Advertisement

*******************************************************************

தனுஜாவை கட்டி வை என்று சொன்ன வட்டிக்காரனை கவனிக்கும் விதத்தில் கவனித்த ஷ்யாம்…

 பின் சூர்யாவின் தங்கைக்கு அமைந்த நல்ல வரனுக்கே இவன் செலவில் திருமணம்  முடித்து விட்டு, அடுத்து வந்த முகூர்த்ததில் சூர்யாவுக்கும் தனுஜாவும் திருமணத்தை  முடித்து விட்டான்….

அந்த திருமணத்திற்க்கு கெளசல்யா வந்தாற் தான்.. ஆனால் ஷ்யாமுக்கு இப்போது எல்லாம் கெளசல்யாவை நினைத்தால் கோபம் எல்லாம் வருவது கிடையாது..

அதற்க்கு என்று  பேசுவது எல்லாம் கிடையாது.. தனுஜாவையும், ஷைலஜாவையும் தன் தங்கையாக ஏற்ற பின் கெளசல்யாவை பார்க்க வேண்டிய சூழ்நிலை வரும் என்பது அவன் அறிந்த ஒன்று தான்..

முதலில் இருந்தால் இதை எப்படி ஹன்டில் செய்து இருப்பானோ என்னவோ.. ஆனால் இப்பொது அவன் தனிமையை போக்க வீட்டில் இரு தேவதைகள் இருக்கும் போது…தனிமை என்பது அவனுக்கு ஏது..?

ஒரு சில சமயம்  அவனுக்கு தனிமை கிடைத்தாலுமே.. அந்த தனிமையிலும், தன்  இரு தேவதைகளை நினைத்தாளே… அந்த தனிமை கூட அவனுக்கு இனிமை கூட்டுவதாக அமைந்து விடும்..

அதனால் முன் போல் அவனுக்கு கோபம் எல்லாம் வருவது கிடையாது.. எப்போதும் சிரித்து முகத்துடன்  தான் காணப்படுகிறான்..

சூர்யா கூட…  “ கடன் காரன் கிட்ட கூட இப்படியே.. சிரித்த முகத்தோடு போய் காசு கேளு..

அவன் கொடுப்பான்.. உனக்கு புன்னகை மன்னன் எனும் பட்டத்தை ..” என்று  ஷ்யாமை சூர்யா கலாய்க்கும் வகையாக தான் அவன் முகத்தில் எப்போதும் ஒரு சின்ன சிரிப்போடு சுற்றி கொண்டு இருக்கிறான்..

தனம்மாவுக்கு, அவ்வளவு மகிழ்ச்சி.. இதை பார்க்க தானே அவர் இத்தனை ஆண்டுகள் காத்துக் கொண்டு இருந்தது…

சக்தியும் சாருவும் தன் வீட்டை வண்ணமயமாக்க வந்தவர்கள்.. அதில் அவருக்கு எந்த வித சந்தேகமும் கிடையாது…. பூரித்து போனார்.. அதுவும்  திருமணம் முடிந்த  அடுத்த மாதமே தயங்கி…. தயங்கி…. ஷ்யாம் தன்னிடம் வந்து ..

“ தனம்மா தனம்மா…” என்று சொல்லி தன் பேச்சை இழுத்து நிறுத்தியவனை அவனின் தனம்மா ஆச்சரியத்தோடு பார்த்தார்..

இவன் இது போல் எல்லாம் குழைய மாட்டானே…  என்று யோசித்து கொண்டே..” என்ன ஷ்யாம் ..? என்று கேட்டார்…

“ சக்திக்கு உடம்புக்கு  என்னவோ  பண்ணுது..” என்று அவன் சொன்னதுமே..

“ ஏய் என்னடா சொல்ற..? உடம்புக்கு முடியலேன்னா ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போவதை விட்டு விட்டு என் கிட்ட வந்து வெட்டி பேச்சு பேசிட்டு இருக்க…?” என்று தன் பேரனை கடிந்து கொண்டார்..

“ அதுக்கு தான் தனாம்மா….  நீங்களும் வந்தா அழச்சிட்டு  போய் பார்த்து விடலாம்..

. அப்படியே வரும் போது ஸ்வீட் கடையில் ஸ்வீட் வாங்கிட்டு வந்து விடலாம்..” என்று ஷ்யாம் இப்படி  சொல்லவும் தான் அந்த மூதாட்டிக்கு புரியவே புரிந்தது..

பாட்டி என்பதே வரம் எனும் போது.. கொள்ளுப்பாட்டி… வரமே வரம் தந்தது போல் அவ்வளவு மகிழ்ந்து…

 தன் வயதையும் பொருட் படுத்தாது.. அன்றே மருத்துவமனைக்கு அழைத்து சென்றதோடு.. இதோ சக்தியை தரையில் விடாது.. அப்படி பார்த்து கொள்கிறார்..

தாட்சாயிணி கூட..” உங்களுக்கு வர வர வயது குறையுதா.. என்ன… எல்லாத்துக்கும் வேலை ஆள் இருக்காங்க.. எடுத்து போட்டு சாப்பிடுவது மட்டும் தான் அவள்  வேலை.. அதை அவளே பார்த்துப்பா..

இப்படி ஒரு மணி நேரத்துக்கு நீங்களே எல்லாத்தையும் அவள் கையில் எடுத்து கொடுக்கனுமா…?  அப்படி அவளை உட்கார வைத்து தான் செய்யனும் என்றால் நான் என் வீட்டுக்கு  கொண்டு போய் பார்த்து கொள்கிறேன்..” என்று சொன்னதற்க்கு…..

 தனம்மா … “  உனக்கு உன் மகளுக்கு செய்யனும் என்று ஆசை இருந்தால்,   என் வீட்டுக்கு வா…  எல்லாம் செய்து போடு உன்னை  யார்..? வேண்டாம் என்று சொல்வது.. “ என்று அவரின் வாயை அடைத்து விட்டு…

தாட்சாயிணி.. “ அவளுக்கு வாந்தி நீற்கும் வரை சாருவாவது நான் வைத்து கொள்கிறேனே..” என்று கூட கேட்டு பார்த்து விட்டார்..

அவள் இல்லேன்னா வீடு வீடா இருக்காது… உன் மருமகன் வீட்டுக்கு வரும் போதே…

“ சின்ன பேபி என்று தான் வருவான்..” என்று சொல்லி விட்டார்…

தன் கொள்ளு பேரனோ கொள்ளு பேத்தியின் வரவை ஆவளோடு எதிர் பார்த்து கொண்டு இருக்கிறார்..

இதோ இப்போது கல்யாணத்தில் கூட.. அண்ணியாக சக்தி அங்கும் இங்கும் சென்று வேலை பார்க்க, தனம்மாவோ அவள் பின் மணிக்கு ஒரு தரமாவது பழ சாரை கொண்டு வந்து கொடுத்து விட்டு..

“ இதை குடித்து விட்டு செய்..” என்ற அவரின் கட்டளையை மறுக்க முடியாது சக்தியும் குடித்து விட்டு தான் வேலை பார்ப்பாள்..

இவர்களின் இந்த மகிழ்ச்சியை அந்த கல்யாணத்தில் மூன்றாவது மனுஷியாக சொக்கலிங்கம்.. சரஸ்வதி… கெளசல்யா… பார்த்து கொண்டு இருக்க.. தனுஜாவை கன்னிகா தானம் செய்ய சக்தி ஷ்யாம் பாத பூஜை செய்ய மேடை ஏறினார்கள்..

இது போல் சமயத்தில் பாத பூஜை செய்ய கூடாது என்று ஒரு  சிலர்  சொன்னார்கள்..

தனுஜாவோ…” எனக்கு அண்ணன் அண்ணி தான் பாதபூஜை செய்யனும்.. அப்படி அவர்கள் செய்ய கூடாது என்றால் குழந்தை பிறந்த பின் கல்யாணத்தை வைத்து கொள்ளலாம்..” என்று தனுஜா திட்ட வட்டமாக சொன்னதில் , சூர்யா பாவமாக ஷ்யாமை பார்த்த பார்வையில்..

ஷ்யாம்..” எனக்கு அதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது.. மனது தான் எல்லாம்..” என்று சொன்னதோடு இதோ திருமணத்தை நல்ல முறையில் ஒரு நல்ல அண்ணனாக நடத்தி முடித்து விட்டான்..

ஷ்யாம் நல்ல பேரனாக.. நல்ல கணவனாக…  நல்ல தந்தையாக,.. நல்ல அண்ணனாக இருக்கிறான்..

ஆனால் நல்ல மகனாக.. வாழ்க்கை என்பது கண்ணாடி போல் தான்..

 நாம் என்ன செய்கிறோமோ அது நமக்கு திருப்பி கொடுக்கும்.. அது நிச்சயம்.. இப்போது கெளசல்யா.. சொக்கலிங்க்கம்.. சரஸ்வதி.. இந்த நிலையில் தான் இருக்கிறார்கள்..

தவறுகள் மன்னிக்க பட  வேண்டியது தான்… அதில் எந்த வித சந்தேகமும் கிடையாது..

ஆனால் ஒரு சில தவறுகள்… அதுவும் ஒரு சிலரோட தவறுகள் மன்னிக்கவே முடியாதது.. ஷ்யாமால் எந்த காரணத்துக்காகவும் அவனின் அம்மாவையோ.. அம்மாவின் அப்பா அம்மாவையோ மன்னிக்க முடியாது போயிற்று..

கிருஷ்ணமூத்தியும் தனம்மாவும்  அவனுக்கு எவ்வளவோ எடுத்து சொல்லி ஆயிற்று..  ஏன் சக்தியிடம் சொல்லி  கூட..

“ நீயாவது உன் புருஷன் கிட்ட எடுத்து சொல்ல கூடாதா..?” என்று கேட்டதற்கு..

சக்தி இன்றைய தலைமுறையின் பக்குவத்தில்..

“ அவங்க செய்தது எனக்கே சரியா படாத போது…  நான் எப்படி  அவர் கிட்ட இதை பத்தி சொல்வேன் பாட்டி..

ஒரு சில விசயத்தை அப்படியே அது பாட்டுக்கு விடுவது தான் நல்லது பாட்டி.. அதை பத்தி அவர்  கிட்ட திரும்ப திரும்ப பேசுவது அவர் மனதை இன்னும் ரணம் பண்ணுதுவது போல் தான் பாட்டி .. இனி இதை அப்படியே விட்டு விடுங்க பாட்டி..

அவர் மனது ஒத்துக் கொண்டால்.. அவரே அவர்களோடு சேருவார்.. இல்லேன்னா விட்டு விடுங்க.. அவர் கஷ்டப்பட்டது போதும்.. இனி பட கூடாது.. நான் விடவும் மாட்டேன்..” என்று சக்தி சொல்லி விட்டாள்..

அவள் காதல் கை கூடாது… போன போது கூட அவள் வேதனை படவில்லை.. தான் தவறான இடத்தில் மனதை விட்டு விட்டோம் என்று தான் தன்னை  தேற்றி கொண்டாள்..

திருமண வாழ்க்கை மீது அவளுக்கு கசப்பு எல்லாம் கிடையாது.. தன் தந்தை தாய் வாழ்ந்த  வாழ்க்கையை பார்த்தவள் ஆயிற்றே அவள்..

தன் காதலும், தன் அக்கா காதலும், தவறாக போனதால்,  காதல் மீதும் அவளுக்கு வெறுப்பு கிடையாது.. தாங்கள் காதலித்த நபர் தவறானவர்கள்.. இதை தான் அவள் நினைத்தாள்..

திருமணம் செய்த பின் கணவனிடம் தான் தவறிய காதலை காட்டலாம் என்று தான் அவள் நினைத்து கொண்டு இருந்தாள்..

ஆனால் குழந்தையை காரணம் காட்டி வந்த நபர்கள் பேசிய பேச்சில்..  சக்தி திருமணத்தை வெறுத்தால் என்பதை விட,,

திருமணம் செய்து கொண்டு எங்கு சாருவை தன்னிடம் இருந்து பிரித்து விடுவார்களோ என்ற பயம் தான் போக போக அவளுக்கு வர ஆரம்பித்து விட்டது…

ஷ்யாம் தன்னை மணக்க கேட்ட போது கூட.. அவளுக்கு அவ்வளவு பெரிய நம்பிக்கை எல்லாம் கிடையாது..

பின் அவன் ஒத்து கொண்டு… இதோ  அவன் தன்  மீதும்., சாருவின்  மீதும் காட்டும் அந்த பாசம்..அதற்க்கு தான் என்ன செய்ய முடியும்..

தங்களின் முதல்  இரவுக்கு பின் நிறைய இரவுகள் வந்தன.. ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு வகையாக அவர்களுக்கு இனிமை  சேர்த்தது தான். இல்லை என்று சொல்ல முடியாது..

ஆனால் அதையும் தான்டி ஒரு சில இரவுகள் முதல் இரவு போல் அமைந்து விடும்.. அப்போது எல்லாம் அவன் புரிதலில், அவளுக்கு அவ்வளவு ஆச்சரியத்தை  அவன் ஏற்படுத்துவான்..

தான் இவன் போல் இருக்க முடியுமா..? என்று யோசித்தும் பார்த்து இருக்கிறாள்.. தன்னை சமாதானம் செய்து,…

“ ஒவ்வொரு இரவும் நமக்கு ஒவ்வொரு படிப்பினை கொடுக்கிறது பேபி… தாம்பத்தியத்தில் மட்டும் கத்து கொள்வது வாழ்க்கை கிடையாது…

இது போல் இடையில் நாம் புரிதலோடு வாழ்வது தான் வாழ்க்கை பேபி.. இன்றைய இரவு போனால் என்ன..? நாளைய இரவில் இதற்க்கு ஈடுக்கட்டி விடலாம்..” என்று தன்னிடம் பேசும் போது தான்..

“ இவனை நான் அடைய என்ன தவம்  செய்தேன்..” என்று நினைக்க தோன்றும்…

அதனால் கூடிய மட்டும் அவனுக்கு அனுசரித்து சென்று.. அவன் மனது போல் தான் அவள் நடந்து கொள்வாள்….

இதோ அவன் தங்கையின் திருமணம் அடுத்து… அடுத்து ஷைலஜாவோடான இணக்கமான ;பேச்சு.. ஷைலஜா தன் தந்தை பார்த்திபன் பைனான்ஸை பார்த்து கொள்கிறாள்..

ஷ்யாம் கெளசல்யாவோடு பேசவில்லை என்றாலும், அவர்களுக்கான உரவை அனைவருக்கும் தெரியும் படி செய்து விட்டான்..

கெளசல்யா சிரித்தால் சிரித்து விட்டு..  அதே போல் சொக்கலிங்கம். சரஸ்வதி.. “ பேசினால் பேசி.. இப்படி அவனுக்கு அவள் காதல் பரிசாக இருக்கிறாள்..

            முற்றும்..

Advertisement