Advertisement

ஒரு   மாதம்   கழித்து…
மது கேட்டிருந்த இந்த ஒரு மாத கால அவகாசத்தில் ஆர்யா மதுவினுடன் பேசுவதை முற்றிலும் குறைத்திருந்தான். அவள் இருக்கும் திசைப்பக்கமாகத் திரும்பியும் பார்க்கவில்லை அவன். பென் டிரைவ்வைப் பற்றி ஏதும் கேட்டு விடுவாளோ என்று பயம்… (பலான படங்கள் அடங்கிய ப்ளூ கலர் பென்டிரைவ்) அதனால் நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்தபடியே இருந்தான்.
முக்கியமாக லிஃப்ட்டிற்குள் அவன் அவளுடன் தனிமையில் இருப்பதை அரவே தவிர்த்தான். அன்றைய லிஃப்ட்டின் தனிமையில் முத்தம் வரை சென்றவன் அடுத்த தனிமை லிஃப்ட்டில் கிடைத்தால் அது முத்தத்தோடு நிற்காது என்பதை உறுதியாகத் தெரிந்து வைத்திருந்த காரணத்தால் அந்தத் தனிமையைத் தவிர்த்தான்.
தனது அழகு முதலிரவை அவன் லிஃப்ட்டிற்குள் கொண்டாடவும் விரும்பவில்லை.
சரியாக முப்பது நாட்கள் முடிந்தபோது… அந்த முபத்தியோராம் நாள் வந்தபோது…
“மது உனக்கு நான் நாலு ப்ளான்க் மெயில் அனுப்பிருக்கேன். இன்னும் பத்து நிமிஷத்துல அதுக்கு எல்லாம் எனக்கு வார்த்தைகள் வேணும்.” என்று மதுவிற்கு வாட்ஸ் ஆப் செய்தான்.
ஆர்யா சொன்ன பத்து நிமிடம் கடந்து போன பிறகுகூட மதுவின் மின்னஞ்சல் வரவில்லை. பற்களைக் கடித்துக்கொண்டு “குண்டம்மா… குண்டு கத்திரிக்கா… அலைய விடுறா பாரு. நாலே நாலு ப்ளான்க் மெயில்… அதுக்கு ரிப்ளை பண்ண முடியில அவளுக்கு…” என்று அவளைத் திட்டியபடியே கோபத்தை அடக்கவே முடியாமல் ஒரு டம்ளர் தண்ணீரைக் குடித்தான்.
மதுவின் கைபேசிக்கு அழைத்தான். நேரில் வரச்சொன்னான். மது நேரில் அவனது கேபினுக்கு ஸ்வீட்டியுடன் வந்தாள். ஆர்யாவுடன் பத்து நிமிடங்கள் பேசினாள். அவனது ரெட் கலர் பென்டிரைவ்வை அவனது கையில் கோபமாகத் திணித்தாள். பிறகு சென்றுவிட்டாள்.
பிறகு விவேக்கிற்கு அழைத்து, “டேய் மச்சான். வாழ்க்கையில முதல் தடவையா தண்ணியடிக்கப் போறேன். பப்புக்கு வர்றியா?” என்று கோபமாகக் கேட்டான் ஆர்யா.
இருவரும் பப்புக்குச் சென்றனர். தண்ணியடித்தனர். வீட்டிற்கு வந்ததும் மௌனராகம் படம் பார்த்துவிட்டு உறங்கினர். மறுநாள் விடிந்து பல மணி நேரம் கழித்து விவேக் எழுந்தபோது ஆர்யாவைக் காணவில்லை.
பெங்களூர் டோல் கேட்…
விவேக் மற்றும் குருவின் உரையாடல்…
“ஹா… ஹா… அந்த ப்ளூ கலர் பென் டிரைவ்வில் என்ன படமெல்லாம் ஆர்யா வச்சிருந்தானாம்? அதைப் பார்த்திட்டுதான் மது கோபமா பேசிருப்பா… அந்தப் படங்கள் பெயர் சொல்லு விவேக்.”
‘ரொம்ப முக்கியம்…’ என்று வாய்க்குள் புலம்பிய விவேக், “சார்… அதுலாம் எங்கள மாதிரி வயசுப் பசங்க பார்க்கிற இங்கிலிஷ் படம் தான் சார்… வேற எதுவும் தப்பா இல்ல சார். நாங்கலாம் ரொம்ப ரொம்ப நல்ல பசங்க சார்.”
“உங்கள மாதிரி வயசுப் பசங்கள நம்ப முடியாது. படத்தோட பெயரைச் சொல்லு… அப்பதான் நான் நம்புவேன்.”
விவேக் தலையில் அடிக்காத குறையாக புலம்பியபடி அவர் காதுருகே சென்று அனைத்து படங்களின் பெயரையும் சொன்னான்.
“இந்த படமெல்லாம் ரொம்ப மோசம் இல்லயே… இதுலாம் பார்க்கிறதுல தப்பு இல்லதான்… ஆனா பொண்ணுங்க ஒத்துக்க மாட்டாங்கப்பா. ஆம்பள எனக்குப் புரியிது, ஆனா பொண்ணுங்க ஒத்துக்க மாட்டாங்கப்பா… ஒரு வழியா என்னோட டவுட் தீர்ந்திடுச்சு… மது ஸ்வீட்டிகூட பென்டிரைவ் கொடுக்க அவன் கேபினுக்கு வந்தப்ப தான் அவ அவனோட மூக்குமேல கைவச்சி பேசிருக்கணும்.”- காவல்துறை அதிகாரி சங்கர்.
“சார்… அது அப்படி இல்ல… இது எல்லாம் ஒரு கெட்ட கனவா…”
“ஆர்யாவை இதையெல்லாம் ஒரு கெட்ட கனவா நினைச்சு மறக்க சொல்றியா? ஆர்யா மதுவை மறக்கவே மாட்டான்… இரு நானே மதுக்கு கால் பண்றேன். பிரச்சனையை எப்படி நல்லபடியா முடிக்கிறேன்னு பாரு…” என்றவர் விவேக்கின் மறுப்பை மீறி மதுவிற்கு அழைத்திருந்தார்.
ஆர்யா மதுவின் சந்திப்பிற்கு நான்கு மணி நேரத்தில் ஏற்பாடும் செய்திருந்தார்.
                *   *   *
மது, ஆர்யா, விவேக், சங்கர் மூவரின் முன்னேயும் இரண்டு மினரல் வாட்டர் பாட்டிலும், ஆளுக்கு ஒரு ஆரன்ஞ் ஜுஸ்ஸும் இருந்தது.  அனைவரும் அதை முன்னே வைத்துக்கொண்டு வேடிக்கை பார்த்தபோது காவல் துறை அதிகாரி தனது ஜுஸை எடுத்து ஒரு மிடறுகுடித்தபடி பேச்சை மதுவிடமிருந்து ஆரம்பித்தார்.
“ஏம்மா ஆர்யா மூக்கு மேல கையை வச்சி அவனை வேணாம்னு சொன்ன?”- மதுவிடம் காவல்துறை அதிகாரி சங்கர்.
“சார்… அப்படி எல்லாம் மது சொல்லலை சார். மௌனராகம் படம் பார்த்துட்டு படுத்தேனா… அதனால் கனவுல தான் சார் அப்படி ஒரு சீன் வந்தது. அந்தப் படத்துல வரும் ரேவதி-கார்த்திக் சீன் மனசுல அப்படியே பதிஞ்சி, கனவா வந்திடுச்சு…” என்று போதை தெளிந்த ஆர்யா அசால்ட்டாய் சொல்லவும்,
“என்னது கனவா? பின்ன எதுக்கு தண்ணியடிச்ச?”- காவல் துறை அதிகாரி சங்கர்.
“முப்பது நாள் முடிந்தபிறகும் மது மெயில் அனுப்பல உடனே நேர்ல வரச்சொன்னேன்… ஆனா அவ ஸ்வீட்டியோட என் கேபினுக்கு வந்தா. ஸ்வீட்டி முன்னாடி நான் என்னோட லவ்வைப் பற்றி பேச முடியுமா சார்? மெயிலும் அனுப்பல, தனியா வான்னு கூப்பிட்டா ஸ்வீட்டியோட வந்து நிற்குறா… பென் டிரைவ்வைக் கையில கோபமா திணிச்சிட்டு இன்னும் ரெண்டு நாள் டைம் வேணும்னு கேட்டா… அதான் கோபத்துல விவேக்கை பப்புக்கு கூப்பிட்டேன்.”- இப்போதும் கோபமாய் ஆர்யா.
“ஷ்…” என்று பெருமூச்செறிந்துவிட்டு ஒரு மினரல் வாட்டர் பாட்டிலை மொத்தமாக தலையில் ஊற்றிக்கொண்டார் சங்கர்.
அப்படியே அவர் கோபமாக விவேக்கைப் பார்க்கவும்,
“சார் நான் தான் ஆரம்பத்துல இருந்து அது ஒரு கனவு, கெட்ட கனவுன்னு சொன்னேன்ல சார்? நீங்க தான் என்னை அதுக்கு மேல பேசவே விடல.”- பயந்தபடியே விவேக்.
“ஷ்…” என்றவர் இன்னொரு மினரல் வாட்டர் பாட்டில் வாங்கி தண்ணீரை முகத்தில் ஊற்றிக்கொண்டார்.
“நீ என்னம்மா வந்த நேரத்துல இருந்து பேசாம இருக்க? ஏதாவது பேசு.”- சங்கர் மதுவிடம்.
“சார்… ஒரு பையனைப் பார்த்ததும் வர்றதுக்கு பேரு லவ் இல்ல சார்… யோசிக்க டைம் வேணும்ல? அந்தப் பையன் நல்லவனா? கெட்டவனான்னு யோசிக்க டைம் வேணும்ல?”
“ஆமா… ஆமா… நீ சொல்றது ரொம்ப சரி.”
“அதான் சார்… நான் ஒரு மாசம் டைம் கேட்டேன். அது தப்பா? ஒரு மாசம் டைம் பத்தலை… அதான் ரெண்டு நாள்… ரெண்டே ரெண்டு நாள் எக்ஸ்ட்ரா கேட்டேன்… அது தப்பா சார்??” என்று கோபமாகக் கேட்க, அவளைப் பார்த்து பயந்தேபோன சங்கர்,
“தப்பே இல்ல மா… நீ பத்து நாள் எக்ஸ்ட்ரா கேட்டாக்கூட தப்பில்ல…” – சங்கர்.
“தாராளப் பிரபுதான் டா இவரு… நம்மகிட்ட பத்து பத்தா ரெண்டு பத்தாயிரம் வாங்கிட்டு மதுவுக்கு சார் எக்ஸ்ட்ராவாக பத்து நாள் அள்ளிக்கொடுக்கிறார் பாரேன்.”- ஆர்யாவிடம் கிசுகிசுத்தான் விவேக்.
ஆர்யாவும் விவேக்கும் கோபத்தில் வெந்துகொண்டிருக்க சங்கர் அவர்களைக் கண்டு கொள்ளாமல் மேலும் தொடர்ந்தார்,
“நீ ரொம்ப பிரிலியன்ட். நீ என்ன முடிவு எடுத்தாலும் இந்த அங்கிள்கிட்ட சொல்லுமா. நான் உனக்கு ஹெல்ப் பண்றேன். எனக்கும் இரண்டு பொண்ணுங்க இருக்கு. நீங்க பேசிட்டுக் கிளம்புங்க… வீட்டுக்குப் போனதும் உனக்கு கால் பண்ணி உன்னோட முடிவை கேட்குறேன்.” என்று மதுவிடம் சொன்ன சங்கர், ஆர்யாவிடம் திரும்பி இதற்குதான்… இந்தப் பொம்பள ஹிட்லர் ஃபிகருக்குத்தான் ஆசைபட்டாயா பாலகுமாரா? என்பது போல ஒரு லுக்விட்டுக்கொண்டு, “இந்தப் பொண்ணு என்ன சொல்லுதோ அது தான் முடிவு.” என்று கூறிவிட்டு தனது ஜீப்பில் பறந்துவிட்டார்.
“டேய்… இந்த ஆளை ஆரம்பத்துல இருந்து நம்பக்கூடாதுன்னு என் உள் மனசு சொல்லிட்டே இருந்திச்சு டா. அது சரியாப் போச்சு. ரெண்டு பொண்ணுங்களுக்கு அப்பாவாம் டா. மனுஷன் அந்தர் பல்டி அடிச்சிட்டாரே…” என்று ஆர்யாவின் காதில் சொன்ன விவேக், “மச்சி இந்தா உன் ஃபோன், இன்னிக்கு தான் அந்த போலிஸ்காரர் கொடுத்தார். நான் கிளம்புறேன்பா, நீங்க பேசி ஒரு முடிவுக்கு வாங்க.” என்று கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டான்.
ஆர்யாவைப் பார்த்து, “தண்ணியடிச்சிருக்க நீ?” என்று கோபமாகப் பேசிவிட்டு மதுவும் நகரப்போன போது,
“மது அப்படின்னா என்னோட நாலு மெயில்ல ஒன்றுக்குகூட நீ பதில் அனுப்ப மாட்டியா?” என்று அமைதியாகக் கேட்டான் ஆர்யா.
“உன்னோட மெயிலைப் பாரு ஆர்யா.” என்ற மது ஆர்யாவிடம் முகத்தைக் காட்டாமல் கோபமாகச் சொன்னாள்.
ஆர்யா வேகமாக தனது கைபேசியை உயிர்ப்பித்தான். அதில் தனது மின்னஞ்சல்களைத் திறந்து பார்த்தான்.
முதல் மின்னஞ்சல் சொன்னது,
“ஆர்யா நீ நல்ல பையன். L.K.G யில இருந்து ஒரே ஃப்ரண்ட்டை வச்சிருக்கும் பையன், அம்மாவுக்காக கோயிலுக்கு போகும் பையன், ஒரு மாசம் ஒரு பொண்ணோட பதிலுக்காக அமைதியா வெயிட் பண்ண பையன் ரொம்ப ரொம்ப நல்ல பையன் தான்.”
இரண்டாவது மின்னஞ்சல் சொன்னது,
“உன்னோட பென்டிரைவ்ல நீ இருபது ப்ளூ கலர் படம் வச்சிருந்தாலும் அதில் ஆஸ்கார் அவார்ட்டு வாங்குன பத்து படம் இருந்ததைப் பார்த்தபோது… முக்கியமா Shawshank Redemption, Titanic, The Notebook, a moment to remember, Slum dog millionaire படங்கள் இருந்ததைப் பார்த்தபோது நான் ப்ளாட் ஆகிட்டேன் ஆர்யா… உன்னை மிஸ் பண்ணக் கூடாதுன்னு தோணுச்சு.”
மூன்றாவது மின்னஞ்சல் சொன்னது,
“ஆர்யா ஐ டூ லவ் யூ.”
நான்காவது மின்னஞ்சல் சொன்னது,
“மிச்சத்தை நேர்ல பேசலாமா?”
ஆர்யா மின்னஞ்சல்களைப் படித்ததும் “மது” என்று ஆசையாய் அழைத்தான்.
“ஹா ஹா…” என்று ஆர்யாவின் முகம் பார்த்து வெட்கமாய் அளவாய் சிரித்தாள் மதுமிதா.
சட்டென ஆர்யா மதுவை இறுகக்கட்டிக்கொண்டு சிரித்தான்.
அதைப்பார்த்து “ஹா… ஹா…” என்று அட்டகாசமாய் சிரித்தார்  லவ் குரு.
எதுக்கு லவ் குரு சிரிச்சார்?
“சார், எதுக்கு சிரிச்சீங்க?”- நான்.
“….”- லவ் குரு.
“சார், உங்களைத்தான்… எதுக்கு சிரிச்சீங்க? இப்பவும் அவுங்களை பிரிக்கப் போறீங்களா? நீங்க மோசமான வில்லன் சார்.”- நான்.
“அவுங்க சரியாதான் லவ் பண்றாங்க. இப்ப எதுக்கு அவுங்களை நான் பிரிக்கணும்?”- லவ் குரு.
“என்ன சார் சொல்றீங்க? புரியல.”- நான்.
“என் பேரு குரு. செல்லமா எல்லாரும் லவ் குருன்னு கூப்பிடுவாங்க. யாராவது தப்புத் தப்பா லவ் பண்ணா அந்த லவ்வை பிரிச்சிடுவேன். எனக்கு அது பிடிக்காது. அதே மாதிரி பசங்க பொண்ணுங்களை டிஸ்டர்ப் பண்ணாலும் ஏதாவது பண்ணி…”- லவ் குரு.
“ஆட்டத்தைக் கலச்சி விட்டுருவீங்க.”- நான்.
“ம்… சரியாச் சொன்னீங்க. ஆட்டத்தைக் கலச்சி விட்டுருவேன். மது விஷயத்துல மதுவை ஒரு மாசம் யோசிக்க விட்டது மட்டும் தான் என்னோட வேலை. மற்றபடி மதுவே சரியா யோசிச்சி சரியான வயசுல சரியான முடிவு எடுத்திருக்கா. மனசுக்குள்ள ஆர்யாவுக்கு ஒரு பெரிய டெஸ்டே வச்சி தான் அவனை செலக்ட் பண்ணிருக்கா…”- லவ் குரு.
லவ் குருவுடன் நான் பேசிக் கொண்டிருக்கும் போதே நான்கு விடலைப் பையன்களும் மூன்று பெண்களும் அவரைக் கடந்து நடந்து சென்றனர்.
“ஏங்க இப்ப நான் போலாமா?” – லவ் குரு.
“எங்க போறீங்க?”- நான்.
“இப்ப ஒரு நாலு பசங்க போனாங்களே… அங்கதான் போறேங்க. அந்தப் பசங்கள்ல ஒருத்தன் ஒரு பொண்ணை லவ் பண்றான். அந்தப் பையன் உண்மையா லவ் பண்றானா, இல்ல தப்பான எண்ணத்தோடு இருக்கானான்னு நான் தெரிஞ்சிக்கணும். அந்தப் பொண்ணு ரொம்ப ரொம்ப நல்ல ஆத்மாங்க. அந்தப் பொண்ணுக்கு இப்ப என்னோட உதவி தேவைங்க. நான் வர்றட்டா?”
“சார்…”- அவரை விட மனமில்லாமல் நான்.
“இப்ப என்னங்க?”- அவரசமாய் பேசியபடி மிஸ்டர் லவ் குரு.
“சார்… நீங்க சொல்றது லேசா புரியிது…”
“தெளிவா சொல்றேன் கவனமா கேட்டுக்கோங்க. தப்பான எண்ணத்தோடு தெளிவில்லாத புத்தியோடு பசங்க நல்ல பொண்ணுங்களைத் தொந்தரவு பண்ணா… ரெண்டு பேரோட நன்மைக்காக…”
“ஆட்டத்தை கலச்சி விட்டுருவீங்க. அப்படித்தான?”- நான்.
“ஹா… ஹா… ஹா… எனக்கு அடுத்த வேலை காத்துட்டு இருக்குங்க. டாட்டா…” என்று கூறியபடியே பேய் அலறலாய் சிரித்துக்கொண்டே மாயமாய் மறைந்து போனார் மிஸ்டர் லவ் குரு.
               *   *    *
 
அழகிய   முதலிரவில்…
“கிட்டவா… மது… முதல் பட்டனையே எவ்வளவு நேரம் திருகிட்டே இருப்ப? இரண்டாவது மூனாவது எல்லாம் ரொம்ப நேரமா வெயிட் பண்ணுதுல? நீ அடுத்த மாசம் அமெரிக்கா போயிடுவ… இன்னும் ஒரு வருஷம் கடல் தாண்டி பறந்து பறந்து வந்து கிடைச்ச நேரத்துல குடித்தனம் பண்ணணும்… எவ்வளவு நேரம் பேசிட்டே இருப்ப?” – ஆர்யா.
“அதான் ஆறுமணிக்கே தூக்கம் வருதுன்னு சொல்லி ரூமுக்குள்ள என்னையும் இழுத்துட்டு வந்திட்டீல? இது ஃப்ர்ஸ்ட் நைட் இல்ல… ஃப்ர்ஸ்ட் ஈவினிங். என் மானமே போச்சு, ஜானு எப்படி சிரிச்சா தெரியுமா? இன்னும் கொஞ்ச நேரம் பேசலாம். பதில் சொல்லுப்பா. உனக்கு எத்தனை கிரஷ் வந்திருக்கு? எவ்வளவு நேரமா கேட்குறேன்… எனக்கு தொண தொணன்னு புருஷன் சட்டையப் பிடிச்சி கேள்வி கேட்குறதுலாம் பிடிக்கவே பிடிக்காது. I dont like nagging wives you know…” 
“மூனு கிரஷ் வந்திருக்கு. என்னோட மூனு கிரஷ்ஷும் ஒரே பொண்ணுதான். முதல் நாளே யாருடா அந்த கிரஷ்னு என் சட்டையைப்பிடிச்சி கேட்காத குறையா கேட்டீல? அப்பவே You have started to nag madhu… and you know wife always nags…’
“ஏய் பேச்சை மாற்றி சமாளிக்காதப்பா… பாதி பதில் தான் சொல்வியா? மூனு கிரஷ்ஷும் ஒரே பொண்ணா? அப்படின்னா அந்தப் பொண்ணு பேரு என்ன?”
“என்னோட 1st , 2nd மற்றும் 3rd கிரஷ்ஷா? என்னோட மூனு கிரஷ்ஷும் யாருன்னா…” என்று மீண்டும் மீண்டும் சொன்ன ஆர்யா அவளது இதழ்களை மீண்டும் மீண்டும் முத்தமிட்டுச் சிரித்தான்.
அவனது முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம்  கிரஷ்ஷின் மொத்தமும் சகலமும் அவனது இதழ்களால் கசங்கிக் கிரஷ்ஷாகிக் கொண்டிருந்தது அந்த இரவு முழுவதும்.
            *   *   *
                     சுபம்
ஆறடி உயரமும் யவன அழகும் என்றும் இல்லறத்திற்கு உதவாது. இதுபோன்ற லிட்மஸ் பரீட்சைகளே உதவும்…
இந்தக் காதலின் லிட்மஸ் பரீட்சையை ரசித்ததற்கு நன்றி.
  
என் இனிய வாசகர்களே,
கதை பிடித்திருந்தால் இந்த முகவரியில் ஒரு சில வார்த்தை சொல்லிட்டுப்போங்க… மறக்காதீங்க. நான் காத்திட்டு இருப்பேன்.
உங்கள் மின்னஞ்சல்களில் உங்களின் வார்த்தைகளை, எண்ணங்களை வாசிக்க ஆவலுடன் காத்திருக்கும் உங்கள் வாசகி…
               பாலா சுந்தர்
email id: [email protected]
facebook id: balasundar
எனது பிற நூல்கள்: ( all available in kindle )
1) சிற்பமும் அவள் சிற்பியும் அவள். (this is not yet uploaded)
2) ஷ்… இது வேடந்தாங்கல்.
3) காஜலிட்ட விழிகளே…
4) டைட்டானிக் கனவுகள்…
5) லட்சம் காதலால் காதல் செய்.
6) ஆயூத எழுத்தில் காதல்.

Advertisement