Advertisement

அத்தியாயம்….20 
தன் அறையில் தான் பேசுவதை  கேட்க கூட யாரும் இல்லாது தனக்கு தானே…. “ என்னை  தொட மாட்டேன்னா சொல்ற….? தொட மாட்ட…” திரும்ப திரும்ப அதே வார்த்தையை சொல்லிக் கொண்டு இருந்தவளுக்கே வெறுப்பாகி விட்டது போல்,
  “போடா…”   என்று விட்டு கட்டில் மேல் அமர்ந்தவள்,  தன் அறையில் இருந்த தொலைக்காட்சியை இயக்க..அதுவே அவளுக்கு தொல்லையாக போய் விட்டது    போல்…
 ‘ நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே….’ என்ற சிவாஜிகணேசன் பாடல் பாடி  மறக்க நினைக்க நினைத்த பேச்சை மீண்டும் நியாகப்படுத்தியது.
“ தோ…தோ ஊருல உலகத்துல …ஏன் சினிமாவுல கூட பொண்ணு தான் என்னை தொடாதேன்னு சொல்லும். இவன் தான் நான் தொட மாட்டேன்னு சொல்றான். முட்டாள்.  முட்டாள் பையன்.நீ இப்படி இருந்தா, கல்யாணத்துக்கு முன் காதல் இல்லடா…. கல்யாணம் ஆன பின் கூட காதலிக்கும் யோகம் இல்ல.” என்று தனக்குள் புலம்பிக் கொண்டே இருந்தவள்.
பின் தன் வாய் மேல் தானே அடித்துக் கொண்டு… “ அவன்  மட்டும் இல்லேடீ… நீயும் தான் முட்டாள். கல்யாணம் ஆகியும் காதலிக்க யோகம் அவனுக்கு இல்லேன்னா…நீ யாரடீ காதலிப்ப….? முட்டாள். முட்டாள்.” தனக்கு தானே வாய் மேல் போட்டுக் கொண்டவள்.
“ அய்யோ என்னை இப்படி புலம்ப வெச்சிட்டானே…?” திருவிளையாடல் படத்தின்   நாகேஷ் போல் ஜமுனா புலம்பிக் கொண்டு இருந்தாள்.
அதற்க்கு காரணமானவனோ, அவள் வீட்டு ஹாலிலேயே  ஷோபாவில் அமர்ந்துக் கொண்டு, டீப்பாவின் மீது  வைத்திருந்த தட்டில் இருந்த தோசையை ஒரு ஒரு விண்டாக பிட்டு சின்ன தட்டில் இருந்த வடகறியில் தோய்த்து வாயில் போட்டு  உண்டுக் கொண்டு இருக்கும் போது….
இன்னும் ஒரு தோசையை  தோசை கரண்டியிலேயே எடுத்து வந்த வைதேகி,  அவன் தட்டில் இடும் வேளயில்… “ அத்த..அத்த…போதும். வயிறு திம்.” தன் வயிற்றின் மீது கைய் வைத்து சொன்னான்.
“ என்ன தம்பி. வயசு பையனுக்கு நாளு  தோசை எல்லாம் ஒரு தோசையா….? என் பொண்ணே வட கறின்னா ஐந்து தோசை சாப்பிடுவா. இது முட்ட தோசை இது மட்டுமாவது சாப்பிடுப்பா.” பாலாஜியின்  தட்டில் தோசையை வைத்து விட்டு சமையல் அறைக்கு செல்பவரின் காதில்…
“தோ பாரும்மா உன் மாப்பிள்ளை தோசை  சாப்பிடலேன்னா…நீங்க ஊட்டி கூட விடுங்க. ஆனா நான் எத்தனை தோசை சாப்பிடுறேன் என்ற கணக்கு எல்லாம் சொல்ல வேண்டாம். சொல்லிட்டேன்.” தன் விரல் நீட்டி   ஜமுனா எச்சரித்தாள்.
“ என்னடி நானும்  பார்க்குறேன். வந்ததுல இருந்து குதி குதின்னு குதிச்சிட்டு இருக்க. மாப்பிள்ளை எதிரில் பேசும் பேச்சா நீ பேசுற…? அது ஒன்னும் இல்லடீ  நோகாம வீடு தேடி நல்ல மாப்பிள்ளை வந்துட்டாருல, அது தான் அவரோட மதிப்பு உனக்கு தெரியல.” தன் மகளை திட்டம் செய்தார்.
“ஆமா ரொம்ப நல்ல மாப்பிள்ளை.” அந்த ரொம்பவில் அழுத்தம் கொடுத்தவள். பின்.. “ அந்த ரொம்ப  நல்ல மாப்பிள்ளை, இன்னிக்கு என்ன செய்தார்…? என்ன சொன்னாருன்னு தெரியுமா…?” என்று கேட்டாள்.
இப்போது எனக்கு சாப்பிடுவது தான் முக்கிய வேலை என்பது போல் பாலாஜி வாயிக்கும்,  கைக்கும் சண்டை இட்டுக் கொண்டு இருந்த பாலாஜி , ஜமுனா இந்த பேச்சி பேசும் போது மட்டும் வாயின் அருகில் கை கொண்டு  சென்றவன் ஒரு நிமிடமே தோசையை வாயில் திணிக்காது அப்படியே நின்றது.
 பின் தன் தோளை குலுக்கி விட்டு தன் கடமையை தொடர்ந்தான். அது தாங்க சாப்பிடுவது.
“ சொல்லு மாப்பிள்ளை என்ன செஞ்சார்…?  என்ன பேசினார்…?” என்ற வைதேகியின் கேள்விக்கு, ஜமுனா என்ன என்று பதில் அளிப்பாள். எதுவும் சொல்லாது முழித்துக் கொண்டு தான்  இருந்தாள்.
“ தெரியும் டீ. எனக்கு மாப்பிள்ளை பத்தி நல்லா தெரியும். நீ தான் ஏதாவது ஏக்கு மாக்கா செய்து இருப்ப.”  மீண்டும் வைதேகி தன் மகளையே தான் திட்டினார்.
“ அம்மா உங்க மாப்பிள்ளை என்ன சொன்னாருன்னு தெரியாம  சும்மா பேசாதேம்மா.” பாலாஜி என்ன சொன்னார் என்று சொல்லாது ஜமுனா  திரும்பவும் அதே பாடத்தை படித்தாள்.
தன் மகள் மருமகன் என்ன சொன்னார் என்று சொல்லாது,  அவரை பற்றி குறையா மட்டும் பேச, அதை பொறுக்க முடியாத வைதேகி… “ அப்படி ஏதாவது என் மாப்பிள்ளை பேசி இருந்தா கூட அதுக்கு ஒரு காரணம் இருக்கும். மாப்பிள்ளை சொல் பேச்சு கேட்டு நட. அது தான் உனக்கு நல்லது. நம் குடும்பத்துக்கும் நல்லது.” என்று தன் தீர்ப்பை வழங்கி  விட்டு சமையல் கட்டை நோக்கி தன் நடையை செலுத்தினார்.
வைதேகிக்கு பாலாஜி சாந்தி, செந்திலின் மனைவிக்கு நடந்த அநியாயத்துக்கு நியாயம் செய்த முறையை பார்த்து,  பாலாஜியை ரொம்பவே பிடிக்க வைத்தது.
தானும்,  தன் மகளும் கேட்ட உங்களுக்கு ஒன்னும் ஆக கூடாது. அந்த வார்த்தையையும் காப்பாற்றி. தனக்கு தெரிந்து நடந்த இந்த அநியாயத்துக்கு தண்டணையும்  வாங்கி கொடுத்த விதம். பாலாஜி என்ன செய்தாலும் சரியே. என்று எண்ணம் வைதேகிக்கு, அந்த நம்பிக்கையின் வெளிப்பாடே…இந்த பேச்சு.
வைதேகி தீர்ப்பு கொடுத்து முடிக்கவும்.  பாலாஜி சாப்பிட்டு முடிக்கவும். சரியாக இருந்தது. கைய் கழுவிக் கொண்டு ஜமுனாவின் அருகில் வந்த பாலாஜி…
ஜமுனாவின் சேலை முந்தியில் தன் கை துடைத்துக் கொண்டே… “ உனக்கு சேல..அழகாகவும் இருக்கு,  வசதியாகவும் இருக்குன்னு நான் சொன்னதால் தானே, வீட்டுக்கு வந்து இவ்வளவு நேரம் ஆகியும் சேலைய மாத்தாம  இருக்க. ம் உண்மையே சொல்லு.”
அவன் பேச்சில் கொலை வெறியானவள். உண்மையா சொல்ல சொல்ற…? என்று நினைத்து…” ஆமாம் உன்னால தான் இந்த சேல மாத்தாம இருக்கேன். ஆனா நீங்க சொன்னாப்பல கிடையாது. கோபத்துல மாத்தாம இருக்கேன்.”  திட்டுவது கூட இவ்வளவு மெல்ல திட்ட முடியுமா…? என்று சந்தேகப்படும் படி அவ்வளவு மெதுவாக பேசினாள் ஜமுனா.
தான் திட்டுவதை அம்மா கேட்டு விட்டால், அதுக்கு வேறு யார்…? திட்டு வாங்குவது…? அந்த பயத்தில் தான் சமையல் அறையில் ஒரு கண் பதித்த வாரே  பாலாஜியிடம் பேசினாள்.
ஜமுனாவின் செய்கையை பார்த்துக் கொண்டு இருந்த பாலாஜி,  துடைத்த முந்தியை அவள் இடுப்பில் சொறுகி பின்னும் அங்கு இருந்து கை எடுக்காது…
“ உங்க அம்மா என்ன சொன்னாங்க…? மாப்பிள்ள எது சொன்னாலும் சரியா தான் இருக்கும்.  அவர் சொல் படி கேட்டு நடன்னு தானே சொன்னாங்க.” அவள் இடுப்பில் வைத்த கைய் எடுக்காது தான் அவன் இவ்வளவும் பேசியது.
“ பக்கி பக்கி எங்கு நின்னுட்டு என்ன செய்யிறான் பார்.” ஜமுனா மெல்ல  பேசினாலும், அது பாலாஜியின் காதில் நன்றாகவே விழுந்தது.
“ ஓ..அப்போ  உன் இடுப்புல கை வெச்சதுக்கு திட்டலையா…? பீச்சில வெச்சி தொட்டதால் தான் திட்டினியா…? இது  தெரியாம நான் எனக்கு நானே ஆப்பு வெச்சிக்கிறது போல பேசிட்டனே.” என்று புலம்பினான்.
“ ஆமா நானே கேட்கனுமுன்னு  நினச்சேன். அங்கு சொன்னது என்ன….? இப்போ செய்யிறது என்ன…?”  ஜமுனா அவன் கைய் படிந்திருந்த இடத்தை காட்டி கேட்டாள்.
ஈ…என்று ஒரு இளிப்பு இளித்த பாலாஜி… “ வர வழி முழுக்க நான் சொன்னதை பத்தி தான் யோசிச்சிட்டு வந்தேன் ஜம்மூ. யோசனையின் முடிவில் உன்னை நான் தொடாம வேறு யார்  தொடுவா….? பெண் பாவம் பொல்லாதது. அது தான் நான் பேசியதை காத்தில் பறக்க விட்டு உன் வீட்டுக்கு வந்தேன்.” பாலாஜி நின்ற விதமும், பேசிய விதமும் ஒரு மார்க்கமாகவே இருந்தது.
“ ஆ தெரியுது. தெரியுது. பெண் பாவம் பொல்லாதது தான்  என்று ஓடி வந்த விதம். ஓடி வந்தவர் என் கூட கூடி ஏன் வரவில்லை…?”  ஜமுனா சொன்ன விதத்தில் பாலாஜி சத்தம் போட்டு சிரித்து விட்டான். 
வைதேகி சமையல் அறையில் எவ்வளவு நேரம்  தான் வேலை செய்வது போலவே அங்கேயே இருப்பது…? பாலாஜியும், ஜமுனாவும் என்ன தான் மெதுவாக பேசிக் கொண்டாலும்,  பத்துக்கு பத்தே சதுர அடியில் இருக்கும் ஹாலை தான்டி சமையல் அறையில் இருப்பவருக்கு கேட்காமல் போகுமா…?
வைதேகிக்கு கேட்டாலும்,  கண்டு காணது தன் வேலையை அவர்கள்  பேசுவது போலவே எவ்வளவு முடியுமோ அவ்வளவு    மெல்ல வேலை பார்த்தாலும், வேலைகள் ஒரு முடிவுக்கு வர தானே செய்யும். சின்ன சிறுசுகள் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் எப்படி  வெளியே செல்வது என்று இருந்த வைதேகிக்கு பாலாஜியின் சிரிபொலியில் இனி இங்கு இருப்பது நாகரிகம் இல்லை என்று கருதி..
அங்கு மாட்டி இருந்த ஒரு பையை எடுத்துக் கொண்டு… “  நான் கடைக்கு போயிட்டு வரேன் டீ.” என்று ஜமுனாவிடம் சொன்னவர். 
பாலாஜியிடம்…” நீங்க பேசிட்டு இருங்க தம்பி.” என்று  அவர்களிடம் சொல்லி விட்டு சென்றார். இவ்வளவு பேச்சும் தலை குனிந்தே தான் நடந்தது.
“ என் மானம் போச்சு.” அன்னை வெளியேறியதும்  ஜமுனா கத்த.
“ ஏன்டி நான்  உன்னை எதுவும் செய்யலையே…?இடுப்ப தானேடீ தொட்டேன். இடுப்ப தொட்டாவே மானம் போகுமா…? அப்போ மத்ததுக்கு என்னடீ சொல்லுவ…” இன்று பாலாஜியின் பேச்சு கொஞ்சம் அதிகப்படியாக தான் இருந்தது. 
“ என்ன பீச்சுல இருந்து நேரா  இங்கு வராம வேறு எங்கோ போயிட்டு வந்தா மாதிரி இருக்கு.” பாலாஜியின் பேச்சின் மாற்றத்தை வைத்து    ஜமுனா இப்படி சொன்னாள்.
ஜமுனாவின் கை பற்றிய பாலாஜி “ விளையாட்டு பேச்சு எல்லாம் போதும் ஜம்மூ.  காதல் சொல்லி தோ கல்யாணத்தில் முடிஞ்சி இருக்கு. எனக்கு காதலிக்க யோகம் தான் இல்ல.
அட்லீஸ்ட் கல்யாணத்துக்கு முன்  எல்லாருக்கும் இருக்கும் ஆசை கூட எனக்கு இருக்க கூடாதா…?  இதுல தப்பு எதுவும் இல்லலே.” என்று அவன் சொல்லி முடிக்க வில்லை.
அடுத்த வார்த்தை பேசாத அளவுக்கு அவன் இதழ் மீது தன் இதழை  பொறுத்தி இருந்தாள் ஜமுனா. காதலிக்க ஆசை என்று சொன்னவன் திருமணத்துக்கு  முன் இருக்கும் ஒரு சராசரி ஆண் மகனின் ஆசையாவது தனக்கு கிட்டுமா…? என்று பாலாஜி ஏங்கி இருக்க. 
காதல்…காதலிக்க ஆசை எனக்கு வந்து விட்டது.  என்று சொல்லும் வகையாக அவனை முத்தத்தில் மூழ்கடித்தாள்.
அடுத்த எபிலாக்கோடு கதை முடிவடைகிறது வாசகர்களே…
  

Advertisement