Advertisement

அத்தியாயம்….15 
கூடுவாஞ்சேரியில் இருக்கும் ஒரு  பெரிய திருமணமாளிகை முன் நின்று இருந்தனர் பாலாஜி குடும்பத்தினர். பாலாஜி குடும்பத்தினர் என்றால் பாலாஜி, ஜமுனா, வைதேகி….
“ என்ன அத்த  மண்டம் பிடிச்சி இருக்கா….? இதையே  புக் செய்துடவா….?” என்று தன் அத்தையின் அபிப்பிராயம் கேட்டதுக்கு கொஞ்சம் தயங்கிய  வாறே…
“ நிச்சயம் சிட்டிக்குள்ள வெச்சிட்டு…இது கொஞ்சம் அவுட்டோரா தெரியலையா தம்பி.”  வைதேகி இப்படி கேட்டு விட்டு…எங்கு மாப்பிள்ளை தன்னை தவறாய் நினைத்துக் கொள்வாரோ…என்று பயந்து…
“ தப்பா எடுத்துக்க கூடாது என் மனசுல பட்டத சட்டுன்னு சொல்லிட்டேன்.” தான் முதலில் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காது  யோசனையில் இருந்த பாலாஜியிடம் அடுத்து தன் மன்னிப்பை அவசர அவரமாய் கேட்டார் வைதேகி.
“ இப்போ நீங்க இப்படி பேசுறது தான்  மனசுக்கு கஷ்டமா இருக்கு அத்த. உங்க மனசுல பட்டதை எதுன்னாலும்…. நீங்க தயங்காம என் கிட்ட பேசலாம்.” என்று  கடிந்து விட்டு…
“ நிச்சயத்துக்கு வந்தவங்க  முக்காவாசி பேரு நம்ம ஏரியாவில் இருந்து. அப்புறம் செங்கல்பட்டு…  இங்கு இருந்து தான் அதிகமான பேரு வந்து இருந்தாங்க. நான் நிச்சயம் சிட்டியில் வெச்சதில் விழா முடிஞ்சு வீடு வந்து சேர..பாவம் பதினொன்னு கடந்துடுச்சி…
என் ப்ளாட்டில் இருக்குறவங்க மறுநாள் வேலைக்கு போக..பள்ளி போகன்னு அவங்க கஷ்டப்பட்டதை பார்த்துட்டு தான் கல்யாணம் நம்ம சரோவுண்டிங்கிலேயே வெச்சிடனுமுன்னு தீர்மானிச்சேன்.
உங்க ஆபிஸ் ஸ்டாப் வரதில் ஏதாவது பிரச்சனை ஆகுமுன்னா சொல்லிடுங்க…நம்ம இரண்டுக்கும் பொதுவா பல்லாவரத்தில் வெச்சிடலாம்.” என்று பாலாஜி  தன் அத்தையின் ஆலோசனையையும் கேட்டான்.
அனைவரின்  சவுகரியத்தையும் பார்த்து செய்யும் பாலாஜியின் பொறுப்பில் …. மகிழ்ந்து போய்… “  இல்ல இதுவே புக் செய்துடலாம். என் ஆபிஸ் கொஞ்ச பேர் தான் வருவாங்க… அதுல பாதி பேர் கிட்ட கார் இருக்கு. அதனால கவலை இல்லை.” என்று  தன் சம்மதத்தை தெரிவித்தார்.
வைதேகியின் ஒப்புதலை பெற்ற பின் அந்த திருமண மண்டபத்தையே முன் பதிவு செய்தவன்… “ என்ன ஜம்மூ நீ எதுவும் சொல்லலே….?” என்று ஜமுனாவை சீண்டும் வகையாக கேட்டான்.
“ நீங்க என் கிட்டயா  கேட்டிங்க. உங்க அத்தை கிட்ட தானே கேட்டிங்க. உங்களுக்கு உங்க அத்தையின் விருப்பம்  தானே முக்கியம். இதுல நான் என்ன அபிப்ராயம் சொல்ல இருக்கு….” தோளை இடித்து கொண்டு பேசினாள்.
வைதேகி இது சின்ன சிறுசுகளின் ஊடல் என்று அவர்களை விட்டு கொஞ்சம் தள்ளி நடக்க…  “ ஏய் இது போல ஆபாண்டமா பேசாதே….நான் உன் விருப்பம் போல் தான் நடந்துக்குறேன்.” என்று சொல்லியவனிடம்…
“ என் விருப்ப படியா……? மண்டபத்தில் வந்ததில் இருந்து என் முகத்தையாவது திரும்பி பார்த்திங்கலா….? அத்த உங்களுக்கு பிடிச்சி இருக்கா…? அத்த உங்க விருப்பம் தான்  முக்கியம்….” என்னவோ சாமியே மாமியார் போல தானே பேசுனிங்க…இப்போ என்னவோ உன் விருப்பமுன்னு கதை விடுறிங்க…..”
இத்தனை மாத பழக்கத்தில் ஜமுனா இது போல்  தொடர்தார் போல் எல்லாம் பேசியது இல்லை. கேட்டதுக்கு பதில். இல்லை தன் சந்தேகம் தீர்க்க கேள்வி. இப்படி பட்ட பேச்சு தான் ஜமுனாவிடம் இருக்கும்.
இது போல் உரிமையான  பேச்சு இதுவே முதல் முறை.  இந்த பொய்யான கோப பேச்சு. கொஞ்சலான முகத்திருப்பல்..இது எல்லாம் பாலாஜிக்கு புதியதாக இருந்தன. இது  அவனுக்கு மிக பிடித்தும் இருந்தன.
“ ஏய் நான் பொய் சொல்லலே..உன் விருப்ப படி தான் செய்யிறேன். இப்போ உன்ன மட்டும் கூட்டிட்டு வந்து இந்த மண்டபத்தை காட்டினா  என்ன சொல்ல போற…..அம்மா விருப்பம் தான்னு சொல்ல போற …. அது தான் ஏன் முகத்தை சுத்தி மூக்கை தொடனுமுன்னு ஸ்டைட்டா அத்தையின் விருப்பம் கேட்டுட்டேன்.” என்றவனின்  பேச்சு புரியாது பார்த்தாள் ஜமுனா…
“ என்ன புரியலையா….? காதலிக்கலாமுன்னு கேட்டவனை தட்ட தூக்க வெச்சவ நீ…. இந்த மண்டபம் எல்லாம் பெரியவங்க சமாச்சாரம்.  இது கேட்டா மட்டும் உன் விருப்பத்தையா சொல்ல போற….?” அவன் பேச்சில் கொஞ்சம் ஆதாங்கம் வெளிப்பட்டதோ….
ஜமுனா ஏதோ பேசும் முன்… “ அத்தை எவ்வளவு நேரம் தான்  மெதுவா நடந்துட்டு வருவாங்க…” அத்தைக்காக தன் நடையை நிறுத்தி காத்திருக்க…கூடவே ஜமுனாவும் எதுவும் பேசாது தன் அன்னையை திரும்பி பார்த்தாள்.
சிரித்துக் கொண்டே வந்த வைதேகி…. “ என்ன மாப்பிள்ள மரத்துல  இறந்து இறக்கிட்டிங்கலா….?” என்று கேட்க…
“ முழுசா இறக்க முடியல அத்த… இப்போவும் பாதி அந்தரங்கத்தில் தொங்கி கொண்டு தான் இருக்கிறாள்.” என்று சொல்ல…
“ நான் என்ன குரங்கா….? மரத்துல தொங்க…..” திரும்பவும் முதல் போல் சிணுங்கியவள்…
“ போம்மா நீங்களும் உங்க மாப்பிள்ளை கூட சேர்ந்து என்னை ரொம்ப தான் ஓட்டுறிங்க….” அன்னையிடம்  சலுகையுடன் தோள் பற்றி பேசிக் கொண்டே சொல்ல… இது அனைத்தும் அந்த மூவருக்கும் புதியது.  
சித்தாப்பாவின் நிழலில் வளர்ந்த பாலாஜிக்கு பாசமே பஞ்சமாய் இருந்த போது..இது போல் கொஞ்சல் எல்லாம் கனவில் தான் நினைக்க முடியும். அது போல் தான் வைதேகி  ஜமுனாவுக்குமே….
வாழ்க்கையே அந்தரத்தில் தொங்கி கொண்டு இருக்கும் போது…உள்ளத்தின்  மகிழ்வோடு இவ்வாறு விளையாட்டு பேச்சு என்பது இல்லாது. கடமையே என்று வைதேகி வேலைக்கு சென்று வந்தார் என்றால்….
ஜமுனா அக்கம் பக்கத்தவரின் அவமான பேச்சிலும் …பார்வையிலும்  குன்றி போனவளாய்…அவர்களுக்கு மேல் நாம் எதில் இருக்கலாம்…? இருக்க முடியும்…? என்று  சிந்தித்தவளுக்கு படிப்பு…படிப்பு ஒன்று தான்…
இவர்கள் முன் தலை நிமிர்ந்து நிற்கவும். தன் எதிர்கால பாதுக்காப்புக்கு நல்லது என்று பள்ளி செல்வது….அன்னைக்கு வீட்டு வேலையில் கொஞ்சம் உதவுவது. பின் படிப்பது. ஏதோ இயந்திர கதியில் தான் அவர்கள் வாழ்க்கை சென்றது எனலாம்.
இந்த  மகிழ்ச்சி…கொஞ்சல்…சீண்டல் இதெல்லாம் புதியனவாகவும்  பிடித்தும் இருக்க…அந்த சந்தோஷ மனநிலையை கெடுத்துக் கொள்ள விரும்பாது.. மூன்று பேரும் பொதுவான விசயங்கள் மட்டுமே பேசிக் கொண்டு  இரவு உணவையும் முடித்து விட்டே வீடு வந்தனர்.
இரவு உடைக்கு மாறி  படுக்கைக்கு வந்த ஜமுனா….வைதேகி படுக்க வராது பிரோவில் ஏதோ எடுப்பதும்…வைப்பதுமாய் இருப்பதை பார்த்து விட்டு…
“ என்னம்மா…என்ன செஞ்சிட்டு இருக்கிங்க….?  நாளைக்கு திங்கட் கிழமை வேலைக்கு போகனும் சீக்கிரம் படுத்தா தானே…எழுந்து வேல செஞ்சிட்டு கிளம்ப சரியா இருக்கும்.” 
வைதேகி என்ன செய்கிறார் என்று கூட பார்க்காது பட்டாசாய்  பொறிந்து தள்ள…. “ கொஞ்சம் பேச்சை குற ஜமுனா….” என்று மகளை  திட்ட படுத்தி விட்டு பின்…
“ நகை எல்லாம் கொஞ்சம் மாத்தனும் ஜமுனா…” என்று வைதேகி சொன்னதும்…
“ என்னம்மா எதுவும் போடாம தானே வெச்சி இருந்தேன்” என்று  சொல்லிக் கொண்டே அன்னையில் கையில் இருந்த நகையை வாங்கி பார்த்தவள்…
“ என்னம்மா எல்லாம் புதுசா தானே இருக்கு.”  ஜமுனா சொன்னது போல் நகைகள் அனைத்தும் மெருகு போகாது புத்தம் புதியனவாய் தான் இருந்தன.
“ இல்ல ஜமுனா இது எல்லாம் பழைய  டிசைன். இப்போ புதுசு புதுசா நிறைய  டிசைன் வந்து இருக்கு.” அன்னையின் பேச்சில் முறைத்து பார்த்த மகளின் பார்வையில்..
“ காசு கொடுத்து எல்லாம் வாங்க போறது இல்லடீ…. இந்த நகை மாத்திட்டு புதுசா வாங்கலாம்.”  என்று இழுத்து பேசி மகளின் அனுமதிக்காக ஜமுனாவை பார்த்தார்.
“ ஆ இது கொடுத்துட்டா காசு கொடுக்காம..அப்படியே வேற நகை கொடுத்துடுவாங்கலா….? ஜீ.எஸ்.டி சேதாரம்…லொட்டு லொசுக்குன்னு நம்ம கிட்ட காசு கறந்துட மாட்டான்.” இந்த நகையே போதும் என்பது போல் ஜமுனா பேச்சை முடிக்க பார்த்தாள்.
 அவள் அன்னையோ….” இது எல்லாம் ரொம்ப பழைய மாடல் டீ…” வைதேகி சொல்வது சரியே…
அதிகப்படி செலவு இல்லாத காரணத்தால் தன் சேமிப்பில் பாதியை நகை சீட்டு  கட்டி ஜமுனா சிறு வயது முதலே வைதேகி அவளுக்கு நகை வாங்க ஆராம்பித்து விட்டார்.இந்த அதிகப்படி நகைக்காவது தன் பெண்ணுக்கு நல்ல இடம் வராதா….? என்ற எண்ணமும் இந்த  நகை சேமிப்புக்கு ஒரு காரணம்.
ஜமுனா சிறு வயதில் வாங்கியது இப்போது பழைய டிசைனாய் தானே இருக்கும். “ அம்மா அவங்க  வியாபாரத்துக்காக நகை மாடல் புதுசு புதுசா தான் மார்க்கெட்டில் இறக்குவாங்க. இப்போ இது  பழைய டிசைன்னு சொல்றிங்க..இதுவே இன்னும் பத்து வருசம் கழிச்சி இது தான் பேஷன் என்பது போல் வரும்.” தன் கையில் உள்ள நகையை காட்டி சொன்னாள்.
அப்போதும் வைதேகிக்கு  திருப்தி ஏற்படவில்லை… “  என்னவோ சொல்ற போ…மாப்பிள்ளைன்னா கல்யாணத்துக்கு  எதுக்கும் என்னை செலவு செய்ய விடுறது இல்ல.
நீயும் இது போதும். அது போதும்முன்னு  என் வாய அடச்சிடற…அப்போ என் கிட்ட இருக்கும் பணத்தை என்ன செய்யிறது. …? அப்புறம் ரிடையட் ஆனா வருமே அந்த பணத்தை என்ன செய்யிறது….? போ எல்லாம் உங்க இஷ்டமா தான் நடக்குது.”  என்று வைதேகி சலித்துக் கொண்டே தன் கட்டையை படுக்கையில் சாய்த்தார்.
கல்யாணம் என்றால் அங்கு அங்கு பெண் வீட்டார்களுக்கு…ஏகப்பட்ட செலவு இருக்கும்.  எதை வித்து கல்யாண செலவை ஈடு கட்டலாம் என்று நினைப்பர்.
ஆனால் வைதேகியோ …. “  என் கிட்ட இருக்கும் பணத்தை என்ன செய்யிறது….? என்று புலம்பும் நிலைக்கு தள்ளி விட்டான் நம் பாலாஜி.
நீண்ட நாட்கள் கழித்து அவர்களின் சந்திப்பு இடமான கிண்டியில் கையில்  சாம்பார் வடையை ஜமுனா கையில் கொடுத்து விட்டு தானும் அமைதியாக உண்பவனை….  ஜமுனா தான் உண்ணாது அவன் முகத்தையே பார்த்திருந்தாள்.
“ என்ன ஜம்மூ சாப்பிடல….”  தன்னிடம் இதை கேட்கும் போது கூட பாலாஜியின் எண்ணம் வேறு எங்கோ இருப்பது போல் தோன்றியது ஜமுனாவுக்கு…
“ பாலாஜி ஏதாவது பிரச்சனையா….?” ஜமுனாவின் குரலில் பயம் கொஞ்சம் தெரிவது  போல் பாலாஜிக்கு தோன…
“ சீ..சீ பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்ல. நீ சாப்பிடு.” இதை சிரித்துக் கொண்டே தான் சொன்னான்.
ஆனால் அந்த சிரிப்பு இயற்கையாய்  தோனாது செயற்கையாய் இருப்பது போல் தோன்றியது ஜமுனாவுக்கு…. பாலாஜி சொன்னது போல் எதுவும் பேசாது சாப்பிட்டு  முடித்து விட்டு…
“ ம்..இப்போ சொல்லுங்க…..இந்த மண்டையில என்ன ஓடிட்டு இருக்கு…..?”  ஜமுனா அவன் தலையை தட்டி கேட்டாள்.
இவள் சொல்லாமல் விட மாட்டாள் என்று நினைத்தவன்,… “ சாந்தி  விடுதிக்கு பணம் கட்டல…நான் எப்போவும் சேரும் போது முன் பணம் ஒரு மாதம் தங்கும் பணத்தை வாங்கிடுவேன். அது இன்னையோட முடியுது.
அந்த பொண்ணு காலையில என் ஆபிஸ் ரூமுக்கு வந்து…நான் ஈவினிங் ரூம காலி செஞ்சுடுறேன்னு சொல்லிட்டு போயிடுச்சி….”  என்று தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டு வந்த பாலாஜி அதற்க்கு அடுத்து பேசாது ஏதோ யோசிப்பது போல் இருக்க…
“ என்ன பாலாஜி … அந்த பொண்ணுக்கு ஏதாவது பிரச்சனைன்னு நினைக்கிறிங்கலா….?”
“ம்..” என்பது போல் தலையாட்டியவன்.
“ அந்த பிரச்சனைக்கு பிறகு அந்த பொண்ணு வேலைக்கு போகல…கையில காசு இல்லேன்னு நினைக்கிறேன். அன்னைய பிரச்சனையில் இருந்து இந்த பொண்ணு  அந்த ஆளு கிட்ட பேசுறது இல்ல..வீட்டோட கூட தொடர்பு இல்லேன்னு தான் நினைக்கிறேன்.
இந்த பொண்ணு விடுதிக்கு காசு கொடுக்க முடியலேன்னு வெளிய போய் வேறு எந்த புது பிரச்சனையில மாட்டிக்க போகுதோன்னு தான். அதுவும் இந்த சமயத்துல  பிரன்ஸ் வீட்டில் தங்க கூட அவங்க பேரன்ஸ் ஹலோ பண்ண மாட்டாங்க…” என்று சொல்லி விட்டு பாலாஜி ஜமுனா முகத்தை பார்த்தான்.
பாலாஜி சொன்ன  அந்த பிரச்சனை..என்ன பிரச்சனை என்று ஜமுனா கேட்கவில்லை. அது போல் அவன் சொன்ன அந்த ஆளு யார்….?  என்று கேட்காது..
“ நீங்க என்ன சொல்ல நினைக்கிறிங்க…எனக்கு புரியல…கொஞ்சம் வெளிப்படையா  சொல்லுங்க….” என்று ஜமுனா சொன்னதும்…
“ அந்த பொண்னு கிட்ட  பணம் கொடுக்கலேன்னாலும் பரவாயில்ல..உன் பிரச்சனை  முடியும் வரை இங்கு இருன்னு சொல்லலாமுன்னு நினைக்கிறேன்.” என்று  சொல்லி விட்டு இதற்க்கு ஜமுனா என்ன சொல்வாள் என்று அவளை பார்த்தான்.
அவளோ….  “ உங்க விடுதி….அந்த பொண்ணு உங்க விடுதியில் தங்கி இருக்கும்  பொண்ணு. அந்த பொண்ணு கிட்ட இருக்கும் பணத்தொடர்பு அது உங்க விருப்பம் . இதுல நான் என்ன நினைப்பேன்னு நீங்க நினைக்க  தேவையில்லை. ” என்று சொன்னள். 
“ஆனால்…. “என்று இழுத்து நிறுத்தி விட்டு…. “ அந்த பொண்ணுக்கு ஏற்பட்டு இருக்கும் பிரச்சனைக்கு உதவி செய்யும் போது  என்னை நினைக்கனும். என்னை மட்டும் இல்லாம எங்க அம்மாவையும் கூட சேர்த்து நினைச்சிக்கலாம்.” இந்த பேச்சுக்கு பாலாஜி புரியாது ஜமுனாவை பார்த்தான்.
“இந்த உதவி செய்யுறதாலே…உங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்தா….” ஜமுனா மனதுக்குள் என்ன நினைத்தாளோ… தொண்டை கொஞ்சம் அடைப்பட…
“ கொஞ்ச நாளா தான் அம்மாவும் நானும்  சந்தோஷமா இருக்கோம். அந்த சந்தோஷம் எதனாலேயும் கெட கூடாது.” தன் பேச்சு அவ்வளவு தான் என்பது போல்…டைம் பார்த்தவள்.
“ கிளம்புகிறேன்.” என்று சொன்னவளை எதுவும் சொல்லாது  அவள் செல்வதை அமைதியாக பார்த்திருந்தான்.
 

Advertisement