Advertisement

அத்தியாயம்…18

சூர்யாவுக்கு, ஷ்யாம் தன் தங்கைகள்  அவன்  திருமணத்திற்க்கு,  வர சம்மதித்ததே போதும் என்று மகிழ்ந்து போனவனுக்கு,  அவனே தனுஜாவை பேசியில் அழைத்து..

“நீயும் உன் தங்கையும் என் கல்யாணத்திற்க்கு வந்து விடுங்க…” என்றதில் தனுஜா  அவன் அழைப்பை முதலில் நம்பாது..

அவன் பெயரை சொல்லி யாராவது தன்னை  ஏமாற்றுக்கிறார்களோ என்று தான் முதலில் நினைத்தாள்…

ஆனால் ஷ்யாமின் குரல் ஒரு முறை கேட்டு இருந்தாலும், அவள் மனதில் அது ஆழ பதிந்து விட்டது தான் …இருந்தும், அதை உறுதி செய்யும் பொருட்டு..

“ நீங்க ஷ்யாம் அண்ணா தானே…? ” என்று தன் சந்தேகத்தை தெளிவு படுத்திக் கொள்ள கேட்டாள்.

அவளின் சந்தேகத்தை தீர்த்தி வைப்பதற்க்கு பதில் ஷ்யாம் ..

“ ஏன் இது போல உன்னை வேறு யாராவது ஏமாத்துறாங்களா என்ன…?” என்று அவள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காது  பதட்டத்துடன் அவன் ஒரு கேள்வியை  கேட்டான்..

அதற்க்கு தனுஜா  அவனை விட பதட்டத்துடன் அவசரமாக… “ இல்ல..இல்ல..” என்று மறுத்து பேசியவள்..

“ இல்ல நீங்களே  என்னை அழைத்து  பேசவும் தான், எனக்கு சந்தேகம் வந்து விட்டது… “ என்று பேசியவளின் நிலை ஷ்யாமுக்கும் புரியவே செய்தது…

அவள் அதோடு விடாது… “ அதுவும் ஷைலஜாவை கூப்பிடாது, என்னை கூப்பிடவும்..” என்ற தனுஜாவின் பேச்சில் ஷ்யாம்..

“ என்ன பேச்சு இது..?” என்று அதட்டிய  ஷ்யாமின் அந்த அதட்டல்  கூட,  தனுஜாவுக்கு  ஒரு வித மகிழ்ச்சியை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்..

“ தேங்க்ஸ் அண்ணா..” என்று தனுஜா  உளமாற  ஷ்யாமுக்கு நன்றி தெரிவிக்க…

“ அண்ணாவுக்கு நன்றி எல்லாம் தேவையில்லை தனு…. அதோடு இது வரை உங்களிடம் பேசாததிற்க்கு காரணம்..

நீயோ இல்லை ஷைலஜாவோ கிடையாது… காரணம் என்ன என்று உனக்கே நல்லா தெரியும்…” என்றவனின் பேச்சை தனுஜா இடையிட்டு தடுத்து ஏதோ  பேச வந்தாள்..

ஆனால் அதற்க்கு முன் ஷ்யாம்.. “ வேண்டாம் தனு..  உன் கிட்ட ஒன்னே ஒன்று சொல்ல நினைக்கிறேன் …நம்மிடம் உறவு நல்ல முறையில்  போவது உன்  கையிலும், உன் தங்கை கையிலும் தான் இருக்கிறது.” .

ஷ்யாம் எது சொல்ல வருகிறான் என்று தனுஜாவுக்கு புரிந்தது தான்… இருந்தும் அன்னை படும் வேதனையை பார்த்து கொண்டு இருக்கிறாள்.. அதனால் அதை பற்றி  பேசாது  அவளாள் இருக்க முடியவில்லை..

“ இல்ல அண்ணா என் அப்பா தான்..” என்று தனுஜா ஆரம்பிக்கும் முன்னவே, ஷ்யாம் பேசியை அணைத்து விட்டு இருந்தான்…

தனுஜா அவள்  அண்ணன் பேசியை அணைத்ததும்,  மீண்டும் மீண்டும் அவனை  அழைத்து,  பேச  வைத்த பின் தான் அவள் அடுத்த வேலையை பார்க்க சென்றதே…

மாலை வீடு வந்த ஷைலஜாவிடம் ஷ்யாம் பேசியது சொல்லவும் .. சொன்னதும் அவளுக்குமே, அப்படி ஒரு மகிழ்ச்சி..

“ என்ன அக்கா சொல்ற..? அண்ணா போன் செய்தாரா…? அதுவும் அவர் கல்யாணதிற்க்கு நம்மை அழைத்தாரா..? என்று ஒரு முறைக்கு,  இரு  முறை கேட்டு தெளிவு படுத்திக் கொண்டவளுக்கு , அப்படி ஒரு மகிழ்ச்சி..

தன் அளவுக்கு தன் சகோதரி மகிழ்ச்சியாக  காணப்படவில்லை என்பதை கவனித்த  ஷைலஜா..

“ என்ன அக்கா ஒரு மாதிரியா இருக்கிங்க..? அண்ணா ஏதாவது திட்டுட்டாரா…?” என்று வருத்தத்துடன் தன் கை பற்றி கேட்கும் தங்கையை நினைத்து, அவளுக்கு அவ்வளவு பெருமையாக இருந்தது…

அன்னை பிறந்ததும் இறந்து விட்டார்.. தந்தை பாசம் இருக்கிறதா இல்லையா..? இல்லை அதை அவருக்கு காட்ட தெரியவில்லையா…? என்று யோசிக்கும் அளவுக்கு தான் அவரின் செயல்கள் இருந்தன..

ஆனால் இவர்கள் இருவரும்.. அதுவும் தன்னால் இவள்  தன் சொந்த அண்ணனிடம்  கூட பேசாது தூரம் இருக்கும் நிலையில் கூட, தன் மீது இவ்வளவு பாசத்தை பொழிக்கின்றனரே..

பேசியது இவளின் அண்ணன்.. அவளோடு பேசாது தன்னிடம் பேசியதில் அவளுக்கு துளி பொறாமை இல்லை..

அதை விட தன் முகம் வாட்டத்தை பார்த்து அவள் அண்ணன் தன்னை கடிந்து, கொண்டானோ என்ற கவலையில் பேசியவளை   இறுக்கி அணைத்து கொண்டாள்..

தனுஜா எதற்க்கு தன்னை கட்டி பிடிக்கிறாள் என்று தெரியாது…. இருந்தாலும்,  ஷைலஜாவும்  அவளை அணைத்து கொண்டவள்..

“ என்ன அக்கா அண்ணான் ரொம்ப திட்டி விட்டாரா..?  என்று மீண்டும் அதே கேள்வியை தான் கேட்டாள்….

“ இல்ல அண்ணா எதுவும் திட்டல… ஆனால் அம்மா..” என்று தயங்கியவளின் தோள் பற்றி..

“ என்ன அம்மா வர கூடாது என்று சொன்னாங்களா..? என்று கேட்டாள்..

தனுஜா.. “ ஆமாம்..” என்பது போல் தலையாட்டியவளிடம் ஷைலஜா..

“ அண்ணா நிலையில் இருந்தும் நாம் யோசித்து பார்க்க வேண்டும் அக்கா… நம்ம அம்மா செய்ததும் தப்பு தானே அக்கா..” என்று சின்னவளாக இருந்தாலும், நியாயத்தை  பேசினாள்…

“ அதுக்கு நான்  தானே காரணம்..” என்றவளை முறைத்து பார்த்த ஷைலஜா..

“ இது போல் பேசாதே அக்கா…” என்று அதட்டியள்… 

“ யார் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், அம்மா அண்ணாவை விட்டது தப்பு தான் அக்கா…

அண்ணாவுக்கு அவங்க தாத்தா பாட்டி இருந்தாங்க.. இல்லாது இருந்து இருந்தால், சொல்லுங்க.. இல்லாது இருந்து இருந்தால்…” என்று சகோதரிகள் பேசிக் கொண்டு இருந்ததை கெளசல்யா கேட்டு கொண்டு தான் இருந்தார்..

இவர்கள் யோசித்தது போல் அன்று நாம் ஏன் யோசிக்கவில்லை….

தான் யோசிக்காததிற்க்கு இந்த தண்டணை தேவை தான் என்று நினைத்து கொண்டு  தன் மகள்களுக்கு தான் வந்தது தெரியாது சென்று  விட்டார்.. உப்பு தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும் என்று  நினைத்து…

ஷ்யாம் கல்யாணத்திற்க்கு கிருஷ்ணமூர்த்தி சம்மந்தியருக்கு சொன்ன  படி அழைப்பு விடுத்து வந்து விட்டார்.

சொக்கலிங்கத்திற்க்கும் தங்கள் நிலை  நன்கு தெரிந்து விட்டதால், அடுத்து எதுவும் பேசாது அமையாகி விட்டனர்..

குடும்பத்தினர் அனைவரும் ஆவளோடு எதிர் பார்த்த ஷ்யாம் சக்தியின் திருமண நாள் அதோ…. இதோ….  என்று நாட்களை எண்ணிக் கொண்டு இருந்தவர்களுக்கு, இதோ அன்றைய திருமண நாளும்  வந்தே விட்டது…

ஷ்யாம் சக்தி திருமணத்திற்க்கு கெளசல்யாவை தவிர அனைவரும்  வந்து இருந்தனர்……

ஒரு சில உறவுகள்… மற்றவர்கள்  மகிழ்ச்சியோடு இருந்தால்,  அந்த மகிழ்ச்சியை கெடுக்க என்றே பேசுவார்களே..

அதே போல் ஒரு முதியவர்… “ அம்மா இல்லாது பண்றது எவ்வளவு  பெரிய தப்பு தெரியுமா…? என்ன  தான் பணம் வந்தாலும் இப்படியா…? “ என்று ஷ்யாம் வயதுடைய தன் பேரன் ஒன்றும் செய்யாது ஊரை சுற்றி கொண்டு இருக்க..

 ஷ்யாம் இப்படி வளர்ந்து நிற்பதில் அவருக்கு  இருந்த   பொறாமையை..  இப்படி வார்த்தைகளாக கொட்டி தீர்த்தார்..

இது போல் ஒரு சுப நிகழ்ச்சியில், வம்பு பேச என்றே ஒரு சில பேர் வரத்தான் செய்வார்கள்.. அதை கண்டும் காணாது நம்  நிகழ்ச்சியை    நடத்தி முடிப்பதில் தான் நம் சாமர்த்தியமே இருக்கின்றது..

அந்த சாமர்த்தியம் கிருஷ்ணமூர்த்தியிடமும், தனம்மாவிடமும் இருந்ததால், ஷ்யாமின்   கல்யாண வைபோகம் எந்த வித தடங்களும் இல்லாது நடந்து கொண்டு இருந்தன…

அதுவும் நாத்தனார் முடிச்சு தனுஜாவை அழைத்து தனம்மா போட சொல்ல.. அவள் மேடை ஏறும் போதே, அவள் கண்ணில் கண்ணீர் தன்னால் வந்து கொண்டே  இருந்தன..

தெரியும் அவளுக்கு நன்கு தெரியும்.. இது போல் சுப நிகழ்வின் போது  அழ கூடாது என்று.. இருந்தும் அவள் கண்களில்  இருந்து வரும் நீரை துடைக்க துடைக்க.. அது பாட்டுக்கு வந்த வண்ணம் இருந்தன…

அவள் நிலை அங்கு இருந்த அனைவருக்கும் தெரிந்ததால், யாரும்  அவளை தவறாக நினைக்கவில்லை…

சூர்யா தனுஜா அருகில் சென்று அவள் தோள் பற்றியவனாக..

“ இப்போ ஏன் அழுகுற…? பார் எல்லோரும் உன்னையே தான்  பார்க்கிறாங்க…” என்று ஏதோ  காலம் காலமாக அவளிடம் பேசுவது போல் சாதரணமாக பேசினான்..

தனுஜா இதை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லாததால்,  அதை பெரியதாக அவள் உணரவில்லை..

ஆனால் இவர்களின் செயல்களை பார்த்து கொண்டு இருந்த ஷைலஜா.. சூர்யாவின் இரு தங்கைகள் …. வாயின் மீது விரல் வைத்து கொண்டனர்…

சூர்யா பேச்சுக்கு தனுஜா.. “ யார் பார்த்தாலும்,  எனக்கு கவலை  கிடையாது… தனம்மா ஷைலஜாவை கூப்பிடாது,  என்னை கூப்பிட்டது  எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா…?” என்று வளர்ந்த அந்த பெண் …

சிறு குழந்தை போல் கண்ணீரை துடைத்து கொண்டே சொன்னதை பார்க்கும் போது, சூர்யாவுக்கு அப்போதே அவளை அணைத்து கொள்ள ஆசையாக தான் இருந்தது..

ஆனால் அவன் தன்னை கட்டு படுத்தி கொள்ள காரணம்… சுற்றி இருப்பவர்கள் கிடையாது..  தன் விருப்பத்தை சொன்னோம்… பின் சரியாக கூட பேசியிறாத  போது …இது போல் ஆன செயல்கள்  அவளுக்கு தன் மீது தவறான பிம்பத்தை விளைவிக்க கூடும் என்ற எச்சரிக்கை உணர்வில், அதை செய்யாது..

ஆனால் அவளின்  இந்த கண்ணீரை நிறுத்த வேண்டி..

“ உனக்கு கவலை இல்லேம்மா.. ஆனா இதை பார்த்து கொண்டு இருக்கும் என் குடும்பத்தினர்… 

 இதை பார்த்து விட்டு வீட்டுக்கு போன உடன் என்னை வெளுத்து கட்டுவாங்களே…. அதுக்காவது நீ அழாது இருக்கனும்..” என்றவனின் பேச்சில் தனுஜா..

“ நான் அழுதா உங்களை ஏன் வீட்டில்   திட்டனும்..?” என்று கேட்டாள்…

“ நீ அழுதா திட்ட மாட்டாங்க.. ஆனால் நான் உன் மீது இது போல் தோளின் மீது கை போட்டா கண்டிப்பா திட்டுவாங்க..

பெரியவங்க என்று இருந்தால்,  திட்ட  தானே செய்வாங்க.. நீயே சொல்…?” என்று நியாயமும் அவளிடமே கேட்டு  வைத்தான்…

அப்போது தான் சூர்யா தன் தோள் மீது கை போட்டு கொண்டு இருப்பதையே தனுஜா உணர்ந்தாள்..

உணர்ந்த உடன் அவசர அவசரமாக அவனை விட்டு விலகியவள்.. ஒரு வித சங்கடத்துடன் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவளுக்கு தான், என்னவோ போல் ஆகி விட்டது..

என்னை பற்றி இவர்கள் எல்லோரும் என்ன நினைப்பார்கள் என்று.. முதலில் மகிழ்ச்சியில் வந்த கண்ணீர்.. இப்போது சங்கடத்தில் வந்தன…

அதை பார்த்து சூர்யா பதறும் முன் அவனின் அன்னை அவளிடம் வந்தவள்..

“ இப்போ ஏன்மா அழுகுற..?’ என்ற சூர்யாவின் அன்னையின் கேள்விக்கு பதில் அளிக்காது இவர்கள் யார் என்பது போல் தான் பார்த்து வைத்தாள்..

அவளின் பார்வையில் அவரே… “ பார் நான் யார் என்று கூட சொல்லாது  நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன்..” என்று சொன்னவர் பின் தன்னை முறையாக அறிமுகம் படுத்தி கொள்ளவும், அவளுக்கு இன்னும் பதட்டம் கூடியதே  தவிர  குறையவில்லை…

இப்பொது சூர்யா.. “ பாருங்க உன்னை பார்த்துட்டு அவள் பயந்து போயிட்டா…”  என்று தாய் மகன் இருவர் பேசிய பேச்சில் தனுஜாவுக்கு இப்போது பயம்  போய், அங்கு  ஸ்வாரசியம் குடி கொண்டன…..

இதை அனைத்தையும் கவனித்து கொண்டு இருந்த ஷைலஜா… சூர்யாவின் இரு தங்கைகளும்… அவர்கள் அருகில் வந்து அவர்கள் பங்குக்கு கலாய்த்து தள்ள…

அமைதியாக சென்று கொண்டு இருந்த அந்த திருமணம்… கலட்டாவுடன் நடந்து கொண்டு இருந்தன..

ஷ்யாம் தான் … “ கல்யாணம் எனக்குடா.. ஆனால் நீ ரொமான்ஸ் செய்துட்டு இருக்க…? பார் நீயும் இருக்கியே…” என்று சக்தியிடம்  முறையிட்டான்..

அவளோ.. “ நானா உங்களிடம் வேண்டாம் என்று சொன்னேன்.. உங்களுக்கு அது வரல.. என் அண்ணாவுக்கு வருது..” என்று சொல்லியவளிடம்..

ஷ்யாம்… “ இருக்கு .. இருக்கு உனக்கு ராத்திரி…” என்ற இவர்கள் இருவரின் பேச்சில், இருவருக்கும்  நடுவே அமர்ந்து கொண்டு இருந்த சாரு…

“ என்ன அப்பா ராத்திரி இருக்கு…?” என்று இன்னும் சிறிது நேரத்தில் தன் மனைவியாக போகும் சக்தியிடம் யாரும் கேட்காது அகள் காதுக்கு அருகில் பேசிய பேச்சை…

 அவள் அனைவரும் கேட்கும் படி கடை பரப்பியதில் ஷ்யாம்  ஒரு வித சங்கோஜத்துக்கு ஆளானது உண்மை தான்..

ஆனால் அதை கேட்ட தாட்சாயிணி மேடைக்கு வந்து சாருவை தூக்கி கொள்ள முனைந்த வாறு..

“ மன்னிச்சிக்கோங்க மாப்பிள்ளை…” என்று அவனிடம் மன்னிப்பு வேண்டியதில்.. ஷ்யாம் தெளிந்தவனாக..

“ என் மேல் தான் தப்பு அத்தை… ஒரு குழந்தையை வைத்து கொண்டு என்ன பேசுவது என்று தெரியாது  பேசி விட்டேன்..

இனி பார்த்து பேசுவேன் அத்தை….  சாரு பேபி எங்க கிட்டேயே இருக்கட்டும்..” என்று சொன்னவனிப் பெருந்தன்மையான பேச்சில், தாட்சாயிணிக்கு அவ்வளவு மகிழ்ச்சி…

 தன் ஒரு மகளின் வாழ்வு  அஸ்த்தமித்து போனாலும்,தன் மற்றோரு பெண்ணின் வாழ்வை மலர வைத்து விட்டான்..

அதோடு தன் பேத்திக்கும் ஒரு தந்தை கிடைத்து விட்டதில் மகிழ்ந்து போனவராக  தன் மகளின் திருமணத்தை பார்க்க ஆரம்பிக்க…

தனுஜா நாத்தனார் முடிச்சு இட்டு… தன் பெரிய மகள் சாரு அருகே அமர வைத்து ஷ்யாம் தன் தனம்மா கிருஷ்ணமூர்த்தி அப்பா ஆசிர்வாதத்தோடு சக்தியை தன் சரி பாதியாக ஆக்கி கொண்டான்…

 

.

.

     

Advertisement