Advertisement

அத்தியாயம்….17
“ ஜீ….என்ன பிரச்சனை….?”  காபி ஷாப் வந்ததில் இருந்து… இதே கேள்வியை  நான்கு தடவை வேறு வேறு மாடுலேஷனில் கேட்டும் பதில் கிடைக்காது போக…..
சரி  காபியாவது சூடு ஆறுவதற்க்கு முன்  குடிக்கலாம் என்று அந்த காபி கப்பை கையில் எடுக்க…. அதுவோ…கூல்ரிங்ஸ்சுக்கு போட்டி  போடும் வகையில் ஜில் என்று இருந்தது.
“ ஓ துரை கோல்ட் காபியைய  ஆர்டர் செய்து இருக்காரு போல….. ஒரு படத்தில் சொல்வார்களே…காபின்னாலே  சூடா குடிப்பது…அந்த ரகத்தை சேர்ந்தவள் நம் ஜமுனா…. அது நம் பாலாஜிக்கும் நன்கு தெரியும்.
தெரிந்தும் இதை வாங்கி உள்ளான் என்றால்…. ஜீக்கு ஏதோ பிரச்சனை போல…. “ என்னடா இது…காதலிக்கலாம் என்று சொன்ன அவன்…என்  முகத்தை பார்க்காது… இருக்கிறான்.
காதல் வேண்டாம் என்று  சொன்ன நான்…அவன் முகத்தை முகத்தை பார்த்துக் கொண்டே  இருக்கேன். ஜமுனா அந்த ஆறி போன காபியை குடித்து முடித்த பின் தான் பாலாஜி இந்த உலகுக்கே வந்தது போல்….
“சாரி ஜமுனா…ஏதோ  நியாபகத்துல கோல்ட் காபி வாங்கிட்டேன்.” என்று பாலாஜி  மன்னிப்பு வேண்டினான்.
ஜமுனா ஒன்றும் சொல்லாது…” முதலில் காபியை  குடிங்க.” என்று சொன்னவள் அவன் குடித்து குடிக்கும் வரை அமைதியாகவே  இருந்தாள்.
பின்… “ இப்போ சொல்லுங்க…என்ன பிரச்சனை….?” என்று  கேட்டவள்.
பின் அவளே….” திரும்பவும் அந்த பொண்ணு  பத்தி பேசாதிங்க….எனக்கு ரொம்ப கடுப்பா இருக்கு. நாம பார்த்து பேசுவதே…இப்போ எல்லாம் அபூர்வமா இருக்கு. 
சரி உங்களுக்கு இருக்க வேலை….அப்புறம் இந்த ஹாஸ்ட்டல் கட்டுவதோடு,  நமக்கு வீடும் சேர்த்து கட்டுறது. அதோடு நம்ம கல்யாணம் வேலையும் இருக்குறதாலே…  உங்களுக்கு எப்போ டைம் கிடைக்குதோ…அப்போ மீட் பண்ணலாமுன்னு விட்டுட்டேன்.
அந்த நமக்கு கிடைக்கும்  கொஞ்ச நேரத்தையும் அந்த பொண்ண பத்தி பேசி கடுப்பேத்தாதிங்க…” என்று  திட்ட வட்டமாக பேசி விட்டு ஜமுனா பாலாஜி முகத்தை பார்த்தாள். பாலாஜியின்  முகபாவனையோ அய்யோ பாவம் போல் இருந்தது.
அவன் முகத்தை பார்த்தே…. “ என்ன ஜீ அந்த பொண்ண பத்தி தானா….?” என்று  கேட்க…
பாலாஜி…. “ ஆமாம்.” என்பது போல் தலையாட்டினான்.
“ஜீ….நிச்சயத்துக்கு முன்ன…காதலி காதலின்னு நீங்க என் பின்னாடி சுத்திட்டி இருந்திங்க…இப்போ என்னன்னா…உங்கல பாக்க போன் போட்டு நான் கூப்பிடுறதா இருக்கு. ஜம்மூன்னு நீங்க கூப்பிடுற அந்த செல்ல சுருக்கம்….  ஜமுனான்னு நீண்டு ஆயிடுச்சி….
காதல்ல நம்பிக்கை இல்ல…நான் காதலிக்க மாட்டேன்னு சொன்ன நான்.  ஜீ…ஜீன்னு உங்க பின்னாடி சுத்திட்டு இருக்கேன். என்ன….?என்ன…?” தன் புருவத்தை ஏற்றி இறக்கி ஜமுனா கேட்ட விதத்தில்  பாலாஜி சிரித்து விட்டான்.
அவன்  சிரித்த முகத்தை பார்த்துக் கொண்டே…. “ என்ன ஜீ பிரச்சனை….?” என்று கேட்டதுக்கு…
“ நீ தான் அந்த பொண்ணு  பத்தினா பேச வேண்டாமுன்னு சொல்லிட்டியே….”
“ சரி எந்த பிரச்சனைன்னாலும் பரவாயில்ல சொல்லுங்க….”
“ இல்ல  வேண்டாம் ஜமுனா..” என்று சொன்னவன்.
பின்…” ஜம்மூ ….” என்று  சொல்லி விட்டு சிரிக்க…
“ அந்த பொண்ண  பத்தின்னாலும் பரவாயில்ல சொல்லுங்க.”  அவனுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நம்மிடம் சொல்லாமல்  வேறு யாரிடம் சொல்வான். என்ற எண்ணம் ஜமுனாவுக்கு…
“ இரண்டு நாள் முன்ன என் சித்தப்பா பையன் விடுதிக்கு வந்து இருந்தான்.” சாந்தி பற்றிய பிரச்சனை என்பது போல் தானே சொன்னான். இது என்ன புதுசா சித்தப்பா பையன  பத்தி பேசுறான் என்பது போல் அவனை பார்க்க…..
பாலாஜி தன் பேச்சை தொடர்ந்தார் போல்…. “ நம்ம நிச்சயத்துக்கு வந்து இருந்தாரே அவன் மகன். எப்போவும் இவன் விடுதிக்கு  எல்லாம் வந்தது இல்ல. வீட்டுக்கு கூட இரண்டு தடவை தான் வந்து இருக்கான்.
அதுவும் சித்தப்பா காசு வாங்கிட்டு வான்னு சொன்னதாலே தான் வந்தான். திடிர்ன்னு இரண்டு நாள் முன்ன வந்தவன்….உங்களுக்கு உதவியா விடுதிய எல்லாம் நான் பார்த்துக்குறேன். நீங்க புது மாப்பிள்ளையா இருங்கன்னு  சொன்னான்.”
இதில் என்ன இருக்கு….? இவன் நல்லதுக்கு தானே சொல்லி இருக்கான். என்று நினைத்தவன்…. “ உங்க தம்பி நல்லது தானே சொல்லி  இருக்காரு….இதில் தப்பா எனக்கு ஒன்னும் தெரியலையே…..” என்று தன் அபிப்ராயத்தை சொன்னவள்.
“ அந்த பொண்ணு பிரச்சனைன்னு சொன்னிங்க…இப்போ உங்க தம்பிய  பத்தி பேசிட்டு இருக்கிங்க….?” என்று குழம்பிய முகத்தோடு ஜமுனா  பாலாஜியை பார்த்தாள்.
“ எங்கே என்ன சொல்ல விட்டே…என் தம்பி  கிட்ட ஆரம்பிச்ச பிரச்சனை. எப்படி சாந்தி கிட்ட முடிஞ்சதுன்னு சொல்றதுக்குள்ள  நீ இடையில புகுந்துட்ட….”
“ உங்க தம்பிக்கும்…. அந்த பொண்ணுக்கும்  என்ன சம்மந்தம்…..?” இத்தனை நேர பேச்சில்….ஜமுனா வாயில் இருந்து  சாந்தி என்ற பெயர் கூட வராது பேசிக் கொண்டு இருப்பதை பாலாஜி கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.
இருந்தாலும் அதை பற்றி  பேசாது…இருக்கும் பிரச்சனையை பார்ப்போம் என்று…. “ ஜம்மூ முதல்ல ஒன்றை  நல்லா கவனி. என் சித்தப்பாவுக்கு என் மேல பாசம் எல்லாம் இல்ல. என் சின்ன வயசுல என் சொத்துக்காக என்ன அவர் வீட்டில் வெச்சிக்கிட்டார்.
நான் ஏமாந்து இருந்தா…அதை மொத்தமா எடுத்துட்டும் இருப்பாரு…நான் சுதாகரிச்சிட்டு…. அத்தனை வருசம் என் நிலத்துல நிறையவே பணம் பார்த்துட்டாருன்னு தெரிஞ்சும்…
போனா  போகுதுன்னு கொஞ்சம் இடத்தை அவர் பேருக்கு கொடுத்துட்டு என் நிலத்தை வித்துட்டு சென்னை வந்தப்ப…என் சித்தப்பா ஊரு ஜனம் கிட்ட…இவன் பணத்தை மொத்தமா 
 ஏமாந்துட்டு தான் வரப்போறான்னு ஊரு முழுக்க சொல்லிட்டு திரிஞ்சி இருக்கார். அவர் நினச்சி கூட பாக்க முடியாத நிலைக்கு நான் வந்ததும்…என் அண்ணன் பையன்னு இப்போ வந்துட்டு போயிட்டு இருக்கார்.
நானும் அதை எல்லாம் பெருசா எடுத்துக்காம…அவர் அப்ப…… அப்ப….பணம் கேட்டா  கொடுத்துட்டு தான் இருக்கேன்.ஆனா அவர வைக்க வேண்டிய இடத்துல வைக்கவும் நான் தவறல…
ஆனா என் சித்தப்பா  மகன்..அவருக்கு மேல இருப்பான் போல…. அவருக்கு பணத்தாசை மட்டும் தான் இருக்கு. இவனுக்கு வேறு ஆசையும் இருக்கும் போல இருக்கு…அவன் நடவடிக்கை.”
“ வேறு ஆசைன்னா….? யூ …. மீன்…லேடிஸ்….”
“ம்….அங்கு வந்ததுல இருந்து அவன் பார்வை போன இடமே சரியில்ல…இதுல அவன் எனக்கு உதவி செய்யிறேன்னு சொன்னா எனக்கு எப்படி இருக்கும்…..? சரி  ஒரு வழியா பேசிட்டு அவன அனுப்ப பார்த்தா…கடைசியா போகும் போது…
முதல்ல அந்த சாந்தி பொண்ணு இங்கே தானே தங்கிட்டு இருந்ததுன்னு கேட்டான்.  நானும் சரி அந்த காட்சியில என் விடுதி பேரும் தெரியுதே ..அத பார்த்துட்டு தான் கேக்குறான்னு  நினச்சா… இப்போவும் அந்த பொண்ணு இங்கே தான் தங்கிட்டு இருக்குறதா….கேள்வி பட்டேன்னு கேட்குறான்.”
“அப்போ  உங்க தம்பிக்கும்….இந்த பிரச்சனைக்கும் சம்மந்தம் இருக்குன்னு நினைக்கிறிங்கலா….?” ஜமுனாவுக்கு இப்போது தான் பிரச்சனையின் தீவிரம் பிடி பட்டது.
“ம்….முதல்ல லைட்டா தான் இருந்தது. அன்னிக்கி ஈவினிங்கே நம்ம ஏரியா இன்ஸ்பெக்டர் என்ன கூப்பிட்டு..அந்த பொண்ண  உங்க விடுதியில் தங்க வெச்சி இருக்குறது உங்களுக்கு தான் பிரச்சனைய ஏற்படுத்தும்.
உங்கல எனக்கு ரொம்ப நல்லா தெரியும் என்பதால தான் உங்கல கூப்பிட்டு சொல்றேன்.  இதுல ஈடுப்பட்ட பசங்க எல்லாம் பிஞ்சியிலேயே பழுத்தது சார்.” என்று சொன்னவர்..
“ “***** அந்த காலேஜில படிக்கும் போதே… பாடம் நடத்துற லெக்சரரையே ஆபாசமா படம் எடுத்து மாட்டிகிட்டானுங்க. அப்புறம்  அவன் அப்பன் காரனுங்க….பணத்தை கொடுத்து தான் பசங்கல வெளியே எடுத்து இருக்கானுங்க….” என்று சொன்ன பாலாஜி கூடவே…
“ அந்த காலேஜூல தான் என் சித்தப்பா பையன் செந்திலும் படிச்சான்.” என்று  கூடுதல் தகவலாய் சொன்னதும்…
“அப்போ….வேவு பார்க்க தான் உங்க தம்பி விடுதிக்கு வந்ததா….?”
“ முதல்ல அவனை என் தம்பின்னு சொல்றதை நிறுத்து.” என்று கடிந்து விட்டு…
“ம்…ஒன்னும் இந்த பிரச்சனையில் அவனும் இன்வால்வ் ஆகி இருக்கனும். இல்ல அவனுங்க சொல்லி இவன் நோட்டம் விட வந்து இருக்கனும்.” பாலாஜியின் பேச்சில்   ஜமுனாவுக்கு கொஞ்சம் உதறல் எடுக்க ஆராம்பித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
பாலாஜியின் பேச்சில்….  வேவு பார்க்க என்றால்….அவனுங்களுக்கு உதவி செய்ய வந்து இருப்பான் என்று தான் நினைத்தாள். இதில் அவனே   சம்மந்தப்பட்டு இருக்கிறான் என்பதை அவள் நினைத்து கூட பார்க்கவில்லை.
இவன் தான் ஏதோ தவறாய் புரிந்துக் கொண்டு இருக்கிறானோ என்று…..” எதை வெச்சி  செந்திலும் இதில் சமந்தப்பட்டு இருக்கான்னு நீங்க சந்தேகப்படுறிங்க….?” என்று  கேட்க…
“ அந்த லெக்சரரை ஆபாசமா படம் பிடிச்சி மாட்டி கிட்டாங்கன்னு அந்த இன்ஸ்பெக்டர் சொன்னதா சொன்னேன்லே… மாட்டி கிட்ட பசங்கல்ல இவனும் ஒருவன்.”
“ என்ன…சொல்றிங்க…?” ஒரு மனிஷி ஒரு நாளைக்கு எவ்வளவு அதிர்ச்சி தான் தாங்குவாள். கொஞ்சம் தெளிய விடுங்கப்பா…என்பது போல்,ஆனாது  ஜமுனாவின் மனநிலை.
அதுவும் இன்று பாலாஜியை  அவளே தான்…இந்த காபி ஷாப்பின்   பெயர் சொல்லி வாங்க என்று அழைத்தது.ஜமுனாவுக்கு  காதலிக்க பிடிக்கவில்லை என்றாலும், காதலிக்கப்படுவது  மிகவும் பிடித்து தான் இருந்தது.
பாலாஜியின் வாயில் இருந்து காதல்  டையலாக்கை எதிர் பார்த்து வந்தவளுக்கு …பாலாஜியின் இந்த பேச்சு…அதிர்ச்சியோடு கூட  ஏமாற்றமும் அளித்தது எனலாம்.
இருந்தும் இப்போ இருக்கும் பிரச்சனை தானே முக்கியம் என்று…. “இப்போ என்ன செய்ய போறிங்க….?” 
“அது தான் புரியல..அந்த இன்ஸ்பெக்டர் சொன்னது போல நமக்கு எதுக்கு  வம்புன்னு அந்த பொண்ண விடுதியில இருந்து அனுப்பிட்டு நிம்மதியா என் கல்யாண வேலை பார்க்கலாமுன்னு  நினச்சா… அதுக்கு பிறகு உண்மையில் என்னால் நிம்மதியா இருக்க முடியுமா…..?
அது எனக்கு சந்தேகமா தான் இருக்கு. இது வரை நான் யாருக்கும் உதவின்னு செஞ்சது இல்ல…ஆனா இது வரை இது போல் பிரச்சனை என் கண் முன் வந்தது இல்ல.
காதல் அதுக்கு அடுத்து அந்த  பொண்ணு போய் கல்யாணம் செஞ்சிகிட்டா…இது போல் தான்  என் வரையில் வரும் பிரச்சனைகள். ஆனா இது போல்…அதுவும் வலைதளங்களில் என் விடுதியில் தங்கி இருக்கும் பெண்ணின் படம் வந்ததே..எனக்கு ஒரு அதிர்ச்சின்னா….அதில் ஈடுபட்டது எனக்கு வேண்டிய ஒருத்தன்.
அது எனக்கு தெரிந்தும்….நான் கண்டுக்காம போனா….நாளைக்கு நமக்கும் ஒரு பெண்…..”அதற்க்கு அடுத்து அவனை பேச விடாது அவன் வாயை பொத்தியவள்…போதும் என்பது போல் சைகை காட்டி…. “இதுக்கு மேல ஒரு வார்த்தை உங்க வாயில் இருந்து வரக்கூடாது சொல்லிட்டேன்…இப்போ என்ன உங்களுக்கு அந்த பொண்ணுக்கு ஏதாவது செய்யனும் அவ்வளவு தானே…செய்யுங்க. ஆனா அது வெளியில தெரியாம செய்யுங்க….”
 முதலில் பாலாஜி நமக்கு எதற்க்கு  வம்பு. அந்த பெண் நம் விடுதியில் தங்கி கொள்ளட்டும். இது மட்டும் தான்  சாந்திக்கு பாலாஜி உதவியாக செய்ய நினைத்தது.
ஆனால் இப்போது இது போகும் பாதை பார்த்தால்….. அதுவும் முன் தினம் அந்த இன்ஸ்பெக்டர் சொன்ன…. “ இவனுங்களுக்கு இதே தான்  வேலை சார். முதலில் முகநூலில் நட்பு வட்டத்தை ஏற்படுத்திக்கிறது.
பின் அவங்களுக்கு பிடிச்சா மாதிரி பேசி..கொஞ்சம் கொஞ்சமாய் அந்த பெண்கங்களை  தங்கள் வழிக்கு கொண்டு வந்து அந்த பெண்களே தங்கள் அந்தரங்க புகைப்படத்தை அனுப்பி விடும் அளவுக்கு  கொண்டு வந்து…
பின் தங்கள் ஆசைக்கு மட்டும் இல்லாம தாங்கள் கைய் காட்டும் பெரிய மனுஷங்களிடமும் இருக்கும் படி செய்வாங்க. இதில் எல்லாத்தையும் விட கொடுமை… இதில் கிராம பக்கம் இருக்கும் பெண்கள் கூட பாதிக்கப்பட்டு இருக்காங்க…”
இன்ஸ்பெக்டரின் இந்த பேச்சுக்கு பாலாஜி…. “  கிராம புறங்களில் இருக்கும் பெண்கள் இப்போ எல்லாம் படிக்க தான் செய்யிறாங்க.  என்ன அந்த படிப்ப நல்ல முறையில் பயன் படுத்துனா நல்லது. இது போல் முகநூல் நட்பில் ஏமாறாது.” என்று  சொன்னதற்க்கு…
“ நீங்க வேற சார். கிராம பெண்களை அங்க இருக்கும் ஆண்களை வெச்சி அந்த ஊருக்கு சும்மா சுத்தி பாக்குறது போல போய்… அங்கு இருக்கும் பெண்கள் ஆத்துல குளிக்குறத போட்டோ புடிச்சி…அங்கு இருக்கும் இரண்டு பெண்களை கூட மிரட்டி இருக்கானுங்க.” என்ற பேச்சில்…பாலாஜி அதிர்ந்தே விட்டான்.
தன்னுடையதும் கிராமம் தானே…. என்ன தான் பிழைப்புக்கு சென்னை வந்தாலும்…அவன் சொந்த ஊருக்கு போகும் போது எல்லாம்…இங்கு தானே நான் பிறந்தேன். இந்த கோயிலில் தானே அம்மா பொங்கல் வெச்சாங்க…அது எல்லாம் அவனுக்கு மறக்க முடியாத நியாபகங்கள்.
 எங்கோ ஒரு மூலையில் இருக்கும் செந்தில் இதில் சம்மந்தப்பட்டு இருக்கிறான் என்றால்….  இது போல் கிராம பெண்களை பிடிக்க தானோ…நினைக்க நினைக்க….அவனுக்கு தாள முடியவில்லை எனக்கு ஒரு தங்கை இருந்து இது போல் பிரச்சனையில் மாட்டிக் கொண்டால்….எனக்கு என்ன என்று நான் இருப்பேனா….? அதன் வெளிப்பாடே…ஜமுனாவிடம் நமக்கு ஒரு பெண் பிறந்தால் என்ற  பேச்சு எழ காரணம்.
ஜமுனாவின் சம்மதத்தோடு  இதில் உதவ நினைக்கும் பாலாஜிக்கு வெற்றி கிட்டுமா….?இல்லை இப்போது தான் மகிழ்ச்சியில் இருக்கும் ஜமுனாவையும்…  வைதேகியையும் மீண்டும் சோகத்தில் ஆழ்த்துவானா….?
 

Advertisement