்களின் அறிமுகம் எல்லாம் தாட்சாயிணியின் காதில் விழுந்ததா என்று தெரியவில்லை. ஷ்யாம் சொன்ன மகேந்திரா பைனான்ஸ் அந்த வார்த்தையியே நின்று விட்டது.

 சக்தி.. “  இனி நாம பணம் கொடுக்க தேவையில்லை.   அவங்க  ரொம்ப நல்லவங்க தானே சொன்னா. இப்போ ஏன் வந்து இருக்கான்.” என்று ஒரு பக்கம் சந்தேக கண்ணோட்டத்தோடு அவர் மனது எடை போட்டாலும், இன்னொரு மனதோ .. 

கண்டிப்பாக தவறாக எல்லாம் இருக்காது.

தவறாக இருந்தால் வீட்டு பெரியவர்களை ஏன் அழைத்து  வர போகிறன் என்று நினைக்கும் போதே, கிருஷ்ணமூர்த்தி யாருக்கோ பேசியில் அழைப்பு விடுத்தார்.  இருவர் தட்டில் பூ பழங்கள் நிறைத்து கொண்டு  வந்து வைத்து விட்டு போகவும், அது எதற்க்கு என்று தெரியாத அளவுக்கு தாட்சாயிணி இல்லையே.

புரிந்த விசயம் அவருக்கு மகிழ்ச்சியை  கொடுத்த அதே வேளை, ஷ்யாம் மடியில் அமர்ந்து இருந்த சாருவை பார்த்து,  நடக்காத விசயத்துக்கு சந்தோஷப்பட்டு என்ன ஆக போகிறது. என்று நினைத்தவரின் மனது தன்னால் தளர்ந்து போனது.

“ உங்க இரண்டாம் பெண் சக்தியையும், உங்க பேத்தி சாருவையும், எங்க  வீட்டுக்கு முறையா அழைத்து போக ஆசைப்படுறோம்.” என்று தனபாக்கியம்  சொன்ன அந்த வார்த்தையை கேட்டு தாட்சாயிணியின் கண்களில்   இருந்து கண்ணீர் தன்னால் வழிந்தது.

கை எடுத்து கும்பிட்ட தாட்சாயிணி.. “ ரொம்ப ரொம்ப நன்றிம்மா.?” என்று சொன்னரின் கையை  எழுந்து வந்து பிடித்து கொண்ட தனபாக்கியது.

“ இதுல நன்றி எல்லாம் எங்கு இருந்து வந்தது தாட்சாயிணி.  இன்னும் கேட்டால் நாங்க தான் உனக்கு நன்றி சொல்லனும். இரண்டு தேவதைகளை எங்க வீட்டுக்கு அனுப்பி வைப்பதற்க்கு.” என்ற அவரின் பேச்சில்  தாட்சாயிணி மகிழ்ந்து  தான் போனார்.

“உங்களுக்கு குழந்தையை பற்றி.” என்று ஏதோ பேச ஆரம்பித்த தாட்சாயிணியை ஷ்யாம்.

“ வேண்டாம் அத்தை. இப்போ எதுவும் பேச வேண்டாம். “ இவள் ரொம்ப அறிவாளி .” என்று குழந்தையை காட்டி ஷ்யாம் சொல்லவும். தாட்சாயிணிக்கு இன்னும்  மகிழ்ச்சி கூடியது.

தெரிந்து வைத்து இருக்கிறார். குழந்தையை பற்றியும் தெரிந்து வைத்து இருக்கிறார் என்பதில் அவருக்கு அவ்வளவு நிம்மதி.

தனப்பாக்கியம் தான். “ சக்தி வீட்டில் இல்லைய்யா.?” என்று கேட்டார்.

அதற்க்கு தாட்சாயிணி பதில் அளிக்கும் முன் சாரு.” சக்திம்மா உள்ளே தான் இருக்காங்க. இருங்க நான் போய் அழச்சிட்டு வர்றேன்.” என்று பெரிய மனிஷியாக  தான் வந்த அறையை சுட்டி  காட்டி பேசிய சாருவின் பேச்சில், கிருஷ்ணமூர்த்தியும், தனபாக்கியமும்  அதிசயத்து பார்த்தனர்.

ஷ்யாமுக்கு தான் சாருவின் புத்திசாலி தனம் நன்கு தெரியுமே, அதனால் சாருவின் பேச்சு அவனுக்கு ஆச்சரியத்தை கொடுக்கவில்லை. சக்தி வீட்டில் தான் இருக்கிறாள் என்றது தான் அவனுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

இன்று  வேலை நாள் தானே… வேலைக்கு சென்று இருப்பாள் என்று தான் ஷ்யாம் நினைத்தான். அதனால் தான் வந்த உடன் சக்தியை அவன் கண்கள் தேடவில்லை. அதுவும் இல்லாது  இவ்வளவு பேச்சுக்கு வெளியில் வராது இருக்கிறாள்.

குறைந்த பட்சம் தன் மறுப்பை சொல்ல வேணும் வந்து இருப்பாளே என்று அவன் நினைக்கும் போதே சக்தி சாரு வந்த அறையில் இருந்து சாருவின் கை பிடித்து  அனைவரும் அமர்ந்து இருந்த  கூடத்துக்கு வந்தவள், அனைவரின் முகம்  பார்த்தும் பொதுவாக வணக்கம் என்று உரைத்தாள்.

அனைவரின் முகம் பார்த்ததில், நம் ஷ்யாமும் அடக்கம். அதுவும்  மற்றவர்களை பார்த்த பார்வை  தான் அவனையும் பார்த்து வைத்தாள். அது  ஷ்யாமுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்தது எனலாம்.

குறைந்த பட்சம் தன்னை கோபமாவாவது  பார்த்து இருக்கலாம் என்றும் நினைத்தான். ஏன் என்றால் , அவள் இருந்த அறையில் இருந்து வெளி வந்ததில் இருந்து அவன் பார்வை அவளிடம் மட்டுமே நிலைப்பெற்று இருந்தது.

இதோ இவ்வளவும் நினைத்துக் கொண்டு இருக்கும்  இந்த   நேரம் கூட என் பார்வை அவளிடம் மட்டும் தானே நிலைப் பெற்று   கொண்டு இருக்கிறது. 

இதோ சாருவின் கை பிடித்து நின்றுக் கொண்டு இருந்த கோலம் கூட மனதில் கவிதையாக படிக்கிறதே, ஆனால் இவள் என்று ஷ்யாம் நினைக்கும் போதே தனபாக்கியம் சக்தியிடம்.

“வாம்மா வந்து என் பக்கத்தில் உட்கார்.” என்று சொல்ல, 

“இதோ உட்கார்றேன் பாட்டி. ஆனால் அதுக்கும் முன்    தண்ணீர் கொடுக்கிறேன் குடிங்க.” என்று சொல்லி விட்டு சாருவிடம்.

“ பாட்டியிடம் போ.” என்று சொல்லவும், சாரு.” எந்த பாட்டியிடம் சக்திம்மா.? என்று கேட்டுக் கொண்டே தனபாக்கிம், தாட்சாயிணியை பார்த்தாள்.

தனபாக்கியம்  சாருவின்  முத்தான பேச்சில், “ என் ராசாத்தி   வாடியம்மா  உன் பெரிய  பாட்டி கிட்ட.” என்று தன்னை பெரிய பாட்டியாக  அந்த குட்டி தேவதைக்கு தன்னை அறிமுகம்  செய்து கொண்டவர், தூக்கி தன் மடியில் அமர வைத்து கொஞ்சி கொண்டு இருந்தார்.

அவர் கேட்கும் கேள்விக்கு எல்லாம் அவ்வளவு தெளிவாக  அக்குழந்தை பேசும் பேச்சில், அசந்து போய் இன்னும் இன்னும் அக்குழந்தையிடம் தனபாக்கியமும் கிருஷ்ணமூர்த்தியும் பேச்சு கொடுத்து கொண்டு இருந்தனர்.

அந்த சமயத்தில் முதலில் தண்ணீரை கொண்டு வந்து கொடுத்த சக்தி, பின் அனைவருக்கும் டீ போட்டு கொடுத்து விட்டு தனபாக்கியம் சொன்னது போல் அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.

இந்த செயல்கள் அனைத்துமே பேசாது ஒரு இயந்திரகதியில் தான் சக்தி செய்து முடித்தாள். இதையும் ஷ்யாம் கவனித்தான் தான்.

தனபாக்கியம் ஒரு  மிடறு டீ அருந்திய பின். “ நல்லா இருக்கும்மா.” என்று பாராட்டியவர்.

பின். “ இன்னைக்கு லீவாம்மா ..?” என்ற கேள்விக்கு.

“ இல்ல பாட்டிம்மா. சாருவை ஆஸ்பிட்டலுக்கு  கூட்டிட்டு போற வேலை இருந்த்தால்,  லீவ் போட்டு விட்டேன்.” என்ற சக்தியின் பதிலில் ஷ்யாம்.

“ குழந்தையின் உடம்புக்கு என்ன.?” என்று கேட்டுக் கொண்டே எழுந்து குழந்தையை தொட்டு பார்த்து பின் தான் அமர்ந்து இருந்த இடத்தில் மீண்டும் அமர்ந்தவன்.

“ உடம்பில் சூடு  ஒன்றும் இல்லையே..?” என்று கேட்ட ஷ்யாமின் பேச்சில், உண்மையான அக்கறையையும், பாசத்தையும் பார்த்தாள் சக்தி.

“  இல்ல அவள் ரொம்ப நல்லாவே இருக்கா. அதுக்கு தான் கூட்டிட்டு போனேன்.” என்று சொன்னவளின் பேச்சில் அவ்வளவு மகிழ்ச்சி அவ்வளவு குதுகலம் காணப்பட்டது.

ஆஸ்பிட்டலுக்கு போயிட்டு வந்தது மகிழ்ச்சியா. இதே கல்யாணம் ஆன இளம் பெண் ஆஸ்பிட்டல் போன பின் அவள் மகிழ்ந்தால், அதில் ஒரு காரணம் இருக்கு. குழந்தைக்கு என்ன காரணம் இருக்க போகிறது என்று ஷ்யாம் மனதில்  நினைத்ததை,  கிருஷ்ணமூர்த்தி வாய் திறந்தே கேட்டு விட்டார்.

அதற்க்கு தாட்சாயிணி பெருமையாக. “நம்ம சாரு ப்ராடிஜி    என்று டாக்டர் சொன்னார்.” என்று தாட்சாயிணி சந்தோஷமாக சொன்னதில் இருந்து தனபாக்கியத்திற்க்கு ஏதோ நல்ல விசயம் தான் என்று தெரிந்தது. ஆனால் என்ன என்று தெரியாது முழித்தார்.

அதற்க்கு ஷ்யாம். “ நம்ம குட்டி குழந்தை  நம்ம யோசிப்பதை விட அதிகம் யோசிப்பா.  இந்த வயதுக்கு அவள் புரிந்து கொள்ளும் தன்மை. பேசுவது என்று எல்லாம் அதிகமா இருக்கும் தனம்மா. அது போல இருக்கிறவங்களை ப்ராடிஜி என்று சொல்வாங்க.” என்று ஷ்யாம் கொடுத்த விளக்கத்தில். 

“  அப்படியா என் ராசாத்தி அவ்வளவு புத்திசாலியா…?  “ என்று தன் மடி மீது இருக்கும் குழந்தையை தனக்கு தெரிந்த விதமாக சொல்லி மகிழ்ந்து போனவர்.

 மேலும் “அது தான் நான் வந்த போது என்னம்மா இந்த குழந்தை  முத்தா பேசுதுன்னு நினைத்தேன். பார்த்தியாங்க நம்ம கொள்ளு பேத்தியை.” என்று தன் கணவரிடம்  சாருவை காட்டி பெருமை பேசியதில், தாட்சாயிணியின் மனது தன் பேத்தி மற்றவர்களை விட கிரகிக்கும் தன்மை அதிகம் இருக்கிறது என்று சொன்னதை விட,  சாருவை தன் கொள்ளு பேத்தி என்று அவர்கள்  ஏற்றுக் கொண்ட இந்த பேச்சில் தான் அவர் அதிகம் மகிழ்ந்து போனார்.

இந்த  பேச்சு சக்திக்கும்  கொஞ்சம் மகிழ்ச்சியை கொடுத்தது தான்.  ஒரு காதல் தோல்வியிலேயே வாழ்க்கை முடிந்து விட்டது என்று நினைக்கும் அளவுக்கு சக்தி பத்தாம்பசலி கிடையாது

அதுவும் தன் காதலுக்கு அவன் தகுதி இல்லாதவன்  என்று ஆன போது, அதை அவள் உண்மையான காதலாகவே  கருத வில்லை என்பது தான் உண்மை.

அதனால் அவனை விடுத்து இன்னொருவனை மணப்பதா.?  என்ற அந்த யோசனை எல்லாம் அவளுக்கு கிடையாது.

அவள் யோசனை அனைத்துமே சாரு. கண்டிப்பாக ஒரு குழந்தையோடு தன்னை  ஏற்று கொள்ள மாட்டார்கள். அது அவளுக்கு நிச்சயமே. அதனால் தான் இந்த மூன்று வருடமாக அதை பற்றிய யோசனையே அவளுக்கு தோன்றியது கிடையாது.

குழந்தை. தன் அம்மா. தன் வேலை.என்று தெளிந்த நீரோடை போல  இது தான் தன் வாழ்க்கை என்று சென்று கொண்டு இருந்த சக்தியை, இப்போது ஷ்யாம்  குடும்பத்தின்  இந்த வருகை  அவளை வேறு வகையிலும் வாழ்க்கை அமைந்தால் நன்றாக தான் இருக்கும் என்று  யோசிக்க வைத்தது.

இதோ இது வரை  சாருவின் வாழ்வில் நான்.  தன் அம்மா இது மட்டுமே குடும்ப உறுப்பினர் எனும் போது,  சாரு   கேட்டு இருக்கிறாள். 

சாதாரண  குழந்தைக்கே வித்தியாசம் தெரியும்  போது,  நம் சாருக்கு சொல்லவும் வேண்டுமோ, என் அப்பா யார்.? அவர் ஏன் நம்மோடு இல்லை.” எனும் போது சக்தி என்ன சொல்லுவாள். சொல்ல வேண்டும் . உனக்கு அம்மா பாட்டி மட்டும் தான் என்று  சொல்ல வேண்டும் என்று நினைத்தவள்.

இப்போது பேசி பார்க்கலாம் என்று நினைத்து  ஷ்யாமின் பக்கம் சக்தி பார்வையை திருப்பினாள். அவள் பார்க்கும் போது ஷ்யாமும் அவளையே  பார்த்துக் கொண்டு இருப்பதும். தான் பார்த்தது  தெரிந்தும் தன் பார்வையை  திருப்பாது பார்த்தது. அதுவும் அவன் பார்வையில்  தெரிந்த அந்த கண்ணியத்தில் சக்தியும் அவனையே பார்க்க.

இருவரின் பார்வையும் ஒரே நேர் கோட்டில் ஒரு நிமிடம்  நீடித்தது. பின் ஷ்யாம் தான். “ என் கிட்ட பேசனுமா சக்தி…? ” என்று கேட்டதற்க்கு, அவள் “ஆம்.”  என்று சொன்னவள் அவனிடம் பேச  முன் பக்கம் இருந்த தோட்டத்திற்க்கு சக்தி  அழைத்து  சென்றாள்.. 

பார்க்கலாம்  இந்த பேச்சு வார்த்தை திருமணத்தில் முடியுமா என்று.

Advertisement