Advertisement

“ஹாய்.”- என்று கூறி மதுவின் முன்னே நின்றான் ஆர்யா.
“ஹாய்.” என்றாள் மதுமிதா.
“நல்லா பேசுன மதுமிதா.”- சிரித்த முகமாய் ஆர்யா.
“நீயும் நல்லா பேசுன. முதல் பிரைஸ் வராதோன்னு டவுட்டாவே இருந்திச்சு.”- மது.
“நோ, நோ எனக்கு டவுட்டே இல்ல. நீ தான் வாங்குவன்னு கன்ஃபார்மா நம்பினேன்.”
“நல்ல நல்ல பாயின்ட்ஸ் பேசுன ஆர்யா.”
“என்னோட பெயர்கூட தெரிஞ்சிருக்கே? பரவாயில்ல.”
“நீதான் Y.M.J க்கு பிரான்ட் அம்பாசிடர் ஆச்சே? உன் பேர் தெரியாம இருக்குமா? Y.M.J ஸ்கூல் S.P.L தெரியாம இருக்குமா?”
“ஹா… ஹா.” என்று ஆர்யா சிரித்தபோது அவனது பள்ளிப் பேருந்து ஹார்ன் ஒலியெழுப்பியது.
“உங்க பஸ்தான்… பஸ் கிளம்பப் போகுது போல… நைஸ் டு மீட் யு.”
“ஆமா… என் பஸ்தான். பை. அன்ட் நைஸ் டு மீட் யூ டூ.”- ஆர்யா.
                  *   *   *
ஹார்ன் ஒலியெழுப்பியதும் ஆர்யாவின் பள்ளி மாணவர்கள் அனைவரும் அதில் ஏறிக்கொண்டார்கள். பேருந்து குட்ஷெப்பர்ட் பள்ளியில் இருந்து புறப்பட்டது. ஆர்யாவுடன் பேருந்தில் ஏறியதும் விவேக் ஆர்யாவைப் பார்த்து கெக்கபுக்கவென சிரித்தான்.
“என்ன? சார் பார்வை, பரதநாட்டியம் ப்ரியாவை விட்டுப் பத்தடி விலகிருச்சு?”
“ப்ரியாவா யாரு?? நம்ம கிளாஸ் ப்ரியாவையாச் சொல்ற விவேக்?”
“ஏய்ய்ய்… வேணா ஆர்யா பொய் புழுகாத. காலையில பஸ்ல ஏறினப்போ வச்சக் கண் எடுக்காம சைட் வியுவில பார்த்திட்டு இருந்த… இப்ப மாத்திப் பேசுறியா?”
“அதச் சொல்றியா??”
“ஆமா சார். அதைத்தான்… அதையேத்தான் சொல்றேன்.”
“அது சும்மா டா. ஆனா மதுவோட அதைக் கம்பேர் பண்ண முடியாது. என்னோட ஃப்ர்ஸ்ட் கிரஷ் மதுதான். அவ அந்த ஸ்டேஜ்ல பேச ஆரம்பிச்சப்பவே நான் ஃப்ளாட் ஆகிட்டேன். நல்லவேளை நான் பேசின பிறகு அவ பேசினா, இல்லாட்டி செகன்ட் பிரைஸைக்கூட கோட்டை விட்டிருப்பேன்.”
“எனக்கு ஒண்ணு புரியல…”
“எது?”
“ஏன்டா இந்தப் பசங்க மட்டும் பொண்ணுங்களைப் பார்த்ததும் ஃப்ளாட் ஆகிடுறாங்க? படிச்ச மேக்ஸ் மறந்து போயிடுது, ஃபிசிக்ஸ் மறந்துபோயிடுது, இங்கிலிஷ் கிராமர்ல ஃப்ர்ஸ்ட் பெர்சன் சிங்குளர் (First person singular) , செகன்ட் பெர்சன் சிங்குளர்கூட(Second Person singular) மறந்து போயிடுது. நீ கூட இப்ப சொன்னீயே… மது முதல்ல பேசியிருந்தா கிளீன் பவுள்டு ஆகிருப்பேன்னு சொன்னல? அது ஏன்? பசங்க அவ்வளவு வீக்கா? பொண்ணுங்க பத்து பேரை ஸைட் அடிச்சாலும் அசராம நூத்துக்கு நூறு வாங்குறாங்க. பொண்ணுங்க அவ்வளவு ஸ்டாராங்கா டா?”
“ஓ… அதுவா… தெரியல விவேக். அவுங்களுக்கும் ஏதாவது ரியாக்ஷன் நடக்கும் மச்சி. வெளியே காமிக்க மாட்டாங்க. நாம ஓப்பன் புக். திறந்த புத்தகம். உள்ளதை உள்ளபடி வெளியே பளிச்சுன்னு காட்டுறோம். ஆனா பொண்ணுங்க அப்படி இல்ல. அதுதான் பொண்ணுங்களுக்கும் பசங்களுக்கும் இருக்கும் வித்தியாசம் டா.”
“சின்ன கரெக்ஷன் ஆர்யா. புத்தகம்னு பொதுவா சொல்லாத, நாம திறந்து வைத்த ஒரு குயர் அன்ரூல்ட் நோட். பொண்ணுங்க தான் பேனா. நம்ம மேல எதுனாலும் எவ்வளவுனாலும் அந்த பேனா எழுதலாம்.”
“ஹா… ஹா… பேனாவைப் பிடிச்சி எழுதுறவன் யாரு?”
“விதி ஆர்யா. விதி சார்தான் பேனாவை கையில வச்சிருக்கார்.” என்றான் விவேக் சிறிதும் யோசிக்காமல்.
“ஹா… ஹா…”
“இதுல ப்யூட்டி என்னன்னா, ஹீரோபேனாவா இருந்தாலும் சரி, பார்பி பேனாவா இருந்தாலும் சரி, என்ன எழுதப்போகுதுன்னு பேனாவுக்குத் தெரிஞ்ச அளவுகூட அந்த அன்ரூல்டு நோட்டுக்குத் தெரியாது.”
“ஹா… ஹா… எக்ஸாக்ட்லி.”
“அது மட்டும் இல்ல சில நேரம் மேஜிக் இன்க் கூட அந்தப் பேனாவில் இருக்கும்டா. எழுதி முடிச்ச கையோட இன்க் மாயமா மறைஞ்சி போயிடும்.”
“டேய்… சும்மாயிரு. போதும் விவேக்.”
“நிஜமாதான் ஆர்யா. அந்த மேஜிக் இன்க் மாதிரி மூனு ஃபேஸ்புக் பொண்ணுங்க என்கிட்ட மாயமா மறைஞ்சிருக்காங்க. எனக்கு என்ன ஒரு வருத்தம்… முழு புக்கையும் எழுதி முடிச்சிட்டு மறைஞ்சிருக்கலாம்… பாதியில அம்போன்னு விட்டுட்டுப் போனதுதான் வருத்தமா இருக்கு ஆர்யா. அதுல ஒரு பொண்ணு ‘அத்தியாயம் 1’ எழுதியதோடு எஸ்ஸாகிடுச்சு.”
“ஹா… ஹா… யாரும் ஃப்ரண்டாகக்கூட டிக்ளேர் பண்ணலயா?”- ஆர்யா.
விவேக் மௌனச் சாமியாராக இருந்தான்.
விவேக்கின் மௌனம் யெஸ், ஆம், என்றே பொருள் கொள்ளப்பட வேண்டும். இருபது நிமிடங்கள் நகர்ந்திருந்த பேருந்தில் இருபது தத்துவங்களைச் சொல்லி முடித்து ஆர்யாவும் விவேக்கும் சிரித்து ஓய்ந்தனர்.
              *   *   *
சிரித்து ஓய்ந்தபிறகு பேருந்தில் இருந்தவர்களிடம் தனது தொலைநோக்கு பார்வையை செலுத்தினான் விவேக். அப்போதுதான் ஆர்யாவிடம் தனது அதிமுக்கியக் கேள்வியைக் கேட்டான். அத்தனை நேரம் கவனிக்காமல் விட்டுப்போன தனது கவனக்குறைவை(??) நினைத்தபடியே ஆர்யாவிடம் அக்கேள்வியைக் கேட்டான் விவேக்.
“என்னடா மயில்களைக் காணோம்??”- விவேக்.
விவேக் கேள்வி கேட்டதும் பேருந்தில் இருந்தவர்களை தானும் நோட்டம் விட்டான் ஆர்யா. விவேக்கின் கண்டுபிடிப்பு சரியென்றான பிறகு,
“அதான, அந்த கர்ல்ஸ் எங்க?” என்று விவேக்கிடம் சந்தேகமாய் கேட்ட ஆர்யா நூலக மேலாளரிடமும் அக்கேள்வியைக் கேட்டான்.
“அவுங்க பேரன்ட்ஸ் வந்து கூட்டிட்டுப் போயிட்டாங்க.” என்று நூலக மேலாளர் சுப்பிரமணியன் ஆர்யாவிடம் சொன்னதும்,
“யார் சார் சொன்னா? நல்லா தெரியுமா சார் விட்டுட்டுப் போயிடப்போறோம்.” என்று அநியாயதிற்குப் பதறினான் விவேக்.
“டேய் அசிங்கமா இருக்குடா, ரொம்பத் துள்ளாத… அவர்தான் சொல்றாருல? விடு.”- மெல்லிய குரலில் விவேக்கை அடக்கியபடி ஆர்யா.
“அந்தப் பொண்ணுங்க பேரன்ட்ஸ்கூடப் போறதா எனக்கு கால் பண்ணாங்க. அந்தப் பொண்ணுங்களோட அப்பாவும் என்கூட பேசிட்டார். நம்ம பிரின்சியோட ஃப்ரண்ட் தான அவரு… அதான் அவர், ‘என் பொண்ணுங்களை நானே கூட்டிட்டுப் போகவா’ன்னு கேட்டதும் சரின்னு சொல்லிட்டேன்.”- லைப்ரரியன்.
“பொண்ணுங்க உங்களுக்கு கால் பண்ணாங்களா? அவுங்க எப்படி பேரன்ட்ஸக் கான்டாக்ட் பண்ணாங்க? பொண்ணுங்களுக்கு செல்ஃபோன் அலோ பண்ணீங்களா? சார், இது ரொம்ப ஓவர் சார்.”- விவேக்.
“ச்ச ச்ச அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல, நீ வேற தேவையில்லாம இன்னொரு பிரச்சனை உண்டு பண்ணிடாத. குட் ஷெப்பர்ட் ஸ்கூல் பிள்ளைங்க ஃபோன் கொடுத்தாங்களாம்.”
“ஓ…”- விவேக்.
“ஓ…”- ஆர்யா.
ஆனால் ஆர்யா “ஓ” என்று சொன்னதும் ஒரு நிமிடம் யோசித்தான். மதுவும் அந்த மயில்களும் பேசிக்கொண்டு நின்றது அவனது நினைவில் வந்தது. உடனே விவேக் காதினில், “டேய் மயில் பொண்ணுங்க மதுகூடதான பேசிட்டு இருந்தாங்க?” என்றான்.
“ஓஓஓஓஓ…” – விவேக்.
                 *   *   *
“சார் உங்க ஃபோன் கொடுங்க சார். நானும் என்னோட அப்பாகிட்ட இன்ஃபார்ம் பண்ணணும். என்னோட வீட்டுலயும் தேடுவாங்க சார்.” என்றான்  விவேக் நூலக மேலாளரிடம்.
ஆர்யாவினால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. முன்சீட்டில் தூங்குவது போல சாய்ந்துகொண்டு சிரித்துக்கொண்டே இருந்தான்.
“எதுக்கு? நீ தான் பஸ்ல இப்ப நம்ம ஸ்கூலுக்குப் போகப்போறீல?”- நூலக மேலாளர்.
“அதைத் தான் சார் இன்ஃபார்ம் பண்ணணும். அந்தப் பிள்ளைங்க எல்லாம் சொல்லிருக்காங்கல.. அது மாதிரி நானும் என்னோட அம்மாகிட்டச் சொல்லணும். லேட் ஆகிடுச்சுல? அம்மா தேடுவாங்க…”- விவேக்.
ஆர்யா தனது சிரிப்பை உதடுகளுக்குள் புதைத்துக்கொள்ள அரும்பாடுபட்டான்.
“அப்படியா? இரு தர்றேன்.”- லைப்ரரியன்
“நேரமாச்சு சார்.. குடுங்க.. ப்ளீஸ்.”- விவேக்.
“இருப்பா லாக் எடுத்திட்டு தர்றேன்.” என்று தனது கைபேசியில் லாக் எடுத்துவிட்டு விவேக்கிடம் அதனைக் கொடுத்தார்.
விவேக் அதை வாங்கிக்கொண்டு தனது சீட்டில் நன்றாக சாய்ந்தபடி அமர்ந்துகொண்டு தனது அம்மாவின் கைபேசி எண்ணை தட்டச்சு செய்வதுபோல நடித்தான்.
“டேய் வேமா மது நம்பரை என் நம்பருக்கு மெசேஜ் பண்ணுடா… லாக் விழுந்துடப்போகுது.”- மேலாளர் பார்த்துவிடுவாரோ என்ற பதட்டத்தில் ஆர்யா.
“இருடா… லாக் விழுந்தாலும் பாஸ்வேர்டா அவர் பெயரை வச்சிருக்கப்போறார். அவர் பெயரை டைப் பண்ணி லாக் எடுத்துட்டு நம்ம வேலையை பார்க்கப்போறோம். எதுக்குப் பயப்படுற? நான் தான் அவர் எத்தனை கீஸ் அழுத்தினாருன்னு எண்ணி வச்சிருக்கேன்ல… எனக்கு கன்ஃபார்மா தெரியும். அவர் பேர்தான் பாஸ்வேர்ட். யூ டோன்ட் வொரி Yaar.”- விவேக்.
பள்ளியின் பேருந்து பள்ளிக்குள் நுழைந்ததும் தனது பைக்கை எடுத்துக்கொண்டு பறந்துவிட்டான் ஆர்யா.
தாங்க்ஸ் விவேக், ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் விவேக், உனக்கு டிரீட் தர்றேன், எவ்வளவு அறிவாளித்தனமா மதுமிதா நம்பர் எடுத்துக்கொடுத்திருக்க? நீ கிரேட்டா, நாலு தடவை ஃபோன் லாக் விழுந்த பிறகும் புத்திசாலித்தனமா பாஸ்வேர்ட் கண்டுபிடிச்சி திறந்திட்டியே… நீ நண்பேன்டா, மது என்னோட கேர்ள்ஃப்ரண்ட் ஆகிட்டானா… நீ என்னோட குலதெய்வம்டா விவேக்., இப்படியெல்லாம்கூட நீ என்னைப் போற்றிப் புகழ வேண்டாம் டா. – தன்னிடமே புலம்பலாய் விவேக் .
 டேய் வர்றியா என்னோட பைக்லயே வீட்ல விட்டுருறேன், ஷேர் ஆட்டோவில் போகாத. இந்த ஒரு வாக்கியத்தைதான் டா எதிர்பார்த்தேன், ஆனா பஸ்ல இருந்து இறங்குனதும் மாயக்கண்ணனா மறைஞ்ச பாரேன்… அப்போ தான்டா என்னால கன்ட்ரோல் பண்ண முடியல.மீண்டும் தன்னிடமே புலம்பலாய் விவேக்.
“மது ஃபோன் ஃஸ்விட்ச் ஆஃப்ன்னு வர…” – இதுவும் விவேக், புலம்பலாய் அல்ல கோபமாய்.
                  *   *   *

Advertisement