Advertisement

அத்தியாயம்….20

திருமணம் இனிதாக முடிந்தால், அடுத்து என்ன…? அதே தான்..

தாட்சாயிணி  வீட்டில் தான் முறைப்படி அன்றைய சடங்கு நடக்க இருந்தன.. அதனால் தனம்மா, கிருஷ்ணமூர்த்தி,  அனைவரும் தாட்சாயிணி வீட்டுக்கு வந்து இருந்தனர்..

தாட்சாயிணி திருமண மண்டபத்திலேயே தனம்மாவை அழைத்து…

தயங்கிய வாறு… “ மாப்பிள்ளைக்கு நம்ம வீட்டில் வசதி  படுமோ… என்னவோ… நீங்க வேணா.. இன்னைய சடங்கை உங்க வீட்டில் கூட வைத்து கொள்ளுங்க…  நான் ஒன்னும் தப்பா எல்லாம் நினைத்து கொள்ள மாட்டேன்…” என்று சொன்னார்..

அதற்க்கு தனம்மா தாட்சாயிணியிடம் கேட்டது ஒன்றே தான்…

“ இன்றைய சடங்கு அங்கு நடப்பதில் உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே.. நீங்க அதை  மட்டும் சொல்லுங்க…?” என்ற தனம்மாவின் கேள்வியில் தாட்சாயிணி பதறி தான் போனார்..

“ அய்யோ  என்ன அம்மா .. நான் மாப்பிள்ளை வசதிக்குக்காக தான்  அப்படி கேட்டேன்…”  என்று தாட்சாயிணி பதறி போய் மறுத்தாலுமே..

வேறு ஏதோ இருப்பது போல் தான்  அனுபவம் வாய்ந்த தனம்மாவுக்கு தோன்றியது…

இங்கு இருவர் பேசிக் கொண்டு இருந்த  போது ஷ்யாம் அந்த இடத்திற்க்கு வந்தான்…

அப்போது  தனம்மா… “ வேறு என்ன பிரச்சனை  என்று கேட்டதற்கு…

தயங்கிய வாறு.. “ எதிர் வீட்டில் அவங்களை வைத்து கொண்டு எப்படி என்று தான் யோசித்தேன்…” என்று உள்ளதை உள்ளப்படி சொல்லி விட்டார்..

அதற்க்குள் ஷ்யாம் என்ன விசயம் என்று கேட்டு அறிந்தவன்… தாட்சாயிணியின் கை பற்றி கொண்டு…

“ நீங்க  எதை நினைத்தும் கவலை பட கூடாது…  வசதி.. உங்க வீட்டில் என்ன இல்ல… வசதி குறை என்று சொல்வதற்க்கு, அடுத்து அங்க எதிர் வீடு …இனி அதை  பற்றி எல்லாம் நீங்க யோசிக்க கூட கூடாது…” என்று சொன்னவன் கூடவே..

“ நீங்க எது என்றாலும், எதை பற்றி என்றாலும், இது போல் தயங்கி எல்லாம் பேச கூடாது…  அன்னைக்கு நீங்க எனக்கு மகன் போல என்ற வார்த்தையை மனதில்  இருந்து சொல்லி இருந்தால், எது என்றாலும்  என்னிடம் தைரியமாக பேசவோ… கேட்கவோ.. உங்களுக்கு  எல்லா உரிமையும் இருக்கிறது..” என்றவனின் வார்த்தையில் தாட்சாயிணி அப்படி மகிழ்ந்து போனார்..

இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது தான்  தனம்மாவிடம் சொக்கலிங்கமும், சரஸ்வதியும்,, சொல்லி விட்டு செல்ல  வந்தது..

வந்தவர்களின் காதில் அந்த பேச்சு வார்த்தைகள் அனைத்தும், விழ தான் செய்தது..

தனம்மாவிடம் “ போய் வருகிறென் சம்மந்தி .. “ என்று தம்பதியர் விடை  பெற கேட்டனர்..

“ சரிங்க சரிங்க…  என்று மரியாதைக்கு கொடுக்க வேண்டிய பட்சணங்க்களை கொடுத்து விட்டு…

பெரியவங்க திருமணத்திற்கு வந்து ஆசி வழங்கியதில் மகிழ்ச்சி…” என்று அந்த சம்மந்தியரும் முறையாக விடை கொடுத்தனர்…

அடுத்து சொக்கலிங்கம் சம்மந்தியர்… ஷ்யாமின் முகத்தை ஆர்வத்தோடு பார்த்த வாறு..

“ அப்போ நாங்க கிளம்புக்கிறோம்  ஷ்யாம்..” என்று சொல்லி அவன் தலை மீது  கைய்  ஆசையோடு,  தடவிய வாறு சொன்னதில்,

ஷ்யாமின் பதில்… “ ம் சரிங்க..”  அவனும் பெரியவர்கள் சொன்னது போல்..

“ வந்ததுக்கு மகிழ்ச்சி… என் தங்கைகள் இங்கு இருக்கட்டும் .”   என்று மட்டும் சொல்லி  அவர்களுக்கு விடை கொடுத்தான்…

பெரியவர்களும் தாங்கள் செய்த செயல்களுக்கு,  இது தேவை தான் என்பது போல் அமைதியாக சென்று விட்டனர்..

பின்  மீண்டும் அன்று இரவு நடக்க வேண்டிய சடங்கு பற்றிய பிரச்சனையில் ஷ்யாம் தீர்த்து சொல்லி விட்டான்..

“ வசதி படுதோ…  இல்லையோ… இன்று இரவு மட்டும் கிடையாது… என்றும் நான் வந்து போகும் இடம் அந்த வீடு… வசதி பத்தவில்லை என்றால், நான் அந்த வீட்டுக்கு என்ன என்ன தேவையோ.. வசதி செய்து கொள்வேனே தவிர..

அந்த வீட்டுக்கு வந்து போவதை நிறுத்த மாட்டேன்..” என்று தீர்த்து சொல்லி விட்டான்..

அதன் படி அன்று  அதற்க்கு உண்டான வேலை செய்து முடித்து விட்டு… முதலில் பெண்ணை அறைக்கு அனுப்பி விட்டு, பின் ஷ்யாமை அனுப்பினார்கள்..

போகும் முன்   ஹாலில் சாரு ஒரு ஷோபாவில் தூங்கி  கொண்டு இருப்பதை பார்த்தவன்..

“ இவள் எப்போதும் எங்கு தூங்குவாள்..?” என்று  மாமியாரிடம் கேட்டான்…

“ சக்தி கிட்ட தான்..” என்று தாட்சாயிணி சொல்லி முடிக்கவும்…. ஷ்யாம் சாருவை அந்த ஷோபாவில் இருந்து தூக்கவும் சரியாக இருந்தன..

“ மாப்பிள்ளை மாப்பிள்ளை அவள் தூங்குறா… நீங்க  இவளை எங்கு கூட்டிட்டு போறிங்க..?” என்ற தாட்சாயிணியின் கேள்விக்கு…

“இவள் எப்போவும் தூங்கும் இடத்துக்கு தான்..” என்ற அவனின் பதிலில், தாட்சாயிணிக்கு அடுத்து என்ன பேசுவது என்று தெரியாது உதவிக்கு தனம்மாவின் முகத்தை பார்த்தார்..

தனம்மாவோ பேரனுக்கு மேல் நான் என்பது போல் தான்.. “ ஆமா அவன் பிள்ளை அவனோடு தானே தூங்க  வேண்டும்.. “ என்று சொல்லி அவர் பேச்சை முடித்து கொண்டார்..

அதன் பின் தாட்சாயிணிக்கு பேச என்ன இருக்கிறது என்று அமைதி காத்தார்..

ஷ்யாம் தூங்கிய குழந்தையை கையில் தூக்கி கொண்டு தன் மனைவியை தனிமையில் காண சென்ற போது  அங்கு சக்தியோ ஒரு வித பதட்டத்தோடு கையில் இருந்த நகத்தை கடித்து கொண்டு ஒரு வித பதட்டத்தில் இருந்தாள்…

ஷ்யாம் சாருவை படுக்கையின் நடுவில் அவளை படுக்க வைத்த பின்..

“ பேபிம்மா… நான் ஒன்றும் அந்த அளவுக்கு முரடன் எல்லாம் கிடையாது.. நீ இப்படி பயப்படும் அளவுக்கு…” என்று பேசிக் கொண்டு இருந்தவனின் பேச்சை காதில்  சக்தி வாங்காது …

சாருவை தடவி விட்ட வாறே.. “  நான் குழந்தையை கேட்டா மட்டும் குடுக்கல.. உங்க  கிட்ட மட்டும்  அம்மா  எப்படி குழந்தையை கொடுத்தாங்க…” என்று  சக்தி கேட்கவும் தான் ஷ்யாமுக்கு சக்தி ஏன் பதட்டத்துடன் இருந்தாள் என்பதே புரிந்தது..

“நம்ம குழந்தையை அவங்க என்ன கொடுப்பது நாமே தூக்கிட்டு வர வேண்டியது  தான்…” என்று சொன்ன ஷ்யாம்…

சக்தியை சீண்டும் பொருட்டு… “ நான் கூட நீ பதட்டமா இருக்கவும், பஸ்ட் நையிட் நினைத்து தான் பயப்படுறியோ என்று நினைத்து விட்டேன்..” என்று சக்தியை வம்புக்கு இழுத்தான்..

சக்தியோ அவனுக்கு மேல் நான் என்பது போல்..

“ அதை நினைத்து நான் ஏன் பதட்ட படனும்.. நீங்க தான்  பதட்ட படனும் ..” என்ற மனைவியின் பேச்சில்  வாய் அடைத்து  போனது என்னவோ நம் ஷ்யாம் தான்..

“ அடி பாவி… நான் ஏன் பதட்ட படனும்…?” என்ற அவன் கேள்விக்கு, சக்தி அதற்க்கு கொடுத்த விளக்கத்தில் ஷ்யாம் உண்மையாகவே பதட்டமாகி விட்டான்..

“ஆமாம்… இந்த மாதிரி விசயங்களில் அனைத்து செயல்களும் ஆண்கள்  வசம் தானே..” என்றவளின் பேச்சில் ஷ்யாமுக்கு  சிரிப்பு வந்து விட்டது..

“ அது எல்லாம் எனக்கு எந்த வித பதட்டமும் கிடையாது..” என்றவனின் பேச்சில்  அடுத்து சக்தி  சொன்ன விளக்கத்தில் தான் ஷ்யாம் அதிர்ந்து போய் விட்டான்..

“ பதட்டம் கிடையாதா…?” என்று கேட்டவள்.. பின் அவளே…

“ இதில் எக்ஸ்பிரியன்ஸ் இருந்தால் தான் பதட்டம் படாது இருப்பாங்க.. உங்களுக்கு பதட்டம் இல்லை என்று சொன்னால்..” என்று சொல்லி விட்டு அவனை பார்த்த அந்த பார்வையில்..

கை எடுத்து கும்பிட்டு விட்டு..

“ அம்மா பரதேவதை… எனக்கு பதட்டம் என்ன.. பட படப்பு.. பயம்..” என்று சொல்லிக் கொண்டு வந்தவன் …

தன் கைய் இரண்டையும் அவள் முன் நீட்டி ..” பார்.. பார்… கை கூட நடுக்கமா  இருக்கு..” என்று பேசியவனிடம்..

சக்தி..” நடுக்கமா இருக்கா.. அப்போ இன்னைக்கு முடியாதா..?” என்று கேட்க..

ஷ்யாம் இப்போது தன் பேச்சை கைய் விட்டவனாக.. அவளையே..  பார்த்திருந்தவன்..

“ நான்  உன்னை என்னவோ  என்று நினச்சிட்டு இருந்தேன்.. ஆனால் நீ.. நீ..” என்று சொல்லி கொண்டு வந்தவனிடம் சக்தி..

“ ஆ சொல்லுங்க.. நான் நான் என்ன…?” என்று சக்தி கேட்டதற்கு..

ஷ்யாம் பதில் அளிக்கவில்லை.. அடுத்து அவளை கேள்வியும் கேட்பதற்க்கான சூழ்நிலையும் இல்லாது  செய்தான்..

இடை இடையே…  தன் உதடுக்கு சிறிது இடை வேளை கிடைத்த நேரத்தில் கூட  சக்தி…

“ என்ன சொல்ல வந்திங்க…” என்று கேட்க..

“ இல்ல.. உனக்கு கொஞ்சம் டைம் குடுக்கலாம்… சின்ன பெண் ஆச்சே என்று நினைத்தேன்.. ஆனால் நீ யம்மாடீ…” என்று பேசிக் கொண்டு வந்தவனுக்கு அவள் பேசிய பேச்சு மீண்டும் நினைவுக்கு வந்து விட்டது போல் ..

“ உன்னை உன்னை..? என்று சொல்லி மீண்டும் அவளை வாய் அடைக்க செய்தான்…

ஷ்யாம் இன்றே தன் வாழ்க்கை தொடங்க நினைக்கவில்லை..

அது அவனுக்கு தானே  வழி வகுக்கவும், கடவுள் அருள் என்று நினைத்து வாழ்க்கையை தொடங்க  நினைத்தான் தான்..

ஆனால் தொடக்கம் நம்மிடம் இருந்தாலும், முடிவு என்பது மேல உள்ள கடவுளிடம் தானே… அதனால் இன்று உனக்கு அந்த பிராப்தம் இல்லை என்பது போல்

ஷ்யாம்  தன் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்க்கு கொண்டு செல்ல பார்க்க, சக்தியும் அதற்க்கு வழி வகுத்து கொடுக்கும் போது தான், சாரு  சிணுங்கி கொண்டே… எழுவது போல் இருக்கவும்..

இது வரை மயக்கத்தில் இருந்தவர்கள் சட்டென்று தெளிந்தவர்கள்…  விலகியதோடு தங்கள் உடைகளை  அவசர அவசரமாக சரி   செய்தும் கொண்டனர்..

சக்தி எழ முயற்சி செய்த குழந்தையை மீண்டும் தூங்க வைக்க முயன்றாள்.. இன்று நடக்க இருக்கும் சடங்குக்காக சாருவுக்கு சீக்கிரமாகவே உணவை கொடுத்து விட்டு,

நேரத்திலேயே தூங்க  வைத்து விட்டதால், முழிப்போடு குழந்தைக்கு பசியும் எடுக்க ஆரம்பித்து விட்ட படியால், சக்தி என்ன தான் குழந்தையின் முதுகை  தட்டி கொடுத்து கொண்டு இருந்தாலுமே… தூங்குவேனா என்று கொட்ட கொட்ட கண்கள் விழித்து இருவரையும் ஒரு சேர பார்த்தவள்..

எப்போதும் அம்மாவோடு மட்டுமே உறங்69கி எழுந்த அந்த குழந்தை…. இன்று அம்மாவோடு அப்பாவும் இருக்கவும்..

பாதி தூக்க கலக்கதிலேயே.. “ அய்.. அப்பா…” என்று எழுந்து ஷ்யாமின் மடி மீது தலை வைத்து படுத்து கொண்டவள்..

சக்தியை பார்த்து.. “ அம்மா  சாரு பேபிக்கு பசி… பசி..” என்று சொல்லி கொண்டு வயிற்றின் மீது கை வைத்து காட்டி  சொன்னவளின் அழகில் பெற்றோர்கள் மகிழ்ந்து தான் போயினர்…

ஷ்யாம் தான்… “ பேபிக்கு பசியா…” என்று கேட்டதற்க்கு சாரு பாவம் போல் முகத்தை வைத்து கொண்டு ..

“ ஆமா.. ஆமா பசி…” என்று சொன்னவள்..

அப்போது தான் அந்த அறையின் அலங்காரத்தையே குழந்தை பார்த்தது..

குழந்தையின் பார்வையை கவனித்த சக்திக்கும் சரி… ஷ்யாமுக்கும் சரி.. அய்யோ என்பது போல் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..

என்ன சொல்லி சமாளிப்பது என்று…

Advertisement