Advertisement

அத்தியாயம்….19
ஜமுனாவை அடக்கி அமர வைத்து விட்டு….“ என்னன்னு மிரட்டுறாங்க….?”  என்று செந்திலை பார்த்து கேட்டான்.
“ மத்த பொண்ணுங்க மாதிரி எல்லாம் இல்ல. ஒரே நாள் மட்டும் தான். அதுவும்  நம்ம கேங் மட்டும் தான். எவ்வளவு பணமானாலும் கொடுக்குறேன்.” இதை சொல்லி முடிப்பதற்குள் செந்தில்   வியார்வையால் குளித்து முடித்தவன் போல் உடல் முழுவதும் நனைந்தது விட்டான். 
செந்திலின்  பேச்சில்… “ என்னது கேங்கா…..?” வாயில் விரலை கொண்டு போன  ஜமுனா பின் என்ன நினைத்தாளோ…. 
“ அந்த கேங்கில் நீயும் அடக்கமா….?” என்று கேட்டு   விட்டு பாலாஜியின் முறைப்பையும், செந்திலின் கசங்கிய முகத்தையும் பார்த்த பின் தான்…
தான் கேட்க நினைத்த கேள்வியின் அபத்தம் புரிந்து…. “ நான் கேங்கின் அடக்கம் என்றால் இப்போ இல்ல. இதுக்கு முன்ன அந்த கேங்கில் நீயும் இருந்தியா….?”  ஜமுனா தன் மனதில் தோன்றிய சந்தேகத்தை எந்த வித கூச்ச நாச்சமும் படாது வெளிப்படையாகவே கேட்டாள்.
பாலாஜிக்கு தான் ஒரு மாதிரியாக போய் விட்டது… “ என்ன ஜம்மூ…?” கடிந்துக் கொண்டவனிடம்…
“ என்ன ஜம்மூ…நீ கொஞ்சம் கம்மூனு இரு?” என்று வாயால் மட்டும் அல்லாது,  சைகை மூலமும் தெரிவித்து விட்டு இப்போ சொல். என்பது போல் செந்திலை பார்த்தாள்.
அந்த ஈன காரியத்தை செய்யும் போது இருந்த துணிச்சல், சொல்லும் போது இல்லை போலும்…குனிந்த தலை குனிந்தது போலவே இருக்க…. “ ஆமாம்….” என்று செந்தில் தலையாட்டினான்.
“  நீ சீரழிச்சியே  அந்த பொண்ணுங்க கூட, யாரோ ஒருவருக்கு மகளாகவே, யாரோ ஒருவருக்கு மனைவியாகவே தான் இருந்து இருப்பாங்க. பொண்ணுங்க பாவம் சும்மா விடாதுன்னு சொல்லுவாங்க… அது உன் விசயத்தில் உண்மையா போயிடுச்சி….”
இந்த சூழ்நிலையில் இது போல் பேசுவது தப்பு என்று   மனதில் தோன்றினாலும், ஏற்கனவே இவன் சீரழித்த பெண்களை  நினைத்து, எதுவும் கேட்காது அமைதியாக உட்கார்ந்து கொண்டு இருக்க  ஜமுனாவால் முடியவில்லை.
“ ஜமுனா நீ சும்மா இரு. அவன் செஞ்சது தப்பு தான். நான் இல்லேன்னு சொல்லலே. ஆனா இப்போ மாட்டிட்டு இருக்குறது ஒரு பெண். அந்த பெண்  இவன் மனைவின்னு பார்க்காதே, மத்த பொண்ணுங்க மாதிரி இந்த பொண்ணுக்கு ஒன்னும் ஆக கூடாது. இப்போ அது மட்டும் தான் முக்கியம்.” என்று பேசி ஜமுனாவை அடக்கினான்.
 பிறகு தன் தம்பியிடம் அவன் மனைவி பற்றி விசாரிக்க முடியாத, தெரிந்துக் கொள்ள  முடியாத சில கேள்விகளை கேட்டான். “ படம் எப்படி ஆத்துல குளிக்கும் போது எடுத்ததா…?”
“ இல்லேண்ணா..வீட்டு பாத் ரூமில் குளிக்கும் போது.” என்று  சொன்னது தான். ஜமுனா எழுந்து அவனை அடிக்க சென்று விட்டாள்.
“ ஏன்டா பெண்களுக்கு  வெளியில் தான் பாதுகாப்பு இல்ல. எப்போ பொண்ணுங்க கீழே குனிவாங்க  எப்போ க்ளிக் செய்யலாமுன்னு ஒரு கூட்டம் இருக்கு. வீட்டில் கூட தைரியாம இருக்க முடியலேன்னா. எப்படிடா….?” செந்திலின்  சட்டையை பிடித்து அவனை உண்டு இல்லை என்று ஆக்கி விட்டாள்.
 பாலாஜி… “ ஜமுனா நேரம் ஆச்சி. நீ  வீட்டுக்கு போ….” என்பது போல் தன் கை கெடிகாரத்தை பார்த்து சொன்னான்.
“ நான் ஏன்  போகனும்….? நான் ஏன் போகனுமுன்னு கேட்குறேன். நான் இங்கே இருந்தா உங்கல  போல ஆண்களின் போஷி எனக்கு தெரிஞ்சிடும் என்று பயப்படுறிங்கலா…?” கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று  தெரியாது கேட்டு விட்டாள்.
கேட்ட பின் தான் என்ன இது இவனையும் இதுல இழுத்து விடுறோம். பாலாஜி இது வரை மற்ற பெண்களை  தப்பா ஒரு பார்வை பார்த்து இருப்பானா….?
காதலிக்கிறேன் என்று சொல்லும் என்னை கூட அத்து மீறி எல்லாம் பார்த்தது இல்லையே,   என்று நினைத்து மன்னிப்பு கேட்க நினைக்கும் போது…. 
பாலாஜி அவள் கோபத்தில் தான் இப்படி பேசுகிறாள் என்று தெரிந்தவனாய்… “ அடுத்த ஆண்களை பத்தி எனக்கு தெரியாது. என்னை பத்தி முழுசா உனக்கு தெரியப்படுத்துறேன். ஆனா இப்போ இல்ல. தனியா….” என்று சொல்லி கண் சிமிட்டினான்.
“ இப்போ இவன் மனைவி பத்தி மட்டும் பேசுவோம்.” என்று சொல்லி நிலமையின் தீவிரத்தை உணர வைத்தான். அதற்க்கு அடுத்து ஜமுனா வாய் திறக்கவில்லை. 
பாலாஜி எங்கு போட்டா  எடுத்தது என்று கேட்ட்தற்க்கு காரணம். குளத்திலோ..ஆத்திலோ குளிக்கும் போது எடுத்த புகைப்படமானல்…அந்த அளவுக்கு மோசமாக இருக்காது. என்று நினைத்து தான் கேட்டான்.
வீட்டில் என்றால்…ஜமுனா சொல்வது போல் வீட்டில் கூட சுதந்திரமாய் இருக்கா  விட்டால் எதற்க்கு வீடு….? அவள் சுதந்திராமாய் தானே குளித்து இருப்பாள். இதை நினைத்தவன் தலையில் கை வைத்துக் கொண்டான்.
செந்தில் தப்பு செய்தவன். அவனுக்கு தண்டனையோ, இல்லை இவன் தான் கேங்…கேங் என்று  சொன்னானே அவனுங்களாலேயே இவனுக்கு ஏதாவது ஆகி இருந்தால் கூட விட்டு இருப்பான்.
ஆனால் இதில் பாதிக்கப்பட போவது ஒரு  பெண். என்ன தான் சித்தப்பா சித்தி தன்னை சரியாக கவனிக்கவில்லை என்றாலும், சித்தி சமைத்து சாப்பிட்டு இருக்கிறானே…
ஒரு பெண் இது போல் விசயத்தில் மாட்டிக் கொண்டால், அதன் அடுத்து அந்த குடும்பம் எந்த அளவுக்கு  பாதிக்கப்படும் என்று அறிந்தவனாய். அதுவும் கிராமத்தில்., ஏதாவது செய்ய வேண்டும் என்ற யோசனையின் முடிவில்…
“நீ சொன்னியே கேங்குன்னு அதில் மாட்டுன பொண்ணுங்க  எல்லாம் யார்…? யாருன்னு உனக்கு தெரியுமா….?” என்று  செந்திலை பார்த்து கேட்டான்.
“தெரியும்.” என்று செந்தில் சொன்னதும், இவனை  வெட்டி போட்டால் என்ன….? என்று தான் பாலாஜிக்கு தோன்றியது.
பின் இவனை வெட்டிட்டு நான் ஜெயிலுக்கு போகவா, இப்போ தான் எனக்கு என்று  ஒரு வாழ்க்கை காத்துட்டு இருக்கு. அதை நான் இழக்கவா…? என்று நினைத்தவன், இவன் மனைவிக்கு என்ன உதவி செய்ய முடியுமுன்னு  பார்க்கலாம். ஆனா அதில் நமக்கு எந்த பாதிப்பும் இருக்க கூடாது என்ற முடிவோடு ஒரு திட்டம் வகுத்தான்.
“ அப்போ பாதிக்க பட்ட பெண்கள்  பெயர். ஊர் எல்லாம் தெரியும்.” என்று திரும்வும் தெளிவு படுத்திக் கொள்ள கேட்டதற்க்கு, செந்தில் யோசனையுடன் …
 “ஆம்”  என்று தலையாட்டினான்.
“குட்…எல்லாம் பெண்களும் உங்களுக்கு ஈசியா சம்மதிச்சிட்டாங்கலா….?”
“இல்ல. சில பெண்கள் ரொம்ப எதிர்த்தாங்க.அப்புறம் தான் வேற வழி இல்லாம.” அதற்க்கு அடுத்து பேசாது செந்தில் தலை குனியவும்….
“ நீ செஞ்ச காரியம் எல்லாம் இந்த லட்சணம் தான்.” அவன் தலை குனிந்து  இருப்பதை சுட்டி காட்டி சொன்னவன்.
“ அப்போ அந்த பெண்கள் எல்லோர் விவரமும் எனக்கு சொல். ஒரு பெண்    காவல்துறையில் புகார் கொடுத்தா தான் இவனுங்க மிரட்டுவாங்க. பல பெண்கள் என்றால்….மிரட்ட முடியாது.  அதே போல் அவன் எவ்வளவு பெரிய இடமா இருந்தாலும் காவல்துறை நடவடிக்கை எடுத்து தான் ஆகனும்.” என்று சொன்னவன்…
“ அந்த பெண்களோட அது மாதிரி புகை படம் எல்லாம் உன் கிட்ட இருக்கா…?” 
“ இருக்கு.” என்று செந்தில் சொன்னதுக்கு…பாலாஜி சொன்ன… “ குட்” என்றதில் வெறியான ஜமுனா..
“ என்னது குட்டா….?”
“சீ…நான் அதுக்கு சொல்லலே…ஒரு காபி நம்ம கிட்ட இருந்தா தான் போலீசுக்கு போக வசதியா இருக்கும்.  முதலில் இதில் பாதிக்கபட்ட பெண்களிடம், இதை முதலில் சொல்லி புரிய வைக்கனும். எல்லா பெண்களுக்கும் இருப்பது தான் உங்களுக்கும் இருக்கு. இது மாதிரி பயமுறுத்துனா பயப்படாம..இருங்கன்னும் .
இதை விட்டா இன்னும் அவனுங்க நிறைய பேரை நாசம் செய்வாங்கன்னு சொல்லனும்.” என்று சொன்னதோடு விடாது விரைந்து நடவடிக்கையும் எடுத்தான்.
அதன் விளைவாய், பாதிக்கப்பட்ட   நிறைய பெண்கள் காவல்துறையில் புகார் கொடுக்க…வேறு வழியில்லாது  அவர்களை கைது செய்தனர். கைது செய்தவர்களில் செந்திலும் அடக்கம்.
செந்திலின்  மனைவியின் புகைப்படம்  வெளியில் வராது, அப்பெண்ணும் பாதிக்கப்படாது,  என்ன மாதிரி விசயம் தனக்கு நடந்தது என்று கூட தெரியாது, தன் கணவன் இப்படியா….? என்ற அதிர்ச்சியில் இருந்தாள்.
ஆம் அப்புகைப்படம் அவளுக்கு தெரியாது எடுக்கப்பட்டது போல், கடைசி வரை அவளுக்கு தெரியாமலேயே போய் விட்டது. செந்தில் இதை பற்றி தன் மனைவியிடம் மூச்சு   விடவில்லை.எப்படி சொல்வான்…?
மேலும் இதில் பின் இருந்து நடத்தியது  பாலாஜி தான் என்று யாருக்கும் தெரியாது போய் விட்டது. எந்த காரணம் தொட்டும் அவனுடைய வாழ்க்கை பாதிக்கப்படுவதை அவன் விரும்பவில்லை.
இதே அவன் முன் நின்று தான் இந்த விசயத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்றால், அவன் ஒதுங்கி தான் இருப்பான். பாலாஜி நம் போல் வாழும் ஒரு சாதரண மனிதன்.
அவனின்  உழைப்பும், வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற குறிகோள் மட்டுமே அவனை இந்த நிலைக்கு உயர்த்தி இருக்கிறது. இவ்வளவு கஷ்டப்பட்டது எதற்க்காக….?நல்ல வாழ்க்கை வாழ தானே….?
அதுவும் தன் மனதுக்கு பிடித்த பெண் தன் கை சேரும் காலத்தில் இப்படி ஏதாவது வில்லங்கத்தை இழுத்து விட்டு கொள்வானா….? நம் புத்திசாலி பாலாஜி.  கண்டிப்பாக இழுத்து கொள்ள மாட்டான். பாலாஜியின் பெயர் தெரியாது குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்து விட்டான்.
“நேர்க் கொண்ட பார்வை என்ன படம்  பா. தல தல தான் ஜீ…” என்று அந்த படத்தை பற்றியும் , அந்த படத்தில் நடித்த நடிகனை பற்றியும் ஜமுனா சிலாகித்து பேசினாள்.
காதலில் பால பாடம் கூட அறியாத நம் நாயகன்,  ஓடாத படத்துக்கு காதலியை கூட்டிக் கொண்டு போய், காதலி இவனை நினைக்க வைக்காது,  நல்ல படத்துக்கு அழைத்து சென்று, அந்த படத்தின் நாயகனை நினைக்க வைத்த தன் முட்டாள் தனத்தை நினைத்து நொந்தவனாய்..
“ சரி சரி. உன் தல பெரிய கெத்து தான். ஆனா அவரை காதலிக்க அவர் மனைவி   வீட்டில் ஷாலினி இருக்காங்க. அனா எனக்கு நீ தான் இருக்க. அதனால நான் பாவம். என்னை கொஞ்சம் பாரும்மா.” என்று சொல்லி நமக்கு படம் தான் கை கொடுக்கவில்லை.
சென்னையில் காதலை வளர்க்கும் இடத்தில் ஒன்றான  மெரினாவாவது கைக் கொடுக்குமா….? என்ற ஆசையில் பாலாஜி ஜமுனாவை பீச்சுக்கு அழைத்து  வந்தான்.
பாலாஜியின் ஆசைக்கு தூபம் போடுவது போல, அவன் கண்ணில் பட்ட காட்சியில் இது வரை அரை இன்ச் இடைவெளி விட்டு பேசிக் கொண்டு இருந்த பாலாஜி  ஜமுனாவை நெருங்கி அமர வைத்தது.
அவன் தோள் தன் தோள் மீது முட்டுவதை பார்த்து ஏதோ பேசிக் கொண்டு இருந்த ஜமுனா  திரும்பி பாலாஜியை பார்க்க, அவனோ இந்த தோள் உரசல் ஏதார்த்தம் என்பது போல் சாதரணமாக பேசிக் கொண்டு இருக்கவும்,  “சீ நாம் தான் அவனை தப்பா நினைத்து விட்டோம். என் பாலாஜி ரொம்ப நல்லவன்.” என்று அவள் மனதில் நினைத்து முடிக்கவில்லை.
பாலாஜியின்  கை ஜமுனாவின் இடை மீது பட்டு… “ உனக்கு சுடியோட சாரி தான் நல்லா இருக்கு.இனி நீ சாரியே கட்டு ” என்று  சொல்ல.
“ நல்லா இருக்கா…? இல்ல வசதியா இருக்கா…?” ஜமுனா இடக்காக  கேள்வி கேட்டாள்.
 அதை விட இடக்காக பாலாஜி “ம்…இரண்டும் தான்.” என்று அவள் கேள்விக்கு தெனவெட்டாக பாலாஜி பதில் அளிக்க…
“ ஜீ ப்ளீஸ் கை எடுங்க. என்ன இது பப்ளீக் ப்ளேஸ்ல. எனக்கு ரொம்ப கூச்சமா இருக்கு.” நெளிந்துக் கொண்டே ஜமுனா சொன்னதற்க்கு….
“பாரு. உன்னை சுத்தி என்ன நடக்குதுன்னு பாரு.” என்று  சொல்ல. ஜமுனா தன் பக்க வாட்டில் இருப்பவர்களை பார்த்த நேரத்தில் அவர்கள் பக்கத்தில் கொஞ்சம்  தள்ளி அமர்ந்து இருந்த ஜோடிகளின் முகம் தெரியாது அந்த பெண்ணின் துப்பாட்டாவை கொண்டு போர்த்தி இருந்தது.
அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியாத அளவுக்கு நம் ஜமுனா குழந்தை இல்லையல்லவா… அதனால் அக்காட்சி பார்த்தவள் பாலாஜியை பார்த்து வெட்கம் பட்டாள் என்று  நீங்கள் நினைத்தால் அது உங்கள் தவறு.
“ ஓ அய்யா இதுக்கு தான் இந்த இடத்துக்கு என்னை கூட்டிட்டு வந்திங்கலோ…” என்று  சொன்னவள். எழ முயற்ச்சி செய்ய, அவளை ஒரே இழுவையில் இழுத்து அமர வைத்த பாலாஜி..
“ ஏன் இதுக்கு கூட்டிட்டு வந்தா தப்பா. இன்னும் ஒரு மாசத்தில் நம் திருமணம். இன்னும் உனக்கு என்ன வேண்டும். முதலில் உன் அம்மா பத்தி சொன்ன. சரி அதில் உனக்கு பயம் எங்கு உன்னை நான் ஏமாத்தி விடுவேன் என்று. இப்போ கூட அந்த பயம் இருக்கா என்ன….? இருந்தா சொல்லிடு. கல்யாணம் வரை உன் பக்கத்தில் கூட வர மாட்டேன்.” என்று  சொன்னவன். எழுந்துக் கொண்டு..
“ உனக்கு பிடிக்க வில்லை என்றால் கல்யாணம் ஆகி கூட உன் கிட்ட வர மாட்டேன்.” என்று சொல்லி விட்டு நடக்கலானான்.
 

Advertisement