Advertisement

அத்தியாயம் 18

சூர்யா பேசிக்கொண்டே இருந்தவன் தன்முன் நின்ற ஷ்யாமை  பார்த்து அடுத்து பேசாது அதிர்ச்சியாகி நின்றுவிட்டான். அவனிடமிருந்து தொலைபேசியை வாங்கி காதில் வைத்ததும்.சூர்யா  இன்னும் அதிர்ந்து SW  முழித்து இருந்தவனை பார்த்துக் கொண்டேதான் ஷியாம் தொலைபேசியில். அந்தப் பக்கத்தில் யார் இருக்கிறது என்று கண்டு கொண்டவன் அமைதியாகி பேசியை அதனிடத்தில் வைத்துவிட்டு கை கட்டிக்கொண்டு சூர்யாவை பார்த்தான்.

 அவன் பார்வை என்னவோ சாதாரணமாகத்தான் இருந்தன. ஆனால் சூர்யாவிற்கு ஷ்யாம் தன்னை முறைத்துப் பார்ப்பது போல் தெரிந்தது. பேசியாக வேண்டும். பேசியே  ஆக வேண்டும்..

தொண்டைக் குழியில் இருந்த எச்சில் அடைப்பட்டு பேச முடியாது கொஞ்சம் திணறித்தான் தன் பேச்சை ஆரம்பித்தான்.

“ ஷ்யாம் நான் தப்பா எல்லாம் உன் தங்கையை  நினைக்க வில்லை. நிஜமாலுமே எனக்கு பிடிச்சதால் தான் பேசினேன். பிடிச்சதுனா  தப்பா எல்லாம் கிடையாது.

கல்யாணம் பண்ற எண்ணத்தில்  தான் பேசினேன் என்று பேசிக் கொண்டிருந்தவனுக்கு,   பிரதிபலிப்பாய் ஷ்யாம் ஏதாவது சொல்வான் என்று அவன் முகத்தைப் பார்க்க அவனும் எதுவும் பேசாது கைகட்டியது கை கட்டியவாறு அப்படியே அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவனை பார்த்தவனுக்கு,  ஒரு நிலைக்கு மேல் சூரியாவால் பொறுக்க மமுடயாது போனதால்,

“ ஷ்யாம்  உனக்கு பிடிக்கலைன்னா என்னை  திட்டு. .. இல்லேன்னா இரண்டு அடி கூட அடிச்சிடு.. ஆனால் இது போல எதுவும் பேசாம  இருப்பது எனக்கு ஒரு மாதிரி இருக்கு ஷ்யாம் தப்பு தான் .” என்று பேசிக் கொண்டிருந்த அவன் தோள்மீது ஷ்யாம் கை போட….

 சூர்யாவின் பேச்சு தடைபட்டு நின்றது.இப்போது முகத்தை பார்க்கும் முறை சூர்யா முறையானது.

“ நான் ஏன் உன்னை திட்ட போறேன்.  இல்ல அடிக்க போறேன்… உனக்கு அந்த பெண்ணை பிடிச்சிருக்கு… அதனால கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவில்  பேசுற..”  என்று யாரோ ஒரு பெண்ணிடம் தான் பேசியது போல் சொன்னவனின்  முகத்தை இப்போது சூர்யா கோபத்துடன் முறைத்துப் பார்த்தான்.

“ என்ன ஷ்யாம்  பேசுற …அந்தப் பெண் உன் தங்கை.. அது உனக்கு ஞாபகம் இருக்கா ..? என்று கேட்டான்.

“ ஓ உனக்கு இப்ப தான்  அந்தப் பெண் எனக்கு தங்கை முறை  ஆகணும் என்று உன் ஞாபகத்தில் இருக்கா …ஏதோ சொன்னே  நண்பனின் மனைவி தங்கை போல் என்ற டயலாக் எல்லாம்… இன்னொன்றும்  இருக்கு… நண்பனின் தங்கை தன் தங்கை என்றும் சொல்லலாம் என்றவனின் வாயை சட்டென்று சூர்யா மூடினான்.

“ வேறு எந்த முறையாவது வெச்சு  சொல். ஆனால் இதை மட்டும் பேசாதே… புரியுதா … நீ  முதலில்  இருந்தே  கேட்டுட்டு இருக்கே என்று  எனக்கு புரியுது..

 நான் தப்பா எல்லாம் பாக்கல டா…  அந்த பெண்ணை எனக்கு பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்கலாம்னு பார்த்தேன் தப்பா…? “

“தப்பில்லை… நான் சும்மா  உன்னை  கலாட்டா பண்ணினேன். எனக்கு உன்ன பத்தி தெரியாதா….அது  விடு எனக்கு ஒன்னே ஒன்னு தான் தெரியனும்.

 அந்த பொண்ணு  இது வரையுலுமே ரொம்ப கஷ்டம்  போட்டுட்டா… இனி எந்த பிரச்சினையும் அந்த பெண்ணுக்கு  வரக்கூடாது..

 நீ விருப்பப்பட்டு அந்த பொண்ண கல்யாணம்  செய்தால்,  எனக்கு ரொம்ப சந்தோஷம் தான்… ஆனால் அந்த பொண்ணு சொன்னது போல அனுதாபத்தில்..” என்று தன் பேச்சை இழுத்து முடிக்கவும்..

 சூர்யா

“ என்னை பார்த்தா உனக்கு அனுதாபத்துக்கு கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி  இருக்கா…. எனக்கு  பிடித்த தொட்டு தான் நான் கேட்கிறேன்..

 இஷ்டம் இருந்தா ஒரு அண்ணனா அந்தப் பெண்ணை எனக்கு  கட்டி கொடு.. இல்லனா நல்ல வசதியான மாப்பிள்ளை பார்க்க போறேன்  தங்கச்சிக்கு ன்னு சொல்லிட்டு போய்கிட்டே இரு ..

சும்மா சுத்தி வளச்சு ஏதாவது பேசிட்டு இருக்காத சொல்லிட்டேன்..”  என்று அதட்டியவனின்  தோள் மீது கை போட்டு,

“  சரிடா மச்சான்..” என்று  தன் சம்மதத்தை இரு வார்த்தையில் சொல்லி முடித்தான்.

அவன் பேச்சில் சூர்யா  மகிழ்ந்துபோனவனாக  அவனை கட்டி அணைத்து கொண்டான்..

“  அப்போ நீ உன்  இரண்டு தங்கைகளை ஏற்றுக் கொண்டாயா…?”  என்று கேட்டான்..

 ஒரு நிமிடம் அமைதியாக இருந்த ஷ்யாம்  “  அந்தப் பெண்கள் என்னடா பாவம் பண்ணாங்க… அவர்களுக்கு என்ன தெரியும்… அந்த வயசுல எனக்கு ஏதும் தெரியாமல்,  ஏன் அம்மா வரல…

 ஏன் அம்மா என்ன பாக்கல… என்கிட்ட  பேசவில்லை… என்று  நினைப்பேன்.. அந்தப்பெண் என்னோட சின்ன பெண்.. அதோட ஷைலஜா  அப்புறம் தான்  பிறந்தான் ..

அவளுக்கு என்ன புரிஞ்சிருக்கும் தெரிஞ்சிருக்கும்… அதுவும் அவங்க அப்பா …”  என்று சொல்லிக்கொண்டு  வந்தவன்  பார்த்திபன் பேச்சை பேசக்கூட பிடிக்காது..

“  என் சார்பா நீ  அவங்களை  கூப்பிடுடா..”  என்று சொன்னவனை இன்னும் இறுக்கி அணைத்துக்கொண்டான் சூர்யா..

தனுஜா தயங்கிக் கொண்டே தன் தங்கை ஷைலஜா விடம்  சூர்யா பேசியதை அனைத்தையும் ஒன்று விடாது சொல்லிவிட்டாள்…

 அதைக் கேட்ட ஷைலஜா லுக்கு  அவ்வளவு மகிழ்ச்சி… ஓடிப்போய் தன் அன்னையை  அழைத்துக் கொண்டு வந்தவள்..

“  அம்மா அம்மா அக்கா சொன்னது கேட்டீங்களா…. கேட்டீங்களா…”  என்று சந்தோஷ மிகுதியில் குதித்தாள் .. அம்மாகிட்ட சொல்லி விட்டாளே.   என்று ஒரு கூச்சத்தோடு  தலை குனிந்தாள் தனுஜா …

கௌசல்யா தன்  சின்ன  மகளிடம் “   என்ன விஷயம் பொறுமையா சொல்லு… உண்மையா சொல்லு”  என்று கெளசல்யா  சொன்னதும்..

 ஷைலஜா  தன் அன்னையிடம்  தனுஜா சொன்னதை சொன்னாள்.. கௌசல்யா சைலஜா அளவுக்கு சந்தோஷப்பட வில்லை..

 ஆனால் முகத்தில் ஒரு நிம்மதி தென்பட்டது… தன் பெரிய மகளிடம் “  இவ சொல்றதெல்லாம் உண்மையா தனமா …. “ என்று கேட்டார்..

 இப்போதும் தனுஜா  தலை குனிந்து  கொண்டே. “  ஆமாம்மா ஆனா அதுக்குள்ள அண்ணா வந்து போன வாங்கிட்டார்… அண்ணா குரல் கேட்ட பிறகு நான்  பயந்துட்டு போனை  வெச்சிட்டேன்அம்மா…

 அவங்க பேசுறதை அண்ணா எது வரை  கேட்டிருப்பார் என்று  எனக்கு தெரியல …இப்ப அண்ணா என்னை  தப்பா நினைச்சு இருப்பாரு..”  என்று தயக்கம் பாதி பயம் மீதியுமாக சொன்னாள்.

“ அப்போ உனக்கு அந்த பையனை  பிடிச்சிருக்கு… ஷ்யாம் தப்பா நினைக்க  போறான். அதுதான் உன் கவலை. “ என்று கௌசல்யா மகளின் மனம் புரிந்தவராக கேட்டார்.

இப்போது  தனுஜா  தயக்கத்துடன் தன் அன்னையின் முகம் பார்த்தாள். அந்த முகமே சொன்னது தன் மகளுக்கு அந்தப் பையனை எவ்வளவு பிடித்து இருக்கிறது என்று.

கௌசல்யாவுக்கு இப்போது புதியதாக ஒரு பயம் பற்றிக் கொண்டது .. தன் மகன் இதை எப்படி எடுத்துக் கொள்வான்.. நான் வேண்டுமென்றே அந்தப் பையனிடம் தன் மகளை பழக விட்டதாக நினைத்துக்கொண்டாள்…அந்த நினைப்பே அவளின் அடிமனது வரை கசந்தது.

அக்காவுடைய முகத்தை பார்த்தாலே தெரியவில்லையா ..? இந்த அம்மாவுக்கு…

 அவங்களை  அக்காவுக்கு எவ்வளவு பிடித்து இருக்கிறது என்று .. இப்படி கேள்வி மேல கேள்வி கேட்டு இருந்தா …அக்கா எப்படி சொல்வாள்..

ஏற்கனவே அவள்  கூச்ச சுபாவம்… என்னை மாதிரி இருந்தா சொல்லியிருப்பாள். ஆமா பிடிச்சிருக்கு என்று. அதை தன் தாயிடம் ஷைலஜா

“  அம்மா அவளுக்கு அவங்களை ரொம்ப பிடித்திருக்கிறது.”  என்று

“ எனக்கு தெரியுது ஷைலஜா அக்காக்கு அந்த பையனை பிடித்து என்று.”  என்ற தாயின் பேச்சில் ஷைலஜா

“ அப்போ  கல்யாணம் செய்து கொடுக்க.” என்று அந்த  வயதுக்கே உரிய துடிப்போடு சொன்னாள்.

பெரியவர்கள் நாளைய பின்னே என்ன வரும் எந்த பேச்சு எந்த திசையில் இருந்து வரும் என்று யோசிப்பார்கள்..

 ஆனால் இளையவர்கள் அடுத்து நல்லது.. அதை மட்டுமே அவர்கள் கண்ணுக்குத் தெரியும். அதுபோல் தான் அவர்கள் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

கௌசல்யா தனக்கு தோன்றியதை இரு மகள்கள் முன்னே சொல்லிவிட்டார்.. இதை உன் அண்ணன் தவறாக நினைத்து விட்டால்,

 அன்னையின் பேச்சுக்கு தனுஜா அப்படி நினைத்து விட்டால்,  அவள் முகம் அதிர்ச்சியை காட்டியது. ஆனால் ஷைலஜா  ..

“அம்மா இதில் அண்ணா  தப்பா நினைக்க என்ன இருக்கு..?”  என்று கேட்டாள்..

“ நான் வேண்டுமென்று இதை செய்ததாக..”  ஷைலஜாவுக்கு அன்னை   இவ்வாறு சொல்லியபின் கூட புரியவில்லை..

“  நீங்க என்ன சொல்ல வர்றிங்க…” என்று அப்போதும் புரியாமல் தான் ஷைலஜா தன் அன்னையிடம் கேட்டது.

.”  இல்ல உன் அண்ணன் கூட நான் உறவை வளர்த்துக் கொள்ள என்று உன் அக்காவை வேண்டும் என்றே பழக “ என்று பேசிக் கொண்டிருந்த தன் அன்னையை பேச விடாது அவர் வாயை  அடைத்து விட்டாள்  ஷைலஜா..

“  நிச்சயமாக அண்ணா இப்படி அசிங்கமா உங்கள பத்தி கேவலமா நினைக்க மாட்டார்.”

“” நினைத்து விட்டால், “  கௌசல்யா மீண்டும் அதே கேள்வியை  தான் சொன்னார்..

“   கேட்டுவிடலாம்… அண்ணாவிடம் கேட்டுவிடலாம் ..”

அதற்கு கௌசல்யா விடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

“  அம்மா அம்மா என்று ஷைலஜா  அன்னையின்  தோலை குலுக்கவும்,  தன் மகளின் முகத்தை பார்த்தவர்..

“  அவன் பேசினால் தானடி கேட்கிறதுக்கு… பேசினால் என்ன என்ன பார்த்தா தானேடி..”  அன்னையின் பேச்சில் இருந்த உண்மை மகள்கள் இருவருக்குமே சுட்டது ..

உறவுமுறை இப்படி இருக்க அண்ணனின் நெருங்கிய நட்பில் தன் மனதை விட்டு விட்டோமே என்று தனுஜா வேதனை அடைய..

 சைலஜா தன் அக்காவின் மனசில் ஆசையை விதைத்து விட்டோமே என்று இருவரும் இப்படி நினைக்க..

 ஆனால் அங்கு ஷ்யாம்  சூர்யாவிடம் .. “ உனக்கு  பிடித்திருந்தால் திருமணம் செய்துகொள் ..ஆனால் ஒன்று உனக்கு இரு தங்கைகள் இருக்கிறார்கள்.. அதுவும் ஒரு தங்கைக்கு வயது 25 முடிந்துவிட்டது..

 முதலில் ஒரு தங்கைக்கு திருமணம் செய்து முடித்துவிட்டு உன் திருமணம் பற்றி யோசி..”  என்ற பேச்சுக்கு இல்ல ஒரு இடம் முடிவது மாதிரி இருக்கு..” என்று சூர்யா சொன்னான்.

“  அப்ப  முடித்து விடலாம். பணம தேவைப்பட்டால் என்னிடம் நீ கேட்க மாட்டே..  நான் உங்க அம்மாகிட்ட  பேசிக்கிறேன்..”  என்று ஷ்யாம் சொல்லவும் ..

சூர்யா  “ என் அப்பா  இறந்ததிலிருந்து  என் குடும்பம் நடப்பதே உன் பணத்தால் தானடா …இதில் என்ன தனியா நான் கேட்க சொல்..”  என்று கேட்டான் சூர்யா…

..

அதற்கு ஷ்யாம் ..” நான் உனக்கு சும்மா ஒன்னும் தரவில்லை…நான் கொடுக்கும் பணத்திற்கு மேலே நீ எனக்கு வேலை செஞ்சு கொடுக்கிற …

அதுவும் செய்ற வேலை எல்லாம் அவ்வளவு  ரிஸ்க் இருக்கு… எனக்கு எல்லாமுமா இருக்க…  அதற்கு நான் உன்  குடும்பத்துக்கு ஒரு சிறிய அளவில் தான் நான் உதவி செய்கிறேன்..

 நீ  செய்யிறதை  கம்பேர் பண்ணும்போது நான் செய்றது ஒண்ணுமே இல்ல டா..”  என்று பேசிய நண்பனை சூர்யா இழுத்து அணைத்துக் கொண்டான் ..

“ நான்  ரொம்ப சந்தோஷமா  இருக்கேன்டா..”  என்று மகிழ்ச்சியில் சொல்ல ..

“ எதற்கு  உனக்கு கல்யாணம் ஃபிக்ஸ்  ஆனததற்க்கா ..?” என்ற ஷ்யாமின் கேள்வியில் சூர்யா நண்பனை பார்த்து முறைத்தவன்..

“ ஏன் உன்னை நண்பனா அடஞ்சதுக்கு நான் சந்தோஷம் பட கூடாதா…” என்று கேட்டான் சூர்யா..

“ ஆமா ஆமா நாம் இன்று தான் பிரண்ட்ஸ் ஆனோம்.. அதுக்கு சந்தோஷம் பட்டுக்க வேண்டியது. தான். “ என்று சொல்லி நண்பனை கிண்டல் செய்தான்.

ஷ்யாம் மகிழ்ச்சியுடன் இருப்பதை கவனித்த சூர்யா ..  “ ஷ்யாம் உன் கல்யாணத்திற்கு என் வருங்கால மனைவி.. என் மச்சினிச்சி வரலாம். தானே..” என்று கேட்டு விட்டு தன் நண்பன் இதற்கு என்ன சொல்வான் என்று அவன் முகத்தை பார்க்க.

அவனோ சிறிது நேரம் யோசனை செய்தவன் பின்..” ம வரலாம்.ஆனால் உன் வருங்காலம் வரும் உறவு முறை இதோடு நிறுத்தி விட்டால் நல்லது.” என்று சொல்லி ஷ்யாம் சென்று விட்டான்.

ஷ்யாம் எந்த உறவு முறையு ஏற்க தாயாராக இருந்தான்.தாயை தவிர்த்து..

Advertisement