Advertisement

அத்தியாயம்….18 
“ சரி ஜமுனா நீ இதையே நினச்சிட்டு மனச போட்டு குழப்பிட்டு இருக்காதே…..” என்று பாலாஜி ஜமுனாவிடம்  சொல்லிக் கொண்டு இருக்கும் போதே… செந்திலிடம் இருந்து அழைப்பு வந்தது.
அதை ஏற்காது  கைய்பேசியையே பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்த ஜமுனா…. அவனிடம் யார்….?  என்று கேட்காது பாலாஜியின் பின் பக்கம் நின்று அழைப்பு விடுத்தது யார்….? என்று  எட்டி பார்த்தாள்.
அதில் தெரிந்த பெயரில்…. “ கடவுளே..இன்னும் என்ன குண்டு தூக்கி போட போறானோ….?” என்று தான் ஜமுனாவுக்கு எண்ண  தோன்றியது.
பாலாஜி  அந்த அழைப்பை ஏற்காது அதை பார்த்த படி நின்றுக் கொண்டு இருந்தான் என்றால்…..ஜமுனாவும் அந்த அழைப்பை ஏற்க என்று சொல்லவில்லை.
அந்த அழைப்பை ஏற்காது இவர்கள் அமைதியாக இருந்தது  போலவே பாலாஜியின் கைய்பேசியின் சத்தமும் சிறிது நேரத்தில் அடங்கி அமைதி காத்தது.
 இந்த அமைதியான மனநிலையிலேயே இங்கு இருந்து சென்று விடலாம் என்று நினைத்த பாலாஜி…..  “ கிளம்பலாமா….?” என்று கேட்கவும்… இந்த கொஞ்ச நேர அமைதியே அதிகம் என்பது போல் திரும்பவும்  பாலாஜியின் அலைபேசி சத்தம் இட்டது.
அது யார் என்று  கூட பார்க்காது ..அது அவன் தான் என்ற முடிவோடு அதை ஏற்று காதில் வைத்த பாலாஜி எடுத்த உடன்…. “ என்னடா…..?”  என்று எதிரியிடம் பேசுவது போல் பேசினான்.
செந்தில் தன் விடுதிக்கு வந்த  போது பெண்களை பார்க்க கூடாத இடத்தை பார்க்கும் போதே….. அவனுக்கு கோபம் சுள் என்று ஏறியது. அதற்க்கு அடுத்து அவன் சாந்தி பற்றி விசாரித்ததில்…. “ இவன் இவ்வளவு காலம் தான் நினைத்தது போல் இல்லையோ….” என்று  நினைத்தவன்…
அடுத்து இன்ஸ்பெக்டர் சொன்ன செய்தியில் பாலாஜி கொஞ்சம் ஆடி தான் போய் விட்டான் எனலாம். முதலிலாவது  ஊருக்கு போனால் ஏதோ பேச வேண்டுமே என்று செந்தில் கேட்டதுக்கு பதில் சொல்வான்.
இப்பொழுது  அவனை பற்றி முழுமையாக தெரிந்துக் கொண்டதில்…அந்த ஏனோ…தானோ என்ற  பேச்சு கூட பேச பிடிக்கவில்லை. அதனால் தான் பேச்சில் இந்த தோரணை. 
அந்த பக்கம் செந்தில் ஏதும் சொல்லவில்லை. கைய் பேசியை அணைத்து விட்டானா…….? என்று  தன் கைய் பேசியை பார்க்க…அது தொடர்பில் தான் இருந்தது. 
“ தோ பாரு எனக்கு வேலை நிறைய இருக்கு. எதாவது இருந்தா சொல்லு..இல்லேன்னா…வெச்சிடு.”  என்று பேசி விட்டு பாலாஜி செந்திலோடான பேச்சை அத்தோடு முடித்துக் கொள்ள பார்த்தான்.
“ அண்ணா…” இந்த ஒரு வார்த்தை  கூட செந்தில் தயங்கி தயங்கி தான் அழைத்தான்.   திரும்பவும் கைய் பேசி அமைதி காத்திட…. பாலாஜிக்கு என்னடா இவனிடம்  ரோதனையா போயிடுச்சி…
ஜமுனா கூட என்னிடம் இப்படி  தயங்கி தயங்கி பேசியது இல்லை என்று எண்ணும் போது தான் பாலாஜிக்கு ஜமுனா நியாபகம்  வந்து நிமிர்ந்து பார்க்க…அவளோ.. இவனின் முகத்தை பார்த்த படி…ம்..ம் முகம் என்று சொல்வதை விட  முகத்தில் இருக்கும் உதட்டை பார்த்த படி அப்படியே நின்றுக் கொண்டு இருந்தாள்.
தான் என்ன பேசுகிறேன் என்று கவனிக்க தான் டென்ஷனோடு தன் உதட்டை பார்க்கிறாள் என்று பாலாஜிக்கு  தெரிந்தாலும்…அந்த சூழ்நிலையிலும் பாலாஜிக்கு ஜமுனா தன் உதட்டையே முறைத்து பார்த்துக் கொண்டு இருப்பது ஒரு போதையை கொடுத்தது எனலாம்.
அழைப்பில் அந்த பக்கம் இருந்த செந்திலை மறந்தவனாய் எதிர் நிலையில் நின்றுக் கொண்டு இருந்த  ஜமுனாவின் தோள் மீது தன் கை போட்டு தன் பக்க வாட்டில் கொண்டு வந்தான்.
ஜமுனாவோ அவர்கள் என்ன பேச போகிறார்கள்..பிரச்சனை இன்னும் போகுமோ..என்ற பயத்தில் இருந்ததால்… பாலாஜி தோள் மீது கைய் போட்டதோ…தன்னை அருகில் நிறுத்தி வைத்ததோ கவனத்தில் கொள்ள வில்லை.
கைய் பேசியின்  இணைப்பில் இருந்த செந்தில்…  “ அண்..ணா எ…னக்கு ரொ…ம்ப பிர..ச்சனை அண்ணா..நீங்க தான் உதவி செய்யனும்.” முதலில் திக்கலில் ஆராம்பித்த செந்தில் முடிவில் எப்படியோ தன் அண்ணனிடம் தான் சொல்ல  வேண்டியதை சொல்லி முடித்து விட்டான்.
செந்தில் மீது இருக்கும் நம்பிக்கையற்ற தன்மையில்  அவன் பேசுவது உண்மை என்று நம்ப முடியததால்…. “ என்ன புது ட்ராமா போடுறியா…உன் ரீல் அறுந்து போய்  இரண்டு நாள் ஆகுதுடா……” 
உன்னை பற்றி எனக்கு எல்லாம் தெரியும். இனி என்னிடம் உன் நடிப்பு தேவையில்லை என்ற வகையாக சொல்ல…. அவனோ…. “ அண்ணா சத்தியமா நான் பிரச்சனையில் மாட்டி இருக்கேன். நான்ன்னா நான் இல்ல…என் மனைவி. ”
இப்போது கூட இது என்ன புது கதை என்று தான் பாலாஜிக்கு எண்ண தோன்றியது.  ஆனால் ஜமுனா பாலாஜியின் மிக அருகில் நின்றுக் கொண்டு இருந்ததால்… 
பேசியில் அந்த பக்கம் இருந்து பேசிய செந்தில்  பதட்டத்தில் பாலாஜி தான் சொல்வதை நம்ப வேண்டுமே என்ற ஆவேசத்தில் பேசியதாலோ என்னவோ மிக சத்தமாவே பேசினான். அதனால் செந்தில் பேசியது நன்றாகவே ஜமுனாவுக்கு கேட்டது. கேட்டதை நம்பவும் வைத்தது.
“ என்ன தான் பிரச்சனைன்னு நேரில் கூப்பிட்டு விசாரிங்கலே….” நம்பியதின் பயனாய்  செந்திலுக்கு ஆதாரவாய் இடையில் புகுந்து பேசினாள்.
“ இவ இப்ப புரிஞ்சு பேசுறாளா…? இல்ல புரியாம பேசுறாளா….?” என்று  மனதில் நினைத்துக் கொண்டு ஜமுனாவை பாலாஜி பார்த்துக் கொண்டு இருக்கும் போதே…
அந்த பக்கத்தில் இருந்த செந்தில்…. “  அண்ணா….அண்ணி சொல்வது போல ஒரே ஒரு தடவை உங்கள பார்த்து பேசனும். அப்புறம்  உங்களுக்கே நிலமை என்னன்னு புரிஞ்சிடும்.” தன்னை பார்க்க அண்ணன் ஒத்துக் கொள்ள வேண்டுமே என்று பதட்டத்துடன் பேசினான்.
இவன் இவ்வளவு சொல்கிறானே… சரி  நேரில் பார்த்து என்ன என்று தான் கேட்போம் என்று…. “ சரி நாளைக்கு காலையில  நுங்கப்பாக்கத்தில் நான் கட்டும் சைட்டுக்கு வா…..” என்று அழைத்தான்.
“ அண்ணா நான் உடனே உங்கல பார்க்கனும் அண்ணா..பிரச்சனை ரொம்ப பெருசு அண்ணா….”  என்று சொன்னவன் கூடவே…. “ உங்க கூட அண்ணி இருந்தா நல்லா இருக்கும் அண்ணா….” என்று  செந்தில் சொன்னது தான்….
செந்திலின் இந்த பேச்சில் முதலில் பெரிய பிரச்சனை பெரிய பிரச்சனைன்னு சொன்னதே சொல்லிட்டு இருக்கானே..அப்படி என்ன பிரச்சனை. அதுவும் என்னை உடனே பார்க்கும் அளவுக்கு…செந்தில் பேச பேச    யோசித்துக் கொண்டு இருந்த பாலாஜி…
கடைசியாக செந்தில் சொன்ன…” கூடவே அண்ணி இருந்தா நல்லா இருக்கும் என்ற பேச்சில்…. “ அடி செருப்பாலே….” தான் பொது இடத்தில் நின்று  பேசிக் கொண்டு இருக்கிறோம் என்று கூட நினையாது சத்தம் போட்டு கத்தி விட்டான்.
“ அண்ணா என்னை தப்பா நினைக்காதே அண்ணா. அண்ணி சொன்னா நீங்க கொஞ்சம் கேப்பிங்கலே..அதை நினச்சி தான் சொன்னேன்.” செந்தில் உண்மையில் அதை நினைத்து தான் பாலாஜியோடு தான் பேசும் போது ஜமுனா இருந்தால்….
பாலாஜி தனக்கு உதவவில்லை என்றாலும்..ஜமுனா சொன்னால் கேட்பார் என்று   தான் செந்தில் ஜமுனாவையும் அழைத்தது. ஆனால் ஏற்கனவே இவன் மேல் இருந்த பிழையில் செந்தில் ஜமுனாவை பற்றி பேசியதில் …
ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடைசியில மனுஷன கடிச்ச கதையா….இவன் ஜமுனாவை பார்ப்பானா….? என்று தான் பாலாஜிக்கு நினைக்க தோன்றியது.
செந்தில் இந்த அளவுக்கு விளக்கம் கொடுத்த பின்னும் அவனை  நம்பாது… “நான் மட்டும் தான் வருவேன். என்னிடம் மட்டும்   பேசுவது என்றால் பேசு. இல்லேன்னா உன் கிட்ட பேச எனக்கு ஒன்னும் இல்ல.” என்று திட்ட வட்டமாய் சொல்லி விட்டான்.
ஆனால் உன் திட்டம்..வட்டம் எல்லாம் செந்திலுக்கு வேணா  சரி…எனக்கு அது எல்லாம் இல்லை என்பது போல்…. ஜமுனா நானும் வருவேன் என்று  அடம் பிடித்து அடுத்த ஒரு மணி நேரத்தில்…. ஊரப்பாக்கம் விடுதியில் செந்தில் எதிரில் பாலாஜி ஜமுனா அமர்ந்து இருந்தனர்.
“ என்ன நீ நினச்சிட்டு இருக்க…? நான் என்ன உன் வேலை ஆளா…கூப்பிட்ட உடன் வர….” என்று  பாலாஜி செந்திலை கண்ட படி திட்ட தான் நினைத்திருந்தான்.
ஆனால் தான் நினைத்தில் ஒரு வார்த்தை கூட திட்டாது…” என்ன ஆச்சி…இவனுக்கு உண்மையிலே…பிரச்சனையா….?” என்பது போல் இருந்தது செந்திலின் முகம்…அங்கு அங்கு அடிப்பட்டு வீங்கி போய்…உதட்டின் வீக்கத்தை பார்த்தால்…. பாக்ஸிங்கில் கைய் தேர்ந்தவன் குத்து விட்டது போல் இருந்தது. 
“ என்ன ஆச்சி….” பாலாஜி சுத்தி  வளைத்து கேட்காது நேரிடையாக விசயத்துக்கு வந்தான்.
“ போன வாரம்…என் பிரன்ஸ்சுங்கல…என் வீட்டில் தங்க வெச்சேன்.” என்று சொன்னதும் பாலாஜி  அதிர்ந்து போய் …. “ எந்த பிரன்ஸ் சாந்தி விவாகரத்தில் ஈடுபட்ட பசங்கலா….?” 
பாலாஜி சாந்தி விவகாரம் பற்றி தன்னிடம்  பேசுகிறான் என்றால்..இவனுக்கு ஒரளவுக்கு விவரம் தெரியும் போல் என்று நினைத்த செந்தில் விளக்கமாய் சொல்லாது…
“ ஆமாம்” என்று  தலையாட்டினான்.
“ முட்டாள்..முட்டாள்….அவனுங்கல பத்தி என்னோடு உனக்கு தான்  நல்லா தெரியும். அப்படி இருந்தும் பெண்கள் இருக்கும் வீட்டில் விட்டு இருக்க….? உனக்கு அறிவு இல்ல.” என்று  பாலாஜி திட்டியதற்க்கு ஒன்றும் சொல்லாது இடித்த புளி போல் இருந்தவனை பார்த்து பாலாஜிக்கு இன்னும் தான் கோபம் எகிறியது.
“ அறிவு எல்லாம்  நிறைய தான் இருக்கு. ஆனா அந்த அறிவ நல்ல வழியில பயன் படுத்தாம பணத்தாசை..பெண்ணாசை பிடிச்சி.. அத தப்பா உபயோகிச்சிட்ட….அப்போ அதுக்கு உண்டான பலன அனுபவிச்சி தானே ஆகனும்.”
செந்திலின்  முகத்தில் இருக்கும் காயத்தை அந்த கெடுகட்ட பசங்க தான் செய்து இருப்பாங்க….கத்தி எடுத்தவனுக்கு  கத்தியால் தான் சாவு என்பது போல்…
தவறான வழியில் போகுபவர்கள்..அதே தவறால் தான் அவர்களுக்கு அழிவு காலத்தை கொடுக்கும் என்பதற்க்கு செந்திலே ஒரு உதாரணம் என்பது போல் இருந்தது. 
செந்தில் அடுத்து அடுத்து பேசிய வார்த்தைகள். பாலாஜி நினைத்தது உண்மை தான் என்று விளங்கியது…. “ அண்ணா நான்  தப்பு செஞ்சேன் தான். அதுக்கு உண்டான தண்டனை கொடுப்பது எனக்கு என்றால் பரவாயில்ல….என் மனைவிக்குன்னா எப்படி அண்ணா…அதுவும்…அப்படி ….” 
செந்தில் சொன்னதில் இருந்து அது எந்த மாதிரி பிரச்சனையில் அவன் மனைவி மாட்டிக் கொண்டு இருக்கிறாள் என்று பாலாஜிக்கு புரிந்து விட்டது.
 புரிந்த விசயம்…அதிர்ச்சியில் பாலாஜி ஜமுனாவை பார்க்க,  ஜமுனாவுக்கும் இது பேரதிர்ச்சி தான் என்பதை அவள் முகமே காட்டி கொடுத்தது. பாலாஜிக்கோ…தம்பி மனைவி பற்றிய  இது போல் விசயத்தை இதற்க்கு மேல் என்ன என்று விசாரிப்பது என்று தெரியாது அமைதி காத்தான்.
செந்திலுக்கோ இதற்க்கு  வழி பாலாஜியால் மட்டுமே செய்ய முடியும் என்பது போல்…” இது போல் அவங்கல இரண்டு தடவை என் வீட்டில் தங்க வெச்சி இருக்கேன் அண்ணா…” அந்த பேச்சில்…
அமர்ந்து இருந்தவன் எழுந்து அடிபட்ட முகத்திலேயே ஓங்கி ஒரு குத்து குத்திய்ன்   மீண்டும் குத்த போகும் போது பாலாஜியின் கையை பிடித்து தடுத்த ஜமுனா…
“ இன்னும் நீங்க ஒரு அடி அடித்தால் கூட அவன் செத்துடுவான். பொறுமையா என்ன நடந்ததுன்னு கேளுங்க. இது கோபப்படும் நேரம் இல்லை.”
ஜமுனா சொல்வது சரி தான் என்றாலும் பாலாஜிக்கு கோபத்தை அடக்க முடியவில்லை.என்ன மாதிரியான ஆளுங்களை வீட்டில்  சேர்த்து இருக்கான். இவனுங்களை தங்க வைக்க சித்தப்பா…சித்தி எப்படி ஒத்துக்குனாங்க…..என்று நினைத்தவன் அதை கேட்கவும் செய்தான்.
“ வீட்டில் பெண் இருக்கும் போது இது போல் வயசு பசங்க  வீட்டில் தங்க…சித்தப்பாவும் ….சித்தியும் எப்படி ஒத்துக்குனாங்க….?” என்று கேட்டதுக்கு…
 “ பரிசா அப்பாவுக்கு ஆப்பிள் போன்…அம்மாவுக்கு துபாயில் இருந்து வாங்கி வந்த ப்யூர் கோல்ட் செயின்…பாரின் வாட்ச்…சென்ட்… “ என்று  செந்தில் சொல்ல சொல்ல… திரும்பவும் எழுந்து இருக்கும் முகரையையும் உடைத்து எடுத்து விடலாமா….? என்ற வேகம் பாலாஜிக்கு ஏற்பட்டது.
செந்தில் பேச்சை கேட்ட ஜமுனாவுக்கு கோபம்  என்பதை விட…ஒரு வித அருவெறுப்பு ஏற்பட்டது எனலாம்… பணத்துக்காக எது வேணா செய்வாங்கலா…
விலை உயர்ந்த பரிசு பொருள் கொடுத்தா…. யாரை வேணா வீட்டில் அனுமதிப்பாங்கலா….? என்ன ஜென்மங்கள் இதுங்க எல்லாம்….? மனித இனத்தை   நினைக்க தோனாது….ஏதோ ஒரு கேடு கெட்ட ஜென்மத்தை நினைப்பது போல் தான் ஜமுனாவும் நினைத்தாள்.
நினைத்தவள் பாலாஜி போல்  கோபம் படாது….அருகில் இருந்த தண்ணீரை  பாலாஜிக்கு கொடுத்து அவன் குடித்து முடித்ததும்…. “ உங்க கோபம் நியாயமானது தான் ஜீ….ஆனா நீங்க அந்த பொண்ண பத்தி நினச்சி பாருங்க…. அந்த வீட்டுக்கு இப்போ தான் புதுசா வந்து இருக்கா….அந்த பொண்ண பாருங்க…”
ஜமுனா விசயத்தின் தீவிரத்தை உணர்த்தி அவனின் கோபத்தை குறைக்க முயற்ச்சி செய்தாள். ஜமுனாவின் பேச்சில் இருந்த உண்மையில்… “ இப்போ சொல்.” என்பது போல் பாலாஜி செந்திலை பார்த்தான்.
“ மூணு நாள் முன்னாடி…அவனுங்க என் வீட்டுக்கு வந்து….   சாந்தி பொண்ண பத்தி சொல்லி…அந்த பொண்ணு உங்க அண்ணன் விடுதியில தான் இன்னும் தங்கி இருக்கா…. நீ உன் அண்ணன் கிட்ட கெஞ்சிவியோ…மிரட்டுவியோ….இனி அந்த பொண்ணு சென்னையில இருக்க கூடாது. அவ ஊரு பார்க்க போயிடனும்.  நீ இத செஞ்சா ஒரு பெரிய அமெண்டா கொடுக்குறேன்னு சொன்னாங்க…. நீ வரும் வரை நான் இங்கு இருக்கேன்னு சொன்னதை நம்பி இங்க வந்தேன்.”
இது வரை செந்தில் பேச்சில் குறுக்கிடாது அமைதியாக கேட்டுக் கொண்டு வந்த பாலாஜி இப்போது…. “ அவனுங்க…ஏன் உன் வீட்டில் தங்கனும். முதல்ல தங்குனதா சொன்னியே அது ஏன்…..?” பாலாஜி விசயம் என்ன என்று தெரிந்தே கேட்டான்.
அந்த ஈன செயலை  செய்யும் போது இல்லாத  வெட்கம்..அதை சொல்லும் போது செந்திலுக்கு வந்தது… “ அது அண்ணா அது…..” என்று தயங்கிய வாறே… ஜமுனாவை பார்த்தான்.
“ நீ தானே சொன்ன…இவளும் இருக்கனும் என்று ….சொல்லு.” என்று சொன்னதும்..
“ நம்ம ஊரில பொண்ணுங்க எல்லாம் குளத்துல தானே  குளிப்பாங்க… அத படம் பிடிக்க…” அவன் முழுவதும் சொல்லி முடிக்க வில்லை..அவன் கன்னத்தில் அடி இடி போல் விழுந்தது.
அடித்தது பாலாஜி இல்லை.நம்  ஜமுனாவே தான்…. அடித்ததோடு…” என்ன மத்த பொண்ணுங்கல படம் பிடிச்சி  அவங்கல மிரட்டினது போல….உன் பொண்ணாட்டியையும் படம் பிடிச்சி மிரட்டுறாங்கலா….?” நேரில் பார்த்தது போல் சொன்னாள்.
“ஆம்….” என்று சொல்லி விட்டு தலை  குனிந்தவனை என்ன செய்தால் தகும்.
 

Advertisement