Advertisement

அத்தியாயம்….11

தனம்மா  தொடர்ந்து ஏதோ பேச ஆரம்பிக்கும் போதே அவரை மேல பேச விடாது. “ தனம்மா போதும்..  நான் ரொம்ப  டையடா இருக்கேன்…” என்று சொல்லி விட்டு கைகள் இரண்டையும்  முறுக்கி கொண்டு தான் மிகவும் டையாடா இருக்கிறேன் என்று செயலாலும் தன் தனம்மாவிடம் காட்டினான் ஷ்யாம்..

இது போதாதா.. “  நீ போ கண்ணா நான் ஒரு கூறு கெட்டவ.. இப்போ தான் வேலை முடிந்து வர்றவன் நிலை தெரியாது பேசிட்டு இருக்கேன்… நீ போய் ஓய்வு எடு கண்ணா.. நாம இதை பத்தி ஆர அமர ஞாயிற்று கிழமை பேசுவோம்..” என்று சொல்லி ஷ்யாமை  அவன் அறைக்கு அனுப்பி வைத்தார் அவனின் தனம்மா..

இதை அனைத்தையும் ஷ்யாம் சாப்பிடும் முன் சாப்பிட்டு விட்டு அங்கு இருந்த ஈச்சி சேரில் அமர்ந்து கொண்டு, இந்த நாடகத்தை பார்த்து கொண்டு இருந்த ஷ்யாமின் தாத்தா கிருஷ்ணமூர்த்தி ஷ்யாம் அந்த இடத்தை  விட்டு அகன்றதும்..

அது வரை அடக்கி வைத்து இருந்த சிரிப்பை சேர்த்து வைத்த சத்தமாக சிரித்தவர் தன் மனைவியை பார்த்து..

“ சொல்லிட்டியா  ஞாயிறு பேசலாம் என்று.. உன் கண்ணாவுக்கு அன்று இருப்பதிலேயே  மிக முக்கியமான வேலை வந்து  விடும் பாரேன்..” என்று தன் பேரனை நன்கு அறிந்தவராக சொன்னார்..

தன் கணவனின் பேச்சில் என்ன தான் நாம் இவ்வளவு யோசித்து   பேசியும்,  நம் பேரனிடம் இருந்து சாதகமாக  ஒரு வார்த்தையும் அவன் வாயில் இருந்து வர வழைக்க முடியவில்லையே..

அதற்க்கு மாறாக நாமே அவனை உன்  அறைக்கு போ என்று சொல்லும் படி தானே ஆகி விட்டது என்று கோபத்தில் இருந்த தனம்மா , கிருஷ்ணமூர்த்தி இப்படி பேசவும்…

“ இவ்வளவு நேரமும் மிச்சர் சாப்பிட்டு இருந்திங்களே.. அதையே வாயில் போட்டு திணிங்க..” என்று தன் பேரனிடம் காட்ட முடியாத கோபத்தை தன் கணவரிடம் காட்டினார்..

தனம்மா சொல்வதற்க்கு ஏற்ப தான் கிருஷ்ணமூர்த்தி அப்போது  தான் ஒரு செவ்வாழையை  கால் வாசி பிட்டு தன் வாயில் திணித்து கொண்டு இருந்ததால், மனைவியின் பேச்சுக்கு  உடனே பதில் அளிக்க முடியாது போயிற்று..

இருந்தும் சைகையில்.. “ ம்.. “ம்..” என்று சொல்லி தன் கையில் இருந்த மீதி வாழை பழத்தை தன் மனைவியிடம் காட்டினார்..

தனம்மாவோ.., “ எனக்கு வேண்டாம் நீங்களே  சாப்பிடுங்க..” என்று இன்னும் அதே கோபத்தோடு தான் தன் கணவரிடம் எரிந்து   பேசினார்..

அதற்க்குள் தன் வாயில் இருந்த வாழை பழத்தை முழுங்கி விட்ட கிருஷ்ணமூர்த்தி.. “ நான் மிச்சர் சாப்பிடல தனா.. வாழை பழம் சாப்பிடுறேன்…” என்று அவர்  தன் பேச்சை அதோடு நிறுத்தி இருந்தால் கூட  தனம்மாவின் கோபம் குறைந்து இருக்குமோ என்னவோ..

ஆனால் அன்று அவர் வாயில் சனி ததிகினத்தோம் என்று ஆடுவது போல்… “  நீ நல்லது எல்லாம் சாப்பிட மாட்டேன் என்று தான் எனக்கு தெரியுமே.. உன்னை  ஏன் நான் சாப்பிட சொல்ல போறேன்…? ” என்று அந்த கடைசி வார்த்தை முடித்தது தான் அவருக்கு தெரியும்..

அதோடு அவர்  ஊமையாகி விட்டது போல்.. அனைத்து பேச்சும் தனம்மாவின் வசம் வந்து விட்டது…

“ ஏன் பேச மாட்டிங்க..  என்னடா ஒருத்தி தனியா பேரன்  கிட்ட மல்லு கட்டி  பேசிட்டு இருக்காளே.. நாமும்  ஏதாவது ஆதரவா பேசுவோம் என்று இல்ல.., காதில் அந்த ஒயர் இருக்கும் போது  மத்தவங்க பேசுவது  தெரியாது தானே.. .

அப்போ நாங்க பேசுனது உங்களுக்கு எப்படி கேட்டது..?” என்ற மனைவி சந்தேகம் கேட்ட பின் தான் கிருஷ்னமூர்த்தி தன் காதில் இருந்த அந்த ஒயரை சட்டென்று எடுத்து விட்டு , கூடவே திருட்டு முழியில் தன் மனைவியை அய்யோ மாட்டி கொண்டோமே என்ற தினுசியில்  தன் மனைவியை  பார்த்தார்…

கணவனின் முழியில் .. “ ஓ இந்த வேல எல்லாம் பண்ண ஆரம்பித்து விட்டிங்களா..” என்று தனம்மா  இன்னும் என்ன என்னவோ பேசி கொண்டே போக..

கிருஷ்ணமூர்த்தி தான் எழுந்து மனைவியின் அருகில் சென்று அவர்  தோள் பற்றி அவரை அமைதி படுத்துவது போல்..

“ தோ பார் தனா… நம்ம பேரன் சின்ன பையன் கிடையாது என்னோட.. . உன்னோட நம்ம மகனோட… அவன் புத்திசாலி.. 

அவனுக்கு நாம் ஏதும் சொல்ல வேண்டியது கிடையாது… அவனுக்கு எல்லாம் புரியும்,..  இங்கு அவன் வந்த புதியதில் தான் அவன்  அம்மா அம்மா என்று கேட்டு அடம் பிடித்தான்..பின் அவன் வாயில் இருந்து அந்த அம்மா என்று வார்த்தை வந்ததா…?

அதே போல் அடம் தான் பிடித்தானா.? .சொல்லு தனா… ?புரிஞ்சி இருக்கு.. அவனுக்கு புரிந்து இருக்கு.. அது தான் அவன் அமைதியா ஆகிட்டான்…” என்று  பெருமையுடன் இவ்வளவு நேரமும் பேசிக் கொண்டு இருந்த கிருஷ்ணமூர்த்தி..

பின்.. “ அமைதியா மட்டுமா.. இறுக்கமுமாக தானே மாறி விட்டான்ன். அவன் வயதுக்கு ஏத்த குறும்பு… சிரிப்பு என்று எதுவும் இல்லாம தானே என் பேரன் வளர்ந்தான்.. அது எல்லாம் அவன் மறந்து தான் விடுவானா..?” என்று  முற்பகுதி  சோசகமாக சொல்லி கொண்டு  வந்தவர்.. கடைசியில் பேசும் போது அவர் குரலில் அவ்வளவு ஒரு கோபம் காணப்பட்டது.

கணவனின் பேச்சில் தனம்மா .. “ என்னங்க நீங்க அவனின் கோபத்தை குற்சிப்பிங்க என்று உங்க கிட்ட சொன்னா.. நீங்க இன்னும் அவனுக்கு கொம்பை சீவி விடுவிங்க போல..” என்று பட பட என்று பொறிந்த தனம்மாவையே பார்த்த கிருஷ்ணமூர்த்தி…

“ ஏன்னா என்னால எதையும் மறக்க முடியல தனா… அவனின் குழந்தை பருவத்தை என்னால மறக்க முடியல..

என் மகன் செத்தும் நான் அவங்களுக்காக எல்லாம்  பார்த்தேன்.. சின்ன பெண் .. நம்ம அழச்சிட்டு வந்தா கடைசி வரை நம்ம மருமகளாவே இருந்துடுவா என்று நினைத்து தான்  பேரன் முகத்தில் மகனை பார்க்கலாம் என்ற என் ஆசையை கூட அடக்கிட்டு இருந்தேன்…

 என்  பேரனுக்கு அப்பா தான் இல்லை அம்மாவாவது இருக்கட்டும் என்று நினைத்து..

ஆனா அவங்க… என்   பேரனை எங்கும் பார்க்கல.. இப்போ என்ன தான் நீ மதியம்  கெளசல்யா  இப்படி பேசுச்சி என்று சொன்னாலுமே, என்னால் அதை ஏத்துக்க முடியாது..

ஷ்யாமுக்கு நாம இருந்தோம்.. அதுவும் கொஞ்சம் ஆரோக்கியமா இருந்த தொட்டு பரவாயில்லை.. இதே  நாம இல்லாது.. இல்ல ஒருத்தர் இருந்து ஒருத்தர் இல்லாது..

இல்ல நாமவே உடம்பு சரியில்லாது இருந்து இருந்தால், என் பேரன்  கதி என்ன தனா..? என்ன..?” என்று கணவர் ஆவேசத்துடன் கேட்கும் கேள்விகள் அனைத்துமே சரியானது தான் என்று கிருஷ்ணமூர்த்தியின் தனாவுக்கு புரிந்து தான் இருந்த்து..

ஆனால் அவரின் இப்போதைய கவலை தங்களுக்கு அடுத்து..? இது தான் அவர் மனதில் இப்போது எல்லாம் கேள்வி எழுக்கிறது.

அவனின் இந்த இறுக்கத்திற்க்கு  காரணம் அவன் தனித்து வளர்ந்தது தான்..  மனைவி என்ற ஒரு உறவு போதுமா..? தங்கை அம்மா என்று வாழட்டும் என்ற ஆசையில் தான் அவர் இவ்வளவு பேச்சும் பேசியது..

இப்போது அவன் எப்படி வாழ வேண்டும் என்று அவன் தலையில் என்ன எழுதி இருக்கோ அது தான் நடக்கும் என்பது போல் கடவுளின் மேலேயே பாரத்தை போட்டு  படுக்க  சென்று  விட்டார்…

கிருஷ்ணமூர்த்தி சொன்னது போல் தான் தன் அறைக்கு சென்ற ஷ்யாம், தனம்மா தன் பழைய காயத்தை கிளறி விட்டதில்,  இப்போது படுத்தாலும் தூங்க  முடியாது என்று நினைத்தான்.

அதனால்  எப்போதும் தன் மனது அமைதி படுத்த மெலடி சாங்கை போட்டு கேட்டு கொண்டு இருந்தவனுக்கு இன்று ஏனோ அந்த பாடல்கள்  கூட அவன் மனதை அமைதி படுத்தவில்லை..

அதற்க்கு மாறாக அந்த பாடல்களின் சில வரிகள் அவனுக்கு சக்தியை நினைவூட்ட.. அழைக்கலாமா..? என்று பேசியை எடுத்தவன் அப்போது தான் நேரத்தை பார்த்தான்..

மணி பத்தை கடந்து இருந்தது இப்போது அழைக்கலாமா..? என்று யோசிக்கும் போதே,  அவன் பேசிக்கு சக்தியிடம் இருந்து அழைப்பு வந்து இருந்தது…

அழைக்க யோசித்தவன் வந்த அழைப்பை எடுக்க ஒரு நிமிடம் கூட யோசிக்காது எடுத்து விட்டான்.. ஆனால் அந்த பக்கத்தில் இருந்து எந்த குரலும் கேட்காது போனதில் ஷ்யாமுக்கு சந்தேகம் வந்து விட்டது..

அழைத்தது  நம் பெரிய பேபியா…? சின்ன பேபியா…

? என்ற சந்தேகம் ஷ்யாமுக்கு வந்து  விட்டது…  சாரு அழைத்து அமைதியாக இருக்கிறாளோ.. நம் சின்ன பேபி தான் ஒரு முறை  பார்த்தால் போதும் அதை சட்டென்று பிடித்து கொள்வாளோ என்று நினைத்து..

“ சாரு பேபி..” என்று  என்று அழைத்தான்..

இப்போது பேசியின் அந்த பக்கத்தில் இருந்து.. “ எப்போ பார்த்தாலும் உங்களுக்கு உங்க சாரு பேபி நியாபகம் தானா..?” என்று மனதில் ஷ்யாம் சாருவை தன் மகளாக ஏற்றதில் மகிழ்ச்சியாக இருந்தாலும், மேலுக்கு என் நியாபகம் இல்லை என்பது போல் கேட்டாள்…

உடனே ஷ்யாம். “  என் பேபி  என்று  தான்  முதலில் நினச்சேன்.. ஆனா குரல் கேட்காம போகவும்  சின்ன பேபி என்று நினைச்சிட்டேன்.. எனக்கு  அவள் நியாபகம் மட்டும் இல்ல உன் நியாபமும்   தான்..

அதற்க்கு சான்று  இதோ நீ கூப்பிட்ட உடனே  போனை அட்டண் செய்தேனே எப்படி..? நானே கூப்பிடலாம் என்று தான் நினைத்து கொண்டு இருந்தேன்..

ஆனா நேரம் ஆகிடுச்சே.. இப்போ போன் செய்தா தப்பா ஆகும்…” என்று தான் கூப்பிடல” என்று ஷ்யாம் சொல்லவும் சக்தி உடனே..

“ அப்போ நான் உங்களை இப்போ இந்த சமயத்தில் கூப்பிட்டது தப்பா..?” என்று கேட்டாள்..

ஷ்யாம் பதறியவனாக.. “ என்ன சக்தி இப்படி கேட்குற.. ?என்னை எந்த சமயத்திலும் கூப்பிட்டும் முழு உரிமை உனக்கு உனக்கு மட்டும் தான் இருக்கு..” என்று சொன்னதுமே..

சக்தி..” அதே தான்.. உங்களுக்கும் என்னை எந்த சமயத்திலும் கூப்பிடும் உரிமை உங்களுக்கு மட்டும் தான் இருக்கு..” என்று சொன்னவள் உடனே அவசர அவசரமாக..

“ போனில்..” என்று சொல்லி நிறுத்தவும்..

“ முன் எச்சரிக்கையா தான் இருக்க பரவாயில்லை பிழைத்து கொள்வாய்…” என்று சொன்னவன்..

“ எதுக்கு போன் செய்த சக்தி சும்மா பேசவா இல்ல ஏதாவது விசயம் இருக்கா..?” என்று கேட்டான்..

இது வரை சகஜமாகபேசிக் கொண்டு இருந்த சக்தியின் அமைதி ஷ்யாமுக்கு ஏதோ இருப்பதாக தோன்ற..

“ சக்தி என்ன ஏதாவது பிரச்சனையா…? ” என்று கேட்டவன்..

உடனே மாலை சக்தி பேசியது நியாபகதிற்க்கு வர.. “ அந்த சரண் ஏதாவது பிரச்சனை செய்தானா…?” என்று கேட்டான்..

இதற்க்கு சக்தியிடம் இருந்து … “ இல்ல.. பிரச்சனை எல்லாம்  கிடையாது.. ஈவினிங் நான் வரும் போது  சாரு அப்பாவின் மொத்த குடும்பமும் நம் வீட்டில் தான் இருந்தாங்க..” என்ற சக்தியின் பதிலில்..

சக்தி சொன்ன சாருவின் அப்பாவில்.. “ இனி ஒரு தரம் உன் வாயில் இருந்து அவனை சாருவின் அப்பா என்று சொல்ல கூடாது..”

முதன் முறை ஷ்யாம் தன் கோபத்தை சக்தியிடன் காட்டினான்…

ஷ்யாமின் இந்த கோபத்தில் சக்தி அமைதியாகி விட்டாள்.. அவள் எதிர் பார்க்கவில்லை.. இதற்க்கு இவன் இப்படி கோபப்படுவான் என்று ..

உண்மையில் அவன் தானே சாருவின் அப்பா.. இல்லை என்று சொன்னால் அது என் அக்காவின் ஒழுக்கத்தை கலங்கப்படுத்துவது போல் தானே.. என்று அவள் நினைக்கும்  போது..

அவளின் நினைப்புக்கு எதிர் வதமாக  அவனின் நியாயத்தை ஷ்யாம் சொன்னான்..

“ சாரு  உன்னை தானே அம்மா என்று கூப்பிடுறா… அப்போ அப்பா யார்..? இப்போ நீ சொல்..?” என்ற அவனின் பேச்சில்  பொட்டில் அடித்தது போல்  நிதர்சனத்தை தானே நான் சொன்னேன் என்ற அப்பா என்ற வார்த்தையில் இவ்வளவு மறை பொருள் இருக்கும் என்று தெரியாது போய் பேசி விட்டதில்..

சக்தி தன் தவறு உணர்ந்து.. “ சாரி .. நான் தெரியாம  சொல்லிட்டேன்.. சாருவுக்கு நான் அம்மான்னா நீங்க தான் அப்பா.. நீங்க மட்டும் தான் அப்பாவா இருக்க முடியும்..” என்ற சக்தியின் அழுத்தம் திருத்தமான பேச்சில் ஷ்யாமின் மனம் குளிர்ந்து தான் போனது..

அதன் விளைவாக.. “ பரவாயில்லை.. முதலில் அந்த வார்த்தை சொல்லி என்னை கோபப்படுத்தினாலும், அடுத்து நீ சொன்ன அவன் குடும்பம் நம்ம வீட்டில் தான் இருந்தது என்று என்னையும் உன் குடும்பத்தில் சேர்த்து சொன்னதினால் உன்னை மன்னிச்சிட்டேன்..” என்ற  ஷ்யாமின் ஜாலமான  பேச்சில்..

“ பேச்சில் மட்டும் எல்லாம் போல..” என்று சக்தி ஒன்று நினைத்து  சொல்ல

 ஷ்யாமோ .. “ எனக்கு எந்த சான்ஸும் கொடுக்காது… பேச்சில் மட்டும் தான் என்று நீ எப்படி சொல்வ..?” என்று ஷ்யாம் கோபமாக பேசுவது போல் இருந்தாலுமே, அவன் குரலில்  தெரிந்த ஏதோ ஒரு பாவத்தில் சட்டென்று சக்தி தான் பேச வந்த விசயமான..

“ சாருவின் அப்பா நான் தான் என்று சொன்னா மட்டும் போதாது.. அதுக்கு என்ன செய்திங்க.. இல்ல செய்ய போறிங்க என்று தான்   சொல்ல வந்தேன்..” என்ற சக்தியின் பேச்சில், ஷ்யாம் இவ்வளவு நேரமும் பேசிய  விளையாட்டு பேச்சை விடுத்து..

“ வந்தவங்க என்ன பேசினாங்க சக்தி…?” என்று நேரிடையாக விசயத்துக்கு வந்தான்…

சக்தியும்  அவர்கள் பேசிய சாராம்சமான பேச்சாக… “ அவங்க மருமகளுக்கு ட்ரீட்மெண்ட் எடுத்தும் குழந்தை பிறக்கல.. ஆனா அதுக்கு தான் சாரு வேண்டும் என்று கேட்காம..

நமக்கு உதவி செய்வது போல அம்மாவிடம்  சரண் அப்பா உங்களுக்கு வயது ஆகுது… நாளை பின்ன சக்திக்கு கல்யாணம் செய்யனும்.. குழந்தையால் அவள் வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிப்புக்கு ஆளாக கூடாது..

அதோடு  சாரு அவன் மகனின் இரத்தம்.. எந்த வகையிலும் அந்த  குழந்தையும் பாதிப்பு ஆளாக கூடாது …” என்று சொன்னாங்க…” என்று சக்தி சரண் வீட்டவர்கள் பேசிய பேச்சை சொன்னாள்..

அதற்க்கு.. “ ஓ..” என்று கிண்டலாக ஒரு ஓ போட்டவனிடம் சக்தி தொடர்ந்து..

“ அதுக்கு அம்மா கூட  சக்திக்கு நல்ல இடம்  தழைந்து விட்டது…  சாருவை அவர் மகளா ஏத்திக்கிட்டாங்க..” என்று அம்மா சொன்னது தான்… இது வரை அப்பாவை பேச விட்டு இருந்த அந்த சரண்..

“ என் குழந்தைக்கு யார் அப்பாவாவது…? “ அப்படின்னு பொங்கிட்டான்..

“ நான் தான் எனக்கு கணவராக ஆக போற நீங்க தான் அப்பா… உங்களால் ஆனதை பார்த்துக்க என்று சொல்லிட்டேன்..” என்று வீர வேசமாக பேசிய சக்தி..

பின்.. “ உங்களை நம்பி ஆவது பார்த்துக்க என்று சொல்லிட்டேன்.. பார்த்துப்பிங்களே…” என்று சக்தி கேட்ட விதத்தில்  ஷ்யாமுக்கு அப்படி ஒரு  சிரிப்பு வந்து விட்டது…

 

Advertisement