Advertisement

அதற்க்குள் சாரு.. “ அப்பா.. என்னப்பா நம்ம ரூமை இவ்வளவு அழகா யார் டெக்ரேஷன் செய்தது,..? எதுக்கு…? என்று கேட்டவள் பின் அவளே யோசித்து..

“ ஆ அப்பா இன்னைக்கு தான் நம்ம வீட்டுக்கு தங்க வந்து இருக்கார்.. அவரை வெல்கம் பண்ண தான் இந்த அலங்காராமா…?” என்று அறிவார்ந்த அந்த குழந்தை  தன் பெற்றோருக்கு கஷ்டத்தை கொடுக்காது அவளே விடையும் கொடுத்து விட..

இருவரும் அதையே பிடித்துக் கொண்டு…? ஆமாம்.. ஆமாம்..” என்று சொன்னார்கள்..

பின் சக்தி குழந்தை பசிக்கு அங்கு இருந்த பாலை ஆற்றி கொடுத்தவள் ஒரு பழத்தையும் கட் செய்து கொடுத்தாள்..

சாரு அதை சாப்பிட்ட வாறே…

“ பாப்பாக்கு பசிக்கும் என்று நீங்க இங்கு வைத்து இருந்திங்களா …? என்று அவளே அதற்க்கும் விடை கொடுத்து விட..

இவர்கள் இருவருக்கும்.. அங்கு.. ஆமாம்..” போடும்  வேலை மட்டும் தான் இருந்தன..

பின் சிறிது நேரம் புதியதாக கிடைத்த தந்தையிடம் பேசிக் கொண்டு இருந்தவள் சிறிது நேரம் கழித்து வயிறு  நிறைந்ததில் உறங்கியும்  விட்டாள்…

உறங்கிய  மகளை ஆசையோடு தடவி விட்ட வாறே… சக்தியிடம் ..

“ தூக்கம் வந்தா தூங்கு சக்தி.. எதற்க்கு என் முகத்தையே பார்த்துட்டு இருக்கே.. நான் அழகு  தான் அது எனக்கு தெரியும் தான்… ஒரு சில பெண்கள் என்ன பல பெண்கள் என்னை சைட்டும் அடிப்பாங்க தான்… அதை எல்லாம் நான் கண்டுக்காம போய்  இருக்கேன் தான்..

ஆனால் நீ இப்படி வைத்த கண் விடாது பார்ப்பது… என்னவோ போல் இருக்கு பேபி… அதுவும் புதுசா வெட்கம் வெட்கமா வேற வருது..” என்று தன் மனைவி ஏதோ ஒரு வகையில் மூட் அவுட்டாக இருக்கிறாள் என்று யூகித்தவனாக அவளின் மனதை நார்மலுக்கு கொண்டு வர வேண்டி  ஷ்யாம் இப்படி பேசினான்…

ஆனால் சக்தி ஷ்யாம் இவ்வளவு பேசியும் அவள் தன் பார்வையை மாற்றிக் கொள்ளவும் இல்லை..

அதே போல் அவளும் சகஜ நிலைக்கு திரும்பவும் இல்லை என்பது அவள் பார்த்த பார்வையே அவனுக்கு சொன்னது..

இப்போது  ஷ்யாம் “ என்ன சக்தி என்ன பலமா யோசிக்குற..கொஞ்ச நேரம் முன் கூட நல்லா தானே இருந்தே…” என்று  சொல்லிக் கொண்டே குழந்தை கட்டிலில் நடுவில் படுத்துக் கொண்டு இருந்ததால், எழுந்து  சக்தி  படுத்து கொண்டு இருந்த அந்த பக்கம் வந்து  அமர்ந்தவன், அவள்  தோளை பற்றி கொண்டு கேட்டான்…

சக்தி …” இதோ இப்போ என்னை தொடுவதற்க்கு   எழுந்து வந்து தொடுறிங்களே… இது தான் என் பிரச்சனை…” என்று சொன்னவளின் பேச்சு ஷ்யாமுக்கு புரியவில்லை..

“ என்ன  சொல்ற சக்தி..? நான் அங்கு இருந்த உன் மீது கை போட்டால், குழந்தையின் மீது என் கை  படும்… அதுவும் இல்லாது என் கை வெயிட் எல்லாம் குழந்தை தாங்க மாட்டாள்.. இப்போ தான் தூங்க ஆரம்பித்து இருக்கா.. அதனால் எழுந்தும் விடலாம்.. அதற்க்காக தான்..” என்று ஷ்யாம் விளக்கம் கொடுத்தான்..

அதற்க்கு சக்தி… “ அது தான் என் மனசுக்கு கஷ்டமா இருக்கு ஷ்யாம்.. இன்று உங்களுக்கு என்ன நாள்…?”  என்று  கேட்டவளை ஷ்யாம் திருத்தி..

“ நமக்கு..” என்று சொன்னவனை நிமிர்ந்த பார்த்தவள்..

“ ம் நமக்கு… நமக்கு என்ன நாள்…” என்று கேட்க..

“ அடிப்பாவீ.. நமக்குள்ள  இன்னும் முழுசா நடக்கல தான்..  ஆனால் கொஞ்ச நேரம் முன் அப்படி இப்படி நடந்து தானேடி… நம்ம பேபி முழிக்காம இருந்து இருந்தா… இன்னைக்கு நமக்கு என்ன நாள் என்று உன்னை கேட்கும் நிலைக்கு விட்டு இருக்க மாட்டேன்.” என்ற அவனின் பேச்சையே… தன் தொடர் பேச்சுக்கு அச்சாரம் இட்டவளாக..

“ அது தான் சொல்றேன் ஷ்யாம்.. இந்த நாளில் சாரு மட்டும் உங்களுக்கு நடுவில் இல்லாது இருந்து இருந்தால், இன்றான உங்கள் நாள் நிறைவு  பெற்று இருந்து இருக்கும்…” என்று சக்தி பேசும் பேச்சு ஷ்யாமுக்கு இப்போது புரிவது போல் இருந்தன..

“ இப்போ நீ என்ன சொல்ல வர்ற…?”

இது வரை கொஞ்சி பேசுவது போல் பேபி… என்று அழைத்து  பேசியவனின் குரல் இப்போது   பேசி தான் பாறேன் என்பது போல் தான் அவன் குரல் இருந்தன..

அந்த குரலுக்கு அடுத்து பேசலாமா..? என்று யோசித்தாலும் சக்தி பேசி விட்டாள்..

“ என்னை கல்யாணம் செய்யாது இருந்து இருந்தால், நீங்க இன்னைக்கு சந்தோஷமா இருந்து இருப்பிங்க…” என்று மனதில் நினைத்ததை  சொல்லி விட்டாள்..

“ அது எப்படி  நான் உன்னை கல்யாணம் செய்தால் நல்லா இருக்க மாட்டேன் என்று சொல்ற..?” என்று இப்போதும் அவன் குரல் மாறாது தான் இருந்தன..

“ கொஞ்சம்  நேரம் முன் உங்கள் சந்தோஷம் எதனால் தடைப்பட்ட்டது…? என்று யோசித்தால் உங்களுக்கே புரியும்..”  என்று சொல்பவளை ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்தான்..

பின் என்ன நினைத்தானோ.. “ என் சந்தோஷம் என்று சொல்றியே… அப்போ  அந்த சமயம் உனக்கு  சந்தோஷமா இல்லையா…?” என்று கேட்டவனை இப்போது தலை நிமிர்ந்து பார்க்க கூட  கூச்சம் தடை செய்தது..

என்ன எல்லாம் பேசுறான் பாரு என்பது போல் தான் மனதில் அவனை வைய்தாள்…

அவளின் அந்த வெட்கம் கலந்த கூச்சத்தை பார்க்கும் போது ஷ்யாமுக்கு % இப்போது இந்த பேச்சு தேவை தானா…?

அறையை சுற்றி பார்த்தவன்.. எவ்வளவு செலவு செய்து ஏற்பாடு செய்ததை நாம் ஏன் வீண் ஆக்குவானேன்.. என்று கூட  ஒரு நிமிடம் நினைத்தான்..

ஆனால் இன்றைய சுகத்தை மட்டும் பார்க்க கூடாது.. இனி அவள் வாயில் இருந்து இது போல் ஆன பேச்சுக்கள் வரவே கூடாது என்று முடிவு செய்தவனாக, மனதில் எழுந்த ஆசைகளை  அடக்கி விட்டு, தன் பேச்சை தொடர்ந்தான்…

தன் முகத்தையே பார்த்து கொண்டு இருந்த ஷ்யாமை ஒரு நிமிடம் நிமிர்ந்து பார்த்து விட்டு மீண்டும் தலை குனிந்து கொண்ட சக்தி…

“ எனக்கும் சந்தோஷமா தான் இருந்தது..” என்று  சொல்வதை திக்கி தணறி எப்படியோ சொல்லி விட்டாள்..

“ இப்போ  நீ நினைக்கிறியா.. நாம ஏன் இவளை வளர்க்கும் பொறுப்பை ஏற்றோம் என்று…” என்றவனின் பேச்சில், இவ்வளவு நேரமும் இருந்த  வெட்கம்.. கூச்சம் அனைத்தையும் கைய் விட்டவளாக…

“ என்னை பத்தி என்ன நினைக்கிறிங்க…?”

படுக்கையை காட்டி.. “ இதுக்காக நான் குழந்தையை விட்டு விடுவேன் என்று நினச்சிங்களா…? என்று ஒரு வித ஆவேசத்துடன் கேட்டாள்…

“ அப்போ நீ மட்டும் என்னை அப்படி கேவலமா நினைக்கலாமா…?” என்று கேட்கவும் தான் அவளுக்கு தன் தவறு புரிந்தது இருந்தும்.. என்று யோசித்தவள்..

“ இது இன்னையோட முடியுற விசயம் கிடையாது ஷ்யாம்.. அதாவது நான் என்ன  சொல்ல வர்றேன் என்று உங்களுக்கு புரியுதா…?

கொஞ்சம் நேரம் முன் உங்கள்  உடல் மொழி எனக்கு உணர்த்திச்சி ஷ்யாம்.. நீங்க எவ்வளவு டெம்பா இருந்திங்க என்று..

பின் சாரு எழுந்த பின் அதே உடல் மொழியும் எனக்கு புரிந்தது… அதோடு உங்கள் முகத்தில் எவ்வளவு பதட்டம்.. சாரு எழுந்து விட போறா.. நம்மை அந்த கோலத்தில் பார்த்து விட போகிறாள் என்று…

இதே போல் ஒரு நாள் இரண்டு நாள் என்றால், பரவாயில்லை… இது அடிக்கடி நடந்தா… நான் உங்களுக்காக பார்ப்பதா…? குழந்தைக்காக பார்ப்பதா..?

இப்போ யோசிக்கிறேன்… ஷ்யாம்  நீங்கள் கேட்டவுடன் நான் கல்யாணத்திற்க்கு ஒத்து இருந்து இருக்க கூடாதோ என்று… என்ன செய்ய எனக்கும் உங்களை பிடித்து விட்டதே… குழந்தைக்காக குழந்தைக்காக என்று யோசித்தாலும், நானும்  சதையும் ரத்தமும் இருக்கும் பெண் தான்  என்று நீங்க என்னை பார்க்கும் அந்த பார்வையில் தான் நான் உணர்ந்தேன் ஷ்யாம்..”

இவ்வளவு நேரமும்  அவள் பேசிய பேச்சில் கோபத்துடன் இருந்தவன் சக்தி கடைசியாக பேசிய பேச்சில்  அவளின் தோள் மீது மட்டும் கை போட்டுக் கொண்டு இருந்தவன்.. அவளை இழுத்து தன் மேல் போட்டு கொண்டவனாக..

“ பேபி நான் உன் கிட்ட ஒன்னே ஒன்னு கேட்கிறேன்… இப்போ சாருவை விடு.. நமக்கு கல்யாணம் ஆகுது.. கல்யாணம் அடுத்து குழந்தை… பிறக்கும்..? பிறக்கும் தானே..?” என்று கேட்டவனுக்கு சக்தி உடனே,,

“ பிறக்கும் .. பிறக்கும் என்பது போல்…” தலையாட்டினாள்..

“ ம் குழந்தை பிறந்த பின் அடுத்து நாம் அப்படி இருக்க மாட்டோமா…? இல்ல குழந்தையை ஏன் பெத்து கொண்டோம் என்று தான் நினைப்போமா…? ” என்ற கேள்விக்கு…

“  சீ சீ எப்படி அப்படி நினைப்போம் ..? என்று  சொன்னவளின் தலையை கோதிய ஷ்யாம்..

“அதே தான் நானும்  சொல்றேன்… சாரு நமக்கு  பிறந்த முதல் குழந்தை…. நீ சொன்னது போல்  நான் குழந்தை முழித்து விட்டதும்.. கொஞ்சம் பதட்டம் ஆகி விட்டேன் தான்…

அதுவும் நாம் விளக்கு கூட அணைக்காது… இனி அது போல் நடக்காது நாம  பார்த்து நடந்துப்போம்… அவ்வளவு தான்.. நமக்கும் இது புதுசு தானே..

போக.. போக தான் எப்படி இப்படி என்று யோசித்து…  குழந்தையை வைத்து கொண்டே நாம  எப்படி சந்தோஷமா இருப்பது என்று யோசிப்போம் அவ்வளவு தான்..

 அதை விட்டு விட்டு இனி இது போல் எல்லாம் பேச கூடாது சொல்லி விட்டேன்..” என்றவனை இழுத்து அணைத்து கொள்வது அவள் முறை ஆனது…

குழந்தை எனக்கு பரிசு தான் சக்தி…  என்னை உன்னை பார்க்க வைத்ததே இந்த  குழந்தை தான்… காதலுக்கு கிடைத்த பரிசு..” என்று சொன்னான்..

Advertisement