Advertisement

“ஆமா… ஆர்யா அண்ணா சொல்றது கரெக்ட். நாம அந்த அஞ்சையும் விடக்கூடாது. ப்ரியா நல்லா பாடுவா. யமுனை ஆற்றிலே சுப்பரா பாடுவா. நான் அவளுக்கு ஹேர்டூ பண்றேன்.. சாரோட ஃபோன்ல கூகிள் பண்ணிப் பார்க்கலாம்.” – மயில் மாணவி.
“ஓகே… கொலாஜ்க்கு மெட்டீரியல்ஸ்?”- விவேக்.
“அவுங்களே கொடுப்பாங்க. சில மேகஸின்ஸ் அவுங்களே கொடுப்பாங்களாம். சிஸ்ஸர் ப்ளேடு மட்டும் பஸ் டிரைவரை வாங்கச் சொல்லலாம்.”- மயிலின் தோழி ப்ரியா.
அடுத்த அரை மணி நேரத்தில் விடுபட்ட ஐந்து போட்டிகளுக்கும் தயாராகினர்.
                *   *   *
போட்டியின் பெயர் :  கொலாஜ்
ஆர்யா, விவேக் மற்றும் ஷாம் கொலாஜ்ஜில் பங்குபெற்றார்கள். விதிப்படி நால்வர் ஒரு குழுவில் இருக்கலாம். ஆனால் ஆள் பற்றாக்குறையால் இவர்கள் மூவராய் பங்குபெற்றார்கள்.
“டேய் எதடா வெட்ட?” என்று விவேக் கொடுக்கப்பட்டிருந்த மாத இதழைப் புரட்டியபடியே கேட்டான்.
“அந்தக் கார் நல்லா இருக்கு. எலெக்டிரிக் கார், காற்று மாசு போன்ற ஐடியா வச்சி ஒரு கொலாஜ் செய்யலாம் ஆர்யா.”- ஷாம்.
“குட் ஐடியா.”- ஆர்யா.
“டேய் இந்த மாடல் அழகா இருக்காடா.. இதையும் சேர்த்து அந்த காரோடு ஒட்டிவச்சா… கிளாமரா இருக்கும்ல? எப்படி என் ஐடியா?”- விவேக்.
“சாரி. தாங்க்ஸ்.. .”- ஆர்யா மற்றும் ஷாம்.
“ரொம்பத்தான் பண்ணாதீங்கடா.” என்ற விவேக் இரண்டே நிமிடத்தில்,
“டேய் இந்தக் காரை டயரோட சேர்த்து வெட்டணுமா.. இல்ல டயர் இல்லாம வெட்டணுமா?” என்று மீண்டும் கேள்வியின் நாயகனானான்.
“என்னது காருல டயர் இல்லாம வெட்டப்போறியா? நீ ஆணியே புடுங்க வேண்டாம். சிஸ்ஸரைத் தொட்ட மொத டெட் பாடி நீதான்டி… ஷாம்கிட்டக் கொடு சிஸ்ஸரை. நீ நாங்க வெட்டிக்கொடுக்கிறதை ஒட்ட மட்டும் செய்.”- விவேக்கிடம் பாய்ந்தான் ஆர்யா.
இரண்டு நிமிடங்கள், இரண்டே நிமிடங்கள் அமைதியாக இருந்த விவேக்,
“ஆர்யா அந்த ஸ்கூல் பசங்க என்ன பண்றாங்கன்னு எட்டிப்பார்க்கவா? நமக்கு ஏதாவது ஹெல்ப்பா இருக்கும்ல?” என்றான் ஆர்யாவிடம் மூன்றாவது நிமிடத்தில்.
“எதுக்கு டிஸ்குவாலிஃபை ஆகி அந்த சிவப்பிரகாசம் சார் முன்னே திரும்பப் போய் நிற்கச்சொல்றியா? தலையை நிமிர்த்தின செத்த டா. அந்தப் பக்கம் பார்த்த… கண்ணை நோண்டிடுவேன்.”- ஆர்யா.
“சரி.. சரி…” என்ற விவேக் ஒட்டும் வேலையைத் தொடர.. இருபது நிமிடங்கள் கரைந்து போயின.
“டேய் இன்னும் ஐஞ்சு நிமிஷம் தான்டா இருக்கு..” – விவேக் ஷாமிடம்.
“டேய் இன்னும் மூனு நிமிஷம் தான்டா இருக்கு.. வேமா வேமா வெட்டு ஷாம் எரும.” – விவேக் ஷாமிடம் கோபமாக.
ஷாம் நிமிர்ந்து முறைக்கவும், “சரி சரி டிஸ்டர்ப் பண்ணல… நீ அந்தக் பேட்டரி பிக்சரை நிறுத்தி நிதானமா அழகா வெட்டிக்கொடு செல்லம்.”- விவேக்
ஷாம் மெல்ல நிதானமாக வெட்டவும்.. பொறுமையிழந்த விவேக், அவன் வெட்டிக்கொடுத்ததும் வேகமாக ஒட்டி முடித்தான்.
சில நொடிகளில் டைம் அவுட் என்று ஆசிரியர்கள் சொல்ல அரங்கை விட்டு வெளியேறினார்கள் மூவரும்.
“இதுக்குதான்டா அந்த மயில் பொண்ணைக்கூட வச்சிக்கலாம், ஷாம் வேணாம்னு சொன்னேன்.. அவன் ரொம்ப ரொம்ப ஸ்லோ டா.. அவன் வெட்டுறதுக்குள்ள விடிஞ்சிடும்போல. இப்பப் பாரு ஒழுங்கா முடிக்கிறதுக்குள்ள டைம் அவுட்டாகிடுச்சு.”
“எதுக்கு? பேப்பரை வெட்டுறதுக்கு பதிலா அவ டிரஸ்ல இருந்த மயில் இறகை நீ வெட்டி வெட்டி விளையாடுறதுக்கா? சரியான டையத்துலதான் முடிச்சிருக்கோம்.” – ஆர்யா.
“சரி சரி எப்படியோ நாம மூனு பிரைஸ்ல ஏதாவது ஒன்னு வாங்குனா சரிதான். மாஞ்சு மாஞ்சு வேலைப் பார்த்ததுக்கு பிரைஸ் கிடைச்சா போதும். என்னம்மா உழைச்சிருக்கோம்…” என்று பெருமையாய் விவேக் சொல்ல,
“மாஞ்சு மாஞ்சு நீ உழைச்ச??” என்று கேள்வி கேட்டான் ஆர்யா.
“சரிரிரி.. நீங்கதான் மூளையக் கசக்கி உழைச்சீங்க. நீங்க படைப்பாளி நான் ஒட்டாளி..” என்று விவேக் பதில் தர,
ஆர்யாவும் ஷாமும் விவேக்கை துட்சமாகப் பார்க்க..
“ஹி.. ஹி.. கை வலிக்க வலிக்க ஒட்டுனேன்லடா.. எவ்வளவு டேலென்டா ஒட்டுனேன்?”என்றான் விவேக்.
அந்தப் பதிலைக் கேட்டதும் ஷாம் படுடென்ஷன் ஆகிவிட்டான்.
“நீ டேலென்டா ஒட்டுன? முதல் நாலு படத்தை ஃபேவிகால்ல முக்கி எடுத்து வெட்டிக்கொடுத்த அந்த பேப்பரே கிழியிற மாதிரி ஆகல? நாலாவது படிக்கிற புள்ளக்கூட நாலு கார்னர்ல கொஞ்சமா ஃபேவிகால் தடவி அழகா அம்சமா சார்ட்ல ஒட்டும். இவன் ஒட்டுனான் பாரு ஆர்யா, ரோட்டுல செவத்துல போஸ்டர் ஒட்டுற மாதிரி ஃபேவிகால்லை அப்பி அப்பி… அவன் ஒட்டுன லெட்சணத்தைப் பார்த்து நீ மட்டும் திட்டல, நம்ம சார்ட்டே (Chart) ஃபேவிகால் நாத்தம் எடுத்திருக்கும். நீ திட்டிய பிறகுதான் ஒழுங்கா ஒட்டுனான்.” – ஷாம்.
“ஷாம், ரொம்படா இது.”- விவேக்
“டேய் வாங்கடா போவோம்… இந்தச் சண்டை இப்பத் தேவையாடா? அடுத்து ஸ்பீக் அவுட் போட்டிக்குப் போகணும்.”- ஆர்யா.
கொலாஜ் முடிந்து வேகமாக அடுத்தப் போட்டிக்கு தயார் ஆனார்கள் விவேக்கும் ஆர்யாவும். அடுத்த போட்டி ஸ்பீக் அவுட். ஒருவர் நடித்துக்காட்ட மற்றொருவர் அந்த ஆங்கில வார்த்தையை குத்துமதிப்பாகக் கண்டுபிடித்தால் கூடப் போதுமானது. அந்த ஆங்கில வார்த்தை பெரிய திரையில் காட்டப்படும். பதிலைக் கண்டுபிடிப்பவரிடம் திரை மறைக்கப்படும். பதிலைக் கண்டுபிடிப்பவர் ஒரு நாற்காலியில் திரைக்கு முதுகு காட்டியபடி அமர வைக்கப்படுவார்.
உதாரணமாக Happy என்று திரையில் தோன்றினால் ஒரு மாணவன் சிரித்த முகமாய் நடித்துக்காட்டியதும் அந்த வார்த்தையை நாற்காலியில் அமர்ந்திருக்கும் மாணவன் சரியாகக் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் இந்தப் போட்டி மேடையில் நடைபெறுவதால் மாணவர்கள் சரியாக கண்டுபிடிக்கும் போது ஆரவாரம் செய்து வேடிக்கை பார்க்கும் மாணவர்கள் கூட்டம், தவறாகக் கண்டுபிடிக்கும்போது உச்சுக் கொட்டிடும். ஓ… யே… என்று பலதரப்பட்ட சப்தங்களால் அரங்கமே சலசலக்கும்.
விதிகளைப் பற்றி அறிந்ததும் விவேக் இப்போட்டியில் இருந்து ஜகா வாங்கிட நினைத்து,
“ஆர்யா போட்டி ரொம்ப டஃப்பா இருக்குல? அதை டீல்ல விட்டுருவோம் டா.” என்று அமைதியாகச் சொல்லிப் பார்த்தான்.
அவனை நன்றாக முறைத்த ஆர்யா, “நீ நடிக்கிற நான் கண்டுபிடிக்கிறேன்.” என்றான் திட்டவட்டமாய்.
கழுத்துக்கு வந்துவிட்ட கத்தியை எப்படியேனும் தூர எறிந்துவிட வேண்டும் என்ற ஆசையில் பேராசையில்,
“டேய் வேணாம்டா. பெரிய ஸ்டேஜ்ல வச்சி நடக்குதுடா. கையெல்லாம் உதறும். ஆடியன்ஸ்ல நிறைய கர்ல்ஸ் இருக்காங்கடா…” என்றான் குழந்தைபோல அழும்குரலில் விவேக்.
“இன்னிக்கி காலையில மொத்த ஸ்டூடன்ஸ் முன்னே நம்ம எல்லோரோட மானமே போச்சு. இப்ப கை உதறுனா என்ன? கால் உதறுனா என்ன?”- ஆர்யா.
கத்தி கழுத்தைவிட்டு நகரமாட்டேன் என்று சொல்லச் சொல்ல வீரம் சுரக்க ஆர்யாவிடம் கோபமாய், “டேய்… வேணாம்டா. உனக்கு இன்னும் அரை மணி நேரத்துல பேச்சுப் போட்டி ஆரம்பிக்கதுல? அதுக்குப் படியேன். ஏன்டா என்னோட உயிர வாங்குற? இந்தப் போட்டியை டீல்ல விட்டுருறலாம்.” என்றான் விவேக்.
“நீதான இப்ப ஃப்ரீயா இருக்க? மற்றவங்க எல்லாம் ஆளுக்கொரு போட்டியில இருக்காங்க. டம் ஷரட்ஸ்ல கலந்துக்கிட்டீல. அது மாதிரிதான் இதுவும்.” என்று நிதானமாய் எடுத்துச் சொன்னான் ஆர்யா.
“ஆர்யா.. அது அட்வர்டைஸ்மென்ட் கண்டுபிடிக்கணும். இதுல இங்கிலிஷ் வேர்டைக் (word) கண்டுபிடிக்கணும். இரண்டுக்கும் ஹிமாலயாஸ் வித்தியாசம் இருக்குடா. இதெல்லாம் ஹாரிபாட்டர் புக்கை கரைச்சிக் குடிச்சவங்க கலந்துக்கிற கேம்டா. என்னோட இங்கிலிஷ் நாலெஜ் Humpty dumpty sat on a Wall… Humpty Dumpty had a great fall.. வரை தான்டா..” என்று விவேக்கும் ஆர்யாவிற்கு நிதானமாய் எடுத்துச் சொல்ல,
“அதெல்லாம் முடியும்… நீ நடிக்கிற நான் கண்டுபிடிக்கிறேன். அவ்வளவுதான் பேச்சு முடிந்தது.” என்று பேச்சை முடித்துக்கொண்டான் ஆர்யா.
“ஆர்யா… ப்ளீஸ் டா.”
“நீ நடிக்கிற, நான் கண்டுபிடிக்கிறேன்.”
“திரும்பவும் முதல்ல இருந்தா? புரோட்டா கோட்டை யாருடா என்கிட்டக் கேட்காம அழிச்சது? அதெல்லாம் என்னால நடிக்க முடியாது. நான் மட்டும் முன்னூறு பேர் முன்னாடி ஆ ஊன்னு கத்திட்டு லூசு மாதிரி நடிக்கணும்.. ஊரே சிரிக்கணும்.. நீ ஜம்முன்னு சேர்ல உட்கார்ந்து கண்டுபிடிப்பியாக்கும்?”
“அப்ப நீ நடிக்க மாட்ட?”
“மாட்டேன். நீ நடி நான் சேர்ல உட்கார்ந்து கண்டுபிடிக்கிறேன். தெரியலைன்னா பாஸ் சொல்லப்போறேன்… அவ்வளவுதான? ஹி.. ஹி..”
“இதுதான்… இதுதான் உன்னை போட்டியில நான் நடிக்கச் சொன்னதுக்குக் காரணம். சேர்ல உட்கார்ந்துகிட்டு பாஸ் பாஸ்னு வெட்கமே இல்லாம சொல்வன்னுதான்… நான் கண்டுபிடிக்கிறேன், நீ நடின்னு சொன்னேன். ஜெயிக்கணும்னு டிரை பண்ணுடா லூசு.”
“இந்த லூசு, பக்கின்னு நம்ம கிளாஸ் பொண்ணுங்க மாதிரித் திட்டாதடா. பொண்ணுங்கதான் அவுங்களுக்குள்ள இப்படித் திட்டுவாங்க.”
“சரிடா எரும.”
‘எருமையா??’ என மனதில் சொல்லிப்பார்த்து ஒரு நிமிடம் எருமையின் கருத்த தேக்தை தனது தேகத்தோடு ஒப்பிட்டுப்பார்த்து, ‘டேய் நான் எருமை கலர்லயா இருக்கேன்? நான் வீட்டிஷ் பிரௌன் டா…’ என்று மனதில் சொல்லியபடியே அதிர்ந்து நின்ற விவேக்கிடம், “இந்த வாரம் தலைவர் படம் ஃப்ர்ஸ்ட் டே ஃப்ர்ஸ்ட் ஷோ கட்.” என்று ஆர்யா சொன்னதும் வேறு வழியேயில்லாமல்,
“சரி… சரி, ஆ ஊன்னு நடிச்சே தொலைக்கிறேன்.” என்று சம்மதித்தான் விவேக்.
“ஒழுங்கா நடிக்கல ஸ்டேஜ்ல வச்சே மிதிப்பேன்…” என்று கூறி ஆர்யா எச்சரிக்கை செய்தபோது வாய்க்குள்ளேயே புலம்பினான் விவேக்.
ஆம்பளப்புள்ளையா பொறந்தா ஒரு சினிமாவுக்காக, பப்புக்காக, ஒரு கோவா டூருக்காக, ஒரு பீட்சா பர்கருக்காக, தப்பில்லாத இங்கிலிஷல் ஒரு மெயில் எழுதுவதற்காக, வேலைக்குச் செல்லும் இடத்தில் ஒரே அறை எடுத்து ஒன்றாகத் தங்கினால் நாலு வாய் சோறு சமைச்சி வீடு பெறுக்க… என்று ஆயிரம் ஆயிரம் தேவைகளுக்காக காலம் முழுவதும் இப்படித்தான் ஃப்ரண்ட்கிட்ட அடிமையாகக் கிடக்கணும்… (இன்னும் நிறைய காரணங்கள் இருங்குங்க, ஆனால் அதெல்லாம் அடல்ட்ஸ் ஒன்லிங்க…)

Advertisement