Advertisement

அத்தியாயம்….17

சொக்கலிங்கம் தன் பேரனின் திருமணத்தை பற்றி கேள்வி பட்டதில் இருந்து,  ஒரு பக்கம் அவ்வளவு சந்தோஷம்.. அதே வேளயில் கொஞ்சம் வருத்தமும் இருந்தன…

சம்மந்தி சொல்லி தான் அவருக்கு  தன்  பேரனின் திருமணம் பற்றியே தெரியும்.. அந்த  நிலையில் தான் நான் இருக்கிறேன்…

“ பெண் யார்…?” என்று கேட்டதற்க்கு சக்தி பற்றி அனைத்தையும் சொன்னதும்..

சொக்கலிங்கம் தயக்கத்தோடு.. “ குழந்தையோடா..?” என்று அவர் பேச்சில் இழையோடிய வருத்ததில்…

எப்போதும் சொக்கலிங்கத்திடம் தன்மையோடு பேசி வந்த கிருஷ்ணமூர்த்திக்கு,  தன் பேரன்  நேற்று பேசிய.. “ என் திருமண நாள் அன்றாவது.. என் அன்னையை பற்றி  நினையாது மகிழ்ச்சியோடு இருக்க விடுங்க..” என்ற வார்த்தை அவரையும் பலமாக தாக்கியதின் எதிர் ஒலியாக..

“ குழந்தை தனித்து வளர்வதோட  கஷ்டம்   அவனுக்கு  தான் நல்லா தெரியும்.. என் பேரன் சக்தியை விரும்புவதுக்கு முக்கிய  காரணமே, எந்த சூழ்நிலையிலும் என் பேத்தி என்  கொள்ளு பேத்தியை  விடாதது தான் காரணம்…”  என்று கிருஷ்ணமூர்த்தி   என் பேரன் பேத்தி எனும் போது  அழுத்தம் அதிகம் இருந்தன..

சொக்கலிங்கம்.. “ எனக்கும் அவன் பேரன் தான் சம்மந்தி..” என்று உரிமை குரல் கொடுத்தவர் கூடவே..

“ அது என்ன அந்த பெண் அந்த குழந்தையை விடாது தான் விரும்ப காரணம் என்று சொல்வது.. அப்போ என் பெண் இன்னொரு திருமணம் செய்தது தப்பு என்று சொல்ல வர்றிங்களா…?

அது தான் என்ன தான் இருந்தாலும் , என் மகள் உங்களுக்கு மருமகள் முறை தானே ஆகனும்… கூடவே இது தான் சாக்கு என்று,  என் பேரனுக்கு எங்களை பற்றி ஒன்றுக்கு இரண்டாக போட்டு கொடுத்து இருக்கிங்க போல.. 

அது தான் அவனை எங்க பக்கமே அண்ட விடலை.. “ என்று மனது அறிந்து தான் பேசுவது அநியாயம் என்று தெரிந்தே,  நெடு நாள் மனதில் தன் பேரனிடம் தன்னை விட அவர்கள் அதிகம் உரிமை  எடுத்து கொள்கிறார்களே  என்று நினைத்த வன்மத்தை வார்த்தைகளாக சொக்கலிங்கம் கொட்டி விட்டார்..

கிருஷ்ண மூர்த்தி முதலில் பேரன் பேசிய பேச்சில் அப்படி பேசினாரே ஒழிய.. அவருக்கு சொக்கலிங்கத்தின் மீது வன்மம் என்பது சிறிதளவும் கிடையாது..

அதனால் மிக நிதானத்தோடே… “ நம்ம பேரனை என் கிட்ட நீங்க கொடுக்கும் போது, என் கிட்ட சொன்ன வேண்டுகொள் உங்களுக்கு  இப்போது நியாபகத்தில் இருக்காது என்று நினைக்கிறேன்… 

ஆனால் எனக்கு நல்லா நியாபகத்தில் இருக்கு.. அதனால் தான் உங்க சொல் படி பேரனை செங்கல்பட்டுகே கூட்டிட்டு வரல… உங்க மருமகனுக்கு பிடிக்காது என்ற காரணத்தால்… 

இந்த காரணம்  போதாது  ஷ்யாம் உங்க கிட்ட நெருங்காது இருக்க..” என்ற கிருஷ்ணமூர்த்தியின் பேச்சு  சொக்கலிங்கத்திற்க்கு இன்னும் நிதானம் தவர போது மானதாக ஆகி விட்டது…

“ ஓ இதை சொல்லி தான் வளர்த்திங்களோ..” என்று தன் வயதையும் மறந்து சொக்கலிங்கம் ஆவேசத்துடன் கேட்டார்..

“ நம்ம பேரன் ரொம்ப புத்திசாலி சம்மந்தி… நான் அவனை  அங்கு அழைத்து போகாது இருந்ததிலேயே அவன் புரிந்து கொண்டு  இருப்பான்… “ என்ற அவரின் பேச்சில் சொக்கலிங்கத்தால் அடுத்து பேச முடியாது போயிற்று.. அதனால் அவர் அமைதியாகி விட..

கிருஷ்ணமூர்த்தி தான்.. “ இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம்… இன்று பொழுது போவதற்க்குள் நானும் என் மனைவியும் அங்கு வந்து அழைக்க வர்றோம்.. அதை சொல்ல தான் போன் செய்தேன்..” என்றவரின் பேச்சில் சொக்கலிங்கத்தின் வாய் முழுவதுமாக அடைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்…

தன் பேரனின் திருமணம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது.. தன்னை மற்றவர்களை போல் அழைக்க இவர் வருகிறார்… தான் இப்படி தன் பேரனிடம் இருந்து தள்ளி இருப்பதற்க்கு காரணம் தங்களின் செயல்கள் தான் என்று அவர் அறிவு சொல்கிறது.. ஆனால் மனது.. 

அவன் என் பேரன் என்று உரிமை குரல் எழுப்புவதை தடுக்க முடியாது இரண்டுக்கும் நடுவே தள்ளாடி போனார்..

இருந்தும் ஒரு நம்பிக்கையில்… “ கெளசல்யா…” என்று இழுத்தவரிடம் கிருஷ்ணமூர்த்தி..

“ கூடவே கூடாது என்று  சொல்லி விட்டான்..” என்று சொல்ல..

“ என்ன எது..?” என்று தடுமாறி போன சொக்கலிங்கத்தின் குரலிலேயே தெரிந்து விட்டது.. அவரின் மனநிலை.. ஆனால் அவரும் தான் என்ன  செய்வார்..? சொல்லி விட்டார்..

தன் பேரன் சொன்னதை சொல்லி விட்டார்.. சொக்கலிங்கத்திற்க்கு , பேரனின் நடவடிக்கையை விட.. இது அதிகம் ரணத்தை கொடுத்தது….

 தன் மகள் வர முடியாது போயிற்றே என்பதினால் அல்ல… தன் பேரனின் இத்தனை வருட தாயின் தேடலில்.

அடுத்து எதுவும் பேசாது.. “ சரி..” என்று அமைதியாகி விட்டார்..

அவரின் மனதின் ரணம் அவர் மனைவி சரஸ்வதிக்கு தெரிந்து விட்டது…

“ நமக்கு  பேரன் சந்தோஷமா  இருக்கனும்.,, இப்போ அது தான் முக்கியம்… நீங்க வேறு எதை பத்தியும் யோசனை செய்யாதிங்க..” என்று கணவரை ஆறுதல் படுத்தினாலும், சரஸ்வதியின் நிலையும் கணவனை  போல் தான் இருந்தன..

இவர்கள் இருவரின் நிலை இப்படி என்றால் கெளசல்யாவின் நிலை  சொல்லவும் வேண்டுமோ..

தன் இரு மகள்களிடம்… “ என் மகனுக்கு கல்யாணம்.. நான் பெண் பார்த்து  நான் முன் இருந்து எல்லாம் செய்ய வேண்டியது..

ஆனால் இப்போ நான் அவன் கல்யாணத்தை பார்க்கும் பாக்கியம் கூட எனக்கு கிடைக்கல… 

இதுக்கு எல்லாம் காரணம் நானே தான்.. நானே தான் ..” என்று சொல்லி கதறிய தாய்க்கு ஆறுதல் கூட சொல்ல முடியாத நிலையில் தான் அவரின் இரு மகள்களும் இருந்தனர்..

அவர்களுக்குமே தன் அண்ணனின் கல்யாணத்தை  பார்க்க அவ்வளவு ஆசை.. அதை தனுஜா வெளிப்படையாக சொல்லி விட்டாள்.

ஆனால் ஷைலஜா  அதை சொல்லாது தன் ஆதங்கத்தை முகத்தில் காட்டிய வாறு  சில சமயம் ஏதாவது கேட்டால்,  எடுத்து எரிந்து பேசி கொண்டான்ம் இருக்க….

அதை பார்த்த தனுஜாவுக்கு தான் என்னவோ போல் ஆகி விட்டது.. அதை தொட்டு தன் தங்கையிடம்..

“ அம்மா என் அப்பாவை கல்யாணம் செய்த தொட்டு தானே இப்படி ஆகி  விட்டது..   இல்லேன்னா  நீயும் அம்மாவும் இப்போ அண்ணன் வீட்டில் கல்யாண வேலையில் இருந்து இருப்பிங்க  ” என்று உண்மையான வருத்ததோடு தனுஜா சொன்னாள்..

அதை கேட்ட ஷைலஜா இவ்வளவு நேரம் இருந்த ஆதாங்கம் பறந்தோட..

“ எனக்கும் அப்பா தான்.. அம்மா அப்பாவை கல்யாணம் செய்யாம இருந்து இருந்தால், நான் எப்படி பிறந்து இருப்பேன் அக்கா…?  சென்டி மெண்டா பேசு.. ஆனால்  அதையும் ஒரு லாஜிக்கோடு பேசு அக்கா.” என்று  தன் அக்காவின் பேச்சில் இருந்த அபத்தத்தை சொன்னவள்…

 அடுத்து தன் சகோதரி பார்க்க சோகமாக இல்லாது சாதரணமாக  வீட்டில் நட மாடி கொண்டு இருந்தாள்..

கூடவே வளர்ந்தவளுக்கு தெரியாதா..? சாதரணமாக இருப்பதற்க்கும், தன்னை சாதரணமாக இருப்பது போல் காட்டி கொள்வதற்க்கும், இருக்கும் வித்தியாசம்..

அவள் சோகத்தோடு இருந்து இருந்தால் கூட தனுஜா நமக்கு போக கொடுப்பினை இல்லை என்று நினைத்து இருப்பாள்..

ஆனால் தனக்காக தன் வருத்தத்தை கூட முகத்தில் காட்டாது இருக்கும் தங்கைக்காக ஏதாவது செய்தாக வேண்டும்..

தாத்தாவின் மூலம் அம்மா ஷ்யாமின் கல்யாணத்திற்க்கு போக முடியாது… போனால் ஷ்யாம் அண்ணாவுக்கு தான் மன வருத்தமாகும்..

தன்னாலேயும், தன் அப்பாவினாலும், ஷ்யாம் அண்ணா அனுபவித்த துன்பம் போதும்.. இனி புதியதாக எந்த துன்பத்தையும் ஷ்யாம் அண்ணாவுக்கு கொடுக்க கூடாது என்று முடிவு செய்தாள்..

ஆனால் ஷைலஜா.. அன்று  ஷைலஜாவை பற்றி பேசும் போது ஷ்யாம் அண்ணன் குரல் கொஞ்சம் இடறி இருப்பது போல்  இருந்ததே…தனிமையில் யோசித்தவளுக்கு  அப்படி தான் என்று ஒரு  முடிவுக்கு வந்தவள்..

அன்று  ஷ்யாம் அண்ணாவின் பைனான்ஸ் நிறுவனத்திற்க்கு சென்ற போது, ஷ்யாம் அண்ணாவின் நண்பர் நல்ல முறையில் தன்னை நடத்தியது  அவளின் நியாபகத்திற்க்கு  வந்தது…

தான் நினைத்ததை உடனே செயல் படுத்த தனுஜா  மகேந்திரா பைனான்ஸ் நிறுவனத்திற்க்கு அழைப்பு விடுத்து சூர்யாவிடம் பேச வேண்டும் என்று கேட்டதற்க்கு,

சிறிது நேரத்திலேயே சூர்யாவிடம்  தொலை பேசி கை மாறியதும்..

“ நான் தனுஜா பேசுகிறேன்..” என்று பேச்சை ஆரம்பிக்க..

சூர்யாவோ.. “ தனுஜாவா…?  எந்த தனுஜா…?”  என்று தெரிந்தே  தெரியாதது  போல் கேட்டான்…

தனுஜா அவன் பேச்சை உண்மை என்று நம்பி…” சாரி.. சாரி…  நான் என்னை முறையா அறிமுகப்படுத்தி இருந்து இருக்க வேண்டும்..” என்று மன்னிப்பு கேட்டவளை, 

சூர்யா .. “ ரொம்ப கஷ்டம்….” என்று சொல்ல..

தனுஜாவுக்கு ஒன்றும் புரியாது.. “ ஆமா… பேர் மட்டும் சொன்னால் புரிவது கஷ்டம் தான்…” என்று சொன்னவள்..

“ நான்  கெளச…” என்று ஆரம்பித்த தனுஜா.. பின் மாற்றி..

“ பார்த்திபன் மகள்..” என்று சொல்லியவளின் பேச்சை  தொடர விடாது… சூர்யா இடையில் தடுத்து..

“ இந்த பழைய சினிமா  பேர் போல்… பார்த்திபன் மகள் என்று எல்லாம் சொல்ல வேண்டாம்.. முதலில் ஆரம்பித்தியே கெளசல்யா மகள்.. அதுவே சொல்லலாம்… இல்லை என்றால் ஷ்யாமின் பெரிய தங்கை… சொல்.. இது ரொம்ப நல்லா இருக்கு..” என்ற சூர்யாவின் பேச்சில், அந்த பக்கத்தில் பதில் இல்லாது போகவும்..

தொலை பேசியின் தொடர்பு அறுந்து விட்டதோ… என்று அவனுக்கு அவனே பேசிக் கொண்டு இருக்கும் போது அந்த பக்கத்தில் இருந்து அழுகையை அடக்கும் ஒலியாக களுக் என்ற  ஓசையில்..

சூர்யா.. “ தனுஜா இப்போ எதுக்கு அழறிங்க.. ஷ்யாம் உன் அண்ணனா இருப்பது அவ்வளவு வேதனையான விசயமா என்ன…?” என்று சொல்லி தனுஜாவின் மனதில் பாராத்தை தன் விளையாட்டு பேச்சின் மூலம், போக்க எண்ணினான்…

 சூர்யா  நினைத்தது போலவே அவன் பேச்சில் தனுஜா சிரித்து விட்டாள்..

அப்போதும் சூர்யா விடாது.. “ அப்போ உண்மையிலேயே   உனக்கு ஷ்யாம் உன் அண்ணனா இருப்பது அவ்வளவு வேதனையான விசயமா என்ன…?” என்று மீண்டும் சொல்ல…

இப்போது தனுஜா பதறி போனவளாக..  “ அய்யோ அப்படி எல்லாம் இல்ல… நீங்க அவரை என் அண்ணன் என்று சொல்வதி கேட்பதற்க்கே,  எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு.. 

இதே  அவரே என்னை தங்கையா ஏத்துக்குனா…?” என்று தனுஜா சொல்லும் போதே, அந்த குரலே   சொன்னது அவள் எவ்வளவு மகிழ்வாள் என்று…

“ கண்டிப்பா ஒரு நாள் அவனே சொல்வான் உன்னை அவன் தங்கை என்று..” 

பின் சிறிது தயங்கியவனாக.. “ உன்னை அவன் தங்கையா ஏத்துக்க இன்னொரு உறவு முறையில் நீ நுழைந்தாளே போதும்.. அவனுக்கு நீ தங்கையாக ஆகி விடலாம்..” என்று சொன்னவனின் பேச்சில்..

தனுஜா .. “ எப்படி..? எப்படி..? “ என்று பர பரத்து கேட்டாள்..

“ சொல்லுவேன்.. அப்புறம் நீ என்னை  திட்ட கூடாது…” என்று சொன்னவனுக்கு தனுஜா உடனடியாக..

“ ஆ திட்ட மாட்டேன்.. திட்ட மாட்டேன்..” என்று வாக்குறுதி அவனுக்கு  வழங்கினாள்…

“ என்னை தப்பா நினைக்க கூடாது..”

“ நான் ஏன் உங்களை தப்பா எடுத்துக்க போறேன்.. இன்னும் கேட்டால் என் அண்ணாவோடு என்னை நெருங்க வைக்கிறதுக்கு நான் உங்களை நல்லதா தான் நினைப்பேன்..” என்றவளின் பேச்சில்..

இத்தனை நாள் மனதில் வைத்து இருந்ததை அவளிடம் சொல்லி விட்டான்..

“ ஆண்களுக்கு ஒரு வழக்கம் இருக்கு.. அதாவது நல்ல ஆண்மகன்களுக்கு, நண்பனின் மனைவியை தங்கையாக பார்ப்பது..” என்றவனின் பேச்சு, தனுஜாவுக்கு புரியவில்லை…

“ என்ன சொல்றிங்க…?” என்று தனுஜா கேட்ட விதமே, அவளுக்கு  புரியவில்லை என்று..

திரும்பவும் சூர்யா சொன்ன…” ரொம்ப கஷ்டம்…”  என்ற  வார்த்தைக்கு.. 

தனுஜா.. “ அது தான் நானும் சொல்றேன்.. அண்ணா என்னை தங்கையா ஏற்று கொள்வது என்பது ரொம்ப கஷ்டமானது தான்…

இவள் வேலைக்கு ஆக மாட்டாள்.. நாம நேரிடையாகவே சொல்லி விடலாம் என்று..

“ என்னை நீ திருமணம் செய்து கொண்டாலும், என் நண்பனான ஷ்யாமுக்கு தங்கையாவே.. இப்போ புரியுதா…?” என்று கேட்ட கேள்விக்கு,

தனுஜாவிடம் இருந்து பதில் என்ன ஒரு சத்தத்தையும் காணாது சூர்யா..

“ முதல்ல அழுதியே.. அது போலாவது அழுது விடும்மா.. இல்லேன்னா  உன் அம்மாவிடம் சொல்ல போயிட்டியோ என்று நினைத்து என் மனது பக் பக் என்று அடித்து கொள்கிறது..” என்றவனின் பேச்சுக்கு பதிலாக தனுஜா..

“ என்னை பார்த்து இருக்கிங்க தானே.. அப்புறம் என்ன…?” என்று தனுஜா சொல்ல..

சூர்யா.. “ பார்த்து இருக்கேன்.. பார்த்து பிடித்த தொட்டு தான் கல்யாணம் செய்ய நினைக்கிறேன்..” என்று சூர்யா தன்னுடைய விளையாட்டு பேச்சை கை விட்டவனாக பேசினான்..

“ என் குறை… அனுதாபத்தில்..” என்று முழுவதுமாக சொல்லாது தனுஜா பிட்டு பிட்டு பேசியதிலேயே சூர்யாவுக்கு அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பது புரிந்து விட்டது…

இருந்தும்.. “ சொல்றது ஒழுங்கா புரிவது போல் பேசு..” என்று சூர்யா  ஒரு அதட்டல் போட்டான்..

“ எனக்கு கால் ஊனம் என்ற ஒரு குறை இருக்கு.. அதனால் அனுதாபத்தில் கல்யாணம் செய்ய நினைக்கிறிங்களா..?”  என்று கேட்டாள்…

இப்போது அவள் பேச்சு மிக திருத்தமாக இருந்தன.. சூர்யா… “ நீயே உன்னை குறையா நினைத்தால், மத்தவங்க நினைக்க மாட்டாங்களா…?

அதுவும் இல்லாம அது என்ன பேச்சு அனுதாபம் என்ற வார்த்தை.. நான் சொல்ட்டா… நான் உன்னை மணக்க கேட்டதற்க்கு முகத்தில் அடித்தது போல்,  முடியாது என்று சொல்லாது… இப்படி எல்லாம் பேசுறேன் என்று…” என்ற அவன் குற்றசாற்றில் தனுஜா பதறி போனவளாக..

“ உங்க கிட்ட என்ன குறை இருக்கு உங்களை மறுக்க..” என்ற தனுஜாவின் அந்த வார்த்தை, சூர்யாவுக்கு  காதில்  தேன் வந்து பாய்வது போல் தான் இருந்தன..

இருந்தும் அவள் நேரிடையாக  தன்னிடம்..

“  உங்களை திருமணம் செய்ய  சம்மதம்.” என்று சொல்ல வேண்டும்.. அப்போது தான் ஷ்யாமிடம் பேச முடியும் என்று நினைத்து..

“ ஏன் இல்லை… என்னிடம் குறை.. அது இருக்கு ஏகத்துக்கு… எனக்கு இரண்டு தங்கைகள்.. அப்பா ஐந்து வருடம் முன் தான் இறந்து விட்டார்.. அது வரை சென்னையில் தான் இருந்தோம்…

சென்னையில் குடும்பம் நடத்த நிறைய செலவு ஆகும் ..அதோடு ஊரில்  நிலம் கொஞ்சம் இருக்கு அதில் அம்மா விவசாயம் பார்க்கிறாங்க..” என்று சொன்னவனிடம் தனுஜா..

“ இதில் என்ன குறை இருக்கு..? அதோடு ஒரு குடும்பத்தை  பொறுப்பா பார்த்து கொள்கிறிங்க என்ற நிறை தானே இருக்கு..” என்று கேட்டாள்..

“சொந்த மாமா பெண்களே  இதை குறையா தானே பார்க்கிறாங்க…  தங்கச்சிக்கு கல்யாண செய்யனும்..  சொல்வது போல் சொத்து கிடையாது…இப்படி… அதுவும் அவங்களும் எங்களை போல் மிடில் க்ளாஸ் தான்..

நீங்க ஷ்யாம் தங்கை.. பார்த்திபன் மகள்.. இப்போ பைனான்ஸ் நிறுவனத்தை எடுத்து நடத்துறிங்க…” என்று இப்படி பேசிக் கொண்டு இருக்க தன் முன் நின்ற ஷ்யாமை பார்த்து அவன் பேச்சு பாதியில் நின்று விட..

அவனிடம் இருந்து  தொலை பேசியை வாங்கி  காதில் வைக்கும் போது..

தனுஜா.. “ ஹலோ.. ஹலோ..” என்று  சூர்யாவிடம் இருந்து எந்த பேச்சும் இல்லாது போக கத்தி கொண்டு இருந்தாள்…

Advertisement