Advertisement

மது – ஆர்யா  கல்லூரிக்காலம்…
லிட்மஸ் பரீட்சை முடிந்த அன்றைய தினத்தில், “டூ ஸ்டேட்ஸ்.” படம் படத்தை மது மனப்பாடமாய் பார்த்த அந்த தினத்தில்… மதுவின் மெத்தையில் சுகமாகப் படுத்துக்கொண்ட கைபேசி அதன்பிறகு மதுமிதாவைத் தொந்தரவே செய்யவில்லை.
அவள் கல்லூரிக்குச் செல்லும் வரையில் மதுமிதா பாடப்புத்தகங்களில் கவனம் செலுத்த, அந்த கைபேசி மந்தமாகவே எப்போதும் தூங்கிக்கொண்டே தான் இருந்தது. ஜான்வியின் பாப் பாடல்களை பாடும் நேரம் தவிர அந்த கைபேசி சோம்பேறித்தனமாய் தூங்கிக் கொண்டேதான் இருந்தது.
கல்லூரியின் இரண்டாம் நாள் வரும்வரை சமர்த்துப்பையனாக இருந்த மதுவின் கைபேசி தப்புத் தப்பாக தப்பாட்டம் ஆடத்துவங்கியது மீண்டும் ஆர்யாவின் ஏண்  Hi Madhu மெசேஜ் வந்த ஷணத்தில் இருந்து…
            *   *   *
“மதுவைப் பார்த்தேன்டா விவேக்.”- ஆர்யா.
“யாரு??”- விவேக்.
“குட்ஷெப்பர்ட் ஸ்கூல் மது.”
“ஓ… அந்த அட்டக்கத்தி மதுவா?”
“ஹா… ஹா… நீ அதை விடவேமாட்டியா?”
“மாட்டேன். அப்புறம். உன்கிட்ட வந்து பேசுனாளா?”
“அவ என்னைப் பார்க்கல. நான்தான்டா அவளைப் பார்த்தேன். அண்ணா யுனிவர்சிட்டியில B.E கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர்ந்திருக்கா. நான் E.E.E டா.”
“ஓ… நீயும் அவளும் ஒரே காலேஜ்ஜா? மதுவைக் கண்டுக்காத மச்சி. கெத்தா இரு.”
“எனக்கு என்னமோ அவகூடப் பேசணும்னு தோணுச்சு டா.”
“ஏன்டா? அவ உன்னை ப்ளாக் பண்ணது எல்லாம் மறந்து போச்சா?”
“நானும் தான் அவளை ப்ளாக் பண்னேன். அதெல்லாம் ஸ்கூல்ல மெச்சூரிட்டியே இல்லாம சண்டை போட்டது. அதை எல்லாம் இப்ப நினைச்சிட்டு இருக்க முடியுமா?”
“நினைக்கணும் மச்சி. கண்டிப்பா நினைக்கணும். பையனாகப் பொறந்தா பொண்ணுங்க பண்ண அட்ராசிட்டீஸ் எல்லாம் மறக்கக்கூடாது. திமிருத்தனத்தை மறக்கவே கூடாது மச்சி.”
“அவ நம்பரை ப்ளாக் லிஸ்ட்ல இருந்து தூக்கிட்டேன் விவேக்.”
“வாட்? Unblock பண்ணிட்டியா? யூ டிடின்ட்.” (You Didn’t)
“யெஸ் ஐ டிட் இட்.” (Yes… I did it)
“Holy Mary…”- விவேக்.
“இப்பதான் அவளுக்கு ஒரு மெசேஜ் வாட்ஸ் ஆப் பண்ணிருக்கேன்.”
“Holy Mary mother of christ…”- விவேக்.
ஒரு பெரியார், ஒரு காமராஜர், ஒரு அண்ணா, ஒரு கலைவாணர், ஒரு “அட்டக்கத்தி” படம் கூடப் போதவில்லை இன்றைய இளைஞர்கள் திருந்தி நல் வழியில் வாழ்வதற்கு.
          *   *   *
மது – ஜான்வி இல்லத்தில்…
“அலியா பட்டுக்கு கல்யாணமாமே? அப்படியா? ஜஸ்டின் பீபர் புது கேர்ள்ஃப்ரண்ட் யாருப்பா? நேத்து இன்ஸ்டாவுல நிறைய ஃபோட்டோஸ் வந்தது பார்த்தியா?” – தனது வீட்டில் தனது அறையில் ஜான்வியிடம் மது.
“பார்த்தாச்சு பார்த்தாச்சு. எப்படி இருந்திச்சு ஃப்ர்ஸ்ட் டே காலேஜ்? அதைச் சொல்லு முதல்ல.”- ஜான்வி.
“சூப்பரா இருந்திச்சு ஜானு.. அப்பாகூட என்கிட்டக் கேட்டுட்டே இருந்தார். காலேஜ் பிடிச்சிருக்கா பிடிச்சிருக்கான்னு.. அண்ணா யுனிவர்சிட்டியில மெரிட்ல சீட் கிடைச்சது அவருக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் தெரியுமா.. நீயும் இங்கயே வந்திடு.”
“ம்.. நானா மாட்டேன்னு சொல்லப்போறேன்? மார்க் வந்திட்டா உன்கூடயே வந்திடப்போறேன். ஐ மிஸ் யூ பேட்லி அட் ஸ்கூல் மது. நீ இல்லாம ஸ்கூல் வேன்ல போறதுகூட பிடிக்கலை…” என்று செல்லம் கொஞ்சினாள் ஜான்வி.
“அடுத்த வருஷம் நீ ப்ளஸ் டூ ஜானு. நல்லா படி ஜானு… விளையாடிட்டே இருக்க.” என்று மது அறிவுரை கூறிய போது டி.வி முன் உட்கார்ந்திருந்த அர்ஜுன் மதூ என்று அழைத்தார்.
“வர்றேன்ப்பா.” என்று கூறியபடியே விரித்துக்கிடந்த  கூந்தலை ஒன்றாய் சேர்த்து ஒரு பாண்டினால் இறுகக் கட்டிக்கொண்டே வரவேற்பறைக்கு விரைந்தாள் மதுமிதா.
“காலேஜ் பிடிச்சிருக்கா மது?” – ஆர்வமாய் அர்ஜுன்.
“யெஸ்ப்பா. இன்னிக்கு தான ஃப்ர்ஸ்ட் டே… நிறைய ஸ்கூல் மேட்ஸ் இருக்காங்க இங்க. ஹரினிகூட இங்கதான் சிவில் இன்ஜினியரிங் சேர்ந்திருக்கா.”
“குட்… நாளைக்கு அப்பாகூட காலேஜ்க்கு வந்திடுறியா? உன்னை நானே கூட்டிட்டுப் போறேனே?”
“இல்லப்பா. என்னோட ஸ்கூட்டியிலயே போயிடுறேன்னே. சாயங்காலம் ஃப்ரண்ட்ஸோட வெளியே போயிட்டு வருவேன். அதான்…”
இப்போதும் ஹரினியின் நட்பே அப்பாவிடம் மறுத்துப்பேச வைத்தது. பள்ளிக்காலத்தில் மல்லிச்செடியாய் இருந்த ஹரினி-மதுவின் நட்பு கல்லூரிக்காலத்தில் ஆலமர விருட்சிகமாய் வளர்ந்து நின்றது. ஹரினிக்கு அண்ணா யுனிவர்சிட்டியில் சிவில் பொறியியல் பிரிவில் இடம் கிடைத்ததும், மது சந்தோஷத்தில் வானம் தொடும் வரை உயரமாய் குதித்து குதூகலித்தாள்.
பள்ளிக் காலத்தில் சைவ விஷயங்கள் பேசியபோதே ஹரினியுடன் அரட்டையடிப்பது மதுவிற்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இப்போது கல்லூரிக் காலத்தில் அசைவ சங்கதிகள் பேசும் உரிமையை இறைவனாய் கொடுத்தப்பிறகு… இருவரையும் ஒரே கல்லூரியில் சேர வைத்து அந்த உரிமையை இயற்கையே அவர்கள் கையில் திணித்துவிட்டப் பிறகு… ஹரினியுடன் அரட்டையடிப்பதையே பெரிதும் விரும்பினாள் மது. அதனால் தான் தந்தை கேட்டதும் உடனே மறுத்தும்விட்டாள்.
“ஓகே… மது பீ கேர்ஃபுல். சீக்கிரமா வீட்டுக்கு வந்திடணும்.” என்று அவளது மறுப்பை ஏற்று அப்பா அறிவுரை சொன்னதும் தாமதிக்காமல்,
“யெஸ்ப்பா.” என்றாள்.
“உட்காரு மது. அம்மா என்கூட சேர்ந்து உன்னையும் சாப்பிடச் சொன்னாடா..”
“சரிப்பா.” என்று அவர் அருகே சோபாவில் உட்கார்ந்தவளின் கைபேசி சிணுங்கியது.
கையில் இருந்த கைபேசியை அப்பாவிடம் பேசிக்கொண்டே பார்த்தவள் புதியதொரு எண்ணில் இருந்து வாட்ஸ்ஆப் செய்தி வந்ததும் அப்பாவின் அருகேயே சற்று இடைவெளிவிட்டு உட்கார்ந்தபடி அந்தச் செய்திக்குள் நுழைந்தாள்.
‘டி.பியில விராட் கோலி ஃபோட்டோவா? யாராக இருக்கும்?’ என்று மனதில் நினைத்துக்கொண்டே திரையில் கண் பதித்தவளின் இதயம் ஒரு நிமிடம் ஃபூட்பால் போல விலா எலும்புகளுக்குள் எம்பிக் குதித்து அடங்கியது.
மெல்ல தலையைத் திருப்பி தந்தையைப் பார்த்தவள் அவர் தனது கைபேசியில் மூழ்கியிருப்பதைப் பார்த்து நிம்மதியடைந்து, “ஒரு நிமிஷம்ப்பா லாப்டாப்பை ஷட் டவுன் பண்ணிட்டு வந்திடுறேன்.” என்றபடியே அவசரப்படாமல் எழுந்து தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
அறைக்குள் செல்லும் போதே அந்தச் செய்தியை மீண்டும் ஒரு முறை வாசித்திருந்தாள் மது,
“Hi… Madhu. This is Arya. Do you Remember me? Y.M.J school Arya… Are You placed at Anna Unniversity? Me Too.. I Saw You today… We shall meet tomorrow. Bye..”
              *   *   *
மறுநாள் எழுந்த நொடியில் இருந்து மதுவின் கண்களுக்கு எல்லாமே Me Too… வாகத்தான் தெரிந்தது. அம்மா கையில் காபி கப்பைக் கொடுத்தபோது அதில் இருந்த நுரைகளுக்கு ஊடே “Me Too…” என்ற வாசகம் இருந்தது. முகத்தில் பவுடர் போட்டபோது தனது சுடிதாரில் தெறித்திருந்த பவுடரைத் தட்டிவிட்டுக்கொண்ட போதும் அதில் “Me Too…” வாசகம் மங்கலாகத் தெரிந்தது. இப்படி எங்கும் எதிலும் Me Too… தான்.
‘ஆர்யாவா? Y.M.J ஸ்கூல் ஆர்யாவா.. இல்ல வேற யாரும்மா? ஹரினிதான் கலாய்க்கிறாளா.. ச்ச ச்ச இவ்வளவு சீரியஸ் விஷயத்துலயெல்லாம் அவ விளையாட மாட்டாளே…’ என்று மனதிற்குள் ஆயிரம் பட்டிமன்றங்கள் நடந்துகொண்டிருக்க மனதை ஒரு வழியாக சமன்செய்துவிட்டு ஸ்கூட்டியில் அண்ணா பல்கலைக்கழகம் நோக்கிச் சென்றாள். அவள் உலகத்தில் சுனாமியை கட்டவிழ்த்திருந்த கைபேசியை தனது கட்டிலில் கிடத்திவிட்டு கல்லூரிக்குள் நுழைந்தாள் மதுமிதா.
               *   *   *
கல்லூரியில் பதினோரு மணிக்கு ஆரம்பித்த முதல் இடைவேளை நேரம் வரை மதுமிதாவிற்கு ஆர்யா பற்றி யோசிக்கக்கூட நேரமில்லை. இடைவேளையிற்குப் பிறகு வகுப்பில் அனைத்து டிபார்ட்மென்ட் மாணவர்களும் ஒரே செமினார் அரங்கத்திற்குச் சென்றனர்.
ரோபோடிக்ஸ் பற்றிய செமினார் நடந்தபோது ஆர்யா அவள் அருகே வந்து அமர்ந்து ஆர்வமாய் மந்தகாசமாய் சிரித்தபடி, “ஹாய் மது.” என்று சொன்ன பிறகு மதுவிற்கு ஆர்யா தவிர வேறு எதைப் பற்றியும் யோசிக்க நேரமில்லை.
              *  *  *
                     11
“இந்தப் பசங்களுக்கு ஒரு மோசமான ஞாபக மறதி நோய் இருக்கு தெரியுமா?”- விவேக்.
“நீ எதைப் பற்றி பேசுறன்னு தெரியும். ஆனா நோ கமென்ட்ஸ்.”- ஆர்யா.
“என்னது நோ கமென்ட்ஸா? அறிவிருக்காடா உனக்கு? ப்ளஸ் ஒன்ல அடிச்சி விரட்டாத குறையா பேசாம விரட்டுன பொண்ணுகிட்ட இளிச்சிகிட்டு பேசிட்டு வந்திருக்க… அதையும் பெருமையா வந்து என்கிட்டச் சொல்ற பாரு… என்னோட ஃப்ரண்ட்டுன்னு வெளியே சொல்லாத. மானம் போயிடும்.”
“ஏய்… ஸ்கூல் படிக்கிறப்ப பண்ணதையெல்லாம் இப்பவும் ஞாபகம் வச்சிக்கிட்டு மூஞ்சத் தூக்கி வச்சிக்கச் சொல்றியாடா? போடா… போ. அப்படியெல்லாம் என்னால இருக்க முடியாது. சும்மா ஒரு “ஹாய்” “ஹலோ” சொன்னேன். அதுக்குப்போய் லபோ திபோன்னு குதிச்சிட்டு இருக்க?”
“அவ ஃபோன் நம்பர் அன்ப்ளாக் பண்ணி வாட்ஸ் அப் பண்ணிருக்க, வழியப்போய் பல்லக்காட்டிட்டு ஹாய் சொல்லிருக்க, அரை மணி நேரம் கழிச்சு அந்தப் பொண்ணே, ‘மேக்ஸ் ப்ரொபர்சர் பார்க்குறார், அப்புறம் பேசலாம்’ ன்னு எச்சரிச்ச பிறகு கம்முன்னு இருந்திருக்க… இதையெல்லாம் நீ சொன்னபோது எனக்கு எப்படி இருக்குத் தெரியுமா? உன்னை…” என்று ஆர்யாவின் கழுத்தை நெறித்தான் விவேக்.
“யேய் கழுத்த நெறிக்காதடா…”
“இப்படியே பண்ணிட்டு இருந்தன்னு வை அம்மாக்கு பயப்படும் அந்தப்பொண்ணு நாலு நாள்ல அண்ணான்னு கூப்பிட ஆரம்பிச்சுடும் சொல்லிட்டேன்.”
“அண்ணாவா?”
“ஆமா… அ-ண்-ணா. எங்க சொல்லு பார்ப்போம், அண்ணா… ‘ண்’ சொல்லும்போது நடு அண்ணத்துல நாக்கு தொடணும்.”
“விவேக்க்க்.”
“விவேக் இல்லப்பா… அண்ணா, அண்ணா, டிரை பண்ணு, வரும்டா.” என்று அஞ்சலிப் பாப்பாவுக்கு நாலு பசங்க சொல்லிக்கொடுத்த மாதிரி விவேக் ஆர்யாவிற்கு செல்லிக்கொடுக்க,
“உன்னை…” என்று அவனிடம் பாய்ந்திருந்தான் ஆர்யா.
             *   *   *

Advertisement