Advertisement

“ஆர்யா உன்னோட கிளாஸ்ல பொண்ணுங்க எத்தனை பேர் மச்சி?”- விவேக்.
“கர்ல்ஸ்தான் அதிகம் மச்சி. இருபது பேர் இருப்பாங்க. எதுக்குக் கேட்குற?”
“இருபதா? இருபதை விட்டுட்டு தான் அந்த கம்ப்யூடர் சயின்ஸ் டிபார்ட்மென்ட் மதுமிதாவைப் பார்த்து வழிஞ்சிட்டு இருக்கியா?”
“யேய்… நாலு வார்த்தை கூடப் பேசிட்டா வழியிறதா அர்த்தமா?”
“இல்ல மற்ற பொண்ணுங்ககிட்ட இரண்டு வார்த்தைகூட பேச மாட்டிக்கிறியே… அதனால கேட்டேன்.”
“மதுவும் மற்றப்பொண்ணுங்களும் ஒண்ணா?”
“அதான… மது உன்னோட மாஜி கிரஷ் ஆச்சே?”
“என்கூடப் படிக்கிற பொண்ணுங்க கூடலாம் பேசவே பிடிக்கல மச்சி.”
“நம்மக்கூட படிக்கிற கிளாஸ் பொண்ணுங்கதான் நம்மளை மதிக்கவே மதிக்காதுங்களே? ஸ்கூல் பொண்ணுங்களே ஐன்ஸ்டீன் பேத்திக மாதிரி நடந்துக்கிடும் போது அண்ணா யூனிவர்சிட்டி பொண்ணுங்களைக் கேட்க வேணுமா? அந்த மாதிரிப் பொண்ணுங்ககூட நீ எப்படிப் பேசுவ? என்னோட காலேஜ்லகூடக் அப்படித்தான். என் கிளாஸ் ஷாலினி என்னைத் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டிக்கிறா டா. ஒரு பொண்ணுக்கூடப் பழகி லவ் பண்ணி வச்சிக்கிட்டா எதிர்காலத்துல கல்யாணம் பண்ண நினைக்கும்போது உபயோகமா இருக்கும்னு நினைச்சா, ஒண்ணும் அமையமாட்டிக்குதே மச்சி. நீ மதுவைப் பார்த்த மாதிரி நானும் ஏதாவது மாஜி கிரஷ்ஷைப் பார்த்தாதான் வேலைக்காகும் போல.”
“ஏய்ய்ய் சும்மா இருடா. மாஜி கிரஷ் மாஜி கிரஷ்னு அதையே திரும்பத் திரும்ப சொல்லிட்டு.” என்று சொல்லிக்கொண்டு விவேக் தலையில் ஆர்யா அடித்தபோது ஆர்யாவின் கைபேசி ஒலித்தது.
 அழைத்த எண்ணைப்பார்த்ததும் தடால் எனத் தாவி சோபாவில் இருந்த தனது கைபேசியை எடுத்தான் ஆர்யா. தாவியபோது விவேக்கின் காலை மதித்தபோதோ, அவனது குட்டித்தொப்பையில் கைவைத்து தாண்டியபோதோ ஆர்யா இங்கிதம் கருதிக்கூட சாரி என்று கேட்கவில்லை. அவனுக்கு அத்தனை அவசரம். பச்சைப் பொத்தானை அழுத்தும்வரை அவனுக்கு அத்தனை அவசரம்.
“ஹாய் மது.” – ஆர்யா.
“ஹாய் ஆர்யா. உன்னோட வாட்ஸ் அப்க்கு அந்த காம்பட்டிஷன் ஃபோட்டோ அனுப்பிருக்கேன். பாரு. அதைச் சொல்லத்தான் கால் பண்ணேன். வச்சிடவா?”- மது.
“ம்… பை. அன்ட் தாங்க்ஸ் மது.”- ஆர்யா.
“என்ன டா அந்திமழை, ஆலங்கட்டி மழை எல்லாம் ஆகஸ்ட் மாதம் சென்னையில பொழியிது?”- ஆர்யா.
“ஏதோ பழைய ஃபோட்டோ அனுப்பிருக்காளாம் மச்சி.” என்றபடியே அந்தப் புகைப்படதைப் பார்த்தவனின் கண்கள் பழைய நிழற்படத்தில் லயித்து நின்றது. விவேக்கும் தனது கண்களை ஆர்யாவின் கைபேசியில் மேயவிட்டான்.
அந்தப் புகைப்படத்தில் மது, ஆர்யா மற்றும் விநோத் (மதுவின் பள்ளி மாணவன்) முதல் மூன்று பரிசுகளுக்காக வரிசையாக நின்றுகொண்டிருக்க பரிசுகளை வழங்கிக் கொண்டிருந்தார் சிறப்பு விருந்தினர். அவர் அருகே சிவப்பிரகாசம் நின்று கொண்டிருந்தார்.
அன்றைய தினத்தில் சிவப்பிரகாசம் அவர்களை பீதியில் ஆழ்த்தியதை இன்று நினைக்கும் போதும்கூட இருவருக்கும் மெல்லிய சிரிப்பு வந்தது. சிவப்பிரகாசத்திற்கு உருகாதார் எதற்கும் உருகார். (அந்தத் தலைமை ஆசிரியரை நினைவிருக்கிறதா?) அந்தப் புகைப்படத்தில் அவரது உருவத்தைப் பார்த்ததும் இருவருமே அவரின் கரிஸ்மாவில், தேஜஸில் உருகித்தான் போயினர்.
“தாங்க்ஸ், குட் நைட். என்று மதுவுக்கு பதில் அனுப்பவா மச்சி?”- ஆர்யா.
“தாங்க்ஸ் மட்டும் போதும்.”- கறாராய் விவேக்.
“குட் நைட் போட்டா என்ன?”
“இட்ஸ் டூ பெர்சனல் மச்சி… ஆனாலும் உனக்கு ரொம்பத்தான் தில் டா. குட் மார்னிங் ஸ்டேடஸ்க்கு திரும்ப வம்படியாக நீயே வழியப்போய் மாட்டிக்கணும்னு ஆசைப்படுறியே? அதைச்சொன்னேன். குட் டே, குட் மார்னிங், குட்நைட் மட்டும் தான் இனி அவகிட்டயிருந்து பதிலா வரும். பரவாயில்லையா?”
“சரி, “குட்” என்ற வார்த்தையே வேணாம். தாங்க்ஸ் மட்டும் அனுப்புறேன்.”
ஆர்யா கைபேசியில் தாங்க்ஸ் என்று தட்டச்சு பண்ணும்போதே அவளும் அவனுக்கு தட்டச்சு செய்வதாகச் புரளி பேசியது கைபேசி.
“டைப்பிங்ன்னு வருது மச்சி.”- ஆர்யா.
“ரொம்பத் துள்ளாத… காத்திரு. என்ன வருதுன்னு நான் பார்க்கணும்.”
ஆர்யா தாங்க்ஸ் என்று மட்டும் அனுப்பினான்.
“தாங்க்ஸ்.”- ஆர்யா.
“ஓ… ஓகே.”- மது
“மச்சி ஓகேன்னு தமிழ்ல மெசேஜ் பண்ணிட்டா டா… முதல் நாளே தமிழ்ல பண்றாடா.”
“அட இது என்ன சின்னப்புள்ளத் தனமா இருக்கு? ஸ்கூல்ல படிச்ச மேக்ஸை இப்பயும் படிக்க முடியுமா? முடியாதுல? அதுமாதிரி தமிழ்ல டைப்பண்றது எல்லாம் ஓல்டு சிலபஸ். நியு சிலபஸ் பற்றிச் சொல்றேன், கேளு. நீ டைப் பண்ணி அனுப்பின உடனே பதில் வந்திடுச்சு. அப்படி உடனுக்குடன் பதில் வரக்கூடாது. டைப்பிங் டைப்பிங்ன்னு பத்து தடவை வரணும். ஆனா மெசேஜ்ஜே வரக்கூடாது. அழிச்சி அழிச்சி எழுதிக்கிட்டே இருக்கணும். இப்படி சட்டுன்னு பதில் எழுதக்கூடாது. அப்பதான் அவ தடுமாறுகிறான்னு அர்த்தம்.”
“இப்ப?”
“மது இஸ் வெரி வெரி ஸ்டெடின்னு அர்த்தம்.” என்றவன் ஆர்யாவின் வாட்ஸ் ஆப் திரையைப் பார்த்தபடியே “ஷிட்.” என்று சொன்னான்.
“என்னடா மச்சி? என்ன ஆச்சு?” என்று கேட்ட ஆர்யாவும் தனது வாட்ஸ் ஆப் திரையைப் பார்த்தான்.
 “பாரு ஆஃப்லைன் போயிட்டா. தேவைன்னா மட்டும் பேசிட்டு மீதி நேரம் ஆஃப்லைன்ல இருக்கிற பொண்ணுங்க ரொம்ப ரொம்ப ஸ்டெடி மச்சி. ‘நீ என்ன வேணும்னாலும் டெக்ஸ்ட் பண்ணு… நான் எல்லாத்துக்கும் ரிப்ளை பண்ண மாட்டேன். நீ பத்து அனுப்புனா என்ன இருபது அனுப்புனா எனக்கென்ன? கடைசி நாலுக்கு மட்டும் தான் ரிப்ளை பண்ணுவேன்.’ என்பதுதான் அதுக்கு அர்த்தம் டா.”- விவேக்.
“இது தான்டா எனக்கு அவகிட்டப் பிடிச்ச விஷயம். இவ்வளவு பெர்ஸ்னாலிட்டி உள்ள பையன் ஒரு காலத்துல நம்மைப் பார்த்து ச்ப்ண்ழ்ற் பண்ணான்னு தெரிஞ்சப் பிறகும் இப்பவும் என்கூடப் பேசும்போது ஸ்டெடியாக இருக்கா பாரேன்… திரும்பவும் மனசு அவமேல கிரஷ்யாகிடும்போல மச்சி.”
“மறந்துகூட லவ் என்ற வார்த்தையைச் சொல்ல மாட்டியே?”
“யெஸ்.”
“ஏன் டா அப்படி?”
“மச்சி, பொண்ணுங்க விஷயத்துல எவ்வளவு அறிவா பேசுற? ஆனா இந்தச் சின்ன விஷயம்கூட உனக்குத் தெரியல பார்த்தியா? நான் விலாவரியாக சொல்லித்தரவா?”
“என் நேரம் டா. சொல்லு. தெரிஞ்சிக்கிறேன்.”
“லவ் எப்ப வரும் தெரியுமா? ஒருத்தரைப் பார்த்து பிரமிச்சுப் போயிடணும். அந்த ஆளு மேல கண்மூடித்தனமான பிடித்தம் இருக்கணும். விலகவே முடியாதுன்னு தோணணும். வெட்டியா அரட்டையடிக்கணும், அவுங்க பேசாம இருந்தா கிறுக்கு பிடிக்கணும். இவ்வளவு ஏன் அவுங்க நம்மை முந்திக்கிட்டு செத்துப்போயிட்டா… நாமளும் அந்த ஒரு நிமிஷம் அவுங்களைப் பார்க்க சொர்க்கத்துக்குப் போயிட்டு வந்திடணும். அதாவது நாமளும் செத்துப் பிழைக்கணும்.”
“அப்படின்னு கூகுள் சொல்லுச்சா உன்கிட்ட?”
“அப்படின்னு என்னோட அக்கா சொன்னா, அவளுக்கு யார் சொன்னான்னு தெரியாது, ஆனா அவ சொன்னது 100 பெர்சென்ட் கரெக்ட் மச்சி. இத்தனை தகுதிகள் இருக்கிற ஒருத்தர் மேலத்தான் லவ் வரும் மச்சி. அந்த மாதிரி ஆளை இன்னும் நான் பார்க்கலை. அப்படி ஒரு பொண்ணைப் பார்க்கணும்னு ரொம்ப ஆசைதான். என்னோட அம்மாவும் அப்பாவும் லவ் மேரேஜ்தான், என்னோட அக்காவும் லவ் மேரேஜ். எனக்கும் லவ் பண்ண இஷ்டம் தான். ஆனா பார்த்ததும் லவ் பத்திக்கிடுற மாதிரி எந்தப் பொண்ணையும் இன்னும் பார்க்கலையே? என்ன பண்றது? அதான் கடவுளாகப் பார்த்துக்கொடுத்த கிரஷ்ஷை வச்சிக்கிட்டு திருப்தி அடைஞ்சிக்கிறேன். கிரஷ் என்பது லேசான போதை மச்சி. அந்தப் போதை அனுபவிச்சாதான் தெரியும். அந்தப் போதை ஊசி கொடுக்கிற கிக் இருக்கே… அது தனிதான்.”
“எங்களுக்கும் கிரஷ்னா என்னன்னு தெரியும் டா. நான்லாம் பத்துக்கு மேல அந்தப் போதை ஊசி போட்டிருக்கேன். என்கிட்டயேவா டெமோ காண்பிக்கிற? லவ்வைப் பற்றி மட்டும் சொல்லுங்க பாஸ்.”
“ஷார்ட் அன்ட் ஸ்வீட்டா சொல்லணும்னா அவுங்களுக்காக நாம நம்ம வெட்கத்தைவிட்டு என்ன வேணும்னாலும் பண்ணுவோம். லவ்வுக்கு வெட்கம் மானம் சூடு சொரணை எல்லாம் கிடையவே கிடையாது மச்சி.” என்று காதலைப் பற்றி தனது எண்ணத்தை சொற்களாக்கி விவேக்கிடம் எடுத்துக்கூறினான் ஆர்யா.
“அப்ப எனக்கு அது செட் ஆகாது. எனக்கு நாலு கிரஷ்ஷே போதும். ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு லவ்வல்லாம் பத்தவே பத்தாது.”
“ஹா… ஹா…” என்று ஆர்யா சிரித்தபோதே அவனின் கைபேசி மது காலிங் என்று கத்தியது.
“எப்படா இவன் ரிங் டோன் மாத்தினான்?” என்று விவேக் யோசிக்கும் போதே ஆர்யா மதுவுடன் பேச ஆரம்பித்திருந்தான். பேசி முடிக்கும்வரை பொறுமையாக ஆர்யாவின் வீட்டிலேயே சுற்றி வந்த விவேக், ஆர்யா பேசி முடித்ததும் அவன் முன்னே சென்று அவனது முகத்தை தன் கையால் திருப்பி தனது கண்களை பார்க்கச் செய்தான்.
“என்ன?”- ஆர்யா.
“அதை நான் கேட்கணும் மச்சி. என்ன பேசினா மது.”- விவேக்.
இரண்டு கைகளையும் நீட்டி சோபாவின் பின்புறம்  படரவிட்டு கால் மேல் கால் போட்டபடியே மந்தகாசமாய் சிரித்த ஆர்யா விவேக்கிடம் சொன்னான்,
“மது நம்மை மாதிரியே போதைப் பழக்கத்துக்கு அடிமையாகுறா மச்சி.”
“என்னடா சொல்ற?”
“மது is having a crush on me man..”
“What Really?”
“அனுபவம் பொய் சொல்லுமா?”
“ஹும், ஹும்.”
“அப்ப நான் சொன்னது தான் கரெக்ட். என்கூட பேசி பத்து நிமிஷம்கூட முழுசா முடியல, ஆனா திரும்ப கால் பண்ணிருக்கா. கிரஷ் வந்திட்டா ஃபோன் நம்பரை கையில வச்சிக்கிட்டு கால் பண்ணாம இருக்க முடியாது மச்சி. அதான் உறுதியா சொல்றேன்ப்பா மது is having a crush on me man.”
“சரி… நீ? உன்னோட ஸ்டேடஸ் என்ன?  Crush?ஆ no crushஆ?”
“இல்லைன்னு சொல்ல முடியாது. கொஞ்சோண்டி கிரஷ்னு வச்சிக்கலாம். அவ என்னை ப்ளாக் பண்ணதை நான் இன்னும் முழுசா மன்னிக்கலை மச்சி. அதனால கொஞ்சோண்டி கிரஷ் தான் இருக்கு.”
“அப்படின்னா? அது என்ன கொஞ்சோண்டி??”
“தோடா தோடா மச்சி. very little very little crush…”
“இனிமே என்னை ஷேக்ஸ்பியர்னு கூப்பிடாத மச்சி. உன்னோட டயலாக் பக்கத்துல என்னோட டயலாக் எல்லாம் செத்தே போயிடுச்சு.” என்று ஆர்யாவிடம் விவேக் சொன்னதும் சிரித்துவிட்டான்.
ஆர்யாவும் அவனுடன் சிரிப்பில் கலந்து கொண்டான். ஆனால் அவர்களை வேடிக்கைப் பார்த்த மிஸ்டர் விதி மட்டும் சிரிக்கவே மாட்டேன் என்று அடம் செய்தார்.
நம்ம ஆர்யாவின் மீது மதுவிற்கு மட்டுமல்ல இந்த விதிக்கும் தான் கிரஷ்ஷோ கிரஷ்ஷு. இல்லையென்றால் அவனை வேவு பார்த்துக்கொண்டே இருப்பாரா?
இத்தனை நாட்களும் ஆர்யாவையும் மதுவையும் வேவு பார்த்த மிஸ்டர் விதிக்கு வேறு ஒரு முக்கியமான வேலை வந்துவிட்டது. அதனால் தனது காரியதரசியான மிஸ்டர் லவ் குருவை அழைத்தார். அவரிடம் ஆர்யாவை வேவு பார்க்கும் வேலையை ஒப்படைத்தார்.
ஆக 10.10.2019 முதல் மிஸ்டர் விதி சாரால் ஆர்யாவைத் தொடர ஒரு வேதாளம் நியமிக்கப்பட்டது.
யாரு அந்த லவ் குரு?
லவ் குரு என்பவர் கலகமூட்டும் ஆசாமி. இளைஞர்கள் சந்தோஷமாக இருந்தால் அதைப் பொறுத்துக்கொள்ளவே முடியாத ஆசாமி. சுருக்கமாகச் சொல்லப்போனால் சிங்கிளாகத் திரியும் சிங்கங்களின் எதிரி.
           *  *  *

Advertisement